logo

|

Home >

to-practise >

temple-trees-yellow-orchid-tree-mandhaarai

Om symbol

temple-trees-தலமரச் சிறப்புகள் மந்தாரைச் செடி - Yellow Orchid tree (Mandhaarai)

Om symbol

தலமரச் சிறப்புகள்


மந்தாரை Bauhinia Purpurea, Linn.; Caesalpiniaceae.

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் 
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும் 
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர் 
குறையுடை யவர்கலாற் களைகிலார் குற்றமே. 

                                                                                                    - திருஞானசம்பந்தர்.

திருக்கானப்பேர் (காளையார்கோயில்)திருத்திலதைப்பதி தலங்களில்  தலமரமாக விளங்குவது மந்தாரை ஆகும். இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறமலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும் இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை.

மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி குருதி, சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும்.

Bauhinia tomentosa, L. <=> Yellow Orchid Tree

 

Canopy

 

Canopy of Orchid

NameYellow Orchid Tree
FamilyFabaceae
SubFamilyCaesalpinioideae
GenusBauhinia
Speciestomentosa
AuthorityL.
TypeNearly Evergreen
Common FamilyGulmohar
NativeIndia
SizeSmall
Height17 m

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
DescriptionPale yellow flowers facing downward. Nice specimen tree for the small yard. The bell-shaped yellow flowers have a black marking in the throat and may turn pinkish with age. Leaves smell like burned rubber when rubbed. This vigorous shrub or small tree is suitable for a mixed border or rockery. Plant in well-drained soil. A food supplement - Kachnar - is made out of this plant as a gargle for sore throats, as a paste for skin diseases, or internally as a remedy for diarrhea.
Where1st Main Road, Defence Colony, Indiranagar, Bangalore

 

Bark

 

Bark of Orchid

ColorAshy
Texturenot rough

 

Flowers

 

Orchid flower

Coloryellow
Info5 narrow petals
SeasonJun-Oct

 

Fruits

 

Fruit of Orchid

Size28 cm
Infothin flat pod

 

Leaves

 

Leaf of Orchid

Type2 lobed
ShapeCamel hoof
Leaflet Numbers2
InfoSlightly longer than broad

 

Picture Carousel (12)

 

Orchid Tree

Yellow Orchid Tree - Flower Bud

‹›

திருமுறைகளில் மந்தாரை பற்றிய குறிப்பு :-

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்
கயிலாய நாதனையே காண லாமே.  6.070.6 

செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்
மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.  6.073.3 

பொதும்புறு தீப்போற் புகைந்தெரி
 யப்புலன் தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண்
 டாய்விரை யார்நறவம்
ததும்புமந் தாரத்தில் தாரம்
 பயின்றுமந் தம்முரல்வண்டு
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை
 வானத்து அடலரைசே.  8.06.36 

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் 
 பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண்
 டாய்வெண் மணிப்பணிலம்
கொழித்துமந் தாரமந் தாகினி 
 நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் 
 சேர்தரு தாரவனே.  8.06.47 

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.  8.008.15

சரளமந் தார சண்பக வகுள
 சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
 இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
 அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
 பொன்நெடுங் குன்றுடை யோரே.  9.16.11

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.  10.4.3.1 

இடைதரில் யாமொன் றுணர்த்துவ 
 துண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம் 
 விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினுந் 
 தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு 
 மோநின் புரிசடைக்கே.  11.25.3 

மதந்தந்த மென்மொழி மாமலை 
 யாட்டி மடங்கல்கொன்ற
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் 
 ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் 
 தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் 
 உய்ய வளர்கின்றதே.  11.26.18

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் 
 மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம் 
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை 
 கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித் 
துன்னு சாதி மரு மாலதி மௌவல் 
 துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த 
பன் மலர்ப் புனித நந்த வனங்கள் 
 பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.  12.006.94

செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் 
 மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் 
 அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் 
 வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனி 
 மலர்மாரிகள் பொழிந்தார்.  12.024.33 

 

< PREV <
மகிழமரம்
Table of Content> NEXT >
மருதமரம்

 

 

Related Content

Is there any other refuge ?

When will I get to salute You ?

Sivagangai Lord Shiva Temples Pictures

பாண்டிய நாட்டுப் பதிகங்கள் - தேவகோட்டை திரு. முத்தையா தேசிகர