சந்தனம் Santalum album, Linn.; Santalaceae.
செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதம்அடைந் தாரடி யாரடி யார்கட்கே.
. - திருஞானசம்பந்தர்.
திருவாஞ்சியம், திருவழுந்தூர் ஆகிய தலங்களில் தலமரமாக விளங்குவது சந்தன மரமாகும். தமிழக மலைக்காடுகளில் தானே வளரும் மரம். உலர்ந்த மரம் மணம்மிக்கது. வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன. இவற்றுள் செஞ்சந்தனமே மருத்துவக் குணமிக்கதாகும். கட்டையும் அதிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய்யும் மருத்துவப் பயனுடையவை.
சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்கும். உடலைக் குளிர்வித்துத் தேற்றும். நாடிநடையை மிகுத்து உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து இரத்தக் கசிவு, சீழ் ஆகியவற்றைத் தடுக்கும்.

| Name | Red Sandalwood Tree |
| Family | Fabaceae |
| SubFamily | Mimosoideae |
| Genus | Adenanthera |
| Species | Pavonina |
| Authority | L. |
| Type | Deciduous |
| Common Family | Pea |
| Sub Family | mimosa |
| Native | India, S.E Asia |
| Size | Medium |
| Language Common | Red Sandalwood, Coral-wood, Peacock flower fence, Red beadtree |
| Language Hindi | Raktakambal,ranjana,raktachandan |
| Wiki | wikipedia |
| Links | flowersofindia ars-grin theplantlist |
| Description | Red Sandalwood is a timber tree. This plant is found in the wild in India. Leaves are compound bipinnate, green when young, turning yellow when old. The small, yellowish flower grows in dense drooping rat-tail flower heads, almost like cat-tail flower-heads. Fruits are curved, hanging, green pods that turn brown, coil up and split open as they ripen to reveal small bright red seeds.These attractive seeds have been used as beads in jewellery, leis and rosaries. They were also used in ancient India for weighing gold. The seeds are curiously similar in weight. Four seeds make up about one gramme. Children love the hard red seeds and few can resist collecting the brightly coloured seeds usually littered under the tree. The young leaves can be cooked and eaten. the wood is extremely hard and used in boat-building and making furniture. |
| Medicinal uses | A red powder made from the wood is also used as an antiseptic paste. In Ancient Indian medicine, the ground seeds are used to treat boils and inflammations. A decoction of the leaves is used to treat gout and rheumatism. The bark was used to wash hair. |
| Where | 80 ft road indiranagar, defence colony, Bangalore Opposite Ambedkar College, Indiranagar, Bangalore |

| Color | Brown or Grey |
| Texture | Flaky |

| Size | small |
| Shape | spikes |
| Color | white to yellow |
| Season | Mar-May |

| Shape | Twisted Pod |
| Color | Green turning brown |
| Info | Proudly displaying red seeds |

| Type | Bipinnate |
| Stalks | 3-6 pairs |
| Info | Leaflets arranged alternately, and blunt at both ends |

Red Sandalwood Tree - Flower Bud
திருமுறைகளில் சந்தன மரம் பற்றிய குறிப்பு :-
சலசல சந்தகி லோடும்உந்திச்
சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டிப்
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. 5
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. 1
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பிலா லந்துறை யாரே. 6
பாரும் நீரொடு பல்கதிர்
இரவியும் பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல்
வேள்வியில் தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு
வந்திழி செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர
புரந்தொழும் அடியவர் வருந்தாரே. 5
பெருகு சந்தனங் காரகில்
பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை
மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும்
மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு
மலரடி வணங்குதல் செய்வோமே. 6
துவரா டையர்வே
டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா
தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன்
அகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர்
குரங்கா டுதுறையே. 10
அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை
சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகமெளிதே.
ஏலமார் தருகுழல்
ஏழையோ டெழில்பெறுங்
கோலமார் தருவிடைக்
குழகனார் உறைவிடஞ்
சாலமா தவிகளுஞ்
சந்தனஞ் சண்பகஞ்
சீலமார் ஏடகஞ்
சேர்தலாஞ் செல்வமே. 4
ஆலமா மரவமோ
டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ்
சண்பக முந்தியே
காலமார் முகலிவந்
தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை
நினையுமா நினைவதே. 2
முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும்
நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோ டின்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே. 7
இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர்
இழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய்
கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ
டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 2
கந்தமார் கேதகைச் சந்தனக்
காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக்
குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்
டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந் துய்யலாம்
நெஞ்சமே அஞ்சல்நீயே. 4
கோடுசந் தனமகில்
கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரும்
ஏடகத் தொருவனை
நாடுதென் புகலியுள்
ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க்
கில்லையாம் பாவமே.
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 1
ஏற்று வெல்கொடி
ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர்
நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன
வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள்
வீழி மிழலையே. 2
எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 10
தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே. 9
ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 1
கந்தங் கமழ்கா ரகில்சந்
தனம் உந்திச்
செந்தண் புனல்வந்
திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா
நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 3
காடும் மலையும் நாடு மிடறிக்
கதிர்மா மணிசந் தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
பணைத்தோ ளியர்பா டலொடா டல்அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 8
தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்
சந்திரன் சவிதாவிய மானனானீர்
சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்
தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்
முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 3
அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே.
குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 2
சந்தன வேருங் காரகிற் குறடும்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 5
பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை உள்ளன ஆசறுத் தானை. 4
புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை. 6
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி 1
தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாள மிருந்தவா றன்னே என்னும். 8
விண்ணிறந் தார்நிலம் விண்டவ ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத் தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. 107
சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
பொன்நெடுங் குன்றுடை யோரே.
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய
திருநுதலவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு)
எரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 2
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே. 2
ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ்
சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே. 50
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே 7
சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. 2
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றுங் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே. 93
சந்தனந் தோய்ந்த
தடந்தோளாள் - வந்து (90)
சந்தனப்பூம் பைந்தழையைச்
செந்தேனில் தோய்த்தியானை
மந்த மடப்பிடியின்
வாய்க்கொடுப்ப - வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும்
ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு. 38
தண்ணறுஞ் சந்தனம்
கொண் டப்பிச் சதிர்சாந்தை
அவந்திரி குண்டமண் ஆவதின்
மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல
காண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட
மதுரா புரியென்னும் நீள்பதியே. 18
தாலி கழுத்தணிந்து
சந்தனத்தால் மெய்பூசி
புனத்தெழு கைமதக் குன்றம
தாயங்கொர் புன்கலையாய்
வனத்தெழு சந்தனப் பைந்தழை
யாய்வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம்
பந்தன்வண் கொச்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு
லாய்த்திவர் கட்டுரையே. 56
சந்தன சரள
சண்பக வகுள
நந்தன வனத்திடை
ஞாயிறு வழங்காது
கோடு கொண்டு எழும் திரைக்
கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரைச் சந்தனச்
சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும்
புணர்நிலம் பலவால்
ஆடு நீள் கொடி மாட
மா மல்லையே அனைய. 41
துங்க மாதவன் சுரபியின்
திருமுலை சொரி பால்
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால்
வரை மிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம்
அகிலொடு மணிகள்
பங்கயத் தடம் நிறைப்ப
வந்து இழிவது பாலி. 21
எள்ளும் செயல் வன்மைகள்
எல்லை இல்லாத செய்யத்
தள்ளுஞ் செயல் இல்லார்
சந்தனக் காப்புத் தேடிக்
கொள்ளுந் துறையும் அடைத்தான்
கொடும் கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க்கு
அன்பரும் சிந்தை நொந்து. 17
மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப்
பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம்
ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை
நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு
அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை. 897
வந்து அணைந்து வினவுவார்
மாதவரேயாம் என்று
சந்தனமாம் தையலார் முன்வந்து
தாள் வணங்கி
அந்தமில் சீர் அடியாரைத் தேடி
அவர் புறத்து அணைந்தார்
எந்தமை ஆள் உடையவரே
அகத்துள் எழுந்தருளும் என. 37
தண் புனல் குளிர் கால்
நறும் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாச மென்
மலர் பொதி பனி நீர்
நண்புடைத் துணை நகை
மணி முத்தணி நாளும்
உண்ப மாதுரியச் சுவை
உலகு உளோர் விரும்ப. 385
பூந்தண் பனிநீர் கொடு சமைத்த
பொருவுஇல் விரைச்சந்தனக் கலவை
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம்
நிறைமான் மதச் சேறு
தோய்ந்த புகை நாவியின் நறுநெய்
தூயபசும் கர்ப்பூரம் உடன்
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய
எண்ணில் மணிப்பாசனத்து ஏந்தி. 35
பனிநீர் விரவு சந்தனத்தின்
பசுங்கர்ப்பூர விரைக் கலவை
வனிதையவர்கள் சமைத்து எடுப்பக்
கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்
புனித நறும் பூ மாலைகளும்
போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன்
அடைக்காய் அமுதும் ஏந்தினார். 77
காய்வுற்ற செற்றங் கொடு
கண்டகன் காப்பவும் சென்று
ஆய்வுற்ற கொட்பில் பகல்
எல்லை அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும்
பெறாது சிந்தை
சாய் உற்றிட வந்தனர்
தம்பிரான் கோயில் தன்னில். 19
அந்திப் பிறை செஞ்சடை
மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தனக்
காப்பிட என்றும் முட்டா
அந்தச் செயலின் நிலை
நின்று அடியார் உவப்பச்
சிந்தைக்கு இனிதாய திருப்பணி
செய்யும் நாளில். 10
பொங்கு தமிழ்ப் பொதிய மலைப்
பிறந்து பூஞ் சந்தனத்தின்
கொங்கு அணைந்து குளிர்சாரல் இடை
வளர்ந்த கொழும் தென்றல்
அங்கு அணைய திருவாரூர் அணி
வீதி அழகர் அவர்
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு
அருளும் வகை நினைந்தார். 270
அந்தரத்து அமரர் போற்றும் அணி
கிளர் ஆடை சாத்திச்
சந் தனத்து அளறு தோய்ந்த
குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர்
மணிக் கலன்கள் சாத்தி
இந்திரத் திருவின் மேலாம் எழில்
மிக விளங்கித் தோன்ற. 184
தூநறும் பசும் கர்ப்பூரச்
சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆனதண் பனிநீர் கூட்டி
அமைந்த சந்தனச் சேறாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த
மங்கலக் கலவை சாத்திப்
பான்மறை முந்நூல் மின்னப்
பவித்திரஞ் சிறந்த கையான். 17
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை
தம் மேல் வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை
உகந்து ஏறும் பிரானைச்
சுண்ண வெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப் பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து
மகிழ் உடனே பாடுகின்றார். 115