logo

|

Home >

to-practise >

chetha-natkal-yethanai

செத்த நாட்கள் எத்தனை?

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருப்பிரமபுரம் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
சாநாளின்றிம் மனமே சங்கை தனைத் தவிர்ப்பிக்குங் 
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர் தூவு எத்தனையுந் 
தேனாளும் பொழிற் பிரம புரத்துறையுந் தீவணனை 
நாநாளும் நன்னியமஞ் செய்து அவன் சீர் நவின்றேத்தே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruppiramapuram 
paN    :    cI kAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
cA n^AL inRi manamE caN^gai thanaith thavirppikkuN^ 
kOnALum thiruvaDikkE kozumalar thUvu eththanaiyum 
thEnALum poziR pirama puraththuRaiyum thIvaNanai 
n^An^ALum n^anniyamam ceythu avan cIr n^avinREththE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
Without the dead days, oh my mind, for the holy Feet of 
the Governing King Who clears the confusion, shower rich 
flowers as much! Oh the tongue, take it as the good motto 
to speak the glory of the Fire-colored Who resides at  
the thiruppirampuram of honeyful gardens! 
 
பொருளுரை

   
மனமே, நாள்கள் செத்த நாட்களாக அமையாமல், தடுமாற்றத்தை 
நீக்குகின்ற மன்னவனுடைய திருவடிகளுக்குச் செழுமையான  
மலர்களை மிகவும் தூவு!  
நாவே, நல்ல நியமமாகக் கொண்டு, தேன் நிறைந்த  
பொழில்களையுடைய திருப்பிரமபுரத்து உறையும் தீப்போன்ற 
உருவினனுடைய பெருமைகளைப் பேசு! 
 
Notes

  
1. சாநாளின்றி - சிவபெருமான் திருவடிகளைச் சிந்தியாத நாள்கள் 
செத்த நாட்கள். 
ஒ. பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே - அப்பர் 

Related Content

Five Deeds of Lord

Benefits of relying on God

Miracle of Resurrection

Who is most beautiful ?

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்