பெரியான்குடி (கழுக்காணிமுட்டம்) கருணைப்புரீஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்		: கருணைபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: மரகதவல்லி
தல மரம்			: 
தீர்த்தம்			: பறவை குளம், அப்பன் குளம், முனி குளம்
வழிபட்டோர்		: ஸ்ரீ வைஷ்ணவி, சிறுத்தொண்டர்

தல வரலாறு

  • ஸ்ரீ வைஷ்ணவி பூஜை செய்த தலம்.
  • துர்வாச முனிவரின் சாபத்தால், இரண்டு அரச குமாரர்கள் கழுகு உருவை அடைந்து, பின்னர் இவ்வாலயத்து இறைவனைப் பூசித்து, சாப விமோசனம் அடைந்தனர். கழுகுகள் ஸ்னானம் செய்த குளம் பறவைகுளம் எனப்படுகிறது.
  • இவ்வூரின் கண் வாழ்ந்த சீலவதி அம்மையார் என்பவரின் பக்தியை சிறுத்தொண்டருக்குக் காட்டியதாக ஒரு செய்தி உண்டு. இவர் மற்றும் சிவனடியார்கள் ஸ்னானம் செய்த குளம் முனிகுளம் எனப்பட்டது.
  • இறைவன் ஸ்னானத்திற்கான குளம் அப்பன் குளம் எனப்படுகிறது.

சிறப்புக்கள்

  • கழுகு சிவலிங்கத்தைப் பூசிக்கும் காட்சி லிங்கோத்பவரின் கோஷ்டத்தின் மேல் செதுக்கப் பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறையிலிருந்து 0.5-km