logo

|

Home >

to-know >

aindamar-kalvi-ganasambanthar

ஐந்தமர் கல்வி - ஞானசம்பந்தர் குறிப்பது யாது?

 

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த அற்புதமான பதிகங்களில் ஒன்று திருவெழுகூற்றிருக்கை. தமிழ் விரகரான காழிப் பிள்ளையார் இப்பதிகத்தில் எண்களால் ஆன அற்புதத் தேரில் பிரமபுரத்துப் பெருமானை அமரவைத்துள்ளார்.

இப்பதிகத்தில் வரும் ஒரு சொற்றொடர் "ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் மறை முதல் நான்கும் மூன்று காலமும் தோன்ற நின்றனை" என்பதாகும். இதில் ஐந்தமர் கல்வி என்பது என்ன என்ற கேள்விக்கு விடையினை தக்ஷஸ்ம்ருதி என்னும் நூல் தருகின்றது. அந்தப் பகுதி பின்வருமாறு:

वॆदस्वीकरणं पूर्वं विचारॊऽभ्यसनं जपः ।
तद्दानं चैव शिष्यॆभ्यॊ वॆदाभ्यासॊ हि पञ्चधाः ॥ दक्षस्मृति ॥

வேதச்வீகரணம் பூர்வம் விசாரோஅப்யசனம் ஜப: |
தத்தானம் சைவ சிஷ்யேப்யோ வேதாப்யாசோ ஹி பஞ்சதா: || தக்ஷச்ம்ருதி ||

vEdasvIkaraNaM pUrvaM vichArO&bhyasanaM japaH |
taddAnaM chaiva shiShyEbhyO vEdAbhyAsO hi pa~jchadhAH || dakShasmRuti ||

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படும் வேதம் பயில்வதற்கான ஐந்து அமர் கல்வி பின்வருமாறு:

  1. வேதஸ்வீகரணம் - முதலில் வேதத்தைப் பெறுதல் (ஆசிரியர் கூறக் கேட்டல்)
  2. விசார - (கற்றவற்றைச்) சிந்தித்தல்
  3. அப்யசனம் - பயிற்சி செய்தல்
  4. ஜப: - வழிபாட்டில் ஜபித்தல்
  5. தத்தானஞ் சைவ சிஷ்யேப்யோ - பிறருக்குச் (சீடர்களுக்குச்) சொல்லிக் கொடுத்தல்

இவை ஐந்தும் செய்ய வேத வித்தையானது ஒருவரிடத்து நன்றாக நிலைபெறும்.

திருஞானசம்பந்தப் பெருமான் ஓதாது உணர்ந்த பெரியோர். அவர் தாம் எத்தனை நுட்பமான கருத்துக்களை நமக்குத் தம் தேவாரத்தில் பொதிந்து தந்திருக்கிறார்!!

Posted On : 09-Jul-2012

See Also:
1. திருவெழுகூற்றிருக்கை - பதிகம் 

Related Content