logo

|

Home >

to-practise >

thiruvezukurrirukkai-effect-of-reading-all-padhikams

thiruvezukURRirukkai - Effect of reading all padhikams


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம்    திருப்பிரமபுரம்
பண்    வியாழக்குறிஞ்சி
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

ஓருருவாயினை; மான் ஆங்காரத்து
ஈரியல்பாய் ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஒர் ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுதேத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை;
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒரு தாள் ஈரயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒரு கரி ஈடழித்துரித்தனை;
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி 
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்
முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து
நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆறங்க முதலெழுத்தோதி
வரன்முறை பயின்று எழுவான் தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்துணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூவுலகும் புதைய மேல் மிதந்த
தோணி புரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறை முதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் 
அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லாவர் இல்லை நீள் நிலத்தே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam    thiruppiramapuram
paN    viyAzakkuRinyci
1st thirumuRai

thirucciRRambalam

OruruvAyinai; mAnAN^kAraththu 
IriyalbAy oru viN muthal bUthalam
onRiya irucuDar umbarkaL piRavum
paDaiththaLiththazippa mum mUrththikaL Ayinai;
iruvarODoruvban Aki n^inRanai;
Or Al n^Izal oNkazal iraNDum
muppozudhEththiya n^Alvarkku oLin^eRi
kATTinai; n^ATTam mUnRAgak kOTTinai;
irun^^athi aravamODu orumathi cUDinai;
oru thAL Irayil mUvilaic cUlam
n^^ARkAl mAnmaRi ain^thalai aravam
En^thinai; kAyn^tha n^AlvAy mummadhaththu
irukOTToru kari IDaziththuyththanai;
oru dhanu irukAl vaLaiya vAN^gi
muppuraththODu n^Anilam anycak 
konRu thalaththuRa avuNarai aRuththanai;
aimpulan n^AlAm an^thakkaraNam
mukkuNam iruvaLi oruN^kiya vAnOr
Eththa n^inRanai; oruN^kiya manaththODu
irupiRappOrn^thu muppozuthu kuRai muDiththu
n^AnmaRai Othi aivakai vELvi
amaiththu ARaN^gam muthalezuththOthi
varanmuRai payinRu ezu vAnRanai vaLarkkum
piramapuram pENinai;
aRupatham muralum vENupuram virumbinai;
ikaliyamain^thuNar pukaliyamarn^thanai;
poN^gu n^ARkaDal cUz veN^guru viLaN^ginai;
pANi mUvulakum puthaiya mEl mithan^tha
thONipuraththu uRain^thanai; tholaiyA irun^ithi
vAyn^tha pUn^tharAy Eyn^thanai;
varapuram onRuNar cirapuraththu uRain^thanai;
orumalai eDuththa iruthiRal arakkan
viRalkeDuththaruLinai; puRavam purin^thanai;
mun^n^Irth thuyinROn n^Anmukan aRiyAp 
paNboDu n^inRanai; caNbai amarn^thanai;
aiyuRum amaNarum aRuvakaith thErarum
Uziyum uNarAk kAzi amarn^thanai;
eccan EzicaiyOn koccaiyai meccinai;
ARupathamum ain^thamar kalviyum
maRaimuthal n^Angum 
mUnRu kAlamum thOnRa n^inRanai; 
irumaiyil orumaiyum orumaiyin perumaiyum
maRuvilA maRaiyOr
kazumala muthupathik kavuNiyan kaTTuRai
kazumala muthupathik kavuNiyan aRiyum
anaiya thanmaiyai Athalim n^innai
n^inaiya vallavar n^IL n^ilaththE.

thirucciRRambalam


Meaning of song:


(You) Became one form;  
As the two characters of the giant ego,
one sky to earth - associated two flames
(sun, moon), celestials and others - 
to create, sustain and destroy became the Trinity;
With the two turned (Yourself) to be one (among);
In the shade of one banyan, the two brilliant Feet
(all) three times worshipping four people - (You) 
showed glorious path;
Showed the eyes to be three;
Crowned with gigantic river and one moon;
One foot  sharp tip three headed spear,
four legged deer cub, five headed snake - Held;
Three rutful elephant with two tusks - Skinned thrashing down;
One bow, bending (its) two legs, freightening 
three puras and earth slashed off the demons;
Five senses, four internal instruments, 
three characters, two gases (prANa, apANa)
- the celestials who control these - Stood hailed by them;
With unified mind, realizing two births, performing
three time duties, chanting four vedas, making
five offerings (panchayagna), chanting the first
letter of six angas (praNava), following specified path
those who build up the sky (rain) - Fondled in that piramapuram;
Liked the vENupuram where six legged (beetle) hum;
The refuge that is here itself - Stayed at that pukali;
Gloriously there at venguru surrounded by bloating ocean;
Towns and all the three worlds buried, still floated 
thONipuram - there resided; 
Arrived at the pUntharAy that has never diminishing 
two wealths (caNga, padma nithi);
Resided at the cirapuram that is known as the blessing place;
Destroyed the vigor of the strong demon who picked
up one mount (kailAsh) and let him go (resided at puRavam);
Stood to be not intelligible to one who sleeps in ocean 
and four headed; Sat at caNpai;
Stayed at kAzi to be not realized even till the deluge
by jains who suspect and buddhists who discount everything;
Appreciated the koccai of seven svaras, eccan;
Six stages, five-fold education, three 
times - Creating them Stood.
Having united mind in both places and the
glory of union - the vedins who are faultless
their ancient town kazumalam - the essay of
the kauNiyan there. Since You are of the type
understood by the kavuNiyan of kazumalam,
there is no body in the wide world who could
think of You!

Notes:
1. Oruru - As the only one Supreme - parashiva.
2. mAn AN^kAraththu ... piRavum - Souls in all the worlds
be it humans or the celestials they are under the 
influence of filth of ego. (It has two properties 
1. ahankAram 2. mamakAram).
3. iruvarODu oruvan Agi ninRanai - Agi is a very
important word here. It indicates that Lord shiva 
is not one among the other divines, but as the owner
of the shop serves too along with his employees 
in his shop, God acts as rudra.
4.aiyuRum amaNar - jains suspect the existence of 
God as "asti nAsti" - "may be there, may not be".
Those who are stuck to their wrong viewpoint, unless
they come out of it themselves, even at the time of 
deluge thay will not get to realize the Truth.
5. n^ATTam - eye; irunathi - big river; kODu - tusk;
kari - elephant; dhanu - bow; pANi - town.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை