logo

|

Home >

forms-of-lord-shiva >

chandrashekharar

Chandrashekharar

chandrashekarar

shlokam:

With the hands in abhaya (protecting) and varada (boon giving) postures, with a pleasing and decorated expression, a blossomed face and eye, with the shadow created by moon on the crown, with an upright body, and feet in the same level, Coral like formed, holding the deer and axe, (He) stay in the lotus pedestal. (of my heart)

purANa of the deity :

cha.ndra shEkharar : moon ornamented Lord (bhOga mUrti)

daksha had twenty seven stars as daughters. All of them were married to moon. But the moon had special attraction towards rOhiNi. So all the other wives complained it to the father dakasha that their husband moon is not treating them fairly. daksha got angry and cursed the moon to lose its luminance (kala) day by day. Everyday the moon started loosing one luminance part (kala) out of his 16 parts. Afraid and ashamed moon disappeared into the ocean. There are many herbs that require the light of the moon to grow. Without moon, they were harmed. Consequently there was suffering in the world. To end the problem the celestials advised moon to take refuge in the Great Divine, Lord shiva. Left with only one kalA, he took refuge in Lord Shiva. Being the graceful Almighty, He wore the moon crescent on His head, making him grow for 15 days and decay for 15 days periodically.

Chandrashekarar

Thus chan^drashEkharar is considered a giver of refuge.

See Also:
1. chandrashekarAShTakam

chandrashekarAShTakam

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்
    ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என்
    சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன
    இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ
    தியம்புகவே  8.திருவா.5.9

வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்
    நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்
    மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்
    கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்
    செழுஞ்சுடரே 8.திருவா.6.4

வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின்
    வலையிற்பட்டு
மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண்
    மதியின்ஒற்றைக்
கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி
    லாயமென்னும்
மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன்
    வாழ்முதலே 8.திருவா.6.40

கதியடி யேற்குன் கழல்தந் தருளவும்
    ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண் டாய்வெண்
    டலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்
    சுருங்கஅஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை
    மன்னவனே  8.திருவா.6.42

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்
    தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின்
    வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன்
    தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன்
    பழிப்பினையே 8.திருவா.6.46

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி
    விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண்
    மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந்
    தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு
    தாரவனே  8.திருவா.6.47

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய் 8.திருவா.8.9

தேனக மாமலர்க் கொன்றை பாடிச்
    சிவபுரம் பாடித் திருச்ச டைமேல்
வானக மாமதிப் பிள்ளை பாடி
    மால்விடை பாடி வலக்கை யேந்தும்
ஊனக மாமழுச் சூலம் பாடி
    உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனக மாகநஞ் சுண்டல் பாடிப்
    பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே   8.திருவா.9.17

வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
    மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
    சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
    கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
    ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே  8.திருவா.9.19

கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்    8.திருவா.17.10

மாய னேமறி கடல்விடம் உண்ட
    வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
    நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
    பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே     8.திருவா.23.7

முன்னை என்னுடைய வல்வினை போயிட
    முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
    எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
    இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
    அதிசயங் கண்டாமே     8.திருவா.26.3

பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர்
    துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே   8.திருவா.28.10

குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
    காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
    உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
    பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
    அம்மா னேஉன் னடியேற்கே   8.திருவா.33.1

கடலின்திரை யதுபோல்வரு
    கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்
    தொழியாவணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய
    திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள்
    பரன்தான்செய்த படிறே  8.திருவா.34.6

பிணியெலாம் வரினும் அஞ்சேன்
    பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
    தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
    சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே   8.திருவா.35.5

கோணிலா வாளி அஞ்சேன்
    கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
    நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
    வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே  8.திருவா.35.10

Back to mAhEshvara mUrtham page
The Forms of Lord Shiva

Related Content

சந்திரசேகர மூர்த்தி