logo

|

Home >

shaiva-vina-vidai >

vedaakama-puraanangal

வேதாகம புராணங்கள்

 

  1. சைவர்களின் புனித நூல்கள் எவை?

     

    திருமறை எனப்படும் வேதமும், திருமுறைகளும், சிவாகமங்களும், புராணங்களும் மிகப் போற்றப்படும் நூல்களாகும். பல அருளாளர்கள் இயற்றிய பிற நூல்களும் உள.

     

  2. வேதங்கள் எவை?

     

    இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்காகும்.

     

  3. இவை உணர்த்தும் பொருளென்ன?

     

    இறைவனைப் பொது நிலையில் போற்றுவன திருமறைகள். இவை இறைவனுடைய பல்வேறு செயல் வடிவங்களைப் போற்றுவன. (இவற்றில் இந்திரன், அக்கினி, வருணன், உருத்திரன் என வருவன பல தெய்வ வழிபாடன்று. இறைவன்ஒருவனின் பல இயல்புகளே என உணரவேண்டும். அப்பொழுது தான் "ஒன்றே பொருள். அது பலவாறாகச் சொல்லப்படுகின்றது" என்பது போன்ற வேத மந்திரங்களின் பொருள் தெளிவடையும்.மேலும் விவரங்கட்கு)

     

  4. வேத சாகைகள் என்றால் என்ன?

     

    சாகை என்றால் கிளை என்று பொருள். நான்கு வேதங்களும் பயிலப்படும் மரபு பற்றிப் பல சாகைகள் கொண்டு அமைந்துள்ளன. (திருமுறை ஆசிரியர்கள் "சாகை ஆயிரம் உடையார், சாமம் ஓதுவதுடையார்", "சந்தோக சாமம்" என இவற்றைக் குறித்துள்ளனர்.)

     

  5. வேத அங்கங்கள் என்பன யாவை?

     

    வேதங்களின் உறுப்பிக்களாக அமைவன. சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் - என்பன இவ்வாறு.

     

  6. வேதங்கள் ஏன் நான்காக உள்ளன?

     

    அமைப்பு மற்றும் பயன்பாடு கருதி நான்காக உள்ளன.

     

  7. ஆகமங்களின் தேவை என்ன?

     

    வேதங்கள் பொது வகையில் எடுத்து ஓதிய இறைவனை ஆகமங்கள் சிறப்பு முறையில் சிவபெருமானே அப்பரம்பொருள் என்று அப்பெருமானை வழிபட்டு உணரும் நிலை தருகின்றன.

     

  8. ஆகமங்கள் எத்தனை?

     

    சிவாகமங்கள் 28 ஆகும். (28 ஆகமங்கள் பற்றிய செய்திகள்).

     

  9. புராணங்களின் தேவை என்ன?

     

    வேத முதல்வனாக மனம் வாக்கிற்கு அப்பார்பட்டு நிற்கும் இறைவனின் திருவருட் செய்லகளைக் கூறுவதன் மூலம் உயிகளை வழிப்படுத்தி நிற்பன புராணங்கள் ஆகும். இப்புராணங்கள் இறைவனாகிய சிவபெருமானின் திருவருளைப் பலவாறு போற்றி நிற்கும். ஆங்காங்கு அப்பெருமானின் திருவருள் பெற்ற தேவர்களையும் உபசார வழக்காகப் போற்றும்.

     

  10. புராணங்கள் எவை எவை?

     

    புராணங்கள் 18 ஆகும். அவை சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், கூர்மம், ப்ரம்மாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், ப்ரம்மம், பத்மம், ஆக்னேயம், ப்ரம்மகைவர்த்தம் என்பன.

     

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்