logo

|

Home >

shaiva-vina-vidai >

iruvai

இறுவாய்

  1. இந்து சமயம் என்பது யாது?

    இந்துசமயம் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது சைவ சமயமே ஆகும். இந்து சமயம் பாரதம் முழுவதும் மட்டும் அன்றி உலகிம் முழுமையும் பரவி இருந்தது. பாரதத்தின் வட எல்லை ஆகிய காச்மீரம் முதல் தென் எல்லையாகிய கன்னியாகுமரி வரை சைவசமயம் உள்ளது.

    உலகெங்கும் சிவவழிபாடு உள்ளது; என்றாலும், தென்னாடாகிய தமிழ்நாட்டில் அவ்வழிபாடு பன்னிரு திருமுறைகளோடு துளங்குகின்றது. உலகெங்கும் சிவபெருமானின் ஆளுகையையே,

    “தென்னாடுடைய சிவனே போற்றி
     என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
    
    என்று மணிவாசகப் பெருந்தகை அருளியுள்ளார்.

    தென்னாட்டுச் சிவன்கோயில்களில் சிவபெருமான் சிவலிங்க வடிவில் மூலவராக இருக்கிறார். இந்தச் சிவலிங்கவடிவிலிருந்து தோன்றியனவே பிற வடிவங்களாகிய கணபதி, முருகன், அம்மை, திருமால் முதலிய மூர்த்தங்கள் ஆகும். இந்துசமயம் வழிபடும் எல்லா இறை வடிவங்களையும் சைவசமயம கொண்டிருக்கிறது. எனவே, இந்து சமயம் வேறு - சைவசமயம் வேறு அல்ல; இந்துசமயம் என்றால் அது சைவ சமயத்தையே குறிக்கும்.

  2. இந்து சமயத்தில் பல தெய்வங்கள் கூறப்படுகின்றனவே. எதனை வழிபடவேண்டும்?

    வேதத்தில் கூறப்பட்டுள்ள அக்கினி முதலான இறைவன் ஒருவனின் பல ஆற்றல் வடிவங்களாகும். இது வேதங்களிலேயே தெளிவாக்கப்பட்டுள்ளது. திருமுறைகளும் ஒருவனே தேவனும் ஒன்று தெளிவாக்குகின்றன. பிற தெய்வங்கள் எல்லாம் தம் தவத்தால் சிவபெருமான் அருள் பெற்று உயர் நிலை அடைந்த நம் போன்ற ஆன்மாக்களே. மற்ற அந்த தேவதைகள் எல்லாம் அவர்கள் வலிமைக்கு ஏற்ப நமக்கு சிற்சில உதவிகள் செய்ய இயலுமே தவிர, அந்தமில்லா ஆனந்தமான முத்தி நிலை அருளவல்லவர் சிவபெருமான் ஒருவரே. இதனை உணர்ந்து தவ வலிமையால் உயர்ந்த நிலையில் உள்ள பிற தெய்வங்களை இகழாமல் அவைகள் மூலம் திருவருள் செய்பவர் சிவபெருமானே என உணர்ந்து, எல்லா இம்மை மறுமைப் பயன்களோடு வாழ்வின் பயனான பேரின்ப முக்தி நிலையையும் அருளவல்லவர் சிவபெருமானே என்று அவரிடத்தில் வேறற்ற சிந்தையுடன் வழிபடல் வேண்டும். சைவசித்தாந்தம் பயிலும் போது இது மேலும் தெளிவு ஆகும்.

  3. புராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா?

    புராண வரலாறுகளை இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.

    தத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை.

  4. திருமுறைகளை எவ்வாறு படனம் (பாராயணம்) செய்ய வேண்டும்?

    பண்ணோடு பாடத் தெரிந்தவர்கள் அவற்றிக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணில் பாடுவதே நல்லது - பண்ணோடு பாடத்தெரியாதவர்கள் தங்களுக்குத் தெரிந்த இராகத்தில் சற்று இசைத்துப்பாடலாம். எப்படிப் பாடினாலும் திருமுறைகளை வாய்விட்டுப் பாடவேண்டும் மனத்திற்குள்ளேயே படனம் செய்வதோ முணுமுணுத்துக் கொண்டு படனம் செய்வதோ கூடாது. அதற்குக் காரணம் திருமுறைகளில் உள்ள சொற்களுக்கு மந்திர ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல் சொற்களை வாய்விட்டுப் பாடும்போது ஒலி அலைகளாகச் சென்று நம்மைச் சுற்றி ஒரு பேரறற்றலை ஏற்படுத்துகின்றது. திருமுறை பாடுபவர்களைக் கெட்ட ஆவிகள் அணுகுவதற்கு அஞ்சுகின்றன; சிறிய நச்சுப் பிராணிகள் கூட அவர்கள் நெருங்குவதில்லை. திருமுறைச் சொற்களிலுள்ள மந்திர ஆற்றல் திருமுறைப் படனம் செய்பவர்களை அணுகவிடாமல் அவைகளைத் தடுக்கின்றன.

    எனவே திருமுறைகளை வாய்விட்டு சிறிதளவு குரல் வெளிப்படுமாறு படனம் செய்வதே முறையாகும்.

    குறிப்பு :- இன்னும் பல சைவசித்தாந்த நுட்பங்களை நூல்களைக் கற்கும்போது இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

     

 

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்