logo

|

Home >

temples-special >

kadamban-sthalangal

Om symbol

கடம்பன்( முருகன்) வழிபட்ட சிவஸ்தலங்கள்

Om symbol

முருகப்பெருமான்  சிக்கலுக்கு அருகில் உள்ள கீழ்வேளூரில்(கீவளூர்)சிவபூஜை செய்யும்போது அத்தலத்தைச் சுற்றிலும் ஐந்து (ஒன்பது என்றும் கூறுவர்) தலங்களில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பஞ்சக் கடம்பத் தலங்கள்: ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), அகரக் கடம்பனூர் , கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர்,பெருங் கடம்பனூர்  ஆகிய தலங்களைப் பஞ்ச(ஐந்து) கடம்ப க்ஷேத்திரங்களாகக் குறிப்பிடுவர். .

 

நவகடம்பத்தலங்கள்:   கோயில் கடம்பனூர் , ஆழிக் கடம்பனூர்,  கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர் , வல்ல மங்கலம், பட்ட மங்கலம், சொட்டால் வண்ணம், ஓதியத்தூர்  ஆகிய ஒன்பது தலங்களும் இவ்வரிசையில் அடங்குவன,