புன்னை Calophyllam inophyllam, Linn.; Clusiaceae
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யின்விள நூலினன்
பன்னிய நான்மறை பாடியா ஒப்பல வூர்கள்போய்
அன்னம்அன் னந்நடை யாளொ டும்மமரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே
- திருஞானசம்பந்தர்.
திருப்புனவாயில், திருப்பல்லவனீச்சுரம் , திருநாரையூர், திருச்சுழியல் (திருச்சுழி) , திருவலிவலம் , திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி, திருப்புறம்பயம், திருஅம்பர் பெருந்திருக்கோயில், திருநெல்வெண்ணெய், திருஇரும்பைமாகாளம் முதலிய சிவத்தலங்களில் புன்னை தலமரமாக விளங்குகிறது. அவற்றுள் திருப்பல்லவனீச்சுரம், திருநெல்வெண்ணெய், திருவேட்டக்குடி தலங்களில் இம்மரம் தற்போது இல்லை. திருவேட்டக்குடியில் சிவபிரானை “நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை” என தேவாரம் குறிப்பிடுகிறது. இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்பினது. இதன் இலை சற்று நீண்டதாகவும், பளப்பளப்பாகவும் இருக்கும், உருண்டையான உள்ஓடுள்ள சதைக்கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.
தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசிவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். தோல் நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

| Name | Alexandrian Laurel Tree |
| Family | Clusiaceae |
| Genus | Calophyllum |
| Species | Inophyllum |
| Authority | L. |
| Type | Evergreen |
| Common Family | Garcinia |
| Native | India, East Africa, Malaysia, australia |
| Size | Large |
| Height | 8-20 m |
| Wiki | wikipedia |
| Links | flowersofindia ars-grin theplantlist |
| Language Hindi | Sultan Champa |
| Description | Sultan Champa is a beautiful large evergreen tree native to southern coastal India, East Africa, Malaysia and Australia. It is a low-branching and slow-growing tree with a broad and irregular crown. It usually reaches 8 to 20 m in height. The tree supports a dense canopy of glossy, elliptical leaves. The very fragrant white flowers are 25 mm across and occur in racemose or paniculate inflorescences consisting of 4 to 15 flowers. The flowers have snow-white petals with a thick center of yellow stamens. The fragrant flowers have been prized as an adornment and as a perfume. The fruit (the ballnut) is a round, green drupe reaching 2 to 4 cm in diameter and having a single large seed. When ripe, the fruit is wrinkled and its color varies from yellow to brownish-red. This tree often grows in coastal regions as well as nearby lowland forests. However it has also been cultivated successfully in inland areas at moderate altitudes. |
| Where | Lalbagh, Bangalore Someshwara Temple, Ulsoor, Bangalore |

| Texture | Dark Grey |

| Color | White |
| Info | Fragrant |
| Season | May-Jun |

| Size | 2-4 cm |
| Shape | Round |
| Color | Green to yellowish brown |

| Type | oval |
| Texture | Feathery |

Alexandrian Laurel Tree - Flower Bud
திருமுறைகளில் புன்னை பற்றிய குறிப்பு :-
வெந்த லாய வேந்தன்வேள்வி
வேரறச் சாடிவிண்ணோர்
வந்தெ லாமுன் பேணநின்ற
மைந்தன் மகிழ்ந்தஇடம்
மந்த லாய மல்லிகையும்
புன்னை வளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே. 7
பின்னு சடைகள் தாழக்
கேழல் எயிறு பிறழப்போய்
அன்ன நடையார் மனைகள்
தோறும் அழகாற் பலிதேர்ந்து
புன்னை மடலின் பொழில்சூழ்ந்
தழகார் புறவம் பதியாக
என்னை யுடையான் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 6
குயிலார் கோல மாத
விகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேரும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்த
காழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க் கினிய பாடல்
வல்லார் பாவ நாசமே.
சுவாமி : சித்தநாதேசுவரர்; அம்பாள் : அழகம்மை. 11
படைப்பும்நிலை யிறுதிப்பயன்
பருமையொடு நேர்மை
கிடைப்பல்கண முடையான்கிறி
பூதப்படை யானூர்
புடைப்பாளையின் கமுகின்னொடு
புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு
வேணுபுரம் அதுவே. 2
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1
மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதனென் றேத்தும் நம்பரன் வைகுந் நகர்போலும்
மாதவி மேய வண்டிசை பாட மயிலாடப்
போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே. 2
பின்தாழ் சடைமேல் நகுவெண்
டலையர் பிரமன் தலையேந்தி
மின்தா ழுருவிற் சங்கார்
குழைதான் மிளிரும் ஒருகாதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி
புன்னை பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 4
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. 2
பந்தார்விரல் உமையாளொரு
பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய
செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ்
குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம்
இடும்பாவன மிதுவே. 5
இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. 4
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே. 3
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 7
கரத்தான்மலி சிரத்தான்கரி
யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி
பணிமூவர்கட் கோவா
வரத்தான்மிக அளித்தானிடம்
வளர்புன்னைமுத் தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்
றணிவீழிம் மிழலையே. 7
அந்தண் மாதவி புன்னை நல்ல
அசோக மும்மர விந்த மல்லிகை
பைந்தண்ஞா ழல்கள்சூழ் புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம்ஆ யவனே தவத்தார்க் கருளாயே. 9
குரவங் குருக்கத்
திகள்புன் னைகள்ஞாழல்
மருவும் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந்
திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ
டடைவித் தலழகே. 3
முன்னமிரு மூன்றுசம
யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை
யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்
களக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு
திருப்புகலி யாமே. 5
இருந்தவன்கி டந்தவன்னி
டந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத
வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி
செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும்
அந்தணாரூ ரென்பதே. 9
தக்கன்வேள்வி தகர்த்த
தலைவன் தையலாளொடும்
ஒக்கவேஎம் உரவோ
னுறையும் இடமாவது
கொக்குவாழை பலவின்
கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாகப் புன்னைபொன்
திரள்காட்டும் புகலியே. 6
பனைமல்கு திண்கை மதமா வுரித்த
பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயி லிதுவே. 10
மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய். 1
வேதநா வினர்வெண்
பளிங்கின் குழைக்காதர்
ஓதநஞ் சணிகண்
டருகந் துறைகோயில்
மாதர்வண் டுதன்கா
தல்வண்டா டியபுன்னைத்
தாதுகண் டுபொழில்
மறைந்தூடு சாய்க்காடே. 7
செந்நெ லங்கழ னிப்பழ
னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ
ளம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி
தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை
பாம்புடன் வைத்ததே. 1
அன்னந்தாவும் மணியார்
பொழின்மணி யார்புன்னை
பொன்னந்தா துசொரி
பாதிரிப் புலியூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன்
றளந்தவன் நான்முகன்
தன்னந்தா ளுற்றுணரா
ததோர் தவநீதியே. 9
இலவ ஞாழலும் ஈஞ்சொடு
சுரபுன்னை இளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி
மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை
யல்லது வணங்குதல் அறியோமே. 4
அரவமுந்நீர் அணியிலங்கைக்
கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா
லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி
ஞாழல் சுரபுன்னைமேல்
கிரமமாக வரிவண்டு
பண்செய்யுங் கேதாரமே. 8
முன்னம்நின்ற முடக்கால்
முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா
திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந்
தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக்
கையைப்பெறு வார்களே. 1
புரவியேழும் மணிபூண்
டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு
செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு
வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வல் மலருந்
திலதைம் மதிமுத்தமே. 5
ஏடுமலி கொன்றையர
விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம்
மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர
வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது
வீசியநள் ளாறே. 1
வெறிகொளாருங் கடற்கைதை
நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை
முல்லைம்முகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கும்
நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 3
நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்
அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாசம் நாறும்
நனிபள்ளி போலும் நமர்காள். 9
ஞாழலுஞ் செருந்தியும்
நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல்
தயங்கு கானலில்
வேழம துரித்தவெண்
காடு மேவிய
யாழின திசையுடை
இறைவ ரல்லரே. 4
பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ்
செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே. 6
வெறிகமழ் புன்னைபொன்
ஞாழல் விம்மிய
பொறியர வணிபொழிற்
பூவ ணத்துறை
கிறிபடு முடையினன்
கேடில் கொள்கையன்
நறுமலர் அடிதொழ
நன்மை யாகுமே. 6
வேதமொடு வேள்விபல வாயினமி
குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ
நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு
ஞாழலவை மிக்கஅழகால்
மாதவிமணங்கமழ வண்டுபல
பாடுபொழில் வைகாவிலே. 5
கோங்கிள வேங்கையுங்
கொழுமலர்ப் புன்னையுந்
தாங்குதேன் கொன்றையுந்
தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயல்
மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழல்
அடியிணை பணிமினே. 3
மின்னியல் செஞ்சடை வெண்பிறை
யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா
டிப்பல வூர்கள்போய்
அன்னம்அன் னந்நடை யாளொ
டும்மம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க்
கும்புன வாயிலே. 1
மருவமர் குழலுமை
பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம்
அடிகள் கோயிலாங்
குரவமர் சுரபுன்னை
கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி
விசய மங்கையே. 1
துறையுலவு கடலோதஞ்
சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை
நன்னீழற் கீழமரும்
இறைபயிலும் இராவணன்றன்
தலைபத்தும் இருபதுதோள்
திறலழிய அடர்த்தாருந்
திருவேட்டக் குடியாரே. 8
நேடும்அய னோடுதிரு மாலும்உண
ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தமித
ழிச்சடையெம் ஈசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி
மாதவி செருந்திகுரவின்
ஊடுலவு புன்னைவிரி தாதுமலி
சேருதவி மாணிகுழியே 9
பைங்கோட்டு மலர்ப்புன்னைப்
பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத்
தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய
சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி
விளையாடும் பெருமானே 1
பொன்னிற நான்முகன் பச்சையான்
என்றிவர் புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி
யதழற் சோதியும்
புன்னைபொன் தாதுதிர் மல்குமந்
தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந்
தவிம லனன்றே. 9
கூசுமா மயானங் கோயில்வா யிற்கண்
குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 5
மின்னன எயிறுடை
விரவ லோர்கள்தந்
துன்னிய புரம்உகச்
சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி
பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை
அரிவை பங்கரே. 1
சொன்னய முடையவர் சுருதிகள்
கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர்
திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு
ளினருறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ்
பொழிலணி புறவமே. 6
அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா
மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார்
உறைவிடம் ஒளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமுந்
தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண்
கொச்சையே பேணுநெஞ்சே. 8
கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா
ரிடமென விரும்பினாரே. 1
எண்பதும் பத்தும் ஆறு
மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்
கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை
செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே. 3
பொன்னை வகுத்தன்ன மேனிய
னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே
தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்
கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்
பைக்கிடம் யாதுசொல்லே. 2
தன்னைச் சரணென்று தாளடைந்
தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல்
செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை
கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ
லோகத் திருத்திடுமே. 1
மன்றத்துப் புன்னை போல
மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன்
உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து
கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அலமந் திட்டேன்
அதிகைவீ ரட்ட னீரே. 8
திங்கள் தங்கிய
செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும்
மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற்
புன்னையும் ஞாழலுந்
தெங்கு சேர்கடம்
பூர்க்கரக் கோயிலே. 5
புன்னை ஞாழல்
புறணி அருகெலாம்
மன்னி னார்வலங்
கொண்மறைக் காடரோ
அன்ன மென்னடை
யாளையொர் பாகமாச்
சின்ன வேடம்
உகப்பது செல்வமே. 3
அரக்க னைவிர
லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீர்
எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள்
சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத
வந்திறப் பிம்மினே.
பொன்னொத் தநிறத்
தானும் பொருகடல்
தன்னொத் தநிறத்
தானும் அறிகிலாப்
புன்னைத் தாது
பொழிற்புக லூரரை
என்னத் தாவென
என்னிடர் தீருமே. 9
மின்னின் நேரிடை
யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப்
பிலாத தலைவனைப்
புன்னைக் கானற்
பொழில்புக லூரனை
என்னு ளாகவைத்
தின்புற் றிருப்பனே. 4
புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்த
புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்
வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கில் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 8
அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மன்னகரு மானைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை
மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 4
எறிக்குங் கதிர்வேய் உதிர்முத் தம்மோடே
லம் இலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 1
என்ன தெழிலும்
நிறையுங் கவர்வான்
புன்னை மலரும்
புறவிற் றிகழுந்
தன்னை முன்னம்
நினைக்கத் தருவான்
உன்னப் படுவான்
ஒற்றி யூரே. 4
நரம்பினோ டெலும்பு கட்டி
நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 5
முன்னைச்செய்வினை இம்மையில்வந்து
மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட
நெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்
கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்கணாறும்
புறம்பயந்தொழப் போதுமே. 7
தூயவர்கண்ணும் வாயும்மேனியுந்
துன்னஆடை சுடலையிற்
பேயொடாடலைத் தவிரும்நீரொரு
பித்தரோவெம் பிரானிரே
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும்
பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரே. 3
துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே. 2
புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி யிடம்விர வாதுயி ருண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி யிடங்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
யல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி யனேகதங் காவதமே. 8
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்தமணலிற் கலந்த கன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென் கொலாமின்று செய்கின்றதே. 273
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல் லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. 177
பகன்தா மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்றாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல் லோநம் மகன்றுறையே. 184
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. 183
மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந் துயிலா தழுங்கினவே. 172
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)
அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9
குரவம் கோங்கம் குளிர்புன்னை
கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்
டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே. 6
போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 66
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1
தொக்கு வருங்கணம் பாடத்தொல்
நீறணிந் தேநிலவும்
நக்கு வருங்கண்ணி சூடிவந்
தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ
யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்வரும் போதவ
ரைக்காண வெள்குவனே. 30
என்னை நினைந்தடிமை
கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத்
தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை
வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான். 1
பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்
காயினும் சிறந்த நேயநெஞ் சினனே
யாகக் கழனியின் யோகத் தபோதனர்
ஆனபேர் உழவர் மானமோ டாக்கிய
முயலகன் என்னும்
இயல்பெருங் கரும்பை ........(5)
உதிரம் என்னும் முதிர்சா றொழுக
நகையெனும் முத்தந்
தொகையுறத் தோன்றச்
சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்
டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே
குங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் .....(10)
பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக
பாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி
வெளிய கற்பூரம் களிகொள் கத்தூரி
நறுமணம் எவையும்
உறுமுறை பொருந்தி
உண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் ......(15)
நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்
மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும்
வருக்கையின் கனியும்
சருக்கரைக் கட்டியும்
முதல்உப கரணம் பதனொடு மரீஇத்
தளவரும் பென்ன வளமலி போனகம் .....(20)
மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்
நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்
பாடகச் சீரடிப் பான்மொழி மடவார்
நாடகத் தொழில்பயில்
நீடரங் கெவையும்
கலைபயில் கழகமும்
பலர்பயில் மன்றமும் ......(25)
உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்
வள்ளியோர் வாழும்
மணிநெடு வீதியும்
பூமகள் உறையு ளாமென விளங்கும்
பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே
ஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் .......(30)
வளமலி நான்முகக் களமருன் ஏவலின்
உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட
மண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்
சராசரத் தொகுதி விராயவித் திட்டுப்
பாதவ மிருகம் பறவை மானிடர் ......(35)
ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
மாவுறை மருமக் காவ லாளர்
வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்
புரிபயன் பெறுவான் அரிதர வியற்றி
மெய்வலிக் கூற்றுவக்
கைவினை மாக்கனி .......(40)
புலாலுடை யாக்கைப் பலாவம தகற்றி
அற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்
பூதசா ரத்தனுப் பூத மகாதனு
பூத பரிணாமம் புகலுறு யாக்கை
மூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் ........(45)
பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்
இடந்தொறும் ஆங்கவை
அடங்கவைத் தவற்றுள்
ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்
சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்
அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் ....(50)
புரைதீர் முறைமை புதுக்கினை
போலும் அதனால்
மாசுகம் நீயுறும் வண்மை
பேசுக கருணைப் பெரியநா யகனே. 25
விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால்
எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி
குறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே
ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி
குழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல் .....(5)
நற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல்
திருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால்
கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்
மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்
பற்பல உதவுங் கற்பகத் தருவு ....(10)
நந்தா வளன்அருட் சிந்தா மணியும்
வாமமாம் மேனிய காம தேனுவும்
அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்
கடவுளர் அணிமணித் தடமகு டங்கள்
காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி ......(15)
முனிவர் ஆசி நனிபல மொழியக்
கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்
கின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா
இசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்ற
முடங்குளைச் செங்கண் மடங்கல்
அணைநாப்பண் ........(20)
அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்
இந்தி ராணி வந்தரு கிருப்பக்
கருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச்
செங்கதிர்ச் சேகரம் துங்கவீற் றிருந்த
பெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும் .....(25)
அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்
பழமறை கனிந்து மழவுபெற் றிருந்த
செந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்
பனுவ லாட்டி இனிதுவந் திருப்ப
வண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து .....(30)
பொற்றா துண்ணா முற்றா இன்பப்
பிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன்
நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது
திண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றி
எம்மால் எவையும் இயன்றன என்னச் .....(35)
செம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும்
திதலைபூத் தலர்ந்து மதகளி றிகலி
வருமுலை சுமந்த திருமகள் பச்சைப்
பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்
கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் ....(40)
தண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல்
ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்
காமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத்
துத்திநெய் பரந்து பைத்தபை அகலில்
அணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச் ......(45)
சுடிகைவான் அரவ நெடியபூ அணைமேல்
மறுவிலா நீல வரைகிடந் தென்ன
அறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்
அழியா இன்பம்என் றொழியா துரைப்பினும்
கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி ......(50)
இந்திர சாலம் முந்துநீள் கனவு
வெண்டேர் போல உண்டெனத் தோன்றி
இலவாம் ஆதலின் நலமல ஆங்கவை
நிலைபே றுடையது நின்னருட் செல்வம்
அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன் .....(55)
அதனால்
எளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதி
மரகதத் திடையிடை தரளமிட் டிழைத்த
அரமியம் அதனை விரிகுழை பொதுளி
அரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் .....(60)
ஆடக அலங்கல் அணியணி நிறைத்த
சேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத்
துணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும்
மொய்க்கும்வண் சிறையுளி
மைக்கரு நிறங்கள்
பளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப் .......(65)
பித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால்
வந்ததிங் கிரவெனச் சந்தத மடவார்
வார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப்
புல்லிய கலவிப் புதியதேன் நுகரும்
மல்லலங் காழி வளநகர் வாண .....(70)
குறிகுணங் கடந்த மறுவில்மா மணியே
உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரண
அந்த மாதி முந்தையே தவிர்ந்த
அனாதி முத்த என்ஆதி நித்த
அருவுரு வில்லா ஒருபெரும் பொருளே .......(75)
அளவையின் அடங்கா தொளிர்சுக நேய
உருகுமெய் அன்பர் பருகுமா ரமுதே
நலங்கனி பெரிய நாயகி
கலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே. 28
மாதவியும் புன்னையும்
மண்ணும் மலர்க்குரவும்
கேதகையும் எங்கும்
கெழீஇஇப் - போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப
எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின்
மாடே - கிளர்ந்தெங்கும்
ஆலை ஒலியும்
அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும்
சொல்லொலியும் - ஆலும்
அறுபதங்கள் ஆர்ப்பொலியும்
ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை
ஒலிப்ப - வெறிகமழும்
நந்தா வனத்தியல்பும்
நற்றவத்தோர் சார்விடமும்
அந்தமில் சீரார்
அழகினால் - முந்திப். 25
குயிலொத் திருள்குஞ்சி
கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம்
நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல்
சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து. 12
கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங்கும் மங்கை தன்னருள்
பெற்றவன் பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 2
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூர்அம்பின்ஓர்இரண்
டாலும் முகத்தனவே. 93
மேயிரை வைகக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகங்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற் றார்அறி
வார்நந் துறைவர்பொய்யே. 96
சுழிப் புனல் கடல் ஓதமுன்
சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதி
பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை
மலர்க் கட்சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு
அவிழ்ப்பன மடற்கைதை. 36
கெழு மலர் மாதவி புன்னை
கிளைஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர்
செருந்தி வளர் கைதை
முழு மணமே முந் நீரும்
கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய
மணல் பரப்பும் திருப்பரப்பு. 4
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம்
மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
துன்னு சாதி மரு மாலதி மௌவல்
துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
பன் மலர்ப் புனித நந்த வனங்கள்
பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 94
மன்னும் இசை மொழி வண்டார்
குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண்
தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசைச் சொல் மாலை
எடுத்து இயம்பி எழுந்தருளிப்
புன்னை மணம் கமழ் புறவப்
புறம்பு அணையில் வந்து அணைந்தார். 1147
உணங்கல் மீன் கவர்வுறு
நசைக் குருகுடன் அணைந்த
கணம் கொள் ஓதிமம் கரும்
சினைப் புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்
அசை நடைக் கழிந்து
மணம் கொள் கொம்பரின் மருங்கு
நின்று இழியல மருளும். 7
மன்றல் விரவு மலர்ப் புன்னை
மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார்
முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில்
புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலிக்
கோவும் அரசும் திரு முன்பு. 264