logo

|

Home >

hindu-hub >

temples

திருப்புனவாயில் (திருப்புனவாசல்)

இறைவர் திருப்பெயர்: விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : இந்திர, பிரம்ம, சக்கர, சூரிய, இலக்குமி, சந்திர, பாம்பாறு, வருண, கல்யாண, சிவகங்கை ஆகிய பத்து தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், வேதங்கள், திருமால், பிரமன், இந்திரன், சூரியசந்திரர், எமன், ஐராவதம், வசிட்டர், அகத்தியர், சௌந்தரபாண்டியன்.

Sthala Puranam

Tiruppunavayil templeTiruppunavayil temple vimAnamThe (Square) Cactus (Sadhurakkalli) is one of the Sthala vruksha of Thiruppunavayil temple.The Poon tree (Punnai) is one of the Sthala vruksha of Thiruppunavayil temple.

  • இந்திரன் வழிபட்ட விநாயகர் "ஆகண்டல விநாயகர்" தனியே உள்ளார்.

 

  • கஜமுகாசுரனை வெல்ல அருள் வேண்டி விநாயகப் பெருமான் இங்கு வந்து, சிவகங்கையில் நீராடிப் பழம்பதிநாதரின் அருள் பெற்றார்.
  • தங்கள் தவறை உணர்ந்த திரிபுராதிகள் இங்கு வந்து வழிபட்டு இறையருள் பெற்றனர்.  
  • நாரதர் வாயிலாக இத்தலப் பெருமையை அறிந்த அங்காரகன்  இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவோரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்படி வரம் பெற்றான்.
  • பிரமன் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றது
  • சந்திரன் தக்ஷனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது
  • சுசீலன் என்பவனையும் அவனது மனைவியையும் எமதூதர்கள் கொண்டு செல்ல எத்தனிக்கையில் சிவ கணங்கள் அவர்களை விடுவித்து முக்தி பெற்றது
  • அகத்தியர் திருமணக் கோலம் கண்டது
  • வியாக்கிராசுரன் என்பவனை அம்பிகை ,பத்திர காளி உருவில் அழித்தது
  • மகாலக்ஷ்மி பைரவ மூர்த்தியிடம் மகாவிஷ்ணுவைக் காத்துத் தனது மாங்கல்யத்தையும் காக்க வேண்டி வரம் பெற்றது
  • கௌதம ரிஷியின் சாபம் தீர தேவேந்திரன் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தது
  • ராமன் பூஜித்து அருள் பெற்றது ஆகிய வரலாறுகளை இப்புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.

 

  • மொட்டைக்கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிக உக்கரத்தில் இருப்பதன்பொருட்டு இக்கதவு எப்போதும் மூடப்பட்டுள்ளது.

     

  • இத்தல புராணம் திருவாரூர் தியாகராஜ கவிராயரால் பாடப்பட்டுள்ளது.
  • காசியில் உயிர் நீப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால் தன்னிடம் வந்து வணங்குவோரது பாவங்களைத் தீர்த்து ,ஜீவன் முக்தியையே வழங்குவது திருப்புனவாயில் என்பதை, விருத்தபுரி மஹாத்மியம் கூறுகிறது. சிவமஹாபுராணத்தில் ஏகாதச ருத்ர வைபவ காண்டத்தில் விருத்தபுரி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது.

  • இத்தலத்திற்கு இந்திரபுரம்,சதானந்தபுரம், வஜ்ர துருமவனம், வனமுகம்,கைவல்யபுரம்,விருத்தகாசி, என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.

  • திருப்புனவாயிலைச் சுற்றிலும் உள்ள தலங்களுள் தென்கிழக்கில் தீர்த்தாண்டதானமும், வடமேற்கில் பறையத்தூரும், அதன் வடமேற்கில் கல்யாணபுரமும் ,மேற்கில் வெளி முக்தியும், வடக்கில் வசிஷ்டர்  பூஜித்த தலமும் உள்ளன. இவற்றிலும் விருத்தபுரீச்வரரே அருள் செய்வதாகப் புராணம் சொல்கிறது.

  • விருத்தபுரியின் சுற்றுவட்டாரத்தில் எமதர்மனும் அவனது தூதர்களும் நுழையமாட்டார்கள் எனவும் இங்கு உயிர் விடும் அத்தனை பேருக்கும் சிவலோகம் சித்திக்கும் என்றும் தலபுராணத்தால் அறியலாம்.

  • பாண்டிய மன்னர்களின் காலத்திய கட்வெட்டுக்கள் ஐந்து இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கல் இறைவனை "திருப்புனவாசலுடைய நாயனார்" என்று குறிப்பிடுகின்றன.

 


தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. மின்னியல் செஞ்சடை (3.11);

                     சுந்தரர்      -	1. சித்தம் நீநினை என்னொடு (7.50); 

பாடல்கள்      :   சேக்கிழார்    -       அப் பதியைத் தொழுது (12.28.891) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                          ஆராத காதலுடன் (12.37.117,118 & 119) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

 

Specialities

  • விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள்.

     

  • தஞ்சை பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். உயரம் 9 அடி, சுற்றளவு 8 1/2 அடி, ஆவுடையார் சுற்றளவு 33 அடி, கோமுகி 3 1/2 அடி நீளம்.

     

  • இதனையொட்டி, 'மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற பழமொழி வழங்குகிறது.

     

  • மகாமண்டபத்தில் தென்பால் சோமாஸ்கந்தர், நால்வர், சேக்கிழார் ஆகியோர் காட்சி தருகின்றார்கள்.

     

  • ஐந்து விநாயகர், சதுர்முகலிங்கம், கபிலபுத்திரர், ஒன்பதின்மர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

 

  • கோஷ்ட மூர்த்தமாகப் பொதுவாக ஆலயங்களில் இடம் பெறும் இலிங்கோற்பவருக்குப் பதிலாக இங்கு திருமாலும் அநுமனும் உள்ளனர்.
  • வைகாசி புனர்பூசத்தில் கொடியேற்றி ஸ்வாதியன்று தேரோட்டமும், விசாகத்தில் தீர்த்தவாரியும் நடைபெற வேண்டும் என்றும் மாசி மகத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, சர்ப்ப நதியில் (பாம் பாற்றில்) தீர்த்தம் கொடுப்பதாகவும் புராண வாயிலாக அறிகிறோம்.

 

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தொடர்பு : 04371 - 239212

Related Content