வெண்பா
திருக்கு
சொல்லாற் றொகுத்திதனைச் சுட்டவொண்ணா மெய்ப்பொருளை
எல்லாமா யன்றா யிருந்ததனைச் - சொல்லாமற்
கல்லாலின் கீழிருந்து கையினாற் காட்டிவிட்ட
வல்லான் அடிவணங்கு வாம்
திலதம்
திருக்கு
குருவிளையான் குடிலம் பலசெய்சூர் கொடும்புலியோ
டொருவிளையான் குடிக்கான் முளைமான வுடன்றெழுந்து
பொருவிளையான் குடிலைக்குப் பொருள்சொன்ன புண்ணியனைத்
தருவிளையான் குடிச்சங்கரன் பாதங்கள் சார்ந்தனமே!
நூல்
விருத்தம்
மைகாசமனோற்கிருதி
நெடியவட கனகமலை யரவுகொடு
நெளியவளை பொருவி லொடுபோய்க்
கொடியதிற னிருதரது புரமெரிய
சிறியநகை கொளுமிவ் இளையான்
குடியதனி லடியரிட ரறநிலவு
குருமணியை மனதி னிடையே
நொடியளவு நினையிலுறு மொழிவிலொரு
நுவலரிய துரிய நிலையே! (1)
பிடிநடையு முகமதியி னொடுகுவளை
யனையவிரு பெரிய விழியுந்
துடிநடுவு முடையமலை மகளுறையு
மிடமுடைய சுடரை இளையான்
குடிநயமொ டுறையுமொரு குடிலைமறை
யுறுபொருளை நினையு மளவே
செடிநலியு மறைகளுரை சுயசொருப
மணுகுமல திமிர மறவே! (2)
வடிகுலிச முடையவனு மமரரொடு
மலரயனு மருவ நிதமும்
படியினிடை யுறுமுனிவ ரடியரொடு
துதிபரவி பரவும் இளையான்
குடியினுழை யருளினொடு குலவுமொரு
பரமசிவ சொருப வொளியைக்
கடியமன மதனிலொரு கணநினையி
னினைவரிய கதியு முறுமே! (3)
முடிமதியி னிலவொழுக சடையிலுறு
புனலொழுக முகம தினிலே
யடிபணியு மடியரக மறவுதவு
மருளொழுகு மவனை இளையான்
குடிமருவு வெளிவளிய னலனிலம்
தெனுமறைம் குடம தனையே
மடிமையற வொருபொழுது நினையிலவி
ருதமுமுறு மவுன நிலையே! (4)
வடிதமிழை மலையமுனி யறியவரு
ளியகுருவை மலைசி தறவே
யடியரிட ரரவிரிய லயிலைவிடு
மொருமுருகை யருளும்இளையான்
குடியிலுறு துரியபர வெளியைமன
தினினினைய கொடிய வினையோ
யடியிறுதி நடுவுமறு முடிவிலொரு
மையுமுறு மறிவ தறிவே! (5)
இடியினொடு மழைபொழியு மிரவெனினு
மடிகொடுறு வழிது ருவியே
தடியிலிடு முளைகொட்டி யுடையபசி
தணியவமு திடவல் இளையான்
குடியிலுறை தனுகரண புவனமனு
பவமுதவு குறியி லறிவைத்
துடியிலொரு தரநினையி னனவரத
மழிவிலதி சுகமு முறுமே! (6)
மடிமுறிமு னெழுதியடை யடிமைவிட
வசுமதியி னடிக ளுறவே
கொடியினிடை சிறியவிடை பெரியவிN
வனிதையரு குறுமி இளையான்
குடியரசை யதிகுணனை நிருமலனை
வினைகளறு குணநி திதனை
யொடிவிலுரை யுரைபொருளை யொருபொழுது
மனதினுன வொழியு மலமே! (7)
தடிநசைகொ ணரிகளதி தகவுடைய
பரிகளென வரவ ழுதிபா
லிடிபுகலு மடியனுறு மிமிசையற
வணுகுமெம திறையை இளையான்
குடிகுடிகொ ளறிவதனை நினையமக
னொழியதறி குலவு வதுபோன்
முடிவிலுக முடியனடு முடியொட்டி
முடியையென முடியு நிசமே! (8)
மடிதிரையி னுடனிறுவி விடுகலொடு
கலமதென வரவ வனுரை
கடிதமிழி னதிகளியொ டருளுமொரு
கருதறிய கடவுள் இளையான்
குடிதனில் னவரதமு மருளினொடு
குலவுபர சிவம் தனையோர்
படிநினைய படிறுகெட படியொடுரை
படியிலொரு படியு முறுமே! (9)
செடிகொளிப மலையினம ணரைவசியி
லிடுபுகலி சிறுவ னுணவே
வடியமுத முதவுமுலை மலைமகளை
உமையவளை மருவும் இளையான்
குடிவளரு வடதருவி னிழலினிடை
யுறைமவுன குருவை முறையாற்
கடிகையுள் கடிகையற் கடிகையுரை
கடிகைதரு கடிகை யுறுமே! (10)