logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சூதசங்கிதா சாராம்ருத வசனம் - பாலசரஸ்வதி தேவகுஞ்சரியம்மாள்

வ. எண்

அத்தியாயம்

 

முதலாவது சிவமான்மிய காண்டம்

1

தேவர்கள் ஜகத்திற்குக் காரணப்பொருளை உணர்ந்து கொண்டது 

2

மஹாவிஷ்ணு கருவமடங்கினது

3

சிவபூஜை செய்தவர் மகிமையுரைத்தது

4

தேவிபூசை யுரைத்தது

5

சிவனடியார் மகிமை யுரைத்தது

6

வியாசராதியோர் சந்தேகந்தெளிந்தது 

7

கால அளவை கூறிய அத்தியாயம்

8

பிரளயத்தில் அமிழ்ந்தின பூமியை வராகமூர்த்தி யெடுத்து நிறுத்தியது 

9

பிரம சிருட்டி கூறியது 

10

இரணியகருப்ப சிருட்டி கூறியது 

11

ஜாதி வரலாறு கூறியது 

12

தீர்த்த மகிமை கூறியது

 

இரண்டாவது ஞானயோக காண்டம்

1

ஞான யோக வரலாறு கூறினது

2

வருணாசிரமந் தவறாதிருப்பவரது பெருமை கூறியது

3

பிரமசரியங் கூறியது

4

கிருகஸ்தாச்சிரம தருமங் கூறியது

5

வானப்பிரஸ்தாச்சிரம முரைத்தல்

6

சந்நியாசம் உரைத்தல்

7

பிராயச்சித்த முரைத்தல்

8

தானபலம் உரைத்தல்

9

பாவப்ப்யன கூறியது

10

சரீரோத்பத்தி கூறியது

11

நாடி நிலைமையுரைத்தல்

12

நாடி சுத்தி கூறியது

13

அஷ்டாங்கயோக நெறியில் இயமம் உரைத்தல்

14

நியமவிதி கூறியது

15

ஆசனபேதம் கூறியது

16

பிராணாயாம முரைத்தல்

17

பிரத்தியாகார வியல்கூறல்

18

தாரணை யுரைத்தல்

19

தியானமுறை கூறியது

20

சமாதி கூறியது

 

மூன்றாவது முக்தி காண்டம்

1

சூத புராணிகர் மேருமலைக்குச் சென்றது

2

முக்தியின் சொரூப முரைத்தல்

3

முத்தியுபாயம் கூறியது

4

மோசகனை யுரைத்தல்

5

மோசகப்பிர்தனை யுரைத்தல்

6

ஞானமுண்டாகாமைக்குக் காரணம் கூறியது

7

ஞானிக்குப் பணிவிடை செய்தலின் பலன் கூறியது

8

திருமாலாதியோர் ஞானம் பெற்றது

9

தில்லை நடனத்தைத்தரிசிக்க உபாயம் கூறியது

 

நான்காவது எக்ஞவைபவ காண்டம்

 

பூர்வபாகம்

1

வேதார்த்தம் உரைத்தல்

2

காயிக கருமயாகம் கூறியது

3

வாசிக யாக முரைத்தல்

4

பிரணவ மந்திர மகிமை கூறியது

5

காயத்திரியைக் கூறியது

6

ஆத்மமந்திரங் கூறியது

7

பஞ்சாட்சரமகிமை கூறியது

8

மானத யாக முறைமை கூறியது

9

ஞானமகிமை கூறியது

10

ஞானம் அடையும் முறை கூறியது

11

பிரபஞ்ச ஆரோபம் கூறியது

12

பராசத்தி விசாரம் உரைத்தது

13

பஞ்சபிரம விசாரம் கூறியது

14

சத்தாவிசாரமுரைத்தது

15

மோட்சாபேட்சையுடையவ ரியல்புரைத்தது

16

விராகவிளக்க முரைத்தது

17

அநித்தியவஸ்து விசாரமுரைத்தது

18

நித்தியவஸ்து விசாரம் கூறியது

19

விசிஷ்ட தருமம் கூறியது

20

முத்திசாதனம் கூறியது

21

பிரமாணவியல் கூறியது

22

பிரசாதமுறை கூறியது

23

துர்க்கடன்முத்தி அடைந்தது

24

சத்தியசந்தன முத்தியடைந்தது

25

சிவபக்தி கூறியது

26

பரசிவசொரூப முரைத்தது

27

சிவலிங்க விசாரம் கூறியது

28

சிவத்தலமகிமை கூறியது

29

திருநீற்றின்மகிமை கூறியது

30

சிவப்பிரீதிகர முரைத்தது

31

மறையவர்க்குச் சிவபக்தியில்லாமைக்குக் காரணம் கூறியது

32

சிவநாமமகிமை யுரைத்தது

33

குருவினிடத்தில் உபதேசம் கேட்குமுறை

34

குருபரம்பரை கூறியது

35

காளத்திமகிமை கூறியது

36

முத்தியடைவதற்கேது கூறியது

37

சர்வசாதன முரைத்தது

38

வேதாவிரோதம் கூறியது

39

சர்வசித்திகர முரைத்தது

40

பாதக விசாரம் கூறியது

41

பிராயச்சித்த முரைத்தது

42

சிவக்ஷேத்திரங்களைக் கூறியது

43

திரவியசுத்தி கூறியது

44

புசிக்கத்தகாத வஸ்துக்களைக் கூறியது

45

மரணத்தை யறியும் ஆறு கூறியது

46

பாவபரிபாகங் கூறியது

 

உத்தரபாகம்

 

பிரமகீதை முதலாவது அத்தியாயம்

1

ஐதரேய வுபநிடதார்த்த முரைத்தது

2

தைத்திரீய உபநிடதார்த்த முரைத்தது

3

சாமசாகோப நிடதார்த்த முரைத்தது

4

சாந்தோக்கிய உபநிடதார்த்த முரைத்தது

5

இதுவும் அது

6

முண்டகோ பநிடதார்த்த முரைத்தது

7

கைவல்லிய உபநிஷதார்த்தம் கூறியது

8

பிரகதாரணியக தாற்பரியங் கூறியது

9

உடத்த பிராமண தாற்பரியங் கூறிய்து

10

கடவல்லி, சுவேதாசுர தாற்பரிய முரைத்தது

11

சர்வ வேதார்த்த சங்கிரகம் கூறியது

 

உத்தரபாகம்

 

சூதகீதை முதலாவது அத்தியாயம்

1

சூதர் வியாசர் அனுக்ஞை பெற்றது

2

பரமவிஞ்ஞான முரைத்தது

3

வேதப்பிராமணிய விசார முரைத்தது

4

விசேஷ சிருஷ்டி கூறியது

5

ஆத்மானாத்ம விவேகம் உரைத்தது

6

சர்வசாஸ்திர சங்கிரகம் உரைத்தது

7

தேவர்கள் தேகத்திலிருக்கும் வகை கூறியது

8

சர்வ வேதாந்த சங்கிரகம் உரைத்தது

 

முதலாவது

சிவமான்மிய காண்டம்.

 

காப்பு.

தந்தி மாமுகன் றாள்பணிந் தீறிலா 

விந்து சூடிய வீசனோ டென்னுளே 

     வந்த வானந்த வல்லியை வாழ்த்திமெய்ச் 

     செந்தி லாண்டவன் சேவடி போற்றுவாம். 

 

நூல்.

 

பூலோகத்தில் புண்ணிய வனங்களுக்குள்ளே சிறந்ததான நைமிசாரணிய மென்றொரு வனமுண்டுஅது பலவகையான மரங்களாலும்செடி கொடிகளாலும் நிறைந்துஒப்பற்று விளங்கும். தேவர்களாலும்யட்ச கின்னரராதியராலும் புகழ்ந்து கொண்டாடப்படுவது. அந்தவனத்தில் சௌனகரை முன்னிட்ட அநேக மாயிரம் முனீசுவரர்கள் தவசு செய்து கொண்டிருப்பார்கள். அந்த முனீசுவரர்கள் எல்லாரும் சேர்ந்து ஸத்திரம் என்னப்பட்ட ஒரு யாகஞ் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சசல புராணங்களையும் வியாச முனிவரிடங் கற்றுணர்ந்த சூதபுராணிகர் அந்த எக்ஞ சாலைக்கு வந்தார். முனிவர்கள் அவரை யர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் உபசரித்துஒரு சிறந்த ஆசனத்தில் உட்காரச்செய்து தாங்களும் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு ரிஷிகள் சூதமுனிவரைப் பார்த்துவேதங்களை நான்காக வகுத்தருளிய வியாச மஹா ரிஷியினிடத்தில் சகல புராணங்களையுங் கற்றுணர்ந்த முனிவரே! எங்களுக்கு ஒரு சிவகதை சொல்ல வேண்டும்நாங்கள் சிவகதை கேட்க விரும்புகிறோமெனச் சூதர் சொல்லுகிறார். 

 

இகபர சாதகமான சிவகதைகளைக்கேட்க விரும்பும் நைமிச வாசிகளான தபோத னர்களே! முத்திக்கு வித்தாய்ச்சிறந்து விளங்கும் சூதசங்கிதையை யுங்களுக்குச் சொல்லுகிறேன். அதன் வரலாற்றைக் கேளுங்கள். வியாசமுனிவர் வேதங்களை நான்காக வகுத்தபின்அவற்றின் அர்த்தங்களை விளக்கும் உபபிரும்மணங்களான பதினெண் புராணங்களையுஞ் செய்தருளினார். அந்தப் புராணங்களுட் சிறந்த ஸ்காந்த மென்பதொன்றுண்டு. அது சனற்குமார ஸம்ஹிதைசங்கர ஸம்ஹிதைசூத ஸம்ஹிதைவிஷ்னு ஸம்ஹிதைபிரம ஸம்ஹிதைஸௌவர ஸம்ஹிதை என்று அறுவகைப்படும். சூத ஸம்ஹிதையானதுவேதாந்தப் பொருளை நன்றாய் விளக்கிக் கூறும் ஞான சூரியன் போல்வது. பாபங்களை யொழித்துப் புண்ணியங்களை அபிவிருத்தி செய்வது. முக்தி சாதனமாயுள்ளது. அதனைச் சொல்லுகிறேன் கேளுங்க ளென்றுமங்களவல்லி பங்கிலமர்ந்த மஹாதேவனையும்தம் குருவான வியாசரையுந் துதித்துச் சொல்லுகிறார். 

 

 

முதலாவது அத்தியாயம்.

தேவர்கள் ஜகத்திற்குக் காரணப்பொருளை

உணர்ந்துகொண்டது

 

பூர்வகாலத்தில் இலட்சுமிகாந்தனாகிய திருமாலும்பிரமதேவனும்தேவேந்திர னும்மற்றுமுள்ள தேவர்களும் ஓர் இடத்தில் கூடினார்கள். அப்போது இந்த ஜகத்துக்கு மூலகாரணனா யுள்ளவர் எவரென்று ஒரு கேள்வியுண்டாயிற்று. ஒருவருக்குந் தெரியவில்லை. பிறகு இவ்விடத்திலிருந்து யோசிப்பதில் பயனில்லையென்று தெரிந்து கொண்டு யாவரும் எழுந்திருந்து சிவலோகம் நோக்கிச் சென்றார்கள். அப்பொழுது ஸ்ரீபமேசுவரன் அவர்களுக்குப் பிரத்தியட்சமானார். தேவர்கள் சிவ பெருமானை அறிந்துகொள்ள மாட்டாமற்போய் நீர் யாவரென்று கேட்டார்கள். அஞ்ஞானத்தால் உண்மை தெரிந்துகொள்ளாத தேவர்களை நோக்கி மஹாதேவர் கூறுகின்றார். சர்வாண்ட சராசரங்களையும் படைத்துக்காத்து அழித்து மறைத்து அநுக்கிரகம் செய்யும் மூலகாரணன் யானே யென்று தெரிந்துகொள்ளுங்கள்முப்பரம்பொருளுக்கும் முதல்வன் நானேநானே உங்களுக்கும் சர்வ ஜீவராசிகளுக்கும் இறைவனென்று கூறி அந்தர்த்தானமாய் விட்டார். 

இதைக்கண்ட தேவர்கள் “கைக்கெட்டினது வாய்க்கெட்டாமற் போனது போல'' ஜகதீசுவரனாகிய உமாசகாயனைப் பிரத்தியட்சத்தில் கண்டுந் தெரிந்து கொள்ளாமற் போனோமேயென்று மனம் வருந்திச் சிவபெருமானைத் தங்களுக்குத் தோன்றியபடிக் கெல்லாந் துதித்தார்கள். அப்பொழுது உமாகாந்தனது திருவருளால் அவர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் தோன்றியது. உடனே யெல்லாரும் சிவசின்னம் பூண்டவர்களாய் ஸ்ரீபஞ்சாட்சரத்தைச் சிந்தித்துக்கொண்டு அசைவற நின்று விட்டார்கள். தேவர்களெல் லாரும் பரமேசுவரன் பிரத்தியட்சமானதைக்கண்டுஅடியற்ற மரம்போலத் திருவடியில் விழுந்து நமஸ்காரம்பண்ணிப் பலவாறு ஸ்தோத்திரம் செய்தார்கள். அதனால் மகிழ்ச்சி யடைந்த காமதகனன் அவர்களைப் பார்த்து, “உலககாரணன் நானேவேதாந்தப் பொருளுணர்ந்துஉண்மையறிந்துபிரபஞ்சவாசையை முற்றுமொழித்துத் தவம்புரிப வரே யென்னையறிந்து முத்தியின்பம் பெறுவார்கள். நீங்களும் அப்படியே பக்தி புரிந்து சதுர்வித புருஷார்த்தங்களையும் பெற்று வாழக்கடவீர்கள்" என்று அநுக்கிரகம் புரிந்து மங்கைபாகன் மறைந்து விட்டார். தேவர்களும் சந்தேகமொழிந்து தத்தம் பதவிகளுக்குப் போய்ச்சேர்ந்துஅதுமுதல் மகாதேவனைப் பூசித்து மகிழ்ந்தார்கள். ஆதலால் "பசிவப் பிரபுவின் மகிமை தேவர்களாலும் அறியப்படாதது. வேதங்களுக்கும் தெரியாதது” என்று சூதர் சௌனகாதி மஹாரிஷிகளுக்குச் சொன்னார். 

 

 

இரண்டாவது அத்தியாயம்.

மஹாவிஷ்ணு கருவமடங்கினது

 

நைமிசவாசிகளே! மலர்கள் தழுவ க்ஷீராப்தியின் கண் அறிதுயிலமர்ந்த திருமால் அஞ்ஞான வசப்பட்டுத் தானே பிரமமென்று கருதி யிறுமாப்படைந்தார். தனக்கு மேலானவர் ருவரு மில்லையென்றும்தானே சராசரங்களுக்கு மிறைவனென்றும் கருதி மயங்கினார். அவருடைய அதிகாரத்துக்குட்பட்ட தேவர்களெல்லாரும் அதை மெய்யென்று நம்பி அவருக்கு அடங்கி அவரை வழிபட்டு வாழ்ந்தார்கள். சர்வாந்தரி யாமியாகிய பன்னகாபரணன் திருமாலின் கருத்தை யுணர்ந்து அவரிடத்துள்ள தமது அதிகார சக்தியை விலக்கிவிட்டார். திருமாலும் மற்றைய தேவர்களும் தங்களுடை.ய நிலைமைக்கு வருந்தித் துக்கித்தார்கள். அதுகண்ட காளகண்டமூர்த்தி நந்திதேவரைத் திருமாலிட மனுப்பினார். நந்திதேவர் வருவதை அறிந்த நாராயணமூர்த்தியானவர்அவரது திருவடிகளில் வணங்கிஒரு அழகிய பீடத்தின்மே லவரை உட்காரச்செய்து பூசித்துப் போற்றினார். நந்திதேவர் திருமாலைப் பார்த்து இலட்சுமிகாந்தா! நீர் உம்மை யே பிரமப்பொருளென்று கருதி யிறுமாந்து கயிலைநாயகனை மறந்துவிட்டீர். இப்பொழுது உமது நிலைமை என்னடாயிற்றுப் பார்த்தீராநீங்கள் பூர்வஜன்மங்களில் செய்துள்ள சிவபூஜா பலத்தினால் அல்லவோ இப்படிப்பட்ட பெரும்பதவிகளைப் பெற்றீர் கள்ஸ்ரீமஹாதேவனே பரப்பிரமமென்பதற்கு வேதங்களே சாக்ஷியாம்சர்வப் பிரபஞ்சமும் அந்தப் பசிவனுடைய சந்நிதியில் தோன்றி நின்றழியும். இதனை நீர் அஞ்ஞானத்தினாலே மறந்துவிட்டீர். இனி உமது கருவத்தை விட்டு மஹாதேவரைப் பூஜித்து அவர் கருணைக்குப் பாத்திரராய் வாழக்கடவீர்'' என்று உபதேசித்து நந்திதேவர் கைலைக்கு எழுந்தருளினார். 

 

நந்திதேவர் போனபிறகுஸ்ரீமஹா விஷ்ணுவானவர் அகங்காரம் நீங்கிச்சிவபெருமானை முறைப்படி பூசனை செய்து பக்தரானார். இப்படித் திருமால் நெடுங் காலம் பக்தி புரிகையி லொரு நாள், ஸ்ரீ பரமேசுவரன் காளகண்ட திரிநேத்திரம் விளங்க மான் மழு தாரியாய்ஹிமாசல புத்திரியாகிய உமாதேவியுடன் ரிஷப வாகனத்தின்மே லெழுந்தருளினார். தேவர்கள் மலர் மாரி பெய்தார்கள். முனிகணங்கள் வாழ்த்தித் துதித்தார்கள். சிவ கணங்கள் ஹ! ஹ!! வென்று தோத்திரஞ் செய்தார்கள். இவ் விதமாகக் காட்சிதந்த பரமேசுவரனை நாராயணமூர்த்தி கண்டு மனமகிழ்ந்துஅவரது திருவடிகளிலே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துகண்களில் ஆநந்த வெள்ளம் பெருக மனமுருகிச் சங்கரா! சம்போ! மஹாதேவா! காளகண்டா! திருணேத்ரா! காமதகனா! காலகாலா! கயிலை நாயகா! பன்னகாபரணா! வ்ருஷபாரூடா! அண்டநாயகா! அகிலநாயகா! அம்மைபங்காளா! ஆதிதேவா! அநாதிமுதல்வா! அமிர்தானந்த சொரூபா! அடியேன் உமது திருவடிக்கடைக்கலம்கடைக்கணித்தாட்கொள வேண்டுமென்று துதித்தார்... பிநாகபாணியானவர் கருணை சுரந்து "ஏ இலட்சுமிபதீ! உனக்கு யாது வரம் வேண்டு” மென நாராயணமூர்த்தி "உமது திருவடிக்கு அழியாக பக்திவிளங்கவும்ஆநந்தத்தாண்டவம் தரிசிக்கவும் அருள் புரிய வேண்டு மென்று பிரார்த்தித்தார். உமாசகாயன் “அப்படியே தந்தோம்நீ சிதம்பரத்துக்கு வா'' என்று கூறி மறைந்தருளி னார். 

 

பிறகு திருமாலானவர் இலட்சுமி சமேதராய்ப் பிரமா முதலிய தேவர்கள் சூழ்ந்துவரச் சென்று சிதம்பரத்தெல்லையை யடைந்து வணங்கிஉள்ளே புகுந்து கோபுரவாயிலைக் கண்டு பணிந்துசிவகங்கையில் ஸ்நானம்பண்ணிவிபூதி ருத்திராட்ச மணிந்துஉள்ளங்கசிந்துருகும் உண்மையான பக்தியுடனே கனகசபை போய்ச் சேர்ந்தார். சபாநாயகரது சந்நிதியையடைந்துதேவ கந்தர்வ யட்ச கின்னரர் காணதும்புரு நாரதர் பாடபக்தர்கள் சித்தம் நெகிழ்ந்துருகரிஷிகணங்கள் வேதகீதம் படிக்கசிவகாமியம்மையின் கண்கள் களிக்கச் சிவபெருமான் நடிக்கின்ற ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்துப் பரமானந்தமடைந்துதன்னை மறந்து பரவசப்பட்டுச் சர்ப்பசயனன் பலவாறு ஸ்தோத்திரம் புரிந்தார். பின்னர் ஆநந்தத் தாண்டவமூர்த்தியின் கருணையை நிரம்பப் பெற்றுத் திருமால் மலர்மகளோடு வைகுண்டம் போய் யாதொரு குறைவுமில்லாமல் தம்மரசு செலுத்திக் கொண்டு சுகமாக வாழ்ந்திருந்தார். 

 

 

 

மூன்றவது அத்தியாயம்.

சிவபூஜை செய்தவர் மகிமையுரைத்தது

 

உலக வாழ்வினை யடைய விரும்புவோர்களும்முக்தியை யடைய இச்சிப்போர்களும் சிவபூசை செய்ய வேண்டும். சிவபூசை பலவாறு யானது அநந்தகோடி ஜன்மங்களிற் செய்துள்ள மஹா பாபங்களை நீறாக்கி யிஷ்டகாமியங் களையும் அந்தத்தில் மோட்சத்தையும் கொடுக்கும். தேவர்களிலும் மனிதர்களிலும் அசுரர்களிலும் சிவனைப் பூசித்துப் பேறுபெறாதவர்கள் ஒருவருமில்லை. இத்தகைய மகிமையுள்ள சிவபூசையைத் தாந்திரீகர் ஆகமநெறி வழுவாமலும், வைதிகர் வேதங்கூறிய நெறிதவறாமலும் செய்ய வேண்டும். ஷோடசோப சாரங்களோடு நிவேதனமு மளித்துப் பூசித்துத் தோத்திரம் செய்தால் அவன் நிர்மலமாய்த் தேவர்களும் வணங்கும்படி பெருமையாக வாழ்வான். இவ்விதமாகச் சிவபூஜை செய்து பேறுபெற்ற ஒரு மஹா பாதகனுடைய சரித்திரஞ் சொல்லுகிறேன் கேளுங்கள்.

 

      பூர்வத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனிருந்தான். பிரமஹத்தி சிசுஹத்தி ஸ்திரீஹத்தி கோஹத்தி முதலிய பாபங்களில் அவன் செய்தவற்றை அளவிட முடியாது. வழிப்பிரயாணஞ் செய்பவர்கள் எவரானாலும் அவர்களை முன்பின் யோசியாமல் கொன்று அவர்களுடைய பொருள்களை யெல்லாம் கவர்வான். இப்படியாக நாள்கடோறும் அளவில்லாத மஹா பாதகங்களைச் செய்து வாழுநாளில் காமுகனாகிய ஒரு பிரமாணனிடத்தில் சிநேகஞ் செய்து கொண்டான். அவனு மிவனும் ஒருவருக்கொருவர் பிரியாநட்பினரா யிருந்தார்கள். ஒரு நாள் பிராமணன் அந்த வேடனைப்பார்த்து நீ மஹா பாதகங்களை யெல்லாந் துணிந்து செய்து வருகின்றாய். உன் பாபத்திற் கெல்லை கிடையாது. ஒரு தருமங்கூடச் செய்யவில்லை. நீ யிறந்து போனால் எமதண்டனைக் கென்ன செய்வா யென்று கேட்டான். பின்னும் நீ செய்த பாபங்களை நினைக்குந்தோறும் எவருடைய மனமும் நடுங்கும். கேட்டாலும் ஆவி பதைக்கும். நீ சிறிதும் கவலையில்லாமல் இருக்கிறேயே யென்று சொன்னான். இப்படியாக அந்தணன் பலதடவை சொல்ல அந்த வேடனுக்கும் அது மனத்தில் பதிந்தது. புத்தியுங் கொஞ்சந் தோன்றியது. தோன்றவே ஐயோ மூடத்தனத்தினாலே நான் மஹா பாதகங்களை யெல்லாம் அபரிமிதமாகச் செய்து விட்டேன். இந்நரகாக்கி னைக்குத் தப்பும் வழியில்லை. நான் என்ன செய்வேன். ஐயா பிராமணோத்தமா! நான் கடைத்தேறும் மார்க்கமிருந்தால் எனக்கு அதைச் சொல்லி யருள வேண்டும். சுவாமீ என்று அவ்வந்தணன் பாதங்களில் வணங்கிக்கேட்டான். பிராமணன் இதனால் மனமகிழ்ந்து சொல்லுகிறான்.

      

      தெட்டணதிசையில் பூலோக கைலாய மென்றும் சிவலோக மென்றும் பெரியோர் களால் புகழப்படுவது. கண்டமாத்திரத்திலே மஹா பாதகங்களைப் போக்குவது. தேவகந்தர்வ யட்ச கின்னரர்களும் வணங்கித் துதிப்பது. பாபிகளுக்கு எட்டாதது. இத்தன்மை நிறைந்த சிதம்பரமென்னும் ஒரு திவ்ய க்ஷேத்திரமிருக்கிறது. சித்கனானந்த சொரூபியாகிய சிவபெருமான் அதில் ஆனந்த நடனஞ் செய்தருளு கின்றார். நீ அந்தத்தலத்திற்குப் போய் பரிசுத்தனாய்க் காலை மத்தியானம் சாயங்கால மென்கிற முப்பொழுதிலும் பிரதட்சண நமஸ்காரங்கள் செய்து சிற்சபேசனை வணங்கித் துதி; கொஞ்ச நாட்களில் உன் பாபங்கள் தொலைந்து நீ நற்கதி பெறுவாயென்று கூறினான்.

 

      அதைக் கேட்ட வேடன் நாமின்று கடைத்தேறினோமென்று உள்ளங்களித்து, அந்தப் பிராமணனி வணங்கி அவனையும் அழைத்துக்கொண்டு பிரயாணப்பட்டான். பிராமணன் முன்னாலே வழிகாட்டிக்கொண்டு செல்ல வேடன் அவனைப் பின் பற்றிச் சென்றான். சிதம்பர க்ஷேத்திரத்தை யடைந்து நாடோறும் பரிசுத்தனாய்த் திரிகாலங்களிலும் சிவ தரிசனஞ் செய்து வந்தான். வெகுதூரத்தில் நின்று சிற்சபேசனை வணங்கித் துதித்தான். சிவார்ச்சனை செய்பவர்களையும் சிவபக்தர்களையும் பக்தியோடு வணங்கி அவர்க்ளுக்குத் திரிவியங்களைத் தானஞ் செய்தான். இவ்வாறாகப் பல நாள் செய்து கொண்டு வந்தான். அவனுடைய பாதகங்களும் நாளுக்குநாள் மெலிந்து குறைந்து கெட்டொழிந்தன. சிலநாட்களுக்குப்பின் அந்த வேடனும் தேக வியோகமானான். உடனே திவ்ய சரீரம் பெற்றான். சிவகணங்கள் கொண்டு வந்த தெய்வ விமானத்தினமே லேறிக்கொண்டு சிவலோகம் போய்ச் சேர்ந்தான். அவனுடைய தோழனாகிய பிராமணனும் சிவதரிசனபலத்தினாலே சிவலோகம் சேர்ந்தான். திருக்கேதாரம் சோமநாதம் சீசைலம் கோபர்வதம் திருக்காளாஸ்திரி அக்கினீசுவரம் ஶ்ரீதரதீர்த்தம் வன்மீகக்ஷேத்திரம் ஆலாஸ்யபுரம் இராமேசுவரம் காந்தாரநகரம் முதலிய பல க்ஷேத்திரங்களிலும் சிவபெருமானை ஆராதித்துப் பேறு பெற்றவர்கள் கணக்கிலடங்கார். மஹா பாதகங்களை நாடோறும் புரிந்த வேடனும் முக்தி யடைந்தானென்றால், மற்றையவர்க்குச் சொல்ல வேண்டுவதென்ன விருக்கிறது என்று கூறிப் பின்னும் சூதபுராணிகர் சொல்லுகிறார்.

 

 

நான்காவது அத்தியாயம்.

தேவிபூசை யுரைத்தது

 

நைமிசாரணிய வாசிகளே! தேவிபூசையையுங் கேளுங்கள். தேவிபூசை பாகியம் அப்பியந்தர மென்று இரு வகைப்படும். பாகிய பூசையாவது யந்திரம் விக்கிரகம் முதலியவற்றில் தேவியை ஆவாகனஞ் செய்து பூசித்தல்அப்பியந்தரமாவது இதயத்தில் தேவி சொரூபத்தை ஸ்தாபித்துப் பூசை செய்தல்இந்தப் பூசை வைதிகம் தாந்திரிகம் என்று இருவகைப்படும். வைதிகமாவது வேதங்கூறிய முறைமையிற் பூகிப்பதுதாந்திரிகமாவது ஆகமநெறியில் பூசை செய்வது. வைதிகர் வைதிக விதிப்ப டியே பூசிக்கவேண்டும்தாந்திரிகர் ஆகமப்படியே பூசிக்கவேண்டும். வைதிகர் ஆகம நெறிப்படியும் தாந்திரிகர் வைதிகமுறைப் படியும் பூசிக்கலாகாது. மாறிச்செய்தால் அவர்கள் பாவிகளாய் விடுவார்கள். ஆகையால் அவர்கள் தத்தம் நெறிப்படியே ஷோடசோபசாரங்களுடன் ஆராதிக்க வேண்டும். அகாராதி வர்ண சமூகங்ளாலாகிய மாதுருகா மந்திரத்தினாலேயே யாவுஞ் செய்தல் வேண்டும். சகலமான மந்திரங்களிலும் மாதுருகா மந்திரம் பரமசிலாக்கிய முடையது. இதனை ல்லாமல் ஏனைய மந்திரங்கள் நிலைபெறா. அந் மந்திரமும் ஸ்தூலம் சூட்சுமம் அதிசூட்சுமமெ ன மூவகைப்படும். இம்மந்திரசொரூபம் அதிக இரகசியமானதால்அதனைக் குருவை வழிபட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமே யல்லாமல் வேறெவ்வகையாலு முணர்ந்து கொள்ள முடியாது. பாகியபூசை செய்து மனம் நிர்மலமாய் நிலைபெற்ற பிறகு அப்பியந்தர பூசைசெய் வேண்டும். 

 

இந்தப் பூசையானது ஸாதாரம் நிராதாரமென் றிருவகைப்படும். ஸாதார பூசையாவது அட்சரங்களாலே செய்யப்பட்ட விக்கிர சொரூபத்தில் குருவுபதேசப்படி பூசை செய்தல்நிராதாரமாவது ஸம்வித் சொரூபமாகிய தேவியினிடத்து மனதை யிலயிக்கச் செய்தல். சம்வித் சொரூபமானது தேவியினியற்கை ரூப மென்று வேதங்கள் கூறுகின்றன. சிவனும் தேவியும் தனித்தனி வேறுவகைப் பொருள்களல்ல. சிவனே தேவி தேவியே சிவன்ஆதலால் தேவி பூசையை வழுவாமற் செய்கிறவர் சிவனைப் பூசித்தவர்களே யாவார். சிவபூசைக்கும் தேவிபூசைக்கும் பயன் ஒன்றேயாம். இதனைக் கொலைபாதகர் கட்குடியர் காமிகள் வேத நிந்தகர் சிவனையும் சிவனடியாரையுந் நிந்திப்பவர் முதலிய கொடியோர்க்குச் சொல்லலாகாதுசொன்னால் பாவம் வரும். 

 

 

ஐந்தாவது அத்தியாயம்.

சிவனடியார் மகிமை யுரைத்தது

 

நைமிசாரணியவாசிகளே! சிவபூசையைவிடச் சிவனடியாரைப்பூசிப்பது மஹா விசேஷம். சிவனடியாரைப் பூசிக்காவிட்டால் சிவபூசை பயன் தராது. சிவபூசை செய்பவரும் சிவத்தியானம் பண்ணுகிறவர்களும் நீறு கண்டிகை பூண்டு பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிக்கின்றவர்களும் சிவஸ்தலயாத்திரை செய்பவர்களுமாகிய சிவபக்தர் களைக் கண்ணினாற்கண்டால்வர்ணாசிரம உயர்வு தாழ்வுகளை யோசியாமல் அவர்களை வணங்கிஅர்க்கிய பாத்ய ஆசமனாதிஷோடசோபசாரங்களும் செய்துஅறுசுவைகளோடு கூடிய நால்வகை யுண்டிகளை யுபசாரத்தோடு முகமலர்ந்து ஊட்டி அவர்களை மகிழ்விக்க வேண்டும். பூதானம் கோதானம் முதலிய ஷோடச மஹா தானங்களையும் எவ்வகையிலும் சிவனடியார்களுக்கே செய்யவேண்டும். அது ஒன்றேகோடி மஹாகோடிகளாகப் பலன் தரும். உமாசகாயரான சிவபெருமானும் அவர்களிட த்தில் சதா வசித்துக்கொண்டிருப்பார். இது விஷயமாக ஒரு சரித்திரம் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று சூதர் சொல்லுகிறார். 

 

முன்காலத்திலே வைசியர் குலத்திற்குத் திலகம் போன்ற ஒரு தனவந்தனிருந் தான். அவனுக்கு நாலு புத்திரர்களுண்டு. அவர்களிலே மூத்தவன் சகல ஜீவன்களையும் தன்னுயிர்போலக்கருதும் ஜீவகாருண்ய முள்ளவன். அவனுக்கு ஜனனமரண சமுசார துக்கங்க ளொழிந்து மோட்சமடைய வேண்டு மென்கிற விருப்பமிருந்தது. அதனாலே தன்னுடைய பொருள்களை யெல்லா மெடுத்துக்கொண்டு காசிமாநகரம் போய்ச் சேர்ந் தான். தினந்தோறும் கங்கையில் நீராடி முப்போதும் விசுவேசரைப் பணிந்துசிவனடியார்களைக் கண்டவுடனே சிவனையே கண்டாற்போல வுள்ள மகிழ்ந்து உருகி அடி உருகி அடி பணிந்துதுஅவர்கள் விரும்பினவற்றைத் தடையில்லாமல் கொடுத்துப்பூசித்துக் கவலை யின்றி வாழ்ந்திருந்து பின்னர் பிறப்பிறப்பில்லாத மோட்ச த்தை யடைந்தான். 

 

இவனுடைய இளைய சகோதரனுக்கும் அளவு படாத செல்வமிருந்தது. ஆயினும் அவனுக்கு அதில் விருப்பமில்லைபந்த மொழிந்து வீடுபெறும் விருப்பமே மிகுந்திருந்தது. ஆகையால் தன் திரவியமெல்லாவற்றையுமெடுத்துக்கொண்டு சோமநாதபுரம் போனான். அவ்விடத்தி லெழுந்தருளிய பரமசிவ மூர்த்தியை வணங்கிக் கொண்டு சிவனடியார்களை யுபாசித்துப் பூசித்து வழிபட்டுத்தன் பொருள்களை யெல்லாம் அவர்கள் விஷயமாகச் செலவிட்டுக் கன்ம பந்த மொழிந்து அந்தத்தில் சிவபதமடைந்து வாழ்ந்தான். 

 

அவனுக் கிளையவனாகிய மூன்றாவது குமாரன் பொருளாசை மிகுந்து கஷ்டப் பட்டுப் பொருள் சம்பாதித்துக்கொண்டிருந்தான். இதனாலே அவனுடைய சுற்றத்தாரும் இவனுக்குப் பகையானார்கள். இவ்வாறிருக்கையில் பூர்வ புண்ணிய வசத்தாலே சிறிது நல்லறிவு தோன்றிற்று. தோன்றவே உலகவாழ்வில் வெறுப்புண்டாகியது. உடனே தன் பொருள்களை யெடுத்துக்கொண்டு சிதம்பர க்ஷேத்திரம் போய் நடராஜ மூர்த்தி செய்தருளும் ஆனந்தத் தாண்டவதரிசனஞ் செய்து சிவனடியாரையும் பூசித்து ஆராதித்துக் கடைசியில் மீளாக்கதி யடைந்தான். 

 

நாலாவது குமாரன் வஞ்சகமும் பொய்யும் நிறைந்த மனமுடையவன்பாவங்களுக் கஞ்சாத நெஞ்சம்படைத்தவன். வேதநெறி கடந்தவன். நீதி யில்லாமல் அக்கிரமங்களைக் கணக்கின்றிச் செய்து திரவியஞ் சேர்த்தான். அப்படிச் சம்பாதித்த பொருள்களையெல்லாம் தாசிகளுக்குக் கொடுத்து அவர்கள் பாதமே கதியென் றிருந் தான். இரவும் பகலும் அவர்கள் விட்டிலேயே கிடப்பான். இப்படி நடந்து வருகையில் கையிலுள்ள பொருளெல்லாஞ் செலவாய்விட்டது. தாசிகளுக்குக் கொடுக்கப் பொருளில் லாமல் திருடத் தொடங்கினான். அளவில்லாத பிரமஹத்தி ஸ்திரீ ஹத்தி சிசுஹத்தி முதலிய மஹா பாதகங்களைத்துணிந்து செய்து பொருள் சம்பாதித்துத் தாசிகளுக்குக் கொடுத்து மகிழ்ந்திருந்தான். இப்படி யிருக்கையில் கொடிய நோய்கள் உண்டாயின. 

 பிரம ராட்சதப்பேயும் பிடித்துக்கொண்டது. அதனாலே துன்பம் அடையும்போது தாசிகளெல்லோரும் அவனைக் கைவிட்டொழிந்தார்கள். அவன் பட்ட துன்பத்துக்கு அளவில்லை. 

 

      அவன் படுகிறதுன்பத்தைக் கண்டுஅவன் தகப்பன் மனம் வருந்திஅறிவிற் சிறந்த ஒரு பிராமணனிடம் போய்த்தன் புத்திரனுடைய ஸ்திதியைச் சொல்லிஇது நிவிர்த்தியாவதற்கு ஒரு உபாயஞ்சொல்லவேண்டுமென்றுவணங்கிப் பிரார்த்தித்தான். அவன் சற்று யோசித்துச் சொல்லுகிறான். இதற்கு சிவாநுக்கிரகத்தைத்தவிர வேறு உபாயங்கிடையாது. விருத்தாசலமென்று ஒரு திவ்ய க்ஷேத்திரமிருக்கின்றதுதேவர் தானவர் எனவர் முனிவர்களும் வணங்கும் பெருமையுடையது. பெருமையுடையது. மஹா பாதங்களுக்கும் இடிபோல்வது. அந்த ஸ்தலத்துக்குப் போய்ச் சேர்ந்து மணி முத்தாநதியில் ஸ்நானஞ் செய்துதிருவாலயத்தை நூற்றெட்டு பிரதட்சிணஞ் செய்து வழிபடுசிவனடியாரைப் பூசை செய்இப்படி யொருவருடகாலஞ் செய்தாயானால் உன் புத்திரன் துன்ப மொழிந்து நற்கதியடைவான். நீயும் முத்திப்பேறு பெறுவாய்இதுவே தகுந்த வுபாயமென்று கூறினான். 

அப்படியே அந்தவணிகன் உடன்பட்டுஅந்தப்பிராமணனை வணங்கி விடை பெற்றுக்கொண்டுதன் புத்திரன் மனைவி முதலியவரோடும் விருத்தகிரிக்குப் போனான். தினந்தோறும் மணிமுத்தாநதியில் ஸ்நானஞ்செய்தான். மறையவன் சொன்னபடி விருத்தகிரீசரை நாடோறும் பணிந்தான்ஒரு மடங்கட்டி ஒரு யோகிக்குக் கொடுத்தான். சிவனடியார்களுக்கு அன்ன வஸ்திர முதலிய யாவுங் கொடுத்துப் பூசித்தான். இப்படி ஒருவருஷமாயிற்று. அந்தப் புத்திரனுக்கும் நோய் தீர்ந்தது. பிரமராட்சதமும் பேயும் விலகின. பிறகுஅந்தக்குமாரன் சுகலபாவங்களுமொழிந்து நின்மலனாய்ச் சிவபதமடைந்தான். வணிகனும் கிவாராதன மகிமையாலும்சிவபக்தர். பூசைபலத்தினாலும் தன் மனைவி முதலியவரோடும் சிவலோகம் போய்ச் சேர்ந்தான். 

 

இன்னமொரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள். தவத்திற் சிறந்த அகத்திய முனிவருடைய சிஷ்யனாகிய சுவேதமுனியென்பவர் அகத்தியரைப்பணிந்து, "நான் கன் மபந்தமொழிந்து முத்தி பெறும் மார்க்கமெதுஅதைச்சொல்லவேண்டு” மென்று பிரார்த் தித்தான். அகத்தியர் அவனுக்கு விருத்தாசலத்தின் மகிமைகளை உபதேசித்துஅந்த ஸ்தலத்திலேயிருந்து கொண்டு சிவாராதனை செய்து முத்தியடையக்கடவாயென்று ஆசீர்வதித்து அனுப்பினார்சுவேத முனிவர் தம் குருவினிடத்தில் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விருத்தாசலம் போய் மணிமுத்தா நதியில் ஸ்நானஞ் செய்துமணி முத்தாநதியின் திவ்யதீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகஞ்செய்து பூசித்தான். அந்த அபிஷேக ஜலம் ஒரு ஆறாய்ப் பெருகி யோடிற்று. அது சுவேதநதி (வெள்ளாறு) என்னும் பெயருடையதாய் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பானுவாரம்அட்டமி திதிஈருவாஆருத்திரைமகம் முதலிய தினங்களில் அதிகமாகப் பூசித்தான்சிவனடியாரையும் பூசித்து வழிபட்டான். இப்படி நெறிதவறாமல்ஆராதித்துவருகிற நாட்களில் ஒருநாள் விருத்தகிரீசர் பிரத்தியட்சமாய்க் காட்சி தந்து மறைந்தார். சுவேத முனிவரும் பிரமானந்த மடைந்து மீளாக்கதிசேர்ந்தார். அந்த க்ஷேத்திரத்தில் சிவனை யாராதித்து முத்தி பெற்றவர்களுக்கு அளவில்லை. ஆகையால் பாவப்பகையைக்கடந்துபந்தமகன்று வீடுபெற விரும்புவோர் விருத்தாசலத்தை யடைந்து வழிபடுவதே தகுந்த உபாயமாகும்.

 

 

 

ஆறுவது அத்தியாயம்.

வியாசராதியோர் சந்தேகந்தெளிந்தது

 

வியாச மஹரிஷியானவர்முத்திமார்க்கத்தைப்பற்றி ஒவ்வொருவரும் மாறுபட்டு வெவ்வேறுவகையாகச் சொல்லுகின்றார்கள்இவற்றுள் உண்மை காண்பது அரிதாயிருக்கின்றது. ஆதலால் இந்த உண்மையை நான் எப்படித் தெரிந்து கொள்கிற தென்று மனக்கலக்கமுடையவராய் மஹாவிஷ்ணுவினிடம் போய் அவரை வணங்கி னார். அவர் நீர் என்னிடத்திற்கு வந்த காரணமென்ன வென்று கேட்டார். வியாசர்எனக்கு ஒரு பெரிய சந்தேகமுண்டாயிற்று. அதைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வந்தேனென்று சொல்லுகிறார். மோட்சசாதன மெதுவென்று கேட்டால் ஞானமே யென் கின்றார் சிலர்சிலர் கருமகாண்டப்படி யொழுகுதலேயா மென்கின்றார்கள்சிலர் தானமே யென்கிறார்கள்சிலர் பிரமசரிய மென்றும்சிலர் இல்லறமென்றும்சிலர் வானப்பிரஸ்த தருமமேயென்றும்சிலர் சந்நியாசமேயென்றும்சிலர் தீர்த்தயாத்திரை க்ஷேத்திரயாத்திரைகளேயாமென்றும் கூறுகின்றார்கள். இவ்வாறாக ஒவ்வொருவரும் பேதப்படக் கூறுவதினால் உண்மை தெரிவது அசாத்தியமாயிருக்கிறது. ஆகையால் எது சரியான மோட்ச மார்க்கம்அதனை யெனக்குச் சொல்ல வேண்டுமென்று கேட்டார்திருமாலும் சற்றுயோசித்து இதனுண்மையைச் சிவபிரானிடம் போய்த் தெரிந்து கொள்வோமென்று கருதிப்பிரம்மேந்திராதி தேவர்களும் வியாசர் முதலிய ரிஷிகளும் சூழ்ந்துவரக் கைலையங்கிரிக் கெழுந்தருளினார்.

 

கைலாயமலைக்குப்போய்நந்திதேவரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு உள்ளே போய்உமாதேவியாரோடும் சிங்காதனத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் காள கண்ட மூர்த்தியைத்தரிசித்து வணங்கிக்கண்களில் ஆனந்தமாரி பொழிய மனமுருகித் தோத்திரஞ் செய்தார்கள். சிவபெருமான் திருமாலைப்பார்த்து யாது காரணம் பற்றி யிங்கே வந்தீர்கள்உங்களுக்கென்ன குறை யுண்டாயிற்றென்று கேட்க விஷ்ணுமூர்த்தி சொல்லுகிறார். மஹாதேவா! காலகாலா! காமதஹனா! வியாசமுனிவர் என்னிடம் வந்து முத்திசாதனமார்க்கம் எதுஅதனை யெனக்குச் சொல்லவேண்டு மென்றார். அதனை நிச்சயித்துச் சொல்ல என்னால் முடியாமையால் இங்கே வந்தேன். அதனைத் திருவுளம்பற்றி யருளவேண்டு மென்று கேட்கத் தேவதேவனாகிய மஹாதேவர் மகிழ்ந்து சொல்லுகிறார். 

நாராயணா! உமாதேவியானவள் முன்னொருதரம் இந்தக் கேள்வியைக் கேட் டாள். அவளுக்குச் சொல்லியிருக்கிறேன். அதேபிரகாரம் உனக்கும் சொல்லுகிறேன் கேள். ஞானமொன்றே முத்திக்கு மூலமாயுள்ளது. அதைத்தவிர வேறொன்றுமில்லை. அந்த ஞானம் வேதாந்த சிரவணத்தினாலே தான் கிடைக்கத்தக்கது. அந்த வேதாந்த சிரவணமின்றி யெளிதிற்கிடைக்காது. பூர்வ ஜன்மங்களில் வேதம் ஸ்மிருதி ஆகமம் முதலிய நெறிப்படி யெம்மை யாராதித்தவர்களுக்கே கிடைக்கத்தக்கது. ஆசிரமநெறி தவறாமல் நடந்து வந்து அவற்றைப் பூர்த்திசெய்த பிராமணர்க்ஷத்திரியர்வைசியரும்பிராமணப் பெண்களும் இந்த வேதாந்த ஞானத்துக்கதிகாரிகளாவார்கள். சூத்திரர்களோ வென்றால்புராணங்களின் மூலமாக அறியவேண்டும். முக்கிய அதிகாரிகளுக்கு ஞான விரோதமான பிரதிபந்தஞ் சாராது. அவர்களுக்கு எளிதில் ஞானம் சித்தியாம்மற்றவர் களும் ஜன்மாந்தரங்களில் முக்தியடைவார்கள். யாகாதி கன்மங்களினாலே பதமுத்தி கிடைக்குமேயன்றிச் சாயுச்சிய முத்தி கிடைக்கமாட்டாது. அந்த ஞானத்தை யெளிதி லடையும் மார்க்கமெது வென்றால்நாம் ஜீவான்மாக்கள் உய்யும் பொருட்டு அநேக தலங்களில் எழுந்தருளியிருக்கின்றோம். அந்தத் தலங்களி லெதையாவது அடைந்து எம்மையாராதித்தால் கிடைக்கும். அந்தத்தலங்களுள் காசி சிரேஷ்டமானது. அதில் இறக்கின்ற சீவன்களெல்லாம் எமது சாரூபத்தையடையும். திருக்காளத்தியென்றொரு தலமுண்டு. அந்தத்தலத்தில் சொர்ணமுகி யென்றொரு நதியிருக்கின்றது. அந்த நதியில் நீராடி என்னை வணங்குகிற வர்களுக்கு. முத்திகிடைக்கும். சிதம்பரமென்னும் க்ஷேத்திரத்தில் எமது ஆநந்த நடனத்தை ஒருவருஷம்தரிசித்தவர்கள் முத்தியடைவது நிச்சயம். இதுவே முத்திசாதனங்களுட் சிறந்தது. இதைத் தவிர வேறு கிடையாது. இதனை யெல்லார்க்கும் உபதேசஞ்செய். நீயும் அனுஷ்டானம் செய்'' என்று கறைமிட ற்றிறைவன் திருவாய்மலர்ந்.தருளினார். அது கேட்ட திருமால் முதலாயினோர் ஐயமொழிந்து மனமகிழ்ந்து பன்னகா பரணனது பாதங்களில் வணங்கி விடை பெற்றுப் போனார்கள். 

 

பிறகு திருமால் திருக்காளத்தியிற் சென்று சிவபிரானை யாராதித்துப் பேறு பெற்றார். பிரமதேவர் விருத்தாசலத்தி லாராதித்து மேன்மையடைந்தார். வியாச முனிவர் காசியி லாராதித்து வேண்டியவற்றைப் பெற்று மகிழ்ந்தார். மற்றைய தேவர்களும் முனிவர்களும் சிதம்பரத்தில் ஆனந்த நடனத்தைத் தரிசித்து விரும்பின வெல்லாமடைந்தார். நானும் இந்த க்ஷேத்திரங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வருஷம் வசித்துப் பூசித்து ஞானத்தைப்பெற்றேன் என்று கூறினார் சூதமுனிவர். 

 

 

ஏழாவது அத்தியாயம்.

கால அளவை கூறியது

 

சௌனகாதி முனிவர்களே! அளவுபடாத காலவளவையைச் சுருக்கிச் சொல்லுகிறேன் கேளுங்கள். பதினைந்து நிமிஷங் கொண்டது ஒரு காஷ்டை. காஷ்டை முப்பது கொண்டது ஒரு களை. களை முப்பது ஒரு முகூர்த்தம். முகூர்த்தம் முப்பது இரவும் பகலுமாகிய ஒருநாள். நாள் பதினைந்து கொண்டது ஒரு பட்சம். இரண்டு பட்ச மொருமாசம். ஆறுமாசம் ஒரு அயனம். அயனம் தட்சணாயனம் உத்தராயனமென்று இரண்டுவகைப்படும். அயன மிரண்டு ஒரு வருஷமாம். அவற்றுள் தட்சணாயனம் தேவர்கட்கு ஒரு இராத்திரியாம். உத்தராயனம் பகலாகும். இந்த வகையான நாள் பதினைந்து தேவர்களுக்கு ஒருபட்சம். இரண்டு பட்சம் ஒரு மாசம். மற்றவையும் மனிதர்க்குச் சொல்லியது போலக்கொள்க. இவ்வகையான தேவவருஷம் பன்னீராயிரங் கொண்டது சதுர்யுக மொன்று. இவற்றுள் கிருதயுகம் நாலாயிரம் வருஷம்யுகசந்தி எண்ணூறு. ஆகவருஷம் நாலாயிரத்தெண்ணூறுகிரேதாயுகத்துக்கு வருஷம் ஆயிரத்திருநூறுஇந்த நாலுயுகங்களையும் ஒருசதுர் யுகமென்பர். இந்தயுகம் எழுபத்தொன்றானால் ஒருமனுவந்தரமாம். பதினாலுமனுவந்தரம் பிரமாவுக்கு ஒரு பகல். இந்தப்பகல் தான் ஒரு கற்பமென்னப்படும். இரவும் இந்த அளவேயாம். இத்தகைய நாள் முந்நூற்றறுபதானால் பிரமாவுக்கொருவருஷம். இந்த வருஷம் நூறானால் பிரமனுக்கு ஆயுள் முடிவாகும். பிரமனாயுளாகிய நூறு வருஷம் விண்டுவுக்கு ஒரு நாள். இந்த நாள் முந்நூற்றறுபது ஆனால் விண்டுவுக்கு ஒரு வருஷமாம். இந்த வருஷம் நூறு ஆனால் திருமாலும் ஒடுங்குவான். இந்தப் பிரமவிஷ்ணுக்களுடைய முகூர்த்தங்களும் தத்தம் காரணத்திலொடுங்கும்.உலகமும் லயமாகும். இவையெல்லாமொடுங்குமிடம் மாயையாகும். அந்தமாயை அபேதமாய்க் சிவன்றிருவடியிலொடுங்கும். அபேதமானாலும் பேதமாகத்தோன்றுதலால் மாயை யென்றும்ஆன்மாவின் சுயரூபத்தை மறைத்து நிற்பதால் தமம் என்றும்வித்தை யென்கிற ஞானத்தை மறைப்பதால் அவித்தையென்றும்அந்த ஞானத்துக்குக் காரணமாக விருத்தலால் மோகமென்றும்சத்துக்கு விலட்சணமா யிருத்தலால் அசத்தென்றும்உலகோற்பத்திக்குக் காரணமாயிருப்பதால் காரணமென்றும்காரியமாகிய உலகமாயிருந்தும் அறியப்படாமலிருப்பதால் அவ்வியக்தமென்றும்மாயைக்குப் பெயர்கள் கூறப்படும். இந்தக் காலவளவை சிவபெருமான் றிருவருளால் கற்பிக்கப்பட்டது. 

 

அளவிடப் படாத வுலகங்க ளெல்லாம் கால தத்துவத்தி லொடுங்கும். அந்தக் காலம் மாயையி லொடுங்கும். அந்தக் காலமும் மாயையும் பரசிவனிடத்தி லொடுங்கும். அந்தப்பரம சிவ னொருவனே வாதையில்லாதவன். அவனே முக்கால சிருஷ்டிக்குங் காரணனா யுள்ளவன். ஸ்ரீ பரமேசுவரனுடைய கருணையாலே பிரம விஷ்ணுக்களுக்கு அவரவர் பதவிகள் உண்டாகும். சகல சராசரங்களும் அவனுக்குரி யனவாமென்று வேதங்கள் கூறும். அளவிலாத பிரம விஷ்ணுக்கள் முன்தோன்றி யொடுங்கினார்கள். சிவபெருமான் அனுக்கிரகத்தினால் பிரம தேவன் இராஜசகுண வியல்புடையவனாய்ச்சிருஷ்டிப்பான். விஷ்ணு சத்துவகுண இயல்பினனாய் இரட்சிப்பன். ருத்திரமூர்த்தி தமோகுணப் பிரதானனாய்ச் சங்கரிப்பன். இந்த மும்மூர்த்தி பேதங்களும் அநேகமாகும். இவ்வாறு நிலைபெற்ற ஆன்மாக்களெல்லாம் சிவ சொரூப மாம். மாயையில் மயங்கினவர் களிதனையறியமாட்டார்கள். பேத புத்தியுள்ளவர்க ளாகவேயிருப்பார்கள். பூர்வஜனனங்களிற் செய்த புண்ணிய பலத்தினால் சிவாநுக்கிரக முண்டானால் அவன் சொரூபத்தையறிவார்கள். எந்தச் சொரூபத்தை யாராதித்தாலும் அது சிவசொரூபமே யென்று கருதி வழிபடுவோர்களே மேலானவர்களாவர்கள். எல்லா முகூர்த்தங்களும் சிவசொரூபமானாலும் அவற்றுக்குள் உயர்வுந் தாழ்வுமுண்டு. தெளிவான கண்ணாடியில் முகமும் தெளிவாய்த்தோன்றும்அழுக்குப்படிந்த கண்ணாடி யில் அப்படித்தோன்றாது. அது போல ருத்திரமூர்த்தியிடத்தில் சிவசொரூபம் அதிகமாய் விளங்கும். மற்ற முகூர்த்தங்களில் குறைந்திருக்கும். ஆகையால் அந்த ருத்திரனை யாராதிப்பவர்கள் சீக்கிரத்தில் பந்த மொழிந்து முத்தியடைவார்கள். வேதங்க ளெல்லாம் பரமசிவனையே பரம்பொருளாகக்கூறும். மற்றையரைச் சிலவிடத்தில் லுரைத்தாலும் முடிவிற் சிவனையே கூறும். புராணங்களு மப்படியே சொல்லும். அவ்வாறு கூறுவது சிவனுடைய பரிபாகத்துக் கேற்றவாறே யாம். சகல சீவர்களுக்கும் அருள் செய்யும் பொருட்டேகாசிசிதம்பரம்சோமானதம், விருத்தசலம்வேதாரணியம்திருவாரூர்கேதாரம்காளத்தி முதலாகிய திவ்ய க்ஷேத்திரங்களில் சிவ பெருமான் முகூர்த்தங் கொண்டெழுந்தருளியதா மென்றறிவீர்களாக. 

 

                                    .. 

 

 

 

 

 

எட்டாவது அத்தியாயம்.

பிரளயத்தில் அமிழ்ந்தின பூமியை வராகமூர்த்தி

யெடுத்து நிறுத்தியது.

 

பூர்வ மொரு காலத்தில் ஜலப்பிரளய முண்டாயிற்று. அந்த வெள்ளத்தில் உலகமெல்லாம் முழுகிப்போயிற்று. சராசரங்களெல்லா மொழிந்து போயின. ஜலத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரமதேவர் ஆயிரங்கண்களும் ஆயிரங்கால்களும் விளங்கும்படி மஹாவிஷ்ணு ரூபங்கொண்டார். திரினேத்திரனாகிய சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானம் பண்ணிக்கொண்டு அந்தப்பிரளய ஜலத்தில் படுத்துக்கொண்டிருந்தார். நரனென்றுபேர் கொண்ட சிவ பெருமானால் உண்டாக்கப்பட்ட படியால் ஜலத்துக்கு நாரமென்று பேருண்டாயிற்று. அந்த ஜலத்தில் பள்ளி கொண்டிருந்த படியால் அந்தப்பிரமாவுக்கு நாராயணனென்று பேராயிற்று. அப்போது சிவபெருமான் அந்தப் பிரமனுக்குத் தகுந்தபலத்தைக் கொடுத்துப் பாதாளத்தில் அழுந்தின பூமியை எடுத்து நிறுத்து என்று கட்டளை யிட்டார். அந்த நாராயணன் உடனே ஆகாயமளாவும்படியான ஒரு பெரிய வராக ரூபங்கொண்டான். பின்னர் பாதாளம் போய் அங்குள்ள பூமியை ஒரு கொம்பினால் ஏந்திக்கொண்டான். அதைப்பார்த்துத் தேவர்க ளெல்லாரும்உலகங்களை யெல்லாம் உள்ளங்காலுக்குள் அடக்குவாய்ஒரு கவளம் சோறு போல் உண்டு விடுவாய்இது உனக்கு ஒரு பெரிதாகுமா வென்று புகழ்ந்து கொண்டாடிஇத்தகைய மகிமையை யுடைய உமக்கு நமஸ்காரம் பண்ணுகிறோ மென்று துதித்தார்கள்.. திருமால் பூமியை முன்போல நிலை நிறுத்தி மறுபடியு முன் போலப் பிரமாவாய் விட்டார்.. 

 

 

ன்பதாவது அத்தியாயம்.

பிரம சிருட்டி கூறியது.

 

ஸ்ரீ பரமேசுவரனுடைய திருவருளால் பிரமதேவர் முன் அழிந்து போன பிரபஞ்சத்தைச் சிருஷ்டிக்க நினைத்தார். அப்போது அவருடைய எண்ணமில்லாமலே அவரிடத்தில் தமோமய சிருஷ்டி உண்டாகியது. அவை தமம்மோகம்மஹா மோகம்தாமிசிரம்அந்ததாமிசிரம் என்னப்படும். இவை அவித்தியா பஞ்சக மெனப்படும். அதன் பின் தொழில் அறிவில்லாத மரம் முதலிய சிருஷ்டிக்கப்பட்டன. இவை நன்மை தீமை யுணராமையால் வேறு சிருஷ்டி தொடங்கினான். அது திர்யக்கு சுரோத மென்னப்படும் பசு வாதிய வாம். அதுவும் பயனில்லாமையால் ஊர்த்த சுரோதமெனப்பட்ட சிருஷ்டி செய்தான். அது சத்துவ குணப்பிரதான தெய்வத சிருஷ்டியாம். அதையும் விட்டு மற்றொரு சிருஷ்டி செய்தான். அது வாக்குசுரோத சிருஷ்டி யென்னப்பட்ட மனுஷ சிருஷ்டியாம். பிறகு பூத பிரேத பைசாச சிருஷ்டி யுண்டாயிற்று. இவ்வைந்தும் வைகிருத சிருஷ்டி யென்னப்படும். பின் சத்தாதியும்பின் இந்திரியமும் அவற்றுக் கதிஷ்டான தெய்வங்களும் சிருஷ்டிக்கப்பட்டன. இம்மூன்றும் பிராகிருத சிருஷ்டி. இவை ஒன்பது வகையாம். அவை யாவன: மகத் சிருஷ்டி முதலாவது; சத்தாதி யிரண்டாவது; இந்தியியாதி மூன்றாவது; விருட் சமாதிகள் நாலாவதுமிருக சிருட்டி யைந்தாவதுதேவ சிருஷ்டி யாறாவதுமனித சிருஷ்டி யேழாவதுபூதாதி யெட்டாவதுகௌமாரம் ஒன்பதாவதாம். இச்சிருஷ்டி பேதங்களை விரித்துச் சொல்லின் அளவுபடாது. ஆதலால் கௌமார சிருஷ்டியை விரித்துச் சொல்லுகிறேன். 

 

சனகன்சனாதனன்சனந்தனன்சனற்குமாரன்ரிபுஇவர்கள் மானத சிருட்டியி லுண்டானவர்கள். இவர்களும் மானசபுத்திரர்க ளென்னப்பட்டு வைராக்கிய முடையவர் களாய்த் தவஞ் செய்து மேன்மை பெற்றார்கள். இதனால் மகிழ்ந்திறுமாந்த பிரம தேவன் மாயையால் மயங்கி ஒருவருந் தனக்கு ஒப்பில்லையென்று நினைத்தான். ஆகையால் சிருட்டிவலி அவனை விட்டு நீங்கிற்றுஅதனால் பிரமதேவன் வருந்தியிருந்தான். அவனுக்குத் திருமால் பிரத்தியட்சமாய்ப் பலவிதங்களான புத்தி மதிகளைச் சொல்லி மறைந்து போனார்.. கொஞ்சம் அஞ்ஞானம் விலகிற்று. பிரமன் சிருஷ்டியருளும்படி திருமாலை நினைந்து பல நாள் அருந்தவம் புரிந்தான். அவர் திருஷ்டியுதவுஞ் சக்தி எனக்கு இல்லை யென்று கருதிப் பிரத்தியட்சமாக வில்லை. பிரமன் துக்கத்தோடு அழுதான். இப்படிப் பிரமன் வருந்துவதை யுணர்ந்த பரமசிவன் தன்னைத் தியானிக்கும் படியான அறிவைத் தாமே கொடுத்தார். அந்த எண்ண முண்டானதும் சிவ பெருமானுடைய திருவடியைப் புருவ மத்தியத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தான். சிவபெருமானும் அவனுடைய புருவ மத்தியத்திலிருந்து பிரத்தியட்சமானார். 

 

பிரமதேவன் திடுக்கென் றெழுந்திருந்துபன்னகாபரணனை வலம் வந்து அஷ்டாங்க சாஷ்டாங்கமாகப் பணிந்து பலவாறு துதித்தான். உமாசகாயன் மனமகிழ்ந்து உன் கருத்தென்ன வென்று கேட்டார். பிரமாநான்கருவத்தினால் உமது திருவருளை மறந்து இறுமாந்து தருக்கினேன். அதனால் என் சிருஷ்டித் தொழில் மறைந்து போயிற்று. படைப்புத் தொழிலை யெனக்கருள் புரிய வேண்டு மென்றான். ஸ்ரீ பரமேசுவரன் தமது அம்சமாக அநேக ருத்திரர்களை யுண்டாக்கினார். பிரமன் மீண்டும் பணிந்து மனித சிருஷ்டி.யையுஞ் செய்தருள வேண்டு மென்று கேட்டான். காலகால னாகிய மஹாதேவன் துக்க முடைய மனிதரைச் சிருட்டிக்க மாட்டோம்நீயே சிருஷ்டித்துக்கொள்நாம் தட்சிணாமூர்த்தி வடிவமாயிருந்து அநுக்கிரகம் செய்வோ மென்றுபிரமனுக்குச் சிருஷ்டி அனுக்கிரகம் புரிந்து மறைந்தருளினார். 

 

பின்னர் உருத்திரர் சற்குண சிருஷ்டிகளையே செய்தார்கள். பின்னர் பிரமன் அவருடைய சிருஷ்டியையுந் தன்னிடத்தில் உண்டாம்படி யடைந்துசத்தாதிகளையும் பூதங்களையும் பஞ்சீகரணம் (கலத்தலை) செய்து ஸ்தூலமும் சூட்சுமமு மாகிய வாயுஅக்கினிஅப்புமண்மலைவிருட்சங்களையும்கலைவிகலையுகம் முதலிய காலங்களையும் சிருஷ்டித்தான். பின் மரீசியைக் கண்ணிலும்பிருகுவை இருதயத்திலும்அங்கிராவைச் சிரசிலும், கிருதுவை அபான அபான வாயுவிலும்புலகனை வியான வாயுவிலும்புலஸ்தியனை உதான வாயுவிலும்தட்சனைப் பிராண வாயுவிலும்வசிஷ்டரைச் சமான வாயுவிலும்அத்திரியைச் சுகோத்திரத்திலும் இருந்து உண்டாக்கினான். இவர்களுக்கு நவப்பிரஜாபதிகள் என்று பேர். அநந்தமான தருமங்களையுஞ் சிருஷ்டித்தான். பிரஷ்டத்தினின்றும் அசுரரை உண்டாக்கினான் பின்னர் அந்தச் சொரூபத்தை விட்டு மற்றொரு சொரூபத்தை யெடுத்துக் கொண்டான். விடப்பட்டது மனிதர்களுக்கு இராக்கால மாயிற்று. புதிதாக எடுத்துக்கொண்ட ரூபத்தில் சத்துவகுண் மதிகமாக இருந்தது ஆதலால் அவன் முகத்திலிருந்து தேவர்களை யுண்டாக்கி விட்டுஅந்தச் சொரூபத்தையும் விட்டுவிட்டான். விடப்பட்டது மனிதர்க்குப் பகற்காலமாக விளங்கியது. பிறகு பிதிர்த் தேவதைகளைப் படைத்தான். அந்தத் தேகத்தையும் விட்டு விட்டான். அது சந்தியாகால மாயிற்று. வேறொரு உடலை யெடுத்துக் கொண்டு மனிதரைச் சிருஷ்டித்தான். பின் அந்த வுடலையும் விட்டான். அது சந்திரிகையாக விளங்கியது. 

 

பிறகு இராசதகுணப் பிரதானமான வுடலை யெடுத்துக் கொண்டுஇராட்சதர்கள்சர்ப்பங்கள்பூதங்கள்கந்தர்வாதிகள் எல்லாரையும் படைத்தான். பிறகு வேறொரு சரீரத்தை யெடுத்துக்கொண்டு பறவை மிருகங்க ளெல்லாம் படைத்தான். பின் யாகங்களையும் பல விதிகளையும் படைத்தான். இவற்றிற்கெல்லாம் முதலில் பஞ்சீகரணஞ் செய்யப்பட்ட மஹா பூதங்களே காரணமாகும். இவ்வாறு பிரமன் சிருட்டித் தொழிலைப் புரிந்தான். 

 

 

பத்தாவது அத்தியாயம்.

இரணியகருப்ப சிருட்டி கூறியது.

 

மோமயச் சொரூபத்தைக்கொண்ட பிரமதேவன்முன்படைத்தவை யாவும் அபிவிருத்தியாகக் கருதி அந்தச் சொரூ பத்தைவிட்டு இரணியகர்ப்ப சொரூபத்தைக் கொண்டான். இரணியகருப்பரூபம். சூத்திகான்மாச் சொரூபம்அந்தர்யாமி ரூபம் இம்மூன்றையுங் கேளுங்கள்.

 

      சூட்சும பூதங்களாகிற சத்தபரிசரசரூபகந்தங்களென் பவற்றிலிருந்துசத்துவகுண சமஷ்டியான ஞானேந்திரியங்களைந்தையும் ஞானசத்தி தோற்றுவிக்கும். அந்தச் அந்தச் சூட்சும பூதங்களில் இராஜசகுண சமஷ்டியாகிற கர்மேந்திரியங்களைக் கிரியா சத்தி யுற்பத்தியாக்கும். அந்த ஞான சக்திகளைந்துஞ் சேர்ந்து எல்லா வுயிர்க்கும் அந்தக்கரணமாம். அதிற்கலந்துள்ள பிரமதேவனுக்கு இரணியகருப்பனென்று பேர். கிரியாச்த்தி ஐந்துங் கூடிப் பிராணாதி வாயுக்கள் ஐந்தின் சமஷ்டியான பிராணவாயு தோன்றியது. அதிலேயுள்ள விஷ்ணு சூத்திரான்மா வென்னப்படுவான். இவ்விரண்டி னும் வசிக்கின்ற மஹேசுவான் அந்தர்யாமி யெனப் பெயர் பெறுவான். 

 

      பிறகு பிரமதேவன் தன்னுடைய சரீரத்தை இரண்டு பங்காக்கிக் கொண்டான். அவற்றுள் ஒருபாகம் ஆணும் ஒருபாகம் பெண்ணுமாயின. அந்தப் பெண்ணினிடத்தில் விராட்சுராட்சம்ராட் என்று மூவர் தோன்றினார்கள். இம்மூவருள் சுராட் என்பவன் ஸ்தூலபூத பஞ்சக சொரூபமாகிய பிரமாண்டத்திற்கு அபிமானியாவான். ஸம்ராட் பிரமாண்டத்தின் சூட்சும சொரூபத்துக்கு அபிமானியாவான். விராட் காரணசரீரத்துக் கபிமானியாவன். விராட்மனு சதரூபை யென்பவர்களைப் படைத்தான். மனு சதரூபை யை மணந்து பிரியவிரதன்உத்தானபாதன் என்பவர்களைப் பெற்றான்.உத்தான பாதனுக்குப் பிரசூதிஆக்ஷியென்று இரண்டு பெண்கள் பிறந்தார்கள். பிரசூதியைத் தட்சன்மணம்புரிந்து சிரத்தை முதலான பதின்மூன்று பெண்களையும்கியாதி முதலான பதினொரு  பெண்களையும் பெற்றான். இந்த இருபத்து நான்கு பெண்களிட மாக அளவிலாத பிரஜைகள் உதித்தனஆகூதியை மானசப்பிர ஜாமதி மணந்து எக்கியனைப் பெற்றான். எக்கியன் பன்னிரண்டு ரிஷிகளைப் பெற்றான். இவர்களெல் லாரும் பூர்வ கன்ம வாசனையிலே சிவாக்கினைப்படி பிறந்தார்கள். 

 

உலகத்தில் உயிர்கள் தோன்றுவது இயற்கையா லென்றும் கருமத்தினாலேயே யென்றும் ஒருவரோ டொருவர் மாறுபட்டுக் கூறுவார்கள். அதுவேதக்கருத்தோடு மாறுபடுகின்றது. இவ்விஷயத்திற் சந்தேக முண்டாயிற்று. ஜைமினிவியாசர்அட்சபாதர்களாமாவிசுமந்துபயிலர்பதஞ்சலிஆங்கீரசர் முதலிய அநேக ரிஷிகள் இமயச்சாரலில் ஒருங்கு கூடி இந்த விஷயத்தைப்பற்றி யோசிக்கலானார்கள். உயிர்கள் உற்பத்தியாவது காலத்தினாலேயோ கருமத்தினாலேயோமாயையினாலேயோபரமசிவனாலேயோவென்று சந்தேகித்து முடிவுதெரியாமல் இது சிவபிரானாலேயே யறியத் தக்கதாமென்று நிச்சயித்து நெடுநாள் கொடுந்தவம் செய்தார்கள். அப்போது சிவபெருமான் பிரத்தியட்சமானார். அதைக் கண்ட ரிஷிகளெல்லாரும் மஹாதேவனை வணங்கித் துதித்துத் தங்களுடைய சந்தேகத்தைக் கூறி உண்மையிதுவென்று கூறி யருள வேண்டுமென்று பிரார்த்தித்தார்கள். மஹாதேவன் அவர்களை நோக்கி ரிஷிகளே! ஜீவசிருஷ்டி மாயையாலுங் கன்மத்தாலும் தனித்து உண்டாவதில்லை. அநாதி கன்மம் ஆதாரமாய் நிற்க மாயையை உபாதான காரணமாகக்கொண்டு நாமே உற்பத்தியாக்கு வோம் என்று. ஏறு கூறி மறைந்தருளினார். அதுகேட்டுச் சங்கை யொழிந்து ரிஷிகளெல் லாரும் மகிழ்ந்து உமாசகாயனைப் பலவாறு துதித்தார்கள். 

 

 

பதினோராவது அத்தியாயம்.

ஜாதிவரலாறு கூறியது.

 

முன்காலத்தில் ஜலப்பிரளயமுண்டாகஉலகமெல்லாம் ஜலத்தில் அமிழ்ந்திருந் தது. இருள் மூடிக்கொண் டிருந்தது. அந்தப் பிரளயத்தில் திருமால் யோகநித்திரை செய்து கொண்டிருந்தார். அந்தத் திருமாலுடைய உந்தியிலே ஒரு பொன்மயமான தாமரை பூத்திருந்தது. அந்தத்தாமரைப்பூவிலே சிவபெருமான் திருவருளாலே பிரம தேவன் உற்பவித்தான். அந்தப்பிரம தேவனுடைய முகத்திலே பூர்வவாசனை காரணமாகப் பிராமணர்கள் பத்தினிகளோடு பிறந்தார்கள். புஜத்திலிருந்து க்ஷத்திரியர்களும் மனைவியரோடு தோன்றினார்கள். தொடையினின்றும் வணிகர் பாரியைகளோடு முதித்தார்கள். பாதத்தினின்றும் பத்தினிகளோடுசூத்திரர் பிறந்தார்கள். இந்த நாலு ஜாதிகளுடைய கலப்பினாலே பல சாதிகளுண்டாயின. இவையெல்லாம் உலகத்திற் குபகாரமாகவே யுண்டாயிற்று. உயர்ந்த குலத்துப் புருஷனுக்கும்தாழ்ந்த குலத்துப் பெண்ணுக்கும் பிறந்தவன் அநுலோமன் என்று பெயர் பெறுவான். உயர் குலத்துப் பெண்ணும் தாழ்ந்தகுலத்து ஆடவனும் கூடிப்பிறந்தவனுக்குப் பிரதிலோமன் என்று பேர். அநுலோம குலவாணுக்கும் பிரதிலோமகுலப் பெண்ணுக்கும் பிறந்தவன் அந்தராளனாவான். பிரதிலோமத் தந்தைக்கும் அனுலோமத் தாய்க்கும் பிறந்தபிள்ளை விராத்தியன் என்னப்படுவான். இவர்களுள் முதல் நாலு வருணமும் உத்தமம். பின்னர்க் கூறிய நாலும் மத்திமம். இவர்களுடைய கலப்பினால் பிறந்த சந்ததிகள் சங்கர ஜாதி யென்னப்படும். இவர்கள் தத்தம் ஜாதிகளுக் கேற்பக்கூறிய ஆசாரம் தவறாமல் நடந்தால் முத்தியடைவார்கள். ஆதலால் வர்ண பேதங்களும் உலகுக்குபகாரமாகவே பிரமதேவனால் உண்டாக்கப்பட்டன. இந்த ஜாதி பேதங்கள் பூர்வ கன்மத்தை யனுசரி த்தே உண்டாயின. இந்தச்சாதி பேதங்கள் உடலைப்பற்றியனவே யன்றி உயிருக்குச் சம்பந்த மில்லை. ஆனாலும் சீவன் உடலையே நானென்று கருதியிருத்தலாற் சம்பந்த முண்டு. உடலை நானென்று அபிமானித் திருப்பதினாலேயே பந்த முண்டாயிற்று. வேதாந்த சிரவணத்தினாலே அது விலகும். விலகப்பத்தி மார்க்கத்தினின்று தவறாமல் நடந்தால் பரமசிவன் கருணையுண்டாம். அதனாலே அநுபவஞானமுண்டாகும். அந்த ஞானத்தினாலே பந்த மறும். இந்த வேதாந்த ஞானானுபவ மில்லாதவர்கள் தத்தம் வர்ணாசிரம நெறி தவறாமல் நடந்து சிவபக்தி செய்தல் வேண்டும். மெய்ஞ்ஞான சித்தியில்லாதவர்கள் ஜாதியாசாரத்தைக் கடந்து நடப்பாரானால் நரகாவஸ்தையை யடைவார்கள். ஆதலால் முத்தி பெறும் இச்சையுள்ளவர்கள் வருணத்துக்குத் தக்க ஆசாரத்தைக் கைக்கொண்டு நடந்துசற்கருமங்களைச் செய்துசிவபத்தி செய்தலால் மனக்களங்க மற்று மெய்ஞ்ஞானம் பெற்று முத்தி பெறுதல் வேண்டும். 

 

 

பன்னிரண்டாவது அத்தியாயம்.

தீர்த்த மகிமை கூறியது.

 

தபோ நிதிகளே! சகல பாபங்களையு மொழித்து முத்தியை அளிப்பதான மகிமையுள்ள தீர்த்த விசேஷங்களைக் கேளுங்கள். என்று சூதர் சொல்லுகிறார். 

 

தேவர்களும் முனிவர்களும் துதிக்கின்றதும் சகல போகங்களையும் தருவதும், உலகத்தாரால் புகழப்பட்டது மாகிய கங்காதுவார மென்று ஒன்று உண்டு. அந்தத் தீர்த்தத்தில் சித்திரைமாசம் அசுவதி நட்சத்திரத்தில் ஸ்நானஞ் செய்துவிரதமிருந்துபெரியோர்களுக்குச் சொர்ணம் முதலிய தானங்களைச் செய்தால் பூர்வ ஜன்மங்களிற் செய்த பாபங்களெல்லாம் ஒழியும்அவர்களுக்கு முத்தியும் கைகூடும். சோமநாத புரத்தில் சமுத்திரத்தில் சோம தீர்த்த மென்று ஒரு கட்ட மிருக்கிறது. அந்தத்தீர்த்தத்தில் பருவகாலம்திருவாதிரைஅட்டமிவிதிபாதம்ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தசி. யிவைகளில் ஸ்நானஞ் செய்துதான தருமங்களைச் செய்து சோமநாதக் கடவுளை வணங்கித் துதித்தால் சகல பாபங்களு மொழியும். மோட்சமும் பெறலாம். காசியிலுள்ள மணிகர்ணிகையில் விதிப்படி ஸ்நானம் பண்ணிவேதியர்க்கு அன்னதானம் முதலிய செய்து விசுவேசரைப் பணிகிறவர்கள் முத்தி பெறுவார்கள். பிரயாகையில் சித்திரை மாதம் பரணிகார்த்திகைரோகிணி நட்சத்திரங்கள் கூடிய தினங்களில் ஸ்நானம் பண்ணித் தானங்கள் செய்தால் மோட்சமடைவார்கள். கங்கையானது சமுத்திரசங்கம மாகுமிடத்தில் மிருகசீரிஷம்மகம்திருவாதிரை நட்சத்திரங்களில் ஸ்நானம் பண்ணிச் சிவானுபூதிமான்களுக்குத் தன்னால் இயன்றவளவு தானஞ்செய்தால் புக்தி முக்தியிரண் டும் பெறுவார்கள். நர்மதா நதியில் ஸ்நானஞ்செய்து தானம் புரிபவர் பிரமதேவருல கத்தில் வசிப்பார்கள். யமுனாநதியில் வைகாசி மாசம் விசாக நட்சத்திரம்ஞாயிற்று கிழமைகளில் நீராடி அந்தணர்க்கு அன்னதானஞ் செய்கிறவர்கள் சிவலோகத்தை யடைவார்கள். சரஸ்வதிந்தியில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்நானம் பண்ணிச் சிவபக்தர்களுக்குத் தானம் வழங்கினால் அவர்கள் பூலோகத்தில் புத்திர களத்திராதி களுடன் பெருவாழ் வடைந்து அந்தத்தில் சொர்க்கவாழ்வும் பெறுவார்கள். கோதாவரி நதியில் ஆவணிமாசத்தில் பிரகஸ்பதி சிங்கராசியி லிருக்குங் காலத்தில் ஸ்நானம் பண்ணிச் சற்பாத்திரத்தில் தானம் செய்பவர் கங்கா நதியில் பன்னிரண்டு வருஷம் ஸ்நானம் பண்ணின பலனை யடைவார்கள். சையபர்வதத்தில் நின்றும் உற்பத்தியாய் வருகிற கிருஷ்ண வேணி யென்றொரு நதியுண்டு. அதில் பருவகாலத்தில் நீராடி உத்தமருக்குத் தானம் புரிபவர் நிர்மலராய் முத்தியடைவார்கள். பிரமன் விஷ்ணு இந்திரன் முதலிய தேவர்கள் இந்த நதி. நீரினாலே இந்திர நீலப்பர்வதத்திலெ ழுந்தருளிய சிவ பெருமானுக்கு அபிஷேகம் புரிந்து ஆராதிக்கின்றார்கள். ஆதலால் அதன் மகிமை அளவு படாததாம். தெட்சணகைலாசமென்கிற திருக்காளாஸ்தியில் சொர்ணமுகியென்று ஒரு நதியிருக்கிறது. இந்தப் பூலோகத்திலுள்ள தீர்த்தங்க ளெல்லாம் மாசிமகநட்சத்திரதினத்தில் இந்தச் சொர்ண முகியாற்றில் முழுகித் தங்களுடைய பாபங்க ளொழிந்து பரிசுத்தமாகின்றன. ஆதலால் மாசி மகத்தில் அந்த நதியில் ஸ்நானம் பண்ணுகிறவர்கள் எவரானாலும் தாங்கள் நினைந்தபடி போகங்களை யனுபவித்து முத்தியையும் அடைவார்கள்பம்பா நதியானது பிரம விஷ்ணு வாதி தேவராலும் விரும்பப்படுவது. அதில் பருவத்திலும்ஞயிரறுக் கிழமையிலும் அஸ்தம் பூர நட்சத்திரங்களிலும் ஸ்நானம் பண்னி உத்தமருக்குத் தானம் செய்தால் பாவங்களெல்லா மொழிந்து சொர்க்கத்தையும் பெறலாம். திருவதிகை நகரத்தருகில் குடிலை யென்னு மொரு நதியோடுகின்றது. அந்நதியில் ஆவணி மாசம் பூரணையில் ஸ்நானம் செய்து தானங்களுஞ் செய்பவர்கள் புண்ணியர்களாய்ப் புக்தி முக்திகளைப் பெறுவார்கள். விருத்தகிரியிலோடுகிற மணி முத்தா நதியில் மார்கழி மாசம் ஆதிரை நட்சத்திர தினத்தில் ஸ்நானஞ் செய்து உபவாச மிருந்து தானம் செய்பவர்கள் போக மோட்சங்களை யடைவார்கள். சிதம்பர க்ஷேத்திரம் சிவ கங்கையில் ஸ்நானம் செய்து சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜ மூர்த்தியைப் பணிகிறவர்கள் எப்படிப்பட்டவரானாலும் சகல பாபங்களினின்றும் விடுபட்டுப் போக மோட்சங்களைப் பெறுவார்கள். தில்லைக்குச் சமீபத்தில் குய்ய தீர்த்த மொன்றிருக்கிறது. அது பிரமஹத்தி முதலிய மாஹா பாதகங்களையும் விலக்கு மியல் புள்ளது. பிரமபுர மென்னப்படும் சீர்காழியில் பிரமாவினா லுண்டாக்கப்பட்ட பிரம தீர்த்த மென்றொன் றிருக்கின்றது. அது பிரமாவுக்குச் சிருஷ்டிக்கு மதிகாரத்தைக் கொடுத்த மகிமையுள்ளது. கிரகண காலம்ஆதிவாரம்விஷ்வகாலங்களில் அதில் ஸ்நானம் செய்தால் எல்லாப் பாவங்களும் தொலையும். அதற்குச் சமீபத்தில் சூரிய தீர்த்த மென்றொன்றிருக்கின்றது. அதில் மூழ்குவோர் முத்தி பெறுவது நிச்சயம். காவேரிசங்கமத்தில் ஸ்நானம் செய்தால் அவர்களுக்குப் பாபமே சேராதுமோட்சமு மெளிதாம். திரு வெண்காட்டில் முக்குள நீரில் முழுகுவோர் அடையும் பலன் சொல்லிலடங்காதுகாவிரியாற்றங் கரையில் திருவிடைமருதூர் முதலிய பல தலங்களுள. அவ்விடங்களிலும் குறித்த காலங்களிலாயினும் எப்பொழுதாயினு மூழ்கிச் சிவதரிசனஞ் செய்கிறவர்கள் முக்தரே யாவார். கும்பகோணத்திலுள்ள மாமகதீர்த்தத்தில் முழுகினவர் அடையும் பலன் சொல்ல முடியாது. வன்மீக க்ஷேத்திரத்தில் க்ஷீரகுண்ட மென்றொரு தீர்த்த மிருக்கி ன்றது. அத்தீர்த்தத்தில் பங்குனி யுத்திரம் பருவம்ஆதிவாரம்அஷ்டமி யிந்நாட்களில் ஸ்நானம் செய்து தானங்களும் செய்பவர்க்கு மோட்ச டெளிதி லடையத்தக்கதாம். சேது மஹா தீர்த்தத்தை யறியாதவர்கள் யார்ஸ்ரீராமனே அதில் ஸ்நானஞ் செய்து இராவண வதம் புரிந்த பாவம் ஒழிந்தா ரென்றால் அதன் மகிமை அளவிடப்படாததே யாம். அந்தச் சமுத்திரத்தில் பல தீர்த்தங்களுளவாம். அவை யெலாம் மஹா பாதகங்களைத் தொலை த்து முக்தியளிக்குந் தன்மையுடையன. 

 

       இவ்விதமான தீர்த்தங்கள் அளவில்லாதனவுண்டு. இந்தத் தீர்த்த மகிமைக ளெல்லாம் ஸ்ரீபரமேசுவரன் உமாதேவியாருக்குக் கூறியருளினார். உமாதேவியார் சுப்பிரமணியருக்குச் சொன்னார். அவர் பிரமதேவனுக்குச் சொல்லியருளினார். பிரமதேவர் வியாச முனிவருக்குபதேசித்தார். வியாசபகவான் எனக்கு உரைத்தருளி னார். நான் அவருக்குத் தொண்டு செய்து இவைகளைப் பெற்றுக் கொண்டேன். அந்த அருமையான பொருளை யுங்களுக்கு நான் சொல்லி விட்டேன். நீங்களும் உங்களுடைய சிஷ்யர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இத்தீர்த்தமான்மியத்தை யுணர்ந்து அதன்படி நடப்பவரும்பாராயணஞ்செய்பவரும் புக்திமுத்திகளையடைவார் கள். சகலதேவர்களும் அவர்களிடத்தில் விருப்பமா யிருப்பார்கள். அவர்களுக்கு அடையப்படாத தொன்றுமில்லை என்று சொல்லிவிட்டுச் சூதமுனிவர் கயிலாசகிரிக் கெழுந்தருளினார். 

 

சிவமான்மியகாண்டம்

முற்றிற்று.

 

 

 

 

செந்திலாண்டவன்

திருவடி துணை.

 

இரண்டாவது

ஞானயோககாண்டம்.

 

முதலாவது அத்தியாயம்.

ஞானயோகவரலாறு கூறினது.

 

     ஸ்ரீபரமேசுவரன் உமாதேவியாரோடுங்கூடியினிது வீற்றிருக்கும் கைலாய மலையில் மலரும் கனிகளுந் தரும்படியான பலவகை மரங்களும் செடிகளும் கொடிக ளும் அடர்ந்து சுகந்தங்கமழ்வதான குளிர்ந்த சோலை யொன்றுண்டு. அந்தச் சோலையின் ஒரு பக்கத்தில்சூதமுனிவர்விபூதி ருத்திராட்சமணிந்து சுகாசனத்திலிரு ந்து பரமசிவனை நோக்கித் தவம் புரிந்து கொண்டிருந்தார். அப்போதுநைமிசாரணியத் தில் தவம் புரிந்து கொண்டிருந்த விசாலாட்சன்ஜாபாலன்ஆருணிஜமதக்கினிமுதலிய அநேக ரிஷிகள் கைலைக்கு வந்து அந்தச் சோலையுட் புகுந்து சூதமுனிவரை க்கண்டார்கள். அவரை நோக்கி சூதபுராணிகரே! எங்களுக்கு ஞானயோகத்தைக்கூறி யருளவேண்டுமென்று வேண்டினார்கள். 

 

அது கேட்டசூதமுனிவர் முகமலர்ந்து அவர்களை நோக்கி இந்த ஞானயோக த்தைஸ்ரீபரமேசுவரன் பிரகஸ்பதிக்குச் சொன்னார். அப்போது சுப்பிரமணியக் கடவுள் உமா தேவியாரின் மடிமேலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவர் தன்னை ஆராதனை செய்த வசிஷ்டருக்குபதேசித்தார். வசிஷ்டர் சத்தி முனிவருக்கும் பராசரர்க்கும் உபதேசித்தார். பராசரர் வியாசருக்குச் சொன்னார். வியாசர் எனக்கு உபதேசித்தருளி னார். என் குருவாகிய வியாசர் எனக்குச் சொன்னபடியே நான் உங்களுக்குச் சொல்லுகி றேனென்று சொல்லத்தொடங்கினார். 

 

 

ண்டாவது அத்தியாயம்.

வருணாசிரமந் தவறாதிருப்பவரது பெருமை கூறியது.

 

முன்னொரு காலத்தில் பிரளையமுண்டாயிற்று. அப்போது. உலகம் எல்லாம் தமோமயத்தில் அமிழ்ந்திருந்தது. பின் பரமேசுவரனுடைய கருணையினாலே சத்துவத் திலிருந்து மூலப்பிருகிருதி தோன்றிற்று. அதன் பின் பிரமா விஷ்ணு ருத்திரர்களாகிய மும்மூர்த்திகளும்முக்குணங்களிலிருந்துண்டானார்கள். பின்னர்பஞ்சபூதங்கள்தன்மாத்திரைகள்ஞானேந்திரியங்கள்கன்மேந்திரியங்கள்பஞ்சவாயுகரணம் முதலியன பரமசிவனருளாலுண்டாயின. பின்னர் பிரமதேவன் அண்டத்தைப்படைத்தார். அவ்வண்டம் சகல வுலகங்களுக்கும் சகல சராசரங்களுக்கு மிடங்கொடுத்துக் கொண்டிருக்கும். 

 

பூலோகத்திலுள்ள மனிதர்கள் கடைத்தேறும் பொருட்டு வருணாசிரமதருமங் களை யுண்டாக்கினார். மனிதர்கள் தத்தமக்குரிய வருணாச்சிரமந் தவறாமல் நடந்து உமாசகாயனை யாராதித்துத் தோத்திரஞ் செய்கிறவர்களே முக்திக்கருகராவார்கள். வருணாச்சிரம தருமங்கடந்து நடப்பவர்கள் கதியடைவதரிது. வருணாச்சிரமதருமந் தவறாமலொழுகிச் சிவபிரானை வழிபடுதலால் ஞான முண்டாகும். ஞானத்தினால் அஞ்ஞானமொழியும். அஞ்ஞான நீங்கவே பந்தமொழியும். பந்தமொழியவே முத்தியுண் டாகும். இப்படிப்பட்டவர்களே சிவாராதனை செய்யத்தக்கவர். வருணாச்சிரம தருமத்தை யிழந்தவர்கள் சிவராதனைக் கருகமாகார். இது வேத சம்மதமாயுள்ள தாகையால் வருணாச்சிரம தருமத்தை அவசியந் தழுவி நடக்கவேண்டும். 

 

 

மூன்றுவது அத்தியாயம்.

பிரமசரியங்கூறியது.

 

பிராமண குலத்தில் பிறந்த சிறு பிள்ளை உபநயனமானவுடனே வேதாத்திய யனஞ் செய்யவேண்டும். இந்த விதி தவறப்படாது. பலாசுவில்வம்அரசு இவைகளில் ஏதாவதொரு தண்டம் தரிக்கவேண்டும். அந்தத்தண்டம் சிரசளவாக இருத்தல் வேண்டும். மூஞ்சிமேகலைகிருஷ்ணாஜினம்யக்ஞோபவீதங்களாகிய சின்னங்களையும் அணிந்து கொண்டு மூன்று காலத்திலும் சந்தியோபாசனை தவறாமல் செய்துகுருபணிவிடை புரிய வேண்டும். சத்பிராமணர் வீடுகளில் பிட்சை யெடுத்துப் புஜிக்கவேண்டும். காமாதிய குற்றங்களில்லாதவனாய்க் காலையுமாலையும் அக்கினி காரியமாகிய சமிதாதானம் தவறாமல் செய்யவேண்டும். தேவரிஷி பிதிர்க்களு க்கும் வேதமந்திரத்தினால் தருப்பணம் புரிய வேண்டும். இதுவே பிரமசரியக்கிரம மாகும். ஓ மாக்கினிஅல்லது விரசாக்கினியிலுண்டான விபூதியினாற்சர்வாங்கமும் உத்தூளனஞ்செய்து கொண்டுநெற்றி முதலிய குறியிட்ட ஸ்தானங்களில் திரிபுண்டா மாகத்தரித்துக்கொண்டு ஸ்ரீபரமேசுவரனை யாராதிக்க வேண்டும். மாதாபிதாதமையன்விருத்தர்ஞானிகள்இவர்களைக்கண்டால் எழுந்திருந்து அபிவாதனஞ் செய்து வணங்கிஅவர்கள் தீர்க்காயுசாய் வாழ்கவென்று கூறும் ஆசீர்வாதம் பெற வேண்டும். ஆசாரியனை நமஸ்கரிக்கும்போது இடவலக்கைகளை மாறி அவரது இரண்டு பாதங்களையுந்தொட்டு வணங்க வேண்டும். சாஸ்திரங்களை வாசிக்கத் தொடங்கும் போதெல்லாம் ஆசாரியனை முறைப்படி வணங்க வேண்டும். மாதாபிதாகுருவம்சத்தார்களிடத்தில் அடக்கமுடையவனாயிருந்துகுருவை வணங்கி வேதாத்திய யனஞ் செய்து கொண்டிருப்பவனே சிறந்த பிரமசாரியாவான். 

சத்தியம் பேசுதல்வேதத்தை மறவாமலோதல்நித்திய நைமித்திக கர்மங்களில ன்புடைமைபிட்சையெடுத்துண்ணுதலாதி ஒழுக்கங்களில் தவறாதிருத்தல் வேண்டும். பிட்சைபெடுப்பதற்குத் தகுந்த பிராமண கிருகங்களகப்படாத பட்சத்தில்மற்றைய வருணத்தார் வீட்டில் அரிசி பிக்ஷையெடுத்து ஆசிரியனுக்கும் கொடுத்துப் பின் தான் கிழக்கு நோக்கியுட்கார்ந்து புசிக்கவேண்டும். பிக்ஷை யெடுக்கும்போது பிராமண பிரமசாரி பவதிபிட்சாந்தேகி யென்றும்க்ஷத்திரியர் பிட்சாம்பவதி தேகியென்றும்வைசியர்கள் பிட்சாந்தேகி பவதியென்றும் கூறவேண்டும். வேதவத்தியயனந்தவிர வேறு மந்திரங்களை ஜபித்தல் கூடாது. இந்தப்பிரமசரிய ஒழுக்கம் தவறாமல் நடக்கும் போது பிரபஞ்சத்தில் வெறுப்புத் தோன்றினால் சந்நியாச ஆச்சிரமத்தை அடையலாம். இல்லாவிட்டால் கிருகஸ்தாச்சிரமத்தை அடையலாம். 

 

 

நான்காவது அத்தியாயம்.

கிருகஸ்தாச்சிரம தருமங் கூறியது.

 

பிரமசரிய விதிதவறாமல் நடந்து வேதமோதியபின்குருவினுடைய உத்தரவு பெற்றுக்கொண்டு சமாவர்த்தனஞ் செய்து முடிக்கவேண்டும். பின் தன்னுடைய கோத்தி ரத்துக்குத்தக்க உயர்ந்த குலத்திற் பிறந்துகுணங்களாலும் ஒழுக்கங்களினாலும் இல்லற தருமத்திற்குத் தகுந்த அழகிய ஒரு பெண்ணை வேதவிதிவழுவாமல் பாணிக் கிரகணம்புரிய வேண்டும்ஆறுமரம்நட்சத்திரம் முதலிய பேரில்லாதவளாயுமிருக்க வேண்டும். அந்தமாதை மணம் புரிந்துஅவுபாசனம் தவறாமல் செய்ய வேண்டும். சந்ததியை விரும்பி ருதுகாலத்தில் சங்கமஞ்செய்ய வேண்டும். தேவர்கள்அக்கினிஅதிதிகளை உத்தேசித்துச் சமையல் செய்தல்தர்மத்துக்காகச் சம்பாதித்தல்யாகஞ் செய்தல்யாகம் செய்வித்தல்வேத முணர்ந்த வைதிகரிடத்தில் தானமேற்றல்இவைகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு நடப்பவன் முத்தியடைவான். இவ்விதிக ளைக் கடந்து நடக்கிறவன் நரகத்தில் விழுவான். இனி இல்லத்திற்குரிய நித்திய விதிகளைக்கூறுவோம். 

 

விடிதற்கு முந்திய பிராமமுகூர்த்தத்தில் நித்திரையினின்று மெழுந்திருந்துதெய்வந்தொழுதுதருமத்தைச் சிந்தித்துசனங்கள் நடவாம லிருக்கிற இடத்தில்போய் மலஜலோபாதை நீக்கிக் கொண்டு சௌசம் முடித்துஆசமனம் செய்துபின் தந்த சுத்தி செய்து ஸ்நானஞ் செய்யவேண்டும். பிறகு காலைச்சந்தி செய்துபிராணாயாமஞ் செய்து காயித்திரியை ஜபித்துஉபத்தானம் பண்ணிச் சூரியனை வணங்கிப் பின் ஸ்ரீபரமேசுவரனைத் துதிக்கவேண்டும். இப்படித்தவறாமல் செய்பவனே கிருகஸ்ததர்ம முடையவனாவான். பின்னர் ஜீவனோபாய முயற்சியைச் செய்து மத்தியானத்தில் விதிப்படி மாத்தியானிக சந்தியும்பிரமயக்ஞ முதலிய பஞ்சமஹாயக்ஞங்களையும் செய்யவேண்டும். பிரமசாரிசந்நியாசி யிவர்களுக்குப் பிட்சையிட்டுஅதிதி பூசையுஞ் செய்து பின்னர்த் தான் புசிக்கவேண்டும். ஒருநாள் அவர்களுக்கு பிட்சையிடாமற் புசித்தால் சாந்திராயண விருத மிருக்கவேண்டும். சந்நியாசி கையிலிட்ட பிட்சை அக்ஷய பலனைத்தரும். அண்டத்தளவான முப்பத்திரண்டு கவளம் ஒரேதரமாகப் புசிக்க வேண்டும். சக்தியில்லாவிட்டால் இரண்டுதரம் புசிக்கலாம். மூன்றுதரம் புசித்தல் கூடவே கூடாது. உண்ணுதல்ஓமகாரியம்செபம்பெரியோரைப் பணிதல்ஆசமனஞ் செய்தலாதிகளில் உபவீதியாகவே யிருக்கவேண்டும். கையில் கமண்டலமும் மூங்கிற் றண்டமும் தரித்திருக்கவேண்டும்விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவுந் தரிக்கவேண்டும். விபூதியை விதிப்படி தரிக்கிறவன் சகலகரும பலன்களையும் குறைவாப் பெறுவான். வேதம் புகழ்ந்த விபூதியை அணியாதவன் பாதகனேயாவான். விபூதி ருத்திராட்ச தாரணம் செய்து கொண்டு சுந்தரமான சிவலிங்கத்தில் உமாதேவி யாரோடு ஸ்ரீபரமேசுவரனை யாவாகனம் செய்து பூசைசெய்யவேண்டும். அக்கினி காரியம் தவறாமல் செய்தால் பாவமெல்லா மொழியும்அந்தக்கரணங்கள் சுத்தியாகும். அதனாலே மெஞ்ஞானமுதிக்கும். காமியமாக யாகஞ்செய்தால் போகங்களுண்டாகும். நிஷ்காமியமாகச் செய்தால் மோட்சமுண்டாகும். பிதிர்க்கடன் தீர்ப்பதற்காகத் தன் மனைவியிடத்தில் புத்திரோத்பத்தி செய்யவேண்டும். பூததயவுள்ளவனாய் இல்லறம் புரியுங்காலையில் உலக இன்பத்தில் வெறுப்புவந்தால் சந்நியாசியாதல் வேண்டும். முத்திதரும் ஹம்ஸ வாசிரம சந்நியாசமே தகுதி. சக்தியில்லாதவர்கள் பகூதகம் குடீசகமென்னு மிரண்டிலொன்றை அநுஷ்டிக்கவேண்டும். வைராக்கிய மில்லாதவர்கள் வானப்பிரஸ்தாச் சிரமத்தை யடைய வேண்டும். அதுவும் முடியாதானால் இல்லறத்தி லேயே ஆயுசுபரிந்தமு மிருக்கலாம். அது பிரமசாரி முதன் மூவருக்கும் ஆதாரமா யிருத்தலால் நன்மையுள்ளதேயாம். 

 

 

ஐந்தாவது அத்தியாயம்.

வானப்பிரஸ்தாச்சிரம முரைத்தல்.

 

இல்லற தர்மத்தை வழுவாமல் நடத்தினபின் மனைவியைப் புத்திரனிடத்தி லொப்புவித்துவிட்டாவது தன்னுடன் அழைத்துக்கொண்டாவது உத்தராயணத்தில் பூர்வபட்சம்சுபவாரம் சுபமுகூர்த்தத்தில் வனம்புகவேண்டும். இயம நியமாதிகளை யுடையவனாய்க் கந்தமூல பலங்களால் பரமசிவனுக் காராதனை செய்து பின் புசிக்க வேண்டும். கிராமங்களிலிருந்து கொண்டு வந்த தானியங்களாற் சமைத்ததானால் அதில் பதினாறு கவளம் புசிக்கவேண்டும். சடைமுடிரித்தல்க்ஷெளரஞ்செய்யாதிருத் தல்நகத்தைவளர்த்தல்வேத மோதல்பஞ்ச மஹாயக்ஞம்புரிதல்மரவுரிதரித்தல்முப்பொழுதும் நீராடுதல்ஜீவகாருண்யம் இவைகளைத்தவறாமல் அனுஷ்டித்தல்வானப் பிரஸ்தருக் குரிய தருமமாகும். தானம் வாங்குதல்புலாலுண்ணல்மதுவருந்தல்இரண்டாந் தம் புசித்தலாதிய ஒருபோதுஞ் செய்யத்தகாது. பூமியிற் படுத்தல்பொறியடக்கல்சிவபெருமானைத் தியானித்தலாதி தர்மங்கள் அவசியமாம். காம வெகுளி மயக்கமொழிந்துபிராஜபத்திமம்கிருச்சிரமம்சாந்திராயணம் முதலிய நோன்புகளை சமர்ப்பித்தல்வேண்டும். கோடைகாலத்தில் பஞ்சாக்கினிக்கு மத்தியிலும்கார்காலத்தில் வெறு வெளியிலிருந்தும்பனிகாலத்தில் நீரிலிருந்தும்நனைந்த வஸ்திரமுடுத்தும். தவம்புரிய வேண்டும். தேவபிதிர்களுக்கு முப்போதும் தவறாமல் தர்ப்பணஞ் செய்ய வேண்டும். தவஞ்செய்யும் போது பூர்வபட்சத்தில் வாயுபட்சணஞ் செய்தும்ஒருகாலில் நின்றும் பாலையருந்தியும் தபம் செய்யவேண்டும். அமரபட்சத்தில்கோமயாச மருந்தித் தவம் புரியவேண்டும். சருகும் உண்ணலாம். மான்றோலணிதல்உபவீதந்தரித்தல்வேதோபநிஷத்துக்களை யோதல் யோகம் பயிலுதலாதி வானப்பிரஸ்த்த தருமமாகும். 

 

ஓமபாத்திரங்களரி தாயின்அக்கினியை ஆத்மாவி லனுசந் தானஞ்செய்து கொள்ள வேண்டும். எப்பொழுதுஞ் சிவத்தியானஞ் செய்துகொண் டிருக்க வேண்டும். இவ்வாறு வானப்பிரஸ்தாச் சிரமத்தை நிறை வேற்றி விரக்தியடைந்து சந்நியாச பேதங் களுள் தனக்கிசைந்த தொன்றைப்பற்றிக் கொள்ள வேண்டும். 

 

 

ஆறவது அத்தியாயம்.

சந்நியாசம் உரைத்தல்.

 

முனீசுவரர்களே! வானப்பிரஸ்ததர்மத்தைச் சொன்னேன். இனி சந்நியாச தர்மத்தைச் சொல்கிறேன் கேளுங்கள் என்று சூதமுனிவர் சொல்லுகிறார். சந்நியாச மானது. குடீசம்பகூதம்ஹம்ஸம்பரமஹம்ஸம் என்று நாலுவகைப்படும்குடீசகமாவது சந்நியாசம் செய்து கொண்டவன் தன் கிருகத்திலாவது பிறர் மனைகளிலாவது பிக்ஷையெடுத்து மிதமாய்ப் புசிக்கவேண்டும். சிகைதரித்தல்பூணூல் புனைதல்காஷாய வஸ்திரம் அணிதல்திரிதண்டம் தரித்தல்காயத்திரி ஜபம் பண்ணுதல்சிவபூசை செய்தலாதி தர்மம் குடீசகனுக் குரியவைகளாம். 

 

புத்திரகளத்திராதி பந்துக்களைத் துறத்தல்திரிதண்டம் கமண்டலம் தரித்தல்கிருஷ்ணாஜினம்உத்தரீயம்யோகபட்டைபோர்வைகோவணம் மிதியடிஊசிசூத்திரக்கயிறுஅரிவாள்மண்வெட்டி முதலியவைகளை உடையவனா யிருக்கிறதுவிபூதி உத்தூளனம் செய்தல்திரிபுண்டரம் தரித்தல்சிகைஉபவீதம் கொள்ளுதல்கோபம்காமம்மயக்கம் முதலிய குற்றங்களை ஒழித்திருத்தல்முப்பொழுதும் சந்தியாவந்தனம் செய்து காயத்திரி ஜபம் செய்தல்சிவபூஜை சிவத்தியானங்கள் செய்தல்ஏழு கிருகத்தில் பிக்ஷையெடுத்துப் புசித்தலாதி தர்மங்கள் பகூதகனுக் குரியவைகளாம. 

 

கமண்டலங் கொள்ளல்ந்தை புனைதல்கோவணம் தரித்தல்பிட்சாபாத்திரம் உடையவனாதல்மூங்கில் தண்டம்உத்தரீயம் தரித்தல்விபூதி உத்தூளனம் செய்து கொள்ளல்திரிபுண்டரம் புனைதல்சிரோமுண்டனம் செய்து கொள்ளுதல்எட்டுக் கவளம் அன்னம் மாத்திரம் உண்ணுதல்மூன்று காலங்களிலும் சந்தியாவந்தனம் செய்து சாவித்திரியை ஜபித்தல்ஆத்மவிசாரணை செய்தல்தீர்த்தயாத்திரை செய்தல்சாந்திராயணம் கிருச்சிரம் முதலிய நோன்புகள் செய்தல்ஒர் ஊரில் ஒரே நாளிருத்தல்சிவபூஜை செய்தல் முதலியவை ஹம்ஸனுக்குரிய தர்மங்களாம். 

 

பரமஹம்ஸ விதியாவது விபூதி உத்தூளனம் கொண்டு திரிபுண்டரம் தரித்தல்பசுவின் வால்மயிரால் செய்த கயிறு கொள்ளல்கரகம்மான் தோல்அரிவாள்மண்வெட்டியோகபட்டைஉத்தரீயம்கந்தைவஸ்திரம்ஊசி இவைகளை உடையவனா யிருத்தல்மிதியடிகுடைமூங்கில் தண்டம்ஜபமாலைகோவணம்பூணூல் சிகைகளை ஒழித்தல்மண்ணால் செய்த பாத்திரம்ப்பாத்திரம்வெண்கலப் பாத்திரம்மூங்கில் குழாயாகிய பாத்திரம் இவைகளில் ஒன்றை உடையவனா யிருப் பதுசிவதியானம் செய்தல் முதலியனவாம். 

 

பகூதகன்ஹம்ஸன் இவ்விருவரும் மண்பாத்திரமே தரித்தல் வேண்டும். பரமஹம்ஸன் பிட்சையெடுத்துண்பதே தகுதிகறிவகை முதலியவற்றொடு புசித்தால் அவனுடைய அவனுடைய தவநிலை கெடும். குறைந்த அன்னத்தைப் புசித்தால் சரீரம் தளர்ச்சியடையும். ஆகையால் யோகத்துக்கு இடையூறு வாராதபடி தகுந்த போஜனம் செய்யவேண்டும். குருசேவை செய்தல்ஞான நூல் களிற் பழகுதல்சவுசம் தியான மிவைகளைத் தவறாமல் செய்தல் வேண்டும். பொய்காமம்கோபம்மாற்சரியம்லோபம்மோகம்அகங்காரம் முதலியவற்றை ஒழிக்கவேண்டும். ஜீவ இம்சை செய்தல் கூடாது. சாதுர்மாசிய நோன்பு செய்ய வேண்டும். குடீசகன், பகூதகன்ஹம்ஸன் மூவரும் காயத்திரியை ஜபிக்க வேண்டும். பிரணவமந்திரத்தால் பிராணாயாமம் ஆறுதடவை செய்ய வேண்டும். பிரணவமந்திரத்தை நூற்றெட்டுதரம் ஜபிக்க வேண்டும். ஏகாந்தமான ஏகாந்தமான இடத்திலிருந்து கொண்டு சமாதி செய்ய வேண்டும். இந்தத் தருமங்களினின்று தவறி வேறு நெறிகளைக் கைக்கொண்டவன் பதிதனாய் நரகத்தை அடைவான். 

 

உத்தம சந்நியாசி சூரியமண்டலத்தைப் பிளந்து கொண்டு போய்ப் பிரமபதத்தை அடைவான். ஆகையால் சூரியன் அவனைக்கண்டு அஞ்சுவான். அப்படிப்பட்ட சந்நியாசி தங்கினவீட்டில் இலட்சுமி நீங்காமல் வசிப்பாள். அந்த வீட்டில் சகல ஐசுவரியங்களும் நிறைந்திருக்கும். சந்நியாசி விதிதவறி யிருந்தாலும்நெறி தவறி நடந்தாலும் சந்நியாச வேஷத்திற்காக அவனை எல்லாரும் வணங்க வேண்டும். பிரமசாரிக்குப் பிரமதேவனே தெய்வமாகும். கிருகஸ்தாச் சிரமத்தாருக்கு விஷ்ணுதெய்வம். வானப்பிரஸ்தனுக்குச் சூரியன் தெய்வம். சந்நியாசிக்குப் பரமசிவனே தெய்வம். ஆகையால் சந்நியாசி ஆச்சிரமம் மிகவும் சிறந்தது. பரமஹம்ஸனாகிய சந்நியாசியின் உடலைச் சமாதி செய்ய வேண்டும். எரிக்கக் கூடாது. அவனுக்கு அபரகிரியைகள் கிடையா. அவனுடைய புத்திரகளத்திரம் முதலியவர்களுக்கு ஆசௌசமும் இல்லை. சந்நியாசியைச் சமாதி செய்த இடத்தில் அரசுவைத்து வளர்க்கவேண்டும். அப்படிச் செய்தல் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்குச் சமானமாகும். சமாதிசெய்யுங்காலத்தில் அவனுடைய சரீரத்தைப் பரிசித்தாலும்தரிசித்தாலும் சகலபாவங்களும் நீங்கும். குடீசகன்   பகூதகன்ஹம்ஸன் இவர்களுக்கு வேதவிதிப்படி சமாதி செய்தவன்முறைப்படி தகனம் செய்யவேண்டும். இந்த அபரக்கிரியைகளைச் செய்கிற கிருகஸ்தன் அசுவமேதம் செய்த பலனடைவான். 

 

 

ஏழாவது அத்தியாயம்.

பிராயச்சித்த முரைத்தல்.

 

முனிவர்களே! இனிப்பிராயச்சித்த முறைகளைக் கேளுங்கள். பிராமணரைக் கொன்றவன்மதுபானம் செய்தவன்சொர்ணத்தைத் திருடினவன்குருதல்பகமனம் செய்தவன் இவர்கள் மஹா பாதகரென்னப்படுவார்கள். இவர்களுடன் சகவாசம் செய்தவர்களும் மஹாபாதகர்களே. அறியாமல் பிரமஹத்தி செய்தவன் தன் இழிந்த செய்கையை எல்லாருக்கும் சொல்லிவனத்திற்குச் சென்று சருகுமுதலியவற்றைப் புசித்துமண்டையோட்டில் பிக்ஷையெடுத்துச் சாப்பிட்டுப்பரமேசுவரன் பாதகமலங்களைச் சிந்தித்துக்கொண்டு பன்னிரண்டு வருஷம் நோற்றால் பரிசுத்தனா வான். அறிந்து பிரமஹத்தி செய்தவன் நகரத்துக்கு வெளியில் தீவளர்த்துப் பரமசிவ னைச் சிந்தித்துக்கொண்டு அந்தத் தீயில் குதிக்கவேண்டும். அப்படிச் செய்ய முடியாவிட்டால் உபவாசமிருத்தல்விரதமிருத்தல்யுத்தம் செய்தல்ஆறுகளில் விழுதல்மஹாப் பிரஸ்தானம் செய்தல்பிராமணர் பசு இவர்களின் நிமித்தமாயாவது பிராணனை விட்டால் பரிசுத்தனாவான். கள் குடித்தவன் அந்தக்கள்ளையே கொதிக்கக் காய்ச்சிப்பரமசிவனைத் தியானம் பண்ணிக்கொண்டு குடித்துச் சீவனை விடவேண்டும். அல்லது பசுவின் சிறுநீர்கோமயச்சாறுநெய்ஜலம் இவைகளில் ஒன்றைக் கொதிப்பித்துக் குடித்து மரணமடையவேண்டும். பொன்னைக் களவுசெய்தவன் ஒரு இரும்புத் தண்டம் செய்து அதை அரசன் கையில் கொடுத்துத் தன்பாவத்தை அவனிடம் கூறிஅந்தத் தண்டத்தால் தன் தலைமேல் அடிக்கச்சொல்லி அதனால் உயிர்விட்டால் பாவந்தீரும். இப்படிச்செய்ய முடியாவிட்டால் பிரமஹத்தி செய்தவனுக்கு விதித்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். அதுவும் செய்யமுடியாவிட்டால் இராஜாக்கள் அசுவமேதயாகம் செய்து அவபிருதஸ்நானம் செய்யும் போது ஸ்நானம் செய்ய வேண்டும். அது முடியா விட்டால் தன் நிறைக்குச் சரியான பொன்னை மறையவர்க்குத் தானம் செய்ய வேண்டும். குருதல்பகமனம் செய்தவன்மனம் வருந்திஇரும்பினால் குருபத்தினியின் உருவம் செய்துஅதைத் தணல்மயமாகக் காய்ச்சிச்சிவபெருமானைச் சிந்தனை செய்து கொண்டு அந்த உருவத்தை அணைந்து ஜீவனைவிடவேண்டும். அதுசெய்யமுடியாவிட்டால் ஆண்குறியை அறுத்துவிட்டுத் தென்திசை நோக்கிச்சென்று ஜீவனை விடவேண்டும்இவைகளாலன்றி வேறு எவ்வகையினாலும் அந்தப்பாவ மொழியாது. இவர்களோடு கூடினவர்களும் இந்தப்பிராயச் சித்தமே செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தீயிலாவது நீரிலாவது விழுந்து ஜீவனைவிடவேண்டும்

 

குருவுக்குக் கெடுதி செய்தவன் பிரமஹத்தி செய்தவனுக்குச் சொன்ன பிராயச்சித்தத்தைச் செய்து கொள்ள வேண்டும். கிருச்சிரம் சாந்திராயணம் முதலிய விரதம் அனுஷ்டித்தல்அசுவமேத யாகத்தில் அவபிருதஸ்நானம் செய்தலாதிகளில் ஒன்று செய்தல் வேண்டும். மகனுடைய மனைவிதன்னுடன் பிறந்தவள்தன் மகள் இவர்களைக் கலந்தவன் தீக்குதித்து மரிக்கவேண்டும். தன் சகோதரிமகள்சகோதரன் மனைவி யிவர்களைக்கூடினவன் பன்னிரண்டு சாந்திராயணம் செய்ய வேண்டும். தாயின் சகோதரி புத்திரியைக் கலந்தவன் தீக்குதிக்கவேண்டும். ஈனஜாதிப் பெண்களைக் கலந்தவன் சாந்திராயணம் கிருச்சிரம் முதலிய நோற்றல் வேண்டும். கன்னிகையைக் கலந்தவன் சாந்திராயணவிரதம் அனுஷ்டிக்கவேண்டும். பிரமசாரிக்கு விபசாரதோஷம் நேர்ந்தால்அவன் கழுதையின் தோலைப்போர்த்துக்கொண்டுதன் குற்றத்தை யெல்லா ர்க்குஞ் சொல்லிஎழுவீட்டில் பிச்சையெடுத்துப் புசித்து ஒருவருஷம் சஞ்சரிக்க வேண்டும். மாமிசம் புசித்தவர் பன்னிரண்டு நாள் உணவு ஒழித்திருத்தல்சாந்திராயண மிருத்தல் இவைகளைச் செய்ய வேண்டும். கடவுளுக்கு நைவேத்தியம் செய்யாமல் புகித்தவர் கிருச்சிரம்செய்யவேண்டும். அக்கினியை ஆராதியாமல் புசித்தவர்ஈனகுலத் தார் வீட்டிற் புசித்தவர்சிராத்தத்திற் புசித்தவர்ஆசௌசமுடையார் வீட்டில் புசித்தவர் இவர்கள் கிருச்சிரம் செய்ய வேண்டும். சண்டாளர்கொடிய செய்கையுடையவர்பூத்தமாதர் இவர்களைப்பார்த்தவர் மூன்று நாள் உபவாசமிருந்து பஞ்சகௌவியம் அருந்தவேண்டும். முனிவரையும்பெரியோரையும்நல்லோரையும்கற்புடைய மாதரையும் தூஷித்தவர்கள் எரிகொள்ளியால் நாக்கைச் சுட்டுக் கொள்ள வேண்டும். சந்நியாசி பெண்களைக்கூட எண்ணினால் அவகீர்ணவிரதமிருத்தல் வேண்டும். மறதி யால் அந்த எண்ணம் உண்டானால் கிருச்சிரவிரதம் செய்ய வேண்டும். வேதத்தை நிந்தித்தவனும்விதிதவறினவனும்விலக்குக்ளைச்செய்தவனும் தப்தகிருச்சிர விரத மிருக்கவேண்டும். மற்றுமுள்ள பாவங்களுக்கு ஸ்மிருதிகளிற் கூறிய பிராயச்சித் தங்களை யுணர்ந்து செய்து கொள்ளவேண்டும். 

 

இந்தப் பிராயச்சித்தங்கள் எல்லாவற்றிற்கும் மேலான பிராயச்சித்தம் ஞானத்தையடைதல். அந்த ஞானத்தைப் பெறுவதற்குப் பக்திசாந்திதாந்திமுதலிய குணங்களையுடைய வனாய்க் குருசேவை செய்துகுருபணி விடையில் சிரத்தையுடை யவனாய் வேதாந்த சிரவணம் செய்யவேண்டும். வேதாந்த சிரவணத்தால் உண்டாகிற ஞானமே அக்கினியாய்ச் சகலபாவங்களையும் தகித்து விடும். மூன்று மாதம் வேதாந்த சிரவணம் செய்தால் சூட்சும பாதகங்கள் நசிக்கும். ஆறு மாதம் செய்தால் உபபாதகம் ஒழியும். ஒருவருஷம் வேதாந்த சிரவணம் செய்தால் மஹாபாதங்கள் தீரும். வேதாந்த நெறியை அனுஷ்டிக்கிறவன் சமுசாரக்கடலைத் தாண்டி முத்திக்கரையை அடைவான். அனுஷ்டிக்கிறபோது தவறு நேர்ந்தால் அவன் சொர்க்கத்தை அடைவான். பிறகு பூமி யில் ஒருதரம் உயர்ந்த குலத்தில் பிறந்துகுருவருள் பெற்றுப் பந்தம் ஒழிந்து பரசிவனுடைய திருவடி நிழலாகியமுத்தியை அடைவான். 

 

 

எட்டாவது அத்தியாயம்.

தானபலம் உரைத்தல்.

 

முனிவர்களே! அஞ்ஞானத்தை ஒழித்துமெய்ஞ்ஞானத்தைக் கொடுத்துமுக்தி யின்பத்தையும் தருதலால் வித்தியாதானமே எல்லாத்தானங்களிலும் சிறந்தது. அன்னதானம்கோதானம்பூதானம்கன்னிகாதானம் இவைகளும் சிறந்தனவேயாம். சிவபக்தர்களுக்குப் பூதானம் செய்தவன் உலகத்தில் பெருமையாக வாழ்ந்துபிறகு சொர்க்க இன்பத்தை அனுபவித்துஅதன் பின் மோட்சத்தை அடைவான். ஞானிகளுக்கு மனமகிழ்ச்சியுடன் கொஞ்சமாவது பூதானம் செய்தவன் நிச்சயமாக மோட்சத்தை அடைவான். வித்தியாதானம் செய்தவனுக்குப் பிறப்பே யில்லை. சந்நியாசிகளுக்கு அன்னமும் நீரும் கொடுத்தவன்மடம் கட்டிவைத்தவன் மேலான கதியை அடைவான். 

 

அமாவாசிபையில் நிஷ்காமிய் சித்தனாய் அந்தணர்க்கு அன்ன மிட்டவன் சிவபெருமானுடைய சாரூபமுத்தியை அல் டைவான். கிருஷ்ணபட்சம் சதுர்த்தசியில் பிராமணர்களைப் பரமசிவனாகப் பாவித்து அன்னமிட்டவன் கன்மபந்தமொழிந்து மோட்சம் அடைவான். திரயோதசியில் வேதியர்க்கன்ன மிட்டவன் பூலோகத்தில் பெருவாழ்வு வாழ்ந்து பிறகு பிரிமலோகத்தைப்பெறுவான். துவாதசியில் பிராமணர் களை விஷ்ணுவாகக்கருதி அவர்களுக்கு அன்னமிட்டவன் தேவனாய் வாழ்ந்து பின் வைகுந்தத்தை அடைவான். ஏகாதசி தினம் உபவாசமிருந்து துவாதசிதினம் விஷ்ணு சொரூபமாகக்கருதிப் பிராமணர்களுக்கு அன்னமிட்டவன் சகலபாவங்களினின்றும் விடுபடுவான். தசமிமி திதியில் பிராமணர்களை யிந்திரனாகப் பாவித்து அன்னமிட்ட வன் தேவனாய் இந்திர லோகத்தில் வாழ்வான். நவமி திதியில் எமனைச் சிந்தித்துப் பிராமணர்களுக்கு அன்னமிட்டால் எமன் எப்போதும் அவர்களிடம் மகிழ்ச்சி யுடையவ னா யிருப்பான். அஷ்டமியில் ஸ்ரீபரமேசுவரனை உத்தேசித்து வேதியர்க்கு அன்னமிட்டவன் சகல பாவங்களும் ஒழிந்து ஈசன் திருவடியை அடைவான். சப்தமியில் சந்திரனை உத்தேசித்து வேதியர்க்கு அன்னமிட்டவன் உலகத்தில் சிறந்து வாழ்ந்து பின் சந்திரலோகத்தை அடை.வான் ஷஷ்டி திதியில் சூரியனைக்கருதி அந்தணர்க்கு அன்னமிட்டவன் ஒளிரூபமுடையவனாய்ச் சூரியலோகத்தை அடைவான். பஞ்சமி திதியில் உமா தேவிபைச் சிந்தித்து வேதியர்க்கு அன்னமிட்டவன் சகல பாவங்களு மொழிந்து தத்துவஞானத்தைப் பெறுவான். சதுர்த்தியில் இலட்சுமியை உத்தேசித்து மறையவர்களுக்கு அன்னமிட்டவன் எந்தாளும் அழியாத செல்வத்தை அடைவான். திரிதியையில் பிராமணர்களுக்கு அன்னமிட்டால் மும்மூர்த்திகளும் அவனுக்கு அனுக்கிரகம் செய்வார்கள். துவிதியையில் வேதியர்க்கு அன்னமிட்டால் அவனிடத்தில் சகல வேதங்களும் நிறைந்திருக்கும். பிரதமையில் அன்னமிட்டவன் மெய்ஞ்ஞானத் தைப் பெற்று மோட்சத்தை அடைவான்.

 

பிராமணர்களுக்குப் பசுதானம் செய்தவன் முத்தியடைவான். கன்னிகாதானம் செய்தவன் சிவலோகத்தை அடைவான். எந்தத் தேவரைக்குறித்து எவ்வகையான தானம் செய்தாலும் அந்தந் தத்தேவர்களுடைய கருணையை அவன் அடைவான். தான் எந்தத்தெய்வத்தின் கருணையைப் பெற விரும்புகிறானோ அந்தத்தெய்வ சொரூபமாகப் பாவித்து ஞானியை வணங்கவேண்டும். புழு முதலிய சீவன்களை விட மிருகமாதி ஜீவன்கள் சிறந்தன. அவற்றை விடமனிதர் மேலானவர். அவர்களுக்குள் பிராமணர்கள் மேலானவர்கள். அவர்களை விட அறிவுள்ள அந்தணர் சிறந்தவர்கள். அவர்களைப் பார்க்கிலும் குடீசக கூதர்கள் மேலானவர்கள். பகூதரைவிட ஹம்ஸர் சிறந்தவர்கள். பரமஹம்ஸர் அவர்கள் எல்லாரினும் அதிகமானவர்கள். இவர்களைவிட ஆத்மஞானி கள் சிறந்தவர்கள். ஆகையால் முத்தி விருப்பமுள்ளவர்கள் அந்த ஞானிகளை வணங்க வேண்டும். பிரமதேஜசை அடைய விரும்புகிறவர்கள் சிவபக்தியுள்ள வேதியரை வணங்க வேண்டும். வியாதியில்லாமல் இருப்பதற்குச் சூரியனை வணங்கவேண்டும். பலத்தை அடைய விரும்புகிறவர்கள் வாயுதேவனையும்கீர்த்தியை அடைய விரும்பு வோர் அக்கினிதேவனையும்நல்ல அறிவை பெறுவதற்குச் சரஸ்வதியம்மனையும்ஞானத்தை அடைவதற்கு உமாதேவியையும்கருமசித்தி அடைவதற்கு விநாயகரை யும், போகத்தையடைவதற்குச் சந்திரனையும்பொறுமையைப் பெறுவதற்குச் சிவபெரு மானையும் வணங்கவேண்டும். வைராக்கியம் அடைவதற்கு இந்திரனைத் துதிக்க வேண்டும். சிவபூசையை விதிப்படி செய்கிறவர்களுக்கு எல்லாம் எளிதில் கிடைக்கும். சோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்கிறவன் தேவனாவான்

 

சதருத்திரம்சமகம்புருஷசூக்தம்பஞ்சாட்சரம்இவைகளை ஜபிக்கிறவன் சகலபாவங்களும் ஒழிந்துஇருபத்தொருதலை முறைகளுடன் சிவலோகம் அடைந்துவிரும்பின போகங்களை நுகர்ந்துஅவ்விடத்தில் அநேக கற்பகாலம் வசித்துப்பிறகு பூமியிற் பிறந்து மெய்ஞ்ஞானத்தைப் பெற்றுச் சாயுஜ்ய முத்தியைப் பெறுவான். இன்பமல்லாதவைகளை யின்பமென்று கருதி அவைகளைப் பெற முயன்று வருந்துகிற வர்கள் கனியிருக்கக் காய்களைப் பெறுவார்க்குச் சமானமாவார்கள். அழியாத முத்தியின்பமிருக்க அதைவிட்டுஉலக இன்பங்களை அடைய விரும்புவது ஆச்சரி யமே. 

 

 

ஒன்பதாவது அத்தியாயம்.

பாவப்பயன் கூறியது.

 

இனி பாவத்தின்பயனைச் சொல்லுகிறேன் கேளுங்கள். பிராமணனைக் கொன்றவன் கழுதைஒட்டகம்பன்றியானைகுதிரைமான்பறவைகள் முதலிய ஜனனங்களை யெடுத்துவருந்துவான். மதுபானம் பண்ணினவன் லம் புசித்துச் சீவிக்கும் பிராணிகளாகவும்பட்சிகளாகவும்புழுக்களாகவும் பிறப்பான். குரு தல்பகமனம் செய்தவன் அரக்கன்பேய்திருடன்பன்றிபறவை முதலிய ஜனனங்களை யெடுத்து வருந்துவான். வேதியருடைய பொருளை அபகரித்தவன் பிரமராட்சதனாகவும்தானியங்களைத் திருடினவன் பெருச்சாளியாகவும் பிறப்பான். நெய்யைத் திருடினவன் கீரிப்பிள்ளையாய் ஜனிப்பான். பாலைத்திருடினவன் காக்கையா ய்ப் பிறப்பான். பருத்தி முதலிய நூல்களைத் திருடினவன் சிச்சிலிக் குருவியாவான். புஷ்பங்களைத் திருடினவன் நாயாவான். கனிகளைத் திருடினவன் குரங்காகப் பிறப்பான்சிவனையும் குருவையும் நிந்தித்தவன் மலத்திற் பிறக்கும் புழுவாவான். முயலக நோயாலும் வருந்துவான். குருவைக்கோபித்தவன் கபலநோயுடையவனா வான். கற்புடைய மனைவியை விட்டவன் கண்டமாலையுடையவனாவான். பசித் திருப்பவர்களுக்கு அன்னமிடாமல் புசித்தவன் மார்நோயுடையவனாவான். சுற்றத்தார் க்கு வஞ்சனை செய்து புசிப்பவன் குன்மநோயுடையவனாவான். தேவாலயப் பொருளைத் திருடினவன் பாம்பாவான்நல்லவர்களுக்குக் கொடாதவன் வலையனா வான். சோலைகளை யழித்தவன் உறுப்புகள் அழுகும்படியான தொழுநோயுடைய வனாவான். அன்னியஸ்திரீகளைக் கலந்தவன் நாயாய்ப்பிறப்பான்.வியாதிக்காரர்களை ஆதரியாதவன் கண்ணோயுடையவனாவான். பசுவை வதைத்தவன் பிறவிக்குருடனா வான். எழைகளை வருத்தினவன் கைகால் முடமாய்ப் பிறப்பான். சிவனடியாரைக் கோபித்தவன் தொழுநோயுடையவனாவான். கொண்டவிரதத்தை விட்டவன் வீடில்லாமல் வருந்துவன். பெரியோர்க்கு மரியாதை செய்யாதவனும் தாய் தந்தையர் களை மரியாதையின்றி அவமதித்தவனும் தரித்திரனாவான். தன் ஒழுக்கத்தை விட்டவன் அளவில்லாத துன்பத்தை அடைவான். 

 

இப்படிப்பட்ட பாவிகளுக்கு ஆயுசுமுடியுங்காலத்தில் எமதூதர்கள் வந்து பாசத்தால் கட்டிக்கொண்டுபோய்ச் சூலத்தாற் குத்தி எமனிடம் கொண்டு போவார்கள்எமதருமராஜன் அவர்களைக் கண்டதும் மஹாகோப முடையவனாய்ப் பற்களை நெறநெற வென்று கடித்துஉதட்டை மடித்துக்கொண்டுகண்களில் அக்கினிப்பொறி பறக்கப் பார்த்து மஹா பாவிகளே! நீங்கள் தேடின திரவியம் எங்கேயானை குதிரை இரதங்கள் எங்கே! காணி பூமிகள் எங்கே! அடிமைகள் பங்கே! மனைவி மக்கள் எங்கே! இவைகளை எப்படி விட்டு வந்தீர்கள்! பெரியோர் கூறிய உபதேசமொழிகளை அவமதித்தீர்கள். சிவபெருமான் திருவடியை வணங்காமல் விட்டீர்கள். நீங்கள்! மனிதராய்ப் பிறந்து என்ன காரியம் செய்தீர்கள்அநேகமான கொடியபாவங்களை மூட்டைகளாகக் கட்டிக் கொண்டீர்கள். தருமத்தைக் கொஞ்சம் கூடச் செய்யாமற் போ னீர்கள் என்று சீமிச் சித்திரகுப்தன் முகத்தைப்பார்ப்பான். சித்திரகுப்தன் அந்தப் பாவிகள் தினந்தோறும் செய்த பாவங்களை வாசித்துச் சொல்லுவான். அப்போது எமன் கடுங்கோ பங்கொண்டு கிங்கரர்களை நோக்கி இந்தப்பாவிகளைத் தக்கபடி தண்டியுங்கள் என்று சொல்லுவான். 

 

மகிங்கரர்கள் கோபாவேச முடையவர்களாய் இருப்பு உலக்கைகளினாலே யிரத்தக்தெறிக்க மொத்துவார்கள். எலும்புகள் நொறுங்கக் குத்துவார்கள். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு நெருப்பு மூட்டி வதக்குவார்கள். முட்களுள்ள கதைகளால் மண்டையி லடிப்பார்கள். நாய்களை விட்டுக் கடித்து இழுக்கச் செய்வார்கள். வேங்கைப் புலிகளை மேலே பாய்ந்து கிழிக்கும்படி ஏவுவார்கள். புழுக்களுடன் கூடிய மலக்குழி யில் தள்ளி அழுத்துவார்கள் உருகிய செம்பு நீரை வாயில் ஊற்றுவார்கள். ஈயத்தை உருக்கி முகத்தில் விடுவார்கள். பழுக்கக்காய்ந்த ஈட்டியால் குத்துவார்கள். சிலரைத் துண்டு துண்டுகளாக வெட்டிக் காய்ந்த தைலத்தில் இட்டுப் பொரிப்பார்கள். பருந்து முதலான பரவைகளை விட்டுச் சரீரத்தைக் கொத்தச் செய்வார்கள். வாளாயுதத்தால் வெட்டுவார்கள். தீயிலே காய்ந்த இருப்புக் கம்பிகளைக் காதிலும் வாயிலும் செலுத்துவார்கள். ஏழைக்கொடுத்துப் பானஞ்செய்என்று அடிப்பார்கள். கைமுட்டிகளால் புடைப்பார்கள். அன்னிய ஸ்திரீகளைக் கூடினபாதகனை அதிகோரம் என்கிற நரகத்தில் தள்ளுவார்கள். மதுபானம் பண்ணினவர்களுடைய நாக்கை அறுத்து அக்கினித் தண்ணீரை வாயில் ஊற்றுவார்கள். குருபத்தினியைச் சேர்ந்தவனை மலக்குழியில் அமிழ்த்துவார்கள். அன்னை பிதா குரு தெய்வம் இவர்களை நிந்தித்தவர்களை தீநரகத்தில் அநேகநாள் வருந்தும்படித் தள்ளுவார்கள். சந்நியாசிகளுக்கு பிட்சையிடாத வர்களை கரும்பாலையில் இட்டு அரைப்பார்கள்கணவனையிகழ்ந்து மற்றொருவ னைச் சேர்ந்தஸ்திரீயைப் பழுக்கக்காய்ந்திருக்கிற இருப்புவடிவத்தைத் தழுவும்படி செய்வார்கள். தன்மனைவியை வஞ்சித்துப் பரதாரகமனம் செய்தபுருஷனையும் இரும்பினாற்செய்து காய்ந்திருக்கிற பெண்ணுருவத்தைத் தழுவும்படி செய்வார்கள். வேதம்கூறிய கருமங்களை விலக்கிவேறுகருமங்கள் செய்வோரையும் நெடுங்காலம் தீரகத்தில் கிடக்கும்படி செய்வார்கள். தடாகம் கிணறு தேவாலயம் முதலியவற்றை அசுத்தப் படுத்தினவர்களைக் கரும்பாலையில் இட்டு அரைத்துகும்பிநரகத்தில் சூரியன் உள்ளவரைக்கும் தள்ளிவைப்பார்கள். பெரியோரை நிந்தித்தவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய வாயிலும் காதிலும் நெருப்பிற்காய்ந்த இருப்புச் சலாகை களை யிட்டுக் குடைவார்கள். இப்படிப் பாவிகளைத் தண்டித்து இருபத்து எட்டுக்கோடி நரகங்களிலும் தள்ளுவார்கள். பாவிகளுடைய துன்பத்தை யெடுத்துச் சொல்ல எவராலுமாகாது. மங்கைபங்காளனாகிய சிவபெருமான் திருவடிக்குப் பத்தி செய்யாமல் இப்படிப்பட்ட நரக துன்பத்தை அடைகிறது என்ன ஆச்சரியம்! கங்கைமுதலான புண்ணிய தீர்த்தங்களும் இருக்கமானிடர் நரகத்தில் வருந்துகிறது அநியாயமேயாம். இந்தப்பாவிகள் நெடுங்காலம் நரக துன்பங்களை அனுபவித்துப்பின் பூலோகத்தில் பலவகை ஜனனங்களை யெடுத்து வருந்திக் கடையில் மானிட ஜன்மத்தை அடைவார் கள். 

 

 

பத்தாவது அத்தியாயம்.

சரீரோத்பத்தி கூறியது.

 

      புண்ணிய பாவங்களைச் செய்த ஜீவாத்மாக்கள் மறுபடியும் சரீரமெடுக்கும் வகையைச் சொல்லுகின்றேன் கேளுங்கள். தானம் செய்து புண்ணியம் அடைந்தவர்கள் தேவராவார்கள். பாவத்தைச் செய்தவர்கள் மரம் முதலிய ஜன்மங்களை யெடுப்பார்கள். பாவபுண்ணியங்களைச் சமமாக உடையவர்கள் மனிதராய் பிறப்பார்கள். யாகத்தினால் கிழ்ந்த சூரியன் மழை பெய்வான். மழையினால் பயிர்கள் விருத்தியாகும். அப்பயிரின்பலனும் மழையும் சேர்ந்து பூர்வகர்மத்துக் கேற்றபடி ஜீவாத்மாக்களுக்கு உணவாகும் உணவிலிருந்து சரீரத்தின் தோல் முதலியவை வுண்டாகும். பூத சாரம் சூட்சுமம்ஸ்தூலம் என்று இருவகையாம். சாத்துவிதபாகத்திலிருந்து பூமிதத்துவம் கிராணத்தையும் அபானனையு முண்டாக்கும். அப்பு உபஸ்தம் இரசமிவைகளை யுண்டாக்கும். அக்கினி வாக்கையும் கண்களையும் உற்பத்தியாக்கும். வாயு தொக்கு பாணிகளை யுண்டாக்கும். ஆகாசம்பாதம் சுரோத்திரம் இவைகளையும் உற்பத்தியாக் கும். வாயு தொக்குபாணிகளை யுண்டாக்கும். ஆகாசம்பாதம் சுரோத்திரம் இவைகளை விருத்தி செய்யும். அவற்றுள் பூமி மனதையும்அப்பு பிராணவாயுவையும்அக்கினி வாக்கினையும்வாயு பிராணவாயுவின் மூலத்தையும்ஆகாசம் பாதமூலத்தையும் முக்கியமாக உற்பத்தியாக்கும். இராஜசப் பகுதியாகிய இரசபாகத்தினின்று இரத்தமும்இரத்தத்தினால் மாமிசமும்மாமிசத்தில் மேதையும்மேதையின் மூளையும்எலும்பும் அதில் நரம்பும்சுக்கிலமும் உண்டாகும். ஸ்தூலபாகத்திலுள்ள ஆகாசப்பகுதியால் பலவகைத் தாதுக்களுண்டாகும். வாயுவாற் சுக்கில முண்டாகும்அக்கினியால் நரம்பாகும். அப்புவால் இரத்த முற்பத்தியாகும். பூமியால் மாமிசமுண்டாகும். சுக்கிலம் சோணிதத்தை யடைதலாற் பிரஜாவிருத்தியுண்டாகும். 

 

சரீரத்தில் வாதபித்த சேத்துமங்கள் பேதப்படாமலிருக்கிற போது சுக்கிலம் சோணிதத்தில் கலக்கக் கருப்பமாகும். அது முதல் ஏழுநாட்களில் குமிழியாகத் தோன்றும். பதினைந்து நாட்களில் பிண்டமாகும். ஒரு மாதத்தில் இறுகிக் கடினமாகும். இரண்டு மாதங்களில் தலை உண்டாகும். மூன்றாம் மாதத்தில் பாதங்கள் உண்டாகும். நாலாமாதம் விரல் வயிறு இடுப்பு இவைகளுண்டாகும். ஐந்தாம் மாதம் முதுகு விலாப்புறங்களுண்டாகும். ஆறாம் மாதம் கண் காது மூக்கு இவைகளுண்டாகும். ஏழாம் மாதத்தில் ஜீவன் கலக்கும். எட்டாம் மாதம் அவயவங்கள் முற்றும் பூரணமாய் தொப்புளின் வழியாகத் தாய் உணவின் சாரத்தைக் கிரகித்துக்கொள்ளும். அப்போது பூர்வஜன்ம அறிவுண்டாகும். அதனால் மனம்வருந்தி அளவில்லாத ஜன்மங்களை யெடுத்து அளவில்லாத கர்மபலனை அனுபவித்தோம்சொர்க்கநரகங்களிற்சென்று வருந்தியிளைத்தோம். பந்தம் அறுக்கும் உபாயம் தேடவில்லை. இப்பொழுது பூமியிற் பிறந்ததும் சற்குருவின் கருணையைப்பெற்றுச் சிவபெருமானுக்கு அடிமை செய்து பூஜித்துஅதினால் மெய்ஞ்ஞானத்தை யடைந்து மோக்ஷமடைவோமென்று சிந்தித்துக் கொண்டிருக்கும். அப்போது உதானவாயு வுதைந்து தள்ளவருந்தி அவ்வெண்ணத்தை மறந்து பூமியில் பிறந்து அஞ்ஞானத்தை அடைந்திருக்கும். அந்த அஞ்ஞானத்தால்இராகத் துவேஷங்களைப்பெற்று மவற்றால் பாவம் புண்ணியமும் செய்யாநிற்கும். பாவபுண்ணியங்களால் ஜனன மரணங்களை யடைந்து வருந்தும். இந்த அஞ்ஞானம் சிவபெருமான் திருவருளால் ஞானத்தைப் பெற்றால் ஒழியும்வேறெதனாலும் தீராது. ஆத்மஞானம் பெற்றாலன்றி அவித்தியாபாசம் ஒழியாது. அநாதிமலமுத்தனான பரமசிவனையறியய்யலாதவன் ஆத்மத்துரோகியாவான். அவன் ஹாபாதகங்களை யும் செய்வான். வேதத்தை யோதினாலும் அவன் பாசமொழியாது. பரம சிவனை யறிந்தவன் எல்லாச்சந்தேகங்களு மொழிந்தவனாவான். எல்லாக்கருமங்களையும் செய்து முடித்தவனாவான்அவனே விதி விலக்குகளைக் கடந்து சிவாநந்தத்தை அனுபவிப்பான். மாயாசம் பந்தம் ஒழிந்துதத்துவமசி வாக்கியார்த்தப்படி உண்மையுணர்ந்து பிரம்பாவனை செய்திருத்தலே மனிதராய்ப் பிறந்ததற்குப் பலனாம். இந்த அனுபவத்தை அடைவதற்குச் சிவபக்தியே நல்ல மார்க்க மாகும்.

 

 

பதினோராவது அத்தியாயம்.

நாடி நிலைமையுரைத்தல்.

 

மனிதர்களுடைய சரீரம் தங்கள் தங்களுடைய கைகளினால் தொண்ணூற்று ஆறு அங்குலம் (எட்டுச்சான்) அளவாயிருக்கும். குதத்துக்கு இரண்டு அங்குலத்திற்கு மேலும்இலிங்கஸ்தானத்துக்கு இரண்டு அங்குலம் கீழாகவும் மூலாதாரம் என்னும் ஆதாரம் உள்ளது. பொன் வண்ணமாயிருக்கும். அதுவே அதுவே அக்கினி ஸ்தானமாம். அதுவே சரீரமத்தியமான அரையென்னப்படும். அந்த மூலாதாரத்துக்கு ஒன்பது அங்குல அளவிற்கு மேல் கந்தஸ்தானமிருக்கன்றது. இது நாலங்குல அளவுள்ளதுஅண்டவடிவாய் இருக்கும். இதை நரம்புகள் சூழ்ந்திருக்கும். அதினின்று எழுபத்தீராயிரம் நாடிகள் பரவுகின்றன. அந்த நாடிகளுள் இடைகலைபிங்கலைசுழுமுனைபூஷைணைமத்திமைசிகுவையசசுவினிஅலம்புசைகுகுவிசுவோதரைபயசுவினிசங்கினிகாந்தாரை என்ற பதினாலு நாடிகள் சிறந்தனவாம். இவற்றுள் இடைகலைபிங்கலைசுழுமுனை என்கிற மூன்றும் விசேஷமானவை. இந்த மூன்றினுள்ளும் சுழுமுனை சிறந்தது. அதற்குப் பிரமநாடியென்றும் பேர். முதுகின் நடுவில் வீணாதண்டம் போன்றுள்ள எலும்புடன்கூட மேலே சென்று கபாலத்தின் வழியாகப் புருவமத்தியைச் சேருகின்றது. கந்தஸ்தானத்துக்கு இரண்டு அங்குலத்துக்குக்கீழே குண்டலிசத்தி சர்ப்பவடிவமாய்ப் படத்தினால் சுழுமுனைத் துவாரத்தை அடைத்துக்கொண்டிருக்கும். கண்டத்தினால் அந்தச்சுழுமுனையை எட்டுச் சுற்றாகச் சூழ்ந்து மேலே சென்று வாலினால் பிரமரந்திர ஸ்தானத்தை மறைத்துக் கொண்டிருக்கும். குண்டலிசத்தி யிவ்வாறு சுழுமுனைத்துவாரத்தை யடைத்து நிற்பதால்சுவாசக் காற்றும்அன்னசாரமும் அதற்குட் செல்வதில்லை. அந்தச் சுழுமுனையின் இடப்புறத்தில் இடைகலை நாடியும்வலப்புறத்தில் பிங்கலை நாடியும் இருக்கின்றன. அதன் முன்னும் பின்னும் சரசுவதிகுகு என்னும் நாடிகளிருக்கும். இடைகலைக்கு முன்னிலும் பின்னிலுமாகக்காந்தாரைமத்திமைசிகுவை என்னும் நாடிகளிருக்கும். பிங்கலைக்கு முன்னும் பின்னும் பூஷை யசசுவினி என்பன நிற்கும். குகு சிகுவை என்பவற்றின் இடையில் விசுவோதரை நாடிநிற்கும். யசசுவினிக்கும்குகுவிற்கும் மத்தியில் வரணையென்னும் நாடி செல்லும். பூஷைக்கும் சரசுவதிக்கும் மத்தியில் யசசுவினியிருக்கும். காந்தாரைக்கும் சரசுவதிக்கும் நடுவில் சங்கினி நிற்கும். கந்த மத்தியில் அலம்புசை நிற்கும். 

 

குகு இலிங்கஸ்தானத்தைப் பற்றியிருக்கும்வருணை தொக்கில் பரந்து நிற்கும்இடைகலை பிங்கலை நாடிகள் வலமிடமாக மாறிக் கத்தரிபோல் சென்று நாசியை அடையும். யசசுவினி வலக்கால் பெருவிரலைப்பற்றி நிற்கும். பூஷை வலது கண்ணை யடைந்து நிற்கும். பயச்சுவினி வலது காதைப்பற்றியிருக்கும். சரசுவதி நாடி நாவைப் பற்றி நிற்கும்சிகுவை யிடதுகால் அங்குஷ்டத்தைப் பற்றியிருக்கும்சங்கினியிடது காதைச் சேர்ந்திருக்கும்காந்தாரையிடக்கண்ணைப் பற்றியிருக்கும்விசுவோதரை முகத்தின் மத்தியைப்பற்றி நிற்கும்அலம்புசை அபானத்தை அடைந்திருக்கும். பிராணன்அபானன்வியானன்உதானன்சமானன்நாகன்கூர்மன்கிரிகரன்தேவதத்தன்தனஞ்செயன் என வாயுக்கள் பத்துவகையாம். இந்தப் பத்துவாயுக்களும் நாடிகள் எல்லாவற்றிலும் உலாவும். இந்தப் பத்துள்ளும் பிராணன்அபானன்வியானன்உதானன்சமானன் என்கிற ஐந்தும் விசேஷமானவைகள்! பிராணவாயுமுகம்மூக்குதொப்புள்இதயம் இவ்விடங்களில் தங்கியிருக்கும். அபானன் குதம்இலிங்கம்தொடைமுழங்கால்அண்டம் முதலியவற்றில் பரவியிருக்கும். வியானன் காதுகண்மூக்குகழுத்து இவ்விடங்களில் நிற்கும்.  உதானன் சந்துகள் கை கால் முதலிய இடங்களில் நிற்கும். வியானன் தேகம் முழுமையும் பரவியிருக்கும். தொக்கு எலும்புகளில் நாகன் நின்று வேர்வையை வெளியில் தள்ளுத லாதித் தொழில்களைச் செய்யும். கூர்மன் கண் இமைத்தலாதிகளைச்செய்யும். கிரிகரன் தும்மலை உண்டாக்கும். தேவதத்தன் நித்திரையை யுண்டாக்கும். தனஞ்செயன் சோபையை யுண்டாக்கும். பிராணவாயு உசுவாச நிசுவாசங்களை யுண்டாக்கும். அபானன் மலஜலங்களை வெளிப்படுத்தும். சமானன் உட்செல்வனவற்றை அந்தந்த இடத்தில் சேர்க்கும். உதானன்வியானன் விவாதம் செய்யும். 

 

சுழுமுனைக்குப் பரமசிவன் தெய்வம்இடைகலைக்கு விஷ்ணு தெய்வம்பிங்கலைக்குப் பிரமன் தெய்வம்சரசுவதிக்கு விராட் தெய்வம்பூஷை வருணைகளுக்கு வாயுதெய்வம்சிகுவைக்கும் வருணன் தெய்வமாம். யசசுவினிக்குச் சூரியன் தெய்வம்அலம் புசைக்கு வருணன்குகுகாந்தாரைசங்கினிகளுக்குச் சந்திரன் தெய்வம்பயசுவினிக்குப் பிரமன்விசுவோதரைக்கு அக்கினியும் தெய்வங்களாம். இடைகலையில் சந்திரனும்பிங்கலையில் சூரியனும் எப்போதும் சஞ்சரிப்பார்கள். பிராணவாயு பிங்கலையினின்றும் இடைகலையைச் சேரும்போது உத்தராயணம் என்றும்இடைகலையி னின்றும் பிங்கலையை அடைவதைத் தட்சணாயன மென்றும் சொல்வார்கள். இடைகலை பிங்கலைகளின் சந்தியைப் பிராணன் அடைவது அமாவாசியையாம். பிராணவாயு மூலாதாரத்தை யடையும் காலம் முதலாவது விஷ்வகாலமாம். கபாலம் சேர்வது இரண்டாம் விஷ்வகாலமாம். பிராணன் ஒரு நாடியிலிருந்து மற்றொரு நாடியைச்சேர்ந்தால் அது சங்கிரமண காலமாம். இடை கலையினின்று குண்டலியைச்சேர்வது சந்திரகிரகணமாம். பிங்கலையினின்று குண்டலியைச் சேர்ந்தால் சூரிய கிரகணமாம். 

 

கபாலஸ்தானம் ஸ்ரீசைலம்நெற்றி கேதாரம்புருவ மத்தியம் காசிகண்டஸ்தானம் குருக்ஷேத்திரம்இதயம் பிரயாகைஇதயமத்தி சிதம்பரம்மூலாதாரம் திருவாரூரெனச் சரீரத்தில் க்ஷேத்திரங்கள் கொள்ளப்படும். உள்ளிலும் புறத்திலும் உள்ள தீர்த்தங்களில் முழுகிஅந்தந்த க்ஷேத்திரங்களையும் வணங்கிமோட்சத்தை யடைவது உத்தமர் செய்கைகளாம். மத்திமர்புறத்திலுள்ள தீர்த்தங்களையும் க்ஷேத்திரங் களையும் தரிசித்துப் போககளைப் பெறுவார்கள். புறத்திலுள்ள தீர்த்தங்களில் எத்தனை தரம்ங்மூழ்கினாலும் பரிசுத்தமடைவதில்லை. 

 

ஆன்மதீர்த்தத்தினாலே சரீரம் பூரணசுத்தியை அடையும். அதனால் சித்தசுத்தி உண்டாகும். உடனே ஞானயோக சித்தி யுண்டாகும். சரியை கிரியைகளிலிருப்போர் சிவபெருமானைச் சொரூபங்களிற்கண்டு தரிசிப்பார். யோகிகள் இதயகமலத்தில் தரிசிப்பார்கள். ஞானிகளோ பரமசிவனை யெங்கும் கண்டு தரிசிப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. சிவத்துடன் வேற்றக் கலந்திருக்கின்ற ஞானிகளுடைய பாததீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணுகிறவர்களும் சித்த சுத்தியையும் ஞானயோகத் தையும் பெறுவார்கள். மெய்ஞ்ஞானத்தைப் பெற்றவர்கள் சிவபெருமானொடு கலத்தலாகிய சாயுஜ்யமுத்தியைப்பெறும் மார்க்கத்திலேயே நடப்பார்கள். 

 

 

பன்னிரண்டாவது அத்தியாயம்.

நாடி சுத்திகூறியது.

 

நிஷ்காமியமான கருமங்களைச் செய்து இயமநியமாதிகளை யுடையவனாய்ச் சாந்தசித்தமுடையவனாய்ச் சத்திய சீலனாயிருக்கிற ஆசாரியனுடைய பணிவிடை செய்து ஒழுகுவோன் மூன்று காலங்களிலும் ஸ்நானம் செய்துவிரசாக்கினி அல்லது ஹோமாக்னிகளிலுண்டான திருநீற்றை அணிந்து கொண்டு பஞ்சாட்சர மஹா மந்திரத்தை ஜபிக்கவேண்டும். எப்போதும் சிவபெருமானைச் சிந்தித்து வணங்க வேண்டும். விநாயகர்சுப்பிரமணியர்ஸ்வதிகுருசூரியன்சந்திரன்வாயுஅக்கினி யிவர்களை முறைப்படி வணங்கவேண்டும். பிறகு தனக்கு இசைந்த ஒரு ஆசனத்தில் கிழக்கு முகமாயாவது வடக்குமுகமாயாவது உட்காரவேண்டும். கழுத்து தலை முதலியவுறுப்புக்களை நேராக நிற்கும்படி நிமிர்ந்திருக்க வேண்டும். மனதில் கலக்கமில்லாமல் மூக்கு நுனியில் பார்வையைவைத்துஅமிர்த பீஜாட்சரமாகிய வகாரத்தைத் தியானித்துப் பிராணாயாமம் செய்ய வேண்டும். 

 

இடைகலை வழியாக வாயுவை உள்ளேயிழுத்து நாபிஸ்தானத்தில் நிரப்பிக் கும்பித்துஅக்கினி பீஜத்தைச் சிந்தித்துப் பிங்கலை வழியாக வாயுவை மெதுவாக வெளிவிடவேண்டும். பிறகு பிங்கலையாலே பூரித்துக் கும்பித்து இடைகலைவழியாக மெதுவாய் வெளிவிடவேண்டும். இப்படி வேளைக்கு ஆறுதரம் தவறாமல் செய்ய வேண்டும். காலை மத்தியான்னம் மாலை யாகிய முக்காலங்களிலும் தவறாமல் செய்ய வேண்டும். இப்படி மூன்று வருஷம் அல்லது நாலு வருஷம் செய்தால் நாடிகள் சுத்தியாய்ச் சரீரம் வசப்படும். அப்போது ஜாடராக்கினி ஜ்வலிக்கும். நாதம் தொனிக்கும். இந்த அடையாளங்கள் உண்டான பின் ஆன்ம சுத்தி செய்ய வேண்டும். ஆன்ம சுத்தியாவதுஆசாரிய.னிடத்தில் மெய்ஞ்ஞானோபதேசம் பெற்றுச்சிவபெருமானு டைய உண்மையான சொரூபத்தை யறிந்துஉலக ஆசையற்று நிற்பதே ஆன்ம சுத்தியாம். சற்கருமங்களைச் செய்து சித்திபெற்றவனுக்குத் தான் ஞானமுண்டாகும். அப்படிக்கருமஞ் செய்யாதவனுக்கு ஞானமுண்டாகாது. அந்தக் கரும சித்தி சிவபக்தியா லே கிடைக்கும். சிலர் ஞானம் அடைந்தவர்களைப் போலப் பேசிக்கருமத்தை விட்டு இருப்பார்கள். அவர்கள் மஹாபாவிகளாய் முத்தியை யடையமாட்டார்கள். அவர்கள் போகம் மோட்சம் இரண்டையும் இழந்து ஜனன மரணங்களினாலே வருந்தி அலைவார்கள். ஆதலால் கருமத்தை அலட்சியம் பண்ணாமல் செய்து ஞானத்தைப் பெறமுயல வேண்டும். 

 

 

பதின்மூன்றவது அத்தியாயம்.

அஷ்டாங்கயோக நெறியில் இயமம் உரைத்தல்.

 

இயமம்நியமம்ஆசனம்பிராணாயாமம்பிரத்தியாகாரம்தாரணைதியானம்சமாதி என யோகாங்கங்கள் எட்டாம். அவற்றுள்இயமம் பத்துவகையாம். அவையாவனகொல்லாமைசத்தியம்அத்தேயம் பிரமசரியம்தயைஆர்ச்சவம்க்ஷமைதிருதி மிதபோஜனம்சௌசம் என்பவைகளாம்.

 

கொல்லாமையாவதுயாகம் முதலிய வற்றில் அன்றி மற்றச் சமையங்களில் ஜீவ இம்சையை மனத்தினாலும் எண்ணாமலிருத்தலாம். பொறிபுலனாதி காரணங்க ளையும் சரீரத்தையும் நான் என்று எண்ணுதல் ஆத்ம கொலையாம். கையால் அவ்வாறு நினையாமல் ஆத்மாவின் இயற்கைச்சொரூபத்தை உணர்தலும் கொல்லாமையாகும். காதினால் கேட்டதையும்கண்ணால் பார்த்ததையும் உள்ளபடியே கூறுதல் சத்தியமாம். சிவபெருமானே நித்தியமானவர்மற்றவர்களும் உலகும் நித்தியமல்ல என்று கருதுவதும் சத்தியமேயாம். பிறர் பொருளை அபகரிக்க நினையாமையும்தேகாதிகளை நான் என்று எண்ணாதிருப்பதும் அத்தேயமாம். தன்தாரத்தையன்றிப் பிறமாதரைக்கருதாமையும்பரசிவன் அடிக் கமலங்களில் மனதைச் செலுத்துவதும் பிரமசரியமாம். தன் உயிரைப் போலவே மற்றைய ஜீவனையும் கருதுதல் தயையாகும். தன்னுடைய புத்திரமித்திரகளத்திராதிகளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் தன் ஆத்மாவிடத்திலும் சமபுத்தியுடையவராயிருப்பதும் ஆர்ச்சவம் என்னப்படும். பகைவர் ஆதியரால் துன்பமுண்டான காலத்திலும் அதனைச் சகித்திருப்பதே க்ஷமையாகும். சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்திருப்பதே முத்தி நெறி என்று கருதுவதே திருதியாகும். ஜீவாத்மாக்களையெல்லாம் சிவசொரூபமாக எண்ணுவதும் திருத்தியாகும். தேவாமிர்தத்தையும் சருகாதிகளையும் சமமாக நினைத்துப் புசிப்பதே மிதாகாம். உணவு அதிகமானாலும்குறைவானாலும் யோகத்துக்குக் கெடுதி உண்டாகும். ஆகையால் அறைவயிறு ஆகாரமும் கால் வயிறு தண்ணீரும் கொண்டுமற்றைய கால் வயிற்றை வாயு சஞ்சரிக்கும்படி விட வேண்டும். சௌசம் பாகிய சௌசமென்றும்ஆத்மசௌசம் என்றும் இருவகைப்படும். மண் முதலிய வற்றைச் சரீரத்தில் பூசிக் கொண்டு விதிப்படி ஸ்நானம் பண்ணுதல் பாகிய சௌசமாம். வேதாந்தப் பொருளை உணர்ந்து பரசிவனைச் சிந்தித்துப் பஞ்சபாசத்தடை ஒழிவதே ஆத்மசௌசமாகும். இந்த இருவகைச்செளங்களையும் உடையவனே சுத்தாத்மாவாவான். பாகிய சௌசம் மாத்திரம் உள்ளவன் சித்த சுத்தியை அடைய மாட்டான். ஆத்ம சௌசமுள்ள சிவயோகி பாகிய சௌசம் செய்யாமலிருந்தாலும் குற்றமில்லை. இப்படிக்கூறிய இயமநெறியினின்று சிவபிரானைக் சிந்திக்கவேண்டும்.

 

 

பதினான்காவது அத்தியாயம்.

நியமவிதி கூறியது.

 

தவம்சந்தோஷம்ஆஸ்திகம்தானம்ஈசுவர பூசைசித்தாந்தசிரவணம்இலச்சைமதிஜபம்விரதம்என்று நியமம் பத்துவகையாம். 

 

இவற்றுள் தவமாவதுவேதம் விதித்த சாந்திராயணம்கிருச்சிரம் முதலிய விரதங்களை அனுஷ்டித்துச் சிவபெருமானைச் சிந்தித்திருப்பதே தவமாம். இப்படிப்பட்ட பந்தம் எனக்கு எப்படி வந்ததுஎந்தத் தெய்வத்தை வழிபட்டால் ஜனனம் நீங்கும்நான் ஜீவன் முத்தனாவது எக்காலம்உண்மையான மோட்சசாதனம் எது என்று ஆராய்ச்சி செய்வதும் தவமேயாம். பேராசையைவிட்டு ஒழித்துக் கிடைத்ததைக்கொண்டு திருப்தியடைவதே சந்தோஷம். புண்ணிய புவனபோகங்களை வெறுத்துச் சிவபெருமான் திருவடியைச் சிந்தித்திருப்பதும் சந்தோஷமாம். வேதாகமம் ஸ்மிருதிகளிற் கூறிய கருமங்களில் நம்பிக்கை உடைமையே ஆஸ்திகமாம். தருமமார்க்கத்தினால் சம்பாதித்த பொருளைச் சிவபக்தியுள்ள சற்புருஷர்களுக்குக்கொடுப்பது தானமாம். வேதநெறி கடந்தவர்களுக்கும்சிவபக்தியில்லாதவர்களுக்கும்சிவபக்தர்களைப் போல நடித்துத் திரியவர்களுக்கும்ஜனன மரணங்களுக்குப் பயப்படாதவர்களுக்கும்மூர்க்கர்களுக்கும் தானம் கொடுத்தால் அது பயன் கொடாமற்போம். சிவலிங்காதி சொரூபங்களில் சிவபெருமானை ஆவாகனம் செய்து பூசிப்பது ஈசுவர பூசையாம். பிராமண குலத்திற் பிறந்தவன் இந்தப் பூசைசெய்யாவிட்டால் அவன் சண்டாளத் தன்மையை அடைந்து நரகத்தில் விழுவான். இராகதுவேஷாதிகளை விட்டுச்சத்திய முடையவனாய்ச்சதாசாரமுடைய வனாய்க்கொல்லாமை முதலிய விரதானுஷ்டான முடையவனாயிருப்பதும் ஈசுவர பூசைசெய்தலேயாம். சிவபெருமானுடைய உண்மைச் சொரூபத்தை உபதேசிக்கிற வேதாந்த உண்மை உணர்தலே சித்தாந்த சிரவணமாகும். ஸ்திரீ சூத்திரர்கள் புராணங்களைக் கேட்பதே வேதாந்த சிரவணமாகும். வைதிக இலவுகிகங்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்ய வெட்கப்படுதலே இலச்சை யாகும். சிவபக்தியுடன் வைதிக வைதிக கருமத்தில் சிரத்தையுண்டாவதே மதியாகும். ஆசாரியர் உபதேசித்த மந்தித்தை விதிப்படி. தியானிப்பதே ஜயமாகும். கல்ப சூத்திரம்

ஸ்மிருதிபுராணம்இதிகாசம் இவைகள் கூறிய விதிப்படி மந்திரங்களைத் தியானிப்ப தும் ஜபமாகும். 

 

வேதத்துக்கு மாறுபட்ட சாஸ்திராசாரங்களை அனுஷ்டித்தால் அது சிறிதும் பலன் கொடாது. பலனில்லாத அநேக தருமங்களைச் செய்வதைவிடச்சிறந்த வைதிக தருமங்களில் கொஞ்சமாவது செய்வது நல்லது. எப்போதும் வேதம் கூறிய மந்திரங்க ளையே ஜபிக்கவேண்டும். அந்த ஜபம் வாசிகம்மானசம் என்று இருவகைப்படும். வாசிகம் உச்சம். உபாமிசு என்று இருவகையாம். உச்சமாவதுமந்திராட்சரங்கள் வெளிப்பட உச்சரித்தலாம். அவ்வுச்சாரணம் இழிந்தோர்காதிற்பட்டால் பயன்கொடாமல் நிஷ்பலமாகும். உபாமிசு என்பது சப்தம் வெளிப்படாமல் உச்சரித்தல். இது உச்சத்தை விட அநேக பங்கு சிறந்ததாம். மானசமாவது மந்திரங்களை வாயினால் உச்சரியாமல் மனத்தில் சிந்திப்பது. அது மனனம்தியானம் என்று இரண்டு வகைப்படும். மனனமாவது நாவசையாமல் மந்திராட்சரங்களை மனதினால் எழுத்தெழுத்தாய் எண்ணுவது. தியானமாவதுமனம் ஒருப்படவிருந்து மந்திர சொரூபங்களைச் சிந்திப்பது. உபாமிசுவைவிட மனனம் பதினாயிரமடங்கு உயர்ந்தது. மனனத்தைப் பார்க்கிலும் தியானம் அநேக பங்கு மேலானது. 

 

எந்த மந்திரத்தை ஜபித்தபோதிலும் அதற்குரிய ரிஷிசந்தசுதெய்வம்விநியோகம் இவைகளைச் சிந்தித்து அதன் பின் ஜபிக்க வேண்டும். இப்படிச் செய்தால் சகல பலன்களும் சித்தியாகும். குரு உபதேசத்தின்படி உபவாசமுதலியன செய்வதே விரதமாகும். விதிப்படி திருநீறுருத்திராட்ச மணிந்து விடாமற் சிவபூசை செய்வதும் விரதமாகும். சிரோவிரதமே சிறந்தது என்பாரும்மத்தியாச்சிரம விரதமே மேலான தென்பாரும்ஐசுவரவிரதமே சிறந்ததென்பாரும்சாம்பவவிரதமே சிறந்த தென்பாரு மாய் உலகத்தார் பலவகை கூறுவார்கள். வேதத்திலே பாசுபதவிரதம் ஒன்றையே சிறந்ததென்று புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஆதலால் அந்தப் பாசுபதவிரதத்தை அனுஷ்டிப்பதே தகுதி. இந்தப்பாசுபத விரதானுஷ்டானத்தினால் பாசமொழியும்முத்தியுண்டாகும்.. இந்த விரதத்தை விட்டவன் பதிதனே யாவான். 

 

பதினைந்தாவது அத்தியாயம்.

ஆசனபேதம் கூறியது.

 

சுவஸ்திகம்கோமுகம்பத்மம்வீரம்சிங்கம்பத்திரம்முத்தம்மயூரம்சுகம் என ஆசனம் ஒன்பது வகைப்படும். வலது தாடை முழங்கால்களின் நடுவில் இடது பாதத்தைச் செலுத்தியும்இடது தொடை முழங்கால்களுக்கு மத்தியில் வலது பாதத்தைச் செலுத்தியும் சரீரத்தைச் சமனாய்ச் செய்து கொண்டு நிமிர்ந்து இருப்பது சுவஸ்திகாசனம் எனப்படும். வலது பிருஷ்டத்தில் இடத்தாள் பரட்டையும்இடது பிருஷ்டத்தில் வலத்தாள் பரட்டையும் மாறிவைத்து இருப்பது கோமுகாசனம் எனப் படும். இடது தொடைமேல் வலது பாதத்தையும்வலது தொடைமேல் இடது பாதத்தையும் வைத்துஇரண்டு கைகளையும் மாறி இரண்டு பாதப்பெருவிரல்களையும் பிடித்துக்கொண்டு இருப்பது பத்மாசனமாம். இந்தப் பத்மாசனம் சகலரோகங்களையும் போக்கும் இயல்புள்ளது. இடது தாள்பாடு வலது தொடைமேலிருக்கும்படி வைத்துக் கொண்டு சரீரம் சமனாம்படி நிமிர்ந்து இருப்பது வீராசனமாம். இடத்தாள் பரட்டை வலது அண்டத்தின் கீழும்வலது தாள்பாட்டை இடது அண்டத்தின் கீழும் பொருந்தும் படி வைத்துஇரண்டு கைகளையும் இரண்டு முழங் கால்களின் மேலே விரல் நிமிர்ந்திருக்கும்படி வைத்துக்கொண்டு நாசி நுனியில் பார்வையைச் செலுத்தி யிருப்பது சிங்காசனமாம். இருகால் படுகளையும் இரண்டு அண்டங்களின் கீழிருக்கும்படி வைத்துஇரண்டு கைகளையும் இருதொடைகளின் மேல் ஊன்றவைத்துக் கொண்டிருப் பதே பத்திராசனமாம். இது விஷங்களையும்பயங்களையும் போக்கும். இடத்தாள் பரட்டை அண்டத்தின் கீழிட்டுஅதன் கீழ் வலக்காற் பட்டைச் சேர்த்திருப்பது முக்தாசனமாம். இடத்தாள் பரட்டை இலிங்கத்தானத்தின் மேல் வைத்துஅதன்மேல் வலத்தாள் பட்டை வைத்திருப்பதும் முக்தாசனமேயாம். இரண்டு முழங்கைகளையும் நாபிஸ்தானத்தில் வைத்துக் கைகளைப் பூமியில் ஊன்ற வைத்துச்சிரசு முதல் பாதம் வரையுள்ள உடல் பூமியில் படாதபடி யெழுந்து நிற்பது மயூராசனமாம். இது சகல பாபங்களையும் போக்கும் என்பார்கள். எப்படியிருந்தால் சுகமாயிருக்குமோ அப்படி யிருப்பது சுகாசனமாம். இது சக்தி யில்லாத வர்களுக்குத் தக்கது. இந்த ஆசன பேதங்களை உணர்ந்தவன் சகல உலகங்களையும் ஜயித்தவனாவான். ஆசாரியருடைய அனுக்கிரகத்தைப் பெற்றுஇந்த ஆசனங்களில் தனக்கு இசைந்த ஒரு ஆசனத்திலிருந்து கொண்டு பிராணாயாமம் செய்யவேண்டும். 

 

               

பதினாறவது அத்தியாயம்.

பிராணாயாம முரைத்தல்.

 

பிராணாயாமம்இரேசகம் பூரகம் கும்பகம் என்று மூன்று பகுதியாய் அகார உகார மகார சொரூபமாயிருக்கும். இந்த மூன்றும் சேர்ந்தால் பிரணவமாம். ஆதலால் பிரணவமே பிராணாயாமத்தின் சொரூபமாகும். இடகலையால் வாயுவையிழுத்துப் பதினாறு மாத்திரை பூரித்துஅகாரத்தைச் சிந்திக்கவேண்டும். அப்படிப் பூரித்த வாயுவை அறுபத்துநாலு மாத்திரையளவு கும்பிக்கவும்சக்தியுள்ள மட்டும் கும்பகம் செய்யலாம். பிறகு கும்பித்த வாயுவை பிங்கலை வழியாக முப்பத்திரண்டு மாத்திரை யிரேசிக்கவும். பின் பிங்கலையால் பதினாறு மாத்திரை பூரித்து அகார வடிவான சிவனைத் தியானிக்க வேண்டும். முன் சொன்னபடி அறுபத்து நாலு மாத்திரை கும்பித்து உகாரசொரூபமான விஷ்ணுவைச் சிந்திக்க வேண்டும். பின் பிரமனைத் தியானித்து இடகலை வழியாக முப்பத்திரண்டு மாத்திரை யிரேசகம் செய்யவும். இதுவே பிராணாயாம முறையாகும். இம்முறை சந்நியாசிகளுக் குரியது. 

 

பிரமசாரிகிருகஸ்தர்வானப்பிரஸ்தர் இவர்கள் முறைப்படி வாயுவைப் பூரித்து வியாகிருதிகளோடு கூடின காயத்திரியை ஜபிக்கவேண்டும். க்ஷத்திரிய வைசியர்களும் இதை அனுஷ்டிக்கலாம். ஸ்திரீ சூத்திரர்கள் நமோந்தமான பஞ்சாட்சரம் அல்லது அஷ்டாட்சர மந்திரங்களை ஜபிக்க வேண்டும். ஒருநாளைக்குப் பதினாறு பிராணாயா மம் செய்யவேண்டும். ஒருமாசம் அளவும் இந்தப் பிராணாயாமத்தை முறைப்படி செய்தால் கொலை முதலிய பாவங்கள் ஒழியும். ஆறுமாதம் செய்தால் ஞானமுண்டா கும். ஒருவருஷம் செய்தால் அவன் பிரமஞானியாவான். தன்தருமத்தை விடாதயோகி பிராணாயாமத்தாலே முத்தியடைவான்பிராணவாயுவை யிழுத்துப் பூரித்தலே பூரகம். அந்த வாயுவை வயிற்றில் நிரப்புதலே கும்பகம். அவ்வாறு கும்பித்த வாயுவை வெளியில் விடுதலே இரேசகமாம். 

 

பிராணாயாமஞ் செய்யும்போது வேர்வையுண்டானால் அதமமாகும். நடுக்கமுண் டானால் மத்திமம். உத்தானம் (வாயுமேல் எழுதல்) உண்டானால் உத்தமம். அது உண்டாகும் அளவும் விடாமற் செய்யவேண்டும். அது உண்டாய்விட்டால் சுகமும் சித்த சுத்தியு முண்டானால் மனமானது ஞான சோதியை யடையும். அதனால் ஆத்மா சிவத்தோடு கலக்கும். சாயுஜ்ய முத்தியும் சித்திக்கும். இரேசபூரகங்களை விட்டுக் கும்பகம் ஒன்றையே அப்பியசித்தால் சகலபாவங்களும் ஒழியும். மனோவேகம் போன்ற வேகத்தையும் பெறுவான். ஞானமும் உண்டாகும். தினம் பிராணாயாமத்தை அப்பியாசம் பண்ணுகிறவனுக்குத் தீங்குயாதும் நேராது. அவனால் அடையப்படாததுஎவ்வுலகத்திலும் இல்லை. ஆகையால் எவ்விதத்தாலும் பிராணாயாமத்தை அப்பியாசம் பண்ண வேண்டும். சந்தியாகாலங்களிலும்பிராம முகூர்த்தத்திலும் செய்யலாம். பிராணவாயுவைப் பூரித்து நாசி நுனிநாபிமத்திபாதப்பெருவிரல் இவற்றில் தாரணம் செய்ய வேண்டும். அவன் எல்லாரோகங்களும் ஒழிந்து நூறு வருஷம் ஜீவிப்பன். நாசி நுனியில் தாரணம் பண்ணினால் வாயு வசப்படும். நாபி மத்தியில் தரித்தால் நோய்களொழியும். காற்பெருவிரலில் தாரணம் செய்தால் சரீரம் இலேசாகும். நாக்கினால் பிராணவாயுவை ஆகருஷித்துப் பானம் பண்ணினால் சகல ரோகங்களும் நீங்கும். வாயுவை நாவினால் ஆகருஷித்துச் சித்தத்தில் தரித்து அமிர்தபானம் செய்தால் தேவர்களைப் போலப் புகழும் அகமும் பெறுவான். இடைகலையிலாக ருஷித்துப் புருவமத்தியில் தரித்து அமிர்தம் உண்டால் சகல வியாதிகளும் ஒழியும். இடகலை பிங்கலையால் வாயுவையிழுத்து நாபிஸ்தானத்தில் தரித்தால் சகல வியாதிகளும் நீங்கும். இதயத்திலும் நாபியிலும் தாரணம் செய்தால் வாத பித்த சேத்தும தோஷங்கள் எல்லாந் தீரும். கண்களிலும் காதுகளிலும் சிரசிலும் தரித்தால் அங்கங்கே யுண்டாகும் நோய்கள் தீரும். தீரும். சுவஸ்திகா சனத்தி லிருந்து கொண்டு அபானவாயுவை மெதுவாக மேலே யிழுத்துகாதுகளை அங்குஷ்டங்க ளாலும்தற்சனியால் கண்களையும் மூடிமத்திமை விரல்களால் நாசியை நெருக்கிவாயுவைக் கபாலத்தில் சேர்த்துத் தரீக்கப் பிராணவாயு பிரமரந்திரஸ்தானத்தை அடையும். அப்போது நாதம் தோன்றும்.

 

அந்தநாதம் பத்துவகையாகத் தோன்றும். அவை கிண்கிணிசிலம்புமணிசங்கம்யாழ்தாளம்புள்ளாங்குழல்பேரிமத்தளம்மேகம் என்பன போல்வனவாம். வாயு கபாலமத்தியை அடையும்போது ஆத்மாமலையினின்றும் இறங்கும் அருவி போலக் கீழ்முகமாய்த் தோன்றும். அப்போது மெய்ஞ்ஞானம் தோன்றும். சமுசாரபந்தம் நீங்கும். இடக்கால் பரட்டை அண்டத்தின் கீழிருத்திவலக்கால் பரட்டையும் சேர்த்து நெருக்கிவிநாயகரையும் சிவபெருமானையும் சிந்தித்துசெந்நிறமான இதழ்களை யுடைய மூலாதார தாமரையில் பிரணவத்தைத் தியானித்துக்கொண்டு மனோலய முண்டாகும் வரை வாயுவைத்தரிக்கவும். அப்போது அபானவாயு அக்கினிஸ்தானத்தை அடையும். பிராணன்அபானன் அக்கினி மூன்றையும் சேர்த்துப் பிரணவத் தியானத்துடன் அங்கே தரிக்க வேண்டும். அக்கினி ஜயமுண்டான பிறகு அக்கினி மண்டலத்துக்குமேல்கந்தத்தானத்துக்குக் கீழே சுவாதிஷ்டான கமலத்தில் பிராணன்அபானன் அக்கினி மூன்றையும் சேர்க்க வேண்டும். பிரணவத்தைச் சிந்தித்து நாபிஸ்தானத்தைக் கண்களாற் பார்த்துக்கொண்டு மனோலயமுண்டாகு மட்டும் தரிக்க வேண்டும். அப்போது அக்கினி சுடர்விட்டெரிதலால் குண்டலி பிரமசந்திரவழியை மறைத்துக் கொண்டிருக்கும் படத்தை அவ்விடத்தைவிட்டு எடுக்கும். அப்போது சுழிமுனையின் அடியிலுள்ள சிறுதுவாரம் வெளிப்படும். அந்தத் துவாரத்தின் மார்க்கமாகப் பிரணவ தியானத்துடன் பிராணவாயுவைச் செலுத்த வேண்டும். கபாலம் அளவும் செலுத்தித் தரிக்கவும். அப்போது அக்கினி வாயுக்களால் அங்கமுற்றும் பூரிக்கப்படும். அப்போது சிரசில் சூரியனைப்போல ஆத்மா ஒளிவீசி நிற்கும். இப்படி அப்பியாசம் செய்ய வாயுவசப்படும். வாயு ஜயமானதற்கு அறிகுறியாக வேர்வை முதலியன உண்டாகும். இப்படி யோகம் செய்யும் யோகிக்கு மூன்றுலோகங்களிலும் எதிரில்லை. மூலரோகம் முதலியன நீங்கும். மஹாபாதகங்களும் ஒழியும். அதனால் சித்த சாந்தி உண்டாகும். சித்தசாந்தியினாலே வைராக்கியம் உண்டாகும். வைராக்கியத் தினாலே மெய்ஞ்ஞானம் உதிக்கும். ஞானத்தினாலே பாச மொழிய முக்தி யுண்டாகும். 

 

இந்த ஞானசாதன மிருக்கையில் அதனை அடைய முயலாமல் உலகபாசத்தில் கட்டுண்டு பந்த மொழியாமல் உலகத்தார் கெடுவது ஆச்சரியமேயாம். ஞானாமிர்தத்தில் ஒருதுளி பானம்பண்ணினாலும் பிரபஞ்ச பந்தமற்றுப்பரமசிவனுடைய பாதகமலங்க ளைத் துணையாகப்பற்றி முத்தியை அடையலாம். சிவஞானம் பெற்றவர்கள் பிரபஞ்சம் எல்லாவற்றையும் ஞானமயமாகவே காண்பார்கள். அஞ்ஞானிகளோ விஷயவடிவமா கப் பார்ப்பார்கள். இது பாசத்தின் வலிமையேயாம். சிவபெருமான் திருவடியை அடைவதற்குப் பலவகைமார்க்கங்களைச் சொல்வார்கள். ஆயினும் தானத்தினாலே போகங்க ளுண்டாகும். யாகங்களினாலே தெய்வ வடிவம் பெறலாம். தவங்களினாலே பிரமபதத்தை அடையலாம். ஞானம் ஒன்றே முத்திக்குக் காரணமாகும். சரியான புத்தியுள்ள வர்களுக்குத்தான் இது விளங்கும். மூடர்களுக்கு எவ்வளவாக விளக்கிச் சொன்னாலும் விளங்கமாட்டாது. கருமத்தால் முத்தி அடைய முடியாது. கருமத்தைச் செய்யா விட்டால் ஞானமுண்டாவதில்லை. ஆகையால் எப்போதும் சற்கருமங்களைச் செய்து அதனாலே ஞானத்தை அடைந்து,, அந்த ஞானத்தால் முத்தி யடைய வேண்டும். இப்படி யிருக்கக் கருமத்தை விட்டிருக்கும் மூடர்கள் எப்படிக்கதியடைவார்களோ அறியோம். சூரியனுதிக்க இருள் நீங்கினாற்போல ஞானம் உதிக்கப் பாச இருளும் தற்போதமும் ஒழியும். சஞ்சித கன்மமும் தொலையும். அதனால் சிவசாயுஜ்யம் பெறுதல் நிச்சயமாகும். அப்படிப்பட்ட ஞானத்தைப் பெறுவதற்குப் புத்தியுள்ளவன் நல்ல கருமங்களைச் செய்தே தீரவேண்டும்.  

           

பதினேழாவது அத்தியாயம்.

பிரத்தியாகார வியல்கூறல்.

 

விஷயானுபவத்திற் செல்லும் இந்திரியங்களை அடக்கி அவைகளைத் தன் வசமாக்கிக் கொள்வதே பிரத்தியாகாரமென்பர். காணப்பட்ட பிரபஞ்ச மெல்லாவற்றை யும் சிவசொரூபமாகப் பார்ப்பதும் ஜனித்தது முதலாகச் சாகும் வரைக்கும் தான் செய்யுந் தொழில்களெல்லாமும் சிவன் செயலேயென்று கருதுவதும் பிரத்தியாகார மாம். நித்திய நைமித்திகங்களான சற்கருமங்களைச் செய்து சிவார்ப்பணம் செய்தலும் பிரத்தியாகாரமாம். பிராணவாயுவை கருஷித்துத் தந்தமூலத் தானத்திலும் அதன்பின் கண்டஸ்தானத்திலும்பிறகு இருதயத்திலும்பிறகு கந்தஸ்தானத்திலும்பின்பு குண்டலிசத்தி யிடத்திலும் அதன்பின் மூலாதாரத்திலும்பிறகு அபானத்திலும்பிறகு கடிஸ்தானத்திலும்பின்தொடைகளிலும்பின் முழங்கால்களிலும்பின் கணைக்கால்க ளிலும்அதன்பின் பாதப் பெருவிரல்களிலும் நிறுத்தவேண்டும். ஒருதானத்தில் வாயு நிரம்பும் மட்டும் சித்தத்தை நிறுத்திபின் மற்றொரு ஸ்தானத்துக்குச் செலுத்துவதும் பிரத்தியாகாரமேயாம். வாயுவை இடைகலை பிங்கலையால் இழுத்துச் சுவஸ்திகாசன த்தி லிருந்துபாதம் முதல் சிரசுவரைக்கும் பூரித்துப்பிறகு இருபாதங்கள் மூலாதாரம்நாபிக்கந்தம்இருதயமத்திகண்டம்நாக்கு மூலம் புருவநடுநெற்றிசிரசு ஆகிய ஒன்பது இடங்களிலும் சித்தத்தை நிறுத்தவேண்டும். அகாரம்உகாரம்மகாரம்பஞ்சாட்சரங்கள் பிரணவம் ஆகிய ஒன்பது எழுத்துக்களையும் முறையே பாத முதல் சிரம் வரை ஒன்பது ஸ்தானங்களிலும்நிறுத்திச் சிந்திக்கவும். ஒரு ஸ்தானத்தை ஜயித்த பிறகு மற்றொரு ஸ்தானத்துக்குச் செலுத்தவேண்டும். இதுவும் பிரத்தியா காரமாம். சரீராதிகளை ஆத்மா என்று கூறுகிற ஞானத்தையும் பரமசிவனிடம் செலுத்து தலும் பிரத்தியாகாரமா மென்பர். இது பரம இரகசியமாகும். 

 

 

 

 

பதினெட்டாவது அத்தியாயம்.

தாரணை யுரைத்தல்.

சரீரமத்தியாகாசத்திலேபிராணவாயுவிலேஜாடாராக்கினியிலேஅப்புஸ்தானத் திலேபிருதிவி ஸ்தானத்திலே முறையே பேராகாயத்தையும்காற்றையும்அக்கினியையும்அப்புவையும்பிருதிவியையும்அபேதமாகச் சேர்த்துத் தாரணை செய்துஹகாரத்தையும்யரலவ என்கிறமெய்யெழுத்துக்களையும் விந்துவுடன் கூட்டி ஜபித்தலும் தாரணையாம். இது மஹாபாதகங்களை நீக்கும். முழங்கால் வரைக்கும் பிருதிவியின் பாகமாம். குதஸ்தானம் வரைக்கும் அப்புவின் பாகமாகும். இருதய ஸ்தானம் மட்டும் அக்கினி பாகமாகும். கண்ட ஸ்தானம் வரைக்கும் வாயுபாகம். அதன் மேல் சிரசு வரைக்கும் ஆகாசபாகமாகும். இவையே சரீரத்தில் பஞ்சபூத ஸ்தானங்க ளாம். இந்த ஸ்தானங்களில் பிருதிவிஸ்தான முதல் முறையே பிரமன்விஷ்ணுருத்திரன்மஹேசுவன்சதாசிவன் இவர்களைப் பாவிக்க வேண்டும். இது ஒருவகைத் தாரணை யாம்.

 

வேறு ஒருவகைத்தாரணையும் உண்டு. அதாவது மனதில் சந்திரனையும்செவிகளில் திக்குகளையும்வாக்கில் அக்கினியையும்கைகளில் இந்திரனையும்பாதங்களில் இந்திரனையும்பாதங்களில் உபேந்திரனையும்அபானஸ்தானத்தில் சூரியனையும்குய்யஸ்தானத்தில் பிரஜாபதியையும்தொக்கில் வாயுவையும்நேத்திரத்தில் சூரியனையும்நாக்கில் வருணனையும்மூக்கில் அச்சுவினி தேவர்களை யும்ஜீவனில் பரமசிவனையும் தரித்துப் பாவிப்பதும்பிரமன் முதலான காரியங்களை அதனதன் காரணத்தில் ஒடுக்கிஎல்லாவற்றுக்கும் காரணமானமாயையைச் சிவத்தில் ஒடுக்குவதும் தாரணையாம். விஷ்ணுமுதலான தேவர்களின் பெருமைகளையும்சிவபெருமானுடைய பெரிய புகழையும்காலவகைகளையும்விதியையும் மற்றும் சொல்லப்படுவன எல்லாவற்றையும்எடுத்துச் சொல்லுகிறபடியாலும்மசிவனு டைய வசனமாயிருத்தலாலும் அந்த வேதத்துக்கு ஒப்பான நூல் ஒன்று மில்லை யென்று கருதுதலும் தாரணையாம். தேவர்களும் தேகாதிகளும் நான் அல்லநான் பரமசிவனுக்கு வேறல்லஎன்று பாவனை செய்வதும் தாரணையாம்.

 

 

பத்தொன்பதாவது அத்தியாயம்.

தியானமுறை கூறியது.

 

பரிசுத்தமான ஆகாயத்தில் குளிர்ச்சியுடைய சந்திரன் பல கிரணங்களுடன் ஒளிவீசிக்கொண்டிருக்கும். அந்தச் சந்திர மண்டலத்தை முதலில் தியானிக்கவேண்டும். அந்தச் சந்திர மண்டலத்தி னடுவில் ஸ்ரீபரமேசுவரன் உமாதேவியுடன் ஆனந்த சொரூப முடையவரா யெழுந்தருளியிருப்பார். அந்தச் சிவசொரூபத்தை ஸோகம் பாவனை யாலே தியானிக்கவேண்டும். பரிசுத்தமான அந்த ஆகாசத்தினடுவிலே இலட்சம் யோசனை விசாலமுடையதாய் விளங்குகிற கதிர்மண்டலத்தில் உமாதேவியாரோடு கூடிச் சொர்ணமயமான திருவுருவமும்தாடி முதலியவுள்ள முகமும்நகமும்சிவந்தநிறமும் உடையவராய் விளங்கும் சிவபெருமானைச் சிந்திக்கவேண்டும். சுத்தமான வைதிகாக்கினியி னின்றும் தோன்றுகிற அளவில்லாத உலகங்களுக் காதாரமாகிய நிர்மல சொரூபமுடைய சிவபெருமானைபால்போலும் வெண்ணிற முடையவனாய்சந்திரகலாதரனாய்திரிலோசனனாய்விசுவரூபனாய்க் கருதிச் சோகம்பாவனை செய்ய வேண்டும். ஆயிரம் சிரசுகள்ஆயிரம் கைகள்ஆயிரம் கால்களுடையவனாய்சேதனாசேதனங்களுக்கு அதிஷ்டானனாய் நாராயணனென்னும் திருநாமமுடைய திருமாலை நான் என்று ஸோகம் பாவனை செய்ய வேண்டும். சிவபிரானுக்கு இருப்பிடமாய்பிரணவ சொரூபமான பிராணாயாமத்தால் மலருந் தன்மையுடையதாய்அணிமா முதலிய எட்டுச்சித்திகளையும் இதழ்களாகவுடையதாய்தத்துவவித்தைகளைக் கேசரமாகவுடையதாய் சாத்திரஞானத்தை நாளமாகவுடைய தாய்உண்ணிலைக்கருவிகளுக்கு அழகினைச் செய்து கொண்டு விளங்குகிற இருதய கமலமத்தியில் பலசுவாலையுடன் பாதமுதல் சிரசுவரைக்கும் உஷ்ணம் கொடுத்துக் கொண்டுகாற்றில்லாவிடத்தில் எரிகிற விளக்கைப் போல அசைவற்றுக்கரிய மேகத்துக் கிடையில் மின்னல் விளங்குவது போலப் பிரகாசித்துக்கொண்டுநீவாரதானியம் போன்ற சொரூபமுடையதாய்மஞ்சள் நிறமுடையதாய் விளங்குகிற அக்கினியையும் தியானிக்க வேண்டும். அந்த அக்கினிச்சிகையின் மத்தியில் சிவபெருமான் விளங்குகிறார். அந்தச் சிவபெருமானை வேற்றக்கருதி ஸோகம் பாவனை செய்ய வேண்டும். இது வேதங்களால் சொல்லப்பட்டதும் முத்திக்கு மார்க்கமாயுள்ளதுமாம். 

 

தன்னைப் புண்ணியவானாக எண்ணிக்கொண்டு தன்னுடைய இருதய மத்தியில் சர்வசாட்சியாக வீற்றிருந்தருளும் சிவபெருமானை ஸோகம் பாவனையால் தியானிக்க வேண்டும். சச்சிதானந்த சொரூபமுடையவனாய்நித்தியனாய்தத்துவாதீதனாய்அத்துவா மூர்த்தியாய்சர்வவியாபகனாய்த் துரியா தீதனாயுள்ள பமசிவனைத் தியானிக்க வேண்டும். இப்படிப்பட்ட சிவபெருமானைத் தனக்கு வேறாகாமல் ஸோகம் பாவனை செய்கிறவன் சிவனேயாவான்சகல பாவங்களினின்றும் விடுபடுவான். அவனே முத்தியடையத் தக்கவன். இப்படித் தியானஞ் செய்யச் சக்தியற்றவன் மஹாவிஷ்ணுவையாவதுபிரமதேவனையாவதுசூரியனையாவதுஅக்கினி தேவனை யாவதுசந்திரனையாவது தியானிக்கவேண்டும். இப்படி இடைவிடாமல் தியானம் பண்ணிக்கொண் டிருந்தால் அவன் மெய்ஞ்ஞானத்தை அடைவான்.

 

              

இருபதாவது அத்தியாயம்.

சமாதி கூறியது.

 

சச்சிதானந்த சோதி சொரூபனாகிய சிவபெருமானுடைய ஒளிவடிவத்தில் சகல சீவன்களும் வேற்றக்கலந்திருக்கும். அந்தக் கலப்பே சமாதியாகும். அத்துவிதமென்கிற சொல்லுக்கு வேறில்லை யென்று பொருள். எல்லாச்சீவர்களும் தானாகவே சிவபெரு மான் விளங்குவார். ஆலால் அவரைத் தனக்கு வேறாகாமல் ஸோகம் பாவனை செய்ய வேண்டும். துவைதபாவனை செய்தால் ஒருபோதும் பிறப்பு நீங்காது. அந்தச் சோதி சொரூபன் ஏகனானாலும் தன் மாயையாலே பல சொரூபமாகக் காணப்படுவன். மடாகாசத்தையும் கடாகாசத்தையும் போலப்பேதமாகக்காணப்படுகிற இந்த உண்மை யைத் தெரிந்து கொண்டால் பேத பாவனை அற்றுப் போகும். பிராணவாயுபொறிமனம்சித்தம்அகங்காரம்பஞ்சபூதம்தன்மாத்திரைகள்மாயை இவைகளைத் தான் என்று எண்ணாமல் தன் ஆத்ம சொரூபத்தின் உண்மையைத் தெரிந்து கொண்டுஆனந்த மயமான பரமஜோதியில் கலந்திருப்பதும் சமாதியாகும். பூதகாரியமாகிய அண்டங்கள் எல்லாவற்றையும் பூதம் என்று உணர்ந்து கொண்டுஅவற்றை விவேகாக்கினியாலே தகித்துப் பின்ஸ்தூலபூதங்களைச் சத்தாதி தன் மாத்திரைகளாக க்கண்டு தகித்துபிறகு அந்தச் சூட்சுமபூதங்களை மாயை மாத்திரமாகக் கண்டு தகித்துமாயையும் அருளால் தகித்துவிட்டுப் பரமானந்மயமாகிய சிவஜோதியிலே ஒடுங்கி நிற்பதும் ஒருவகைச்சமாதி யாம்.

 

பிரணவ சொரூபமான சிவபெருமானை அகார உகார மகார நாதசொரூபியாக உணர்ந்து கொண்டுஅந்த அகார உகார மகார நாதமாகிய நான்கினையும் இருக்கு யஜுஸ் சாம அதர்வணவேதங்களாகவும்பிரமன் விண்டு ருத்திரன் காரணசிவமாகவும், காருகபத்தியம்தட்சணாக்கினீயம்ஆகவனீயம்சம்வர்த்தம் என்கிற அக்கினிகளாக வும்பூமிஅந்தரம்சொர்க்கம்சந்திரலோகமாகவும்ஜாக்கிரம் சொற்பனம் சுழுத்தி துரியங்களாகவும்நாபி இருதயம் கண்டம் சென்னிகளாகவும் கருதிஇவைகளெல்லாம் பிரணவமே யென்றுகொண்டுஅகாரத்தை உகாரத்திலும்உகாரத்தை மகாத்திலும்மகாரத்தை நாதத்திலும்நாதத்தை மாயையிலும்மாயையை ஆன்மாவிலும்ஆன்மாவைச் சிவத்திலும் ஒடுக்கி நிற்பதும் சமாதியேயாம். அலை நுரை முதலியவைகள் சமுத்திரத்திலே தோன்றி அந்தச் சமுத்திரத்திலேயே அடங்குகிறது போலப் பிரபஞ்சம் சிவத்திலே தோன்றி யந்தச் சிவத்திலேயே ஒடுங்கும். அந்தச் சிவத்திலே ஒடுங்கிநிற்கிற எனக்குப்பிரபஞ்சம் ஏதுமாயை ஏதுஒன்றுமில்லை யென்று கருதிச் சிவத்தில் ஒடுங்கி நிற்பதும் சமாதியாகும். விகாரமற்ற நிர்மல ஒளியாகிய சிவசோதி எப்போது தோன்றுமோ அப்போது சமாதியும் சித்திக்கும். தன் ஆன்மாவில் எல்லா ஜீவன்களையும் பார்ப்பதும்எல்லாச் சீவன்களிலும் தன் ஜீவனைத் தரிசிப்பதும்எப்போது ஒருவனுக்குச் சித்திக்கின்றதோ அப்போதே அவன் முத்தியடைந் தவனாவான். இப்படியாகச் சித்தத்தைச் சிவபெருமானிடத்தில் நிறுத்தி அந்தச் சிவத்தோடு அபேதமாய்க் கலந்திருக்கிறவன் முத்தனாவான். சிவபெருமான் திருவடியில் மனத்தைச் செலுத்தி யான் எனது என்பது அற்று நிற்பவனே முத்தி பெற்ற வனாவான். மஹாதேவனே நித்தியன்பிரபஞ்சம் எல்லாம் அவனுடைய மாயையிலே தோன்றி ஒடுங்கும் என்று தெரிந்து கொண்டவன் முத்தனாவான். சதா துக்கத்தையே தருவதாகும் ஜனன நோய். அந்த நோயை நீக்குகிற மருந்து சிவபெருமானேயாம். அந்தச் சிவத்தை உணரும் மெய்ஞ்ஞானத்தை அறிந்தவன் சிவனே ஆவான். எத்தனை கருபங்களைச் செய்தாலும் அவை ஒருகாலு நிலைபேறான பலனைத் தருவதில்லைசிவஞானமானது நிலைபெற்ற பேரின்பத்தை அருளும்ஒருநாளும் அழியாது. அக்ஷயமாயிருக்கும். தீபச் சுடரானது சிறிதாக இருந்தாலும் இருட்டை ஒழிப்பது போலவும்ஒரு சிறிய தீப்பொறியானது பெரிய வனத்தைத் தகிப்பது போலவும்சிவஞானம் சிறிது பெற்றாலும் அது அவனுடைய பாவங்க ளெல்லாவற்றையும் தகிக்கும். மந்திரசித்தி பெற்றவன் பாம்புடன் சதா கூடியிருந்தாலும் அந்தப்பாம்பினாலே கடிக்கப்பட மாட்டான். அது போல சிவஞானத்தை அடைந்த சிவயோகி உலகத்துடன் கூடியிருந்தாலும் அவ்வுலகவாதனையை அடைய மாட்டான். தாமரையிலைத் தண்ணீரைப் போலப் பிரபஞ்சவாதனையோடு கூடாமலே யிருப்பான்.

 

இப்படிப்பட்ட சிவஞானியைச் சிவனென்று கருதாமல் அவமதிக்கின்ற பாவியானவன் வெகுகாலம் நரகத்தில் விழுந்து கிடப்பான். சிவஞானி எவனுடைய வீட்டிலே காலடிவைப்பான் அவனுடைய வீடு எப்போதும் குறையாத செல்வத்துடன் கூடி விளங்கும். அவனுடைய பிதிர்களும் பாவம் நீங்கி முத்திசேர்வார்கள். சிவஞானியுடைய கடாட்சம் யாருக்குண்டாகிறதோ அவன் சக பாவங்களினின்றும் விடுபடுவன். அந்த ஞானி பிறந்தகுலம் ஈடோறும். அவனைப்பெற்ற மாதாவும் முத்தியை அடைவாள். சிவஞானியைத் தரிசிப்பதே சிவதரிசனமாகும். அந்தச் சிவ ஞானி தங்கின பூமி புண்ணிய க்ஷேத்திரமாம். அவனை வணங்குதல் சிவனை வணங்கு தலேயாம்அந்தச் சிவஞானிக்குச் செய்யும் பணிவிடைகளெல்லாம் சிவ பணிவிடை களேயாகும்இப்படிப்பட்ட சிவஞானிகளுடைய மகிமைகளை யுணராமல் உலகம் நரக வேதனையை யடைகின்றது. எவனுக்குச் சிவபக்தி சிறந்திருக்கிறதோ அவனுக்குத்தான் சிவஞானமும் கிடைக்கும்மற்றவர்க்குக் கிடைக்காதுசிவஞானத்தின் பெருமை சொல்லுக்கடங்காதவைகளாம்.

 

ஞானயோககாண்டம்

முற்றிற்று.

 

 

 

 

 

 

 

செந்திலாண்டவன்

திருவடி துணை.

 

மூன்றாவது.

முக்தி காண்டம்.

 

முதலாவது அத்தியாயம்.

சூத புராணிகர் மேருமலைக்குச் சென்றது.

 

சூரியன் சந்திரன் முதலிய கிரகங்களும் நட்சத்திரங்களும் பிரதட்சணம் செய்வதாய்மூன்று உலகங்களுக்கும் ஆதாரமானதாய் விளங்குகிற மஹாமேருபருவத த்தில்நானாவகைச் செடி கொடிகளும் விருட்சங்களும் அடர்ந்து வளர்ந்து விளங்குகிற ஒரு பொழில் உண்டு. அதில் இரணியாட்சன்கிலீபன்மகோதரன்மஹாபாகுசங்குகர்னன்விசுவன்காலமாலிஉருத்திரபக்தன்ஆருணேயகன்சதருத்திரன்ஜாபாலி முதலான எழுபத்தீராயிரம் முனிவர்கள் தவசுசெய்து கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாரும் ஒரு மஹாசத்திர யாகம் செய்தார்கள். அந்த யாகத்தின் முடிவில் அந்த முனிவர்கள் எல்லாரும் கூடி மோட்சம் என்பது என்னஅதை அடைகிற மார்க்கம் எதுஅந்த முக்தியை அளிக்கிற தெய்வம்யார்அந்தத் தெய்வத்தைத் தரிசிப்பிக்கிற குரு எவன்என்று ஆலோசித்தார்கள். யோசித்தும் உண்மை அறியமுடியவில்லை. ஆகையால் இந்தச் சந்தேகத்தை நிவிர்த்திசெய்து கொள்வதற்காகத் தவம் செய்வோம் என்று தீர்மானம் செய்து கொண்டு ஸ்ரீ பரமேசுவரனை நோக்கித் தவசு செய்தார்கள். 

 

அப்போது கைலாசமலையின் ஒருபக்கத்தில் தவசுசெய்து கொண்டிருந்த சூதபுரா ணிகர் நைமிசாரணிய முனிவர்களுடன் சேர்ந்து அந்த யாகத்தைக் காணவந்தார். அங்கே யிருந்த ரிஷிகள் எல்லாரும் எழுந்திருந்து சூதமுனிவரை யெதிர்கொண்டு அர்க்கியம்பாத்தியம்ஆசமனீயம் கொடுத்துஒரு ஆசனமிட்டு அதில் எழுந்தருளச்செய்துதாங்களும் அவரைச்சூழ உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு சூதமுனிவர் அவர்களை நோக்கி நீங்கள் சரீரம் மெலியும்படியாகத் தவசு செய்தகாரணம் என்ன என்று கேட்டார். முனிவர்கள்புராண இரகசியங்களை யெல்லாம் உணர்ந்த சூதமுனிவரே! முக்தி என்பது என்ன? அதைப் பெறுகிற மார்க்கம் என்னமுக்தியைக் கொடுக்கும் தெய்வம் எதுஅந்தத் தெய்வத்தைத் தரிசிப்பிக்கிற குரு யார்என்பதைப் பற்றி ஆலோசித்தோம். எங்களுக்கு உண்மை புலப்படவில்லை. அதை உத்தேசித்தே தவசு செய்தோம். தேவரீர் எழுந்தருளினமையால் நாங்கள் பாரியசித்தி பெற்றோம். ஆகையால் எங்களுக்கு உணடான சந்தேகத்தை நீக்கியருள வேண்டும் என்று சொன்னார்கள். சூதமுனிவர் மன மகிழ்ந்து முனிவர்களே! நீங்கள் கேட்டதைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று சொல்லுகிறார். 

 

 

இரண்டாவது அத்தியாயம்.

முக்தியின் சொருப முரைத்தல்.

 

க்ஷீராப்தியிலே சேஷசயனத்தின் மேல் அறிதுயில் அமர்ந்தருளும் இலட்சுமி காந்தனாகிய திருமாலானவர் கயிலாசமலைக்குப்போய் ஒரு இடத்திலிருந்து கொண்டுபஞ்சேந்திரியங்களையும் அடக்கிநாசி நுனியில் பரர்வையைச் செலுத்திஉமாகாந்த னை நோக்கி நெடுங்காலம் தவம்புரிந்தார். அப்போது பரமேசுவரன் உமாதேவியாரோ டும் ரிஷபவாகனத்தின்மேல் எழுந்தருளிக் காட்சி தந்தார். உடனே திருமால் எழுந்து மகிழ்ந்து சிவபெருமானை வணங்கித் துதித்துப் போற்றினார். மஹாதேவன் திருமாலை நோக்கி உன் மனதிலுள்ள விருப்பம் என்னஎன்று கேட்டார். நாராயணர் மறுபடியும் வணங்கி மஹாதேவா! முத்தியின்னதென்பதையும்அதை அடையும் உபாயமும்அதைக் கொடுக்கும் தெய்வத்தையும்அந்தத் தெய்வத்தை உணர்த்தும் குருவையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அவற்றை விளக்கி யருள வேண்டுமென்று வேண்டினார். சிவபெருமான்நீ கேட்டது நல்ல கேள்வியே. சொல்கிறேன் கேள் என்று சொல்கிறார்.

 

திருமாலே! முத்தியானது பதமுத்தி யென்றும்சாயுஜ்ய முத்தி யென்றும் இரண்டு வகைப்படும். அவற்றுள் பதமுத்தி சாலோகம்சாமீபம்சாரூபம் என்று மூன்று வகைப்படும். பிரம தேவனை ஆராதிக்கிறவர்கள் பிரம சாலோகம் முதலிய மூன்று பத முத்திகளையும்நாராயணனைத் தொழுபவர்கள் விஷ்ணு சாலோகம் முதலிய மூன்றையும்ருத்திரனை ஆராதிப்பவர்கள் ருத்திர சாலோக முதல் மூன்றையும் அடைவார்கள்இவை முறையே ஒன்றைவிட ஒன்று மேலானது. சதாசிவ சாலோகம்முதலிய மூன்று பத முத்திகளும் உண்டு. இவை முன் கூறியவை எல்லா வற்றுக்கும் மேலானது. இப்போது சொன்ன நால் வகையான முத்திகளில் அடையும் போகமும் ஒன்றற் கொன்று அதிகமாகும். இவைகளைத் தவிர வேறு சாலோகாதி பத முத்திகளும் உண்டு. சரியைகிரியையோகங்களை அனுஷ்டித்தவர்கள் முறையே சாலோக சாமீப சாரூப பத முத்திகளை அடைவார்கள். அவர்கள் புண்ணிய பலனாகிய போகங்களை அனுபவித்துத் தீர்ந்த பின் பூமியில் வந்து பிறப்பார்கள். அதனால் அவர்களுக்கு ஜனன மரணங்கள் ஒழியா. சாயுஜ்ய முத்தி ஒன்றே அழியாமல் நித்திய மாயுள்ளது. அதைப் பெற்றவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள். 

 

இப்படிப்பட்ட சாயுஜ்ய முத்தியை மெய்ஞ்ஞானிதான் அடைவான். ஒளிவடிவ மான சிவத்துடன் வேற்றக் கலப்பதே சாயுஜ்யமாகும். இதைத் தான் மோட்சம் என்று வேதாந்தம் கூறுகின்றது. இதற்கு மேற்பட்ட முத்தி வேறு கிடையாது. இந்த முத்தி சிவத்துக்கு வேறானதல்ல. சித்த சுத்தியுடன் சிவபிரானை ஆராதித்து வழிபட்டுஞானம் பிறந்து சன்மார்க்கத்தில் நின்று. ஆகாமியம் ஏறாமல் ஒழித்துபிரபஞ்சங்களை யெல்லாம் கனாவைப் போலக் கண்டு கழித்துச்சிவத்தினிடம் விழித்திருப்பவனே சீவன் முத்தனாவான். அவனே சிவத்தை அடைந்தவனாவான். சிவத்தின் உண்மைச் சொரூபத்தை அறியாதவன் இதை உணர மாட்டான். அறிந்தவனைப் போலப் பேசுகிற அவன் வஞ்சகனே. ஆகையால் இந்த முத்தி சொரூபத்தை மௌனமாயிருந்து சிந்தித்து உன் சுவானுபவத்தால் அறிந்து கொள் என்று மங்கை பங்காளன் அருளிச் செய்தான். திருமாலும் மனமகிழ்ந்து அவ்வாறே பேரின்பத்தை அடைந்தான். ஆதலால் முனிவர்களே! தான் முத்தி யென்று அறியுங்கள் என்று சூதர் சொன்னார். 

 

 

மூன்றவது அத்தியாயம்,

முத்தியுபாயம் கூறியது.

 

மறுபடியும் நாராயணன் சிவ பெருமானுடைய சேவடிகளில் வணங்கிமுத்தியடையும் உபாயத்தைச் சொல்ல வேண்டுமென்று கேட்கச் சொல்கிறார். திருமாலே முக்தி அடைவதற்கு ஞானத்தைத் தவிர வேறு உபாயம் கிடையாது. அந்த ஞானம் வேதாந்த வாக்கியப் பொருளை அறிந்து திடப்பட்ட மனதிலே தான் தோன்றும். அந்த ஞானமே நமது சொரூபமாகும். அந்த ஞானத்தால் அஞ்ஞானம் நீங்கும். அப்போது அத்துவித பாவனையுண்டாகும். அபேத பாவனை யுண்டானால் பிரபஞ்ச மெல்லாம் ஒழிந்து போகும். அதனால் இராகத்துவேஷாதிகள் விலகும். அதனால் தர்ம அதர்மங்கள் ஒழியும். அப்போது இந்திரியங்கள் தாமே யடங்கும். அடங்கினால் ஆன்ம ஞானம் உண்டாகும். ஆன்ம ஞானத்தினாலே பாசம் அகலும்அப்போது சமுசார பந்தமும் ஒழியும். பழுதையைப் பாம்பு என்று காண்கிற மயக்கம் பழுதையை யுணரும் ஞானத்தா லொழிந்துபழுதையும் பாம்பும் ஒன்றாகக்காணப்பட்ட அபேதஞான முண்டானது போலபிரமத்தில் ஆரோபிதமான சமுசார பந்தம் ஆன்ம ஞானத்தால் அழிந்து பிரமமாகவே தோன்றும். பிராந்தியால் தோன்றின சமுசார மயக்க மொழிந்து உண்மையான பிரமம் தோன்றும் என்பதாம். சிவம் வேறு நான் வேறு என்று எண்ணக் கூடாது. அப்படி எண்ணுவதால் பாச மொழியாது. கருமத்தாலே அடையப்படும் முக்தி சொர்க்க வாழ்வைப் போல அழிவதானாலும்அந்தக் கருமம் ஞானத்துக்குச் சாதகமாம். அந்தக் கன்மம் ஆந்தரம்பாகியம் என்று இரண்டு வகைப்படும். ஆந்தரம் என்பது மனத்தால் செய்யப்படுவது. பாகிய கருமம் காயிகம் வாசிகம் என்று இருவகைப்படும். எமது உண்மையான சொரூபத்தை உணர்ந்து மானத கருமத்தைச் செய்கிறவன் மெய்ஞ்ஞானத்தை அடைவான். எம்மை மனதினால் தியானிக்குந் தன்மை பெற்றவ னும் மெய்ஞ்ஞானத்தை அடைவான். தியானிக்கிறவன் மனக்களங்க முடையவனா யிருந்தால் சாரூப முத்தியை யடைந்துபோகங்கள் எல்லா வற்றையும் அனுபவித்துப் பின் மெய்ஞ்ஞானத்தை அடைந்து முத்தியையும் பெறுவான். உருத்திர மூர்த்தியைத் தியானித்து ஆராதிக்கிறவன் ருத்திரசாரூபத்தை அடைந்து பின் மெய்ஞ்ஞானத்தை அடைந்து முத்தி பெறுவான். களங்க சித்த முடையவர்கள் வைகுண்டமாதி பதவிகளை யடைந்துபோகங்களை அனுபவித்துப் பிறகு பூமியிலே வேதப் பிராமண குலத்தில் பிறந்து ஞானத்தைப் பெற்று முத்தி அடைவார்கள். திருமாலே உன்னைப் பூசிக்கிறவன் உன் சாரூபத்தைப் பெற்றுப் பின் எமது சாமீபத்தை அடைந்துபிறகு ஞானம் பெற்று முத்தி யடைவான். பிரமனைத் தொழுகிறவர்கள் பிரமாவின் சாரூபத்தைப் பெற்றுப் பின்பின் உனது சாமீபத்தையும்அதன் பின் எமது சாலோக பதவியையும் பெற்று வெகு நாள் கழிந்தபின் ஞானம் பெற்று முத்தி யடைவார்கள். அவர்கள் களங்க நெஞ்ச முடையவர்களானால் பிரம லோகத்திலுள்ள போகங்களை அனுபவித்துப்பூலோகத்தில் உயர்ந்த குலத்தில் ஜனித்துஅந்தப் பிரமனையே பத்தி செய்து அவனது சாலோகாதி பதவிகளை முறையே பெற்றுபின் மேலான பதவிகளைப் பெறுவார்கள். எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வத்தின் சாலோகாதி பதவிகளை முறையே பெறுவார்கள். பிறகு நற்கருமங்களைச் செய்து ஞானம் பெற்று மோட்சத்தை அடைவார்கள். ஒரு சொரூபத்தில் நம்மைப் பாவனை செய்து பூசிக்கிற வன் அவனுடைய மனத் தூய்மைக்குத் தக்கபடி நமது சாலோகாதிகளை முறையாகப் பெற்றுப் பின்ஞானத்தை அடைந்து முக்தி பெறுவான். பாகிய கருமம் செய்கிறவன் வெகு காலத்துக்குப் பின் முத்தி யடைவான். மானதகருமத்தால் சீக்கிரத்தில் முத்தி யடைவான். மானத கருமத்தாலே நாம் மிகவும் மகிழ்ச்சி யடைவோம். தினந்தோறும் பிரணவ மந்திரத்தைப் பன்னீராயிரம் ஜபித்தாலும்பிரணவத்தோடு பஞ்சாட்சரத்தைப் பன்னீராயிரம் ஜபித்தாலும்சதருத்திரீயத்தைத் தினந்தோறும் ஜபித்தாலும்அவர்கள் மரணாந்தத்தில் நமது. திருவடியை அடைவார்கள். முத்தி யடைவதற்கு வேறொரு வழியும் உண்டு. அதாவது காசி முதலான முத்தி க்ஷேத்திரங்களில் வசித்துமரித்தவர்கள் முத்தி அடைவதில் சந்தேக மில்லை. 

 

முன் ஒருகற்பத்தில் சூத்திர வருணத்திற் பிறந்தவன் ஒருவன் இருந்தான். அவன் பாவமே வடிவங் கொண்டுவந்தது போன்றவன். சிறிதாவது புண்ணியம் செய்து அறியான். மஹா கொடியவன். அவன் பெயர் கோலாகலன். காமுகன்இரவும் பகலும் காம இன்பம் நுகர்வதையே தொழிலாக உடையவன். பாவத்துக் கஞ்சுவதில்லை. வரம்பு கடந்துபல சாதி மாதரையும் கூடுவான். அநேகரைப் பலவந்தமாய்க் கற்பழிப்பான். அநேகரைத் தன் வசமாக்கிக் கலந்தான். அவனை எல்லாரும் வெறுத்தார்கள். உறன் முறையாரும் கசந்தார்கள். ஒரு நாள் எங்கும் அலைந்து பார்த்தும் ஒரு பெண்ணும் அகப்படவில்லை. வீட்டுக்குத் திரும்பி வந்து அதே கவலையாய் நித்திரையில்லாமல் மிகுந்த துன்பட்டுக் கொண்டிருந்தான். பின் எழுந்திருந்து தன் மாதா படுத்திருந்த இடத்துக்குப் போனான். அப்போது அவனுடைய பிதாவும் அங்கில்லை. ஆகையால் வெகுசந்தோஷத்துடன் தாயாரைக் கலந்தான்அவளும் உடன் பட்டாள். இந்த இரகசியத்தைத் தன் கணவன் அறியாதபடி பல நாள் மறைத்து வைத்திருந்தாள். கோலாகலன் தன் பிதா அறிந்தால் இரகசியம் வெளிப்படும் என்று கருதிச் சமையம் பார்த்திருந்து ஒரு நாள் பிதாவையும் கொன்று விட்டான். பிறகு இவ்வூரில் இருந்தால் ஆபத்து வருமென்று எண்ணி மாதாவை அழைத்துக் கொண்டு மறுதேசம் போனான். வேதாரணியம் என்னும் க்ஷேத்திரத்தை அடைந்து அங்கே வாசம் பண்ணிக் கொண்டிருந்தான். சில நாட்கள் சென்றபின் கோலாகலன் மரித்தான். அவன் சிவ க்ஷேத்திரத்தில் வசித்த படியால் சகல பாவமும் நீங்கிச் சிவலோகத்தை அடைந்தான். ஆதலால் சிவதலத்தில் வசிப்பதும் முத்தி யடைய யடைய ஒரு சிறந்த உபாயமாம் என்று சிவ பெருமான் கூறத்திருமால் மகிழ்ந்து பரமசிவனைப் பலவாறு துதித்து வணங்கிஅந்த வேதாரணியத்தின் மகிமையை விளங்கச் சொல்ல வேண்டுமென்று கேட்கச் சந்திரசேகரன் சொல்கிறார். 

திருவாரூருக்குத் தென் திசையில் சமுத்திர தீரத்தில் வேதாரணியம் என்னும் க்ஷேத்திரம் இருக்கின்றது. அந்த ஸ்தலத்தில் யாம் உமாதேவியோடு எப்போதும் மகிழ்ந்து வசிக்கின்றோம். ஒரு காலத்தில் பிரளயம் உண்டாயிற்று. அப்போது சகல லோகங்களும் அழிந்து போயின. வேதங்களெல்லாம் எம்மிடம் வந்து எமது சரீரத்தில் சேர்ந்து வசித்தன. மறுபடி சிருஷ்டியாகும் போது நமது சரீரத்தில் இருந்து அந்த வேதங்கள் பிறந்தன. அவைகள் ஒரு தீர்த்தம் உண்டாக்கின. அதன் பெயர் வேத தீர்த்தமென்று பெயர். பெயர். அந்தத் தீர்த்தம் ஒரு யோசனை அகலமும் இரண்டு யோசனை நீளமும் உள்ளதுஅந்தத் தீர்த்தத்தில்ஞாயிற்றுக்கிழமைபருவதினத்தில் ஸ்நானம் செய்து வேதங்கள் எம்மைப் பூசித்தனசுப்பிரமணியர் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து எம்மைப் பூசித்துத் தாரகாசுரனைச் சங்கரித்து உலகத்திற்கு க்ஷேமத்தை உண்டாக்கினார். அந்தத் தலத்தில் நாரத முனிவர் பூசித்து ஞானசித்தி பெற்றார். யாக்கியவல்கியர் பருவ காலத்தில் அதில் ஸ்நானம் செய்து எம்மைப்பூசித்து யோக சித்தி பெற்றார்கார்க்கியர்மயித்திரேயர் இவர்கள் பூசித்து யாக்கியவல்கியரிடம் யோகத்தைப் பெற்றார்கள். சுவேதகேது பூசித்து ஞானம் பெற்றான். வருணன் பூசித்து ஞான அடைந்தான். அவனுடைய புத்திரனும் பூசித்து ஞானம் பெற்றான். திரிசங்கு முதலாக அநேகரும் பூசித்து ஞானம் பெற்றார்கள். இவை யெல்லாம் வேத தீர்த்தத்தின் மகிமையேயாம். பருவம்திருவாதிரை நட்சத்திரம்ஞாயிற்றுக்கிழமை வியதிபாதம்உத்தராயண தட்சணாயன காலம்சூரியசந்திர கிரகண நாள் இவைகளில் அந்தத் தீர்த்தத்தில் விதிப்படி ஸ்நானஞ்செய்துஎம்மைப் பூசித்து நமது பக்தர்களையும் வணங்கிஅவர்களுக்குத் தானம் கொடுத்து உபவாசமிருந்தவர்கள் பிரமஹத்தி முதலிய மஹா பாதகங்களினின்றும் விடுபடுவார்கள். அந்தத் தீர்த்தக்கரையில் பூதானம் செய்த பேர்கள் உருத்திரலோகத்தை அடைவார்கள். தானிய தானம் செய்தவர்கள் நோயில்லா வாழ்வடைவார்கள். எள்ளைத் தானம் செய்தவர்கள் சகல பாவங்களினின்றும் விடுபடு வார்கள். கன்னிகாதானம் செய்தவர்கள் உமாதேவியின் சாமீபமுத்தி பெறுவார்கள். வஸ்திரதானம் முதலியன செய்தவர்கள் சொர்க்கலோகத்தில் இந்திரனைப்போல வாழ்வு பெறுவார்கள். அந்த வேதாரண்யத்தில் வசித்துத் தேகத்தை விட்டவர்கள் எவரா னாலும் முத்தி அடைவார்கள். இதில் சமுசயமில்லை என்று சிவபெருமான் திருமாலுக்கு உபதேசித்தார். இதுவே முத்தியுபாயமாம். 

 

 

நான்காவது அத்தியாயம்.

மோசகனை யுரைத்தல்

 

திருமால் மீண்டும் சிவபெருமானை வணங்கி மோசகனை விளக்கியருள வேண்டு மென்று கேட்கச் சொல்லுகிறார். திருமாலே! முன் ஒருகாலத்தில் சரஸ்வதி தேவி நெடிய தவஞ்செய்து இதைக் குறித்து எம்மைக் கேட்டாள். அவளுக்குச் சொன்னபடி உனக்குச் சொல்கிறேன் கேள். பிரமன் முதலாகவுள்ள வுயிர்கள் எல்லாம் பசு என்னப்படும். அந்தப் பசுக்களுக்கு நாம் தலைவனாகையால் நமக்குப் பசுபதி என்று பேர். அனாதி கருமத்துக்கு ஏற்றபடி ஜீவான்மாக்களுக்குத் தனுகரண புவன போகங்களைச்சுத்தா சுத்த மாயையில் உண்டாக்கிக் கொடுத்துப்பரிபாகம் பெற்ற உயிர்களுக்குப் பந்தத்தை ஒழிப்போம். ஜீவாத்மாக்களுக்குப் பந்தத்தைக் கொடுப்பவ னும்அந்தப் பந்தத்தை ஒழிப்பவனும் நானே. 

 

பிரமாண நூல்கள் எல்லாவற்றுள்ளும் வேதமே சிறந்த பிரமாணமாகும். அந்த வேதத்துக்குத் தன்னாலாவதுவேறு நூல்களாலாவது வாதையுண்டாவதில்லை. அந்த வேதத்தைத்தவிரப் பிரத்தியட்சம் முதலான சகல பிரமாணங்களுக்கும் மாயையாலே வாதையுண்டாம். வேதத்துக்கு விரோதமில்லாத புராணங்கள் எல்லாம் பிரமாணங்களே யாம். வேதமூலமல்லாத மற்ற நூல்கள் சிறிதும் பிரமாணமாகா. அவைகள் அஞ்ஞானிகளுக்கே பிரமாணம். அவர்கள் முத்தி அடைவது அரிது. அந்த நூல்களில் வேத விரோதமாகாத பாகத்தைத் தழுவி நடப்பவர்கள் நெடுங்காலம் சென்ற பின் முத்தி பெறுவார்கள். ஆகையால் வேதவிரோதமான நூல்களைத் தழுவி நடக்கக்கூடாது. வைதிக கர்மம் செய்பவர்களுக்குச் சீக்கிரத்தில் நாம் தோன்றுவோம். ஞானத்தை யடைய முயல்வோர்களுக்கு அதிக சீக்கிரத்தில் பிரத்தியட்சமாவோம். ஞானிகளிடத் தில் ஜோதிமயமாய் எப்போதும் இருப்போம். மனோவாக்குகளுக்கு எட்டாத நிஷ்களமா கிய நாமே எல்லாச் சீவர்களுக்கும் முத்தியைக்கொடுப்போம். இதை நீ அறிந்து கொள் என்று சிவபிரான் கூறக் கேட்ட திருமால் மகிழ்ந்து சிவபெருமானைப் பலவாறாகத் துதித்தார். 

 

என்று கூறிச் சூதபுராணிகர் முனிவர்களை நோக்கி முனிவர்களே! இதனால் ஜீவானமாக்களுக்குப் பந்தமொழித்து முத்தி தரும் மோசகளை யின்னானென்று தெரிந்து கொள்ளுங்கள். இன்னமும் ஒரு சரித்திரம் சொல்கிறேன் கேளுங்கள். பூர்வகாலத்தில் சாந்தகுணன் என்று ஒரு பிராமணன் இருந்தான். அவன் நற் கருமங்களையே செய்து கொண்டிருந்தான். பின் உலகவாழ்க்கையை வெறுத்து முத்தி பெற வுபாயந்தேடினான். அவன் அக்கினி தேவனை நோக்கித் தவம் செய்தான். அக்கினி பிரத்தியட்சமான போது அவனை நோக்கி எனக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்றான். அக்கினிதேவன் நான் முத்தியளிக்கச் சக்தியுள்ளவனல்ல என்று சொல்லி மறைந்து போனான். பிறகு சூரியனை நோக்கித்தவம் செய்தான். சூரியன் பிரத்தியட்ச மானான். சூரியனை நோக்கி எனக்கு முத்தி தர வேண்டுமென்றான். சூரியனும் என்னா லாகாதென்று கூறிப் போய்விட்டான். பிரமதேவனை நோக்கித் தவம்புரிய அவனும் வந்து என்னால் முத்தியளிக்க முடியாதென்று கூறிப்போய் விட்டான். பிறகு திருமாலை நோக்கித் தவம் செய்தான். நாராயணர் வந்துமுத்திகொடுக்கும் முதல்வன் நான் அல்ல. சிவபெருமான் ஒருவரே முத்தியளிப்பவர். அவரை நோக்கித் தவம் செய் என்று கூறி மறைந்து போனார். பிறகு சாந்தகுணன் பரமசிவனை நோக்கித்தவம் புரிந்து அவரை யாராதித்தான். அப்போது மஹாதேவன் வெளிப்பட்டுஅவனுக்கு மெய்ஞ்ஞான த்தையுதவி முத்தியையும் அருளினார். ஆதலால் முனிவர்களே! சந்திரஜடாதர மூர்த்தியாகிய உமாகாந்தனே முத்தியருளும் மூவா முதல்வனென்று தெரிந்து கொள் ளுங்கள் என்று சூதர் கூறினார். 

 

ஐந்தாவது அத்தியாயம்.

மோசகப்பிரதனை யுரைத்தல்.

 

திருமால் உமாசகாயனை வணங்கி மோசகப்பிரதனை விளங்க வுரைக்க வேண்டு மென்று வேண்ட மஹாதேவன் கூறுகிறார். மெய்ஞ்ஞான சித்திபெற்றுஎம்மைத் தனக்குள்ளே கண்டு தெரிசிப்பவனே மோசகப்பிரதனாகிய சற்குருவாகும். பிராமண குலத்திற்பிறந்தவனே சிறந்த உத்தம ஆசாரியனாவான். க்ஷத்திரியர் குலத்திலுள்ளவன் மத்திமகுருவைசியர் குலத்தான் அதமகுரு சூத்திரர்களில் குருவில்லை. அதமகுருவா கிய வைசியன் தன்குலத்தாருக்கும் சூத்திரர்களுக்கும் உபதேசிக்கும் குரு ஆவான். மத்திமனான க்ஷத்திரியன் க்ஷத்திரியர்வைசியர்சூத்திரர் மூவருக்கும் குருவாவான்பிரமணன்பிராமணர்முதல் நாலு வருணத்தாருக்கும் உபதேசிக்கும் குருவாவான். பிராமண குலத்தில் பிரமசாரி கிருகஸ்தன்வானப்பிரஸ்தன்சந்நியாசிஅதிவர்ணாச் சிரமி என்று ஐந்து வகை ஆச்சிரமத்தாருண்டு. இவர்களுள் பிரமசாரிமுதல் நால்வரும் ஒருவருக்கொருவர் குருவாகவிருந்து உபதேசிக்கலாம். அதிவர்ணாச்சிரமிக்கு மாத்திரம் குருவாகமாட்டார்கள். அவன் தட்சிணாமூர்த்தி போல எல்லாருக்கும் குரு ஆவான். 

 

தங்கத்திலிருந்து குண்டலம்கடகம்முதலாகப்பல ஆபரணங்கள் உண்டானால் போல் மாயையிலிருந்து பலவிதமாக உலகம் உண்டாயிற் றென்றும்தேகேந்திரியங்க ளுடன் தாக்கற்றுச் சர்வ சாட்சியாயிருக்கும் பொருளே நித்தியவஸ்து என்றும் உணர்ந்தவனும்எம்மோடு அத்துவிதபாவனையாகக் கலந்திருப்பவனும்வேதாந்த வாக்கிய சிரவணத்தால் மெய்ஞ்ஞானம் பெற்று எம்மை யிடையறாது சிந்தித்திருப்ப வனும்மாயையாலுண்டான சரீரத்தில் கற்பிதமாயுள்ள வருணாச்சிரமங்கள் ஒன்றும் எனக்குக்கிடையாது என்று உண்மையை யுணர்ந்து கொண்டவனும்சூரியனுடைய சந்நிதியில் எல்லாப் பொருள்களும் விளங்குவது போலச் சிவசந்நிதியில் எல்லாம் தாமாகவே விளங்குமென்று தெரிந்து கொண்டவனும்மாயாமயமான மகதத்துவம் முதலான உலகமெல்லாம் பதியின் அருளிலே மூழ்கியிருக்கின்றன. அது சிவனிடத்தில் கற்பிதமாகக் காணப்படுகின்றன. உண்மையிலில்லைகிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போல என்று அறிந்து கொண்டவனும்அளவில்லாத சரீரங்கள் தோறும் உயிர்க்குயிராய் வியாபகமா யிருக்குந் தெய்வமே முத்திக்கு மூலமானவன் என்று தெரிந்து கொண்டவனும் மெய்ஞ்ஞானியாவான். அப்படிப்பட்ட ஞானிக்கு உலகமயக்கம் இராது. அந்த ஞானிக்குக் கூட ஒவ்வொரு சமையத்தில் உலக ஆசைமீண்டும் தோன்றும். அதினாலே மயங்கா திருப்பவனே மெய்ஞ்ஞானி. உலகமெல்லா வற்றையும் சொற்பனம் போலக் கண்டு கழிப்பவனும்எமது சோதி சொரூபத்தில் அழுந்தி யிருப்பவ னும்வருணாச்சிரம தர்மங்களைக் கடந்திருப்பவனும் மேன்மையுள்ள மெய்ஞ்ஞானியா வான். இவனே அதிவர்ணாச்சிரமி யென்று பேர்பெறுவான். 

 

அப்படிப்பட்ட அதிவர்ணாச் சிரமியான ஞானிக்குச் சமானமாவார் ஒருவருமில் லை. இவனுக்கு மாயாவாதனையில்லை. வாதனை யுள்ளவன்போலக் காணப்பட்டா லும்அது தோற்றமே தவிர உண்மையில் அவனுக்கில்லை. அவனது உண்மை நிலைமையை மாந்தர் அறியமாட்டார்கள். உலகத்தார் விழித்துக்கொண்டிருக்கிறதில் நித்திரை கொண்டிருப்பான். உலகத்தார் தூங்குவதில் விழித்துக்கொண்டிருப்பான். உலகத்தாரைப்போல விருப்பு வெறுப்புகளில்லா தவனாயிருப்பன். எமது ஒளியில் கலந்திருப்பான். அப்படிப்பட்ட மெய்ஞ்ஞானியே மெய்யானகுரு ஆவான். அவன் வசிக்கிற விடம் சிவாலயமாகும். அவனுடைய புகழ்களெல்லாம் எமது புகழே. அவனை அண்டினவர்கள் எம்மை அண்டினவர்களாவார்கள். நாராயணா! இந்த அரிய விஷயத்தை அன்பனாகிய உனக்கு நான் சொல்லிவிட்டேனென்று சிவபெருமான் கூறியருளினார். முனிவர்களே! இதனால் குரு இன்னார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்க ளென்று சூதர் சொன்னார். 

 

 

ஆறவது அத்தியாயம்.

ஞானமுண்டாகாமைக்குக் காரணம் கூறியது.

 

திருமாலானவர் சிவபெருமான் சேவடிகளிலே வணங்கி ஞானம் உண்டாகாம லிருப்பதற்குக் காரணம் கூறியருள வேண்டு மென்று வேண்டத் தேவதேவரான மஹாதேவர் சொல்கிறார். திருமாலே! ஞானவுற்பத்தி யுண்டாகாமலிருப்பதற்குச் சிவதுரோகமே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. சிவனடியார்க்குத் தீங்கு செய்வதும்ஞான நூல்களை வெறுப்பதும்விபூதி ருத்திராட்சம் தரியாமலிருப்பதும்பிறர் பொருள்களைக் கவர்வதும்வேதத்தை யிகழ்வதும்வேதம் ஓதாமையும்வேதம் ஓதினவர்களை அவமதிப்பதும்வேத நிந்தையைக் கேட்க விரும்புதலும்வேத மோ தினவர்க்கு இடர்செய்வதும்ஆகமம்ஸ்மிருதிபுராணம் இவைகளினிடத்தில் அன்பு இல்லாமையும்பாஞ்சராத்திரம்வாமம் முதலிய ஆகமங்களைக் கொள்ளுதலும்பெரியோரோடு கூடாமையும்சிவபக்தர்களைப் பெரியோர்கள் என்று எண்ணாமலிருப் பதும்இழிந்தவருடன் கூடுதலும்காமம் குரோதம் மோகம் லோபம் மதம் மாற்சரியம் டம்பம் முதலிய குணங்களைத் தழுவுவதும்பாவ புண்ணியங்கள்தெய்வம் இவைகள் உண்டோ இல்லையோ என்கிற சந்தேகமும்மாதாபிதாக்களுக்குத் தீமையைச் செய்தலும்மழை வெய்யில் காற்று இவைகளால் நொந்து வந்தவர்களை உபசரியாமை யும்திருடர்களாலும் பலவந்தர்களாலும் வருந்துகிறவர்களுக் குபகாரம் பண்ணாமலிரு ப்பதும்சாதுக்களுக்குத் துன்பம் செய்வதும்துஷ்டர்களைச் சிநேகம் செய்துகொள்வ தும்பசுக்களுக்கு இடர் செய்வதும்வழிநடைப்பாதைகளைக் கெடுப்பதும்ஆகருஷ ணம்வசியம் மோகனம் ஸ்தம்பனம் வித்துவேஷணம்மாரணம் என்கிற ஷட்கர்மங்க ளைச் செய்வதும்சூதாடுவதும்பெண்களாடும் நடனத்தில் பிரியம் வைத்துப் பார்ப்ப தும்நல்லொழுக்கத்தை விடலும்பொறுமையுள்ள பெரியோர் சேவை செய்யாமையும்மனைவி மக்கள் முதலியவர்களிடத்தில் பெரிய பற்றுடைமையும்அந்த அன்பு ஆசிரியனிடத்தில் இல்லாதிருப்பதும்குருவை வணங்குகிறதற்கு வெட்கப்படுவதும்குருவுக்குத் தீமையே செய்வதும்அவருக்குப் பிரியமில்லாதவைகளைச் செய்வதும்குரு இப்படிப்பட்டதன்மையை யுடையவரென்று மனதில் யோசிக்கிறதும்குரு நல்லொ ழுக்க மில்லாதவரென்று கருதுதலும்குருநிந்தையைக் கேட்பதும்குருவின் துன்பத்தைப் பார்த்துச் சகித்துக்கொண்டிருப்பதும்குருவுக் கெதிரில் அடக்கமில்லா மலிருப்பதும்குருவுக்கு முன் சிரித்துப் பரிகாசம் செய்து கொண்டு பேசுவதும்குருவினிடத்தில் வீண் பேச்சுப்பேசுவதும் குருமொழியை மறத்தலும்குற்றமற்ற மனைவியை வெறுத்து நீக்கலும்அந்நியமாதரை விரும்புவதும்அவர்களை அன்புடன் பார்ப்பதும்அந்நியமாதரைப் புணரக் கருதுவதும்அவர்களுடைய அழகு முதலியவற் றைக் கேட்டு மகிழ்வதும்ஏழைகளுக்கு இரங்காமையும்பிறருடைய கல்வி செல்வங்க ளைக் கண்டு பொறாமை கொள்வதும்தன்னையே பெரியவனாக நினைப்பதும்தீர்த்த யாத்திரை முதலியவற்றை வெறுப்பதும்சிவாலய தரிசனம் செய்யாமையும்பஞ்சாட்சரங்களைச் செபியாமையும் ஞானோற்பத்தி யாகாமைக்குக் காரணங்களாம் என்று சிவபெருமான் கூறத் திருமால் மகிழ்ந்து வணங்கித் தோத்திரஞ் செய்தார். 

 

 

ஏழாவது அத்தியாயம்.

ஞானிக்குப் பணிவிடை செய்தலின் பலன்கூறியது.

 

சிவபெருமான் மீண்டுந் திருமாலை நோக்கிஞானிபணி விடைப்பலனைக்கேள் என்று சொல்கிறார். முன்காலத்தில் பிராமணகுலத்தில் பாக யக்ஞன் என்று ஒருவன் இருந்தான். அவன் உத்தமன்யோகிஅவனுக்கு மஹாபாதகனான ஒரு புத்திரன் பிறந்தான். அவனுக்குச் சசிவர்ணன் என்று பெயர். மாதாபிதாக்களின். சொல்லைக் கேட்கமாட்டான். கல்வி கற்க விரும்பவில்லை. காமுகனாயிருந்தான். சந்தியாவந்தனா திகளை விட்டு விட்டு விட்டான்பிராமணகுலாசாரங்கள் முழுமையும் விட்டு ஒழித்தான். செபம் பண்ணுகிறவர்களையும்தபசுபண்ணுகிறவர்களையும் நிந்திப்பான். அநேக பெண்களின் கற்பை அழித்துவிட்டான். சொர்க்க நிந்தனைதேவ நிந்தனைசிவஞான நிந்தனைகளைச் சொல்வான். திருநீறு தரித்துக்கொள் என்று சொன்னவர்க ளைக் கொன்று விடுவான். கனவில் கூடச் சிவநாமஞ் சொல்லியறியான். சிற்றின் பானுபவத்திலேயே நாட்களைக்கழிப்பான். வீட்டுச் சொத்துக்களை யெல்லாம் திருடிப் பரத்தையர்களுக்குக் கொடுப்பான். தாய் தந்தையரின் சுகதுக்கங்களைக் கவனிக்கவே மாட்டான். வீட்டுச் சொத்துகள் அழிந்துபோனபின் மறையவர்கள் வீடுகளில் திருடத் தொடங்கினான். திருடும் போது எதிர்ப்பவர்களைக் கொலை செய்வான். புறகிராமங்க ளிலும் போய்த் திருடுவான். அழிவழக்காடி அன்னியர் சொத்துக்களைக் கவர்வான். பிறகு தன் வீட்டை விட்டுப் பரத்தையர் சேரியிலிருந்து கொண்டுஅவர்கள் வீட்டிலே யே புசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பறைச்சி அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவளுடைய அழகைக்கண்டு மயங்கி அவளைக் கூடிக் கலந்திருந்தான். 

 

சசிவர்ணன் இப்படி மஹாபாதகங்களைச் செய்து கொண்டிருக்கும்போது அளவிலாத நோய்கள் அவனைப்பற்றிக்கொண்டனபேயும் பிடித்துக்கொண்டதுபிரமஹத்தியும் பற்றிக்கொண்டது. இதனால் அவன் பட்டதுன்பத்துக்கு அளவில்லை. இப்படியிவன் பூலோகத்தில் வருத்தப்படுகையில் அவனுடைய பிதிர்க்களும் நரகத்தில் விழுந்து வருந்தினார்கள். சசிவர்ணனுடைய பிதா இதைக் கண்டு மனம் வருந்தினான். இவனுடைய கர்மத்தினாலே பிரமலோகத்திலிருந்த பிதிர்க்கள் கூட நரகத்தில் விழுந்து விட்டார்கள். சசிவர்ணனுடைய பிதா இதைக் கண்டு மனம் வருந்தி இவனுடைய பாவகர்மங்களுக்கு அளவில்லை. இதுக்கு நிவர்த்தியுமில்லை. ஆகையால் சிவபெருமா னைத்தொழுவேன் என்று கருதி எம்மைத் துதித்தான். அப்போது தேவபக்தன் என்ற ஒரு முனிவர் பாகயக்ஞனிடம் வந்தார். அவனுடைய துக்கத்தை நோக்கி உனக்கு யாது மனவருத்தம் என்று கேட்டார். பாகயக்ஞன் அவரை வணங்கிச் சுவாமீ! எனக்கு ஒரு புத்திரன் இருக்கிறான். அவன் செய்த பாதகத்துக்கு அளவில்லை. அதை நினைந்துவருந்துகிறேன். நானும் என் புத்திரனும் நகத்தைடையாத ஒரு நல்ல மார்க்கத்தைச் சொல்லியருள வேண்டும் என்றான். தேவபக்த முனிவர் அவனை நோக்கி ஸ்ரீ பரமேசுவரன் வசிக்கிற க்ஷேத்திரங்கள் அளவில்லை. அவைகள் எல்லாவற்றிலும் கோபர்வதம் சிறந்தது. அதில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார். உமாதேவியார் பூசித்தபடியால் சத்தியீசன் என்று அவருக்குப் பேர். அவரைத் தரிசனம் செய்தவர்கள் புக்தி முக்திகளையும் நினைத்த காரிய சித்தியையும் அடைவார். பிரமன்இந்திரன்முப்பத்து முக்கோடி தேவர்கள் இவர்கள் எல்லாரும் பூசித்து இஷ்டார்த்த சித்திகளைப் பெற்றார்கள். இன்னும் அநேகரும் பூசித்துப்பேறு பெற்றார்கள். அந்த க்ஷேத்திரத்தில் மஹாநந்தபராயணன் என்று ஒரு யோகியிருக்கிறார். நீர் உமது புத்திரனையும் அழைத்துக் கொண்டுபோய் அவரையடைந்துஅவருக்குப் பணிவிடை செய்யும். உமது புத்திரன் செய்த பாவங்கள் நீங்கும் என்றார். அதைக்கேட்ட பாக யக்ஞன் மகிழ்ந்து தேவபக்த முனிவரைவணங்கித் தன் மகனுடன் கோபர்வதத்தை யடைந்தான்.

 

அங்கே போய்ச் சத்தியீசரைப் பணிந்துமஹா நந்தபராயண யோகியைக்கண்டு தரிசித்து வணங்கினான். யோகி யவனைப் பார்த்து நீயார்உன்னுடன் கூட இருக்கிற இவன்யார்உன் கருத்தென்ன என்று கேட்டார். நான் பிராமணன். என் பேர் பாகயக்ஞன்இந்தப்பாவி எனது குமாரன். இவன் பேர் சசிவர்ணன். இவன் நெடுங்காலம் மஹாபாதக ங்களைச் செய்து கொண்டிருந்தான். அதனால் இப்போது சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கிறான். அவன் சுகப்படவும்நான் கடைத்தேறவும்என் பிதிர்க்கள் கரையே றும் படியும் அனுக்கிரகம் செய்யவேண்டும் என்றான். அதைக்கேட்டயோகி கருணை யோடு சசிவர்ணன் முகத்தைப் பார்த்தார். உடனே அவனைப் பற்றியிருந்த வியாதிகளும் பேய்களும் நீங்கின. சசிவர்ணனுக்குக் கொஞ்சம் அறிவு தோன்றிற்று. அதனால் அவன் யோகியின் பாதங்களில் பணிந்தான். யோகி அவனைத் தமக்கு மாணாக்கனாகக் கொண்டுதமது பணிவிடையில் நியமித்தார். சசிவர்ணன் சிவயோகிக்குப் பணிவிடை செய்ததனால் அவனுடைய பாதகங்கள் ஒழிந்தன. சிவயோகிக்குக் கந்த மூலபலங்கள்சமித்துக்கள் முதலிய கொண்டு வருவதாலும்அவரது பசுக்களுக்குப் புல் இடுவதாலும் அநேக பாவங்கள் ஒழிந்தன. அவருக்கு நீராதிகள் கொண்டு வருவதாலும்பசுக்களுக்குப் புல் இடுவதாலும்அநேக பாவங்கள் ஒழிந்தன. அவரது வஸ்திரங்களைத் தோய்ப்பதாலும்கோவணத்தைச் சுத்தம் பண்ணு வதாலும்படுக்கை போடுதலாலும்அவரது பாதங்களைப் பிடிப்பத்தாலும்அவரைத் துதித்து வணங்குவதாலும் அநேக பாவங்கள் தீர்ந்தன. இப்படிப் பணிவிடை செய்கையில் சிவயோகி யானவர் அவனுக்குத் தமது எச்சில் இலையைக்கொடுத்தார். அவர் புசித்த சேஷத்தைச் சசிவர்ணன் அமிர்தம்போல மகிழ்ந்து வாங்கிக் கொண்டான். அதைப் புசித்தவுடனே இச்சசிவர்ணனுடைய பாதகங்கள் அனைத்தும் நீங்கின. பூர்வகன்மங்களும் எரிந்து போயின. சிவயோகியாருடைய பணிவிடைக் காரர்கள் எல்லாரிலும் இவன் முதன்மை பெற்று விளங்கினான். முன்வீணாய்க்கழிந்து போன நாள்களுக்காக வருந்தினான். இந்த மஹானுபாவர் எப்பொழுது நமக்கு ஞானோபதேசம் செய்தருள் வாரென்று எண்ண மிட்டுக்கொண்டிருந்தான். பந்தத்தைக் கடக்கும் எண்ணமே மிகுந்திருந்தது. சசிவர்ணனுக்கு ஞானத்தைப் பெறுவதில் உள்ள அதிதீவிர பக்தியை உணர்ந்த சிவயோகியானவர் தமதுகையினாலே திருநீற்றை யெடுத்து சசிவர்ணனுடைய நெற்றியில் இட்டருளினார். உடனே சசிவர்ணன் எழுந்திருந்து யோகியாருடைய திருவடிகளில் வணங்கித் துதித்து நின்றான். சிவயோகி அவனைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு தமது திருக்கண் மலர்ந்து அருட்பார்வையாகப் பார்த்துத்திருக்கரத்தைச் சிரசின்மேல் வைத்துஅவனுக்கு உபதேசித் தருளினார். 

 

அநாதி மலமுத்த சச்சிதானந்த சொரூபியான பதி உண்மையையும்அநேகனாயுள்ள ஜீவ உண்மையையும்அநாதி மலத் தன்மையையும்அத்துவித முத்தி உண்மையையும் சசிவர்ணனுக்கு உபதேசித்தருளினார். மஹாவிஷ்ணுவே! சசிவர்ணன் உபதேசம் பெற்றுச் சிந்தித்துத் தெளிந்து களங்கம் அற்ற உள்ள முடையவனாய்முத்திக்கு அருகனாயிருந்தான். பாகயக்ஞனும் சிவயோகி பணிவிடை செய்து முத்தி பெற்றான். ஆகையினால் சிவஞானி பணி விடைக்கு மேற்பட்ட முத்திசாதன மொன்று மில்லை. சசிவர்ணன் பாசம் ஒழிந்து முத்தி பெற்றமையால் அவனைப் பெற்ற மாதாவும் முத்தியை யடைந்தாள்முன்னாலே நரகத்தில் விழுந்த பிதிர்க்களும் பிரமலோகம் சொர்க்கலோக முதலிய பதவிகளை யடைந்தார்கள். அவனுடைய சுற்றத்தார்களும் உயர்ந்த கதியை அடைந்தார்கள். அவன் புணர்ந்த மங்கையரும் சுவர்க்கம் அடைந்தார்கள். அவன் வசித்த இடமும் எல்லாராலும் வணங்கப்பட்டது. திருமாலே! ஞானிகளின் பெருமையைக் குறித்து இன்னம் ஒரு இதிகாசம் சொல்கிறேன் கேள் என்று சிவபெருமான் சொல்கிறார். 

 

நாராயணா! பெண்களும் கண்டு காமுறும் அழகினையுடைய சுபகை யென்னும் பேரையுடைய ஒரு ருத்திரகணிகையிருந்தாள். அவள் எவ்விடத்திலு முள்ள தனவான்கள் எல்லாரையும் கைவசம் செய்து கொண்டுஅவர்களுடைய செல்வத்தை முற்றும் அபகரிக்க விருப்பம் கொண்டாள். தன்னுடைய நடையுடை சம்பாஷணை சேஷ்டை முதலியவற்றால் கண்டவர்களை யெல்லாம் மயக்கித் தன்மோகவலையில் சிக்கவைத்தாள். ஒருவனிடத்தில் ஒருவருஷப்பணத்தை முன்னதாக வாங்கிக்கொண்டுஅன்றிரவிலேயே விஷமூட்டி அவனைக்கொன்று விடுவாள். இப்படி நாடோறும் பலகொலை புரிவாள். இப்படியாகக் கணக்கிறந்த திரவியம் சம்பாதித்தாள். சிலநாள் செல்ல அவளுக்குப் பலவகை வியாதிக ளுண்டாயின. கொலைப்பாதகமும் சூழ்ந்து கொண்டது. பேய்பிசாசுகளும் பற்றிக்கொண்டன. அதனாலே அவளடைந்த துன்பங்களு க்கு அளவில்லை. அவளுடைய சரீரமும் கொடிய துர்க்கந்தம் வீசிற்று. அவளுடைய சுற்றத்தார்களும் தீராத துக்கத்தை அடைந்தார்கள். சுபகையும் பிழைத் திருப்பதைவிடச் சாவதுவே இனியதென்று கருதிப்புலம்பினாள். மணிமந்திர ஒளஷதங்கள் ஒன்றும் பயன்படவில்லை. அவள் ஏங்கி இனி யென்ன செய்வதென்று கருதியிருக்கையில் அவளுடைய பூர்வ புண்ணியத்தின் பயனால் ஒரு சிவஞானி அவளுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். 

 

அதை அறிந்த சுபகை எழுந்திருந்து சுற்றத்தாருடன் எதிர் கொண்டுபோய் அவர் பாதத்தில் வணங்கித் துதித்துஒரு பொன்னாசனத்தில் உட்காரவைத்துகந்தபுஷ்ப அட்சதைகளால் பூசித்துப் போற்றினாள். அப்போது அந்தச் சிவஞானியும் திருவருணோ க்கம் வைத்தார். உடனே அவளைப் பற்றியிருந்த வியாதிகளும் பேய்களும்பாவங்க ளும் தொலைந்தன. சுபகை அவருடைய திருவடிகளில் வணங்கிஉமது வரவினால் நான் சுகப்பட்டேன். நீர் என்னை விட்டுப் பிரியாமல் என் வீட்டிலேயே வசித்து எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் என்று பிரார்த்தித்தாள். என் வேண்டுகோளை மறுத்தால் நான் என் சுற்றத்தாருடன் நீர் போகிற இடங்களுக்கு உம்மைத் தொடர்ந்து வருவேன் என்று மீண்டும் பணிந்தாள். யோகீசுவரும் சம்மதித்து அவள் வீட்டிலேயே வசித்தார். சுபகை மனமகிழ்ச்சியுடன் அவருடைய பணிவிடைகளை நாடோறும் செய்து வந்தாள். இப்படி மூன்றுவருஷம் சிவஞானிக்குப் பணிவிடை செய்து பின்பு ஆசை ஒழிந்து ஞானம் பெற்று முத்தியை அடைந்தாள். அவளுடைய சுற்றத்தாரும் முத்திபெற்றார்கள். பிறகு யோகி வேறிடம் போய்ச் சேர்ந்தார். 

 

திருமாலே ஞானிகளுக்கு இப்படிப் பணிவிடை புரிந்து முத்தி யடைந்தவர்க ளுக்கு அளவில்லை. ஞானிகளிருக்குமிடத்தில் நாம் எப்போதும் வசிப்போம். சகல தீர்த்தங்களும் அங்கே வசிக்கும். ஞானிகள் வெகு தூரத்தில் வசித்தாலும் அவர்களைத் தரிசித்து வணங்குவதே நெறியாகும். ஞானியை எம்மைப் போலவே பாவிக்க வேண்டும். ஞானிக்குச் செய்தவைகள் எல்லாம் எமக்குச் செய்தவைகளேயாம். விரிந்த நூல்களைக் குருவின் மூலமாகத் தெரிந்து கொண்டுசாரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளிவிடவேண்டும். எம்மை அறிந்த ஞானிக்கு நூல்களால் பயன் ஒன்று மில்லை. உயர் குலத்திற் பிறந்துநல்லொழுக்கமுடையவராய்ஞானத்தை யடைந்து உள்ளந் தெளியாதவர் எவ்வாறு முத்தியடைவார்கள். வானத்தைத் தோல்போல் சுருட்டக்கூடுமானால் ஞானம் இன்றி முத்தி அடையக்கூடும். அந்த ஞானம் பூர்வஜன்மங்களில் செய்த புண்ணியத்தினால் கிடைக்கும். ஞானிக்கு உடலுள்ளளவும் சங்கவாதனையு மிருக்கும். தேகாந்தத்தில் அவன் நம் ஒளியேயாவான் என்று கூறத் திருமால் மகிழ்ச்சியடைந்தார். திருமாலுக்கு உபதேசம் புரிந்த சிவபெருமான் சிதம்பரத்தை அடைந்தார் என்று சூதர்முனிவர்களுக்குச் சொன்னார். 

 

 

 

 

 

 

எட்டாவது அத்தியாயம்

திருமாலாதியோர் ஞானம் பெற்றது.

 

சிவபிரானிட முபதேசம் பெற்ற திருமால் சிவபிரான் வாராமையால் மனம் வருந்திப்பரமசிவனைத்தோத்திரம் புரிந்துஇனிச் சிவபிரானைத் தரிசனம் செய்யாமல் வைகுந்தத்துக்குப் போகிறதில்லை என்று நிச்சயித்துக் கொண்டுசிவபெருமான் கைலாய மலைக்குப் போயிருக்கமாட்டாரென்றும்அவர் போன திசையை ஊகித்துப் பார்த்தால் சிற்றம்பலத்துக்கே போயிருக்கலாமென்றும் எண்ணிச் சிற்றம்பலத்தை நோக்கிச் சென்றார். அநேக வனங்கள்மலைகள்நதிகள்நதங்கள்நாடு நகரங்கள்கிராமங்கள் எல்லாவற்றையும்கடந்துஅங்கங்குள்ள சிவாலயங்களை வணங்கிக் கொண்டு போய்ச் சிதம்பரத்தை யடைந்துஆலயத்துக்குட்புகுந்தார். சந்நிதியில் பணிந்துசிவகங்கையில் நீராடித்திருநீறு கண்மணிபூண்டுபஞ்சாட்சர ஜபம் செய்துபின்னர் சந்நிதியை அடைந்து பேரம்பலத்தை வணங்கிச் சிற்சபைபோனார். ஆனந்த நடனம் செய்தருளும் சபாநாயகரைத் தரிசித்து நமஸ்கரித்துப் பலவாறாகத் தோத்திரம் புரிந்தார் திருமரல். அப்போது ஆனந்தத் தாண்டவமூர்த்தி திருமாலிடம் அனுக்கிரகம் உடையவராய் அவரைப் பார்த்து நீ வைகுண்டம் போய்நாம் உபதேசித்த உண்மை நெறியில் நின்று உலகத்தைப் பரிபாலனம் செய். பிறகு சாயுஜ்ய முத்தியருள்வோம் என்று கூற மஹாவிஷ்ணு விடை பெற்றுக்கொண்டு தம்முலக மடைந்தார். 

 

இவ்வாறு திருமால் வைகுந்தத்தில் இருக்கையில் பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள் வைகுந்தத்துக்குப் போனார்கள். திருமாலைக்கண்டு தரிசித்துத் துதித்து வணங்கி அவரது உத்தரவின் மேல் உட்கார்ந்தார்கள். அதன்பின் விஷ்ணு அவர்களை நோக்கி நீங்கள் என்ன காரியத்தைக் கருதிவந்தீர்கள் என்று கேட்டார். பிரமா முதலான தேவர்கள் திருமாலை வணங்கித் தேவனே! நீர் கயிலை மலைபோய் நெடுங்காலம் தபசு செய்து சிவபெருமானிடத்தில் மெய்ஞ்ஞானோபதேசம் பெற்றுவந்திருக்கிறீர். அந்த ஞானத்தை எங்களுக்கும் உபதேசித்து நாங்கள் ஈடேறும்படி திருவருள் புரிய வேண்டு மென்று வேண்டினார்கள். அதைக்கேட்ட திருமால் அவர்களை நோக்கிச் சிவஞானத்தை முற்றும் உபதேசிக்க நான் வல்லவனல்ல. சிவபெருமான் ஒருவரேவல்லவர்ஆனாலும் நான் சொல்லுகிறபடி செய்யுங்கள். விராட்புருஷனுக்கு இருதயஸ்தானமாகியும்தரிசனம் செய்தால் முத்தி தருவதாயும் வழிபடுவோர்க்குப் போக மோட்சங்களை யளிப்பதாயு முள்ளது புலியூர் என்னும் சிவக்ஷேத்திரம் ஒன்றுண்டு. நீங்கள் அந்த நகரத்தை யடைந்து சிவகங்கையில் மூழ்கித் திருநீறு கண்மணி தரித்துப், பஞ்சாட்சரங் களை ஜபித்துபிரணவம் சேர்ந்த அந்த மந்திரத்தாலேயே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியை அர்ச்சனை செய்து, ஆனந்தத் தாண்டவத்தையும் தரிசித்துக்கொண்டு கொஞ்சநாள் அங்கே வாசம் பண்ணுங்கள். சிவபெருமான் வந்து உபதேசிப்பார் என்று கூறினார். தேவர்கள் மகிழ்ந்து திருமால் பாதத்தில் வணங்கி விடைபெற்றுக் கொண்டு எல்லாரும் தில்லையை நோக்கி நடந்தார்கள். 

 

நாராயணமூர்த்தி சொன்னபடியே சிவகங்கையில் நீராடித் திருநீறணிந்துகண்மணிபூண்டுபஞ்சாட்சர ஜபம் செய்துபரசிவனைப்பூசித்துவிரதங்கள் செய்துதரிசனம் செய்து கொண்டு பலநாள் வசித்தார்கள். இப்படித்தேவர்கள் தவம் செய்வதற்கு மகிழ்ந்து சிவபெருமான் பிரத்தியட்சமானார். தேவர்கள் எல்லாரும் உள்ளக்களிப்புடன். எழுந்திருந்துசேவடிகளில் வணங்கி உமாசகாயா! பரமபதியே! சந்திரசேகரா! மிருத்தியுஞ்சயா! காமதகனா! காலகாலா! என்று துதித்தார்கள். அப்போது பரசிவன் அவர்களைப் பார்த்து உங்களுடைய விருப்பம் என்ன சொல்லுங்கள் என்றார். அவர்கள் எங்களுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கஅவர்களைத் தம் அருகில் உட்காரவைத்துக்கொண்டு உபதேசம் செய்தருளினார். ஆனந்த சொரூபியாய்மனாதிகளுக்கெட்டாததாய்ச்சுயம் பிரகாசமாய்நிர்விகாரமாய்நித்தியமாய்நிர்மலமாயுள்ள பரபிரமம் யாமே. மாயை எம்முடைய சத்தி. எம்மால் தொழில் படுத்தப்படுவது. சொரூபஞானமில்லாதவரை மறைப்பது. சொரூபவிசார முள்ளவர்களை மறையாது. சங்காரகாலத்தில் எம்மிடம் ஒடுங்கும். சீவாத்துமாக்கள் அனுபவித்தது போகச் சேடமாயுள்ள சஞ்சிதகன்மமும் மாயையுடன் எம்மிடத்தொடுங்கி மறுசிருஷ்டிக்கு வித்தாயிருக்கும். இருவினை ஒப்பு உடையவராய்ப் பரிபாகம் பெற்றவர்களைப் பிறவிவேதனை யணுகாது. பூமியில் உயர்குலத்திலுதித்துமானத கருமங்களைப் புரிந்துசன்மார்கத்தில் ஒழுகி நமது அருளால் முத்தி பெறுவாருமுண்டு. கருமத்துக்கு ஏற்றபடி பலவகை ஜன்மங்களையும் எடுத்துழன்றுகடைசியில் மானிட ஜன்மத்தை அடைந்துநற்குலத்தில் பிறந்துசற்கருமங்களைச் செய்துசித்தசுத்தி யுடையவராய்ச்சம்சாரத்தில் வெறுப்புத்தோன்றி முத்தி விருப்பமுண்டாய் நம்மருளால் சிவஞானம் பெற்று முத்தி அடைவாரு முண்டு. ஞானத்தாலேயே முத்தியடைய வேண்டும். நற்கருமங்கள் அதற்குச் சாதனமாகும். சாந்தி தாந்தி முதலிய குணங்களை யுடையவராய்ச் சற்கருமங்களைச் செய்தால் அவர்கள் அந்தச் சென்மத்தி லேயே முத்தியடைவதுமுண்டு. வாரணவாசி முதலிய சிவஸ்தலங்களில் வசித்து இறந்தவர்கள் நிச்சயமாகவே முத்தியடைவார்கள். தேவர்கள் எல்லாரிலும் நாமே சிறந்த தெய்வம். ஸ்தலங்களில் சிவஸ்தலமே சிறந்தன. அவைகளுக்குள்ளும் வாரணவாசிகாளத்திஸ்ரீசைலம்விருத்தாசலம்சிதம்பரம்திருவாரூர்வேதாரணியம்முதலியவை உத்தமம். இவற்றுள்ளும் காசி சிதம்பரம் இரண்டும் மிகச்சிறந்தன. தபோ பலமுடையவர்களே யிவைகளை யடைவர். இந்த ஸ்தலங்களை அடைந்து எம்மை ஆராதித்தவர்கள் போகமோட்சம் இரண்டையும் பெறுவார்கள். தேவர்களே! நீங்கள் எம்மிடத்தில் பக்தியுள்ளவர்களாதலால் உங்களுக்கு இந்த உண்மையை உபதேசம் செய்தோம். நீங்கள் இதை உணர்ந்து ஜனன மரணமில்லாத பேரின்பமுத்தியை அடையுங்கள் என்றுகூறிச் சிவபெருமான் மறைந்தருளினார். முனிவர்களே! இவற்றைத் தெரிந்து கொள்ளுங்களென்று சூதமுனிவர் சொன்னார். அதைக்கேட்ட முனிவர்கள் அகமகிழ்ந்து சூதமுனிவரைப் புகழ்ந்தார்கள். 

 

 

 

 

ஒன்பதாவது அத்தியாயம்.

தில்லை நடனத்தைத்தரிசிக்க உபாயம் கூறியது.

 

முனிவர்கள் சூதரை வணங்கி நாங்கள் சிற்றம்பல நடனத்தைத் தரிசிக்க விரும்புகிறோம். அதற்கு ஒரு உபாயம் சொல்ல வேண்டுமென்று கேட்கச் சூதர் சொல்லுகிறார். முக்குற்றங்களையும் அகற்றியிந்திரியங்களை வென்ற சௌனக முனிவர் சிவபெருமான் தில்லையில் நடித்தருளும் ஆனந்தத்தாண்டவத்தைத் தரிசிக்க விரும்பினார். அதற்கு உபாயம் என்ன வென்று யோசித்தார். உடனே கயிலாய மலைக்குப் போனார். கயிலையங்கிரிக்குக்காவல் பூண்ட நந்தீசுவரரைக் கண்டு பணிந்தார். நந்திதேவர்முகமலர்ந்து கருணையால் அவர் முகத்தைப்பார்த்து ஒரு ஆசனத்தில் இருக்கச்செய்துசெளனகரே! நீர் வந்த காரியமென்ன என்று கேட்டார். சௌனகர்சிவபெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் நடித்தருளும் ஆனந்த நடனத்தைத் தரிசிக்க விரும்பினேன். அதற்கு உபாயம் தெரியவில்லை. அதை உம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவந்தேனென்று கூறினார். நந்திதேவர்சௌனகரே! இந்தக் கயிலாயமலையில் சிவபெருமான் உமாதேவி தரிசிக்கும்படி காலையும் மாலையும் ஆனந்த நடனம் செய்தருளுவார். அது உமாதேவியாருக்கு மாத்திரம் தெரியும். மற்றவர் அறியமாட்டார்கள். சிற்றம்பலத்தில் எல்லாருக் காணும்படி நடனஞ் செய்தருளுவார். சிவபெருமான் அருளைப்பெற்ற முனிவர்கள் எல்லாருந் தரிசிப்பார்கள். சௌனகரே! நீர் அந்தத் தில்லைச் சிற்றம்பலத்திற்குப்போய்மார்கழிமாதம் ஆதிரை நட்சத்திரத்தில் உதயத்திற்கு முன் சிவகங்கையில் ஸ்நானம் செய்துவிபூதி ருத்திராட்சம் தரித்துமூலட்டானத்தை வணங்கிப் பஞ்சாட்சரத்தைப் பதினாயிரம் உருச்செபித்து அன்று உபவாச மிருந்து சிவார்ச்சனை செய். இப்படி ஒருவருஷம் நோன்பு செய்தால் சிவபெருமான் மகிழ்ச்சி அடைவார். அவர் கருணையால் ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசிக்கலாம் என்றார். பூர்வகாலத்தில் தேவர்கள் கூட இப்படித் தவமிருந்து ஆனந்த நடனத்தைத் தரிசித்தார்கள். இஷ்டார்த்த சித்திகளையும் பெற்றார் கள் என்று நந்திதேவர் கூறி அருளினார். 

 

அதைக் கேட்ட சௌனகர் நான் வாழ்வு பெற்றேன் என்று மகிழ்ந்துநந்திதேவரைப் பணிந்துஉடனே தில்லையை நோக்கி டந்தார். நந்திதேவர் சொன்னபடியே ஒருவருஷம் நோற்று ஆனந்த நடனத்தைக்கண்டு தரிசித்து ஆனந்தக் கடலில் முழுகினார். பரமசிவனைத் தோத்திரம் செய்தார். சிவபெருமான் சௌனகரை நோக்கி இருக்கு வேதத்தில் சாகல்லியத்திற்கு நீ தலைவனா யிரு என்று வரம் அளித்தார். அப்படியே சௌனகரும் அந்தச் சாகல்லியத்தை விளக்க அநேக நூல்களைச் செய்தார். சௌனகருடைய மாணாக்கரான ஆசுவிலாயன முனிவர் குருவின் கட்டளை பெற்று அதற்குச் சூத்திரம் முதலியவைகளைச் செய்தார். இன்னம் அநேகர் தில்லையில் தோற்று ஞானாதிகளைப் பெற்று வாழ்வு அடைந்தார்கள். வியாதமுனிவர் இவைகளை எனக்குச் சொல்லி யருளினார். அவர் சொன்னபடியே நான் உங்களுக்குச் சொன்னேன் என்று கூறிமுனிவர்களே! தில்லைச் சிற்றம்பலம் அடைந்து நோற்றுப் பேரானந்த முத்தியை அடையுங்கள் என்று சூதர் கூறினார். பிறகு சூதர் தமது குருவான வியாசமஹா முனிவரைச் சிந்தித்தார். உடனே தமது மாணாக்கர்களுடன் வியாச முனிவர் அங்கே எழுந்தருளினார். சூதமுனிவர் தமது குருவின் பாதபங்கயங்களில் பணிந்து விதிப்படி யருசித்துப் பூஜித்தார். உடனே வாதராயண முனிவர் தமது மாணாக்கர்களும்சூதரும் சூழ அங்குள்ள முனிவர்களையும் அழைத்துக்கொண்டு தில்லைக்கு எழுந்தருளினார். 

 

அவர்கள் எல்லாரும் தனுர்மாதம் ஆதிரை நட்சத்திரத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்துவிபூதி ருத்திராட்சம் அணிந்து மூலட்டானத்தைத் தரிசித்துச்சடாட்சரத்தால் பூசித்து உபவாசம் செய்தார்கள்சிவபெருமானுடைய கருணையைப் பெற்று ஆனந்த நடனத்தைத் தரிசித்து மகிழ்ந்தார்கள். அக்காலம் திருவிழா நாள். ஆகையால் சிவபெருமான் திருவோலக்கமாக வீதி வலம் வந்தார். தேவர்தானவர்சித்தர்வித்தியாதரர்உரகர்கின்னரர்பன்னகர்யட்சர்குஹ்யர்பைசாசர்மானிடர் எல்லாரும் தரிசித்து மகிழ்ந்தார்கள். சிவபெருமான் வீதியை வலமாக வந்து ஆலயத் துட்புகுந்தார். பிறகு சிவபெருமான் சிவகங்கையில் ஸ்நானம் செய்து எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்தார். திருமால்முதலான தேவர்களும் நீராடித்தாண்டவமூர்த்தியைத் துதித்துப்போற்றி அநேகவரங்களைப் பெற்றார்கள். அவர்கள் எல்லாரும் சிவபெருமா னிடம் செலவு பெற்றுக்கொண்டு தத்தமிடம் போய்ச் சேர்ந்தார்கள். வியாசர் சூதர் முதலானவர்களும்மற்றும் அவருடன் வந்த முனிவர்களும் சிவகங்கையில் நீராடிச் சதருத்திரீயத்தினால் துதித்தார்கள். சிவபெருமானும் அவர்களுக்கு விடையளித்துச் சிற்றம்பலத்தில் இனிது வீற்றிருந்தருளினார். 

 

முத்திகாண்டம்

முற்றிற்று.

 

 

                                  .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செந்திலாண்டவன்

திருவடி துணை.

 

நான்காவது

எக்ஞவைபவகாண்டம்.

 

பூர்வபாகம்.

 

முதலாவது அத்தியாயம்.

வேதார்த்தம் உரைத்தல்.

 

நைமிசாரணியத்தில் வசிக்கிற சௌனகர் முதலான முனிவர்கள் மஹாசத்திரயா கத்தைமுடித்தார்கள். அதன் முடிவில் அவர்கள் எல்லாரும் வியாச முனிவரது மாணாக் கராகிய சூதமுனிவரைச் சிந்தித்தார்கள். தில்லைச் சிற்றம்பலத்தில் சிவபெருமானைத் தரிசனம் செய்து கொண்டிருந்த சூதர் அதை ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டு உடனே நைமிசாரணியத்துக்கு வந்து சேர்ந்தார். நைமிசமுனிவர்கள் சூதரைக்கண்டதும் மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு போய் அழைத்து வந்து ஒரு பொற்பீடத்தில் எழுந்தருளச் செய்துதாங்களும் அவரைச் சூழ உட்கார்ந்தார்கள். பிறகு அவரது முகத்தை நோக்கிச் சூதமுனிவரே! வேதார்த்தத்தை விளங்கக்கூறுவதான எக்ஞவைபவகாண்டத்தை யெங்களுக்குச் சொல்லியருள வேண்டுமென்று கேட்டார்கள். சூதமுனிவர் விநாயகர் சிவபெருமான் உமாதேவியார்முருகக்கடவுள் இவர்களது திருவடிகளை வணங்கிச் சொல்லத் தொடங்கினார். 

 

முனிவர்களே! வேதார்த்தத்தைச் சொல்லுகிறேன். உள்ளன்போடுங் கேளுங்கள். உள்ளன்புடன் கேளாவிட்டால் பலன் இல்லை. பாவமுண்டாகும். வேதார்த்தமானது பம் என்றும் அபரமென்றும் இருவகைப்படும். பரமென்பது பரமசிவமேயாம். அபரம் என்பது தர்மம் அதர்மம் என்று இருவகைப்படும். தருமம் என்பது யாகம் முதலிய எல்லாப்புண்ணிய கருமங்களுமாம். அது சிவத்தை அடைவதற்குச் சாதகமாகும். அதர்மம் என்பது கொலை முதலிய பாவகர்மங்கள். இதைச் செய்யாமல் விலக்கும்படி வேதம் சொல்கிறது. கொடிய அதர்மம் ஒழிந்தால் தருமம் விருத்தியாகும். அந்தத் தருமத்தாலே பரம் என்று கூறின வேதப் பொருள் சித்திக்கும். சிவபெருமான் சோதி சொரூபராயிருந்தும் உலகத்தாருக்குத் தெரியாமலிருப்பது என்ன காரணம் என்றால்மாயையால் மறைப்புண்டிருக்கிற சீவர்களுக்குத் தோன்றுவதில்லை. தருமம் விருத்தி யானால் சிவஞானம் உதிக்கும். அந்த ஞானத்தால் மாயை நீங்கும். அந்தமாயையும் பிரமத்தினிடத்தில் தோன்றியதேயாம். மாயாநிவிருத்தியே சுத்த சைதன்னியத்தின் சொரூபம். அதுவே யின்பமயமாம். அந்த மாயையானது ஜீவான்மாக்களுக்குப் பின்னமாயுள்ளது. சைதன்னியமானது. பரமார்த்தமாய்ச் சத்தா யிருப்பதால் அதற்கு ஒருபோதும் நாசமில்லை. எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமாயுள்ள பசிவப் பிரத்தியட்ச ஞானத்தினாலே முத்தியுண்டாம். இந்த ஞானத்தைப் பரமஹம்சன் வேதாந்த சிரவணத்தினாலே பெறுவான். மற்றைய ஆச்சிரமிகள் கிரமமாக அடைவார்கள். 

 

இந்தத் தருமநெறியில் நின்ற வானப் பிரஸ்தன் பிரமலோகத்தை அடைவான். சந்நியாசி சிவஞானம் பெறுவான். குடீசகனுக்கு ஞான இடையூறாயிருப்பவைக ளெல்லாம் வேதாந்த சிரவணத்தினால் நீங்கும். பகூதகன் சாந்தி தாந்தி முதலிய பெறுவான். ஹம்ஸனுக்கு வேதாந்தசிரவணத்தில் விருப்பம் உண்டாம். பரமஹம்ஸன் வேதாந்த சிரவணத்தினால் மெய்ஞ்ஞானத்தை அடைவான். அவன் கருமசந்நியாசி என்னப்படுவான். மற்றச் சந்நியாசிகளுக்குக் கர்மம் மிகுதியாதலால் பிட்சுகர் என்னப்படுவார்கள். வேதாந்தத்தால் சொல்லப்படுகிறது அபரோட்சஞானம். குரு வருளால் பெற்ற அந்த ஞானம் சகல பந்தங்களையும் ஒழிக்கும். ஆதலால் ஞானத்தைப் பெற விரும்புவோர் பரமஹம்ஸ நெறியை ஆசரிக்க வேண்டும். குடீசகன்கூதகன்அம்ஸன் என்னும் நிலைமைகளை அடைய விரும்புகிறவர்கள் பிராஜாபத்திய இஷ்டி செய்ய வேண்டும். பரமஹம்ஸ நிலைமையை அடைய விரும்புகிறவன் ஆக்கினேய இஷ்டி செய்ய வேண்டும். யாகம் செய்யாத பிராமணர்களுக்கு இந்த இஷ்டிகள் இல்லை. அவர்கள் விரஜா மந்திரத்தைக் கூறித் தங்களுடைய அக்கினியில் நெய் ஹோமம் செய்துமிகுந்ததைத் தாம் அருந்திப்பிறகு நெய்யினால் ஆகுதி கொடுத்துஅந்த அக்கினியை ஜீரண ஆக்கிராணம் செய்யவேண்டும்.. அதன் பின் பிரேஷ உச்சாரணம் செய்யவேண்டும். பிறகு சந்தியாசம் பெறவேண்டும். இது சந்நியாசாசிரம த்தை அடையும்முறையாம்குருவினால் கொடுக்கப்பட்ட காஷாயம். தண்டு கமண்டலம் பெற்றுத் குருவை வணங்கிவேதாந்த சிரவணம் பண்ணவேண்டும். நிட்காமிய கர்மமே செய்ய வேண்டும். காமிய கர்மத்தால் பயனில்லை பரமஹம்சன் பிரணவத்தைத் தவிர வேறு மந்திரத்தை ஜபிக்கக் கூடாது. அந்தப் பிரணவமே சமுசார சாகரத்தைக் கடக்கும் ஓடமாகும். 

 

அதன் பொருளைக் கேளுங்கள். அந்தப் பிரணவத்துக்குச் சிவபெருமானே பொருளாவார். பிரம விஷ்ணுக்களைப் பொருளாகக் கூறுவது இலக்கணையாலே யன்றி உண்மையில் இல்லைசந்நியாசி ஞான சித்தி பெறுவதற்காக அவிமுத்தக்ஷேத்திரம் போய்ப் பரமசிவனை ஆராதிக்கவேண்டும். வேறு மார்க்கத்தால் மெய்ஞ்ஞானத்தைப் பெறமுடியாதுஆகையால் சிவபெருமானைப் பூதங்களிலும் தன் சுயசொரூபத்திலும் கண்டு தரிசித்து வணங்க வேண்டும்பிரமசாரிகிருகஸ்தன்வானப்பிரஸ்தன் இவர்கள் சதருத்ரீயத்தை ஜபிக்க வேண்டும். அதனால் பாவம் தொலையும்ஞானம் உண்டாம். பின் எளிதில் முத்தி பெறுவார். இதில் சந்தேகமில்லை. அந்தச் சதருத்திரத்தின் மத்தியில் பஞ்சாட்சர மிருக்கின்றது. அதன் மத்தியில் சிவபெருமான் வசித்தருளுவார்யாவுக்கும் மூலகாரணரான பரமசிவன் அதில் வசிப்பதால் சகல தேவர்களும் அதை ஆச்சிரயித்துக் கொண்டிருப்பார்கள். 

 

சிவ சம்பந்தமான மாயையானது சத்துவம்இராஜசம்தமசு என்கிற குணங்களால் ஜீவாத் மாக்களை மறைத்துக் கொண்டிருக்கும். அதனால் பந்த முண்டாகும். சத்துவ குணத்தால் ஞானம்வைராக்கியும் வெண்மை யிவைகள் உண்டாகும். இராஜதத்தால் காமம்துக்கம்சிவப்பு இவைகள் உண்டாகும். தமோ குணத்தால் ஆலசியம்மோகம்பிராந்திகருமை யிவைகளுண்டாகும். சத்துவத்தில் உத்தம பதார்த்தங்கள் எல்லாம் உண்டாகும். இராஜதத்தால் மத்திம பதார்த்தங்கள் எல்லாம் உண்டாகும். தாமதத்தால் அதமபதார்த்தங்கள் எல்லாம் உண்டாகும். இந்த முக்குணங்களுடன் கூடின மாயாசம்பந்தத்தால் சகல ஜீவர்களுக்கும் சமுசார பந்தம் உண்டாகும். தீராத இந்தச் சமுசார பந்தம் சிவ ஞானத்தால் ஒழியும். ஆஸ்திகர்கள் ஞானயாகத்தால் சிவஞானம் பெறுவார்கள். யாகம் ஸ்தூலம் சூக்குமம் என்று இருவகைப்படும். கருமயாகமேஸ்தூலயாகம் என்னப்படும். ஞான யாகமே சூட்சுமயாக மாம். இவற்றுள் கருமயாகம் மூன்று வகைப்படும். அவையாவனகாயிகயாகம்வாசிகயாகம்மானசிகயாகம் என மூவகையான கருமங்களாம். மந்திரஜபமே வாசிகமாகும். தெய்வத் தியானமே மானச யாகமாகும். காயிகயாகத்தைவிட வாசிகம் சிறந்தது. வாசிகத்தைவிட மானசிகம் உயர்ந்தது. மான தயாகம் உத்தமம் அதமெமென இருவகைப்படும். உமாச காயனாகிய பரமசிவனைத் தியானிப்பதுவே உத்தமமாமென்று பெரியோர்கள் சொல்வார்கள். மற்றத்தேவர்களைத் தியானிப்பது அதமமாகும் மோட்சத் தை அடைய விரும்புகிறவர்கள் சிவபெருமானையே தியானிக்க வேண்டும். வேதாந்தமும் இப்படியே சொல்கின்றன. திருமால் முதலான தேவர்களிடத்தில் பரமசிவன் வியாபகமா யிருக்கிறார் என்று கருதி வணங்குகிறவர்கள் முத்தி பெறுவார்கள். விஷ்ணு வாதி தேவர்களையும் சிவநாமங்களாகிய சங்கரன்சம்புமஹா தேவன் முதலிய திருநாமங்களாலே துதிக்கிறவர்களும் முத்தி அடைவார்கள். விஷ்ணு வாதியர் நாமங்களினாலே பரமசிவனைத் துதிப்பவர் நரகத்தை அடைவார்கள். 

 

ஞானயோகத்துக்குச் சமானமாக எதையும் வேதம் சொல்லவில்லை. இதற்கு மேலானதும் ஒன்று மில்லை. மெய்ஞ் ஞானத்தை அடைய வுரியவனுக்குச் சிவபக்திசிவனடியார் பக்திதிருநீறு கண்மணிகளில் நேசம்சாந்தி தாந்தி முதலியவைகள் இயற்கையாகவே யுண்டாகும். இந்த ஞானிக்கு விஷயவாஞ்சை பிரதி பந்தமாய்க் கெடுதிசெய்யும். ஆகையால் விஷயங்களில் வெறுப்புத் தோன்றினால்சிவபக்தி முதலியவைகள் நிலைபெறும். ஞானயாகத்தின் மகிமை அளவிலடங்காது. சொல்ல முடியாதென்றாலும் கபிலர்கணாதர் முதலிய ரிஷீசுவரர்கள் கூடிய மட்டும் கூறியிருக்கிறார்கள். அவைகளெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபாடுவதில்லை. என் குருவான வியாச முனிவரிடம் நான் ஞானத்தைப் பெற்றேன். இதை நான் உங்களுக்குச் சொன்னேன். அறிந்து கொள்ளுங்க ளென்று சூதர் கூறினார். 

 

 

 

 

 

 

 

 

இரண்டாவது அத்தியாயம்.

காயிக கருமயாகம் கூறியது.

 

காயிக கருமயாகமானது நித்தியம்நைமித்திகம்காமிகம் என்று மூவகைப் படும். நித்தியத்தினால் சத்துவகுண முண்டாகும்சித்த சுத்தியுண்டாகும். நைமித்திகத்தி னால் பாவங்கள் அழியும். காமிகத்தினால் சொர்க்காதி லோகங்களும் ஐசுவரியமும் சித்திக்கும். புத்தியில்லாதவர் காமிகயாகத்தைச் செய்வார்கள். அறிவுள்ளவர்கள். நித்தியநைமித்திக கருமங்களையே செய்வார்கள். இவர்களுக்குக் கிரமமாகமுத்தி கிட்டும். இவற்றை நிஷ்காமிகமாகச் செய்கிறவர்கள் மோட்சத்தை அடைவார்கள். சகல யாகங்களுக்கும் சிவபெருமானே தலைவர் என்றுணர்ந்து செய்கிறவர்கள் முத்தியடை வார்கள். மற்றவர்கள் முத்தியடையமாட்டார்கள். மஹாதேவன் என்னும் பெயரினாலும் அதன் பொருளினாலும் உண்மையாகவே பெரியவனாக இருக்கிறவனே யாகங்களுக்குத் தலைவன். தக்கன் யாகத்தினாலே அதன் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் கூறப்படும் கருமங்கள் எல்லாவற்றையும் சிவபூசை யென்றே கொள்ள வேண்டும். அப்படிக் கொள்ளுதலுக்கு மஹாயாகம் என்று பெரியோர் சொல்வார்கள். சிவபிரான் திருவடிக்கு மெய்யன்புடையவர்கள் செய்கிற யாவையும் புண்ணியமாகும். சிவபிரானுக்கு அன்பில்லாதவர்கள் செய்கிற புண்ணியங்களும் பாபமாகும். வேதத்தை நம்புகிறவர்களுக்கும் கருமயாகம் உபகாரமாயிருக்கும்ஞானத்துக்கும் சாதகமாகும். ஒருவனிடத்தில் அனாசாரங்கள் இருந்தால் அவனைச் சோதித்து வெளிப்படுத்தாமலும் அவனோடு கூடாமலும் இருப்பதுகூட ஒருவகை யாகம் என்று கூறுவார்கள். சார்வாகன்பௌத்தன்சமணன் இவர்களுடைய வசனங்களைச் செவிகொடுத்துக் கேளாமலும்அவரோடு சிநேகம் பண்ணாமலும் இருப்பதும் ஒருவகை யாகமேயாம் என்று சொல்வார்கள். வேதவிதிதாந்திரிகவிதிகளை அறியாமல் ஒரு கல்லை வைத்துத் தெய்வமென்று பாவித்துப் பூசித்தாலும் அதையும் ஒருயாகமென்றுமேலோர் கூறுவார்கள். வேதாகமங்கள் கூறும் நெறியை உணர்ந்து சிவபிரானைப் பக்தி செய்கிறவன் செய்கிற கருமயாகம் கெடுதி யடைவதில்லை. அவன் ஞானமோட்சங் களைப் பெறுவான் என்று காயிககர்மத்தை யுரைத்து முனிவர்களே! இதில் உயர்வு தாழ்வுகளிருந்தால் அவைகளை நீங்கள் ஊகித்துத் தெரிந்து கொள்ளுங்களென்று சூதர் சொன்னார். 

 

 

மூன்றவது அத்தியாயம்.

வாசிக யாக முரைத்தல்.

 

சத்துச்சித்தானந்த நிட்கள சொரூபச் சிவத்தினிடமிருந்து சேதனமாய்ச் சோதியாயிருக்கிற விந்து என்று ஒன்று உண்டாயிற்று. அந்த விந்துவினின்று பரமசிவாம்சமாய்ப் பீசம் என்று கூறப்படுகிறதும்சிதசித்தின் அம்சமாய் நாதமென்று ஒன்றும் சித்தின் அம்சமாய் விந்து வென்பதும் உண்டாகும். அப்போது அகண்டாகாரமான ஒரு சப்தமுண்டாகும். அந்தச் சப்தமே அர்த்த விவரணத்துக்குக் காரணமான தொழிலை உண்டாக்கும். அது பிராணவாயுவுக்கு அதீனமாய் மூலாதாரத்தில் தோன்றிப் பொன்போல விளங்கும். அந்த வாக்குக்குப் பரையென்றுபேர். அந்த வாக்கு நாபிஸ்தானத்தை அடைந்து தோன்றும் போது அதிகமாய் ஒளியுண்டா கும். 

 

அந்தவாக்குக்குப் பைசந்தியென்றுபேர். அது சுழுமுனைமார்க்கமாய் இதயத்தை அடைந்து இன்னுமதிகமாயும் நெருப்புப் போன்ற ஒளியுடனும் விளங்கும். அதை மத்திமையென்று சொல்வார்கள். அது பிரமரந்திரத்தையடைந்து சிவத்தையடைந்து அட் சர சொரூபமாகும். அந்த அட்சரசொரூபம் ஸ்தூலம் சூட்சுமம் என்று இருவகைப்படும். செவிப்புலனால் அறியப்படுவதாய் அகர முதலான ஐம்பத்தோர் அட்சரங்களால் மந்திரசொரூபமாய் இருப்பது ஸ்தூலமாகும். சூட்சுமம் ஓம் என்கிற ஓரெழுத்தின் சொரூபமே சூட்சுமசொரூபமாம். அது பைசந்தி மத்திமைக்கு மேலுள்ள மூன்றாவது ஸ்தானமாகிய புருவமத்தியி லிருப்பதால் பரமாதார மென்று பேர் பெறும். வைகரியின் பாகம் பூரணமாக அமையப் பெறுவதால் பூரகமென்று பேர்பெறும். எல்லா வற்றிற்கும் வியக்த ஸ்தானமாதலால் புண்ணியபாசனமென்று பேர்பெறும். பிரமரந்திர ஸ்தானத்தில் அஜபா மந்திரத்திற்கு அவயவங்களாகிற ஹம்ஸம் என்கிற மந்திரம் இருக்கும். ஹகாரம் ஸகாரம் இரண்டும் ஒரே வடிவமாய் அமைந்திருக்கும். உமாதேவியோடு கூடி விளங்குகிற திருமேனியை யுடைய அர்த்த நாரீசுவரருக்கு ஹகாரம் புருஷ பாகமாம். ஸகாரம் உமைபாகமாகும். பரை புருஷ பாகத்துடன் கலக்கிறபோது “ஸோஹம்'' என்கிற பரமான்மாவின் மந்திரம் தோன்றும். ஸோஹம் என்பதிலுள்ள ஸகாரத்தையும் ஹகாரத்தையும் தள்ளி விஞ்சியவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவமாக நிற்கும். அதன்மகிமை அளவிலடங்காது. எல்லாமந்திரங் களுக்கும் முதன்மையான ஹம்ஸமந்திரத்தால் பந்தமொழிந்து பய நீங்கும். ஆகையால் அதனை மந்திரம் என்பார்கள். இந்தமந்திரத்தி னால் மயேசுவரி சொரூபமான மாதுருகா மந்திரம் உண்டாகும். பிராணவாயுவால் உற்பத்தியாகிற நாதசொரூபமாகிற பிரணவத்தி லிருந்துவைகரிசப்தம்உண்டாகிறதற்குஅப்போது நிசுவாச சொரூபமான பிராண வாயுவின் வியாபாரம் இல்லாமையால் நாதமெப்படித் தோன்றும்வைகரிவாக்கு எப்படியுண்டாகும் என்று கேட்டால் சொல்கிறேன். 

 

பிராணவாயுவானது அதோ முகமாய்ப் பூரக சொரூபமாயிருக்கும். அபானவாயு மேல்நோக்கி ரேசகரூபமாய் நிற்கும். மற்றொன்று பிராணவிருத்தி சொரூபமாய் அமைந்திருக்கும். பிராணவபானங்கள் சந்திக்க கும்பக ரூபமாய் வியானவாயு விருத்தி சொரூபமாயிருக்கும். வியானவிருத்தி சொரூபமாய் விளங்குகிற பிராண வாயுவினால் நாதம் தோன்றி வைகரிவாக்கை உண்டாக்கும். இந்த மந்திரத்தைக் குரு அருளால் தெரிந்து கொள்ள வேண்டுமே யொழிய கல்வி கேள்விகளாலும் அறிவினாலும் அறியப்படாதுஇந்த மந்திரம் பரசிவனையே பொருளாகவுடையது. ஆதலால் இதற்கு ஒப்பில்லைசிஷ்யனுடைய பரிபாகத்தை மூன்று வருஷம் அல்லது நாலு வருஷம் பரிசோதித்தறிந்து பின்பு இந்தமந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அபக்குவனுக்கு உபதேசித்தால் இருவருக்குந் துன்பம் நேரிடும். மந்திர மாதாவான மாதுருகை மத்திமை ஸ்தானத்திலிருக்கும் போதுபுத்தியில் பலபேதமான மஹாமந்திர சொரூபமாய்வேத ரூபமாய்சுப்சத்தம் அபசத்தங்களின் சொரூபமாய்சத்தி சிவ சொரூபமாய் பரமசிவனைப் போலவே யிரண்டு வடிவங்களையுடையதாய் விளங்கும். அட்சர சொரூபமாகிய இந்த மாதுருகா மந்திரம் ஒரு சொரூபத்தினால் சக்திவாசகமாயும்மற்றொரு சொரூபத்தினால் சிவவாசகமாகவும் விளங்கும். இந்திரிய கோசரமாகிய சத்தமே பதமென்னப்படும். நின்மல சிவமே அபதம் என்னப்படும். இந்தப்பதமே பரமசிவனுடைய சொரூபத்தைக் காட்டும். இந்தப் பத அபத விபாகங்களை அறிந்தவனே மெய்ஞ்ஞானி யாவான். மாதுருகாசொரூபமாகிற பதச்சோதனை செய்கிறவன் சகலமந்திர சித்திகளையும் அடைந்தவனாவான். அவனுக்கு அரியது ஒன்றுமில்லை. பரை முதலாகக் கூறப்பட்ட நான்கு பதத்தில் ஒன்றாகிய வைகரி ரூபமான சப்தம் ஒன்றாக இருந்தாலும்உயிர்களுக்கு உபகாரம் செய்யும் நிமித்தம் ஸ்தான பேதங்களால் அகரம் விசர்க்கம். வரைக்குமுள்ள உயிர் வர்க்கமாயும்கவ்வர்க்கம்சவ்வர்க்கம்டவ்வர்க்கம்தவ்வர்க்கம்பவ்வர்க்கம் என்பனவும் யரலவ என்பனவும்சகார முதல் நாலும் சேர்ந்து மெய்வர்க்கமாயும் ஆக இரண்டு வகையாயிருக்கும். பதினாறு உயிர்களும் சாநு நாசிகமென்றும்நிர் அநுநாசிகமென்றும் இருவகையாய் முப்பத்திரண்டு அக்கரமாய் விளங்கும். கவ்வர்க்கம்முதல் ஐவர்க்கமும் இருபத்தைந் தெழுத்தும்யகாரம் முதல் எட்டும் சேர்ந்து முப்பத்து மூன்று மெய்களாம். இந்த இரண்டு வகை அட்சரங்களும் சுரம் வியஞ்சன மென்று இருவகையாம். இப்படி உலக உபகாரார்த்தமாய்ப் பலவடிவங்களைப்பெறும். ஒவ்வொரு அட்சரத்தாலும் ஒவ்வொரு சித்தி யுண்டாகும். சிலர் வைதிக ஆகாரங்களையும்சிலர் ஆகம சொரூபங்களையும் சிலர் இலவுசிக சொரூபங்களையும் அனுஷ்டிப்பார்கள். ஆதலால் இந்தப் பதாக்கரங்கள் சிவசத்திகளைப் போலவே ஆசரிக்கப்படுகின்றன. பரைபைசந்திமத்திமையென்று முறையாகத் தோன்றிய மாதுருகை பேதங்களினால் வெளிப்படையான வைகரி ரூபத்தை யடைகின்றது. மாதுருகை ஸ்தூலம் சூட்சுமம் அதிசூட்சுமம் என்று மூன்று வகையாய்ச்சத்திசம்பந்தத்தால் பரமசிவனையே காரணப்பொருளாகக் கூறுகின்றது. பரை பைசந்தி என்கிற அவஸ்தா பேதங்களை அடைவதற்கு முன்னாலே விந்துநாத சொரூபமாயிருந்த மாதுருகா சொரூபமே சூட்சுமமாகிய பரமசிவ சொரூபமாகும். எந்த மந்திரமும் குருவருள் பெற்றால் தான் சித்தியாம்இல்லாவிட்டால் சித்தியாகாது. 

 

 

நான்காவது அத்தியாயம்

பிரணவ மந்திர மகிமை கூறியது.

 

சூதர் சௌனகராதியோரை நோக்கி முனிவர்ளே! பிரணவம் பரமென்றும் அபரமென்றும் இருவகைபடும்மென்பது சிதானந்த சொரூபராகிய சிவமேயாம். அபரப்பிரணவமானது மாயாமய சொரூபமான சத்தசொரூபமாம். இந்த மந்திரத்தால் சிவஞான சித்தியுண்டாம். பரசிவவாச்சியத்திற்கு வாசகமாகும். சிவத்தை யடைவத ற்குக் காரணமாக இருக்கின்றது. முன்காலத்தில் பிரமதேவர் சிவசின்னமான திருநீறு கண்மணி தரித்துப் பஞ்சாட்சரஜபம் செய்துஇந்திரிய நிக்கிரகம் பண்ணிப்பரமசிவனை நோக்கி மூன்று வருஷம் கொடிய தவசுசெய்தான். பரமசிவனுடைய அனுக்கிரகத்தைப் பெற்றுச் சொர்க்கம் அந்தரம் பூமி என்கிற மூன்றையும் படைத்தான். பிறகு தபாக்கினியால் அந்த மூன்றையும் எரித்து விட்டான். அம்மூன்றினிடமிருந்து அக்கினி காற்று சூரியன் இவைகளுண்டாயின. அந்த மூன்றையும் தபாக்கினியால் தகித்தான். அவற்றினின்று இருக்கு யஜுஸ் சாமம் என்கிற மூன்று வேதங்களும் உண்டாயின. அந்த வேதங்களையும் தகித்தான். அவற்றிலிருந்து மூன்று யாகிருதிகள் உதித்தன. அவைகளையும் தகித்தான். அவற்றினின்று அகாரஉகாரமகாரங்கள் தோன்றின. அந்த மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிரணவ மாக்கினான். இந்தப் பிரணவத்தில் பரசிவமே பிரதிபிம்ப ரூபமாய் விளங்குவர். அதனால் அந்தப்பிரணவத்தைச் சிவவாசகமென்று அறிஞர் கூறுவார்கள். பிரணவமும் சிவமும் இரும்பும் அதிற்கலந்த நெருப்பையும் போல அபேதமாயிருக்கும். இதை ஜபித்தால் எல்லா மந்திரங்களையும் ஜபித்தது போலாகும். இதற்குத் தெய்வம் பரசிவமே. அகர உகர மகரங்களாகிற மூன்றுக்கும் பிரமன் விண்டு உருத்திரன் என்கிற முத்தேவர்களும்சிவப்பு வெளுப்புக் கறுப்பு என்கிற மூன்று நிறமும்ஜாக்கிரகம்சொற்பனம்சுழுத்தி என்கிற மூன்றவத்தைகளும்பூமி அந்தரம் சொர்க்கம் என்கிற மூன்று ஸ்தானங்களும்உதாத்தம் அநுதாத்தம் சொரித மென்கிற மூன்று சுரங்களும்இருக்கு யஜுஸ் சாமம் என்கிற வேதங்கள் மூன்றும்காருகபத்தியம் ஆகவனீயம் தட்சிணாக்கினீயம் என்கிற மூன்று அக்கினிகளும்முக்குணங்களும்முத்தொழில்களும் ஆகும். இந்தமூன்றினாலும் மூன்று விரல் சந்துகளிலும் நியாசம் செய்தலாகிய அங்கநியாசத்தையும்உந்தி இதயம்சிரசுமூன்றிடத்தும் வைத்து அங்கநியாசம் செய்து இம்மந்திரத்தைப் பத்துலட்சம் செய்தால் சகலசித்திகளு முண்டாகும்பரசிவன் அருளுண்டாகும். பாசம் நீங்கும்ஞானம் உதிக்கும்முத்தியும் சித்திக்கும். 

 

 

ஐந்தாவது அத்தியாயம்.

காயத்திரியைக் கூறியது.

 

முனிவர்களே! காயத்திரி மஹாமந்திரத்தை அதன் அங்கத்தோடும் சொல்கிறேன் கேளுங்கள். காயத்திரியின் அங்கம் வியாகிருதிகள் ஏழுமாம். அந்த வியாகிருதிகளுக்கு முறையே அத்திரிபிருகுகுச்சர்வசிஷ்டர்கௌதமர்காசிபர்அங்கிரஸ் என்பவர்கள் ரிஷிகள். காயத்திரி உஷ்ணி அனுஷ்டுபு பிருகதி பங்திதிருஷ்டுபுஜகதி இவ்வேழும் சந்தசுஅக்கினிவாயுசூரியன்குருவருணன்இந்திரன்விசுவேதேவர் இவர்கள் தேவர்கள். காயத்திரிக்கு விசுவாமித்திரர் ரிஷிகாயத்திரிச் சந்தசுசூரியன் தேவதைபரமசிவன் அதிதேவதைகாயத்திரி சிரசுக்குப் பிரமதேவன் ரிஷிசந்தசு அநுஷ்டுபுபரமசிவனே தெய்வம். மூன்று பாதங்களும் ஆறு குட்சிகளும் ஐந்து சிரசுகளும்தீப்போன்ற நிறமுள்ள முகமும்வெண்ணிற மேனியும்வெண்டாமரை யிதழ் போன்ற கண்களும் உடையவளாய் காயத்திரி விளங்குவாள். ஜபம் செய்யும்போது இப்படிச் சொரூப தியானம் செய்ய வேண்டும். ரிக்குயஜுஸ்சாமம் ஆகிய மூன்று வேதங்களும் மூன்று பாதங்களாகும். கீழ்திசை முதலாவது வயிறு. தட்சணதிக்கு இரண்டாம் வயிறு. மேற்குத் திசை மூன்றாவது வயிறு. வடதிசை நாலாவதுஊர்த்துவம் ஐந்தாவதுபாதாளம் ஆறாவதாம். பதினெபட்டுப் புராணங்களும் நாபியாம்பிரபஞ்சம் முழுமையும் சரீரமாம். ஆகாயமே வயிற்றி னுட்புறம். சந்தசுகளே ஸ்தனங்கள். தருமசாஸ்திரம் இருதயமாம். நியாயசாஸ்திரங்கள் புஜங்களாம். சாங்கிய ங்கள் இரண்டும் செவிகளாகும். சிட்சைவியாகரணம்நிருத்தம் ஜோதிஷம்கற்பம் இவ்வைந்தும் சிரசுகளாகும். அக்கினியே முகம். மீமாம்சை இலக்கணமாகும். அதர்வணமே சேஷ்டையாம். பிரமதேவன் சென்னி! உருத்திரன் சிகை. விஷ்ணு இருதயம். இப்படிப்பட்ட காயத்திரி ஸ்தூலமாகும். வேதாந்த சாஸ்திரம் சூட்சும சரீரமாகும். சிவபிரான் அதற்கு அந்தரியாமி. இந்தக்காயித்திரி மந்திர அக்கரங்களால் முறைப்படி நியாசம் செய்து கொள்ள வேண்டும். 

 

காயத்திரியின் அங்கத்தைக் கேளுங்கள். பாத அங்குஷ்டம் படுகணைக்கால். முழங்கால்தொடைகுய்யம்அண்டம்இடுப் புநாபிவயிறுஸ்தனங்கள்இருதயம்கழுத்துமுகம்கபோலம்மூக்குகண்கள்புருவமத்தியம்நெற்றிபூர்வமுகம்தட்சிணமுகம்பச்சிமமுகம்உத்தரமுகம்சிரசுஇவ்விருபத்துநான்கும் அங்கங்கள். இந்த மந்திரத்தைத் தியானிக்கும்போது அதன் இருபத்துநாலு எழுத்துக்களுக்கும் நிறம் கூறுகிறேன் கேளுங்கள். முதலாவது சண்பகமலர். இரண்டாவது சாமளம். மூன்றாவது பிங்களவர்னம். நாலாவது நீலமணிவண்ணம். ஐந்து ஆறு ஏழாவதாம் அக்கரங்கள் தீநிறமும்மின்னல் நிறமுமாகும். எட்டு ஒன்பது நட்சத்திர நிறமாம். பத்தாவது முழுநீலம்பதினொன்றாவது சிவப்பு. பன்னிரண்டாவது சாமளம். பதின்மூன்று சுப்பிரவர்ணம். பதினாலாவது மஞ்சள்வர்ணம். பதினைந்தாவது சுப்பிரவர்ணம்பதினாறாவது பதுமராகநிறம். பதினேழாவது சந்திரவர்ணம். பதினெட்டாவது சுப்பிர வர்ணம்பத்தொன்பதாவது இந்திரநீலம். இருபதாவது இரத்தவர்ணம். இருபத்தொன்றும் இருபத்திரண்டும் நீலோத்பல நிறமாம். இருபத்து மூன்றாவது சங்கம்முல்லைசந்திரன் இவைகளைப்போன்ற நிறமாம்இருபத்து நாலாவது தீபச்சுடர் வர்ணமாகும். இப்பொழுது சொன்ன நிறத்தின்படி யிருபத்துநாலு எழுத்துக்களையுந் தியானிக்க வேண்டும். இவ்வெழுத்துக்களுட் சில மஹாபாதகங்களை நீக்கும். சில உபபாதகங்களை நீக்கும். சில மற்றப்பாவங்களை ஒழிக்கும் அன்னதானத்துக்கு மேலான தானமில்லை. கொல்லாமைக்கு மேலான தவமில்லை. பரமசிவனுக்கு மேற்பட்ட தெய்வமில்லைஇதைப்போலக் காயத்திரிக்கு மேற்பட்ட மந்திரமுமில்லை. 

 

ஆகையினால் இந்த மந்திரத்தைக் குரு முகத்தால் உணர்ந்து கொண்டுதன்னாலியன்ற அளவு அவருக்குத் தட்சிணை யளித்து இந்த மந்திரத்தை இருபத்து நாலு லட்சம் செபித்துநாலாயிரம்நெய்ஓமமும் செய்தால்அவன் செய்த மஹாபாதகங்க ளெல்லாம் ஒழியும். மந்திரசித்தியு முண்டாகும். எல்லா நன்மைகளும் சித்திக்கும். விடியுமுன் ஸ்நானம் செய்து தினந்தோறும் ஆயிரம் ஜபம் செய்தால் விருப்பமெல்லாம் நிறைவேறும். சூரியகிரண காலத்தில் பசுவின் நெய்யில் கருங்காலிச் சமிதையால் ஹோமம் செய்தால் மிகுந்த திரவியமுண்டாகும். இந்த மந்திரத்தால் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தால் விரும்பின எல்லாம் கிடைக்கும். கோமயச் சூரணத்தை நெய்யினால் ஆயிரம் ஹோமம் செய்தால் பசுக்கள் மிகுதியாகக் கிடைக்கும். வெள்ளிய அரிசியால் ஓமம் செய்தால் அழகும் கற்புமுள்ள மனைவியை அடைவான். சந்தான பாக்கிய முண்டாகும். கலசத்தில் நிரப்பின நீரை எண்ணாயிரந்த ரம் ஜபித்து ஸ்நானம் செய்தால் துர்க்கனாக் கண்ட தோஷம் நீங்கும். பாலை அருந்தி விரதமிருந்து இலட்சம் ஜபம் செய்தால் அவமிருத்தியு நீங்கும். நெய்யை அருந்தி ஜபித்தால் விரும்பின் கல்வியுண்டாம் நாபியளவு நீரில் நின்று கொண்டு இலட்சம் ஜபித்தால் இராஜ்யம் கிடைக்கும். பலாசமலராமல் ஓமம் செய்தால் மிகுந்த செல்வ முண்டாம். வேதச்சமிதையால் ஓமம் செய்தால் மழைபொழியும். தேனால் ஓமம் செய்தால் இராஜ்யம் கிடைக்கும். தேனும் பாயசமும் கலந்து ஓமம் செய்தால் பெண்கள் வசீகரமாவார்கள். நெய்யால் ஓமஞ்செய்தால் சகல சித்திகளும் உண்டாகும். அன்னத் தால் ஓமம் செய்தால் தரித்திரம் ஒழியும். பஞ்சகௌவியம் அருந்தி இலட்சம் ஜபம் செய்தால் பூர்வஞான முண்டாகும். முழங்காலளவு தண்ணீரில் நின்றுகொண்டு கோடியுரு ஜபித்தால் ஜயமுண்டாகும். எருக்கம் சமிதையால் ஓமம் செய்தால் பிராமணர்கள் அல்லாத பகைவர் அழிவார்கள். அவர் உருவத்தை மண்ணில் எழுதி அவருடைய பெயரை மார்பிலெழுதி அதன் தலையில் இருகாலையும் வைத்து நின்று கொண்டு மனமொருமித்து ஜபித்தால் அந்தப் பகைவன் அழிவான். இதைக் குருமுகத் தாலுணர்ந்து செய்யவேண்டும். இல்லாவிடிற் கெடுதியுண்டாம். நெய்பால்எள்ளுபஞ்சகவ்வியம் இவற்றால் ஓமம் செய்து உபஸம்ஹாரம் செய்ய வேண்டும். மாவிலையா லோமஞ்செய்தால் சுரங்கணீங்கும். அரசின் சமித்தால் ஓமம் செய்தால் க்ஷயமுதலிய ரோகங்கள் தீரும். இந்தக்காயத்திரி ஜபத்தால் ஞானமுண்டாகும். ஓமத்தினால் ஞானயாகம் சித்திக்கும். மோட்சமுண்டாகும் என்று சூதர் கூறினார்.

 

 

அறவது அத்தியாயம்.

ஆத்மமந்திரங் கூறியது.

 

முனிவர்களே! ஆத்ம மந்திரத்தைச் சொல்கிறேன் கேளுங்க ளென்று சூதர் சொல்கிறார். இந்த மந்திரத்திற்குப் பிரமா ரிஷி! காயத்திரி சந்தசு! பரமாத்மாவே தெய்வம்! சிவஞானமே சக்தி! பரமசிவமே பீஜம். இதனால் இந்த மந்திரம் சிவசக்தி சொரூபமாம். களங்கமற்ற சித்த முடையவர்களாய் இந்த மந்திரத்தைத் தியானிக்கும் போது அர்த்தநாரீசுவர முகூர்த்தமாகச் சிவபிரானைச் சிந்திக்கவேண்டும். ஒரு நாளைக்குப் பன்னீராயிரம் ஜபிக்க வேண்டும். அதனால் மஹா கொடிய பாவங்க ளெல்லாம் அழிந்து போகும். இந்த மந்திரம் ஜீவாத்மாக்களுடைய சரீரத்திலுள்ள சகார அகார சொரூபமாம். ஆதலால் இதனைக் குரு முகத்தால் உபதேசம் பெற்று உணரவேண்டும். அறிந்து செய்த பாவங்களைக் கூட ஒழிக்கும் மகிமையுடையது. இந்த மந்திரத்திற்கு அசபாவித்தை யென்று பேர். இதை உபதேசம் பெற்றவன் ஜபம் செய்யாமலிருந்தாலும் ஜபம் செய்தவனே யாவான். அவனுக்குச் சகல சித்திகளு முண்டாகும். தவிர இம்மந்திரம் ஜீவசிவவாசகமுமாகும். அகம் என்னும் வாசகம் சீவனுக்குரிய நாமம். “அம்'' என்பதற்கு அர்த்தம் ஜீவாத்மாவேயாம்.ஸம்" என்பதற்குச் சிவபெருமானே அர்த்தமாம். பந்தமுடையவனாகத் தோன்றும் சீவன் அனுபவப் பிரமா ணத்தாலே சிவனேயாம்இதிற்சந்தேகமில்லை. வேதங்களுமிப்படியே சொல்லும். இந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். 

 

பரமாத்மா சத்தியசொரூபன்பரிபூரணன்சித்சொரூபன், ஆனந்தரூபன். அகம் என்னும் பதத்துக்கு அர்த்தமாகியஜீவாத்மா அனுவிருத்தியா யிருத்தலால் சத்திய சொரூபன். நனவாதி அவஸ்தைகளுக்குச் சாட்சியா யிருப்பதினாலேயும்ஞாதம் அஞ்ஞாதமாம் பொருள்களை யுணர்தலாலேயும் கேவல சித்தென்று சிலர் சொல்வார் கள். அது தகுதியல்ல. அவன் ஒருதிரவியமேசேஷமானவன் அந்த ஆன்மா சடமோசித்துருவனோ சேதனவுருவனோ என்றால் அவற்றிற்கெல்லாம் குற்றம் உண்டாதலால் ஆத்மா முக்கிய சித்துருவன் என்றே கொள்ளப்படுகிறான். பிரேமைக்கு ஆசிரய னாத லால் சுகசொரூபன். சர்வசாட்சியாயிருத்தலால் பூரணன். பூரணன் ஆதலால் ஞாதாஞ் ஞாதங்களை அவ்வப்படியே உணரமாட்டான். சத்துவப் பிரதான மாயோபாதிகனான சிவன் அசுத்த சம்சார வர்ஜிதன். அகம்பதார்த்தமான சீவனும் சம்சார்வர்ஜிதன். ஏனென் றால் அதற்குச் சாட்சியாயிருப்பதினாலேயாம். குருமுகத்தாலிதனை உபதேசம் பெற்று ஜீவப பேதமற்று நிற்பவனே ஞானி. இந்த ஞானத்தை அறியாதவருக்குச் சம்சாரம் ஒழியாதுஹம்சம் என்னும் பேர் பெற்ற இந்த மந்திரத்தை உணராமல் முத்தியடைய முடியாது. இது எல்லா மந்திரங்களிலும் உத்தமமானது. சகல ஐசுவரியங்களையும் கொடுக்கும். இன்பத்தை எப்போதும் உண்டாக்கும். சிவபெருமான் கருணையை அடையச் செய்யும். ஜயம்கீர்த்திஅருள் இவைகளை உண்டாக்கும். பிரமா விஷ்ணுக் களாலேயும் பூஜிக்கப்படுவது. இதை ஜபிக்கிறவன் உலகத்தில் ஒப்பற்றவனேயாம். இரேசக பூரகத்தைவிட்டுக்கும்பகம்மாத்திரமுள்ளவனாய் நாபிக்கந்தஸ்தானத்தில் பிராணாபான வாயுக்களைச் சமனாக்கித்தியானித்துச் சந்திரமண்டல அமிர்தத்தை அருந்திஇதயகமலத்திலே தீபச்சுடர்போல விளங்குகிற சிவபெருமானை அந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்துஇந்த மந்திரத்தை ஜபித்தால் மூப்புபிணிமரணம் இவைகளால் ஒருபோதும் பயமுண்டாகாது. தினந்தோறு மிவ்வாறு ஜபிக்கிறவன் அணிமாமுதலிய சித்திகளை யிச்சித்தால் அவைகளை அடைவான். இந்த மந்திரத்தை யுணர்ந்து முத்திபெற்றவர்கள் அநேகர். இதை உபதேசிக்கிற குருவுக்குப் பயபக்தி விசுவாசத்துடன் பணிவிடை செய்ய வேண்டும். குருவின் கருணையாலிதனை அறிந்து கொண்டு மெய்ஞ்ஞானத்தைப் பெறுவதால் சாதி முதலியவைகளும்வேத சாஸ்திரங் களும் தன்னை யறியாமல் ஒழிந்து போய்விட்டாலும்குரு சேவையை மாத்திரம் விடக் கூடாது. பரமசிவனுடைய திருவடிக் கமலங்களைப் பெறுவதற்குரிய சாதனம் குருபக்தியேயாம். இது வேதத்தின் கருத்து. இதில் சந்தேகம் சிறிதுமில்லை. 

 

 

ஏழாவது அத்தியாயம்.

பஞ்சாட்சரமகிமை கூறியது.

 

முனிவர்களே! பஞ்சாட்சர மந்திரமானது சகல போகங்களையுந் தரும். பந்தத்தை ஒழிக்கும். சிவஞானத்தைக் கொடுக்கும். இந்தப் பஞ்சாட்சரத்திற்கு முன் பிரணவத்தைச் சேர்த்தால் அதைச் சடாக்ஷரமென்று சொல்வார்கள். இதற்குப் பிரமாரிஷி காயத்திரியே சந்தசு. பரமசிவனே தெய்வம். சிற்சக்தியே சக்தி. சிவசப்தமே பிரஜம். அங்கநியாசம்கரநியாசம் செய்து முதலில் பிரணவத்தைச் சேர்த்து "நமசிவாய" என்று ஜபிக்க வேண்டும். இப்படி ஜாபாலோபநிடதம் கூறுகின்றது.நம்” என்பது நமஸ்காரம் என்று பொருள் தரும். "சிவ" என்பது பரமசிவனைக் குறிக்கும். சீவான்மா சிவனோ பேதமா யிருப்பதைக் கூறுகிறதே நமஸ்காரப்பொருளாம். இந்தப் பஞ்சாட்சரத்தின் முடிந்த பொருள் சிவனுக்கு நமஸ்கரிக்கிறேன் என்பது. சிவசொரூபத்தை உணரவிரும்புகிற சீவர்களுக்கு அந்தச் சிவத்தைத் தவிர வேறு பொருள் இல்லாமையால் பிரபஞ்சம் ஒன்றுமில்லை யென்பதே நகரத்திற் கருத்தமாகும். மகாரத்திற்குமம” என்பது பொருள். பிரணவம் எல்லாப்பொருள்களையும் தரும். ஆதலால் இது சிவவாசகமேயாம். சிவனுக் கந்நியமான வெல்லாம் பொய். விவகார தசையிலேயே பேதங்கள் எல்லாம் கூறப்படும். பரமார்த்தத்தில் கிடையாது. பிரத்தியட்சமா யுள்ள பிரபஞ்ச மில்லையென்பது எவ்வாறென்றால்சீவன் முத்தர் எல்லாம் சிவசொரூபம் என்பார்கள். அதனால் அஞ்ஞான தசையில் பிரபஞ்சம் உண்மையேயாம். ஞான தசையில் பிரபஞ்சம் பொய்யாகும். ஏனென்றால் அந்த ஞானதிசையில் சிவம் ஒன்றே தோன்றும். பிரபஞ்சம் தோன்றமாட்டாது. சகல கலைகளின் தாற்பரியங்கள் எல்லாம் இந்த மந்திரத்தில் அடங்கியிருக்கும். 

 

ஆயைால் சற்குரு சேவை செய்து இந்தச் சடாட்சர மந்திரத்தைப் பெற்றுக் கொண்டு தன்னால் கூடிய அளவு குருவுக்குத் தட்சிணை கொடுத்துஅவரிடம் செலவு பெற்றுக் கொண்டு மீண்டுமுக்காலமும் ஸ்நானம் செய்துதிருநீறு கண்மணிதரித்துகந்த மூல பலங்களையேனும்அவிசையேனும் ஆகாரமாகக் கொண்டு மலைச்சிகரம்நதிதீரம்சமுத்திரதீரம்சிவாலயம்மனிதசஞ்சார மில்லாதவனம்இவைகளில் ஓரிடத்திலிருந்து கொண்டுகிழக்குஅல்லது வடக்குமுகமாய்ச் சுகாசனத்திலிருந்து கொண்டுஇந்திரியங்களை அடக்கிக் களங்கமற்ற மனமுடையவனாய்மூன்று பிராணா யாமஞ்செய்துரிஷிசந்தசுதெய்வம்சக்திபீஜம்கரநியாசம்அங்கநியாசங்கள்தியானம் இவைகளைச் செய்துஇருதயத் தாமரை மத்தியில்பூர்வபாக தளத்துச்சியில்வலப்பாகக் கேசரத்தில்மேற்குப் புறப்பொகுட்டில் விளங்குகிறசூரியசந்திர மண் சகல

டலமத்தியில் மின்னலைப் போலப் பிரகாசிக்கிற பரசிவனைச் சிந்தித்துஇந்த மந்திரத்தை ஆறு இலட்சம் ஜபிக்க வேண்டும். பிறகு இலட்சம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பின் நெய்பால்பலாசமலர் இவற்றில் எதனாலாவது ஓமஞ் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மந்திரசித்தியாம். சகல யோகங்களும் உண்டாகும். முத்தியும் சித்திக்கும். ஸ்ரீ பரமேசுவரனுடைய சொரூபத்தைச் சிந்தித்தாவதுசிவத்தினோடு அபேதபாவனை செய்தாவது இம் மந்திரத்தைச் செபிக்கவேண்டும். 

 

எப்போதும் பன்னீராயிரம் தடவை பக்தியுடன் ஜபிக்கிறவன் சிவஞானத்தைப் பெற்று பந்தமொழிவான். முத்தி சேர்வான் உபதேசம் பெற்ற நாள் முதலாக நாள் ஒன்றிற்கு ஐந்நூறு ஜபிக்கிறவன் மயேசுவர சாரூபம் பெறுவான். நூறு ஜபம் செய்கிறவன் ருத்திர சாரூபம் பெறுவான். எண்பது ஜபம்பண்ணுகிறவன் விஷ்ணு வான். நாற்பது ஜபம் செய்தால் வரம் கொடுக்கும் சக்தியை யடைவான். இருபது ஜபம் பண்ணினால் தீர்க்காயுசு பெறுவான். பத்து ஜபம் பண்ணினால் அறுதொழிலும் சித்திக்கும். இருதயகமலத்தில் பரமசிவனை யிம்மந்திரத்தினாலே பூஜிக்க வேண்டும். சூரியமண்ட லத்திலாவதுசந்திர மண்டலத்திலாவதுஅக்கினிமண்டலத்திலாவதுவிக்கிரக சொரூபங்களிலாவது பூஜை செய்ய வேண்டும். இந்தச் சடாக்ஷர மந்திரத்தி னாலேயே சோடசோப சாரங்களும் செய்து பூஜிக்க வேண்டும். இப்படிப் பூஜிப்பவர் களுக்குச் சகல சித்திகளு முண்டாகும். போக மோட்சங்களும் உண்டாகும். 

 

 

எட்டாவது அத்தியாயம்.

மானத யாக முறைமை கூறியது.

 

விந்தமாயைகளுக்கு அதிகமாய்உபாதிகடந்து நிற்பதாலும் அந்தக்கண விருத்திக்கு விஷய மாகாமையாலும்காணாதிகளுக்குப் பிரத்தியக் பூதமா யிருப்பதா லும்சர்வசாட்சியா யிருப்பதாலும்சிவசொரூம் சிந்திப்பதற்கு அரியதாகும். ஆகை யால் நிஷ்கள சொரூபத்தை விட்டுச் சகள சொரூபத்தியானமே செய்யவேண்டும். வெண்மை நிறமுடையவராய்உமாதேவியாரை பாகத்தில் உடையவராய்சந்திரசேகர ராய்நீல்கண்ட முடையவராய்பிரசன்னமான முகமுடையவராய்திரிநேத்திர முள்ளவராய்வரதாபயகர முள்ளவராய்விசித்திரமான மகுடம் பூண்டவராய்சர்வாபரணங்களும் அணிந்தவராய்சகல இலக்கணங்களும் உள்ளவராய்திருநீறு புனைந்தவராய்சதுர்ப்புஜ முள்ளவராய்மான் மழு தரித்தவராய்பிரகாசிக்கிற சிவபெருமானது திவ்விய சொரூபத்தைச் சிந்தித்தால் அவர்களுக்குப் போகம் மோட்சம் இரண்டும் உண்டாகும். அந்தக்கரண விருத்திதமப்பரிணாம அந்தக்கரணவிருத்திமாயைஅவித்தையென்கிற உபாதிகள் இல்லாமலிருக்கிற சிவசொரூபத்தைச் சுவப்பிரதானம்அசுவப் பிரதானம் சமப்பிரதானம் என்பவைகளில் ஒன்றாய்த் தியானிக்க வேண்டும். சுத்தமான மனம் உடையவன் சுவப்பிரதான தியானம் செய்வான். அபக்குவன் அசுவப்பிரதான தியானம் செய்வான். மத்திமனாயுள்ளவன் சமப்பிரதான தியானம் செய்வான். இவற்றுள் தனக்கிசைந்த ஒன்றைத் தியானிக்க வேண்டும். பரமசிவனுடைய சத்தியினிடத்தில் உற்பத்தியான சத்துவம்இராஜசம்தாமசம் என்கிற முக்குணவடிவினரான ருத்திரன்விஷ்ணுபிரமன் இவர்களையும் தக்கபடி தியானிக்க வேண்டும். சூரிய சந்திரர்களையும்மற்றத் தேவர்களையும் தகுந்தபடி தியானிக்க வேண்டும். சகல அண்டசராசரங்களையும் சிவசொரூப மாகவே கருதித் தியானிக்க வேண்டும். அசுவமேதம் முதலிய யாகங்களும் இந்த மானச யாகத்துக்கு ஒப்பாக மாட்டாது. இவனுக்குலகில் ஒப்பில்லை. 

 

             

 

 

 

ஒன்பதாவது அத்தியாயம்.

ஞானமகிமை கூறியது.

 

முனிவர்களே! ஞானயாகத்துக்கு ஒப்பாக ஒன்றும் கிடையாது. அந்த ஞானம் பலவகைபாகச் சொல்லப்படுகின்றது. சிவஞானம் ஒன்றாகவே யிருந்தாலும் மாயை யாலும்மாயாகாரியங்களாலும் பலவிதமாகும். சிவசத்தி விசுத்த சத்துவ மாயா சொரூ பமாய்ப் பரிணமிக்கிறபோதுஅந்த உபாதியோடு கூடியிருக்கிற சிவன் என்கிற ஞானம் சிறந்தது. அவித்தை யென்கிற மாயையோடு கூடியிருக்கிற சிவஞானம் சீவஞானமாம். அந்த ஞானம் அருத்தத்தால் பிரதீதிஅதனால் முக்கியம் என்று இருவகைப்படும். அவித்தையோடு கூடினது சீவஞானம்பரமார்த்தத்தினாலே முக்கியஞானம் என்று சொல்லப்படும்அவித்தியா காரியமாகிய ஸ்தூலசூட்சும சரீரங்களோடு கூடியிருக்கிற அந்தச் சீவ சைதன்னியமே அப்பிரதீதியினால் முக்கியமென்று சொல்லப்படும். அந்தக் கரணத்தோடு அபேதமாகக் கொள்ளப்படுகிற அத்தியாசத்தினாலேஅந்தக்கரண சம்பந்தியான சீவன் சைதன்னியம் ஞாதுரு முதலிய பேதங்களை அடைகின்றது. 

 

அந்தக்கரணம் காலத்தாலும் கருமத்தாலும் பிரமாணம்பிராந்திசந்தேகம் என்று பலவிதமாகத் தோன்றுகின்றது. இந்திரியங்களினால் அறியப்படுகிற ஞானம் பிரமாணம். ஒரு வஸ்துவை மற்றொரு வஸ்துவாகக் காணுதல் பிராந்தி. ஒரு பொருளினிடத்தில் மாறுபட்ட இரு குணங்களா லுண்டாகும் மயக்கம் சந்தேகமாம். இப்படியேஇதுவே யென்கிற புரணம் நிச்சய ஞானமாம். இந்தப் புரணஞான சம்பந்தமே பிராமாணியமாம். பிரமாணஞான காரணக்கூட்டம் அறுவகையாம். மனதுக்குத் தெரிந்த பாவ ஞான காரணக்கூட்டம்ஒன்றால் அளந்து அறியும் பாவஞானக் காரணக்கூட்டம்அனுபலத்தியால் உணரும் ஞானம்அபாவ ஞானமென்னப்படும். இந்திரியங்களால் உணரப்படுவது பிரத்தியட்சஞானமாம். வியாத்தி ஞானத்தால் அறியப்படுவது அனுமான மாம். சமானஉணர்ச்சியால் அறியப்படும் ஞானம் உபசமான ஞானமாகும். உபபத்தியா லுண்டாவது அருத்தா பத்தியாம். தாற்பரியமுள்ள சத்தத்தால் (சொல்லால்) உணரப்படுவது சப்தஞானமாம். சப்தஞானம்அட்சரம்பதம்வாக்கியம் என்று மூன்று வகைப்படும். அட்சரங்களே வாக்கியங்கள் என்று சிலர் கூறுவார்கள். சிலர் பதங்களே வாசகமென்று கூறுவார்கள். வாக்கியங்களே அருத்த வாக்கியங்களென்றும்அட்சரங்களே பதங்களாயுமிருக்கும். அட்சரங்கள் இணைந்த பதங்களாயும் இருக்கும். பதங்களின் கூட்டம் வாக்கியங்களாம். அந்த வாக்கியம் பிரதான வாக்கியம். குண வாக்கியம் என்று இருவகைப்படும். முதலாவது மஹாவாக்கியம் என்று சொல்லப்படும். மற்றதை அவாந்தர வாக்கியம் என்பார். இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரு பொருளையே உடையனவாதலால் ஒரேவாக்கியமாம். பதங்கள் சக்தியாலே அருத்த வாசகமாம். வாக்கியங்கள் தாற்பரியத்தாலே அருத்த போதங்கள் என்னப்படும். தாற்பரியம் ஆகாதாற்பரியம்அவாந்தர தாற்பரியம் என்று இருவகையாம். முதலாவதின் சேஷமே அவாந்தரதாற் பரியமாம். வாக்கியங்கள் நிஷேதவாக்கியம்விதிவாக்கியம்சித்தார்த்த போதக வாக்கியங்கள் என்று மூவகைப்படும். விதிநிஷேத வாக்கியங்கள் கர்த்தவ்யம் (செய்தல்)அகர்த்தவ்யம் (விலக்கல்) என்ற விஷயமாம். சித்தார்த்தபோதக வாக்கியம் இலௌகிகம் வைதிகம் என இரண்டு விதமாகும். இவைகளும் நிவர்த்தம்நிவர்தகம் என இரண்டாகும். பிரத்தியக்ஷ முதலான ஐந்தும்நிஷேத விதிவாக்கியங்களும் சிவசொரூபத்தை விளக்கா. சிற்சொரூபமான பரமாத்மா பிரமாண கோசர விஷயங்களுக்கு வேறாயிருத்தலால் அவைகளால் அறியப்படுவ தல்ல. வைதிகமான சித்தார்த்த வாக்கியத்தினாலே மாத்திரம் பரசிவனது உண்மைச் சொரூபம் அறியப்படும். இந்த வேதாந்தவாக்கியமே நிரதிசயானந்த சிவசொரூபப் பிராப்திக்குச் சாதனமாகும்பந்தத்தை ஒழிக்கும். பந்தமியல்பானது என்றால் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் அது ஒழியாது. எது எந்தப் பொருளுக்குச் சுபாவகுணமோ அந்தக் குணம் அந்தப்பொருள் நாசமானால் தான் தானும் நாசமாகும். ஆகையால் பந்தம் இயல் பென்பது பொருந்தாது. பிராந்தியினால் கற்பிக்கப்பட்டதேயாம். ஆத்மாபலவாகக் காணப்படுவதும்சீவான்மா பரமான்மா என்கிற பேதமும் உபாதியினாலேயே அல்லாமல் சுபாவத்தில் இல்லை. எப்படியென்றால் கடமுதலியவற்றின் சம்பந்தத்தால் ஆகாயம் பேதப்படுவது போலவாம். வேதாந்த வாக்கியங்கள் எல்லாம் பரமசிவன் ஏகனே என்று கூறுகின்றன. சித்துருவத்தாலாவது சைத்திய உருவத்தாலாவது பேதம் கற்பிக்கப்படவேண்டும். அது சம்பவியாது; சித்துக்குச் சித்து ரூபத்தால் வேறுபாடு உண்டாவதில்லை. சைத்தியத்திற்குச் சைத்தியரூபத்தால் பேதம் வருமேயன்றிச் சித்துக் குவருவதில்லை. பரசிவம் சின்மாத்திரமே யன்றிச் சைத்தியம் அன்று. சிலர் பரான் மாவிற்குப் பேதம் கூறுவர்அது சரியல்ல. பேதங்களுக்கு அந்த ஆன்மா சாதனமாய் அவற்றிற்குச் சாட்சியாயிருக்கும். ஆதலால் அநாதியான அந்த ஆன்மாவுக்குப் பேத முண்டாக மாட்டாது. ஆதலால் ஆன்மாவினிடத்தில் காணப்படுகிற பேதம் பிராந்தியி னாலேயாம் என்று உணர்ந்து கொள்ளுங்கள். ஒருபொருளுக்குச் சுபாவகுணத்திற்கு மாறாக அதனிடத்தில் காணப்படுவது எல்லாம் உபாதியாலேயன்றி வேறல்ல. எப்படி யென்றால்வெண்மை நிறமுள்ள பளிங்கினிடத்தில் சம்பந்தத்தால் அன்றிச் செம்மை முதலிய நிறங்கள் காணப்படுவதில்லை. அது போல ஏகமான ஆன்மாவுக்குப் பேதம் பிராந்தியாலே தான். கடாதி உருவங்களுக்குப் பேதங்கூறிப் பமான்மாவிற்குப் பேதங் கூறப்படவில்லை. கடாதிகளுக்குப் பேதம் கூறுவதும் விவகார திசையிலேயே யன்றிப் பரமார்த்தத்தில் இல்லை. பரமார்த்த சத்தியமாயினதால் ஏன் கூடாது என்னில் அது ஒரு பொருளாகவும்குணமாகவும் கூறமுடியாமை யாலே தான். அன்றியும்அது ஒருவஸ்துவை அபேட்சித்தல்லாமல் தானே அறி ற்கு விஷயமாவதில்லை. ஆகையால் அதை உரு என்று சொல்லக் கூடாது. அன்னியமான வஸ்துவிற்குஅன்னிய வஸ்துவுடன் பேதங் கூறப்படும். அப்போது தான் அன்னியத்துவம் வரும். அன்றியில்லை. இப்படி ஒன்றோடொன்று கலந்திருத்தலால் அது சுபாவ குணம் ஆகமாட்டாது. இப்படியே வேதாந்த வாக்கியங்கள் எல் லாம் ஆத்மா ஏகனேயென்றும்துவிதம் மாயையால் உண்டாவ தென்றும்அந்த ஏசுத்தன்மையை உணர்ந்தவனே பரமானந்தத்தை அடைவானென்றும் நிச்சயமாய்க் கூறுகின்றன. ஆகையால் தர்க்கத்தாலும்மாஹா வாக்கியங்களாலும்அனுபவத்தாலும்வஸ்துவை நிச்சயித்து அறிகிறவனுக்குச் சொற்பனம் பொய்யாவது போலப் பந்தமும் ஒழியும். பேதவழியிலிருந்து முத்தியை அடைவது கூடாது. தன்னிடத்தில் பல பூதங்களையும்பல பூதங்களினிடத்தில் தன்னையும் காண்பவனுக்குப் பந்த முண்டாகாது. அத்துவித ஞானத்தாலேயே அநேகர் முத்தியடைந்தாராதலால் இப்படிப்பட்ட ஞானவேள்விக்கு ஒப்பானது வேறொன்றுமில்லை. உயர்வானதுமில்லை. இந்த ஞானயாகத்தைவிட்டுக் கருமயாகத்தை விரும்பிச் செய்கிறவர்கள் ஒளியைவிட்டு இருளை நாடுகிறவர்கள் போலாவார்கள். இது தேவர்களுக்கும் கிட்டாதது. சிவபக்தியுடையவர்கள் சிவன் அருளால் ஞானவேள்வியை அடைவார்கள். மற்றவர்களுக்கு அரிது. இந்த ஞான யாகத்தை அறிந்தவர்களுக்கு யாவும் பிரமமாய்த் தோன்றும். இந்த ஞான வேள்வியின் மகிமையைச் சிவபெருமானை யன்றி மற்ற எவராலும் சொல்ல முடியாது. 

 

 

பத்தாவது அத்தியாயம்.

ஞானம் அடையும் முறைகூறியது.

 

வேதம் ஸ்மிருதி முதலிய உத்தம நூல்கள் பாவம் புண்ணிம் அவைகளினா லுண்டாகும் பயன்சுவர்க்காதி புவனங்கள் உண்டு என்றும்பூதப்பிரேதங்கள்எமன் எமதாதர்கள்யட்சர்நிருதர்இந்திரன் முதலான தேவர்கள் இவர்களும் உண்டு என்றும் கூறுகின்றன. ஆஸ்திக புத்தியுள்ளவன் ஞானமுள்ளவன் என்று சொல்லப்படுவான். பஞ்ச பூதங்களுக்கும் தலைவர்களாயும்பௌதிக சிருஷ்டி முதலியவைகளுக்குக் காரணர்களாயும் உள்ள பிரமாவிஷ்ணுஉருத்திரன்மகேசன்சதாசிவன் என்னு மிவர்கள் முறையேஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவராவார். பிரமனைவிட விஷ்ணு மேலானவர். விஷ்ணுவைவிட உருத்திரன் உயர்ந்தவர். உருத்திரனைவிட ஈட்சண உபாதி விசிஷ்ட பரசிவசைதன்னியம் உயர்ந்தது. அதைவிடச்சர்வக்ஞமுடைய சைதன்னியம் உயர்ந்தது. அதைவிட உபாதிச் சைதன்னியம் உயர்ந்தது. அதைவிட நிருபாதிக சச்சிதானந்த பரசிவம் மேலானதென்றும் அறிந்து கொண்டவன் ஞானத்தைப் பெறுவான். சீவன் உண்டு! அந்த ஜீவன் தேகத்துக்கும்பிராணன் இந்திரியங்களுக்கும் மனமாதிகட்கும் வேறானவன். ஜாக்கிர ஸ்வப்ன சுழுத்திகளுக்குச் சாட்சியாயிருப்பான். அந்தஜீவன் சத்துச்சித்தானந்த சொரூபன்த்வம் அகம் என்னும் பதப்பொருளா யுள்ளவன். கரணவிருத்திக்ச் சாட்சியிருக்கிறவன். பந்தமில்லாத சைதன்னியமாவான் என்று ஒருவன் தெரிந்து கொண்டுஇந்த ஆத்ம சைதன்னியமும்பரசிவ சைதன்னியமும் ஆகிய இரண்டும் ஒன்றே. வேறல்லவென்றும் தர்க்கத்தாலும்அளவைகளாலும்சுவானுபவத்தினாலும் எவன் தெரிந்து கொள்கிறானோ அவன் மெய்ஞ்ஞானத்தைப் பெறுவான். முனிவர்களே! இந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சூதர்சொன்னார். 

 

பதினோராவது அத்தியாயம்.

பிரபஞ்ச ஆரோபம் கூ றியது.

 

சத்துச் சித்தானந்த சொரூபமான பரபிரமம் எந்நாளும் ஏகமே. அது அனாதியாய்மாயா சம்பந்தத்தால் ஸ்வப்பிரகாசம் மழுங்கி ஒளியில்லாதது போலத் தோன்றும். சத்தாயிருந்தும் அசத்தைப்போலவும்ஏகமாயிருந்தும் அநேகம்போலவும்சமுசார மில்லாதிருந்தும் சமுசாரிபோலவும் காணப்படுவன். அந்தப் பமாத்மாவின் அகண்ட சொரூபத்தில் அதன் சத்தியால் சேதனாசேதன வேறுபாடு கற்பிக்கப்பட்டது. அந்தச் சேதன சொரூபத்தின் சர்வக்ஞசொரூபம் முதல் விருட்சாதிகள் வரைக்கும் உள்ள பேதங்கள் அந்தச்சத்தியால் உண்டானவைகளேயாம். அவற்றின் உயர்வு தாழ்வுகளு மப்படியேயாம். அந்த அசேதனத்தினின்றும் வாக்கு ஆகாசம் முதலானவைகளும் உண்டாம். இவைகளெல்லாம் விவகாரிகாத் தியாலே யுண்டாக்கப்பட்டன. வருணங்கள்ஆச்சிரமம் முதலாகக் கூறப்பட்டவைகளும்விதிவிலக்கு முதலிய வெல்லாம் கற்பனையேயாம். சிவம் ஒன்றே சத்தியம் என்று அறிந்துகொள்ளுங்கள். 

 

 

பன்னிண்டாவது அத்தியாயம்.

பராசத்தி விசாரம் உரைத்தது.

 

சின்மாந்திரத்தை ஆசரித்திருக்கிற மாயையினாலே சக்தி சொரூபமாயிருக்கிற சம்விது வடிவான பராசத்தி பரசிவத்தைப் போலவே சின் மாத்திரமேயாம். ஆகையால் நிருவிகற்பமாயும் சுயம் பிரகாசமாயும் சத்திய ஞானானந்த சொரூபமாயும்சம்சார பந்தத் தை ஒழிப்பதாயும்சிவத்துக்குவேறில்லாததாயும்சகல பிராணி களுக்கும் சுகத்தைக்கொடுப்பதாயும் இருக்கும். பரசிவம் காரண வுபாதிசர்வக்ஞத் துவ வாதிகளுடனும் ஈக்ஷண வுபாதியோடும் டியிருக்கிறபோதும்உருத்திரன்திருமால்பிரமன்மகேசன்சதாசிவன் என்பவர்களாயிருக்கும் போதும்இரணிய கர்ப்பனாயும் சூத்திராத்பாவாயும் இருக்கும் போதும்விராட்முதலாயும்திக்குப் பாலகராயும்தேவராயும்மனிதராயும்மற்ற பிராணிகளாயும்மரங்களாயும்நதி நதம் மலைகளாயும்கடலாயும்இருக்கிறகாலத்திலும் அவ்வம் மூர்த்திகளுக்கு உரியசத்திகளாக விளங்கும். அந்தச் சத்தியை இல்லாமல் சிவத்துக்கு யாதொரு தொழிலுமில்லை. சிவமின்றிச் சக்தியும் இல்லை. சக்தியையின்றிச் சிவமுமில்லை. இப்படி அபேதமாகக்கருதுகிறவன் ஞானியாவான். பேதமாக நினைப்பவன் நரகத்தில் விழுவான்.

 

இந்தச் சிவமும் சக்தியும் சகல ஜீவாத்மாக்களுக்கும் தந்தையும் தாயுமாம். லோகமாதாவான அந்தச் சக்தியைத் துணையாக்கொண்டு உபாசனை செய்கிறவர் இஷ்டகாமியார்த்தங்களைப் பெறுவார்கள். துன்பத்தை அடைய மாட்டார்கள். பிரமா விஷ்ணு முதலானவர்களும் இந்தச்சத்தியின் அனுக்கிரகத்தினாலேயே சகல போகங்களையும் பெற்று வாழ்கிறார்கள். சைவர்வைணவர்களும் பௌத்தர்க்ஷமணர்களும் இவர்கள் இந்தச் சத்தியை எப்படிக் கருதி வணங்குகிறார்களோ அம்மா திரியாகவே அவர்களுக்குத் தோன்றி அனுக்கிரகிக்கும். இந்தச் சத்தியும் ஜடசத்தியாகிய யையும்சேர்ந்து பிரபஞ்சமும் அவற்றின் பேதங்களுமாம். அஸ்தி நாஸ்தி என்று சொல்வன எல்லாம் சிவமேயென்று அறிபவன் சிவமேயாவான்.. பூரணசொரூபமே மாயையால் அபூர்ணமாய்த் தோன்றும். அந்தமாயையும் கூடப்பூரணமென்று உணர்கிறவன் பூரணனேயாவான். நான் என்கிற ஆன்மாவும்பல உலகங்களும்சீவனும்ஈச்சுவரனும்மாயாசத்தியும் வேறல்ல. அபேதமேயாம். பந்தமுள்ளவனுக்கே விதிவிலக்குகள் எல்லாம். மண்சுத்தமானதாயிருந்தும் கட முதலியவையான போது சுத்தம் அசுத்தமென்று கூறப்படுவதுபோல் எல்லாம் சுத்தமாயும் சிவசொரூபமாயுமி ருந்தும் மாயையால் சுத்தம் அசுத்தமென்று கூறப்படுகின்றன. ஆத்மஞானிக்கு விதிவிலக்குகள் என்கிற விவகாரங்களில்லைஆத்மஞானத்தை உரைக்க அரியது. 

 

 

பதின்மூன்றவது அத்தியாயம்.

பஞ்சபிரம விசாரம் கூறியது.

 

சத்துச்சித்து ஆனந்தமே வடிவாய்விகாரமற்றதாய்ஏகமாயுள்ள அபரசிவம் தனது சிற்சத்தியாலே ஈசானம்தற்புருஷம்அகோரம்வாமதேவம்சத்தியோஜாதம் என்னும் ஐந்து பேதங்களாம். இவ்வைந்தும் சத்தம்பரிசம்இரசம்உருவம்கந்தம்என்று சொல்லப்படுகிற ஐந்தாய்பூமிமுதலான பூதங்களுக்குத் தெய்வமாய்சதாசிவன்மகேசன்உருத்திரன்விஷ்ணுபிரமா என்கிற ஐந்து தேவர்களாய்ஆகாயம்வாயுஅக்கினி நீர்மண் என்கிற பூதம்ஐந்தாய்இவைகளுக்குத் தெய்வமாய்செவிமூக்குகண்வாய்மெய் என்னும் இந்திரியங்களாய்திக்குமருத்துஅக்கினிவருணன்பூமி என்கிற ஐந்து பேதங்களாய்இவற்றுக்குத் தெய்வமாய்வாக்குபாணிபாதம்உபஸ்தம்பாயுர் என்கிற கருமேந்திரியங்கள் ஐந்தாய்அவற்றின் தெய்வங்களான விஷ்ணு, இந்திரன், அக்கினி, பிரமன் சூரியன் ஆகிய ஐவர்களாய்!

 

புத்திசித்தம் அகங்காரம் என்னும் இவைகளுக்கு மூலமான அந்தக் கரணமாகிய ஐந்துமாய்அவற்றின் தெய்வமானசந்திரன் குரு உருத்திரன் உமை இரணியகருப்பன் என்கிற ஐவராய்பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் ஆகிய வாயுக்கள் ஐந்தாய்அவற்றின் தெய்வமான சூத்திராத்மா காரணவாயு அக்கினி விசுவசிருஷ்டி விசுவயோனி என்கிற ஐவராய்இருக்.கின்றன என்று அறிகிறவனே மெய்ஞ்ஞானி யாவான். 

 

காச முதலிய பஞ்ச பூதங்களினுமுள்ள சத்துவகுணம் சாந்தியாதீதகலைசாந்திகலை வித்தியாகலை பிரதிஷ்டைகலை நிவிர்த்திகலையாகிய ஐந்தாம்இராஜதகுணம் சலனம் பரிசலனம் பிரக்கிரமம் பரிசீலனம் பிரசாரம் என்னும் ஐந்து கிரியைகளாம்தமோ குணம் சாதகம் பாதகம் உத்தம் நோதகம் பஞ்சகம் என்று ஐந்தாம். இவைகளும் ஈசானமுதலானஐந்துமாகும் என்று உணர்ந்து கொள்வனே ஞானி. பரசிவன் மாயையால் ஐந்து உருவம் கொண்டான். அந்தமாயை அசாத்தியமான செய்கைகளைச்செய்யும்அதனால் ஜககாரணத்துவம் முதலானவைகள் எல்லாம் அந்தப் பரசிவத்துக்கு உண்டாயின. நானே அவன்! அவனேநான் என்று வேதம் சொல்லும். இதையுணர்ந்து மோகமற்று இருப்பவனே உத்தம ஞானி. அந்தப் பிரமத்தினிடத்தில் மோகமிராதுஆகையால் இவை யெல்லாவற்றையும் விவேகத்தி னாலே பரசிவமாகக் காண்பவனே ஞானியாவான். சம்சாரபந்தம் ஒழிவதற்கு இந்த வேதாந்த ஞானத்தையின்றி வேறுமார்க்கம் கிடையாது. 

 

தன்னுடைய சிற்சக்திக்கு விரோதமாகவிருக்கிற இராகத்துவேஷாதிகளைத் தொலைப்பதற்கு வேதாந்தஞானம் வஜ்ராயுதமாகும். சமுசாமாகிற கோடையால் வாடினவர்களுக்குச் சிவஞானமாகிய அமிர்தம்தான் சாந்தியை உண்டாக்கும். தன்னாலே கற்பிக்கப்பட்டுள்ள எல்லாம் சுயசொரூபம் என்று தெரிந்து கொண்டால் அவைகளைத் தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்ளலாமென்று வேதாந்தம் கூறுகின்றது. சிலந்தி நூலை யுண்டாக்கி மீண்டுந் தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்வது போலவும்விருட்சாதிகள் எல்லாம் மண்ணில்தோன்றி மீண்டும் அதில் ஒடுங்குவது போலவும்பரசிவம் பிரபஞ்சத்தைத் தன்னிடம் தோற்றுவித்து மீண்டும் ஒடுக்கிக்கொள்ளும். ஜாக்கிரம் உண்டானபோது சொற்பனஉலகம் ஒழிந்துபேதுபோலச் சுயசொருப ஞானத்தால் பிரபஞ்சம் ஒழியும். உலகவாசனையாலும்சாத்திரவாசனையாலும்தேகவாசனையாலும் பிரதிபந்தமுண்டாகும். சிலருக்குப் புண்ணிய விசேஷத்தினால் உண்டானாலும் பரசிவானுக் கிரகமில்லாவிட்டால் பிரதிபந்த முண்டாகும். பரசிவானுக் கிரகத்தால் பிரதிபந்த மில்லாமல் தத்துவஞானத்தை யடையலாம். சிவபெருமான் ஒருவரே ஞானத்தை அளிப்பவர். விஷ்ணு பிர்மா முதலானவர்கள் ஞானத்தை அருளும் வல்லமை யுடையவராகமாட்டார். பரிபாக முடையவர்களுக்கு ஞானசாதனமும்பெத்தருக்குப் போகங்களையும் கொடுப்பார்கள். ஆகையால் ஞானமளிப்பதற்குப் பரமசிவனே யுரியவன். அவன் கருணையை அடையாதவர்கள் புத்திமுத்திகளை அடையமாட்டார்கள். பரமசிவன் அருளால் குருகடாட்சமும் உண்டாகும். குருவின் கருணையினாலே வேதாந்தார்த்தம் விளங்கும். அதனாலே சிவபக்தி உண்டாகும். அதனாலே உண்டாகிற ஞானம் சூரியனைப்போல பல இருளை ஒழிக்கும். எல்லாம் சிவமேயென்று அறிகிறவன் சிறிதும் பந்தமில்லாதவனாவான். அவனுடைய ஜனன மரணங்களும் ஒழிந்து போகும். 

 

    

பதினான்காவது அத்தியாயம்.

சத்தாவிசார முரைத்தது.

 

முனிவர்களே! கடம் படம் முதலானவைகளில் தோன்றும் சத்தை ஏகமாய் அவ்வஸ்து உருவமாகவே யிருக்கும். பேதவடிவங்களையுடைய கடாதிகளில் விசேஷ உருவத்தொடு பேதப்பட்டிருக்கும் என்று சிலர் கூறுவார்கள். அதுசரியல்ல. பேதமில்லாதபடியால் விசேட உருவமுமில்லை. விசேடவுருவம் சத்தையோடு பேதமா யிருக்குமென்றால் அது அசத்தேயாகும். அப்போது குற்றமுண்டாவதால் சூனியம் போலாகி விடும். அபேதமாமென்றால் சத்தையேயாகும். அந்த விசேஷ உருவமானது பின்னாபின்னமாம் என்றாலும் முன்சொன்ன குற்றங்கள் நேரிடும். அதனால் சத்தைக்கு வேறான விசேடரூபம் ஆரோபிதமேயாம். ஏகமாயுள்ள அந்தச் சத்தையேபிரமமாம். அப்படியின்றிவேறாகச் சொன்னால் நசிருங்கத்தனப்போல அசத்தாகிவிடும். பிரமமும் பிரபஞ்சமும் சத்தைக்கு வேறல்ல. வேதமும் இப்படியே சொல்லுகின்றன. ஞானிகளினு டைய அனுபவமும் இப்படியேயாகும். அந்தப்பிரமம் மண் கடாதி பேதங்களானாற் போலப் பலசொரூபங்களாகத் தோன்றும். பிரமமானது பிரபஞ்சமாகத் தோன்றுவது சுத்தியில் வெள்ளியாகத் தோன்றுவது போலாகும். வேதமும் இப்படித்தான் சொல்லு கின்றது. வெளியில் இருளும் ஒளியுமிருப்பது போலப் பிரமத்தினிடத்தில் ஜடமும் அஜடமும் விளங்கும். பரமார்த்தத் திசையில் பஞ்சபூதங்களும் பிரமசொரூபமேயாம். எப்போதும் பரசிவன் ஒருவனே உளன். 

 

அவனே யாகங்களால் வணங்கப்படுகிறவன். தானங்களாலும் அடையப்படுகிற வன். மந்திரங்களால் ஜபிக்கப்படுகிறவன். அநேக வேதங்களாலும் தேடப்படுகிறவன். திருமால் பிரமன் இந்திரன் முதலான வர்களாலும் வந்தனை செய்யப் படுகிறவன். முனிவர்கள் எல்லாரும் நல்ல தவங்களைச் செய்து தொழுவார்கள். இருதயகமலத்தில் வசிக்கிற அந்தச் சிவனைச் சந்நியாசிகள் குரு அருளால் உணர்ந்துகொண்டு முத்தராவா ர்கள். அந்தப் பரமசிவனைச் சர்வசொரூபனாக அறிந்தால் எல்லாம் சிவசொரூபமாகவே தோன்றும். வேறாகத் தோன்றாது. நெருப்பில் விழுந்த பஞ்சைப்போலச் சஞ்சித கர்மங்கள் எரிந்து ஒழிந்துபோகும். தாமரையில் விழுந்த நீர்த்துளியைப் போல அவன் சகல கருமங்களுக்கும் வேறாவான். கயிறு அரவமாகத் தோன்றினாலும் ஆராய்ச்சியில் கயிறாகவே யிருப்பது போலச் சிவமே பிரபஞ்சமாகத் தோன்றினாலும்உண்மையை ஆராயும் போது சிவமாகவே யிருக்கும். என்கிறஞானம் உண்டானவர்களுக்குப் பிரபஞ்ச வாசனை யில்லை. பத்தன் முத்தன் என்கிற அவஸ்தாபேதங்களும் கிடையாது. ஏனென்றால் எல்லாம் சிவசொரூபமாகத் தோன்றும்போது பந்தம் மோட்சம் என்பன நிலைபெறுதல் எவ்வாறு. இந்த வேதார்த்தம் விரோதமில்லாதது. ஆதலால் எல்லாருக்கும் சம்மதமாயுள்ளதாம். இதற்கு வேறான விரோதநெறியைக் கருதுகிறவர் கள் கெடாத இருளில் முழுகிக்கிடப்பார்கள். 

 

 

பதினைந்தாவது அத்தியாயம்,

மோட்சாபேட்சையுடையவ ரியல்புரைத்தது.

 

மோட்சாபேட்சையுள்ளவன் எப்போதும் சந்தோஷமாகவேயிருப்பான். மோட்சம் பெறுவதில் சந்தேகமில்லையென்று திடமாய்க் கருதியிருப்பான். பிரதிபந்தமொழியும் படி தேவர்களை யெப்போதும் ஆராதிப்பான். சூரியன்வருணன்எமன்பிருகஸ்பதிதிருமால்இவர்களும் இவர்களுக்கு அந்தரியாமியாகிய பரசிவனும் என் பிரதிபந்தத்தை விலக்கியருளவேண்டும் என்று உங்களை வணங்குகிறேன் என்று கூறி அவர்களை வணங்க வேண்டும். சாத்திரங்களினாற் சொல்லப்படுகிற இதார்த்த சங்கற்பம்சத்தியம் பிரமம் இவையெல்லாம் சூத்திரான்மாவே நீதான் என்று நிச்சயமாக நினைத்து அன்பினால் உன்னை வணங்குகிறேன். உன்னைத் துதிக்கிற என்னையும் என் குருவையும் காத்தருள வேண்டுமென்று வணங்க வேண்டும். காமமாதி முக்குற்றங்க ளும் ஒழிவதற்காக சாந்தி மந்திரம் மூன்றுதரம் கூறிக் குருவை வணங்கி, வேதாந்த மந்திரோப தேசம் பெற்று பக்தியுடன் ஜபிக்க வேண்டும். பிரமசாரிகிருகஸ்தன்வானப்பிரஸ்தன் இவர்கள் இந்த மந்திரத்தை யுச்சரித்து நெய் சரு முதலியவற்றால் ஓமம் செய்ய வேண்டும். சந்நியாசி ஓமமந்திரத்தை மட்டும் ஜபிக்கவேண்டும். ஒருநாளைக்குப் பன்னிரண்டுதரம்அல்லது ஆறுதரம் அல்லது மூன்று தடவையாவது சாந்தியைக் கூறி குரு திருவடி வணங்கிப்பக்தியோடு வேதாந்த சிரவணம் செய்ய வேண்டும். சலனமற்ற சித்தத்துடனிருந்து அதை மனனம் பண்ண வேண்டும். சிவலிங்கத்தில் பரமசிவனைப் பூஜிக்கவேண்டும். சாந்திதாந்திவிராகம் இவைகளை உடையவனா யிருக்கவேண்டும். வெப்பம் குளிர்ச்சிசுகம் துக்கம் இவைகளில் சமசித்தமுடையவனா யிருக்கவேண்டும். குற்றமற்ற ருத்திராட்ச மாலையணிந்துதுர்ப்பொருளைத் தரிசித்தல்கோட்டாவிடுதல்தும்மல் இவைகள் உண்டாகும் போது சடாட்சரத்தைத் தியானிக்க வேண்டும். அதைத் தியானிக்கும் போது ஒருவரோடு பேசாமலும்கவலையில்லாமலும் ஜபிக்க வேண்டும். நீசரோடு சம்பாஷணை செய்தால் உடனே சடாட்சரதியானம் செய்ய வேண்டும். தன்சுயசாதி மத ஆசாரங்களை விட்டு ஈனமதாசாரங்களை அனுஷ்டிப்பவரிடத்தில் ஒருபோதும் பேசக்கூடாது. விரஜாக்கினி முதலியவற்றிலுண்டான திருநீற்றை அதற்குரிய மந்திரத்தால் அபிமந்திரித்துச்சிவத்தியானத்துடன் சருவாங்கமும் உத்தூளனம் செய்து கொள்ள வேண்டும். அதன் மேல் திரிபுண்டரம் தரித்தல் வேண்டும். சிவஸ்தலங்களைத் தரிசித்தல் வேண்டும். சிவ உற்சவங்களையும் தரிசிக்க வேண்டும். பரிசுத்தமான அன்னத்தைப் புசித்தல் வேண்டும் உருத்திரன்திருமால் முதலியவர்களுக்கு நைவேத்தியம் செய்ததைப் புசிக்கக்கூடாது. புசித்தால் சாந்திராயண்விருதம் செய்யவேண்டும். ஆசிரியன் உச்சிஷ்டம் புரோடா சத்துக்குச் சமானமாகும். அதை உண்டால் சகல பாபங்களும் ஒழியும் தாழ்ந்த வருணாச்சிரம ஈனரிடம் பழகக் கூடாது. தேவர்கள்மனிதர்கள்மிருகாதி ஜந்துக்கள் இவற்றின் வேஷம் தரிப்பதும் கூடாது. இப்படி வேஷம் தரிசிக்கிறவன் வேத புராண ஸ்மிருதிகளுக்கு அதிகாரியாகான். அவனுக்கு நகமே பிராப்தியாகும். நல்லவர்கள் அவர்களைப்பார்க்க மாட்டார்கள். அரசனும் அந்த வேடதாரிகளை ஊரைவிட்டுத் துரத்தி விடவேண்டும். விதிப்படி அனுஷ்டிக்கச் சக்தியுள்ளவன் விலக்குகளை யெல்லாம் ஒழித்து விட்டுச்சத்தியம்தருமம்நீறுபூசல்வேதாத்தியயனம்தேவ பிதிரர்களை ஆராதித்தல்மாதா பிதாக்களைப்பூசித்தல் சிரௌத ஸ்மார்த்த விதிப்படி கருமங்களைச் செய்தல் இவைகளை விடாமல் செய்யவேண்டும். இந்தச் சாதனசம்பத்தியுள்ளவனே சிவஞானத்தை அடைவான். சிவபெருமான் திருவடி நிழலையும் அடைவான். சர்வவியாபகனான சிவபெருமான் எல்லாராலும் பூசிக்கப்படுகிறவர். அவரது அநுக்கிரக த்தாலேயே பிரஹ்ம விஷ்ணு முதலானவர்கள் தேவரானார்கள். தெய்வத்தன்மை அவருக்குத் தான் உரியது. அவனுடைய சொரூபஞானத்தை அடைவதற்கே ஞானசா தனங்கள் அவசியம் வேண்டுவனவாம். அந்தச் சொரூபஞானம் பெற்றவுடனே பந்தமொழிந்து போகும். இதுவேதத்தில் கூறப்பட்ட உண்மை. சிவானுக்கிரகமில்லாத வர்கள் யானை கண்ட குருடர்களைப்போலப் பலவிதமாகச் சொல்வார்கள். எந்தப் பிராணியானாலும் சிவானுக்கிரகம்பெற்றால் முத்தி அடைந்து விடும். 

 

 

 

 

பதினாறவது அத்தியாயம்.

விராக விளக்க முரைத்தது

 

ஈசுவரனுக்கும் சீவனுக்கும் உள்ள அபேதத்தை மறைத்துக் கொண்டிருக்கிற அஞ்ஞானமாகிற மாயையினால் பல பேதங்களாகிய பிரபஞ்சம் உண்டாயிற்று. முன்னைய பழக்கத்தாலான கர்மப்படி இது நல்லதுஇது கெட்டது என்று உண்டாகிற பிராந்தியும் அந்த மாயையினாலேயே கற்பிக்கப்பட்டது. நன்மை யுள்ளவைகளாகக் கற்பிக்கப் பட்டவைகளில் அஞ்ஞானிகளுக் கிச்சையுண்டாகும். குற்றமுள்ளனவாகக் கற்பிக்கப்பட்ட விஷயங்கள் ஐஹீகம் பார லவுகிகம் என்று இருவகைப்படும். ஐகிகம் என்பது இவ்வுலக சம்பந்தமாயுள்ள போகங்கள். பாரலவுகிகம் என்பது பரலோக சம்பந்தமாயுள்ள போகங்கள். சலனசித்தமுள்ளவன் இகலோகபோகங்களையிச்சிப்பான். சாத்திரப் பயிற்சியுடையவன் இகலோக பரலோகபோகங்களை இச்சிப்பான். இகலோக விஷயங்களில் பிரத்தி யட்சத்தினாலும் பரலோக விஷயங்களில் சாத்திரங்களினாலும் இச்சை யுண்டாகும். இவ்விருவகைப் போகங்களினால் வெறுப்புண்டாவது எப்பொழு தோ! இதனால் தேவர்களாதியோரும் இராகத் துவேஷங்களால் கட்டுண்டு ஜனனமாகிற நரகத்தில் விழுவார்கள். பூமியில் விழுந்த சுக்கில சுரோணிதங்களை ஒருவரும் தீண்டுவதில்லைபார்ப்பதுமில்லைவெறுப்படைகிறார்கள். அப்படிப்பட்ட சுக்கில சுரோணிதத்தாலானவுடலை நானென்றும் எனது என்றும் சொல்கிறவன் பூமியில் கிடக்கிறதோலையும்மாமிசத்தையும் இரத்தத்தையும்கபத்தையும்பித்தத்தையும்மலமூத்திரங்களையும்தொடவும் பார்க்கவும் விரும்புவதில்லை. இவைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கூடி வந்திருக்கிற சரீரத்தை நான் எனது என்பது அறிவீனமேயாம். நல்ல சுகந்தபரிமளம் கமழும் சந்தனாதிகள் இந்தச் சரீரத்தையடைந்தபின் அழுக்கென்று வெறுக்கப் படுகின்றன. மதுரமான போஜனவஸ்துக்கள் இந்தச் சரீரசம்பந்தம் அடைந்தபின் மலமென்று வெறுக்கப்படுகின்றன. நல்லஜலம் மூத்திரமென்று வெறுக்கப்படுகின்றது. வஸ்திரங்கள் அழுக்கடைந்து கெடுகின்றன. இப்படிப்பட்ட இழிவுள்ள சரீரம் மேன்மையடைவதென்பதெப்படிஇரத்தத்திலும் மாம்சத்திலும் கிருமிகள் உற்பத்தியாகின்றன. அதனால் இந்தச்சரீரம் புழுமய உடலென்றும் துக்கத்துக்கே இடமானதென்றும் கூறுவது தகுதியாம். கர்ப்பத்தில் தரித்து இளக்கமா யிருக்கும்போது அங்குள்ள புழுக்கள் உண்டு விடுகின்றன. குமிழிபோல இருக்கும் போதும் புழுக்களால் துன்பம். ஜாடராக்கினியால் தகிக்கப்படுதல் பிண்டமாகும் போது வாயுவால் அலைக்கப்படுதல்மலமூத்திரங்களில் கிடத்தல்பையினுள்கட்டுண்டு கிடத்தல் முதலான அளவிலாத் துக்கங்கள் உண்டாகின்றன. சுகமென்பதே கிடையாது. இதைவிட இரௌரவாதி நரகவாதனை நல்லது. 

 

முனிவர்களே! கர்ப்பவாசத்திலிருக்குந் துன்பம் பொறுக்க முடியாததாகும். நரகாவஸ்தையைவிட இது அதிகபெரிதுஇப்படிப்பட்ட கொடிய துன்பத்தை அனுபவித்துப் பின்பு பூமியிற் பிறந்தாலும்பாலகிரகதோஷம்கறையான் எறும்பு முதலிய வற்றால் உண்டாகும் துன்பம்வியாதி பசியால் உண்டாகும் துன்பம் கல்விபயிலுந்துன்பம்விதிவிலக்குகளை அனுஷ்டிப்பதனா லுண்டாகும் துக்கம் ஆக அளவிலாத் துன்பங்க ளிருக்கின்றன. ஆகையால் சுகமென்பதேயில்லை. யௌவன பருவம் வந்தபின் விவாகம்புரிதல் சம்சாரத்தைக் காப்பாற்றல்அதற்காகப்பொருள்அணிஆடைகள் தேடுதல்அவைகளைக் காப்பாற்றுதல்ஆகிய அளவிலாத்துன்பங்கள் உண்டு. மூப்பிலே புத்திர பௌத்திராதிகளால் உண்டாகும் துயரம்அசக்தியினாலுண்டா கும் துன்பம்அரசர்களால் துன்பம்வேலைக்காரர்களால் துன்பம்வைதிக இலவுகிக நடைகளால் துக்கம்ஐசுவரியம் தரித்திரம் முதலியவற்றா லுண்டாகும் துன்பம்அயல்வீட்டவர்கள் நமக்குச் சமான ஸ்திதியி லிருந்தாலும் மேற்பட் டிருந்தாலும் துன்பம்பூதப்பிரேத பைசாசங்களாலும் காற்று தீ நீர் முதலியவற்றாலும் இன்பம் உண்டாகும்பிரம விஷ்ணு இந்திரனாதியர் பதவியைப் பெற்று வாழ்வதும் துன்பமாம். நான் எனது என்கிற பற்றுள்ளவரைக்கும் இத்துன்பமும் உண்டாம். சீவர்கள் துன்பங்களைத் துன்பமென்றும் அறிகிறார்கள். அதனையே சுகமென்றும் எண்ணுகிறார் கள். பாசத்தின் வலிமை அளவுகடந்தது. அதனையென்னென்று கூறுவது! சிவசொரூ பமே சுகசொரூபமாகும். அதை அறிந்தாலன்றித் துக்கமொழியாது என்று உணர்ந்து கொள்ளுங்கள். 

 

 

பதினேழாவது அத்தியாயம்.

அநித்தியவஸ்து விசாரமுரைத்தது.

 

முனிவர்களே! அநித்தியவஸ்து விசாரத்தினாலே சமுசாரத்தில் விராகமுண்டா கும். சிவத்தைத்தவிர மற்றுள்ள பொருள்களெல்லாம் அநித்தியமாம். அவைகளெல்லாம் ஜடமாதலால்ஆன்மாவல்லாத மற்றைய ஜடவஸ்துக்களெல்லாம் ஆராய்ச்சியினால் அநித்தியமாகவே காணப்படும். சரீரம் பால யௌவன விருத்த முதலிய வாகமாறுகிற அனுபவமே நிதரிசனமாம். சிலர் செய்யப்படுதல்மாத்திரமே அநித்தியமென்று சொல்வாரும் உண்டு. ஒருவரால் செய்யப்படாமல்முன்னில்லாததா யுள்ளதும் அநித்தியமாயிருத்தலினால் அது தகுதியில்லாததாம். திசைகாலம்வானம் முதலாக ஆன்மாவுக்கு வேறாயுள்ளன வெல்லாம் அநித்தியமேயாம் என்று வேதங்கள் கூறுகின்றன. தார்க்கீகர் அறியாத சிலவற்றை நித்திய மென்பார்கள். வேதசம்மதமான தருக்கமே பிரமாணமாம். மற்றைய சுதந்திரமான தருக்கங்கள் பிரமாணமாகா. ஏனென்றால் சுதந்திரதருக்கம் அனுபவம் அனுமான முதலியவற்றையே சொல்லும். வேதமோசுதந்தர முடையதாய் எல்லா வற்றையும் அறிந்து கூறும். பிரத்தியட்கம் முதலான ஐவகைப் பிரமாணங்களுக்கும் எட்டாததாய் உள்ள பிரமம்தருமம்அதருமம் முதலான வற்றை வேதப் பிரமாணத்தினாலேயே அறிய வேண்டு மென்று அறிஞர் கூறுகின்றார்கள். வேதத்தை விட்டுப் பிரமத்தையறிய முயல்பவன் கனிகளைச் சுவைத் தறியாமல் பரிசித்து உணர முபல்டாவனை யொப்பான். 

 

பூர்வகாலத்தில் சங்கிரன் என்று ஒரு பிராமணனிருந்தான். அவன் வேதத்தை ஆராயவிரும்பாமல் தருக்க நூல் ஒன்றையே பயின்றுவந்தான். இந்திரியாதிகளுக்கு எட்டாத பிரமப்பொளைத் தருக்கத்தினாலேயே அறியமுயன்றான். புத்திக் குறைவினால் அவனுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் தவறுதலான தருக்க யுத்திகள் தோன்றின. அதனாலே மோகமுண்டாயிற்று. அதனால் பாஷாண்ட மதத்தை அனுசரித்தான். அதனால் அஞ்ஞானம் மேலிட்டது. பிறகு அம்மதத்தையும் விட்டுத் தன் இச்சைப்படி நடக்கலானான். தன்மாதாவையும் தங்கையையும் புணர்ந்து காலங்கழித்தான். பிறகு மரணம் அடைந்தான். அப்போது எமதூதர்கள் வந்து பாசத்தினால் அவனைக்கட்டிச்சிவசிந்தனையில்லாத மூடனே! நீ வருந்துக என்று அவனைத் தண்டித்துத் துன்பப் படுத்தினார்கள். பிறகு அவனை இழுத்துக் கொண்டுபோய் எமதருமராஜன் முன் விட்டார்கள். அப்போது எமன் புருவம் நெற்றியி லேறும்படி விழித்துப் பார்த்துக் கோபித்துஇடிபோல அதட்டிஇந்தத் துஷ்டனைத் தண்டித்துநரகங்கள் எல்லாவற்றிலும் தள்ளுங்கள் என்று கூறினான். சொன்னவுடனே பல கிங்கரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டுசலாகையைக் காய்ச்சிக் காதுகளில் செலுத்திக்கை கால்களைத் தறித்தும்முள் தண்டத்தால் அடித்தும்கண்களைக்கிண்டியும்ஆலையிலிட்டுத் திரித்தும்தண்டஞ்செய்தார்கள். பிறகு அவனைப் பிடரிபைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போய்த் தீ நரகில் தள்ளினார்கள். அந்த நரகத்தில் கோடிவருஷங்கள் இருந்து வருந்தினான். வருந்துங் காலையில் அவன் முன் செய்திருந்த ஏதோசிறிது புண்ணிய வசத்தினாலே சிவபெருமானுடைய கருணையுண்டாகமகா தபோநிதியான சதானந்த முனிவர் அங்கே போனார். அவர் சங்கிரன் படுகிற துன்பத்தைப் பார்த்து மனம் இரங்கிச் சடாக்ஷரத்தை ஜபித்தார். அதனால் அந்த நரகம் சொர்க்க லோகம் போலாயிற்று. தேவர்கள் மலர்மாரி பெய்தார்கள். சித்தர்களும்யட்சர்களும்தெய்வரிஷிகளும் வந்து கூடினார்கள். அப்ஸரஸ்திரீகள் நர்த்தனம் செய்தார்கள். பிரமா விஷ்ணு முதலானவர்களும் வந்து சேர்ந்தார்கள். அப்போது எமதரும ராஜனுக்குச் சிறிது அச்சமுண்டாயிற்று. உடனே சதானந்தமுனியிடம் வந்து அவரைச் சிவபெருமானாக மதித்துஅவர் திருவடிகளில் வணங்கினான். சதானந்தமுனிவர் அவனை நோக்கி நீ பரசிவானுக்கிரகத்தினால் பாவம் செய்தவர்களைத் தண்டிக்கின் றாய்ஆதலால் நீ அஞ்ச வேண்டிய தில்லையென்று கூறினார். தர்மராஜன் மனமகிழ்ந்து அவரை வணங்கிநின்றான். 

 

முனிவர் பின்னும் எமனை நோக்கி திருமால் முதலான தேவர்களுக்குள் சிறந்தவனாக உள்ளவன் சிவபெருமானே யென்று எண்ணுகிறவர்களையும்கோவிந்தன்நாராயணன்முதலான சொற்களை விடச் சதாசிவ சம்பு சங்கர என்கிற நாமங்கள் உயர்ந்தன என்று கருதுவோரையும்பல தேவர் வடிவங்களி வங்களிலும் சிவ மூர்த்தங்களே சிறந்தனவென்று தெரிந்துள்ளவர்களையும்உமாகாந்தனே சகல வுயிர்க்குள்ளும் உயிராய் விளங்குகிறார் என்றும்அவருக்கு ஒப்புயர்வில்லையென்றும் எண்ணுகிறவர்களையும்விபூதியை உத்தூளனம் செய்துகொண்டு திரிபுண்டரம் தரிப்போரையும்கண்மணி தரித்தவர்களையும்பஞ்சாட்சர ஜபம் செய்கிறவர்களையும் சிவலிங்க பூசை செய்கிறவர்களையும்கங்கை முதலான தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வோரையும்சிவ ஸ்தலங்களைத் தரிசித்தவர்களையும்சிவனடியாரைச் சிவனென்றே கருதி வணங்குகிறவர்களையும்சிவபக்தி செய்வோரையும்வேதப் பொருளை யுணர்ந்து சாந்தி தாந்தி முதலியன வுடையராய்ச் சர்வகர்மங்களையும் கடந்து நிற்பவரையும்குரு சேவை செய்து வேதாந்த சிரவணம் செய்வோரையும்அதை மனனம் செய்து சிவஞானம் பெற்றவர்களையும்தானம்வேள்விஜபம்ஓமம்வேதாத்தியயனம் முதலிய செய்து சிவார்ப்பணம் செய்கிறவர்களையும்பல வழியாகச் சிவாராதனை செய்வோரையும் நீ அணுகாதேஅவர்கள் அருகே போனால் உன் அதிகாரம் ஆயுசு முதலானவற்றை யிழந்துவிடுவாய். 

 

சிவனைவணங்காத பாவிகளையும்சிவனடியாரை வணங்காதவர்களையும்சிவபணிவிடை செய்யாத தனவந்தர்களையும்சிவபுராணங் கேளாதவர்களையும்திருநீறு உருத்திராட்சம் புனையாதவர்களையும்பஞ்சாட்சரஜபம் பண்ணாதவர்களையும் சிவநிந்தை செய்வோரையும்அதற்கு உடன் பட்டவர்களையும்அதைக் கேட்டவர்க ளையும்சிவாலயப் பொருளைக் கவர்ந்துள்ளவர்களையும்சிவாலயப் பொருளைத் திருடச்சொன்ன வர்களையும்வேதம் ஸ்மிருதி கூறிய கருமங்களைச் செய்யாதவர் களையும்ஊர்த்துவ புண்டரம் திரிசூலம்வட்டமுதலாகப் பல சின்னங்களை அணி வோர்களையும்பூதியைத் தொடாதவர்களையும்குருத்துரோகிகளையும்வேத நிந்தை செய்வோரையும்சரீரத்தில் தேவவடிவம்மனித வடிவங்களை முத்திரித்துக் கொள்வோரையும்மற்றுமுள்ள பாவிகளையும் தண்டித்து நரகத்திலிட்டுத்துன்பப் படுத்து என்று கூறிச் சதாநந்த முனிவர் கயிலாசமலைக்கு எழுந்தருளினார். 

 

பிறகு எமன் சங்கிரனைப் பார்த்துச் சங்கிரனே! வேதவிரோதமான தர்க்கநெறியை அனுசரித்துப் நெடுநாள் நரகத்தில் வருந்தினாய். நீ எந்த ஜன்மத்திலேயோ செய்த புண்ணியத்தினாலே சதாநந்த மூனிவர் இங்கே வந்து சடாட்சர ஜபம் செய்தார். அதைக் கேட்டு நீ நரக துன்பம் ஒழிந்தாய். ஆகையால் பூலோகத்தில் பிராமண குலத்திற் பிறந்து வைதிக நெறிபற்றி யொழுகிச்சிவபிரானுக்கு அன்பனாயிருந்துமுத்தி அடையக்கடவாய் என்று அவனை அனுப்பிவிட்டுத் தர்மராஜன் தன் அரண்மனைக்குப் போய் விட்டான். ஆகையினால் வேதங் கூறுகிறதே நிச்சயார்த்த மாகும். அவைதிக தருக்க நெறி துன்பத்துக்கே காரணமாம். தர்க்கத்தை அனுசரிக்கின்ற மூடர்கள் இரவு ரவாதி துன்பங்களை அனுபவிப்பார்கள். வேத விரோதமான தருக்கநெறியைப் பற்றினவர்கள் பாவிகளே யாவார்கள். அவர்களோடு சேர்தல்பந்திபோஜனம் செய்தல் இவையெல்லாம் கெடுதியேயாம். ஆகையால் வேதத்தை அனுசரித்துப் பரமசிவனுக்கு வேறாயுள்ளவைக ளெல்லாம் அநித்தியமேயாமென்று அறிந்து கொள்ளுங்கள். இதுவே பெரியோர்கள் கொள்கையாம். சிவனுக் கந்நியமானவை யெல்லாம் அநித்திய மென்கிற ஞானம் எப்போது உண்டாகுமோ அப்போதே சமுசாரத்தில் வெறுப்புண்டாகும். துக்கமெல்லா மொழியும். இன்பமுண்டாகும். இராகத்தால் துக்கமுண்டாகும். விராகத்தால் துக்கம் நீங்கும். விராகத்தால் சராசரமெல்லாம் அநித்தியமே யென்கிற ஞானமுண்டாய்ப் பரசிவ உண்மையை அறிய வேண்டும். 

 

கடாதிகளும் மாடமாளிகை முதலானவைகளும் அநித்தியமேயாம். பெண் போக முதலானவை மின்னலைப்போல அழிந்து போகும். உலகம் முழுவதையும் ஒரு முழுவதையும் ஒரு குடை நிழலில் அரசாளுகின்ற அரசனும் துன்பத்தினால் வருந்துவான். இந்தச் சுகங்களெல்லாம் அநித்திய மென்று தெரிந்தும்சிவனடிக்குப் பக்தி செய்யாமல் இந்த அற்ப போகத்தையே விரும்புகிறார்கள். பரலோக வின்பம் கருமத்தால் அடையப்படுகின்றது. ஆதலால் அதுவும் அநித்தியமேயாம். பூமியும் அதிலுள்ள பொருள்களும் சமுத்திரத்திலொடுக்கும். சமூத்திரம் வடவாமுகாக்கினியில் ஒடுங்கும். அது மகாக்கிளியில் ஒடுங்கும். அந்தத் தீ வாயுவில் ஒடுங்கும். அந்த வாயு ஆகாயத்தில் ஒடுங்கும். ஆகாயம் அவ்வியக்தத்தில் ஒடுங்கும். இப்படி பூதங்களெல்லாம் அழிவதால் பௌதிகங்களும் ஒடுங்கும். பிரமா விஷ்ணு முதலானவர் களும் அழிவார்கள். ஜோதி சொரூபனான சிவபெருமான் ஒருவரே எந்நாளும் அழியாமல் இருப்பார். இப்படி உணர்ந்தவன் முத்தியடைவதிற் சந்தேகமில்லை. 

 

 

பதினெட்டாவது அத்தியாயம்

நித்தியவஸ்து விசாரம் கூறியது.

 

சுத்தமாய் அவிகாரமாய்ச் சிற்சொரூபிபா யுள்ள பரசிவமே நித்தியவஸ்துவாகும் இப்படியே வேதம் சொல்லுகின்றதுஜடத்துக்கு மாத்திரந்தான் அநித்தியத்துவம் உண்டுசித்துக்கு அநித்தியமே கிடையாது. அந்தக்கண விருத்தியாலே தான் அநித்தியம் கூறப்படுகிறது. பரமார்த்தத்தில் இல்லை. பிரத்தியேயத்தில் சிதாகாரம்விருத்தியா காரம் என்று இரண்டுண்டு. சிதாகாரம் பாவபாகமென்று கூறப்படும். விருத்தியாகாரம் கரணபாவமென்று கூறப்படும். விருத்தியாகாரம் ஐமாதலால் சிக்கும். சிதாகாரம் நசியாது. அந்தக்கரணவிருத்தி நசித்தலாலே பிரத்தியேயமும் நசித்தது போலத் தோன்றும். அறிவில்லாதவர்கள் அந்தக் கரண விருத்தி தோன்றும் போது சிதாகாரம் தோன்றிற்று என்றும்அது நசிக்கும் போது சிதாகாரவிருத்தி நசித்த தென்றும் கருது வார்கள். சர்வ சாட்சியாயுள்ள சித்துருவனான பரமசிவமே உற்பத்தி நாசம் இரண்டுக்கும் சாட்சியா யிருக்கிறார். ஆகையால் அவருக்கு உற்பத்தி நாசங்களில்லை. திரிசியமாய் ஜடமாயிருத்த தலால் உற்பத்தி நாசங்கள் தானாகவே உண்டாகமாட்டா. ஒருவனாலே உண்டாக்கப் பட்டாலன்றிக் கடாதிகள் தாமாகவே உண்டாவதில்லை. அது போலத் தனக்கு வேறான வஸ்துவில்லாத பரசிவனுக்கு உற்பத்தி நாசங்க ளுண்டாக மாட்டா. சாட்சியாயுள்ள சிவபெருமானே கடசாட்சி படசாட்சியென்று காணப்பட்டாலும் அவன் ஒருவனேயாம். அனுவிருத்திவகையால் அவனுக்குப் பேதமில்லை. சிலர் சாட்சிக்கு விசேஷ ஆகாரமாகப் பேதமுண்டு என்பார்கள். அது தவறு. அந்த விசேஷ சாட்சி ரூபம் ஜடமாதலால் ஒளிக்கு இருள் போல ஒவ்வாதுசித்து ரூபச்சாட்சிக்கு ஜடத்துவம் உண்டாகாதாகையால் சித்ரூபமே யென்றால் சாட்சி சைதன்னியத்திற்குப் பேதமாக மாட்டாது. விசேஷ ஆகாரத்தை ஒப்புக் கொண்டு பேதம் கூறுவது குற்றமே யாம். பரமசிவன் நித்தியன்ஏகன்ஆனந்த சொரூபன்சர்வசாட்சியாயுள்ளவன் என்று வேதாகம புராணங்களெல்லாம் கூறுகின்றன. இப்படியே பிரமாவிஷ்ணுருத்திரர் முதலியவரும் சொல்லுவார்கள். கையினால் பரமசிவனைத் தவிர நித்தியவஸ்து மற்றொன்றுமில்லை. 

 

 

 

 

பத்தொன்பதாவது அத்தியாயம்.

விசிஷ்ட தருமம் கூறியது.

 

முன்னொரு காலத்தில் காவடேயர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் ஒரு சத்திரயாகம் செய்தார். அப்போது முனிவர்கள் எல்லாரும் கூடி விசிஷ்ட தருமம் எது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர்களுக்கு உண்மை தோன்றவில்லைஆகை யால் இமயமலைக் கருகிலிருந்து மூன்று வருஷம் தவம் செய்தார்கள். அப்போது பரமசிவன் அருளினாலே சுப்பிரமணியக் கடவுள் அவர்களுக்குப் பிரசன்னராய் மயில் வாகனத்தின் மேல் காட்சி கொடுத்தார். முனிவர்கள் அவரைக் கண்டு மனமகிழ்ந்து எதிர் சென்று வணங்கிப் பூசித்துத் துதித்துஅன்பருடைய இதயார விந்தத்தி லெழுந்தருளி யிருக்கும் தெய்வமே! எங்களுக்கு விசேஷ தருமம் யாதென்று கூறி யருள வேண்டும் என்று வணங்கினார்கள். சுப்பிரமணியர் கருணை கூர்ந்து சொல்கின் றார். 

 

முனிவர்களே! விசேஷ தருமத்தைச் சுருக்கிச் சொல்கிறேன் கேளுங்கள். சாத்திர ஆதார மில்லாமல் தன் புத்தியைக் கொண்டே செய்கிற தருமம் நிர்மூல தருமமாம். அது பக்தியினால் செய்யப்படுமானால் அதுவும் தருமமாம். அது நிர்மூல மானாலும் தெய்வ பூசையின் சொரூப மாதலால் சிறந்ததாம். மூலமுடைய தருமம் இதைவிடச் சிறந்ததாம். அதைவிடப் புத்தாகம தருமம் சிறந்தது. அதைவிட அருகர் கூறிய ஆகமதருமம் சிறந்தது. அதைவிடப் பிரமன் கூறிய ஆகம தருமம் சிறந்தது. அதைவிட விஷ்ணு கூறிய ஆகம தருமம் சிறந்தது. அதைவிடச் சைவாகமதர்மம் மேலானது. இந்தச் சைவாகமம் அதச்சுரோதசுஊர்த்துவ சுரோதசு என்று இருவகைப்படும். காபால முதலிய சைவாகமங்கள் அகச்சுரோதசாம். காமிகாதி இருபத்தெட்டு ஆகமங்கள் ஊர்த்துவ சுரோதசு என்னப்படும். இந்த ஊர்த்துவ சுரோதஸ் சிறந்தது. இதைவிட வைதிகதர்மம் சிறந்தது. அவற்றில் சாந்தி தாந்தி முதலிய தருமங்கள் விசேஷமாம். அதைவிடச் சிவநாமத் தோத்திரம்சிவலிங்க பூசை சிவபாவனை செய்தல்சிவனடியார் க்குத் தொண்டு செய்தல்வேதாந்தப் பொருளை ஆராய்தலாகிய சிவஞான தர்மம் உத்தமம். 

 

எல்லாத் தருமங்களையும் விட முத்திசாதனமாகிய சிவஞான தர்மமே சிறந்ததா கும். அதைத்தவிர வேறு கிடையாது. இப்படியே வேதம் சொல்லும்! ஞான கராணங்கள் எல்லா வற்றிதும் வேதமே சிறந்தது. வேதாந்தப் பொருளை ஆராய்ந்து பெறப்படும் சிவஞானமே உண்மை ஞானமாகும். பரமசிவனுக்கு நிகரான தெய்வமும்பிராமணனு க்கு ஒப்பான மனிதனும்அன்னத்துக்குச் சமானமான உணவும்கங்கைக்குச் சரியான நதியும்குருவுக்குச் சமானமான துணைவனும்சிதம்பரத்தை ஒத்த க்ஷேத்திரமும்பஞ்சாட் சரத்துக்குச் சமானமான மந்திரமும் இல்லை. அதுபோல வேதங்களுக்குச் சமானமான நூல்களுமில்லை. வேதமே சிறந்த பிரமாணம். பரமசிவனே தெய்வம். திருநீறே உத்தமம். சிவஞானமே சிறந்த முத்திசாதனம் என்று ரிஷிகளுக்குச் சுப்பிரமணியர் உபதேசம் பண்ணினார். 

 

இப்படிச் சுப்பிரமணியக் கடவுளின் உபதேசத்தைக் கடைப் பிடித்து ஒழுகும் முனிவர்களுக்குச் சிவபிரான் பிரத்தியட்ச மானார். ரிஷிகள் பரமசிவனை வணங்கிப் பஞ்சாட்சர மந்திரத்தால் பூசை செய்தார்கள். சிவபெருமான் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை அவர்களுக்கு அருளிச் செய்து கைலைக்கு எழுந்தருளினார். அதனால் அந்த முனிவர்கள் சிவஞானத்தை அடைந்துவிஷயவிராக முடையவர்களாய்இமயமலைக் குகையில் புகுந்தார்கள். ஆகையால் முனிவர்களே! இதுதான் விசேஷ தருமமென்று அறிந்து கொள்ளுங்கள். பந்த மொழிப்பதற்குரிய சாதனம் இதைத்தவிர வேறில்லை.

 

 

இருபதாவது அத்தியாயம்.

முத்தி சாதனம் கூறியது.

 

பூர்வ காலத்தில் தெய்வமுனிவர் என்று ஆயிரத்திருநூறு பேர்கள் இருந்தார்கள். அவர்கள் சிவபெருமானைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை மறந்தும் நினைப்பதில்லை. அவர்கள் தட்சிண கயிலாச க்ஷேத்திரத்தை அடைந்து தவம் புரிந்தார்கள். பரமசிவன் அவர்களுடைய தவசுக்கு மகிழ்ந்து உமாதேவியாரோடு காட்சி அருளினார். முனிவர்கள் கண்டு மகிழ்ந்து எதிர் கொண்டுபோய் வணங்கிப் பூசித்துத் துதித்துமுத்தி சாதனத்தை எங்களுக்கு உபதேசித் தருள வேண்டுமென்று கேட்டார்கள். 

சிவபெருமான் கருணை கூர்ந்து முனிவர்களை நோக்கித் தெய்வ முனிவர்களே! இரகசியமாக இதை உரைக்கிறேன் கேளுங்களென்று கூறுகின்றார். வருணாச்சிரம ஆசாரத்தினாலேயே நல்ல முத்தியுண்டாகும். ஆகையால் ஒவ்வொருவரும் தத்தம் வருணத்துக்குரிய தருமத்தைத் தவறாமல் செய்ய வேண்டும். எப்படியென்றால்பிராமணகுலத்திற் பிறந்து சாதகர்ம முதலிய சம்ஸ்காம் செய்யப்பட்ட பிராமணன் உபநயனம் பெற்றுச் சற்குருவை அடைந்து வேதாத்தியயனத்தை முறைப்படி செய்ய வேண்டும். பிறகு விதிப்படி விவாகம் செய்துகொண்டு யாகம்தானம்தவம்இவைகளை நிஷ்காமியமாய்ச் செய்ய வேண்டும். இதனால் பரிசுத்தனாய்மனமாசு ஒழிந்துகுடீசகம்பகூதகம்ஹம்ஸம்ஆகிய மூன்று வகையான சந்நியாசத்தில் தனக்கு ஒத்த ஒன்றை அடயை வேண்டும். நமது கருணையால் மிகுந்த சக்தி யுள்ளவன் பரமஹம்ஸத்தை அனுஷ்டிக்கலாம். முறையே குடீசகம் முதலாகிய சந்நியாசத்தை அனுஷ்டித்து முத்தியடைய வேண்டும். சத்தியம்கொலை செய்யாமைசவுசம்ஸ்நானம்சமம் தமம்சிவலிங்கபூசை செய்தல்எப்போதும் குரு பணிவிடை செய்தல்வேதாந்த சிரவணம் செய்தல்தை மனனம் செய்தல்தியானம் செய்தலாதி தருமங்கள் சந்நியாசிகள் எல்லாருக்கும் உரிய தருமங்களாம். தெய்வ முனிவர்களே! நாம் சுருக்கிச் சொன்ன இவற்றைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறிச் சிவபெருமான் மறைந்தருளினார். நைமிசவாசிகளே! நீங்களும் இந்த முத்தி சாதனத்தை ப் பரசிவானுக் கிரகத்தால் என்னைக் கொண்டு தெரிந்து கொண்டீர்கள். தென் கயிலையானது எல்லா ஸ்தலங்களையும் விடச் சிறந்தது என்று தெரிந்து கொள்ளுங் கள். தென் கயிலாயமாகிய காளத்தியை வணங்காத வர்களும்பரமசிவனே சகல தேவர்களுக்கும் மேலானவர் என்று அறியாதவர்களும்வருணாச்சிரம தருமத்தின்படி நடவாதவர்களும்சிவஞானம் பெறாதவர்களும்முத்தியை அடைய மாட்டார்கள். இப்படியே வேதமும் சொல்கின்றது. திருமாலாதி தேவர்களும்முனிவர்களும் கூறுவார் கள். ஆகையால் ஜனன நோய்க்குச் சிவஞானமே சிறந்த மருந்தாகும். முனிவர்களே! பலவாறு கூறுவதில் பயனில்லை. வேத மூலமாக அடையப்படுகிற ஞானமே முத்தி சாதனமாம். மற்றைய வழியால் அடையப் படுகிறஞானம் முத்தி சாதனமாகாது. 

 

 

இருபத்தோராவது அத்தியாயம்.

பிரமாணவியல் கூறியது.

 

வேதங்கள்தரும சாஸ்திரங்கள்புராணங்கள்வேதாங்கங்கள்உபவேதங்கள்ஆகமங்கள்காபாலம்லாகுளம்பாசுபதம்பைரவம் இவற்றின் பேதங்கள்வைணவா கமங்கள்பிரமனாகமங்கள்அருகாகமம்புத்தாகமம்லோகாயுதம்சாங்கியம்தருக்கம்மீமாம்சை யிவைகள் எல்லா வற்றையும் பரமசிவனே உண்டாக்கினார். அவருடைய அநுக்ஞையால் விஷ்ணுபிரமன்தேவர்சித்தர்வித்தியாதரர்இராட்சதர்ரிஷிகள்மனிதர்கள் இவர்களும் தத்தம் சக்திக் கேற்றவாறு பாமசிவனருளிய நூல் களை விரித்தும் சுருக்கியும் பல நூல்களைச் செய்தார்கள். அவற்றைச் செய்தவர் களுடைய பேரும் அவ்வந் நூல்களுள் இருக்கும். பல பிரவாக நீர்களுக்கும் சமுத்திரம் ஒன்றே முடிவிடமா யிருப்பதுபோலச் சகல மார்க்கங்களுக்கும் சிவபெருமான் ஒருவரே முடிவிடமா யிருப்பார். குற்றமுடையன வான புத்தர் முதலிய மதங்களும் கண்டிக்கத் தக்கன வல்ல. ஒருவன் ஒரு சமையத்தை அனுஷ்டித் தாலும்அதற்கும் இறைவனாகிய சிவபெருமான் கருணையால் அவனும் படிப்படியாக மேலான மார்க்கத்தை அடைவான். வைதிக மார்க்கத்தில் முக்கியமாகச் சொல்லப் பட்ட தெய்வமாகிய நமது பரமசிவன்ஒருவனே முத்தி அருள்கிறவன். கரும காண்டத்துக்கு இறைவனாகக்கூறப்பட்ட சிவபெருமான் ஞானத்தில் விருப்பம் அருள்வார். ஞானகாண்டத்தில் ஓதப்பட்ட பரமன் ஞானம் காரணமாக முத்தியை அருள்வர். முத்தி ஒன்றா யிருப்பதினால் அது பல மார்க்கங்களால் சித்திப்பதில்லை. வேதாந்த நெறி யானது நிராகாரமாய் அபேதமாயுள்ள சிவனையே கூறும். ஆகையால் இந்த மார்க்கத்தா லுண்டாகும் ஞானத்தை வித்தையென்று சொல்வார்கள். இதர மார்க்கங்களா லுண்டாகும் ஞானம். வினைகளை யொழியாது. அதனால் அவை அவித்தையென்று கூறப்படும். இந்த நூல்களுக்கு முத்தி விஷயத்தில் பிராமாணிய மில்லை. அதனால் இந்த மார்க்கங்களைப் பற்றி நடப்பது கூடாது. வேதமார்க்கத் தாலேயே புத்திமுத்தி களிரண்டு முண்டாகும். சிவசொரூபத்திலும்பந்த சொரூபத்திலும்பிரபஞ்ச காரணத்தி லும்முத்தி சொரூபத்திலும்ஞான சொரூபத்திலும்வேதாந்தத்துக்கு மாறுபடக் கூறிய தேனெனில் கூறுவாம். மந்த புத்தியுடைய பத்தர்களாய் மாயையால் மறைக்கப் பட்டவர்களுக்கு அனுகுணமாகவே கூறப்பட்டது. பரமார்த்தமாகக் கூறப்பட்டதில்லை. ஓடுகிற பசுவுக்குப் புல்லைக்காட்டி அதைப்பற்றிக் கொள்வது போல்பாசத்தால் மறைக் கப் பட்டுள்ள வர்களுக்குப் பிரியமான விஷயங்களைக் காட்டிப் பரிபாகம் வருவித்து ஞானத்தைக் கொடுத்தருளுகின்றார் அநாதி மலமூத்த ராகிய சிவபெருமான். சிவபெருமான் உண்மையையே யெடுத்துச் சொல்வார். ஆதலால் இதர மார்க்கங்க ளையும் குற்றஞ் சொல்லப் படாது. அம்மார்க்கங்கள் எல்லா வற்றுக்கும் வேத நெறி சிறந்தது என்று உணர்ந்து கொள்ளுங்கள். 

 

 

இருபத்திரண்டாவது அத்தியாயம்.

பிரசாதமுறை கூறியது

 

பூர்வத்தில் முற்று முணர்ந்த சனற்குமார முனிவர் பிரமதேவனிடம் சென்று பிரசாதக் கிரமத்தை உரைத்தருள வேண்டு மென்று கேட்டார். பிரமதேவர் சனற் குமாரரை அழைத்துக் கொண்டு வைகுண்டம் சென்றுதிருமாலை நோக்கிப் பிரசாதத் தைச் சொல்ல வேண்டுமென்று கேட்டார். திருமால் அவ்விரு வரையு மழைத்துக் கொண்டு கயிலாய வெற்பை அடைந்து சிவ பெருமானை வணங்கிப் பிரசாதக் கிரமத்தைச் சொல்ல வேண்டு மென்று கேட்டார். சிவபெருமான் அவர்களுக்கு உபதேசித் தருளினார். சனற்குமார முனிவர் வியாசருக்குச் சொன்னார். வியாசர் எனக்கு உபதேசித்தார். அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். 

நித்திய நைமித்திக கர்மங்களைப் பக்தியுடன் நிஷ்காமியமாகச் செய்தால் பாவங்க ளெல்லாம் ஒழியும். அதனாலே சித்த சுத்தி யுண்டாகும். பிறகு உருத்திர மூர்த்தியி னுடைய பிரசாதத்தால் சமுசாரத்திலுள்ள குற்றம் தோன்றும். அதனாலே வைராக்கியம் உண்டாகும். அதனால் கர்மங்களில்லாத சந்நியாசம் கிடைக்கும். அதன் பின் பிரமாவினுடைய பிரசாதத்தால் சாந்தி தாந்தி முதலானவைகள் உண்டாகும். பிறகு திருமாலின் அனுக் கிரகத்தால் முக்தியில் இச்சை யுண்டாகும். இப்படி சாதன சதுஷ்டய சம்பத்திகள் ஒத்தடைந்த பிறகு விநாயக ருடைய கருணை உண்டாகும். அதனால் குருவின் கடாட்ச முண்டாகும். குருவின் பிரசாதத்தால் யோகசித்தி யுண்டாகும். அதன் பின் பராசத்தியின் அனுக் கிரகத்தால் ஞான மாகிற பிரமவித்தியா சித்தி யுண்டாகும். ஞான சித்தியுண்டான அப்பொழுதே சிவபெருமா னுடைய கருணை யுண்டாகும். பரசிவானுக் சிரகத்தால் பாசம் நசிக்கும் முத்தியுண்டாகும். 

 

எல்லாச் சீவர்களும் பந்த மொழிந்து முக்தி யருளும் முதல்வன் சிவபெருமான் ஒருவரேமற்றைய தேவர்கள் அதற்குச் சாதகமாக இருப்பார்கள். ஸ்மிருதிகளில் கூறப்பட்ட கர்மங்களைச் செய்து கரும் சித்தியை அடைந்து சோபான முறைப்படி உயர் ந்துசிவபெருமான் திருவடியை அடைவார்கள். இப்படி வேதங்கள் கூறுகின்றன. தேவர்கள் எல்லாரிலும் சிவபெருமான் மேலானவர். பிரசாத காரணங்களுள் பிரணவ மந்திரம் உயர்ந்தது. தருமங்களுக்குள் விஷ்ணு ருத்திர மூர்த்திகளின் ஆராதனை சிறந்தது. பிரணவத்தினாலும்மாயவன் அருளாலும்உருத்திர மூர்த்தி யாராதனையில் இச்சை யுண்டாகும். உருத்திர மூர்த்தியை ஆராதித்தால் அவருடைய கருணையினால் பரசிவ ஐக்கிய முத்தி யடைவார்கள். உருத்திர தேவருடைய கருணையை அடைந்தவர் கள் முத்தி சாதனமான ஞானத்தை அடைவது நிச்சயமேயாம். 

 

திருமால்பிரமன்சந்திரன்சூரியன்அக்கினிஎமன்இந்திரன்மருத்துக்கள்விநாயகர்முருகர்சரஸ்வதிஇலட்சுமிதுர்க்கையிவர்கள் காமிய கருமிகளுக்கு அனுக்கிரகிப் பார்கள். இவர்கள் முறையே தெய்வவடிவம்வலிமைகீர்த்திஆரோக்கி யம்செல்வம்பிதிர் உலகவாழ்வுகாரியசித்திநினைத்த போகங்கள்வாக்குஐசுவரியம்வெற்றி முதலிய வற்றைக் கொடுப்பார்கள். நிஷ்காமிய கர்மிகளாயிருந் தால் சித்த சுத்தியை அடைந்து அதன் மூலமாகச் சிவ பெருமானுடைய கருணைக்குப் பாத்திரராவார்கள். சிவபெருமான் ஒருவரே காமிய கருமிகளுக்குப் போகங்களையும்நிஷ்காமிய கருமிகளுக்கு முத்தியையும் கொடுப்பார். மற்றைய தேவர்கள் தம்மை அடைந்தவர்களுக்குத் தமக்குத் தகுதியான போகங்களை மாத்திரம் கொடுப்பார்கள். முத்தி யளிக்க மாட்டார்கள். முத்திக்குச் சாதனங்களைக் கொடுப்பார்கள். ஆதலால் சிவபிரான் கருணையைப் பெற முயல்வதே தகுதி. பிரம தேவன் சத்திய லோகத்தை அடைந்ததும்திருமால் வைகுந்தத்தைப் பெற்றதும்மற்றைய தேவர்கள் தத்தம் பதவிகளில் வாழ்வதும் சிவபெருமான் கருணையினாலேயே என்று வேதங்கள் சொல் லும். வேதம் முதலான எந்த மார்க்கத்தை அடைந்தவ ரானாலும் சிவபெருமா னுடைய கருணையைப் பெறுவரானால் முத்தியை நிச்சயமாகவே அடைவார்கள். 

 

பிராமணர் முதலான நாலு வருணத்தவர் களாலும்பாஷாண்டமார்க்க முடையவ ரானாலும்ஸ்திரீக ளானாலும்மிருகங்கள் விருட்சங்க ளானாலும்பாலர்விருத்தர்கழுதைஎவ்வகைப்பட்ட ஜீவர்களானாலும்மஹாதேவன் கருணை யுண்டானால் முத்தி யடைவதில் தடையேயில்லை. சிவபிரசாதம் பெற்றவர் களுக்குச் சமான மானவர்கள் எவ்வுலகத்திலு மில்லை. அப்படிப் பட்டவர்ளுடைய கட்டளை யாலே மேருவும் அணுவாகும். அணுவும் மேருவாகும். அவர்கள் பிரம விஷ்ணுக்களை உற்பத்தி. யாக்கவும் அழிக்கவும் வல்லவ ராவார்கள். சிவப்பிரசாதத்தின் மகிமையைத் தேவர்களும் அறியமாட்டார்கள். வேதமும் உணராது. உமாதேவியும் சிவ பெருமானும் அறிவாரோ அறிய மாட்டார்களோ தெரியாது. சிதம்பரம்தெட்சண கயிலாயம்காசி. முதலான இடங்களில் சிவபெருமானைத் தரிசித்தல் முதலான வற்றால் சிவபிரசாதத் தை அடையலாம். சிவப்பிரசாதம் பெறாதவர்களுக்குப்போகமுமில்லைமோட்சமு மில்லை. சிவன் அருளுடைய வர்களுக்கு தருமம் செய்வதாலும் பலனில்லை. அழிவுமில்லை பிறப்புமில்லை. ஆகையால் சிவபெருமான் கருணையை அடைவதற் குக் குருவின் திருவடிகளுக்குச் சேவை செய்ய வேண்டும். இங்னம் குரு பக்தி தவறாமல் செய்தால் சிவப்பிரசாத முண்டாகும். 

 

 

 

 

 

இருபத்துழன்றுவது அத்தியாயம்.

துர்க்கடன் முத்தி அடைந்தது.

 

முன்காலத்தில் சூத்திர குலத்தில் துர்க்கடன் என்று ஒரு மஹாபாவி யிருந்தான். வன்னெஞ்ச முடையவன். எல்லாருக்கும் தீமையையே செய்து வந்தான். அநேக பிரமஹத்திகள் செய்தான். பல பசுக்களைக் கொன்றான். அநேக வீடுகளை நெருப்பிட் டுக் கொளுத்தினான். அநேக ஸ்திரீகளைக் கற்பழித்தான். கிணறு குளங்களை அழித்தான். வருணாச் சிரம தருமங்களைக் கெடுத்தான். இப்படிப்பட்ட பாவி பல ஜன்மங்களுக்கு முன்னால் ஒரு சிவயோகிக்கு ஒரு நிஷ்கம் பொன் கொடுத்திருந்தான். அந்தப் புண்ணியத்தால் ஒரு நாள் சிறிது நல்லறிவு தோன்றிற்று. நல்லறிவு தோன்றவே ஐயோ! எத்தனை கோடி கற்பமானாலும் அனுபவித்துத் தீராத நரகாவஸ்தையை அடைவதற் குரிய அளவில்லாத மஹா பாதகங்களைச் செய்து விட்டேன். ஐயோ! இந்தப் பாவம் ஒழிவதற்கு உபாயம் என்ன இருக்கின்றது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

இப்படி யோசித்துக் கொண் டிருக்கையில் அவனுடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தினாலே ஒரு பிராமணன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்தப் பிராமணனைத் துர்க்கடன் வணங்கிச் சுவாமீ இதற்கு ஒரு உபாயம் சொல்ல வேண்டும் என்றுதன் கருத் தை வெளியிட்டுச் சொன்னான். வேதியன் துர்க்கடா! புண்டரிகபுரம் என்று ஒரு சிவஸ்தலம் இருக்கிறது. அதில் சிற்சபையிலே சிவபெருமான் உமாதேவியார் களிக்கும்படி ஆனந்தத் தாண்டவம் செய்தருளுவார். உலகை இரட்சிக்கின்ற திருமால் அந்தத் தலத்தில் பசிவப் பிரபுவை ஆராதித்துக் கொண்டு இலட்சுமியுடன் வசிக்கின்றார். பிரமன்இந்திரன்மற்றத் தேவர்கள்கின்னார்யட்சர்ரிஷிகள்எல்லாரும் அந்தத் தலத்தில் பரமசிவனை ஆராதனை செய்து திருவருள் பெற்றார்கள். நீயும் அந்தத் தலத்துக்குப் போய் நடராஜ மூர்த்தியை ஆராதித்துக் கொண்டு சில நாள். அங்கிரு உன் பாபங்கள் எல்லாம் ஒழிந்து முத்தி பெறுவாய் என்று சொன்னான். 

 

துர்க்கடன் இப்படி உபதேசித்த வேதியனை வணங்கி மகிழ்ச்சியுடன் அப்படியே செய்கிறேன் என்று கூறிச் சிதம்பரம் போனான். அன்புடன் சிவகங்கையில் நீராடி விபூதி ருத்திராட்சம் தரித்துஆலயத்தை மும்முறை பிரதட்சிணம் செய்துநமோந்தமாகப் பஞ்சாட்சரத்தை ஜபித்துகாமமாதிக் குற்றங்களைக் களைந்துநடராஜ மூர்த்தியைத் தரிசித்துச்சிவனடி யாருக்குச் சொர்ண முதலான அநேக தானங்கள் கொடுத்துஉண்மை யுடையவனாய்ப் பக்தி செய்து கொண்டுஅந்தத் தலத்தில் வாசம் பண்ணினா ன். இப்படி மூன்று வருஷம் ஆராதித்தான். பரமசிவன் அவனுக்குக் கருணை செய்தார். அவனுடைய பாதகங்கள் எல்லாம் ஒழிந்தன. அவன் பல போகங்களை யெல்லாம் அனுபவித் தொழித்துப் பின் மோட்ச மடைந்தான். ஆகையால் முனிவர்களே! சிவம்  பிர சாதமே ஒப்புயர் வற்றது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.. 

 

 

இருபத்து நான்காவது அத்தியாயம்.

சத்தியசந்தன் முத்தியடைந்தது.

 

பிராமணர் குலத்தில் சத்தியசந்தன் என்று ஒருவன் இருந்தான். அவன் விஷ்ணு பக்தன். வைதிக ஸ்மார்த்த கர்மங்களை முறை தவறாமல் செய்து கொண்டு குற்றமற்ற வனாக வாழ்ந்தான். விஷ்ணுவையே பூசித்தல்விஷ்ணு மந்திரத்தையே ஜபித்தல்விஷ்ணு மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தல்விஷ்ணு வாலய தரிசனம் செய்தல்விஷ்ணு பக்தர்களுக்கு வேண்டிய வற்றைக் கொ டுத்தல் இவைகளைத் தவறாமல் செய்து கொண்டு வந்தான். திருமால் அவனுக்குப் பிரத்தியட்ச மானார். சத்திய சந்தன் அவர் திரு வடியில் வணங்கிப் பூசித்துத் துதித்தான். விஷ்ணு மனம் மகிழ்ந்து அவனை நோக்கிச் சத்திய சந்தனே! முத்தியருளும் முதல்வன் பரமசிவனே யென்று நிச்சயமாய்த் தெரிந்து கொள். நானும் பிரமா முதலானவர்களும் முத்தி கொடுக்கும் சத்தியுள்ளவர் களல்ல. அந்தச் சிவபெருமான் எனக்குந் தேவன். சர்வ சக்தியுள்ளவர். சர்வக்ஞர்ஒப்புயர் வில்லா தவர்தூலம் சூட்சுமம், காரண முதலிய சரீரங்களில்லா தவர்பராசக்தியும் சிவ பெருமானுக்கு அபேதமாயுள்ளவ ளென்று வேதங்கள் சொல்கின்றன. ஞானம்வலிமைகிரியை இவைகள் எல்லாம் அவருக்கு இயல்பான குணங்களாம். எனக்கும் பிரமன் முதலியவர் களுக்கும் அந்த மூன்றும் சொந்தமல்ல. அந்தப் பரசிவ மூர்த்தியின் கருணையால் எங்களிடமும் சிறிதுண்டாகும். ஆகையால் நாங்கள் முத்திக்குச் சாதனங்களாக இருப்போமேதவிர முத்தியுதவ மாட்டோம். பரசிவானுக் கிரகத்தினாலே ஜீவர்கள் விரும்பின போகங்களைக் கொடுப்போம். நாங்கள் சுதந்திர முடையவர்க ளல்ல. சிவபெருமானே புக்தி முக்தி இரண்டையும் கொடுக்கும் சுதந்திர முடையவர். சிவபெருமானை மறந்துவிட்டு என்னை மாத்திரம் ஆராதிப்பவர் கள் எத்தனை ஜன்ம மெடுத்தாலும் முத்தியடையமாட்டார்கள். ஆகையால் என்னையும் மற்றத் தேவர்களையும் விட்டுஅன்புடன் சிவபெருமான் திருவடிகளைப் பூசித்துஅவன் கருணையால் முத்தியை அடையென்று சொன்னார். சத்திய சந்தனும் அப்படியே மஹாதேவரை யாராதித்துஅவர் கருணையைப் பெற்றுமுத்தி யடைந்தான். ஆகையால் சிவானுக் கிரகத்தினாலேயே அழியாத முத்தியை அடைய வேண்டும். வேறொன்றினாலும் அடைய முடியாது. இந்த இரகசியத்தை வேதநெறி கெட்ட மூடர்களுக்குச் சொல்லக்கூடாது.

 

 

இருபத்தைந்தாவது அத்தியாயம்.

சிவபக்தி கூறியது.

 

சிவபக்தியானது சகல போகங்களையும் கொடுக்கும் வல்லமை யுடையது. மோக மயக்கங்களை விலக்கத் தக்கது. முத்தியை விரும்புவதும் சிவபக்தியே. அது பலவகையாம். சாலோக முதலிய பதமுத்திகளை விரும்புவதும் சிவபக்தியே. வேதாந்த சிரவணாதிகளிலும்சிவஞானத்திலும்விபூதியிலும்பஞ்சாட்சர ஜபத்திலும்ருத்திராட்சம் தரித்தலிலும்சிவலிங்க பூசையிலும்சிவனைத் தரிசித்தல்சிவபூசைக்கு வேண்டிய உபகரணங்களைக் கொடுத்தல்சிவபூசையில் அன்பு வைத்தல் இவை யெல்லாம் சிவபக்தியேயாம். சிவன் திருவிழாவைத் தரிசிக்க விரும்புதல்திருவிழா வைத் தரிசிப்பவர்களுக்குப் போஜனாதிகள் கொடுத்தல்சிவநாமங்களில் விருப்ப முண் டாகுதல்நந்தவனம் வைத்தல்சிவாலயத்துக் குரியதடாகம் முதலிய உண்டாக்குதல்சிவாலயப் பணிவிடை செய்தல்ஜீரணமான வற்றைப் பழுதுபார்த்தல்கோபுரம் மதிள் மண்டபம் முதலியகட்டுதல் இவைகளும் சிவபக்தியேயாம். சிவனடியாரை வணங்கு தல்நித்திய கர்மங்களைச் சிவாக்ஞை யென்று கருதித் தினந்தோறும் தவறாமல் செய்தலும் சிவபக்தியேயாம். வேத முதலானவற்றை ஓதுதல்ஓதுவித்தல்அவற்றை யெழுதுதல்அவற்றைக் காப்பாற்றல்சிவபக்தர்களுக்கு அந்தப் புஸ்தகங்களைத் தானங்கொடுத்தல்சிவஞானியர்க்குப் பக்திசெய்தல்அவர்களுக்கு போஜனாதிகள் கொடுத்தல்மடம் கட்டுவித்தல் இவைகளும் சிவபக்தியேயாம். சிவமந்திர தியானம் பண்ணுகிற வர்களுக்குப் பணிவிடை செய்தல்சிவஸ்தலந் தோறும் போய்த் தரிசித்தல்திருநீற்றைத் தூஷித்தவர்களைத் தண்டித்தல்சிவாபராதங்கள் செய்தவரையும்சிவஞானியையும்சிவஞானத்தையும் நிந்திப்பவர்களையும் தண்டித்தல். விஷ்ணு முதலான தேவர்களை நிந்திப்பவர்களையும்சிவாலய திரவியங்களைத் திருடின வர்களையும் தண்டித்தலாதிகளும் சிவபக்தி யேயாம். ஏழைகளை ஆதரித்தல்பயந்தவர்களுக்கு அபயம் கொடுத்தல்இனியவை கூறல்எல்லாப் பிராணிகளிட த்திலும் அன்பா யிருத்தல்நன்மையைச் செய்ய விரும்புதல்ஒருவர் மேலும் குற்றம் கூறாதிருப்பதுபிறருடைய குணங்களையே சொல்வதுகுரு மொழி கடவாது நடக்குந் தன்மையும்குரு பணிவிடை செய்ய விரும்புகிற அன்புடைமையும்இவைகள் எல்லாம் சிவபக்தி யென்று தெரிந்தோர் கூறுகின்றார். பக்தியைப் பெறுவதற்கும் பந்தம் ஒழிவதற்கும்முத்தி அடைவதற்கும் சிவபக்தியே காரணமாம். பக்தியுள்ளவரது இதய பங்கய பீடத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரியாமல் வீற்றிருப்பார். 

 

 

இருபத்தாறவது அத்தியாயம்.

பரசிவ சொருப முரைத்தது.

 

எல்லா உலகமும் எந்தச் சிவ சம்பந்தத்தால் சத்துப் போலவே தோன்றுமோ அந்தச் சிவத்தினுடைய சொரூபத்தைக் கேளுங்கள். திரிசியமான பிரபஞ்சத்தை விடஆகாய முதலிய பூதங்கள் சிறந்தன. அவைகளை விடச் சேதன வுயிர்கள் சிறந்தன. அவைகள் சமஷ்டிவியஷ்டிஎன்று இரண்டு வகைப்படும். வியஷ்டியாகிய சீவர்கள் சங்கற்ப பேதங்களுக்கு ஒத்தவாறு பலவகையாய்தேவர்நரர்திரியக்குஜந்துக்கள் முதலிய சரீர வேறுபாடுகளை அடைந்துள்ளன. வியஷ்டியை விடச் சமஷ்டியான இரணிய கருப்பன் சிறந்தவன். அவனை விடப் பிரம தேவருடைய வியட்டி அவதார ங்கள் சிறந்தன. அவையும் சங்கற்ப பேதத்தால் ஒன்றற்கொன்று உயர்வா யிருக்கும். இவைகளை விடச் சமஷ்டியான பிரமதேவன் மேலானவன். பிரமனைவிட விஷ்ணு சிறந்தவர். அவரைவிட உருத்திரமூர்த்தி மேலானவர். இம்மூவரும் பரதத்துவ வியஷ்டிகளே யாவார்கள். இம்மூவரையும் விடக் காரண வுபாதியுடைய மஹேசுவரர் சிறந்தவர். இவரைவிட நிருபாதிக மாகிய பரசிவனே மேலானவர். இப்படியே பரசிவத்துக்கு மேன்மையை வேதமுரைக்கின்றது. சாம்பிராஜ்ய மடைந்த அரசனுடைய ஆனந்தத்தைவிடக் கந்தர்வர் முதலான வர்களுடைய ஆனந்தம் நூறு பங்கு மேலானதா யிருக்கும். இப்படியே பிரமா வரைக்கும் உள்ளவர்களுக்கு அவரவர்கள் ஏற்றத் தாழ்வின் படி நூறு நூறு பங்கு ஆனந்தம் அதிகமாகும். பிரமாவைவிட விஷ்ணு மூர்த்தியினு டையது சிறந்தது. அதைவிட ருத்திரமூர்த்தி யானந்தம் மேலானது. அதைவிடக் காரண சிவனுடைய ஆனந்தம் சிறந்தது. பரசிவத்துக்கு அகண்டானந்தமாம். இம் முறையே ஞானமும் உயர்வும் தாழ்வுமாகக் கருதப்படும்.

 

ஒரு பெரியமரம் கிளை கொம்பு முதலிய பேதங்களாக இருப்பதுபோலப் பரசிவனும் உருத்திரன் முதலிய சொரூப முடையவராயிருப்பர். மரத்தின் கிளைகளில் ஒன்றற் கொன்று உயர்வு தாழ்வ கூறப்படுவது போலச் சிவபேதங்களான உருத்திரர் முதலானவர்களும் ஒருவரில் ஒருவர் உயர்ந்தவர். நித்தியவஸ்து ஒன்றாக விருக் கவும் அவற்றுள் உயர்வுந் தாழ்வுமான வைகளைக் கற்பித்துக் கொண்டு விவாதமிடு கின்றார்கள். அவர்கள் புத்தியில்லாதவர்களே யாவர். உருத்திரனும் காரணசிவனும் எல்லாரையும்விட மேலானவர்கள் என்று உணரமாட்டாதவர்கள் நிருதராய்ப் பிறந்து வருந்துவார்கள். சிவபெருமா னுடைய மகிமை மூடர்களுக்கு வெளிப்படுவது இல்லை. பல ஜன்மங்களில் சுருதி ஸ்மிருதிகளில் கூறியபடி கன்மங்களைச் செய்துள்ள புண்ணிய வசத்தினாலே சிவமகிமை விளங்கும். ஆகையால் மற்றத் தேவர்களை விட்டுச் சிவபெருமானையே பக்தி புரியவேண்டும். பரசிவ ஞானத்தைப் பெற்றவனே முத்தன். 

 

பரசிவனுக்கு நாமரூபங்கள் இல்லை. ஆயினும் மாயையாலே சொரூபங்கள் கற்பிக்கப் பட்டன. சிவன்மஹாதேவன் பரப் பிரமம் முதலியன சிவநாமங்கள். விஷ்ணு முதலியன சிவனுக்குக் காரணப் பெயர்கள். சிவம் அரூபியாயிருந்தும்உபாசிப்பவர் களுக்கு அனுக்கிரகம் செய்யும் பொருட்டுச் சந்திரசேகரம்நீலகண்டம்அர்த்த நாரீசுவரம்ஆனந்தத் தாண்டவம் முதல் பல வடிவங்கள் உண்டாயின. சொரூபமில்லாத வனாகவும்சொரூபமுள்ள வனாகவும்உள்ள பரசிவனுக்கு முற்கூறிய சொரூபங்கள் சிறந்தன வென்று வேதங்கள் கூறும். குணமூர்த்தியாகிய உருத்திரன் எல்லா விதங்களாலும் பாசிவத்துக்கு அபேதமானவர். ஆகையால் விஷ்ணு முதலானவர்கள் அவருக்கு ஒப்பாக மாட்டார்கள். முன் கூறியபரம் முதலிய பெயர்கள் உருத்திரர்க்கு இடுகுறி நாமங்களாம். விஷ்ணு வாதியர்க்குக் காரணப் பெயர்களாம். பாசிவன் சொரூபத்தினாலே சிவஞானம் அருள் புரிவார். அந்த அனுக்கிரகம் சிவபூசை தியானம் முதலியவற்றால் உண்டாகும். அவருடைய அனுக்கிரகத்தை அடையாமை யாலேயே சிவம் எங்கும் நிறைந் திருக்கவும் அச்சிவத்தை உயிர்கள் உணர்வதில்லை. பரசிவ னொருவனே சகல ஜீவர்களுக்கும் முக்தி புக்தி யிரண்டையும் கொடுத்தலால் அவரையே பூஜிக்க வேண்டும்.

 

 

 

இருபத்தேழாவது அத்தியாயம்.

சிவலிங்க விசாரம் கூறியது.

 

சிவலிங்கம் என்னும் வாசகத்துக்குப் பிரகாசம் என்பது பொருளாகும். சிவமே சிவலிங்கமாம். சிவம் சுயம் பிரகாசமாயிருப்பதால் ஜடத்தைப்போல மற்றொரு பொருளால் பிரகாசிப்பிக்கப் படுவது அல்ல. சகல வஸ்துக்களையும் பிரகாசிக்கச் செய்கிறதினால் சிவம் ஜடமென்பது கூடாது. அப்படிச் சொன்னால் எவ்வுயிர்க்கும் பிரதீதி யில்லாமல் சூனியமாய்விடும். சூனிய மானாலும் நல்லதே யென்றால்பிரமாண மில்லாமல் சூனியசித்தி கிடையாது. ஆகையால் சிவமே எல்லாவற்றையும் பிரகாசிக் கச் செய்கின்றது. என்று தெளியுங்கள். சிவனுடைய இலிங்கமே சிவலிங்க மென்பர். அதை ஆறாம் வேற்றுமை உடமைப் பொருளாகக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் வேதாந்த ஞானமே சிவலிங்கமாகும் என்று சிலர் சொல்வார்கள். சிலர் சத்தியமே சிவலிங்கமென்பார். ஸ்மிருதி புராணாதி நூல்களினா லுண்டாகும் ஞானமே சிவலிங்க மென்பார். நல்லமனமே சிவலிங்கமென்று சிலர் சொல்வார்கள். சித்தமே சிவலிங்க மென்பார். சிலர் புத்தியே சிவலிங்க மென்பர். அகங்காரமே சிவலிங்க மென்று சிலர் சொல்வார்கள். சிலர் பிராணனே சிவலிங்க மென்பார். சரீரமே சிவலிங்கமென்று சிலர் சொல்வார்கள். சிலர் இந்திரியங்களே சிவலிங்க மென்பார். சப்தாதிகளே சிவலிங்க மென்று சிலர் சொல்வார்கள். சிலர் ஆகாயாதி பூதங்களே சிவலிங்கம் என்பார். சிலர் உலகமெல்லாம் சிவலிங்கமே யென்பார். இவற்றுள் ஜடப்பொருள் சிவலிங்கமாகா. ஏனென்றால் சிவசொரூபம் ஞானமேயாம். பரசிவத்துக்கு ஆதாரமா யிருப்பது சிவலிங்க மென்று சிலர் சொல்வார்கள். அந்தச்சிவம் நித்திய சைதன்னியமாய் விளங்குகிற படியால் அதுவே எல்லா வற்றுக்கும் ஆதாரமாயிருக்கும். அதற்கு ஆதாரம் வேண்டுவ தில்லை. ஆகையால் சிவமே இலிங்கமென்பது தான் சந்தேகமற்றதுஉயிர்களின் பரிபாகப்படி பூசைதியானம் முதலிய செய்வதற்கு உபகாரமாக ஆதாரம் கற்பிக்கப் பட்டதாகும். சகல வுலகங்களும் சிவத்தில் இலயித்தலால் அதற்குச் சிவலிங்கமென்று பேர் உண்டாயிற்று என்பார்கள். சுத்தியில் தோன்றுகிற வெள்ளி அதிலேயே இலயித்துச் சுத்தியே சத்தியமாவது போலச் சிவனிடத்தில் ஆரோபிதமான உலக மெல்லாம் அச்சிவத்தில் ஒடுங்கும் போது சிவமே நிலைத்திருக்கும். அதனால் எல்லா வுலகங்க ளும் சிவலிங்க மேயாம் சில யோகிகள் சரீர ஆதாரங்களில் விளங்கும் சிவலிங்கங்க ளைத் தொழுவார்கள்.

 

ஆதியந்த மில்லாததாய்நெருப்புப் போன்ற நிறமுடையதாய்கீழ்முகமாய்அக்கினிமத்தியில் விளங்குகிற சிவலிங்கத்தையும்கோடி சூரியர்களைப்போலப் பிரகாசிப்பதாய்ப்பந்தத்தை ஒழிப்பதாய்க்கோமளமாய்ஊர்த்துவ முகமாய்மூன்றாந் தானத்தில் உள்ள சிவலிங்கத்தையும்கோடி சந்திரர்களைப்போலப் பிரகாசிப்பதாய்ப்புருவ மத்தியில் பராசத்தியோடு வசிக்கிற மஹாலிங்கத் தையும்குருவருளால் தெரிந்து கொண்டபிறகுஆராதித்தல் வேண்டும். பல இலிங்க வடிவமாகப் பராசத்தி யோடு இருத்தலால் எல்லாராலும் துதிக்கப்படுவது அந்தச் சிவமேயாம். சிவலிங்கத்தின் உண்மையைத் தெரிந்து கொண்டுமலர்நீர் முதலியன கொண்டு ஆராதிப்பவர் பந்தம் ஒழிந்து முத்திபெறுவார்கள்.  

இருபத்தெட்டாவது அத்தியாயம்.

சிவத்தல மகிமை கூறியது.

 

திருமாது கொழுனனாகிய நாராயணமூர்த்தி கயிலையங்கிரிச்சாரலை அடைந்து கொடிய தவஞ்செய்தார். அப்போது சிவபெருமான் காட்சிகொடுத் தருளினார். திருமால் எழுந்திருந்து வணங்கித் துதித்தார். சிவபெருமான் திருமாலை நோக்கி உனக்கு வேண் டுவதென்ன வென்று கேட்கச் சிவத்தல மகிமைகளை உரைத்தருள வேண்டுமென்று வேண்டினார். சிவபெருமான் கருணை கூர்ந்து கூறுகின்றார். 

 

புத்திமுத்திகளைக் கொடுக்கும் தலங்கள் ஆதியாத்மிகம் ஆதி பெளதிகம் என்று இருவகைப்படும். ஆதியாத்மிகம் யோகிகளால் வணங்கப்படும். பிரமரந்திர ஸ்தானமும்கண்காதுநாசிகபோலம்உதடுசிரசுசந்தியக்கிரங்களுடன் கூடின பாதம்கைவயிறுநாபிஇருவிலாப்பக்கம்ஆதாரங்கள் ஆறும்கைலாயமலையும்காளத்திவாரணாவாசிசோமநாதம்கேதாரம்ஸ்ரீசைலம்விருத்தாசலம்கோபருவதம்சீதரக்ஷேத்திரம்ஆதிபுரம்சுவேதாரணியம்திருதித்தானம்திரிகோடிகாதிருவிடைமருதூர்கும்பகோணம்தட்சிணாவர்த்தம்கச்சபேசுவரம்வன்மீகக்ஷேத்திரம் கஜாரணியம்வேதாரணியம்மதுரைஇராமேசுவரம்புண்டரீகபுரம்என்பனவும்இவைபோல் வனவுமாம். இவைகளுள் சிதம்பரம்பலவகைப் போகங்களையும் கொடுக்கும்: பாவங்களை யெல்லாம் அழிக்கும்சிவஞானத்தைக் கொடுக்கும். ஆதலால் சிதம்பரம் எல்லாவற்றுள்ளும் உத்தமமானது. சகல உயிர்களும் வணங்சிக் கதியடை வதற் காகவே அந்தத் தலம் நம்மால் நியமிக்கப்பட்டது. அந்தத் தலத்தில் நாம் ஆனந்தத் தாண்டவஞ் செய்வோம். அந்த நடனத்தைத் தேவர்களும் கண்டு தரிசிப்பார் கள். நூல்களாலும்தருக்கத்தாலும் மனமயங்கி யிருப்போர்கள் அந்தத் தலத்தைத் தரிசிக்க முடியாது. நம்மிடம் உண்மையான பக்தியுடையவர்களே அந்த நடனம் கண்டு தரிசிக்கத் தக்கவராவார்கள். அந்தத் தலத்தைத் தரிசியாதவன் வேள்விகள் செய்தாலும் சொர்க்கம் அடைய மாட்டான். ஞானம் பெற்றவ னானாலும் சிதம்பர தரிசனம் செய்யா தவன் கதிபெற மாட்டான். அவன் செய்கிற தர்மமும் பாவமாகும். உயர்ந்த பிராமண னானாலும் இழிந்தவனே யாவன். அந்தத் தலம் நமக்கு மிகவும் பிரியமுள்ளது. முத்தி யடைபவர்களுக்குத் தரிசிக்கக் கிடைக்கும். இதை உணர்ந்து கொள் என்று திருமாலுக்கு உபதேசித்துச் சிவபெருமான் மறைந்தருளினார். 

 

 

இருபத்தொன்பதாவது அத்தியாயம்.

திருநீற்றின் மகிமை கூறியது.

 

மஹாபஸ்மம்பஸ்மம் என்று விபூதி யிருவகைப்படும். பாவங்களை யெல்லாம் நாசம் பண்ணுவதால் அதற்குப் பஸ்மம் என்று பேர். ஞானத்தைக் கொடுத்து மஹாபாவ ங்களை யெல்லாம் நாசப்படுத்துகிறதினால் சிவபெருமானே மஹாபஸ்மம் என்னப் படுவார். அந்த மஹாபஸ்ம சொரூபத்தை அடைந்தவர்களுக்குத் தவம் முதலியவற்றி னால் யாதும் பலனில்லை. மஹாபஸ்ம சொரூபம் விளங்கப் பெற்றவன் சிவனே ஆவான். மஹாபஸ்ம ஞானமடைவதையே பெரும்பயன் என்று வேதாதி நூல்கள் கூறுகின்றன. பஸ்மம்சிரௌதம்ஸ்மார்த்தம்இலவுக்கம் என்று மூன்று வகைப்படும். முன்கூறிய சிரௌதம்ஸ்மார்த்தம் என்னுமிண்டும் பிராமணர்களுக்கே யுரியனவாம். இலவுகிகம் மற்ற எல்லார்க்கும் ஆகும். ஜாபாலோபநிடத மந்திரங்களினால் உத்தூளனம் செய்து கொண்டுபஞ்சபிரம மந்திரங்களால் நீர் விட்டுக் குழைத்துத் திரிபுண்டரம் தரித்துக் கொள்ளல் வேண்டும். மேதாவி முதலிய மந்திரங்களால் பிரமசாரி யணியவேண்டும். சந்நியாசி பிரணவ மந்திரத்தால் அணிவது தகுதி. மந்திரங்களுக்கு அதிகார மிவ்லாதவன் மந்திரமில்லாமலே தரித்தல் வேண்டும். விபூதியை உத்தூளன மாகவும் திரிபுண்டரமாகவும் தரித்தல் ஞானாங்கமாகும் என்று வேதங்கள் சொல்லும். பாசுபதவிரதம் அனுஷ்டிப்பவன் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவ னாவான் என்று கைவல்ய உபநிடதம் கூறுகின்றது. முத்தியை விரும்பினவர்கள் விபூதியை எப்போதும் தரிக்க வேண்டும். உயிரைக் கர்ப்பாற்றல்சுபம்ஸ்நானம்தானம்தவம்யாகம்எல்லாம் திருநீறேயென்று வேதங்கள் கூறுகின்றன. திருமால்பிரமன்இந்திரன்தேவர்கள்இலட்சுமிசரஸ்வதிஇந்திராணிஅரம்பையர்கள்யட்சர்கந்தர்வர்இராட்சதர்அசுரர்முனிவர்கள்இவர்களில் விபூதியை உத்தூளன மாகவும் திரிபுண்டரமாகவும் தரியாதவர் யார்நீறணியாதவர்க்கு ஞானமில்லைகோடி ஜன்ம மெடுத்தாலும் சமுசார பந்தம் ஒழியார். பாவிகளாவார்கள். நரகத்தில் விழுந்து வருந்துவார்கள். வருணாச்சிரம தரும பலனையும் அவர்கள் அடைய மாட்டார்கள். அவர்கள் செய்கிற புண்ணியமும் பாவமாகும். பல ஜன்மங்களிலும் பாவம் செய்தவர் களுக்குக் விபூதியில் வெறுப் புண்டாகும். விபூதியை விரும்பாதவர்கள் எல்லாரும் மஹாபாவிகள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். திருநீற்றின் மகிமையை ஒருவரா லும் சொல்ல முடியாது. 

 

 

முப்பதாவது அத்தியாயம்.

சிவப்பிரீதி கரமுரைத்தது.

 

வேதத்தினா லுண்டாகிற துவிதஞானமும்வேதாந்த வாக்கியத்தால் பெறப்படும் எல்லாம் சிவமென்கிற அத்துவித ஞானமும்அர்த்த நாரீசுவரம் ஆனந்தத் தாண்டவம் முதலிய மூர்த்தங்களிலும் செய்யப்படுகிற தியானமும்சம்புசங்கரன்முதலிய திருநாமங்களை உச்சரித்தலும்இடைவிடாமல் உண்டாகிற சிவபக்தியும்குரு பக்தியும்வேதாகம புராணங்களில் விருப்பமும்வேத மோதுவதும்வேதாக மங்களை ஓதுவித்தலும்வேதாகமப் பொருளை நிச்சயித்தலும்ஜாபாலம் கூறியபடி திருநீறு தரிப்பதும்ருத்திராட்சம்புனைதலும்சிவலிங்க பூசையும்சிவனடியாரைப் பூசிப்பதும்காசி முதலான ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்வதும்சாந்தி முதலிய குணங்களை விரும்பலும்அழியும் பொருளை அறியும் ஞானமும்விராகமும்யாகம்தவம்தானம் முதலான வைகளும்அறமும்பரிசுத்தமும்விதியை அனுசரித்தலும்விலக்கை ஒழித்தலும்துஷ்டருடன் சிநேகிதம் பண்ணாதிருத்தலும்பிறர் புகழைப் பேசுதலும்நிந்தை கூறாதிருத்தலும்ஆலயப் பணிவிடை செய்தலும்பந்தத்தை ஒழிக்க முயலுத லும் சிவப்பிரா மணர்களைத் தெய்வமாகப் பாவித்தலும்ஆகிய இவைக ளெல்லாம் சிவப்பிரீதி கரமாமென்று பெரியோர் சொல்வார்கள். 

 

சிவயோகிக்குப் பணிவிடை செய்வது இவை எல்லா வற்றையும் விடச்சிறந்தது. பூர்வத்தில் குசவர் குலத்தில் பிறந்த ஒரு பெண் இருந்தாள். மஹாரூபவதி. அவளு டைய அழகுக்குப்பூலோகத்தில் ஒப்பே கிடையாது. அவள் தன் இச்சைப் படியே நடந்தாள். தன்னுடைய அழகினாலேயே பலபேரையும் மயங்கச் செய்து பொருள் பறிப்பாள். மஹபாவி. பொருளாசையால் மூவாயிரம் வேதியர்களைக் கொன்றாள். இப்படிப் பட்ட மஹாபாவியான அவளுக்கு ஒரு சிவயோகியின் தரிசனம் கிடைத்தது. அந்தச் சிவயோகி தன் வீடுவந்ததும் அவள் அவருக்குப் பல உபசாரமும் செய்து கலவி யாலும் மகிழ்வித்தாள். அவளோடு புணர்ந்துக்களித்த அந்தணன் தெட்சண கயிலாயம் போகப் புறப்பட்டார். அவளும் அவரைத் தொடர்ந்தாள். இது தகாததென்று அறிந்திருந்தும் அவளிடத்திலுள்ள மோகத்தால் அவளையும் அழைத்துக் கொண்டு சென்றார். சீகாளத்தி போய்ச் சேர்ந்து அவளுடன் அங்கே வசித்தார். அந்தக் குசப் பெண்ணும் யோகிக்குப் பணிவிடை செய்து கொண்டு அவரை விட்டுப் பிரியாமல் நெடுங்காலம் இருந்தாள். சிவயோகிக்குப் பணிவிடை செய்ததனாலே பரமசிவன் மகிழ்ந்து அவளுக்கு மோட்சம் கொடுத் தருளினார். சிவயோகி பணிவிடை மிகவும் உத்தமமாகும். இதைப் போலச் சிவபெருமான் மற்றெதிலும் விரும்புவதில்லை.

 

 

முப்பத்தோராவது அத்தியாயம்.

மறையவர்க்குச் சிவபக்தியில்லாமைக்குக் காரணம்கூறியது.

 

முன்னொரு காலத்தில் துவாதசவருஷ க்ஷாமம் உண்டாயிற்று. ஜீவாத்மாக்கள் பசியால் மெலிந்தன. உண்ணத் தகாதவைகளையும் உண்டு காலம் கழித்தன. அப்போது பசியால் வருந்தி சில பிராமணர்கள் கௌதம முனிவரை அடைந்தார்கள். கௌதமர் அவர்களை அஞ்சாதீர்கள் என்று கூறித் தமது தபோ மகிமையால் அந்த ஆச்சிரமத்தை மிகச் செழிப் புள்ள தாகச் செய்தார். சகல வளங்களும் அங்கே நிறைந்தன. கௌதமர் தம்மை அடைந்த பிராமணர்களுக்கு ஆடையாபரணங்கள் உணவு முதலிய எல்லாம் கொடுத்து ஆதரித்தார். இப்படி நெடுங்காலமாயிற்று. பிறகு மழை பொழிந்து பூமியெங் கும் செழித்துத் தழைத்தது. பிராமணர்கள் கௌதமரை நோக்கித் தமது நாடுகளுக்குச் செல்ல விடை கேட்டார்கள். கௌதமர் விடை கொடுக்க வில்லை. ஆதலால் வேதியர் கள் கௌதமர் கோஹத்தி செய்தார் என்று ஒரு அபவாதம் உண்டாக்கினார்கள். அதனால் அவருடன் கூடியிருப்பது தகாது என்று கூறினார்கள். அந்த அபவாதத்தைக் கேட்ட கௌதமர் “சிவ சிவ” என்ன சொன்னார்கள்! என்று மஹா கோபம் கொண்டுநன்றி கொன்ற அவர்களைச் சபித்தார். உங்களுக்குச் சிவமூர்த்தங்களிலும்சிவபக்தி யிலும்சிவநாமத்திலும்சிவஞானத்திலும்சிவாலயத்திலும்விபூதி ருத்திராட்சங் களிலும்சிவசம்பந்தமான மற்ற எவ்விஷயங்களிலும் விருப்ப மில்லாமல் போகக் கடவது. நித்திய நைமித்திக கன்மங்களிலும்சாந்தி தாந்தி முதலிய ஞானசாதனங் களிலும்வேதாத்தியயனம்ஜபம்யாகம்யோகம்தருமங்களிலும் உங்களுக்கு விருப்ப மில்லாமற் போகக் கடவது. திருமால் முதலான தேவர்கள் சிவனைவிட மேலான தெய்வம் என்கிற துர்ப்புத்தி உங்களுக்கு உண்டாகக் கடவது. அந்தத் திருமால் முதலான தேவர்களுடைய அனுக்கிரகமும் உங்களுக்குக் கிட்டாமற் போகக் கடவது. சங்கு சக்கரம் முதலிய சின்னங்களை மேனியில் தரித்துக் கொண்டுநெற்றியில் அரசிலை போலவும் அர்த்த சந்திரனைப்போலவும்தீபச்சுடர் போலவும் உள்ள சின்னங்களை அணிந்துபாவவழியில் சஞ்சரித்துக் கெடுவீர்களாக. புத்திரர்சகோதரர்மனைவி மற்றுமுள்ள சுற்றத்தார் எல்லாரையும் விற்றும்வேதம்நீர்தருமம்கள்மாம்சம்மீன்முதலியவற்றை  விற்றும் ஜீவிக்கக் கடவீர்கள்பாஷாண்ட மதத்தைக் கைக் கொண்டு துஷ்டர்களாகிப் பாஞ்சராத்திரம்பௌத்தம்ஆருகதம் முதலிய நெறிபற்றி ஒழுகக் கடவீர்கள். உங்கள் வம்சத்தாரும் நாமிட்ட சாபவசப் பட்டுக்கெடுவார்களாக. சிவபக்தி சிறிதும் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் இல்லாமற் போகக் கடவது என்று சபித்தார் சிவபக்தர்களில் சிறந்த கௌதமர். 

 

 

முப்பத்திரண்டாவது அத்தியாயம்.

சிவநாம மகிமை யுரைத்தது.

 

 சிவன்ருத்திரன். சந்திரகலாதரன்ஸ்ரீகண்டன்மஹாதேவன்பவன்உமாபதிசங்கரன்விசுவன்பாவநாசகன்சாட்சிபரம்சம்புசத்துபிரமம்ஈசானன்அகோரன்சத்தியோஜாதன்ஈசன்சூலிஉக்கிரன்பசுபதிஅரன்ஈசுவரன்பூதேசன்கபர்த்திசர்வக்ஞன்பிரசாந்தன்கிரீசன்திரிபுராந்தகன்நித்தியானந்தன்ஆகாசன்தட்சஎக்ஞ விநாசகன்அந்தகாரிபிரபுஸ்தாணுவாமதேவன்தற்புருஷன்பவாரிகாமாரிவிசாலாட்சன்சோமன்திரிநேத்திரன்கபாலிசுகோரன்மஹாமாயிபீமன்மூலகாரணன்வன்னிரேதசுவன்னிரேதசுபிநாகிரிஷபாங்கன்மேருதரன்மஹேசுவரன்சுராட்சர்வாத்மாமுத்தன்பூரணன்அநந்தரூபன்பர்க்கன்சர்வாதாரன்நித்தியன்வரப்பிரதன்நிராமயன்நிர்க்குணன்வேதாந்தன்சத்தியன்பரதேவதைவியோமகேசன்புவனேசன்தேவதேவன்தகரன் பரமான்மாகிருத்திவசனன்புவனேசன்கிராதன்பயிக்கன்சாம்பன்சம்சரரவர்ஜிதன்சம்சார வைத்தியநாதன்மஹாரிஷிவிநாயகன்அப்பிரமேயன்நிர்மலன்விரூபாட்சன். விரூபன்கணேசன்சர்வேசன்புராதனன்சருவநிதிபுராணபுருஷன்அசங்கன்ஞானசுகன்சுதந்தரன்சுயம்பிரகாசன்ஜோதிபிரகாசன்சுவானுபவன்ஜகநாதன்பிராணன்விசுவரூபன்நிர்ப்பயன்சபாபதிமுகுந்தேசன்காலகாலன்விசுவாதிகன்சபாநாதன்மூலகுருபவமானன்அந்தரியாமிதிரிசியநாயகன்அதிரிசியன்சதாசிவன்நிரஞ்சனன்கொன்றைசூடிஇவை போன்ற பல நாமங்களுண்டு. இவைகளெல்லாம் இடுகுறி நாமமாகப் பரசிவனையே உணர்த்தும். முராரிநாராயணன்அரிமுதலான நாமங்கள் காரணமாத்திரையாலே சிவனையே சொல்லும். காரணப் பெயர்களை விட்டு இடுகுறி நாமங்களைத் தோத்திரம் செய்தால் மோக மொழியும். சிவஞானமுண்டாகும். முத்தியும் சித்திக்கும். இது சத்தியம்.  

முப்பத்து மூன்றவது அத்தியாயம்.

குருவினிடத்தில் உபதேசம் கேட்குமுறை.

 

       சத்தியம்திருடாமை முதலிய தருமங்களையுடையவனாய் காமமுதலிய குற்றங்களில்லாதவனாய்சிறந்த பக்தியுடைய மாணாக்கன் குருவினிடம் போய்த்தினந்தோறும் மலர் முதலியவற்றால் அவரைப் பூசித்துமூவாயிரம்இரண்டாயிரம்அல்லது ஆயிரமாவது அல்லது சக்தியின் அளவாவது தங்கக் காசுகளைப் பாதகாணிக்கையாக வைத்துஅவர் பாதத்தில் சிரசுபடும்படிபலதரம்பணிந்துமுன்னாலே வணக்கத்துடன் நின்று கொண்டுமெய்யான குருபரனே! பரமசிவ சொரூபத்தை உமது அடியவனாகிய எனக்கு உபதேசம் செய்தருள வேண்டும் என்று பிராத்திக்க வேண்டும். 

 

குருவானவர்ஜனங்களில்லாததாய்பயமில்லாததாய்கோமயத்தால் மெழுகப்பட்டதாய்எட்டுத் திசைகளிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டதாய்தோரணம்விதானம்தூபம் தீபம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டதாய்அழகாயுள்ள ஒரு இடத்தில் அரிசியால் மண்டலமிட்டுமலர் புஷ்பங்களால் அர்ச்சித்துஅஞ்சலி செய்து கொண்டு வணக்கமொடு நிற்கிற மாணாக்கனை அந்த மண்டலத்தின் மத்தியிலுட்காரவைத்துச்சிவதியானத்துடன் மாணாக்கனை நோக்கிப் பரசிவதியானம் செய்யச் சொல்லித் தாமும் தியானித்துஉபதேசம் பெறுகிறவனைச் சிவமாகக் கருதிஅந்த மந்திரத்தைத் தாமும் சிந்தித்துத்தமது குரு தமக்கு உபதேசித்தபடியே உபதேசித் துப் பரிச்சேதனம்பண்ண வேண்டும். இப்படி குருவுபதேசம் பெற்ற பின்கருமபரிபாகம் வந்த மாணாக்கனுக்குச் சாத்தினிபாதம் உண்டாகும். சத்தினி பாதமுண்டானவுடனே சஞ்சிதம் ஒழியும். பிராரத்த கர்மம் புசித்து உடலோடு ஒழியும். ஊழ்ஒழியுங்கால் உடல் விடுபடும். அப்போது தேவர்கள் வணங்கும்படி முத்தி சேர்வான். சத்தினி பாதம்பதியாத வர்களும்சத்திய வந்தர்களாய்க் குருபணிவிடை செய்து வேதாந்த சிரவணம் செய்து வரில் கிரமமாகப் பரிபாக டைந்து முத்தி பெறுவார்கள்.

 

 

முப்பத்து நாலாவது அத்தியாயம்.

குருபரம்பரை கூறியது.

 

உமாசகாயனாகிய சிவபெருமானே முதற்குரு. அவருடைய மாணாக்கன். திருமால். அவருக்குப் பிரமதேவன் மாணாக்கன்பிரமனுடைய மாணாக்கன் சனற்குமாரன். அவருடைய மாணாக்கர் வியாசமுனிவர். வியாசருடைய மாணாக்கன் நான். என்னால் வேதாந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். முறைப்படி ஆசானிடம் உபதேசம் பெற்றவன் தன் பாரம்பரியத்தை யிப்படியே தெரிந்தவர்க்குச் சொல்வான். அதனால் அவனுடைய அஞ்ஞானம் ஒழியும்மெய்ஞ்ஞான முண்டாம். அதனாலே பேரின்பமுத்தி சித்திக்கும். குருமரபு தெரியாமல் உபதேசம் செய்கிற ஆசான் மாணாக்கனுடைய பாசத்தை ஒழிக்கமாட்டான். அதை உணர்ந்து உபதேசம் செய்கிறவன் நிச்சயமாகவே மாணாக்கன் பாசத்தை ஒழிப்பான். குருவானவன் தன் கோத்திர ரிஷியைத்தன் குரு சொன்ன குருமார்களைவிநாயகரைசுப்பிரமண்ய வரைஉமாதேவியாரைவிஷ்ணு பிரமர்களைமற்றத் தேவர்களையும் வணங்கிதன்னிடம் வந்த மாணாக்கனை ஒரு வருஷம் சோதித்துஅவனுடைய பரிபாகத்துக் கேற்றபடி பாசநாசம்பண்ணிவேதாந்தத்தை உபதேசிக்கவேண்டும். கல்வியினால் இறுமாப்பு உண்டானால் தீங்கு உடனே வரும். குருவுக்குத் தவறு செய்தவர்களும்அயோக்கியர்களுக்கு உபதேசம் செய்தவர்களும் நரகில் விழுந்து வருந்துவார்கள். கோத்திரஞானம் விவாகத்துக்கு. உபயோகப்படுவது போலக் குரு பாரம்பரிய ஞானம் ஞானத்துக்குச் சாதகமாகும். 

 

 

முப்பத்தைந்தாவது அத்தியாயம்.

காளத்தி மகிமை கூறியது.

 

முன்னொருகாலத்தில் உமாதேவியார் பரமசிவனைப் பணிந்துஆண்டவனே எல்லாப் பிராணிகளுக்கும் எளிதில் முத்திதருகிற ஒரு க்ஷேத்திரத்தைச் சொல்லியருள வேண்டுமென்று வினவினார். பரமசிவன் அப்படிப்பட்ட ஒருதலத்தைச் சொல்கிறேன் கேள் என்று சொல்லுகிறார். 

 

அணுவளவு தருமம் செய்தாலும் மேருவாகச் செய்யும். நினைத்தாலும் கேட்டாலும் உடனே பலன் தரும். பாவிகளால் அடையப்படாதது தென் கயிலாசமே யாம். உயர்ந்த குலத்தில் பிறந்தவரானாலும்இழிந்த குலத்தில் பிறந்தவபானாலும் ஒரு வருஷம் அந்த ஸ்த்தலத்தில் வசித்தல் வேண்டும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்திலும்வைகாசி மாதம் விசாகத்திலும்ஆனி மாசம் மூலத்திலும்,  ஆடிமாசம் பூராடத்திலும்ஆவணி மாசம் திருவோணத்திலும்புரட்டாசி மாசம் பூரட்டாதியிலும்ஐப்பசிமாசம் அசுவினியிலும்கார்த்திகை மாசம் கார்த்திகையிலும்மார்கழிமாசம் புனர்பூசத்திலும்தைமாசம் பூசத்திலும்மாசிமாசம் மகத்திலும்பங்குனி மாசம் உத்திரத்திலும் சொர்ணமுதிதியில் நீராடி நீறணிந்துஅங்குவசிக்கிற நம் இருவரையும் பூசித்துச்சக்திக் கேற்றபடி தானம் கொடுத்துஇரவில் மாத்திரம்  புசித்துஇப்படி ஒருவருஷம் வசித்தால் அவர்கள் சகல பாவங்களினின்றும் விடுபட்டு முத்தியடைவது நிச்சயம் என்று சொன்னார். உமைகேட்டு மகிழ்ந்தார். ஆகையால் உலகத்தில் காளத்தி மிகச் சிறந்தது. எல்லாப் பிராணிகளுக்கும் முத்திதரு மியல்புடைய தென்று உணர்ந்து கொள்ளுங்க ளென்று சூதர் சொன்னார்.

 

 

முப்பத்தாறவது அத்தியாயம்.

முத்தியடைவதற்கேது கூறியது.

 

       ஜயிமினிமுனி வியா தரிடம் போய் முத்தி யடைவதற்கு உரியகாரணம் யாதுஎனக்குச் சொல்ல வேண்டும். என்று கேட்டார். வியாசர் மகிழ்ந்துஇதைக் குறித்து நான் பிரமாவைக் கேட்டேன். பிரம தேவருக்குச் சந்தேக மூண்டாய் விஷ்ணுவை யடைந்து சேட்டார். விஷ்ணு கயிலாய மலை போய்ச் சிவ பெருமானை வணங்கிக் கேட்டார். சிவபெருமான் திருமாலே! பூலோகத்தில் அநேக சிவ க்ஷேத்திரங்களுண்டு. சிதம்பரம்காளத்திவிருத்தாசலம்கோபருவதம்வன்மீகம்கஜாரணியம்சோமநாதம்ஆதிபுரம்கோகர்ணம்பரமேசுவரம்வேதாரணியம்சுவேதாரணியம்கேதாரம்காசிகும்பகோணம்திருவிடை மருதூர்இராமேசுவரம்மதுரைஇவைகளுள் எதிலாவது நம்மைப் பூசித்துப்பஞ்சாட்சர ஜபம் தினம் பன்னீராயிரம் ஜபித்துச்சிவபக்தர்களைப் பணிந்து வசிக்கிறவர்கள் நிச்சயமாகவே முத்தி யடைவார்கள். 

 

      ஒரு துஷ்ட னிருந்தான். அவன் மஹாபாவி. கள் குடித்துத் தாயைப் புணர்ந்துதந்தையையும் கொன்றான். அவன் பிரமராட்தன் பற்றி வருந்தினான். இதற்கு என்ன செய்வதென்று விசனத்துடன் திரிகையில் மதுரையை அடைந்தான். உடனே பிரமராட்சத மொழிந்துபோயிற்று. அதனால் அவன் மகிழ்ந்துஇந்தத் தலத்திலேயே நாம் எந்நாளும் வசிப்போ மென்று கருதி அங்கே தங்கினான். அப்பொழுதே அவனுடைய பாவங்கள் ஒழிந்தன. அவனுக்கு ஒரு பிராமணன் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்தான். அந்தப்பஞ்சாட்சரத்தை நித்தம் பன்னீராயிரம் ஜபித்தான். அதனால் அவன் நமது திருவடி நிழலையடைந்து பேரின்ப மடைந்தான். ஆகையால் நமது ஸ்தலவாசம் பண்ணுவதே முத்தி அடைதற்குச் சிறந்த உபாயமென்று சொல்லி யருளினார். ஆகையால் ஜயிமினீ! இதை நீ அறிந்துகொள் என்று வியாசர் கூறினார்.

 

 

முப்பத்தேழாவது அத்தியாயம்.

சர்வசாதன முரைத்தது.

 

குற்றமற்றகுணங்களையுடையவன்! காமாதிகள் இல்லாதவன்! தவத்தினால் மேம்பட்டவன்என்னை அடிமை கொண் டருளியவன்! அந்த வியாச முனிவர் பரம சிவன் திருவடியைச் சிந்தித்துக் கொண்டு அருந்தவம் புரிந்தார். ஒருநாள் சிவபூசை செய்து தேவ தேவா! எனக்கு இரங்க வேண்டு மென்று துதித்தார். பரசிவன் அவர்க்குப் பிரசன்னரானார்! வியாதர் மகிழ்ந்து எனக்குச் சர்வசாதனத்தைச் சொல்ல வேண்டுமெ ன்று கேட்டார். எல்லாராலும் விரும்பப்பட்ட புருஷார்த்த மென்பது புக்திமுத்தி யிரண்டுமாம். முக்தி பலவகைப்படும். அவற்றுள் சாயுஜ்ய முத்தியே சிறந்தது அதை அடைவதற்குச் சாதனம் நம்மை அறியும் ஞானம். அந்த முத்தி நித்தியமாய் ஆன்ம சொரூபமா யிருக்கும். அப்படியிருந்தும் பிராந்தியினாலே உயிர்கள் உணர்வதில்லை. மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் அழிந்தால் பிராந்தியும் நீங்கும். அப்போது விளங்கும். அந்தமுத்தி பசிவ சொரூபமன்று என்றால்பிராப்பியம்அப்பிராப்பியம் என்ற இரண்டினுள் அடங்கும். பிராப்பிய மென்றால் பிராத்த பிராத்தியாம். சாத்தியம் என்றாவதுநித்திய மென்றாவது சொல்ல வேண்டும். சாத்தியம் என்றால் சாத்திய பாவவஸ்து அழிவது போல அழியும். நித்தியம் என்றால் கதியும் நித்தியமேயாம். அப்பிராப்த பிராத்தியபேத பாவமெனில் பேதம் நசியாமையாலும்பேதமுள்ளபோது ஏகத்துவ மில்லாமையாலும் அது சரியன்றுஆகையால் வேதாந்த வாக்கிய ஞானத்தால் கிடைப்பதே சாயுஜ்ய முத்தியாம். வேதம் கூறிய கரும சாதனங்களால் சாரூபாதி பத முத்திக ளடையப்படும் என்று கூறிச் சிவபிரான் மறைந் தருளினார். 

 

 

முப்பத்தெட்டாவது அத்தியாயம்.

வேதாவிரோதம் கூறியது.

 

வேதம் அத்துவித பரமென்றும்கற்பிக்கப் பட்ட துவித பரமென்றும் இரண்டாம். துவிதப்பிரபஞ்சம் காணப்படுவதாலும் பரத்தினிடத்தில் ஆரோபித மாதலாலும் கற்பிதமேயாம். அத்துவிதத்துக்கு வேறொரு அத்துவிதமான அதிஷ்டானப் பொருளில் லாமையாலும்மயக்கத்தினாலுண்டான கற்பிதமான துவிதவஸ்துவினிடத்து அத்துவிதப் பொருள் ஆரோழித மென்று சொல்லக் கூடாமையாலும் அத்துவிதமே யுண்மையாம். அத்துவிதம் சூனியத்தில் ஆரோபித மென்றால்அந்தச் சூனியம் இப்படிப் பட்ட சொரூப முடைய தென்று சொல்ல முடியாமையால் அந்தச் சூனியம் அதிஷ்டான மாகாது. அதனால் அது பொருந்தாது. அத்துவித பரமான வேதத்துக்கும் கற்பித துவிதபரமான வேதத்துக்கும் விரோதம் உண்டா யிருப்பது போலக் காணப் பட்டாலும்பரமார்த்தத்தில் அவிரோத மேயாம். அத்துவிதம் காட்சி முதலிய ஐவவகைப் பிரமாண ங்களுக்கும் அகோசர மாயிருந்தாலும்அது முக்கியப் பிரயோசனமாதலாலும்பிரமாணங் களுள் முக்கியமான வேதமே அதற்குப் பிரமாணமாகும். துவிதம் வேதப் பிரமாணத்தை விரும்பாமல் காட்சி முதலிய வற்றிற்குகோசரமாயிருப்பதாலும்முக்கியப் பிரயோசனமில்லாமை யாலும் துவிதத்துக்கு வேதம் முக்கியப் பிரயோசன மில்லாமையாலும் துவிதத்துக்கு வேதம் முக்கியப் பிரமாணமில்லை. ஆயினும் அந்த வேதம் முதலில் துவிதத்தை அநுவாதம் செய்து முடிவில் அத்துவிதத்தையே சொல்லும். ஸ்மிருதிபுராணம்சைவாகமம்தருக்கம்பாரதம் முதலாகச் சொல்லப் பட்ட நூல்கள் அத்துவிதத்தையே சொல்கின்றன. சில சுருதி அஞ்ஞான நிவிர்த்தி காரணமாகவும்சில சுருதி விதி மூலமாகவும் அத்துவிதத்தைக் கூறுகின்றன. சில சுருதி சீவர் சிவ சொரூபம் என்று சொல்லும். சீவத்தவம் தேகிக்கு இயற்கையா மென்பர் சிலர். இயற்கை யென்றால் தீயில் வெம்மை போலத் தோன்றும். ஆதலால் அது உண்மையல்ல. புளி முதலானவைகளால் தாம்பிரத்தி லுள்ள களிம்பு நீங்குதல் போல ஒரு சாதந்த்தால் துக்கம் முதலிய நீங்கு மென்பர். தாம்பிரத்தில் மறுபடியும் களிம்பு உண்டாகும். அது போலத் துக்கம் நீங்கினாற் போலத் தோன்றி மறுபடியும் உண்டாகும். ஆதலால் அதுவும் பொருந்தாது. இரும்பு இரசத்தால் பொன்னாவது போல யாதேனும் ஒரு சாதனத்தால் சீவன் சிவன் ஆவான் என்பார். பாலோடு கலந்த நீரைப் பாலென்பது போலவும்தங்கத்தொடு கலந்த வெள்ளியைத் தங்கமென்பது போலவும்இரசவீரியத்தாலும் அக்கினி சம்பந்தத்தாலும் இரும்பு பொன் னிறமாம். அது பொன்னா காது அந்தப் பொன்னிறம் அநித்தியமேயாம். ரசவீரியம் ஒழியும் போது அந்த நிறமும் மாறும். பிராந்தியினாலே இரும்பைப் பொன் என்று கருதுவார்கள். சூட்சும புத்தி யில்லாதவர்களுக்குப் பிராந்தி யென்பதுண்டு. அக்கினி சம்பந்தத்தால் தண்ணீர் வெம்மையாகக் காணப்பட்டாலும் அது நெருப்பு ஆகாது. சீவன் பரமசிவனைப்போற் காணப் பட்டாலும் அது சிவனாகாது. முத்தி தசையில் சீவன் சிவனுக்குச் சமானமாம். என்பார் சிலர்அதுவும் பொருந்தாது. ஏகதேசத்தில் சமனாம் என்றால் மிக்கபாச முள்ளவனும் உத்தமனே யாவான். எல்லா விஷயத்திலும் சமனா மென்றால் அவனைப் பரசிவனே யென்று சொல்லலாம். சிவசமானன் என்பது வேண்டுவ தில்லை. முத்தி காலத்தில் உண்டான சமத்துவம் மறுபடியும் ஒருகாலத்தில் போய்விடக் கூடும். ஆதலால் அந்த முத்தி அநித்தியமே யாம். ஆதலால் அந்தக்கரண வுபாதியாலே சீவனாய்த்தோன்றிய ஆன்மா பரம ஞானத்தாலே மாயை ஒழிந்து பூரண சிவமாகவே யிருப்பான்.

 

முனிவர்களே! சுத்திவெள்ளி சுத்தியை அறிதலினாலே ஒழிந்து சுத்திமாத்திரமா யிருப்பது போலச் சிவஞானத்தாலே ஆரோபிதமான பிரபஞ்ச மெல்லாம் சிவமாகவே யிருக்குமென்று வேதம் கூறுகின்றது. முத்தி காலத்தில் சகத்துக்கு அபாயம் உண்டாகும் என்பார். இப்படிச் சொல்வது பிராந்தியி னாலேயே. அது பாவவஸ்துவா யிருந்தால் அபாவமும் கூறலாம். ஜகம் பாவாபாவத்திற்கு வேறாயிருப்பதாலே அபாவம் கூறுதல் தகாதுஜகம் அதிஷ்டான சிவசொரூப மாகவே யிருக்கும். ஜகம் என்கிற பிராந்திக்குச் சிவமே அதிஷ்டானமாம். ஜகம் ஆரோபிதமே யென்று யுத்தி அளவைகளால் தீர்மானிக்கப் படும். இப்படியே வேதமும் சொல்கின்றன. நானும் சத்திய மாகவே சொல்வேன். ஏகவஸ்து என்று கூறுகிற வேதவாக்கியத்துக்கு விரோதமான வாக்கியங்கள் எல்லாம் சேஷமே கூறும். சிவம் ஒன்றின் சேஷமாகாதது போல வேதமும் மற்றொன்றின் சேஷமாகாது. அது உண்மையையே எடுத்துச் சொல்லும். பரசிவம் திருநீறு வேதம் இவற்றில் வெறுப்புண்டாகுதல் வேதவிரோதத்தை யுணராமை யாலேயே. விஷ்ணு முதலான தேவர்கள் மஹாதேவனுக்குச் சமான மென்று கூறுதலும்வேதத்துக்குச் சமானம் எடுத்துச் சொல்லுதலும் மஹா பாவிகளுக்கே யுரிய வையாம். புண்ணியான்மாக்கள் சிவ முதலாகச் சொல்லப் பட்ட வற்றில் சிரத்தை யுள்ளவர்களா யிருப்பார்கள். அவைகளைச் சர்வோத்தம மென்று கருதுவார்கள். அவர்களே பெரியோர் என்னப் படுவார்கள். இவற்றின் மகிமைகளை யெடுத்துச் சொல்ல என்னாலாகாது. 

 

சிலர் ஞான காண்டத்தைக் கரும காண்டத்தின் சேஷம் என்பரர்கள். கர்த்திருத்துவ போக் திருத்துவமே கருமங்களின் பலமாம். அவை கொஞ்சங் கூடக் கலவாத வஸ்துவையே ஞான காண்டம் கூறும். கருமம் அற்பமான பலனைத்தரும். ஞானமானது பிரகாசமான பூரணபலனைத்தரும். ஆதலால்ஞானத்தைக் கொடுக்கிற கருமகாண்டம் ஞான காண்டத்துக்கு வேறேயாம். ஞானமும் கரும சேஷமாகமாட்டாது. கருமஞானங்களுக்கு அதிகாரி பேதங்களுமுண்டு. கருமஞான முண்டானபோது பரமஞானம் தோன்றுகிறதில்லை. கருமம் ஒளியற்றது. ஞானம் ஒளிமயமான உண்மைப் பொருள். இவற்றிற்குப் பெயர்களும் வேறே. இவ்வித காரணங்களால் ஞானம் கரும சேஷபாவதில்லை. கரும காண்டமும் ஞானகாண்டத்துக்குச் சேஷமாவதில்லை. சாந்திதாந்திசிரவணம்மனனம்தியானம் என்பவை ஞான சாதனங்களாம். இருளை நீக்குவதற்குச் சூரியனுக்குச் சகாயம் வேண்டுதில்லை. அதுபோல அஞ்ஞானத்தை ஒழிப்பதற்காக ஞானத்துக்கு உதவி வேண்டுவதில்லை. கருமத்துக்குத் தர்மார்த்தகாமங்களே பலன்களாம். அதர்மத்தாலேதுன்பத்துக்கு இடமான நரகமும்தர்மத்தாலே பாதகங்களை ஒழிக்கிற சித்தசுத்தியும் உண்டாகும். சித்த சுத்தியினாலே பந்தத்தினாலாகும் குற்றங்கள் தோன்றும். அதுகாரணமாக விராகம் உண் டாகும். அதனாலே முத்தியிச்சை உண்டாகும். ஆதலால் கருமத்தை ஞான சேஷமெ ன்று கூறலாம். இப்படிக் கிரமமாய் அறிந்து கொள்ளாதவர்கள் வேதார்த்தத்தை வேறாகக்கருதி மோகத்தால் சமுசாரபந்தத்தில் விழுவார்கள். இந்த வேதாவிரோதம் சிவப்பிரசாதத்தினாலும்சிவபக்தியினாலும் விளங்கும். 

 

 

முப்பத்தொன்பதாவது அத்தியாயம்.

சர்வசித்திகர முரைத்தது.

 

சர்வசித்திகரமானது காயிகம்வாசகம்மானசம் என்பவற்றினாலே உண்டாகும். காயிகமானது திருநீறணிதல்ருத்திராட்சம் ரித்தல்சிவலிங்க பூசைசெய்தல்அடியார் பணிவிடை செய்த லாதிகளாம். வாசகமானது பிரணவ மந்திரம்அஜபாமந்திரம்மாதுருகாமந்திரம்பஞ்சாட்சரம்காயித்திரிமந்திரம் இவைகளை ஜபித்தல்வேதாகம புராணங்களைப் பாராயணம் செய்தல் முதலியவாம். மானசமானது சிவத்தியானம்சிவசக்தியான் உமாதேவி தியானம்வேதாந்த விசாரம்விராகம்பரசிவமே தெய்வமென்று கருதுதல்சிவ அத்துவிதபாவனை செய்தலாதியவாம். விஷ்ணு முதலான் தேவர்களுக்கும் உமாகாந்தனான பரசிவப்ரசாதத்தினாலேயே சத்தாசித்தி யுண்டானபடியால் இந்தச் சிவதருமங்களே சர்வசித்தி தருவனவாம். வேறு தருமங்கள் பயன் தருவதில்லை. பரமசிவன் ஒப்புயர்வற்று விளங்குவது போலச் சிவதருமங்களும் ஒப்புயர் வில்லாதவைகளாம்.

 

 

நாற்பதாவது அத்தியாயம்.

பாதக விசாரம் கூறியது.

 

பாதகம் பத்துவகைப்படும். அவை மஹாபாதகம். அதிபாதகம். பிராசங்கிகம்பாதகம்உபபாதகம்சாதிப்பிரஞ்சகரம்சங்கீர்ணகரணம்ஆத்திரீகரணம்லாகவம்பிரகீர்ணகம் என்பவைகளாம். கட்குடித்தல்பொன் திருட்டுபிராமணரைக்கொல்லுதல்தாயோடு சேர்தல்குருவுக்குத் தீங்கு செய்தல்இவை செய்பவரோடு பழகுதல் என்பன மாபாதகமாம். தன் தாய்க்குச் சமானமானஸ்திரீகள்மருமகள்புத்திரிதங்கை இவர்களைக் கூடுதல்தெய்வ விக்கிரகங்களைக் கெடுத்தல் இவை அதிபாதகமாம். அரசர் வணிகர் இவர்களை வதைத்தல்கர்ப்பஸ்திரீகளை வதைத்தல்சிநேகத்துரோகம் செய்தல்பொய்ச்சாட்சி சொல்லுதல்பிதா சகோதரன் மாமன் இவர்கள் பத்தினி மாரோடு கலத்தல்பூமியை அபகரித்தல்சரணமடைந்தவர்களைக் கொல்லுதல் இவை பிராசங்கிக பாதகமாம். தாயோடு கூடப்பிறந்தவள்தந்தையுடன் பிறந்தவள்அவள் புத்திரிஇவர்களோடு புணர்தல்விபூதிருத்திராட்சம் தரியாமைசங்கு சக்கரம் சூலம் முதலிய சின்னங்களை உடலில் தரித்தல் இவை பாதகமாம். உபபாதகம் முக்கியம் கௌணம் என்று இருவகையாம். முக்கியமாவது சுரோத்திரியன்ரித்துவிக்குஅத்தியா பகன்மித்திரன் இவர்கள் பத்தினிகளுடன் கூடல்சூத்திர ஸ்திரீசகோத்திர ஸ்திரீகள் இவர்களைச் சேர்தல்ருதுவாயிருக்கும் ஸ்திரீயைச் சேர்தல்பாஷண்டமதத்தை அநுஷ்டித்தல்துர்க்கை முதலிய தெய்வவடிவங்களைச் சிதைத்தல் இவைகளாம். கௌண மாவது வேதநிந்தைகுருநிந்தைவேதம் தாய் தந்தை அக்கினி சகோதரி மனைவி இவர்களைக் காப்பாற்றாமல் விடுதல்பொய்கூறல்அரசரை நிந்தித்தல்விலக்கப்பட்ட உணவுகளைப் புசித்தல்கூலி வாங்கிக்கொண்டு. வேதமோதுவித்தல்குருபணி விடை செய்யாமல் வேதார்த்தத்தை ஆராய்தல்பிராமணகுலத்தில் பிறந்தும் அரசனிடத்தில் உத்தியோகம் செய்தல்வேள்வியை நிந்தித்தல்குற்றமுள்ள நூல்களைக் கற்றல்தன்மனையாளை மதியாமலிருத்தல்நாஸ்திகனாகுதல்நாஸ்திகனாகுதல்கட்குடிக்கிற பெண்களை விரும்புதல் இவைகளாளாகும். பிராமணர்க ளுக்குத் துன்பஞ்செய்தல்மாம்சம் முதலியவற்றை மோந்துபார்த்தல்புருஷரைக் கலத்தல் இவை சாதிப் பிரஞ்சகாமாம். வனத்திலும் நாட்டிலுமுள்ள ஜந்துக்களைக் கொல்லுதல் சங்கீரணக்ரணமாம். நல்லொழுக்கமில்லாதவர்களுக்குத் தானங் கொடுத்தல்பொய்சொல்லி வாணிபம் செய்தல்வட்டி வாங்கி ஜீவித்தல்ஈனர்களுக்கு அவர்கள் செய்யத்தகாத கருமங்களைச்செய்வித்தல் இவைகள் ஆத்திரீகரணமாம். நீர் முதலான இடங்களில் வசிக்கிற பட்சிகளைக் கொல்லுதல்கள் சம்பந்தமான பொருள்களைப் புசித்தல் இவை லாகவ பாதகமாம். இப்பொழுது கூறிவந்தவைகளல் லாத மற்றைய பாவங்களெல்லாம் பிரகீர்ண பாதகமாம். 

 

இவற்றுள் குற்றமற்றவர்களைத் தண்டிப்பதுயுத்தத்தில் புறங்கொடுத்தல் இவை அரசர்களுக்கு மஹாபாதகமாம். நிறை முதலிய அளவில் மோசம் செய்தல்கள் ஊன் முதலிய இழிந்த பொருள்களை விற்பது வணிகருக்கு மஹாபாதகமாகும். தன் குலத்துக்கு மேற்பட்ட மூன்று குலமாதரைப் புணருதல்காராவின்பாலை அருந்துதல் இவை சூத்திரர்களுக்கு மஹாபாதகமாம். சங்கரஜாதிஜனங்களுக்குவேதியர் முதலான மேன்குலத்தாரை நிந்தித்தல் மஹாபாதகமாகும். இவ்வாறு கூறப்பட்ட பாவங்கள் எல் லாம் ஸ்திரீ புருஷர் இருவர்க்கும் சமமாகும். 

 

பெண்களுக்குக் கருவழித்தல்கணவனைக் கொல்லுதல்இழிந்தவர்மாணாக்கர்குரு இவர்களைப் புணர்வது ஸ்திரீகளுக்கு மஹா பாதகமாம். வேதம் ஆகமம் ஸ்மிருதி இவைகள் விதித்த கருமங்கள் அல்லாதவைகள் எல்லாம் மஹாபாதகங்களே யாகும். 

 

 

 

 

 

         

நாற்பத்தோராவது அத்தியாயம்.

பிராயச்சித்த முரைத்தது.

 

பிராயச்சித்தங்கள் எல்லாவற்றுள்ளும் வேதாந்த சிவஞானமே சிறந்ததாம். அது அறிந்து செய்த பாதகங்களையும் எரிக்கும். கர்த்திருவாதிகளை யுடையவர்களுக்கே கர்மபந்தம் உண்டாகும். சிவஞானிகளுக்கு இல்லையாம். இந்திரியம், பிராணன்தேகம்விஞ்ஞானம்சங்கற்பம்அந்தக்கரணங்கள்ஜாக்கிராதி. அவஸ்தைகள்இவற்றிற்குச் சாட்சியாய்ச் சின்மாத்திர சொரூபமா யுள்ள பூரணானந்தப் பரசிவம் தன் இருதய கமலத்தில் பிரகாசிக்கிறதைத் தரிசித்து மகிழ்கின்ற சிவஞானிக்கு ஒருபோதும் பந்தமில்லை. அவன் பந்தங்கடந்தவனே யாம். தேகாதிகளை நான் என்று எண்ணுகிறவனுக்கே பந்த முண்டாகும். குருவின் அனுக்கிரகத்தினாலே வேதாந்தப் பொருளைத் தெரிந்து கொண்டுஒருநாழி அந்தச் சிவஞானத்தில் நிலைத்து நின்றால் அறியாமல் செய்த பாதகங்கள் ஒழியும். ல நாள் நிலைத்து நின்றால் அறிந்து செய்த மஹா பாதங்கள் ஒழியும். ஆனந்தத் தாண்டவ மூர்த்தியின் பாதகமலங்களை ஒரு முகூர்த்த காலம் தியானித்தால் அறியாமல் செய்த பாவங்கள் தீரும். ஒரு இரவு தியானித்தால் அறிந்து செய்த பாவங்க ளெல்லாம் நீங்கும். உருத்திர மூர்த்தியை ஒருநாள் தியானித்தால் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். மூன்று நாள் சிந்தித்தால் அறிந்து செய்த் பாவங்கள் ஒழியும். விஷ்ணுவை மூன்று நாள் தியானித்தால் அறியாத் பாதகங்கள் அழியும். ஏழுநாள் சிந்தித்தால் அறிந்து செய்த பாவங்கள் தீரும். பிரமதேவரை ஏழு நாள் சிந்தித்தால் அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும். ஒருமாதம் தியானித்தால் அறிந்து செய்த பாவங்க ளொழியும். 

 

ஞான மந்திரத்தைப் பக்தியுடன் பதினாயிரம் உருச்செபித்தாலும்கழுத்தளவு ஜலத்தில் நின்றுகொண்டு அஜபா மந்திரத்தை இலட்சம் ஜபித்தாலும்நாபி அளவு ஜலத்தினின்று கொண்டு பஞ்சாட்சரத்தை இலட்சம் ஜபித்தாலும்கழுத்தளவு ஜலத்திலிருந்து வியாகிருதி மூன்றையும் இலட்சம் ஜபித்தாலும்மௌன விருதத் துடன் சாவித்ரி மந்திரத்தை இலட்சம் ஜபித்தாலும் சகல பாதகங்களு மெரிந்துபோம். வியாகிருதிகளுடனும் பிரணவத்துடனும் கூடின பிராணாயமத்தை நாள் ஒன்றுக்குப் பதினாறுத்தரமாக ஒருமாதகாலம் செய்தால் சிசுஹத்தி தோஷம் நீங்கும். பிச்சையெடுத் துண்டு பசுத்தொழுவத்திலிருந்து கொண்டு ஒருநாளுக்குப் பத்துத் தடவையாக                                  ஒரு வருஷ காலம் சூக்தங்களைச் செபித்தால் பசுவதை செய்த பாதகங்கள் நீங்கும். மூன்று நாள் உபவாசமிருந்து கழுத்தளவு தண்ணீரிலிருந்து கொண்டு மூன்று தரம் அகமருஷண மந்திரஜபம் செய்தால் பலநாட்களிற் செய்த பாவங்கள் எல்லாம் அழியும். பிச்சையெடுத்துப் புசித்துக்கொண்டு நாள் ஒன்றுக்கு எண்ணாயிரமாக ழு நாள் காயத்திரி ஜபம் செய்தாலும்மூன்று நாள் உபவாசமிருந்து கூசுமாண்ட மந்திரத்தால் அக்கினியில் நாற்பது நெய் ஆகுதிகொடுத்தாலும் கொடும் பாதகங்கள் தீரும். அஸிபவாமீய சூக்தத்தை அன்புடன் ஜபித்தால் சொர்ணத்தைத் திருடின பாவந்தீரும். புருஷசூக்தம்அவிஷ்யந்தியசூக்தம் இவைகளை விதிப்படி ஜபித்தால் குருமனைவி யைச் சேர்ந்த பாவம் தீரும். மூன்றுநாள் உபவாசமிருந்து புருஷசூக்த மந்திரத்தால் நெய்கொண்டு ஓமம் செய்தால் எல்லாப்பாவங்களும் ஒழியும். மூன்று நாள் உபவாசமிருந்து சரீரமுழுதும் நீறுபூசிக்கொண்டு சிவபெருமானைத் தியானித்தால் கள் உண்டபாவம் தீரும். “திரிபதை” என்கிற காயத்திரியை ஜலத்துக்குள் முழுகியிருந்து ஐந்து தரம் ஜபித்தாலும், “அவேதி” யெனும் மந்திரத்தையும், "யத்கிஞ்சீசதம்” என்ற மந்திரத்தையும் ஒரு வருஷம் ஜபித்தாலும் சகலபாவங்களும் நீங்கும். தரசமந்தீயசூக்கத்தைத் தவறாமல் ஜபித்தால் உண்ணத்தகாதவைகளை உண்ட பாவம் போம். இந்திர சூக்தத்தை ஆறுமாசம் ஜபித்தால் எவ்வகைப்பட்ட மஹாபாதகங்களும் தீரும். ஆயிரம் பிராணாயாமஞ் செய்தாலும் வியாகிருதிபிரணவம் சிரசுகளுடன் கூடின காயத்திரியைத் தண்ணீருக்குள் முழுகிக்கொண்டு மூன்றுதரம் ஜபித்து அம்மந்திரத்தி னாலே ஆயிரம் எள் ஓமஞ்செய்தாலும் மஹாபா தகங்கள் எல்லாம் நீங்கும். தினந்தோறும் பிராமமுகூர்த்தத்தில் மஹாதேவனுடைய நாமசங் கீர்த்தனம் செய்தா லும்கங்கைகாசிவேதம்சிவம்திருநீறு இவ்வைந்தையும் உதய காலத்தில் ஸ்தோத்திரம் செய்தாலும் பாதகங்களும் விலகிப்போம். கிரகணம்அயம்விதிபாதம்இந்தத் தினங்களில் சிவ சங்கீர்த்தனம் செய்தாலும்பூரணைஅபரபட்ச அட்டமிசதுர்த்தசிஞாயிற்றுக்கிழமை திருவாதிரை இந்நாட்களில் சிவ சிந்தனையுடன் பிராமணர்களுக்கு அன்னம் படைத்தாலும் மஹா பாதகமெல்லாந் தீரும். மஹாமக தினத்தில் சிவ பெருமானுக்கு நெய் அபிஷேகம் செய்தாலும்மாசிமாசம் அபரபட்ச சதுர்த்தசியில் பக்தியுடன் வில்வத்தால் பூசித்தாலும்பங்குனி மாசம் ஆதிவாரத்தில் பலாச மலரால் அர்ச்சித் தாலும்சித்திரை மாசம் சித்திரை நக்ஷத்திரத்தில் சுகந்த புஷ்பங்களால் சிவபிரானை அர்ச்சித்தாலும்மஹாபாதககங்க ளெல்லாம் ஒழியும். கங்காநதியில் ஸ்நானம் செய்து விசுவநாதரைப் பூசித்தாலும்சிங்கராசியில் குரு இருக்கிறபோது கோதாவிரியில் ஸ்நானம் செய்தாலும்மாசி மகத்தில் சொர்ணமுகி நதியில் ஸ்நானம் செய்தாலும்சோமவாரம் அமாவாசை ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி இவைகளில் காவேரி நதியில் ஸ்நானம் செய்தாலும் சகல பாதகங்களும் விலகும். கந்த மாதனத்தில் க்ஷிப்பிரா தியில் நீராடிஇராமேசு வரத்தைத் தரிசித்துப்பிராமணர் களுக்கு அன்னதானம் செய்தாலும்பத்து நாள் சிற்சபேசனைத் தரிசித்தாலும்சகல பாதகங்களும் ஒழியும். சகலபாவங்களுக்கும் பிராயச்சித்தம் சந்நியாசமே. அது நாலு வகையாகும். பாதகங்களைச் செய்தவன் பிராணனை விடுதலே சரியான பிராயச்சித்தம். சந்நியாசியாய் விட்டால் பிராணனை விடவேண்டுவ தில்லை. அதனால் சிவானுக் கிரகத்தைப் பெற்று அவன் முத்தியை அடைவான். 

 

முனிவர்களே! பல பல பேச்சு என்னத்திற்குசிவஞானம்சிவத் தியானம்சிவநாம கீர்த்தனம்விபூதி ருத்திராட்சம் புனைதல் வைகளால் நீங்காத பாதகங்கள் ஒன்றும் கிடையாது. சகல பாவங்களும் இவ்வைந்தாலும் தகிக்கப் பட்டுப்போம். இவை வேதங்கூறிய பிராயச் சித்தங்களாம். இதை இரகசியமான தென்று உணர்ந்து கொள்ளுங்கள்

 

 

 

நாற்பத்திரண்டாவது அத்தியாயம்.

சிவக்ஷேத்திரங்களைக் கூறியது.

 

முனிவர்களே! பூலோகத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்விய க்ஷேத்திரங்களையும் அந்தந்த க்ஷேத்திரத்திலுள்ள பரமசிவன் உமாதேவியார் இவர்களுடைய திருநாமங்களையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.

 

அமரேசுவர மென்று ஒரு திருப்பதியுண்டு. அதில் எழுந்தருளிய சிவ பெருமானுக்கு ஓங்காரேசுவரர் என்றுபேர். உமாதேவியாருக்குச் சண்டிகேசுவரி என்று பேர். பிரபாச க்ஷேத்திரத்தில் சிவ பெருமானுக்குச் சோமநாதர்தேவியார் யுஷ்கரேட் சணி. நைமி சாரணியத்தில் சிவ பெருமானுக்குத் தேவேசுவன் என்று பேர். தேவியா ருக்கு இலிங்கதாரிணியென்று பேர். புஷ்கரம் என்று ஒரு க்ஷேத்திரமுண்டு. அதில் எழுந்தருளிய சிவபெருமான் பேர் இரஜோகந்தியீசன்! தேவியார் புருகூதைஆடாடி நகரத்திலீசன்பேர் ஆடாடீசுவரன்தேவியார் இரதி. சண்டமுண்டி யென்னும் தலத்தில் சிவபெருமான் பேர் தண்டீசுவரன். அம்மையார் தண்டினி. பாரபூதி க்ஷேத்திரத்தில் ஈசன் பாரபூதிகன்அம்மையார் பூதி. நாகுலேசத்தில் ஈசன் பேர் நகுலேசன்! தேவியார் நகுலை. அரிச்சந்திர தலத்தில் ஈசன்பேர் ஹரன்தேவியார் சண்டிகை. சீபருவதத்தில் ஈசன்பேர் திரிபுராந்தகன்தேவியார் பேர் மாயாவி. செபேசுவரத்தி லீசன் பேர் திரிசூலிகன்அம்மையார் திரிசூலினி. ஆமிராதகேசுவரத்தில் ஈசன் பேர் சூட்சுமேசன்அம்மை பெயர் சூட்சுமைமகாளக்ஷேத்திரத்தில் ஈசன் பேர் மாகாளன் அம்மைபேர் சங்கரி. மத்தியம நகரில் ஈசன்பேர் சர்வன்அம்மையார் சர்வாணி. கேதார பர்வதத்தி லெழுந்தருளிய பரசிவன் பேர் ஈசானன் தேவியார் பேர் மார்க்கதாயினி. பயிரவத் தலத்தில் ஈசன் பைரவன்தேவியார் பைரவிகயையில் ஈசன் பிரபிதாமகேசன். அம்மையார் மங்களேசுவரி. குரு க்ஷேத்திரத்தில் ஈசன் ஸ்தாணு. தேவியார் ஸ்தாணுப்பிரியை. விமலேசுவரத்தில் ஈசன் விசுவேசன்.அம்மை விசுவேசுவரி. கனகலத் தலத்தில் ஈசன் உக்கிரன். அம்மை உக்கிரேசுவரி. அட்ட காசத்தில் ஈசன் மஹாநந்தேசன். தேவி மஹா நந்தேசுவரி. இத்தலத்தில் தேவியார்கையில் கரும்பு வில்லும் புஷ்பபாணமும் தரித்திருப்பார். மஹேந்திர க்ஷேத்திரத்தில் ஈசன் மஹாநந்தகேசன்தேவியார் மஹாநந்தகேசுவரி. பீம க்ஷேத்திரத்தில் ஈசன் பீமேசுரன்அம்பை பீமேசுவரி. வத்திராபத க்ஷேத்திரத்தில் ஈசன் பேர் பவன்அம்மை பவானிஅர்த்தகோடியில் ஈசன் யோகீசுவரன்அம்மை உருத்திராணி. அவிமுக்த (காசி) க்ஷேத்திரத்தில் ஈசன் மஹா தேவன் (விசுவநாதர் என்பது பிரசித்தம்)தேவியார் விசாலாட்சிமஹாலயஸ்தலத்தில் ஈசன் பேர் உருத்திரன்தேவியார் மஹாபாகை. கோகருணத்தில் மஹாபலேசன்தேவியார் பத்திரகரணிகை. பத்திரகரண நகரில் ஈசன் பேர் சிவன்அம்மைபேர் பத்திரை. சுவர்ணாட்சத்தில் ஈசன் பேர் ஸஹஸராக்ஷேசுவரன்அம்மையார் உத்பலாட்சி. ஸ்தாணு க்ஷேத்திரத்தில் ஈசன் ஸ்தாணு வீசுவரன் அம்மை ஸ்தாணு வீசுவரிகமலால யத்தில் ஈசன் கமலேசுவரன்அம்மை கமலே சுவரி. சாகண்டல நகரில் ஈசன் கபர்த்தீசு வரன்தேவியார் பிரசண்டேசுவரி. குரண்டஸ் தலத்தில் ஈசன் ஊர்த்வரேதஸேசுவரன்தேவியார் திரிசந்தியை. மாகோட ஸ்தலத்தில் ஈசன் மஹோத்கடன்தேவி மகுடேசுவரி. மண்டலேசுவர க்ஷேத்திரத்தில் ஈசன் ஸ்ரீகண்டேசுவரன்தேவியார் சாண்டகீசுவரி. காலஞ்சரத்தில் ஈசன் நீலகண்டேசுவரன்தேவியார் காளி. சங்குகர்ண நகரில் ஈசன் மஹாதேஜசேசன்தேவியார் தொனி. தூலேசநகரில் ஈசன் தூலேசன்அம்மை தூலேசுவரி. வியாக்கிர புர (சிதம்பா) த்தில் ஈசன் சபாபதிதேவியார் சபாபதீசுவரி (சிவகாமி என்பது பிரசித்தம்.)

 

இப்படிப்பட்ட மகிமை பொருந்திய க்ஷேத்திரங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து இருமுதுகுரவர் பெயரால் ஈசனை அருச்சித்துத் தரிசித்தால் சகல பாபங்களும் ஒழியும். இந்த ஸ்தலங்கள் எல்லாவற்றுள்ளும் வியாக்கிரபுரம் சிறந்தது. அந்த ஸ்தலத்தில் சிவகங்கைத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்துசபாநாதரைத் தரிசித்துப் பஞ்சாட்சரத்தை ஆயிரத்தெட்டுத் தரம் ஜபித்தால் சகல பாபங்களும் ஒழியும். சித்திரை  திருஆதிரைபருவங்களிலும்வைகாசி மாசம் அபரபட்ச அட்டமியிலும்ஆடி மாசம் அபரபட்ச சதுர்த்தசியிலும்ஆவணி மாசம் பூரணையிலும்புரட்டாசி மாசம் ஜன்ம நட்சத்திரம்ஞாயிற்றுக் கிழமையிலும்ஐப்பசி மாசம் உத்திர நட்சத்திரத்திலும்கார்த்திகை மாசம் கார்த்திகையிலும்மார்கழி மாசம் திருவாதிரையிலும்தை மாசம் பூசத்திலும்மாசி மகத்திலும்பங்குனி உத்திரத்திலும்விதிப்படி சிவகங்கையில் நீராடித் திருநீறு தரித்துச் சிதம்பரநாதரைத் தரிசித்தால் சகல பாபங்களும் அழியும். அந்த ஸ்தலத்தில் வேதியர்களுக்கும் ஞானிகளுக்கும் வீடுகளும் மடங்களும் கட்டிக் கொடுத்துப் போஜன மும் கொடுத்தால் சகல பாபங்களி னின்றும் விடுபட்டு முத்தியும் அடைவார்கள். வேதங்களால் புகழப்பட்ட அந்த ஸ்தலத்துக்கு ஒப்பானதொன்றுமில்லை. அந்தஸ்தலத் தில் வசிப்பதே சிறந்தது. நிறைந்த புண்ணியமுடையவர்களுக்கே அந்த ஸ்தலவாசம் கிடைக்கும் என்று அறிந்துகொள்ளுங்கள். 

 

 

நாற்பத்து மூன்றவது அத்தியாயம்.

திரவியசுத்தி கூறியது.

 

பொருள் ஆத்மா அநாத்மா என்று இரண்டு வகைப்படும். ஆத்மாவாவது சத்து சித்து ஆனந்த சொரூபம் உடையதென்று கூறப்படுவதாம். சுபம்சுத்தம்சத்து என்று கூறப்பட்டவற்றுள் சத்து அசுத்துடன் சம்பந்தப் படாமையால் சுயமே சுத்தமாம். ஆகையால் ஆத்மாவுக்கு அசுத்தம் கிடையாது. மாயா சம்பந்தத்தால் அசுத்தமுள்ளது போலத் தோன்றும். கருமத்தால் ஆத்மா சுத்தமடையாது. கருமத்தால் பாவமொழிந்து மெய்ஞ் ஞானம் உதிக்கும்போது ஆத்மா சுத்தமாகவே பிரகாசிக்கும். அநாத்மாவும் ஆத்தியாத்மீகம்ஆதிபௌதிகமென்று இருவகைப்படும். அத்தியாத்மீகமாவது தேகேந் திரியாதிகள். மற்றது பூதபௌதிகமாம். நற்கர்மம் செய்வதாலும்சிவதியானத்தாலும்ஜீவவதம் செய்யாமையாலும்உடலுக்குச் சுத்தியுண்டாகும். சிவதியானத்தால் இந்திரியங்களுக்கும் பிராணனுக்கும் சுத்தியுண்டாம். தேகாதி சுத்தியால் நான் சுத்தனானேன் என்று கருதுதல் வியாவகாரிக சுத்தியாம். சிவபாவனையால் எல்லாம் சுத்தியாகும். பௌதிகப் பொருள்களுக்கு அசுத்தமுண்டு. அவற்றிற்குத்தான் சுத்தி கூற வேண்டும். 

சுட்ட மண்பாண்டங்களைச் சண்டாளர் முதலானவர் தொட்டால் அதனை உடனே எறிந்து விடவேண்டும். சுடாத பச்சை மண் பாண்டமானால் நீரால் கழுவித் தர்ப்பை ஜலத்தால் புரோட்சணம் செய்தால் சுத்தியாம். ஆண்டபின் மண்பாண்டத்தைச் சூத்திரர் முதலானவர் தொட்டால் எறிந்து விடவேண்டும். அதற்கு முன்பானால் நெருப்பில் காட்டித் தர்ப்பை ஜலத்தால் புரோட்சித்தால் சுத்தியாம். சுட்டபாண்டம் மலசம்பந்தப் பட்டால் எறிந்து விடவேண்டும். சுடாத பாண்டமானால்தர்ப்பை நீரால் சுத்தி செய்து தீயிலிட்டுச் சுட்டால் சுத்தியாம். யாகத்துக்குரிய மரபாத்திரத்தை ருதுவான ஸ்திரீயாதி யோர் தொட்டால்அது பழையதானால் எறிந்துவிடவேண்டும். புதியதானால் தர்ப்பை நீரால் சுத்தி செய்து தீ முன் காட்டினால் சுத்தியாம். பதக்கு அரிசி சமைத்த சோற்றைத் தாழ்ந்தவர் தொட்டாலும் பார்த்தாலும் ஆபத்துக் காலமானால் குற்றமில்லை. நீராலும் தர்ப்பை ஜலத்தாலும் சுத்திசெய்ய வேண்டும். பதக்குக்குக் குறைந்திருந்தால் எறிந்து விடவேண்டும். பக்குவமான தானியம் ஒரு குடத்துக்கு மேற்பட்டதை ஈனர் தொட்டால் தர்ப்பை நீரால் புரோட்சிக்க வேண்டும். ஒரு பாரத்துக்குக் குறைந்திருக்க ஈனர் தொட்டால் எறிந்து விடவேண்டும். ஒரு பாரம் முதல் இரண்டு பாரம் வரையிலிருந் தால் நீரால் கழுவிச் சுத்திசெய்யலாம். இரண்டு பாரத்துக்கு மேற்பட்டால் தர்ப்பை நீரால் சுத்தி செய்க. ஆறுபார வரிசிச் சோற்றைப் பூத்தமங்கையர் சண்டாளர் தொட்டால் கழுவவேண்டும். அதற்கு மேற்பட்டால் தர்ப்பை நீரால் சுத்தியாம். உடுத்த வஸ்திரத் தைச் சண்டாளர் தொட்டால் நனைத்துத் தோய்த்தால் சுத்தியாம். புதியவஸ்திரம் கம்பளம் முதலானவற்றைச் சண்டாளர் தொட்டால் தர்ப்பை நீரைப் புரோட்சிக்கச் சுத்தியாம். அரிசி முதலிய தானியங்கள்வெல்லம் பால் தயிர் இவற்றைக் காக்கை முதலிய பட்சிகள் தொட்டால் தொட்ட விடத்தில் உள்ளதை எடுத்தெறிந்து விட்டுத் தர்ப்பை நீரால் புரோட்சிக்கச் சுத்தியாம். எண்ணெய் நெய் இவற்றிற்கும் அதுவே சுத்தி. அருமையான பொருள் கிடைத்தால் அதைப் புரோட்சணம் செய்தே வாங்க வேண்டும். நகம்மயிர்புழுக்கள் முதலானவை விழுந்தால் அவ்விடத்திலுள்ளதை யெறிந்து விட்டுத் தர்ப்பை நீரால் சுத்தி செய்ய வேண்டும். மாவினால் செய்யப்பட்ட பண்டங்க ளை விலைக்கு வாங்கினால் நெய்யினால் சுத்திசெய்து புசிக்கலாம். உலோகபாத்திரங் கள் கள் சம்பந்தப்பட்டால் தீயில் காட்டினால் சுத்தியாம். ஈனர்கள் தொட்டால் தேய்த்துக் கழுவச் சுத்தியாம். தாம்பிரம் புளியிட்டுத் தேய்த்தால் சுத்தியாம். உலோக பாத்திரங்கள் எல்லாம் விபூதியாலும்மண்ணினாலும் நீரினாலுகம் சுத்தியாம். பூத்த ஸ்திரீகள் தொட்ட வெண்கலப்பாத்திரம் மண்ணினால் தேய்த்துக் கழுவினால் சுத்தி யாம். தீர்த்த யாத்திரைசில உற்சவகாலம்இவைகளில் தாழ்ந்தவர்கள் தொட்டாலும் குற்றமில்லை. அனுலோம் பிரதிலோமர்களால் தொடப்பட்ட பாத்திரத்தை நீரினால் நாற்பது தரம் கழுவினால் சுத்தியாம். கற்பாத்திரங்களை நீற்றினால் இருபத்தொரு தடவை தேய்த்துக் கழுவச் சுத்தியாம். சங்கு முதலியவற்றைச் சாம்பலில் தேய்த்துக் கழுவச் சுத்தியாகும். திரவியங்க ளெல்லாம் காரண ரூபமாகவும்அந்தக்காரணம் சிவரூபமாம் எனவும் உணர்ந்து கொண்ட சிவஞானிகளுக்குஅசுத்தமென்பதே யில்லை. 

 

 

 

நாற்பத்து நாலாவது அத்தியாயம்.

புசிக்கத்தகாத வஸ்துக்களைக் கூறியது.

 

ஆகாரசுத்தியினாலேயே சித்தசுத்தி யுண்டாகும். அதனால் சிவஞானம் உண்டாகும். அப்போது மோகம் முதலிய பந்தங்கள் நீங்கும். ஆகையால் ஆகாரசுத்தி யில்லா விட்டால் இவைகள் உண்டாகா. ஆனபடியால் தேவர்களால் விலக்கப்பட்டவை களைப் புசிக்காமல் விலக்கிவிடவேண்டும். இதுவும் கருமிகளுக்கே யல்லாமல் ஞானிகளுக்கு இல்லை. சிவஞானி உலகமெல்லா. வற்றையும் சிவமாகவே காண்கிற படியால் அவர்கள் புசிக்கத் தகாதது ஒன்றுமில்லை. மாயையின் வசப்பட்டவர்களுக்குச் சொற்பன உலகம் எப்படியோ அப்படியே ஞானிகளுக்கு ஜாக்கிர உலகம் சம்பந்தப் படுவதில்லை. ஜாக்கிர உலகமெல்லாம் ஞானிக்குத் தானாகவே தோன்றுகிறபடியால் அவன் புசிக்கத்தகாதது ஒன்று மில்லை. உள்ளதென்று கூறப்படுகிற சத்தையானது சிவசொரூபமாம். சத்தைக்கு வேறானவை யாவும் சூனியமாம். ஆகையினால் ஞானிக்கு 

 வேறான போக்கியப் பதார்த்த முண்டென்பது கூடாது. மாயைகூட ஞானிக்குச் சிவமாகவே தோன்றும். ஆகையால் ஞானிகளுக்கு விலக்குகள் கிடையாது. ஆத்மஞான மில்லாத வேதியர்களுக்காகவே இது சொல்லப்பட்டது. 

 

கஞ்சம்வெண்காயம்உள்ளிப் பூண்டுமுள்கால் கோழிகரியபன்றிபசுசேவல்கோழி முட்டை போன்ற கத்தரிக்காய்முருங்கைக்காய்மண்ணுப்புபாடீனம்இராசிங்கம்உரோகிதம் என்ற மீன்கள்கொக்குகுயில்மற்றும் பல நகரப் பறவைகள்இந்திரியம்மலஜலம்பன்றிகள் சம்பந்தமான பொருள்கள் பழஞ்சோறுமுயல்காகம்நாய்பூனைபல்லிபாம்புகீரி இவைகள் தொட்டப் பதார்த்தங்கள்வேதபாகியன் தொட்ட பொருள்கள்பிளப்புள்ள குளம்பு இல்லாத மிருகம்மாம்சபட்சணியான மிருகம்ஊர்க்குருவிஅன்னம்சக்கரவாகம்சாரசம்கழுகுகிளிநாகணவாய்ப் பறவைகுதிரைதவளைமனிதர்யானைஐந்து நகமுள்ள மிருகம்செம்மறியாடுவெள்ளாடுகள் சம்பந்தப்பட்ட மீன்நெய்பால்பனங்கள்தென்னங்கள், பூமியில் விழாத மழைநீர்கன்றை யீன்று சூதகம் நீங்காமலிருக்கிற பசுவின் பால்கழுதைஎருமை அல்லாத மிருகங்களின் பால்கன்றில்லாத பசுவின்பால்கோவாதியான மிருகங்கள் மிதித்த பால்மோந்த பொருள்கள்அனுலோப் பிரதிலோமர்கள் தொட்ட பொருள்கள்இவைகள் எல்லாவற்றையும் பிராமணர்கள் புசிக்கப்படாது. இவற்றை உண்டால் நரகில் விழுவார்கள். க்ஷத்திரியர் முதலானவர்கள் இவற்றுள் சிலவற்றைப் புசிக்கலாம். புசியாமலிருத்தலே நல்லது. சூத்திரர்களுக்கு இந்த நியமமில்லை. பிராமணர்களுக்குரிய இந்த விதியைச் சூத்திரர்களும் கொள்வது நல்லது. அற்ப ஜந்துக்களைக்கூடக் கொல்லாமலிருப்பதே நல்லது. அதுவே பெரியதவமுமாகும். மாம்சாதிகளை விலக்கிச் சுத்தமான உணவு கொள்வதினாலேயே ஞானமுண்டாகு மென்று வேதங் கூறுதின்றது. வேதாந்தத்தினாலே மெய்ஞ்ஞானம் உண்டாகுமேயன்றி வேறெதனாலும் உண்டாக மாட்டாதுபதினான்குவித்தைகளையும் சொல்வது வேதம். ஆதலால் வேதம் பூரணமாம். பூரணமாகிய வேதமே பிரமாணமாம். வேதத்துக்கு விரோத மில்லாத ஆகமங்களினாலும் ஞான முண்டாகு மென்று வேதங்கூறுகின்றது. 

 

 

நாற்பத்தைந்தாவது அத்தியாயம்.

மரணத்தை யறியும் ஆறு கூறியது.

 

      துருவ நட்சத்திரம் தெரியாமற் போனாலும்சந்திரனுடைய சாயை தெரியாமற் போனாலும்நட்சத்திர வீதி தோன்றாமற் போனாலும்அருந்ததி தெரியாதிருந்தாலும்ஒரு வருஷத்தில் மரணம் வரும். வெள்ளி போலவும் பொன்போலவும்நீராகவும் மலம் வெளிப்பட்டும்இப்படி வாந்தி யுண்டானாலும்நித்திரையில் அடிக்கடி துர்க்கனவு கண்டாலும்பத்து மாதத்தில் மரணம் வரும். பூதப்பிரேத பைசாசங்கள்கந்தர்வ நகரம் பொன்மரம் இவற்றுள் எதையாவது கனவில்கண்டால் அவன் ஒன்பது மாதங்களில் மரணமடைவான். யாதொரு காரணமு மில்லாமல் சரீரம் பெருத்தாலும்அல்லது இளைத்தாலும்மிகக் கறுத்தாலும் அவன் எட்டு மாசத்தில் மரணம் அடைவான். சேற்றிலாவது புழுதியிலாவது கால் அகப்பட்டுக்கொண்டு ஒடிந்தது போலக் கனவு கண்டால் ஏழு மாதங்களில் மடிவான். காக்கையாவதுகழுகாவதுபுறாவாவது தலைமேல் வந்து உட்கார்ந்தால் ஆறுமாதங்களில் இறப்பான். தன் நிழல் விகாரமாகக் காணப்பட்டாலும்நடந்து போகும்போது பெருங்காற்றடிக்க அதன் வழியாகக் காக்கை தொடர்ந்து வந்தாலும்நாலுமாதம் அல்லது ஐந்து மாதங்களில் மரணம் அடைவான். மேக மில்லாத போது ஆகாயத்தில் தனக்கு வலப்புறமாக மின்னல் உண்டானாலும்இந்திரதனுசு தோன்றினாலும்ஒருமாதம்இரண்டு மாதங்களில் மரணமடைவான். கண்ணாடி தண்ணீர் ஒருவருடைய கண்ணிலாவதுதன் நிழல் சிரசில்லாமல் முண்டமாகத் தோன்றினால்ஒருமாதத்தில் மரணம் அடைவான். வேம்பின் வாசனை வாசனை பிணவாசனைகுஷ்டவாசனை இவற்றுள் ஏதாவது ஒரு வாசனை தன் தேகத்தில் தோன்றினால்பதினைந்து நாட்களில் மரணமடைவான். இருதயம் உலர்ந்து சிரசில் புகை தோன்றுவது போலக் கண்டாலும்எப்போதும் சரீரத்தில் நடுக்க முண்டானாலும்பத்து நாளில் மரணமடைவான். குரங்கு கழுதைகள் கட்டின தேரிலாவதுகரியவஸ்திரம் உடுத்த ஸ்திரீகளுடன் கூடியாவதுகுதிரையின் மேல் ஏறிக்கொண்டாவது தலையை விரித்து ஆட்டிக்கொண்டாவதுதென் திசை நோக்கிப் போகக் கனவு கண்டால் சீக்கிரத்தில் மரணமடைவான். தன் வஸ்திரம் கிழியக் கனவு கண்டாலும்தன் வஸ்திரம் கருநிறமாகக் கண்டாலும்தான் நிர்வாணமாகக் கண்டாலும்தன் வீட்டில் யாராவது சாவார்கள். பகற்காலத்தில் நட்சத்திரம்இந்திரதனுசுசந்திரன்சூரியன்இவற்றில் கருநிறம்செந்நிறம்தருகிறம்செந்நிறம்உண்டாகக் கண்டாலும்சந்திர சூரிய மண்டலங்களில் துளைஆகாயத்தில் சிவந்த மாலை யிவைகளைக் கண்டாலும் உடனே மரணமடைவான். சுடுகாட்டுச் சாம்பல்புழுதிமயிர்க் குவியல்ஜலமில்லாமல் வற்றிக் காய்ந்தநதி யிவைகளில் எதையாவது கனவில் கண்டால் சீக்கித்தில் மரணமடைவான். கறுத்த நிறமுடையவர்களாய்மொட் டைத்தலை யுடையவர்களா யுள்ளவர்கள் கல்லால் எறிந்து வருத்தப் படுத்தக் கனாக் கண்டால் சீக்கிரத்தில் மரணமடைவான். சூரியன் உதிக்கிறகாலத்தில் சூரியனுக்கு எதிர்முகமாக நரிகள் நின்று ஊளையிட்டால் சீக்கிரத்தில் மரணமடைவான். அடிக்கடிநடுக்கம்அஞ்ஞானம்பயம்கோபம் இவற்றில் எது உண்டானாலும் வீட்டி லுள்ளவர் கள் சாவார்கள். நாக்கு உலர்ந்தாலும்பல்கறுத்தாலும்இருதயம் கொதித்தாலும்அவன் வீட்டிலுள்ளவர்களாவது சீக்கிரத்தில் மடிவார்கள். காதுகண்இவைகள் கீழ்மேலாக மாறினாலும்மூக்கு விகாரமானாலும்கன்னம் நாக்கு இவைகள் கறுத்தாலும்கன்னம் சிவந்து முகம் விகாரமானாலும் சீக்கிரத்தில் மடிவான். குருடானாற் போலவும்செவிடனாற்போலவும்கிணற்றுக்குள் விழுந்தாற்போலவுங் கனாக்கண்டாலும்மேல் பார்வை யுண்டானாலும்சரீரம் குளிர்ச்சி அடைந்தாலும்சிறுநீர் நெருப்.புப் போல உஷ்ணமாயிருந்தாலும்சீக்கிரத்தில் மடிவான். நாபிஇதயம்துவாரம் உண்டாகக் கண்டாலும்கனவில் ஒருவன் வந்து அடிக்கக்கண்டாலும் சீக்கிரத்தில் சாவான். தன்னுடைய வெண்மையான வஸ்திரத்தில் கருநிறமுண்டனதாகக் கனவு கண்டாலும் உடனே மரணம் வரும். 

 

இப்படிப்பட்ட பயங்கரமான குறிகள் உண்டா கும்பொழுதுஅச்சத்தை விட்டுமோகாதிகளை ஒழித்துஞானமுண்டாகும் படியான நன்னெறியி லொழுகிஅம்மையுடன் கூடின தேவனை நினைந்துகாசி நகரத்துக்குப் போய்க்கங்கா நதியில் ஸ்நானஞ் செய்துவிசுவநாதனைத் தொழ வேண்டும். அல்லது சோமநாத க்ஷேத்திரம் போய்ச் சோமதீர்த்தத்திலாவதுதீர்த்தத்திலாவது முழுகிச் சோமநாதனைத் தொழ வேண்டும். ஸ்ரீசைலம்காளத்திகோபர்வதம்விருத்தாசலம்இராமேசுவரம்மதுரைவேதாரணியம்திருவாரூர்கெஜாரணியம், (திருவானைக்கா)இராமேசுவரம்கும்பகோணம்திருவிடைமருதூர்அக்கினீசுவரம்ஆம்பிரவனம்சீர்காழிதிருவெண் காடு இவற்றில் ஏதாவது ஒன்றில் போய்ச்சேர்ந்து விதிப்படி சிவபிரானை ஆராதிக்க வேண்டும். சிதம்பரம் மகாவிசேஷமானது. சிதம்பர நாதனைத் தரிசித்தவர்கள் நிச்சயமாய் முத்தி பெறுவார்கள். அந்தத் தலத்துக்கு ஒப்பு உயர்வு கிடையாது. அந்தத்தலத்தில் ஆநந்த நடனத்தைத் தரிசித்துச் சரீரத்தை விட்டவர்கள் முத்தி அடைவது சத்தியம். காசியைவிட இது சிறந்தது. 

 

 

நாற்பத் தாறவது அத்தியாயம்.

பாவபரிபாகங் கூறியது.

 

முனீந்திரர்களே! பிரமஹத்திசெய்தவன் க்ஷயரோகியாய் ஜனிப்பான். கட்குடித்தவ னுக்குத் தந்த ரோகமுண்டாகும். சொர்ணத்தைக் திருடினவன் நகரோகியா யிருப்பன். குருபாரியையை விரும்பினவன் தோல் முற்றும் கெடுதலான வியாதியை யுடையவ னாவான். குருவை நிந்தித்தவன் கை கால் முடம்குருடுசெவிடுமுதலிய வியாதிகளு முள்ளவ னாவன். பரநிந்தை செய்கிறவன் கழுதை யாவன். குரு மனம் வருந்தும்படி அவமானம் செய்தவன் பித்தம் பிடித்தவனாவன். குரு கட்டளையை மீறினவன் பலந்தர நோயுடையவ னாவன். குரு திருவடிப் பணிவிடை செய்யாதவன் மந்த வறிவுள்ளவனாய் நிந்தை யடைவான். விஷ்ணுவை நிந்தித்தவன் ஒணானாய்ப் பிறப்பான். வேதம்வேதாந்தம்வேத ஞானம் இவைகளை நிந்தித்தவன் பறையனாய்ப் பிறப்பான். பூத்த பெண்களைச் சேர்ந்தவனும் பறையனாவன். வீட்டில் தீயிட்டவன்பசுவதை செய்தவன்விஷமிட்டவன் இவர்கள் குஷ்ட வியாதி யுள்ளவராவார்கள். வெள்ளியைத் திருடினவன் காச நோயுடையவ னாவன். இகழப்பட்ட காரியங்களைச் செய்தவனும்பொய்ச்சாட்சி சொன்னவனும்இவர்களுக்கு யுக்தி சொல்லிக் கொடுத்தவ னும்சகாயம் செய்தவனும் புழுச் சொரியும்படியான வாய்நோ யுடையவ ராவார்கள். மாதாபிதாக்களையும் மனைவியையும் காப்பாற்றாதவன் கண்ணோ யுடையவனாவன்தருகிறேனென்று சொல்லிப் பிறகு கொடாமலிருந்தவன் அற்பாயுசுடையவனாவன். அழகிய பத்தினிகள் பலரிருக்கையில்அவர்களுள் ஒருத்திமேல் மாத்திரம் பிரியம் வைத்தவன் நபும்ஸகய்ச் சனிப்பான். ஒருவன் புஜிக்கிற அன்னத்தை அபகரித்தவன் பசியல்லாமலும்நாக்கில் நோயுடையவனாகவும் பிறப்பான். வந்த விருந்து பசித்திருக் கையில் தான் புசித்தவனும்பலபேர்களுடன் புசிக்கையில் பதார்த்தங்களையெல்லாம் தானே புசிப்பவனும்கண்டமாலை யுடையவர்களாவார்கள். பஞ்சமஹா யக்ஞங்களைச் செய்யாதவன் ஊர்ப்பன்றியாகப் பிறப்பான். பருவ காலத்திலே (அமாவாசை பூரணைகளில்) பெண்போகம் அருந்தினவனும்அதிதிகளை உபசரியாதவனும்கன்னநோயுடையவனாவன். தன்னையே புகழ்ந்து பேசுகிறவன்குள்ளனாகவும்முடமாகவும் ஜனிப்பான். பசுக் கொலை செய்தவனும்உபகாரம் செய்தவர்களுக்கு அபகாரம் செய்தவனும் பிறக்கும் போதே குருடராய் ஜனிப்பார்கள். விலக்கப்பட்ட உணவுகளைப் புசித்தவனும்விருப்பமுள்ள மனைவிக்கு வருத்தமுண்டாகும்படி பரத்தையரைச் சேர்ந்தவனும் கண்டமாலையாலும்பீஜவியாதியாலும் வருந்துவார்கள். பிறர் குற்றங்களை யெடுத்துச் சொல்கிறவனும்தாம்பிரத்தை விற்று ஜீவிப்பனும் முக வியாதி யுடையவராவர். பானை முதலிய விற்பவர்களும் மிருகங்களைக் கொன்று ஜீவிக்கும் வேடராவர்கள். மந்திர புஸ்தகம்ஞான சாஸ்திர புஸ்தக மிவைகளைத் திருடினவர்கள் ஊமையாவார்கள். எழுத்தாணி திருடினவன் குருடனாவன். புண்ணிய கதைகளை வாசிக்கும்போது தர்க்கம் செய்கிறவன்மூக்கு வியாதி உடையவனாவான். தருமநிந்தை செய்தவன் இராட்சத னாவன். ஞானத்தையும் சிவயோகத்தையும்குரு தெய்வங்களையும் நிந்தித்தவன் வக்கிரமுக முள்ளவனாவன். தருமநிந்தை செய்கிறவன் மலப்புழுவான். தெய்வ திரவியங்களைத் திருடினவன் விஷப்பாம்பாவான். குளம் நந்தவனங்களைக் கெடுத்தவன் அங்க ஈனனாவான். குற்றமற்ற இதபெண்களை விரும்புகிறவன் வாதநோயுடையவனாவன். மிருகப்புணர்ச்சி செய்தவன் மதுமேக வியாதி யுள்ளனாவன். கற்புள்ள ஸ்திரீகளை யிச்சித்தவன் பன்றியாவான். சிவத்துரோ கிக்கு உண்டாகுந் துன்பம் சொல்லில் அடங்காது. மஹாபாதகங்களைச் செய்தவன் பன்றி யாவான். உபபாதகஞ் செய்தவன் நாயாவான்; அதிபாதகம் செய்தவன் பலப் புழுவாவான்மற்றப் பாதகங்களைச் செய்தவன் ஈனஜாதியில் பிறப்பான். 

 

ஆத்ம சொரூபத்தை அறியாதவனைத்தான் இந்தப்பாதகங்கள் தொடரும். அவற்றின் துன்பங்களையும் அடைவான். சுயசொரூபமானது பரிசுத்தமான சின்மாத்திரமே யாதலால் சிவஞானிக்கு இவை கம்பவிக்கமாட்டா. தேகாதிகள் எல்லாம் திருசியங்க ளாகையால் அவைகள் ஆத்மா வாகமாட்டா. திரண்ட சித்தும் உருவமாகத் தோன்று லால் திருசிய மென்று சொல்லக் கூடாது. சொன்னால் கடாதிகளுக்கும் அது உண்டாகும். பரிபாக பேதங்களால் திரிசிய சொரூபம்திருக்கு உருத்துவம் இரண்டுக் கும் உண்டாகுமென்றால்பாகத்தினாலே திரிசிய மாவதால் பாகத்தோடு கூடுகிற எல்லாம் நிலைபெறுவ தில்லாமையால் கடாதி போலாகும்அப்போது அனாத்மாவாம். ஆகையல் திருசிய மல்ல. சித்து திருக்குருவேயாம். கருத்திருத்துவம் சித்துக்குள்ள தாமென்றால் அது பரிணாமமாதலால் மண்ணாதிகளைப் போல அழியும். அப்போது அநாத்மாவாய்ச் சித்தாக மாட்டாது.. ஜடமானவைகளெல்லாம் சுயம் பிரகாச மல்லாமை யால்அருட்சித்து இல்லாத போது ஒன்றுக்கும் பிரகாசமில்லால் போய்விடும். ஆகையால் சிற்சொரூபத்திற்குத் தரிசன கர்த்திருத்துவமானது திரிசியாபி வியக்திக்காக வந்ததேயல்லாமல் சுயமாக வந்ததில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள். சிற்பிரகாச மான ஆத்ம சம்பந்தத்தினாலே சைத்தியம் பிரகாசிக்கும் எனல் கூடாது. ஏனென்றால்அந்தச் சம்பந்தமில்லாமையினாலே அந்தச்சித்தே சைத்தியரூபமாய்ப் பிரதீதியைக் கலந்திருக்கிறது. சுயம்பிரகாசத்துக்கு வேறொன்றினால் ஒளி உண்டாக வேண்டுவ தில்லை. வேதமும் இப்படியே சொல்கின்றது. ஒரு காலத்தில் பிரகாசமாயும்ஒரு காலத்தில் அப்பிரகாசமாயும் த்து விளங்குவதில்லை. சாட்சி பூதமாய் விளங்குகின்ற ஆத்மா தேகாதிகளுக்குச் சம்பந்தியாக மாட்டான் என்று வேதங்கள் கூறுகின்றன. ஆத்ம சொரூபத்தை அறிந்தவன் கரும ம்பந்தியாகான். இந்தப் பிரமவித்தை (வேதாந்த ஞானம்) பராசத்தியின் கருணையால்'உண்டாகும். எந்தப் பராசத்தியினாலே பரை முதலிய வாக்குள் தோன்றுமோஎந்தப்பரை இச்சாசத்தி என்ற பேரை உடையவளோஉலகம் முத்தொழிற் படுங்காலம் எல்லாம் எந்தப் பரை உள்ளவளோஎந்தப்பராசத்தி எம்மை இரட்சிப்பவளோ அந்தப் பராசத்தியை வணங்குகின்றோம். உலக மெல்லாம் வியாபித்தும்ஐம்பத்தோரட்சர சொரூபியாயும்மாதுருகாவர்ண சொரூபமுடைய வளாயும்இலட்சுமிசரஸ்வதி முதலான பல சொரூபத்தை உடையவளாயும்பிரமா முதலான தேவர்களும் மகத்துவாதிகளும் பஞ்சபூதங்களும் ஒடுங்குகிறதற்குரிய இடமானவளாயும்பக்தர்களுடைய இதயகமலத்தில் வசிக்கிறவளாயும்சிவஞானத்தை யும் முடிவில்லாத இன்பத்தையும் கொடுப்பவளாயும்உள்ள அந்தப் பராசத்தியை வண ங்குவோம். இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்கள் சிவஞானத்தைப் பெற்று வாழ்வார் கள் என்று சொல்லிச் சூதமுனிவர் சிவ தியானத்திலிருந்தார். பிறகு முனிவர்கள் சூதரை வணங்கி உத்தர பாகத்தையும் எங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று கேட்கச் சூதர் சொல்கிறார். 

பூர்வபாகம் முற்றிற்று.

 

 

 

 

எக்ஞ வைபவ காண்டம்.

 

உத்தரபாகம்.

 

பிரமகீதை முதலாவது அத்தியாயம்,.

ஐதரேய வுபநிடதார்த்த முரைத்தது.

 

ஒரு கர்ப்பத்தில் தேவர்கள் எல்வாரும் ஒரிடத்தில் கூடி வேத அர்த்தத்தை ஆராய்ந்தார்கள். அவர்களுக்கு அர்த்தம் விளங்கவில்லை. சந்தேக முண்டாயிற்று. அதனால் நெடுநாள் தவசு செய்தார்கள். பின் மஹாமேரு பர்வத சிகரத்தில் நூறு யோசனை நீளம்நூறுயோசனை அகலமுள்ள பிரமவனத்திலுள்ள பிரமநகரத்தில் பலவித இரத்தினங்க ளிழைக்கப்பட்ட ஆயிரக்கால் மண்டபத்தில்பிரமதேவர் சரஸ்வதியோடு எழுந்தருளி யிருக்கையில் தேவர்கள் எல்லாரும் அங்கே போய்அவருடைய பாதத்தில் பக்தியுடன் பணிந்து வேதார்த்தத்தை உபதேசித்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தார்கள். பிரமதேவர் முதலில் ஐதரேயம் என்னும் உபநிஷத்தின் அர்த்தத்தைக் கூறுகின்றார். 

 

ஆதியில் சிவபெருமான் ஒருவரே யிருந்தார். பிரபஞ்ச மெல்லாம் தன் மாத்திர மாகவே யிருந்தது. பரசிவத்துக்குப் பின்னமாக வேறொன்றும் இருந்ததில்லை. அப்போது அந்தப் பரசிவன் சிருஷ்டி செய்ய நினைந்தார். உடனே தமது மாயா சத்தியின் வைபவத்தால் எல்லாப் பிரபஞ்சங்களையும் சிருஷ்டித்தார். அந்தப் பரசிவன் பல மதஸ்தர்களும் தனக்கே பலபெயர்கள் வைத்துஅதற்குச் சாதகமாகப் பல தருக்க நெறிகளையும் கொண்டாட வைத்தார். வேதம்கர்ம காண்டத்தில் வியாவகாரிக சத்தியப் பிரபஞ்சத்தையும்ஞான காண்டத்தில் பாரமார்த்திக சத்தியப் பரசிவத்தையும் கூறும். வேதத்தில் சொல்லப்பட்டதே பரமார்த்தமாய் விளங்கும். இதர மதங்களில் பௌத்தம் முதலிய சில கனவிலும்வைசேஷிகம் முதலிய சில நனவிலும் காணப்படும் உண்மைப் பொருள்களையே கூறுகின்றன. அவை பரமார்த்த சத்தியப் பொருளைக் கூறுவதில்லை. ஆதலால் அவைகள் மயக்கத்தினா லுண்டானவைகளாம். சத்திய சைதன்னியத்தாற் கற்பித்த சைத்தியமும்அதில் கடாதிகளும்சிப்பி வெள்ளியும் அசத்தியமானாலும்சிப்பிவெள்ளியைவிடக் கடாதி சத்தியமேயாம். கடா திகளை விடச் சைத்தியம் சத்தியமாம். அப்படியே நனவில் கனவு அசத்தியமாம். இதில் சத்தியம் நனவாயிருக்கும். சொற்பனாவத்தை அசத்தியமாயிருக்கஅதில் காணப்பட்ட பொருள் நனவில் எப்படிச் சத்தியமாகும். அப்படியே முத்தியுமாம் என்று அறிந்து கொள்ளுங்கள். 

 

அந்த பிராந்தி மூலமான மதங்கள் முத்தி சாதனமாகாதென்று கொள்ளுங்கள்.  ஆனாலும் அந்தந்த மதத்துக்குரிய தெய்வானுக் கிரகக்தால் வேதமார்க்கமே சிறந்தது என்னும் அறிவுண்டாகும். அதனால் வெகுகாலத்துக்குப்பின் முத்தியுண்டாகும். ஆதலால் அம்மதங்களை யிகழாமல்அவற்றிற்குரியார் அந்நெறி பற்றி யொழுகல் வேண்டும். வேத மார்க்கத்தி லுள்ளவன் வேறு மார்க்த்துக்குப் போனாலும்அவருடன் கலந்து உணவு முதலிய புஜித்தாலும்அவருடன் கூடி. வேள் வியாதிகள் செய்தாலும்தானம்விவாகம்அத்யயனம்ஞானோபதேசம் இவைகளைச் செய்தாலும் மூன்று சாந்திராயண விரதம் செய்து பரிசுத்தனாகவேண்டும். வேத விரோதமான மததீட்சை பெற்றவரும்விதிப்படி சிவ பூஜை செய்யாதவரும்விபூதி ருத்திராட்சம் தரியா தவர்களும்தேவ பிதிர் அக்கினி காரியங்களைச் செய்யாதவரும்பஞ்ச யக்ஞம் செய்யாதவர்களும்வேத பாகிய மார்க்கப்படி திருமாலாதி தேவ பூசை செய்கிறவர் களும்பிரமா விஷ்ணு ருத்திரன் முதலியோர் முறையே ஒருவருக்கொருவர் மேலான வர்கள் என்று எண்ணாதவர்களும்அவர்கள் மூவரையும் சமனாக எண்ணுகிறவர்களும்வேதவிதிப்படி சிராத்தாதிகள் செய்யாதவர்களும்உபவாசதினத்தில் உபவாசம் இராதவர்களும்சதருத்திரீயம் முதலியவற்றால் சிவனை அபிஷேகம் செய்யாதவர் களும்தில்லை காளத்தி முதலிய சிவதலம் எதிலாவது ஒருவருஷம் வசிக்காதவர் ளும்ஞானாசாரியனிடத்தில் மஹாவாக்கியார்த்தம் கேளாதவர்களும்பரம ஹம்ச ஆச்சிரமத்தை வெறுப்பவர்களும்திருநீறு தரியாமல் ஊர்த்துவபுண்டரம்அர்த்த சந்திர வடிவமான சின்னங்களையும் தரிப்பவரும்சங்க சக்கர சூல முத்திராங்கிதம் தரிப்பவரும்சுருதி ஸ்மிருதிகள் கூறிய ஆசாமானுஷ்டானம் செய்யாதவர்களும்பாஷண்டிகளாவார்கள். சிவப்பிரசாதம் பெற்று மெய்யறிவுடையோர் வே விதிப்படியே நடப்பார்கள். அவர்களே முத்தி பெறுவார்கள் என்று பிரமதேவர் அருளிச் செய்தார். தேவர்கள் அதைக் கேட்டு மனமகிழ்ந்தார்கள். 

 

 

இரண்டாவது அத்தியாயம்.

தைத்திரீய உபநிடதார்த்த முரைத்தது.

 

சர்வாத்மாவாகிய சிவனே எல்லா வுலகங்களுக்கும் சாட்சியாவான். ஜகம் ஜடமாகும்அதற்குச் சுயமாகப் பானமில்லை. சில மதம் விஞ்ஞானத்தாலே பானம் உண்டாகும் என்று கூறும். அது கூடாது. ஏனென்றால் விஞ்ஞானம் விகாரமற்றது. ஆனபடியால் அதற்குப் பரிணாமம் சொல்லக்கூடாது. அன்றியும் விஞ்ஞானம் ஒரு திரவியமல்ல. ஆகையால் அந்தப் பானம் என்பது அசத்தாம். ஆரம்பகத்துவமும் அதற்கு இல்லை. ஆகையால் பானம் விஞ்ஞானத்தால் உண்டாகாது. அது நித்தியமாம். விஞ் ஞானம்பானம் இரண்டிற்கும் உற்பத்திப் பிரதீதி பிராந்தியாம். பான சொரூபமாயும்சர்வாத்மாவாயும் உள்ள பரசிவனே சாட்சி யாம். அவனது தேஜசால் கற்பிக்கப்பட்ட அஞ்ஞானத்தாலே கரணம் இராக திகளுக்குப் பானம் உண்டாகும். பிராணாதிகள்பாகியமான சிலவஸ்துக்கள் இவைகளுக்குச் சித்தவிருத்தி மூலமாயும்இந்திரிய சம்பந்த மூலமாயும்அனுமானாதி மூலமாயும் சித்தொளியால் பானம் உண்டாகும். அன்றிச் சுயத்தில் கிடையாது. கற்பிதம் பெற்றிருக்கிற ஜீவனும் சித்தொளியாலே பத்து இந்திரியத் தொழில்களையும் செய்கின்றான். 

அந்தச் சிற்சொரூப ஞானத்தைச் சிலர் இருதயமென்று சொல்வார்கள். சிலர் மனம் என்று கூறுவார்கள். சிலர் கஞ்ஞான மென்பார்கள். சிலர் ஞானமென்று சொல்வா ர்கள் சிலர் விஞ்ஞான மென்பார். சிலர் பிரஞ்ஞானம் என்பார்கள். சிலர் மேதை யென்பார்கள். சிலர் திருஷ்டி பென்பார்கள். சிலர் திருதி யென்பார்கள். சிலர் மதி யென்பார்கள். சிலர் வசம் என்பார்கள். சிலர் மனீடை என்பார்கள். சிலர் இருதி என்பார்கள். சிலர் கிரது என்பார்கள். சிலர் சங்கற்பம் என்று சொல்வார்கள். கிலர் ஸ்ம்ருதி என்பார். சிலர் காமம் என்பார்கள். இவைகள் எல்லாம் பிரஞ்ஞான சொரூப சிவனுடைய திருநாமங்களேயாம். பிரமாமுதல் ஸ்தாவர மீறாகச் சொல்லப்பட்டவைக ளெல்லாம் அந்தப் பரசிவனே. பரசிவ சிவ சொரூபஞானமுள்ளவனே ஜீவன் முக்தனாவன். கருமம் முதலானவைகளாலே சீவன்முக்த னாகமாட்டான். இது நிச்சய 

 மே யாம். 

 

மாயை யோடு கூடிய அந்தப் பரசிவத்திலிருந்துகயிற்றவு  போல்ப் பஞ்சீகிருத சூட்சும ஆகாபமும்அதிலிருந்து வாயுவும் அதிலிருந்து தீயும்அதினின்று நீரும்அதினின்று மண்ணும் அபஞ்சீகிருதமாக உண்டாயின. அந்தச் சூட்சுமபூதங்களைப்பஞ்சீ கரணஞ் செய்துசிவாக்கினையாலே நான் பல அண்டங்களையும் உண்டாக்கினேன். கர்ம பரிபாகத்துக் கேற்றபடிதேவர்நரர்பசு முதலியன சிருஷ்டிக்கப்பட்டன. அதில் பஞ்ச கோசங்களும் ஒன்றுக்கொன்று பேதமாயிருக்கும். அன்னமயகோசம் பிராணமய கோசத்தாலும்பிராணமய கோசம் மனோமயத்தாலும்மனோமயகோசம் ஞானமயத்தாலும்ஞானமயம் ஆனந்தமய கோசத்தாலும்பூரணமாகும். ஆனந்தமய கோசம் சித்தாலே பூரணமாகும்அந்தப் பரசிவம் வேறொன்றாலும் பூரணமாவதில்லை. சத்தி யாதி சொரூபமுடைய பசிவம்தானே இரசமாம். அந்த இரசத்தாலே பரமானந்த மாகவே தேகியா யிருப்பன். தேகிக்குப் பர சிவத்தாலேயோ தொழிலாதி யுண்டாகும். அபேத சிவஞான முள்ளவனுக்கு ஒரு போதும் பயமில்லை. பேத ஞானாத்தாலே பயமே யுண்டாகும்அந்தப் பேரானந்த சொரூபனான பரசிவனே நாராயணன்உருத்திரன் முதலானவருடைய இருதயத்தில் சாட்சியா யிருக்கிறான். அந்தச் சிவஞானத்தை ஆசாரியன் மூலமாகப் பெற்றவன் பந்தத்தை அடையமாட்டான். முத்தனே யாவான். அஸ்தி நாஸ்தி என்னப்பட்ட உலகம் சிவப்பிரசாதத்தால் நிலைபெறும். இந்த ஞானத்தை உடையவன் ஆனந்த சொரூபமே ஆவான். இந்த அர்த்தத்தையே சொல்கிற து சாமவேதமாம். இந்த வேதத்தை இலவுகிகமாகக் கானம் செய்கிறவன் சிவப்பிரசாதத்தைத் தப்பாமல் அடைவான். வைதிககானத்தால் பெறும்பேறு சொல்ல முடியாது. வைதிககானம் செய்யச் சக்தியில்லாதவன் இலவுகிக கானத்தை நாடோறும் தப்பாமல் செய்யவேண்டும். அதனாலே போகஞானங்களுண்டாகும். அதனாலே முக்தி கிடைக்கும். இந்த ஞானத்தைப் பக்தியில்லாத மூடருக்குச் சொல்லப் டாது என்று பிரமதேவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

மூன்றவது அத்தியாயம்.

சாமசாகோப நிடதார்த்த முரைத்தது.

 

சுயம்பிரகாசனாய்ச்சர்வசாட்சியாய்ச்சம்சார மோசகனாய்க்கருணை யை யுடையவனாய் விளங்குகிற திரிலோசனன் ஒருவனே நித்தியமாயுள்ளவன். பிராணன்மனம்கர்மேந்திரிய ஞானேந்திரியங்களாகிற தசேந்திரியங்கள் எல்லாம் அவனுடைய மாயையாலே பிரேரிக்கப்பட்டுவிஷயங்களிலே பிரவர்த்தித்துக் கொண்டிருக்கும். அந்த மஹேசுவரன் தன்னிடத்தில் ஆரோபிதமான அந்த மனம் முதலானவற்றைத் தானடைந்துசகல பொருள் களையும் கவரும்படியான சக்தியைக் கொடுத்தருள்வான். மன முதலானவைகள் பரமசிவனை அண்டமுடியாது. அவைகளுக்கு அகோசரமாகவே யிருப்பன் பரசிவன். சகலபொருள்களையும் பிரகாசிப்பிக்கின்ற அவனைப் பிரமாணங்க ளாலும்குருமொழியாலும்தன் அனுபவத்தாலும் கண்டுகொள்ள வேண்டும். அவனே சீவன்முத்தன். பிரமஞானம்கடாதி ஞானம்பிராந்தி ஞானம் இவைகளில் ஆத்மா செய்கிறவனும்செயப்படு பொருளு மாக மாட்டான். வியாவகாரிக நோக்கத்தில் வித்தை அவித்தைகள் பிரமத்தினிடத்தில் தோன்றும். பரமார்த்தமாய்த் தோன்ற மாட்டா. கேவலமான தத்துவங்களே தோன்றும். இந்த அறிவு குருமொழியாலும்சிவபிரசாதத்தாலும் உண்டாகும். இந்த ஞானம் உண்டானவர்களுக்கு கிரியைகளும் ஆச்சிரமத்தருமங்களும் தோன்றா. அவன் சிவனே ஆவான். அவன் பெருமைப் பிரம விஷ்ணுக்களாலும் அறிய முடியாது. விஞ்ஞான அதிகாரமுடைய தேகத்திலுண்டா குமே யன்றி மற்றத் தேகத்தில் தோன்றாது. ஆன்மா ஒருவனே. அனேக உடல்களிலும் பிரகாசிக்கிறபடியால் முக்தன். மற்றெல்லாரையும் முக்தன் என்றே எண்ணுவான். ஞானசாதன முள்ளவவன் பிராரப்தமுள்ள வரைக்கும் பரமார்த்த ஞானம் பேதஞானம் இவ்விரண்டையும் அடைவான். பிராரப்தம் நசித்தபின் எல்லாம் பரமார்த்தாமாகவே காணப்படும். அவர்களுக்கு விதிவிலக்கு என்பன இல்லை. 

 

சிவனுக்கு வேறாக மாயையிலே எல்லாச் சகங்களும் உண்டு என்று சிலர் சொல்லுவார்கள். பந்தங் கடந்த மஹாதேவனுடைய மகத்துவத்துக்கு அனுப்பத்தியாற் சங்கம் உண்டாகும். ஆதலால் அப்படிச் சொல்லக் கூடாது. ஆகையால் அந்த மஹாதே வன் ஒருவனே பூரணமாய் நிறைந்திருப்பான். அவனுக்கு வேறாக ஒன்றுமில்லை. அறிவுள்ளோர்களால் சொல்லப்படும் பிரமாணங்கள் எல்லாம் இந்த அர்த்தத்திலேயே முடிவு பெறும். இப்படிப்பட்ட அத்துவித ஞானம் சிவனுக்கும் உமாதேவியாருக்கும் சுபாவமாக உள்ளது. எனக்கும் விஷ்ணுவுக்கும் அந்தப் பரசிவானுக்கிரகத்தா லுண்டாகும். சுபாவத்திலே எங்களுக்கு இல்லை. சிவப்பிரசாத முண்டானால் எல்லா ஜீவனுக்கும் ஞானமுண்டாகும். விஷ்ணுவும் நானும் சிவஞானம் கொடுக்கும் சுதந்தர முடையவர்களல்ல. நாங்கள் சாதகர்களாகவே யிருப்போம். அந்தப் பரமசிவனை அவன் அருளாலேய அறியவேண்டும். மற்ற எதனாலும் அறியமுடியாது. 

 

முன் ஒரு காலத்தில் தேவேந்திரன் முதலான தேவர்களும் அசுரர்களும் கூடி யுத்தம் செய்தார்கள். தேவர்கள் அசுரர்களுக்கு ஆற்றாமல் தோற்று ஓடினார்கள். அதைக்கண்டு சிவபெருமான் கருணையினாலே தேவர்களுக்குப் பலத்தைக் கொடுத்தரு ளினார். அதன்பின் தேவர்கள் அசுரரைவென்று ஜயம் பெற்றார்கள். அசுரர்கள் தோற்று ஓடினார்கள். பிறகு தேவர்கள்பரமசிவன் அருளால் வெற்றி பெற்றதை அறியாமல்தாங்களே தங்கள் புஜ பலத்தால் அசுரர்களை வென்றதாக எண்ணிக் கருவம் அடைந்தா ர்கள். சிவபெருமான் இதை அறிந்துயட்சரூபங்கொண்டு அந்தத் தேவர்களுக்கு எதிரில் வந்து நின்றான். தேவர்கள் அந்த யட்சனைப்பார்த்து ஆச்சரியமடைந்துஅவன் யாரென்று தெரிந்து வரும்படி அக்கினி தேவனை அனுப்பினார்கள். அக்கினி தேவன் யட்சனிடம் போனான். யட்சன் அக்கினியைப் பார்த்து நீ யார்உனக்கு என்ன தொழில் தெரியும்சீக்கிரம் சொல் என்றான். அக்கினிஎன்பேர் அக்கினி தேவன். சகல வுலகங்களையும் ஒரு க்ஷணத்துக்குள் நீறாக்கி விடுவேன் என்று சொன்னான். பரமசிவன் புன்சிரிப்பு கொண்டு ஒரு துரும்பை எடுத்து திரில் நிறுத்தி அக்கினியை நோக்கி இதை எரி பார்ப்போம் என்று சொன்னான். அக்கினி தேவன் தன் முழு வல்லமையுடன் அதை எரிக்க முயன்றும் அது எரிபடாமல் அப்படியே யிருந்தது. அக்கினி தேவன் வெட்கி மீண்டு போய்த்தேவர்களை நோக்கிஅவனை அறிய என்னால் முடியவில்லை. நீங்கள் போய்த் தெரிந்து கொள்ளுங்கள் என்றான். தேவர்கள் வாயு தேவனை அனுப்பினார்கள். அவனும் யட்சனிடம் போய்அவமானப்பட்டு மீண்டான். மற்றத் தேவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் போய் வெட்கமடைந்தார்கள். கடைசியில் இந்திரன் வந்தான். அப்போது பரசிவன் மறைந்து போனார். இந்திரன் பயமும் அதிசயமு மடைந்துஈசுவரியைத் துதித்தான். 

 

அப்போது உமாதேவியார்அவனுக்குப் பிரசன்னமானார். இந்திரன் கண்டு மகிழ்ந்துஅம்மனைப் பூஜித்துவணங்கியட்சனாய்த் தோன்றி மறைந்தவன் யாரோ எனக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வேண்டினான். உமாதேவியார் கருணை கூர்ந்து இந்திரா! பிரம விஷ்ணுக்களாலும் தேடி அறியப்படாதவனும்எல்லாவற்றிற்கும் காரணனும்எனக்கு நாயகனுமான மஹாதேவனே யட்ச ரூபமாக வந்தார் என்றார். அந்த மஹாதேவனே உங்களுக்கு வெற்றியைக் கொடுத்தருளினார். நீங்கள் அந்த மஹா தேவனைத் துதியாமல் செருக்கு அடைந்தீர்கள். அந்தச் செருக்கை அடக்கும் பொருட்டுப் பரமசிவன் யட்ச வடிவம் கொண்டு வந்தார். தாமதியாமல் அவரைச் சரணம் அடையுங்கள் என்று கூறி உமாதேவியார் மறைந்தருளினார். 

 

அதன்பின் இந்திரன் முதலியோர் அதிசயித்துச் செருக்கு அடங்கினார்கள். ஆகையால் சிவபெருமானே சர்வகாரணன். அவனுடைய மகிமையை விஷ்ணு முதலானவர்களாலும் சொல்லமுடியாது. அந்தச் சிவப்பிரசாதம் பரகாயப்பிரவேசம்ஆகாச கமனம்தான் கல்லாத சாஸ்திரங்களையும் தடையில்லாமல் பேசுதல் முதலாக அனந்தமாகும். இவையெல்லாம் சிவன் உமை யிவர்கள் அனுக்கிரகத்தா லுண்டாகும். ஆகையால் முத்தியை விரும்புகிறவன் பரமசிவன் ஒருவனையே தியானிக்கவேண்டும். அவர்களிடத்தில் மஹாதேவன் மூர்த்தி சொரூபமாகவும்ஆத்ம சொரூபமாகவும் பிரகாசித்துக் கொண்டிருப்பான். இந்த அத்துவித முக்தியால் நிச்சயமாகவே முக்தி கிடைக்கும். கௌதமர்ததீசி முதலானவர்களுடைய சாபத்தால் மயங்கினவர்களுக்கு இந்தப் பொருள் தோன்றாது. அவர்களுக்கு விபூதிருத்திராட்சங்களிலும் வெறுப்புத் தோன்றும். சிவஞானி பிரம விஷ்ணுக்களாலும் தொழத்தக்கவன். அவன் இருக்குமிடத் தில்முக்தி காத்துக் கொண்டிருக்கும். அந்த ஞானிக்குப் பணிவிடை செய்கிறவனுடைய பாதத்தை நான் சிரமேல் தரித்துக்கொள்வேன். அவனுக்குச் சமானம் ஒருவருமில்லை. இந்த ஞானத்தைப் பெறுவதற்கு உலகவாசனையையும் பிரதிபந்தங்களையும் ஒழிக்க வேண்டும் என்று பிரமதேவர் சொன்னார். 

 

 

நாலாவது அத்தியாயம்.

சாந்தோக்கிய உபநிடதார்த்த முரைத்தது.

 

     பிரமதேவர் தேவர்களை நோக்கி ஓ தேவர்களே! மண்ணினால் செய்யப்பட்ட பாண்டங்கள் அந்த மண்ணுக்கு வேறாகாதது போலக்காரியங்களெல்லாம் காரணத்துக்கு அபேத மாகவே யிருக்கும். காரிய சாத்தையானது காரண சத்தைக்கு வேறாகத படியினாலேகாரியம் தனிச்சத்தாகிப் பேதப்படுகிறதில்லை. நசிருங்கம் (மனிதனுக்குக் கொம்புண்டாகுதல்) போலச் சூனிய மாகாமையாலும்அசத்துவத்தில் விசேஷ மில்லாமையாலும். அந்தக் காரியம் அசத்தாய்ப் பேதப்படுகிறதில்லை. இந்த இருவகைத் தோஷங்களும் உண்டாகிறபடியால் சதசத்தாகப் பேதப்படுகிறதுமில்லை. பேதா பேதம் எவ்வகையிலும் வராது. இப்படியே காரியமெல்லாம் காரணத்துக்கு அபேதமாயிருந்தாலும்மாயையினால் பேதமுள்ளது போலக் காணப்படும். விகாரங்க ளெல்லாம் பெயராலே பின்னமாக இருந்தாலும் பரமார்த்தத்தில் பிரமத்துக்கு அபேதமா கவே யிருக்கின்றன. ஜகத்துக்குக் காரணமாய் விளங்குகிற அந்தப் பிரமம்பின்னமன்று. பின்னாபின்னமுமன்று. ஏகமாகவே யிருக்கும். அசேதனமாகிற மண்ணாதிகளுக்குக் குலாலனுடைய அபேட்சையும்குலாலனுக்கு மண்ணாதிகளின் அபேட்சையும் வேண்டியிருப்பது போலவே ஜகமும் பிரமமும் என்று கொள்ளுங்கள். ஏகமாய்ச்சைதன்னியமாய்நித்தியமா யிருக்கிறபடியாலும்நிமித்த உபாதான காரணங்கள் வேத த்தில் பிரசித்தமா யிருக்கிறபடியாலும்அந்தப் பிரமத்திற்கு வேறொரு வஸ்துவின் அபேட்சை வேண்டியதில்லை. பிரமம் பிரதீதி சித்தமான முக்குணமுள்ள தன் மாயையுடன் ஒன்றாய்க் கூடியிருந்தே சிருஷ்டி முதலான தொழில்களையெல்லாம் செய்யும்சத்தான வித்தாதிகளினாலே அங்குரோற்பத்தி யாவது போல ஜகமெல்லாம் காரணரூபச் சத்தாகவே யிருந்து உற்பத்தியாகும். ஆகையால் சூனியவாதிகள் மதம் அனுசிதமாகவே யிருக்கும். அது சரியல்ல வென்று கருதுங்கள். 

 

ஆதியந்த மில்லாமல் சத்தாகவே யிருக்கிற அந்தப் பிரமம்பூர்வ கற்பப் பிரபஞ்ச வாசனையால்சத்துவ விருத்தியுடன் கூடியிருக்கிறதாய்அநேகவிதமான ஜக சொரூபமாய் “நானாகிறேன். நான் நிரம்ப என்கிற இச்சையினாலே ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களையும் சிருஷ்டிக்கும். அந்தப் பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு கூறாகவகுத்துஐந்து பாகங்களையெடுத்து ஒவ்வொரு பாகத்தையும் நாலு நாலாகப் பகுத்துபிருதிவியின் நாலு பாகங்களை யெடுத்து மற்றைப் பூதங்களின் அரைப்பங்குடன் கூட்டும். இப்படியே மற்றைய நாலு பூதங்களின் நாலு அரைப் பாகங்களையும் எடுத்து மற்றவற்றுடன் கூட்டும். இப்படிப் பஞ்சீகரணம் (கலத்தல்) செய்து பிரமாண்ட முதலானவற்றை யுண்டாக்குவன் பரமன். நீயால் காணப்படுகிற செந்நிறம்ஜலசம்பந்தமான வெண்ணிறம்மண் சம்பந்தமான கருநிறம் ஆகிய இவைகளே தீ. ஞாயிறு முதலான ஒளிரூபங்களாக விவகரிக்கப்படுகின்றன. ஆகையி னாலே பிரமத்துக்கு வேறாக ஒன்றுமில்லை. பூர்வ ஜன்ம வாசனையால் தேகேந்திரி யங்களில் நான் என்னும் புத்தி உண்டாகும். 

 

      தேகாதிக ளெல்லாம் பௌதிக மாகையால் அவற்றை நான் என்கிற புத்தியை விட்டுச்சாட்சியான சித்து ரூபத்தில் நான் என்னும் புத்தி வைக்கவேண்டும். இப்படியே மஹாவாக்கியங்களிலும் அமைந்திருக்கின்றன. துவம்பதத்திற்கும்தத்பதத்திற்கும் இலட்சியார்த்தம் சின்மாத்திர சொரூபமேயாம். குற்றமற்ற அந்த மஹாவாக்கியமும் தத்பத துவம்பத வாச்சியார்த்தத்தை விட்டுஅவிரோதமான சின்மாத்திர சொரூபத்தை இலக்கணையாலே பிரதிபாதிக்கின்றது. துவைதமற்ற அந்தப் பரத்திற்குச் சுபாவமான ஏகத்துவமே மஹாவாக்கியத்தின் பொருளாம். அந்த ஏகத்துவமே வேதத்தில் பிரமாதமா ய்ச் சுயமாகப் பிரகாசிக்கின்றதனால்அந்த மஹாவாக்கியமும் அந்த ஏகத்துவத்தையே போதிக்கின்றது என்பது கூடாது. தன்னால் உண்டாகிற வித்தையினாலே வியாவகாரிக அஞ்ஞானத்தை நீக்கும். அஞ்ஞானத்திற்குப் பானம் (இரசம்) இல்லாமையாலும்அதை இத்தன்மையுடையதென்று கூறமுடியாமையாலும்அதற்குச் சத்துவம் உண்டாகாமை யாலும்அஞ்ஞானமும் அதனுடன் ஒத்துத் தோன்றுகிற காரியமும் பிரமமேயன்றி வேறில்லை. 

 

வேதமானது புருஷரது சித்த பரிபாகத்துக்கு ஏற்றபடி மாயா வியவகாரிகமான பேதத்தை எடுத்து அனுவாதம் செய்துகன்மத்தினா லுண்டாகும் சக விசித்திரங்களைக் கூறிஅதன்பின் பக்குவர்களுக்கு அத்துவித பரசொரூபத்தை உபதேசிக்கும். ஜகஜீவபேதங் களாகத் தோன்றுகிறவைகளெல்லாம் சிவம் என்கிற ஞானம் பரமாத்து வித விஞ்ஞானமாம். இந்த ஞானம் உண்டானவர்களுக்கு எல்லாம் சிவ சிவ சொரூபமாகவே தோன்றும். இந்த ஞானம் பரசிவானுக்கிரகத்தாலும்இகபர பந்தமற்ற சற்குருவின் உபதேச மொழியாலும் உண்டாகும். வேதங்களும் இந்த அர்த்தத்தையே சொல்கின்றன. ஆகையால் சிவமே சத்தியமான பொருள். வேறொன்றுமில்லை. இதுவே உண்மை. மற்றப்பொருள்களை யெல்லாம் பூர்வபட்சமென்று பெரியோர் சொல்வார்கள். இதுதான் வேதார்த்தமாகும். இந்த அர்த்தத்துக்கு வேறான அர்த்தமிருக்குமானால் என் தலை வெடித்துச் சிதறட்டும். இந்த அர்த்தம் சத்தியமானதாயிருந்தால் அந்தப்பரமசிவன் இப்பொழுதே இவ்விடத்தில் எழுந்தருளவேண்டும் என்று கூறிப் பிரமதேவர் சும்மா இருந்தார். 

 

அப்போது ஸ்ரீபரமேசுவரன் சிவகணங்கள் சூழ உமாதேவியாரோடு பிரத்தியட்ச மாய் ஒரு சிங்காதனத்தில் எழுந்தருளியிருந்தார். பரமசிவன் அவ்விடம் வந்ததை அறிந்து இலட்சுமிகாந்தனாகிய நாராயணரும் மனம் மகிழ்ந்து வந்து சேர்ந்தார். தேவர் கள் பூமழை பெய்தார்கள். கந்தர்வர்கள் கீதம் பாடினார்கள். அரம்பை முதலிய தேவ ஸ்திரீகள் நடனம் செய்தார்கள். மேக முழக்கம்போல வாத்தியங்கள் முழங்கின. வேத கோஷம் எங்கும் நிறைந்தது. சமுத்திர ஒலிபோல ஸ்தோத்திர ஒலி யெழுந்தது! தேவர்களும் முனிவர்களும் பரமசிவனை வணங்கினார்கள். எல்லாரும் ஆனந்தமடை ந்து மகிழ்ந்தார்கள். பரமசிவன் அவர்களைப்பார்த்துக் கையால் அமையச்செய்துபிரமா வையும் விஷ்ணுவையும் தம் அருகில் அழைத்துச் சொல்கிறார். உலகமெல்லாம் எம்மையன்றி வேறில்லை. அஸ்தி நாஸ்தி என்னும் சப்தங்களால் வழங்கப்படுகிற எல்லாம் நாமே. இதையே வேதாந்தம் சொல்லும். பிரமா சொன்னவை யெல்லாம் சத்தியமே. அந்த அர்த்தத்தில் சந்தேகப்படுகிறவன் பதிதன் ஆவான். அதை நம்பினவன் முத்தனாவான் என்று கூறி எல்லாருக்குங் கருணை செய்தார். இதைப்பற்றி நீங்கள் எல்லாரும் பேரானந்தத்தை அடையுங்கள் என்று சொன்னார். தேவர்கள் பரசிவனைக் கந்தபுஷ்பங்களால் பூசித்தார்கள். பிரமனும் விஷ்ணுவும் பரமசிவனை வணங்கிப் பரவசமானார்கள். அப்போது பரமசிவன் ஆனந்த நடனம் செய்தருளினார். அதனாலே விஷ்ணுபிரமா மற்றுமுள்ள தேவர்கள்முனிவர்கள் எல்லாம் ஆடினார்கள். அப்போது பரமசிவன் உமாதேவியாரோடும் கணங்களோடும் மறைந்தருளினார். விஷ்ணு பிரமதேவரை ஆலிங்கனம் செய்து மற்றத் தேவர்களுக்கும் அனுக்கிரகம் செய்து இலட்சுமியுடன் வைகுந்தம் போனார். பிரமதேவர் மனமகிழ்ந்து தேவர்களை நோக்கிப் பிர வித்தையானது அஞ்ஞான இருளை நாசம்பண்ணும். மற்ற எதனாலும் முடியாது. சோகமுண்டாகும். நாசமும் உண்டாகும். உலக இன்பமே உண்டாகும். அத்துவிதத்தை அறிந்தவனுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை யென்று பிரமதேவர் கூறியருளினார். 

 

 

ஐந்தாவது அத்தியாயம்.

இதுவும் அது.

 

பிரமபுரம் என்று கூறப்பட்டதும்ஞானாதிகார மேன்மை யுடையதுமான சரீரத்தில் தகரமென்று சிறப்பிக்கப்பட்டு விளங்குகிற இருதய கமலத்திலுள்ள தகராகாசமே பரமசிவன் என்று எல்லா வேதங்களும் சொல்லும். அந்தப் பரமசிவனே சிரவணமாதி சாதனங்களினாலே அறியத்தக்கவன். அவனுக்குத் தேசகால பரிச்சேத மில்லை. அவன் சர்வ வியாபகன். ஜடமாகிய ஜகத்துக்குச் சுபாவத்திலே பானமில்லா மையால்அந்தப் பரமசிவனே அஸ்திநாஸ்தி என்று கூறப்பட்ட ஜகமெல்லாவற்றை யும் வியாபித்துப் பெருகச்செய்வான். அவனுக்குப் பாவசோகாதிளில்லை. சத்திய சங்கற்பங்க ளுள்ளவன். கர்மங்களால் அடையப்படுகிற உலகங்கள் எல்லாம் அழிந்து போகிறபடியால்இந்தத்தகர வித்தையை அறியாமல் கருமம் செய்கிறவர்களுக்கு எவ்விடத்திலும்காமசார மென்பதில்லை. இந்தத்தகராகாசவித்தையை அறிந்தஞானிக்கு எந்த உலகத்திலும் காமசாரம் உண்டு. சிறைப்பட்டவர்கள் அறியாதிருப்பதுபோலசுழுத்தியில் பிரமம் பிராப்தமாகி யிருக்கவும் மோகத்தினால் அறிவதில்லை. சிவன் எல்லார் இருதயத்திலும் இருக்கிறபடியால் சிவனுக்கு சிவன் என்று பேர் உண்டு. சரீராபிமானத்தை விட்டுச்சுழுத்தியிலே பிரகாசிக்கும் தேஜோரூப ஆத்மாவைத் தரிசிக்க வேண்டும். அந்த ஆத்மாவைச் சோகாதிகள் அடைவதில்லை. அவன் தேகா திகளுக்குப் பின்னனாய்ச். சாக்கிரசொற்பனசுழுத்தி அவஸ்தைகளுக்குச் சாட்சியாய் இருக்கிறான். அந்தப்பரசிவனிடத்தில் ஆரோபிதமான பிரபஞ்சம் அவனுக்குரிய ஒளிபெற்றிருக்கும். தேகாதிகளுக்கு வேறான கேவலாத்மாவை ஒன்றாவது அணுக மாட்டாது. அந்த ஆத்மாவே நாமரூபாதிகளை நிர்மித்தவன். அவனுக்கு வேறாக ஒன்று மில்லை. பிருதிவி முதலான பூதங்களும் தங்கள் தங்கள் விகாரப்பாட்டில் தவறாமல் அந்தந்த ரூபமாகத் தோன்றுதல் போலவேசாட்சி சொரூபமும் எல்லாவற்றிலும் கலந்திருக்கும். எங்கும் வியாபித்த ஆகாயம்கடாகாசாதி விபாகப் பகுதியிலும்அவிபா கப் பகுதியிலும் எப்படியிருக்குமோ அப்படியே பரமசிவனும் தோன்றுவன். தோன்றுகிறது தோன்றாதது எல்லாம் சிவசொரூபமேயென்று அறிகிற ஞானம் சம்வித் சொரூப சக்தியேயாம். அந்தப் பானம் உடையவனுக்கு ஜனன மரணங்களாகிற எந்தத் துன்பமும் கிடையாது. இந்த ஞானத்தைப் பரமசிவன் ஒருவனே கொடுக்கவல்லவன். அவனே சுதந்தரன். விஷ்ணுவாலும் என்னாலும் முடியாது. சூரியன் ஒளியால் இருள் நீங்குவது போலஉமாகாந்தனாகிய பரமசிவனுடைய திரு அருளால் சமுசார இருள் ஒழியும். மலபந்த மொழிப்பதற்குப் பரமசிவனுடைய பாதாரவிந்த தியானத்தையும்பூசையையும் அன்றி வேறொன்றுமில்லை. பல ஆகமங்களின் முடிவும் அவனே. சுவானுபூதி சொரூபனும் அவனே. அதைக் கொடுப்பவனும் அவனே அதனாலே அறியப்பட்டவனும் அவனே. காரணனும் அவனே. எல்லாம் அவனே என்று அறிந்து கொள்ளுங்கள். சூரியன் ஒளிக்கு முன்னாலே எல்லா ஒளிகளும் மழுங்கிப் போவது போலப் பரமசிவனுடைய தேஜசுக்கு முன் என் ஒளியும் விஷ்ணுவின் ஒளியும் மழுங்கி விடும். பரமசிவம் என்கிற பெரிய சமுத்திரத்தில் நானும் விஷ்ணுவுமாகிய இருவரும் இரண்டு துளிகளே யாவோம். அந்தப் பரமசிவனையும் என்னையும் விஷ்ணுவையும் சமமென்று சிலர் சொல்வார்கள்அது தவறு. அஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்துக்கு ஒப்பானால் நாங்கள் சிவனுக்குக் உலக சமானமாவோம். ஞான திருஷ்டியுள்ளவன் சிவனை அறிந்து பரம போதத்தால் சமுசார பந்தம் தீரவேண்டும். பரமசிவனுடைய திருவடி யின்பத்தை அடைய விரும்புகிற தேவர்களே! இதையறிந்து நீங்கள் க்ஷேமம் அடையுங்கள் என்று பிரமதேவர் சொன்னார். 

 

 

ஆறவது அத்தியாயம்.

முண்டகோ பநிடதார்த்த முரைத்தது.

 

அட்சர தத்துவத்தை ஆராய்ந்து பார்க்கையில் எல்லாம் சுய சொரூபமாகவே தெரிதலாலும்சொற்கள் எல்லாம் அந்த தத்துவ சொரூபமே யாகையாலும் பேதமில் லை. வித்தையானது அபரவித்தை பரவித்தையென்று இருவகைப்படும். வேதம் வேதா ங்கங்கள் முதலியன அபரலித்தை. உபநிஷதங்கள் பரவித்தை. பரவித்தையினாலே தசேந்திரியங்களுக்கும் எட்டாததாயும்அந்த இந்திரியங்கள் இல்லாததாயும் இருக்கிற மெய்ப்பொருளை அறியலாகும். சிலம்பி நூலைத் தோற்றுவித்து மீண்டும் தன்னிடத் தில் ஒடுக்கிக்கொள்வது போலப்பரசிவமும் உலகைத் தோற்றுவித்து மீட்டுந் தன்னிடத்தில் ஒடுக்கிக்கொள்ளும். மாயோபாதி சகிதமான பரசிவத்தால் சிருட்டியுண் டாகும். அன்னம்பிராணன்மனம்சத்தியம்உலகம்கருமத்தினால் உண்டாகும் பலன்நாமம்ரூபம் முதலான எல்லாம் சொற்பன உலகம் போலத் தோன்றும். அப்பரசிவஞா னத்தினால் சமுசாரமொழியும் பேரின்ப முத்தியுண்டாகும். கருமத்தையே அனுஷடிக் கிறவர்கள் கண்ணில்லாத குருடன் ஒருவன் மற்றொரு குருடனைத் துணையாகக் கொண்டு கிணற்றில் விழுவது போல மோகத்தாலே மயங்கிச் சமுசாரத்தில் வீழ்வார் கள். ஆகையினால் கருமத்தினால் பந்தம் ஒழியாது. ஞானத்தாலேயே ஒழியவேண்டும். 

 

ஆகையால் சிவஞானத்தை அடைவதற்கு நன்றாகக் குரு பணிவிடை செய்ய வேண்டும். குருவின் கருணையை அடைய வேண்டும். நெருப்பில் உண்டாகும் பொறிகள் மறுபடியும் அந்தத் தீயிலேயே ஒடுங்குவது போல்சிவத்தினின்றும் உற்பத்தி யான ஜீவாத்மாக்களெல்லாம் அந்தச் சிவத்திலேயே ஒடுங்கும். பிராணாதிகளில்லாத சிவன் மாயைக்கும்ஜீவனுக்கும் மேலானவன்அவனிடதிலிருந்து பிராணாதிகள் உண்டாகின்றன.. பிரமாண்டத்துக்கு அபிமானியான விராட்புருஷனும் அந்தப் பரமசிவ னே யாம். உலகம்பற்சன்னியன்பிருதிவிபுருஷன்நாரி என்னும் ஐந்தாலும் உண்டாகிற பிரஜைகளும்கர்மங்களும்தேவர்களும்சமுத்திரங்களும் மற்றுமுள்ள எல்லாமும் அந்தப்பரமசிவனிடத்திலிருந்தே உண்டாகின்றன. ஆகையால் எல்லாம் சிவ சொரூபமேயாம். இது விஷ்ணு முதலான எல்லாருக்கும் சம்மதமாம். மூர்க்கர்களால் இஃது அறியமுடியாது. அவர்களுக்கு மயக்கமாகவே யிருக்கும். பிரணவமாகிய வில்லைவளைத்துஜீவனாகிய அம்பை அதில் பூட்டிச்சிவமென்கிற இலட்சியத்தில் எய்தால் அவன் சிவனே ஆய்விடுவான். அரணியைக்கடைந்து நெருப்பை எடுப்பது போலஇருதய ஆகாசத்தில் உள்ள அந்தப் பரமசிவனைத் தியானமாகிய கடைதலால் உணர்ந்துசந்தேகநீங்கி முத்தியடைவார் பெரியோர்கள். அந்தப் பரசிவத்தினிடத்தில் சூரியன் முதலிய ஒளிகள் விளங்கா. அந்தச் சிவத்தின் ஒளியாலேயே பிரகாசிக்கும். அவன் ஒருவனே சுயம்பிரகாசமுள்ளவன். இந்தச்சிவத்தில் ஜீவன் ஈசுவரன் என்று இரண்டு பேர்களுண்டு. அவர்களில் கர்மபலனை அனுபவிக்கிறவன் ஜீவன். ஈசுவரன் கர்மத்தை அனுபவிக்கிறதில்லை. அவன் சாட்சியாக இருக்கிறான். இருவருக்கும் மாயாகற்பிதமேயல்லாமல் சொரூப பேதமில்லை. இருவரும் சிற்சொரூபிகளாகையால் பரமார்த்தத்தில் பேதம் கிடையாது. அநேக ஜன்மங்களில் செய்த புண்ணிய கர்மத்தா லும்தர்க்கத்தாலும்அளவைப் பிரமாணங்களாலும்சிவானுக்கிரகத்தாலும் இந்த ஏகத்துவத்தை உணர்ந்து கொண்டுசைதன்னியப் பொருள் நானே என்கிற நிச்சய முடையவனாய்ச்சிவஞானத்தாலே பாவ புண்ணியங்க ளணுகாமல் தொலைத்துப்பரசிவ அபேத சொரூபமான சிவசாமியத்தை அடைய வேண்டும். 

 

சித்துருவத்தாலும் உபாதி சகித சொரூபத்தினாலும் சாமியம் வராது. சாமியத்தை அங்கீகரித்தபோதிலும் கருமமும் வித்தையும் அசாத்தியமாகும். சாமியம் எப்படிவரு மென்றால்ஏகத்துவமான சொரூப சாமியம் ஆதியிலேயே அமைந்து கிடக்கின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள். அவித்தையாலே பேதம் காணப்படும். வித்தையினாலே அவித்தை ஒழியும்போது ஆதியிலேயே யுள்ள சாமியம் விளங்கும். இப்படி மாயை ஒழிந்தவர்கள். தமது சரீரத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிற சிவத்தைத் தரிசிப்பார்கள். அந்த ஆத்மாவானது தசேந்திரியங்களாலும்சாஸ்திரங்களாலும்கர்மங்களினாலும் அடையப்படுவதல்ல. பரசிவ தியானத்தாலுண்டாகும் ஞானத்தால் மாத்திரம் காணத்த கும். இந்த ஞானி எந்தெந்த உலகத்தை விரும்புகிறானோ அந்தந்த உலகங்களை அப்போதே அடைவான். சந்நியாச யோகத்தாலே வேதாந்த நிச்சயம் பிறக்கும். அதனாலே மாயை ஒழியும் அப்போதே அவன் முத்தியின்பத்தை அடைவான். அவனுக்குக் காலம் முதலிய எல்லாம் பாத்தினிடத்தி லேகமாயேயிருக்கும். நதிகள் சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமாகவே யிருப்பது போல ஞானியும் நாமரூபங்கள் அற்றுப் பரசிவத்தில் ஏகனாயிருப்பான். அவன் வம்சத்தில் பிறந்தவர்களும் ஞானியே யாவார்கள். இந்த ஞானம்வேதம் அறிந்தவர்களுக்குத்தான் கிடைக்கும் என்று பிரம தேவர் சொன்னார். 

 

 

ஏழாவது அத்தியாயம்.

கைவல்லிய உபநிஷதார்த்தம் கூறியது.

 

சிவன்ருத்திரன்ஈசானன் முதலிய பல திரு நாமங்களை யுடையதாய்ப் பரதத்துவத்தை விளக்குகிற ஞானம்சிரத்தைபக்திதியானயோகங்களாலே உண்டாகுமே தவிரகன்மம் மைந்தர் தனம் முதலியவற்றால் உண்டாவதில்லை. ஆகையால் கன்ம முதலானவைகளை ஒழித்துவிட்டு வேதாந்த சிரவணத்தினாலே நிச்சய புத்தியை அடைந்தவர்கள் முத்தி பெறுவார்கள். மோட்ச இச்சையுடையவர்கள் ஞானம் உண்டாவதற்காக ஏகாந்த ஸ்தலத்தை அடைந்துதிருநீறு தரித்துச்சிரசு உடல் இவைகளைச் சமமாகச் செய்துகொண்டுஇந்திரியங்களை அடக்கிக்குருவைச் சிந்தித்துஇதயத்தின் மத்தியில் விளங்குகிற சிவத்தை ஸ்திரமான மனதுடன் தியானம் செய்ய வேண்டும். பிரமா விஷ்ணு முதலானவர்களும் அந்தச் சிவமே யாவார்கள். அந்தச் சிவத்துக்கு வேறாக ஒன்றுமில்லை.. 

 

ஆகையாலே சர்வ பூதங்களிலுமுள்ள தன்னையும்தன்னிடத்திலே சர்வபூதங்க ளையும் தரிசிக்கிறவன் ரண பவ சம்சார துக்கம் நீங்கிப் பரசிவத்தை அடைவான். மஹாமாயையாலே மோகிக்கப்பட்டவனைப் போலவும்சரீரத்தைப் பெற்று ஜீவத் தன்மை யுடையவனாகவும்தன் மாயா கற்பிதங்களான சாக்கிராதி அவஸ்தைகளை அடைவான் சிவன். சாக்கிரம்சொற்பனம்சுழுத்தியாகிற அவஸ்தாத் திரயங்கள் ஆனந்த சொரூபத்துக்குப் பந்தகாரணமாகமாட்டா. அந்தச் சொரூபங்கள் யோகத்துக் குரியவைகளே யாம். அந்த மூன்று அவஸ்தா திகளிலும் சிவன் முறையே விசுவன்தைஜசன்பிராக்ஞன் என்ற பேர்களைப் பெறுவான். போக்கியமும் போக்தாவும் சிவமே யென்று அறிகிறவன் ஆயிரம் அசுவமேதங்கள் செய்தாலும்நூறு பிரம ஹத்தி செய்தாலும் அந்தப் புண்ணிய பாவங்களை யடையமாட்டான். 

 

குற்றமுள்ள அஞ்ஞானத்தினாலே ஜீவனென்றும்போக்தா என்றும் காணப்படும். பரமார்த்தத்தில் எல்லாம் சிவமே. அந்தச் சிவத்தில் இருந்து பிராணாதிகள் உண்டாகும். மஹாவாக்கியத்திலும் தத்துவ சப்த இலட்சியார்த்தங்களுக்கு அபேதத்தைக் கூறிச் சுபாவ ஏகத்துவமே சொல்லப்படுகின்றது. ஆகையால் ஜாக்கிராதி பிரபஞ்ச சொரூபமாயு ள்ள பிரமம் நானேபோக்கியம்போக்தாபோகம் எல்லாம் நானேசர்வசாட்சியான சின்மாத்திரமும் நானே. எல்லாம் என்னிடத்திலேயே தோன்றி ஒடுங்குகின்றன. அணுவுக்கு அணுவாயும்மகத்துக்கு மகத்தாயும் உள்ளவன் நானே. தசேந்திரியங்கள் இல்லாதவனாய் அந்தத் தொழில்களைச் செய்கிறவனும் நானே. வேத்தியனும்வேத்தா வும் நானே. புண்ணிய பாவங்களும்உற்பத்தி லயம்பூதம் பௌதிகம் இவைகள் ஒன்றும் எனக்கு இல்லை. நான் ஏகனாய்ச்சுயம்பிரகாசனாய் விளங்குகிறேன் என்றுவிரோதமில்லாத தர்க்கத்தாலும்பிரமாணங்களாலும்குரு உபதேசத்தாலும்தன் அநுப வத்தாலும் நிச்சயமாய் அறிந்தவன் சிவசொரூபத்தை அடைவான். தேவர்களே! மஹா இரகசியமான இதை உங்களுக்குச் சொன்னேன். உங்களுடைய பக்தி விசேஷத்தாலே இதைத் தெரிந்து கொள்ளுங்களென்று பிரமதேவர் கூறியருளினார். 

 

 

எட்டாவது அத்தியாயம்.

பிரகதாரணியக தாற்பரியங்கூறியது.

 

மனைவிபுத்திரர்தனம்இடம் இவைகளெல்லாம் ஆன்ம சுகத்துக்காகவே விரும்பத்தக்கவைகளா யிருக்கின்றன. அவை யெல்லாம் ஆத்ம சேஷமாகவே விரும்பப்படுகின்றன. அதனால் ஆத்மா பரமப்பிரேமாசிரயமாகிறபடியால் பிரத்தியகாத் மா வாகக்காணப்படுகிற சிவன் நிர்மல பரமானந்த சொரூபனாவானென்று தெரிந்து கொள்ளுங்கள். அற்ப சுகங்களுக்குச் சாதனமான கர்மங்களை விட்டுச்சிரவணாதிகளி னாலே அத்துவித ஞானத்தை அடைந்தவன் சுபாவ ஆனந்த சொரூபனாகவே விளங்குவன். பிராமணன்அரசன்தெய்வலோகம் முதலாகச் சொல்லப்பட்ட எல்லாம் ஆத்ம சொரூபமேயாம். பேத புத்திதான் பிறப்பைக் கொடுக்கிற சம்சாரமாம். 

வேதம்ஆகமம்புராணம் இவைகள் ஒன்றோடொன்று மாறுபட்டுப் பேசும். அவற்றிற்கு அவிரோதத்தை நிச்சயம் பண்ணுகிறதற்கு ஆயுசு போதாது. ஆகையாலே பரிசோதனை செய்வதை ஒழித்து விட்டுக்காணப்படுகிற சொரூபங்கள் எல்லாம் சிவசொரூபமேயென்று பாவிக்க வேண்டும். கிருமிகீடம்பதங்கங்கள் இவைகளை விடப் பசுவாதிகள் மேலானவை. அவைகளைவிட மனிதர் மேலானவர்கள். இப்படி விவேகத்தினாலே யர்வும் தாழ்வும் ஏற்படும். எல்லாருக்கும் சர்வக்ஞமுள்ள சிவனே மேலானவர். ஆகையால் அனாத்ம வித்தைகளை விட்டுப்பிரமவித்தையை அடைந்து எல்லாவற்றையும் பிரம சொரூபமாகப் பாவிக்கவேண்டும். இப்படி அத்துவித ஞான முண்டானபோது பயம் முதலானவை ஒழியும். சுருதிஸ்மிருதிஆகமம் இவைகளெ ல்லாம் அத்துவித ஞானத்தையே சொல்லும். யோகிகளும்ஞானிகளும் சொல்லுகிற நிஷ்டைகளும் அத்துவிதமேயாகும். இப்படியிருந்தும் மோகமுள்ளவர்கள் இந்த உண்மையை அறியமாட்டார்கள். சிலர் அத்துவிதம் சாமானியம்துவிதம் சிறந்தது என்பார். சிலர் துவிதம் நித்தியமானதென்று சொல்வார்கள். இவர்கள் எல்லாம் ஜடம் போல்வார்கள்.

 

சகத்தின் பானம்ஜகத்தை அனுசரித்த வேதம் முதலியவவைகள் எல்லாம் வியாவகாரிகமேயாகும். பாரமார்த்தத்தில் எல்லாம் சிவமேயாகும். இந்தப் புத்தி கர்மம் ஒழிந்தவர்களுக்குச் சிவ தியானத்தினாலே தோன்றும். இவ்வாறு சிவஞானத்தைப் பெற்றவனுக்கு ஜனன மரணங்கள் இல்லை. அவன் பிரபஞ்சத்தைக்கடந்துகுருவுபதேச த்தாலே சிவத்தைத் தரிசித்துஅந்தத்தரிசனத்தையும் சிவத்தில் ஒடுக்கிச் சின்மாத்திர சேஷமாய்ச் சித்துருவமாகவே யிருப்பான். அவனுடைய பெருமையை விஷ்ணு முதலானவர்களாலும் சொல்லமுடியாது என்று பிரமதேவர் சொல்லியருளினார்.

 

 

ஒன்பதாவது அத்தியாயம்.

உடத்த பிராமண தாற்பரியங் கூறியது.

 

சர்வசாட்சியான பிரத்தியகாத்மாவே சுயம் பிரகாசமான பிரமம். அந்த ஆத்மாவே பிராணாதிகளுக்குச் சத்தையும்பூரணத்தையும் கொடுப்பான். எதன் சந்நிதியில் எல்லாந் தொழிற்படும்எது நிர்வியாபாரமாய் இருக்கும்அந்த ஆத்மாவே அகம் பதார்த்தமாம். ஸ்தூலசூட்சும சரீரம் திரிசியமாகிறபடியால் அவை அகம்பதார்த்தமாகா.. திரஷ்டாசுரோதாமந்தாஞாதாவிஞ்ஞாதா யாவ னா அவனே யெல்லாமாவான். அவனுக்கு வேறாக உள்ளவை சத்தியமல்ல. பிருதிவி முதல் ஸ்தூல பூதங்களும் எப்படிச் சூக்கும பூதங்களில் கோக்கப்பட்டிருக்கிறனவோஅப்படியே பூமி முதல் வாயு பரியந்தம் உள்ள எல்லாம் தத்தம் காரணங்களில் கோக்கப்பட்டிருக்கும். காற்று அந்தரிட்ச லோகங்களி லும் கோக்கப்பட்டிருக்கும். கந்தர்வர்ஆதித்தர்சந்திரன்நட்சத்திரங்கள்தேவர்இந்திரன்பிரஜாபதிபிரமன்திருமால்உருத்திரன்ஈசானன்சதாசிவன் இவர்களு டைய உலகம் வரைக்கும் இப்படியே ஒன்றோடொன்று கோக்கப்பட்டிருக்கும். இவையெல்லாம் சர்வாந்தரமான முடிவற்ற பரசிவத்தில் கோக்கப்பட்டிருக்கும். அவன் ஒரு போதும் ஒன்றினும் கோக்கப்படுகிறவன் அல்ல. இந்தச் சர்வாதிஷ்டானமான பிரத்தியகாத்மாவே பிருதிவி முதலான பூதங்களிலும்எல்லாப் பிரபஞ்சத்திலும் உள்ளே யிருந்து கொண்டுஅவைகளுக்குத் தெரியாமல்அவைகளே தனக்குச் சரீரமாகத்தனக்கு ஒரு தொழிலுமின்றிஅவைகளை யெல்லாம் தொழிற்படுத்திக் கொண்டிருப்பான். ஆகையால் அவன் அந்தர்யாமியாவான்..

 

அந்தப் பரசிவனொருவனே மூன்று சோதிகளும் இல்லாத அந்த இருள் மூடிய காலத்தில்சுயம்பிரகாசமாய்ச்சாக்கிராதி அவஸ்தைகளிலிருப்பான். வேத்தியனும்வேத்தாவும் அவனே. இப்படி அறிகிற யோகிக்குத் துவிதம் தோன்றாது. திரிசியமும் இல்லை. திருஷ்டாவே யுள்ளது. இது தான் பரமசுகமென்று சொல்லப்படுவது. இதை அறிந்தவன்பாம்பானது தான் உரித்த சட்டையை மறுபடியும் அடையாதது போலத் தேகாதிகளை அபிமானிக்கமாட்டான். பேதபுத்தியுள்ளவன் ஜனனமரணங்களை யடை வான். ஆகையால் ஆரோபிதமான அஞ்ஞானமும்அதனுடைய காரியங்களும் சாதன பலத்தாலே ஏகமாகவேயிருக்கும் பசிவ சொரூபமென்று தெரிந்துகொள்ள வேண்டும். சத்தசிந்தனம் (நூல்களை யோதியுணர்தல்) வாக்குக்குவருத்தத்தை யுண்டாக்கும். ஆகையால் கருமங்களுக்கெட்டாத சருவேசுவரனான சிவனை யாகங்களினாலும்வேதத்தாலும் அறிய விரும்புகிறவன் ரிஷியாவான். ஜகத்தின் பானம்ஜகத்தை அனுசரித்த வேதாதிகள் இவைகளெல்லாம் வியாவகாரிகமேயாம். அக்கிராகியம்அசீரியம்அசங்தமுமாயிருக்கும் சிவசொரூபத்தை உணரும் அவனைக் கருமம் பற்றாது. ஆகையால் சிவ ஞான மடைவதற்காகச் சாந்திமுதலிய சாதனங்களை யுடையவனாய்த்திருநீறு தரித்துச் சிவபூஜாதிகளைச் செய்யவேண்டும். இந்தச் சாதன சம்பத்தியால் சிவனை உணர்ந்துஉடல் பொருளாதிகளைக் குருவுக்குத் தத்தம் செய்ய வேண்டும். அந்தக் குருவையே மாதா பிதாக்களாகக் கருதவேண்டும். அந்தக் குருபூசை முதலானவையெல்லாம் சிவ/பூசையேயாகும். அந்தக் குருவுக்குச் செய்கிற துரோகமும் சிவத்துரோகமேயாகும். ஞானகுருவை அடைந்தால் ஞானத்தையும் பெறலாம். ஞானிக்குப் பூரண சச்சிதானந்த சிவ சொரூபம் பிரகாசமாகவே யிருக்கும். இந்த வுண்மையை உமக்குச் சொன்னேன் என்று பிரமதேவர் சொல்லியருளினார். 

 

 

பத்தாவது அத்தியாயம்.

கடவல்லிசுவேதாசுர தாற்பரிய முரைத்தது.

 

எந்தப் பரத்துவத்தை விரும்பிப் பிரமசரியம் முதலியவைகள் செய்யப்படுகின்ற னவோஅவைகளுக்கு மேலான ஒப்பற்ற பரதத்துவத்தைக் கண்டறிந்தவன் இன்ப துன்பங்களை அடைய மாட்டான். பிரணவமாகிய சாதனத்தை அறிந்தவன் பிரமத்தை அடைவான். உடல் அழிக்கப்பட்டாலும் ஆத்மா அழிக்கப்படுகிறவன் அல்ல. பரமாணுவும்பரம ஸ்தூலமுமானவனும், எல்லார் இருதயங்களினும் இருப்பவனும்அசைவில்லாதவனா யிருந்தும் எங்கும் சஞ்சரிப்பவனுமாவான். சரீரமில்லாதிருந்தும் எல்லாச் சரீரங்களிலும் இருப்பான். எங்கும் வியாபகனாயிருப்பான். அத்தியயனாதிக ளால் அறியப்பட மாட்டான். பாவிகளுக்கும்சாந்தாதிகள் இல்லாதவர்களுக்கும் அடையப்படாதவன். சர்வா காரன். இப்படிப்பட்ட ஆத்மாவை அறிந்தவன் சம்சார பந்த த்தை அடையமாட்டான். 

 

சரீரத்தின் இருதய மத்திய ஆகாசத்தில் ஜீவ ஈசுவரர் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஜீவனே கருமபலனை அனுபவிப் ஈசுவரன் அனுபவிக்கமாட்டான். பரமார்த்தத்தில் இவர்களுக்குப் பேதம் கிடையாது. ஜீவனே இரதிகன்உடலே இரதம் : புத்தியே தேர்ப்பாகன்இந்திரியங்களே குதிரைகள்மனம் கயிறுவிஷயங்கள் எல்லாம் சஞ்சாரம் செய்யத்தக்க தேசங்களாம். ஜீவன் இவற்றுடன் கூடி எல்லாவற்றையும் அனுவிப்பான். தேர்ப்பாகனுக்கு அடங்காத முரட்டுக் குதிரைகளைப் போல இந்திரியங் கள் அஞ்ஞானிகளுக்கு வசப்படாமலிருக்கும். நல்ல குதிரைகளைப்போல ஞானிக்கு அடங்கி யிருக்கும். அந்த ஞானி விஞ்ஞானமே சாரதியாகவும்மனதைப் பாசமாகவுங் கொண்டு சுகமாய் வசிப்பான். அவன் முத்திப் பதத்தை அடைவான்அந்தப் பதமும் பாசிவந்தான். இந்திரியங்கள்மனம்புத்திமகத்துஅவ்வியக்தம் புருஷன் இவைகள் முறையே ஒன்றுக்கொன்று உயர்வாகும். புருஷனுக்குப் பரமானது ஒன்றுமில்லை. சிவனே அந்தப் புருஷன். சகல ஜீவனிலும் அவனிருக்கிறான். ஆகையால் வாக்குமனம்புத்திமகத்துஆத்மா இகைளை ஒன்றில் ஒன்றை ஒடுக்கி நிர்விகாரமான ஆத்ம சொரூபத்தை அறிந்தவன் சம்சாரபந்தம் ஒழிந்திருப்பான். இந்திரியங்களினாலே ஆத்மாவைப் புறவிஷயங்களில் கலக்கச்செய்து மூடர்கள் பந்தப்படுவார்கள். விவேகிகள் அவற்றோடு கலவார்கள். சின் மாத்திரத்தையே தெரிந்துகொள்வார்கள். ஜாக்கிராதி அவஸ்தாத்திரயங்களும் சிவனே. இகலோக பரலோகங்களில் இருப்பவனும் சிவனே. எல்லாமும் சிவனே. பரமசிவனுக்கு வேறானது ஒன்றும் கிடையாது. நெருப்பானது ஒன்றாயிருந்தாலும் பற்பல வஸ்துக்களைச் சேர்ந்து பலவகையாய்த் தோன்றுகிறது போல் ஆத்மாவும் இருப்பான். 

 

சூரியன் உலகத்துக்குக் கண்ணாயிருந்தும்நேத்திரசம்பந்தமான விஷயதோஷங் களை எப்படி அடையாதோ அப்படியே சர்வாந்தரியாமியான பரமசிவனும் பிரபஞ்ச தோஷங்களை அடைய மாட்டான். அந்த ஆத்மாவைத் தரிசிக்கிறவன் நித்தியானந்த த்தை அடைவான். அந்த ஆத்மா வின் சத்தையொடுகூடி யிருப்பதினாலேயே ஆகாசாதி கள் நித்தியமாயும்நாராதியோர் சேதனராயும் ஆகின்றார்கள். சுக சொரூபனாகிய அவனைப்பற்றிச்சூரியன் முதலியவை பிரகாசிக்கின்றன. சம்சாரங்களுக்கும் அவனே மூலமானவன். உலகங்களெல்லாம் அவனைப் பற்றியே யிருக்கின்றன. அவனுடைய பயத்தினாலே அக்கினி முதலானவை தகித்தலாதித் தொழில்களைச் செய்கின்றன. ஆகையால் அநித்தியமான இந்திரியாதிகளை ஆத்ம சொரூபமாகவே கண்டுபிறகு அவற்றை ஆத்மாவில் ஒடுக்கிஇந்திரியம்மனம்சத்துவம்மகத்துஅவ்வியக்தம்பரம் இவை முறையே ஒன்றனுக்கொன்று பெரிதெனத் தெரிந்து கொள்ள வேண்டும். வேண்டும். பிறகுகண்ணாதிகளுக்கு அகோசரமாயும்சகலலோகங்களுக்கும் காரணமாயும் இருக்கிற அந்த ஆத்மாவைக் கண்ணாடியில் தோன்றுகிற தன் பிரதி பிம்பத்தைப் பார்ப்பது போலத் தேகத்துக்குள் தரிசிக்கிறவனே முத்தனாவான். அப்படிப் பாராதவன் பெத்தனாவான். 

 

பிரமமானது தன் மாயா சம்பந்தத்தாலே சீவன்ஜகம்ஈசுவரன் என்று மூவகையாயிருக்கும். ஈசுவரனாலே ஜீவனானது சம்சார சக்கரத்தில் சுழலும். சாகன சம்பத்திகளினாலே அந்த ஈசுவரனைத் தெரிந்துகொண்டு ஜீவன் முத்தி அடைவான். அந்தச் சீவனும் ஈசுவரனும் எப்போதும் பேதமுள்ளவர்களே. மாயையே ஜீவனுக்குப் போககாரணமாகும்.ஈசுவரன் மாயா காரியங்களோடு சம்பந்தப்படுவதில்லை. மாயா சொரூபம் க்ஷரம் என்னப்படும். ஜீவசொரூபம் அக்ஷரம் என்னப்படும். இந்த இருவகைச் சொரூபமான சிவசொரூப மனனத்தாலே மாயா நிவர்த்தியும் பாசநாசமும் உண்டாகும். அவன் முத்தி சேர்வான். இந்தத் தத்துவமே அறியத்தக்கது. இதற்கு வேறானது ஒன்றுமில்லை. அரணியில் தீயும்எள் முதலியவற்றில் தைலமும் ஒவ்வொரு உபாயத்தினால் எடுத்துக்கொள்ளப் படுவது போல உடலுக்குள் இருக்கும் ஆத்மாவைப் பிரணவத்தினால் கண்டு அடையவேண்டும். தானம்யாகம் முதலியவைகளால் யோகம் சித்திக்கும். அந்த யோகத்தால் ஞானமுண்டாகும். அந்த ஞானத்தால் முத்தி உண்டாகும். இந்தப் பிரமவித்தையை விபூதிருத்திராட்சம் தரிக்கும் சாந்த குண முள்ளவர்களுக்கும்அத்தியாச் சிரமிகளுக்குமே சொல்ல வேண்டும். சாந்தமில்லாதவர்புத்திரரில்லாதவர் இவர்களுக்குச் சொல்லக்கூடாது. தெய்வபக்தியும் குருபக்தியும் உள்ளவர்களுக்குத்தான் இந்தப் பிரமவித்தை சித்திக்கும். நான் வேதப்பொருளை ஆராய்ந்து இதை உங்களுக்குச் சொன்னேன். இதைத் தெரிந்து கொண்டால் மோக மொழிந்து சிவனை அடையலாம் என்று பிரமதேவர் தேவர்களுக்குச் சொன்னார். 

 

 

பதினோராவது அத்தியாயம்.

சர்வ வேதார்த்த சங்கிரகம் கூறியது.

 

அகம் என்னும் பதத்தால் கூறப்படுகிறவனே ஆத்மா. வன் சிவனாயிருந்தாலும் தன் மாயையாலே சம்சாரி யாகிறான். ஆகையினாலே வேதமார்க்கத்தால் முத்திய டைய விரும்பிச்சாந்தி முதலிய குணங்களை யுடையவனாய்ச் சிவபக்தி செய்துசற்குருவை வணங்கிவேதாந்த சிரவணம் செய்யவேண்டும். அதனால் பிரத்தியகான் மாவைச் சிவசொரூபமாகவே அறிய வேண்டும். பெண் மோகத்தை அடையாமல் ஒழித்துச்சிவானந்தத்தை அடைந்தால் அதனாலே ஞானமுண்டாய் அவித்தை ஒழியும். பாவாபாவ ஜக சொரூபமும் நீங்கும். வித்தியாவித்தைகளின் சொரூபமும்குரு சிஷ்ய சொரூபமும் ஒழியும். பிரமம் ஒன்றே தோன்றும். வேதங்களெல்லாம் வியாவகாரிக சத்தியமானசகத்தை முதலிற் சொல்லிப்பிறகு பக்குவர்களுக்கு எல்லாம் பிரமமய மென்று கூறும். பரமார்த்தத்தில் வேறொன்று மில்லாமையால் யோகிக்கு எல்லாம் சிவமாகவே தோன்றும். அவன் அலையற்ற சமுத்திரத்தைப் போலச் சலனமில்லா மலிருப்பான். அவனுடைய நிஷ்டையை மும்மூர்த்திகளும் வேதமும் அறியமுடியாது. அந்த நிஷ்டையானது பரமசிவனுக்கும் உமாதேவிக்கும் இயல்பிலேயே உண்டு. அந்தச் சிவனுடைய பிரசாதத்தினாலே பிரமாவுக்கும்விஷ்ணுவுக்கும்மற்றவர்களுக்கும் அந்த நிஷ்டை கிடைக்கும். அது எப்படியென்றால் சொல்கிறேன் கேளுங்கள். 

 

வினையொப்பு வந்தபோது குருவின் அனுக்கிரகத்தால்கிடைக்கும். அந்தக்குரு வைச் சிவனாகவே பாவிக்கவேண்டும். சிஷ்யன் செய்கிற பணிவிடையால் குருவுக்கு மகிழ்ச்சி யுண்டாகிறபோதுபரமசிவன் பிரத்தியட்சமாவான். புத்தியில்லாமல் குருவுக்கு விருப்பமில்லாததையும்குருவுக்குத் தீமையையும் செய்கிற பாவியானவன் அணையாத தீநரகத்தில் நித்தியமாய்க் கிடந்து வருந்து வான். ஈசனுக்குக் குற்றஞ்செய்தால் குருவானவர் அந்தக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி ஒழித்துவிடுவார். குருவுக்குப் பிழை செய்தால் அந்தக் குருவைத்தவிர வேறு எவராலும் தீர்க்கமுடியாது. தன் சுகத்தைக் கருதாமலே குருவுக்குப் பிரியமானதையே சிஷ்யன் செய்யவேண்டும். அனாத்மாவான சரீரத்தைக் கொடுக்கிற பிதாவைவிட ஞான குருவே மேலானவர். இருவகைச் செல்வங்களையும்கந்தர்வர் முதலானவர்களுடைய செல்வமும்சார்வ பௌம பதவியும்மந்திர தந்திரங்களும்இலவுகிக உபாயங்களும் கொடுப்பவர்களும் சிறந்த குருவல்லர். பரம அத்துவித ஞானத்தை யளித்துச் சிவசொரூபத்தை அறிவிக்கிற வனே மேலான குருவாம். அவனே சிவனுமாவான். சர்வவேதாந்த தாத்பரியத்தை எனக்குப் பரமசிவன் அனுக்கிரகித்தபடியே நான் உங்களுக்குச் சொன்னேன். வேதத்துக்கு இதைத்தவிர வேறு அர்த்தத்தைச் சொல்கிறவன் அந்தகூப நரகத்தில் விழுவான். 

 

வேதத்தின் அர்த்தம் அத்துவிதமே தவிர வேறொன்றுமில்லை. வேறொரு அர்த்தமாயிருக்குமானால் என் தலை அறுந்து விழக்கடவது. இதற்கு வேறான அர்த்தம் ஒன்று இருக்குமே நீங்கள் நினைத்தால் தேவர்களே! உங்கள் தலைகளும் அற்று விழக்கடவன. இதுசாத்தியமாகும். இந்த விஷயத்தில் பரமசிவன் பாதத்தைத் தொடுவேன் என்று சொல்லிப் பிரமதேவர் பரமசிவனுடைய பாதபங்கயங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட தேவர்களும் பமசிவனுடைய பாதங்களைச் சிந்தித்துக் கொண்டு அசைவற்றிருந்தார்கள். 

 

அப்போது சிவபெருமான் ஆயிரஞ் சூரியர்களுதித்ததுபோலத் தமது திருமேனி பிரகாசிக்கப் பரிஜனங்கள் புடைசூழஉமா தேவியாருடன் எழுந்தருளி வந்து காட்சி தந்தருளினார். அப்போது பூமாரிபெய்தது. தெய்வ வாத்தியங்கள் முழங்கின. வேத கோஷம் பரவிற்று. சகல வுலகமும் மகிழ்ச்சியடைந்தன. அப்போது பிரன் முதலிய தேவர்கள் பரமசிவனை உமாதேவியாரோடும் ஒரு ஆசனத்தில் உட்காரவைத்து அருச்சித்துப் பூசித்து மகிழ்ந்து வணங்கினார்கள். அக்காலத்தில் பரமசிவன் சகல ஜீவாத் மாக்களுக்கும் மகிழ்ச்சி யுண்டாகும்படி ஆனந்தத் தாண்டவம் செய்தருளினார். உமாதேவியார் எல்லாத்தேவர்களுக்கும் மெய்ஞ் ஞானத்தை அருளிச்செய்தார். ஞானக்கண்ணை அடைந்த தேவர்கள் பரமசிவனைத் துதித்து மகிழ்ந்தார்கள். வேதவசன ங்களினாலும்பஞ்சாட்சர மந்திரத்தாலும் தோத்திரம் செய்தார்கள். சிவ பெருமான் அவர்களை நோக்கித் தேவர்களே! எமது கருணையால் நீங்கள் உண்மை ஞானத்தை அடைந்தீர்கள். பிரமதேவர்சொன்ன இந்தக்கீதை வேதத்துக்குச் சமானமானது. உத்தமமான குணங்களையுடைய அந்தணர்களே இதைப் பாராயணம் செய்யத்தகும்மற்றவர்கள் தீண்டவும்படாது என்று கூறி உமாதேவி யாருடன் மறைந்தருளினார். திருமாலானவர் தேவர்களை நோக்கி நீங்கள் பக்தியினாலே சிவானுக்கிரகத்தை அடைந்தீர்கள் என்று கூறிஇலட்சுமி தேவியொடு வைகுந்தம் போய்ச் சேர்ந்தார். 

 

பிறகு தேவர்கள் எல்லாரும் பிரமதேவனைப் பலதரம் பணிந்துதம்முடைய உலகம் போய் மகிழ்ந்திருந்தார்கள். பிரமதேவரும் பரமசிவனுடைய திருவடியைத் தியானித்துக்கொண்டிருந்தார் என்று சொல்லிச்சூதமுனிவர் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்து ஆனந்தக்கடலில் முழுகியிருந்தார். ரிஷீச்வரர்களும் சூதமுனிவரைவணங்கித்தங்கள் இருதயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்து ஆனந்த மடைந்திருந்தார்கள்.

             

பிரமகீதை முற்றிற்று.

 

 

எக்ஞவைபவகாண்டம்

உத்ரபாகம்.

சூதகீதை முதலாவது அத்தியாயம்.

சூதர் வியாசர் அனுக்ஞை பேற்றது.

 

சௌனகாதி முனிவர்அலையற்ற சாகரம்போல அசைவற்றிருக்கிற சூதமுனிவரைப் பக்தியுடன் பணிந்துதுதித்துஉமது கீதையாகிய சூதகீதையையும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஆகையால் அதனையும் எங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று கேட்கச்சூதமுனிவர் மனமகிழ்ந்து தமது குருவான வியாசமுனிவரைச் சிந்தித்தார். அதையுணர்ந்த வியாசமுனிவர் அங்கே வந்தருளினார். சூதமுனிவர் எழுந்து தமது குருவாகிய வியாசமுனிவரைவணங்கிப் பூசித்துத் துதித்து அவரது ஆசீர்வாதம் பெற்றபின்அவரைநோக்கிஇந்தச் சௌனகர் முதலான ரிஷிகள் பக்தியுடன் சூதகீதையைக் கேட்க விரும்புகிறார்கள். அதை அவர்களுக்கு நான் சொல்வதற்கு அனுக்கிரகம் செய்யவேண்டும் என்று கேட்டார். வியாசர் மன மகிழ்ச்சியுடன் சூதமுனிவனே அப்படியே சொல்லக்கடவாய் என்று கூறிச் சூதருடைய இருதயத்தைத் தமது கையால் தொட்டுஅந்த இருதயத்தில் பரமசிவனை ஸ்தாபித்துவிட்டு வியாசர் மறைந்தருளினார். குருவின் அனுக்ஞை பெற்ற சூதமுனிவர்தமது குருவின் திருவடிகளையும்பரமசிவனுடைய பாதாரவிந்தங்களையும் தியானஞ் செய்துபிறகு சொல்லத்தொடங்கினார். 

 

                     - 

இரண்டாவது அத்தியாயம்.

பரம விஞ்ஞான முரைத்தது.

 

சச்சிதானந்த சொரூபனாகியும்பிரமாவினால் சிருஷ்டிக்கப்பட்ட சகல உலகங்க ளுக்கும் கருத்தாவாகியும்பசுபாசங்களுக்கு வேறாகியும் மேன்மையடைந்து விளங்குகி றவன் பரமசிவன் ஒருவனேயாகும். ஆகாச முதலான பஞ்சபூதங்களும் அவற்றின் குணங்கள் ஐந்தும்ஞானேந்திரியங்கள் ஐந்தும்கர்மேந்திரியங்கள் ஐந்தும்வாயுக்கள் பத்தும்மனாதிகள் நான்கும்இவைகளுக்குக் காரணமான அவித்தை ஒன்றும் ஆகிய இந்த முப்பத்தைந்துக்கும் அப்பாற்பட்டவன் பசுவாகும். பமசிவன் இந்தப்பசுவுக்கு வேறாயுள்ளவன். இந்தப் பசுக்களுக்கு அனாதியிலேயே அஞ்ஞானம் கலந்திருக்கிறது. அதுவே சமுசாரவித்தாகும். சிவஞானத்தினாலே அஞ்ஞானம் நீங்கும். அந்த அஞ்ஞா னம் அவித்தைமாயை என்று இரண்டு சொரூபமா யிருக்கும். அவற்றுள் அவித்தை யால் பசுபேதமும் மாயையால் பரத்துவபேதமும் கற்பிகப்பட்டன. தேகேந்திரியாதி வாசனாபேதத்தாலே பசுபேதத்திற்கு அவித்தையும்குணங்களுடைய வாசனாபேதத் தால் பரதத்துவ பேதத்திற்குமாயையும் காரணங்களாகும். முனிவர்களே! சத்துவ குணதேகமுடையவனாகியும்சங்காரத்துக்காக தமோகுணமுடையவனாகவும் உள்ளவன் உருத்திரன். தாமதகுண சரீரமும் திதித் தொழிலுக்காகச் சத்துவகுணமும் உடையவன் திருமால். இராஜதகுணசரீரமும்சிருஷ்டிக்காக இக்குணத்தையே குணமாகவுமுடையவனாக இருக்கிறவன் பிரமாவாம். சத்துவகுணத்தாலே வெண்ணிற மும்இராஜத குணத்தாலே செந்நிறமும்தாமதகுணத்தாலே கரியநிறமும் உண்டாகும். அதனாலே ருத்திரன்பிரமன்விஷ்ணுஇம்மூவரும் முறையே வெண்மைசெம்மைகருமையான நிறங்களையுடையவர்களா யிருக்கிறார்கள் என்று அறிய வேண்டும். பரதத்துவ புத்தியாலே இந்த மூவரையும் பரமென்று வேதாகமங்கள் சொல்லும். ஆயினும் சத்துவகுண தேகமுடைய உருத்திரன் மும்மூர்த்திகளுள் சிறந்தவனாவான். 

 

பரிசுத்தமான ஞானாதிகளெல்லாம் சத்துவத்தினாலேயே உண்டாகும். ஆகை யால்சத்துவகுணம் சிறந்ததாகும். அந்தச் சத்துவகுணப் பிரதானத்திலே உருத்திர மூர்த்தி தன்னைப் பரதத்துவமாகவே தெரிந்து கொள்வான். காரியார்த்தமாக ஒருகாலத் தில் உருத்திரரூபமாகத் தெரிந்து கொள்வான். பரதத்துவபுத்தி உருத்திரமூர்த்திக்கு இயல்பிலேயேயுள்ளது. மற்ற இருவருக்கும் தங்கள் குணவிசேஷத்தால் பரதத்துவம் அற்பமாதலால் தங்களை மாயவனென்றும்பிரமனென்றும் தெரிந்து கொள்வார்கள். அந்தப் புத்தி அவர்களுக்குச் சுவபாவமாகவே யுள்ளது. ஆகையால் பிரம விஷ்ணுக் களை ஆராதிப்பவர்கள் சீக்கிரத்தில் ஞானத்தை அடையமாட்டார்கள். உருத்திரனை ஆராதித்தாலும்அவனே மேலானவனென்று கருதினாலும் சீக்கிரத்தில் கிடைக்கும். பிரமனும் மாலும்  உருத்திரனை விட மேலானவர்களென்று எண்ணுகிற புத்தியும்மூவரும் பரதத்துவத்திற்கு மேற்பட்டவர்கள் என்கிற புத்தியும் சம்சாரபந்தத்திற்கே காரணமாகும். பிரமன்மால்சுராட்விராட் முதலானவர்களைப் பரதத்துவமாகவே கருதுகிற புத்தி மந்திரியை அரசனென்று கருதுதல் போலவே பயன்படும். எல்லாவற்றி னும் பிரமத்தைக் கருதுகிற புத்தி விசேஷமாம். உருத்திரனுக்கு உள்ளே சத்துவ குணமும் வெளியில் தாமதகுணமுமாம்விஷ்ணுவுக்கு உள்ளே தாமதகுணமும் வெளியில் சத்துவகுண உள்ளும் புறமும் இராஜத குணமேயாகும் என்று மேலோர் சொல்வார்கள். இவற்றுள் சத்துவகுண சம்பந்தத்தால் விஷ்ணுவே மேலானவனெ ன்றும்உருத்திரனே சிறந்தவனென்றும் சிலர் வாதிப்பார்கள். அந்தச் சத்துவகுணமில் லாமையால் பிரமாவை மேலானவனென்று வாதிப்பதில்லை. அளவில்லாத ஜன்மங்களில் செய்த புண்ணியம் உடையவர்களுக்கே திருமாலைவிட உருத்திரமூர்த்தி மேலானவர் என்கிற புத்தி யுண்டாகும். அளவில்லாத ஜன்மங்களில் செய்த பாவமுள்ள வர்களுக்கே உருத்திரனைவிட மால் சிறந்தவன் என்னும் புத்தியுண்டாகும். 

 

நிருவிகற்பமான சிற்பரதத்துவம் பசினே. அந்தப் பரசிவன் வாமபாகத்தில் உமாதேவியாரையும்திரிநேத்திரங்களையும்சந்திரனை அணிந்த சிரசையும் உடையவ ராய்நடனப்பிரியராய்மும்மூர்த்திகளும் வணங்கவும்வணங்கும் படியான பலமூர்த்த ங்களை உடையவராயும் எழுந்தருளியிருப்பார். அந்தச்சங்கரனே சத்தியமான பரதத்துவ மாம். முனிவர்களே! அந்தச் சங்கரனுக்கு வேறாக ஒன்றுமில்லை. மாயாகாரியமான குணங்களுடன் கூடியிருக்கிற மும்மூர்த்திகளும் அவித்தியா உபாதியுள்ள சீவ விபாகத்தில் சேர்ந்தவர்களாகார். பரமாத்ம விபாகத்தில் சேர்ந்தவர்கள். அப்படியானால் மூவர்களும் சமனாவார்கள் என்பது கூடாது. சத்துவ குணப் பிரதானத்தால் உருத்திர மூர்த்தியே சிறந்தவர். மாலும் அயனும் தங்கள் சாதாரண சொரூபத்தாலும்விபூதி சொரூபத்தாலும் உருத்திர மூர்த்தியைச் சேவிப்பார்கள். அவர்களை உருத்திரமூர்த்தி ஒருபோதும் சேவிக்கமாட்டார். சொரூபத்தால் வாயுக்கள் ஒப்பாகத் தோன்றினாலும் அபானவாயுவும் உதானவாயூவும் சமமாகுமாசரீரத்தில் ஒத்திருந்தாலும் காலுந் தலையும் சமமாகுமாஅப்படிச்சொன்னால் மூடர்கள் கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அல்லவாதிருமாலையும் பிரமாவையும் உருத்திரமூர்த்திக்குச் சமமாகவாவது மேலாகவாவது எண்ணுகிறவர்கள் நெடு நாள் நரகத்தில் விழுந்து கிடப்பார்கள். 

 

வேதாகமங்கள் உருத்திரனுக்குச் சுயசொரூபத்தினாலும்பரதத்துவ சொரூபத்தி னாலும் விசேஷம் சொன்னது போலத் திருமாலுக்கும் பிரமனுக்கும் சொன்னதில்லை. தத்தம் விபூதிகளை விட மும்மூர்த்திகளும் சிறந்தவர்கள். அந்த மூர்த்திகளுக்குள் உருத்திரன் விசேஷமானவர். அந்த உருத்திரனை விட மாயாவிசிஷ்டனான சிவன் மேலானவன் என்று அறிந்தோர் சொல்வார்கள். சச்சிதானந்த பரசிவன் அந்தச் சிவனுக்கும் மேலானவன். அவனுக்கு வேறாக ஒன்றுமேயில்லை. வேதமும் இப்படியே சொல்கின்றது. அவனே பிரபஞ்சமெல்லாமாவான் என்று தருக்கத்தாலும்அளவைகளா லும்குரு உபதேசத்தாலும்சுவானுபவத்தினாலும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் வேதாந்தவாக்கிய நிஷ்டையாம். இதை நிச்சயமாய்த் தெரிந்துகொண்டால் முத்தியடைதலும் எளிதாகும் என்று சூதமுனிவர் சௌனகாதி முனிவர்களுக்குச் சொன் னார். 

 

 

மூன்றவது அத்தியாயம்

வேதப்பிராமாணிய விசார முரைத்தது.

 

மணிமந்திர ஒளஷதங்களின் சுபாவத்தைச் செய்கிறவர்கள் அடைவதுபோல நிர்விகாரியான பரமசிவனுமிருந்து பிரபஞ்சத்தைச் சிருஷ்டிப்பான். பரமசிவன் அத்துவயன்நிர்மலன்நிர்விகாரிசிருஷ்டி திதி சங்காரகர்த்தன்என்று அனாதி வேதங்கள் சொல்கின்றன. வேதத்தினால் அறியத்தக்க சூட்சுமப்பொருளின் அளவையை அறியாத பாகியதர்க்கம் என்னசெய்க் கூடும். அந்த வேதமோ அனாதி. அந்த வேகத்து க்குத் தன்னாலும் பிறவற்றாலும் தோஷமுண்டாவதில்லை. சிலர் வேதம் சிவனால் சொல்லப்பட்டதென்பார். அது சுயம்புவா யிருந்தாலும் ஆப்த சம்பந்தத்தால் அப்படிச் சொல்லுவதும் கூடும் என்றும் சிலர் சொல்வார்கள். அன்னிய சம்பந்தத்தாலே தோன்றுதலானதுபளிங்கானது செவ்வரத்தம் பூவின் சம்பந்தத்தால் செந்நிறம் பெறுதல் போலவே பிராந்தியாம். ஆப்த அபேட்சையால் வேதம் பிரமாணமாவதில்லையென்று முனிவர்களே! நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். சுயம்புவான வேதத்துக்கு ஆபத்சம்பந்தத் தால் பிராமாணியம் உண்டாகுமென்பது மயக்கமேயாம். பரமசிவனால் சொல்லப்பட்டது என்கிற பட்சத்திலும் வேதம் பிராமாணியம் ஆவதில் தடையில்லை. கிஞ்சிக்ஞனான சிவனுக்கு உண்டாகிற தோஷமானது எவனுடைய தியானத்தினாலே தொலைந்து போமோ அந்தச் சர்வக்ஞனாகிய பரமசிவனுக்குத் தோஷமேயில்லை. அவனே ஆப்தன் எனப்படுவான். ஆகையால் இரண்டு கட்சிகளாலும் வேதம்பிரமாண மென்பதற்குத் தடையேயில்லை. பரமார்த்தத்தில் வேதம் அனாதி யென்று அறியுங்கள். சிவன் அதை வெளிப்படுத்தினவன் என்று பெரியோர் சொல்வார்கள். வியஞ்சகத்தன்மையை (வெளியிடுந்தன்மையை) அறிந்து செய்தான் என்று சொல்வார்கள். ஆகையினால் வேதத்தில் சொல்லப்பட்ட அர்த்தமே நிச்சயமானது. சிவன் சித்துரூபன்ஜகம் சைத்தியம்இவ்விரண்டும் எப்படி ஒன்றாகும் என்கிற ஆட்சேபனைகளின்றித் தெரிந்து கொள்ளுங்கள். சிவனே சித்தும் சைத்தியமுமாமென்று வேதங்கள் கூறுதலால் ஆட்சேப னைக்கு இடமேயில்லை. வேதம் சொல்லுகிற கருமகாண்டத்தில் ஆட்சேபனை யில்லாதது போல் ஞான காண்ட த்திலும் ஆட்சேபனையில்லை. 

 

நோயையும் ஒளஷதத்தையும் போலப் பாத்தியபாதக பாவத்தால் சித்தும் சைத்தியமும் என்று வேதம் கூறும். மாயா மயக்கத்தாலே வேதப்பொருளில் விரோதமும் அவிரோதமும் தோன் றும். உருவத்தைப் பார்ப்பதற்குக் கண்களைப் போல் மற்ற இந்திரியங்கள் உபயோகப்படாதது போலத் தருமம் ஈசுவரன் முதலிய பதார்த்தங் களை உணர்வதற்குத் தருக்கம் பயன்படாது. ஆகையால் அறிவில்லாமல் வேதார்த்தத் தில் தருக்க மிடுகிறவன் நரகத்தையே அடைவான். ஆகையால் வேதம் கூறியபடியே ஜகமெல்லாம் சிவனிடத்திலேயே தோன்றி ஒடுங்கும். அவனுடைய மகிமையை அறிபவர் ஒருவருமில்லை. அக்கினியாலே இரும்பு பிரகாசிப்பது போலவும்மற்றப்பொருளைத் தகிப்பது போலவும்பரமசிவம் பிரகாசிக்கிற வேதம் எல்லாவற் றையும் விளக்கும். இரும்பைச்சேர்ந்த அக்கினி தகிப்பது போல வேதத்தைச் சார்ந்திருக்கிற சிவமும் சகல காரியங்களுக்கும். சாதகமாயிருக்கும். இந்திரியங்களுக்கு அகோசரமான தரும் முதலியவைகளில் வேதத்தை விட்டுச் சிவன் பிரமாணமாவ தில்லை. சிவத்தைவிட்டு வேதமும் பிரமாணமாவதில்லை. சடமான சப்தம் இந்திரியங் களுக்கு எட்டாதபொருளில் பிரமாணமாக மாட்டாதுஆகையால் சிவத்தினால் பிரகாசிப்பிக்கப்பட்டுஅந்தச்சிவத்துக்கு அபேதமாயிருந்து சகல விஷயங்களிலும் பிரமாணமாயிருக்கும். நான் பூர்வத்தில் மேருமலைச்சாரலில் தவம் செய்து இந்தப் பொருளைச் சிவபெருமானால் தெரிந்து கொண்டேன். அந்தச் சிவனுடைய கட்டளை யாலே மேன்மையையடைந்த இந்தச் சங்கிதையை உங்களுக்குச் சொன்னேன். அந்தச் சிவகடாட்சத்திலே அற்பனாகிய நான் மஹா தவசிகளான உங்களுக்கும் குருவாகும் தன்மையை அடைந்தேன். சிவனுடைய அனுக்கிரகத்தினாலே விஷ்ணுபிரமாவிராட்டுசம்ராட்டுசுராட்டு முதலிய எல்லாத் தேவர்களும் தோன்றி ஒடுங்குவார்கள். 

 

இழிந்த ஜந்துக்களும் சிவபெருமான் கருணையாலே திருமால் பிரமன்இந்திரன் முதலியவர்களாகி வரவும் கூடும் என்று தெரிந்து கொள்ளுங்கள். பரமசிவனுடைய அடியார்களும்அந்த அடியார்க்கடியார்களும் சுதந்தரமுடையவர்களாய்த் தேவர்களும் புழும் படியிருப்பார்கள் என்றால் சிவனுடைய சுதந்தரத்தைச் சொல்லவும் வேண்டு மோசிவன் சுதந்தரனாகையால் தான் திருப்பாற் கடலிலுண்டான விஷத்தைச் சாப்பிட்டுத் தேவர்களைக் காப்பாற்றினான். பிரமாவின் சிரத்தைக்கொய்தான். இன்னம் பல அருஞ் செய்கைகளைச் செய்தான். ஆகையால் நீங்கள் சிறப்பில்லாத தருக்கத் தைவிட்டுவேதத்துள் விளங்கும் அத்துவித ஞானத்தை அடையுங்கள். பேதமும் பேதாபேதமும் சிலர் சொல்வார்கள். மூடர்களால் கொள்ளப்பட்டபேதம் மித்தையாத லாலும் ஈசனுக்கு வேறாய் ஒன்றுமில்லை என்கிற அபேதத்தை உணர்ந்தவனுக்குப் பயம்மோகம்சோகம்இவைகள் இல்லையென்றும்மஹாவாக்கியார்த்தமும் ஏகத்துவமே கூறுவதென்றும் வேதம் சொல்லனாலும்அபேதார்த்தத்தையே கொள்ள வேண்டும். சிவனுடைய அனுக்கிரகத்தால் அடையத்தக்க இந்த ஞானம் வேறொன்றா லும் அடையப்பட மாட்டாது. ஆகையாலே வேத மார்க்கத்தைப் பற்றியே சிவசொரூபத் தை அறிய வேண்டும். 

 

 

நாலாவது அத்தியாயம்.

விசேஷ சிருஷ்டி கூறியது..

 

கர்த்தாவான பரமசிவன் தன் மாயையோடு வேற்றுமையில்லாமல் கலந்து இருந்தாலும்பூர்வகற்பவாசனையாலும்காலகர்மானு குணத்தினாலும்மாயைக்கும் தனக்கும் பேதம் கற்பித்துக் கொண்டிருப்பான். முனிவர்களே கற்பிதமானது உண்மை யில்லாமையினாலே கற்பித பேதம் கூறுதலால் பாதகம் உண்டாகாது. அவ்விறைவன் பூருவவேட்சண வாசனையால்தான் ஈட்சிதாவாயுமிருந்து கொண்டுதன்மாயையோடு கலந்துஅந்த மாயாகுண பேதங்களால் மும் மூர்த்திகளைச் சிருஷ்டித்துஅவர்களுக் குள்ளும் அந்தரியாமியாயிருப்பான். அந்த மும்மூர்த்திகளும் பரதத்துவ அபேதத்தால் முத்தொழில்களையும் செய்வார்கள். விசேஷரூபத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைச் செய்வார்கள். சூட்சுமபூதங்கள்அந்தக் கரணங்கள்பிராணங்கள்ஞானேந்திரிய கர்மேந்திரியங்கள்இவைகளின் சிருஷ்டி உருத்திரமூர்த்தியால் நடக்கும். பரதத்துவ அபேதத்தினாலே பிரமனும் விஷ்ணுவும் சிருஷ்டி செய்வார்கள். முனிவர்களே பரமார்த்தத்தில் பரசிவனே எல்லாவற்றையும் சிருஷ்டிப்பவனாகும் 

 

சமஷ்டிகளிலிருந்து தேவர்கள் உற்பத்தியாவார்கள். எப்படி யென்றால்அந்தக் கரண சமஷ்டியிலிருந்து ஹிரண்யகர்ப்பனும்பிராணசமஷ்டியிலிருந்துசூத்திராத்மா வும் உதிப்பார்கள்ஞானேந்திரிய சமஷ்டியிலிருந்து திக்கு முதலானவைகளும் தோன்றித்திக்கு சுரோத்திரத்திற்கும்வாயு தொக்கிற்கும்ஒளி நேத்திரத்திற்கும்வருணன் நாவிற்கும்பிருதிவி கிராணேந்திரியத்துக்கும்அபிமான தெய்வங்களாயிரு க்கும்கர்மேந்திரிய சமஷ்டியிலிருந்து திரிவிக்கிரமன் முதலானவர்கள் தோன்றித்திரிவிக்கிரமன் பாதத்துக்கும்இந்திரன் அஸ்தத்துக்கும்அக்கினி வாக்குக்கும்பிரஜாபதி உபஸ்தத்துக்கும்மித்திரன் குதத்துக்கும் அபிமானிகளாவார்கள். மனம்புத்திஅகங்காரம்சித்தம் இவைகளுக்கு முறையே சந்திரன்குருகாலாக்கினிருத்திரன்வருணன் இவர்கள் அபிமான தெய்வங்களாவார்கள். ஸ்தூலபூதங்கள்அண்டபேதங்கள்உலகபேதங்கள்ஜீவதேகபேதங்கள்இவைகள் முன்கற்பம்போலச் சூட்சும பூதங்களிலிருந்து உண்டாகும். ஜீவர்களுக்குப் போகார்த்தமாக அநேக பெதிகங்களும் உண்டாகும்.

 

நிர்மல சிவன் தன் மாயையாலே சிருஷ்டிக்கப் பட்டவைகள் எல்லாம் காரியம் காரணத்துக்கு வேறல்ல என்கிற நியாயத்தால் மாயாரூபமேயாம். அந்த மாயையும் தனக்கு அதிஷ்டானமான பிரமத்துக்கு வேறாகாது. பரசிவமே ஜகம்மாயைஜீவன் முதலான சொரூபமாகும். சிவத்தை ஜகத்துக்கு வேறென்று எண்ணுகிறவன் பந்தம் ஒழி யமாட்டான். ஆகையாலேஅளவைப் பிரமாணம்தருக்கம்குருவுபதேசம்தன் அனுபவம் இவைகளாலும் சிவானுக்கிரகத்தாலும்எல்லாம் சிவமேயாம் என்று தெரிந்து கொள்ளவேண்டும். அப்படி அறிகிறவன் அழியாத முத்தியை அடைவான். அப்படி யறிகிற சிவஞானமும் எல்லாம் சிவம் என்று நிச்சயபுத்தியுடன் இருப்பவனுக் குச் சித்தியாம். எல்லாம் சிவமாகக்காணும் அறிவுள்ள ஞானிகளுக்கு ஜகமில்லை. அஞ்ஞான ஞாங்களுமில்லை. அவன் தேஜோமபமாகவே யிருப்பான். அவனுடைய நிஷ்டை உண்டோ இல்லையோ என்று சொல்வதற்கும்றிவதற்கும் ஒரு வராலும் முடியாது. இது வேதமுடிவான இரகசியமாம். 

 

 

ஐந்தாவது அத்தியாயம்.

ஆத்மானாத்ம விவேகம் உரைத்தது.

 

கடாதிகளில் இதம் (இது என்கிற) புத்தியும்ஆத்மாவில் அகம் (நான் என்கிற) புத்தியும் சகல ஜந்துக்களுக்கும் இருக்கிற படியால்இதம் புத்திக்கு விஷயமாயிருப்பது அனாக்மாவாம். அகம் புத்திக்கு விஷயம் ஆத்மாவேயாம் என்று தெரிந்துகொள்ள வேண்டியது. அந்த இரண்டுவகையான புத்திகளும் சரீரத்திலும் உண்டாகின்றன. இதம் புத்தி சரீர விஷயமாம். அகம்புத்தி அவ்வுடலுக்குள்ளிருக்கும் சிதாத்மாவின் விஷயமாகும். உடலினிடத்தில் அகம்புத்தியுண்டாதல் பிராந்தியாலேயாம். உடம்பு அசித்து ரூபமாதலால் அகம்புத்திக்கு விஷயமாகாது. இந்திரியம்பிராணன்மனம்புத்திசித்தம்அகங்காரம்இவைகளும் அசித்து ரூபமாதலால் அகம்புத்திக்கு விஷயமாகாவாம். பரிணாமமா யிருக்கிற் பால் முதலியவை யெல்லாம் அசேதனமா கவே யிருப்பது போல இந்திரியாதிகளும் அசேதனங்களே யாம். 

 

சர்வப் பிரத்தியேய ரூபமாய்ப் பரிணமிக்கும் அகங்காரமும் அனாத்மா ஆனால்அகம்புத்திக்கு விஷயமான ஆத்மாவே பிரத்தியகாத்மாவாம். நிர்மலமான புத்தி விருத்தியாம்பொருட்டு வியாபித்துஅந்தப்புத்தி விருத்திக்குச் சாட்சியாய மிருப்பான். தன்னுடைய ஞான ஒளியால் அஞ்ஞானத்தையும் விலக்கிக் கொள்வான். ஆகையால் அவன் விருத்திக்கு உட்பட்டவனல்ல. அந்தவிருத்தியில் விஷயமானவனாகத் தோன்றினாலும் அவன் சுயம்பிரகாசனேயாவான். அந்தப்புத்தி விருத்தியில் வியாபித்திருக்கும் சைதன்னிய சம்பந்தத்தால் ஜடவடிவமான கடாதிகளைப் பிரகாசிப் பிக்கிற அகம்பதார்த்தமான ஆத்மாவும் அந்தக் கடாதிகளைப்போல அநேகமாம். சுயம்பிரகாசத்தாலே ஒன்றேயாகும். எந்தவாத்மாவின் சம்பந்தத்தாலே அகம் விருத்தி பிரத்தியேயமாய்த் தோன்றுமோ அந்த ஆத்மா பிரத்தியேயத்துக்கு எப்படி அதீனமாவான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அகம் விருத்தியும் சுயம் பிரகாசச் சைதன்னியத் துடனே சேர்ந்து பிரகாசிக்கும். அந்தச் சைதன்னிய சம்பந்தத்தாலே அகங்காரமும் ஞாதாவைப் (அறிவிக்கிறவன்) போலவே காணப்படும். ஆத்மாவும் அகங்காரசம்பந்த முடைமையால் ஆத்மாவும் கருத்தாபோக்தாசுகிதுக்கிகளைப் போலப் பிராந்தியால் அறியப்படுவான்.பரமார்த்தத்தில் ஆத்மாவுக்குச் சின்மாத்திர சொரூபத்தைத் தவிர வேறு ரூபமில்லை. பல வேதங்களிலும் காணப்படும் அகம் பதத்துக்குச் சிதாத்மாவே பொருளாம். "கோ" என்னும் பதத்துக்கு கோத்துவமே (பசுத் தன்மை) பொருளாவதுபோல என்று தெரிந்து கொள்ளுங்கள். கோத்துவம் வியக்தி சம்பந்தத்தால் எப்படிப் பல பேதங்களாகத் தோன்றுமோ அப்படியே சித்துப் பொருளும் அகங்கார சம்பந்தத்தால் பேதமாகக் காணப்படும். காணப்படும். கோ என்னும் பதம் ஒன்றாயிருந்தாலும்வியக்தி பேதத்தால் பேதமான அர்த்தங்களைத் தருவதுபோலஅகம் பதமும் ஒன்றாகவே யிருந்தும் வியக்திபேதத்தால் பேதமாகவே யிருக்கும். கோ பதத்திற்குப் பிரதீதியினால் கோவியக்தி என்ற அர்த்தமுண்டானாலும் பரமார்த்தத்தில் கோத்துவமே அர்த்தமாகும். அப்படியே அகம் என்ற பதத்துக்குப் பிரதீதியினால் அகங்காரமே அர்த்தமாகத் தோன்றி னாலும்பரமார்த்தத்தில் சிதாத்மாவே அர்த்தமாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். சாட்சி சொரூபம் ஒன்றாயிருந்தாலும்அந்தக்கரண பேதத்தால் பேதவிவகார முண்டாகும். உருத்திராதிகளும் அகம் பதத்தைச் சிதாத்மாவி னிடத்தில் உபயோகப் படுத்துவார்கள். 

 

சுழுத்தியிலிருந்து எழுந்திருந்த புருஷன் நான் சுழுத்தியிலிருந்தேன் (நன்றாய்த் தூங்கினேன்) என்று சுழுத்தியிலிருந்த ஆத்மாவின் விஷயத்தில் அகம் என்னும் சொல்லை உபயோகப்படு த்துகிறான்ஆகையாலும் அகம் பதம் சிதாத்மாவையே பொரு ளாக உடையது. இரும்புடன் கூடின நெருப்பே யெரிக்கின்றது. ஆயினும் இரும்பு தகிப்பதுபோலத் தோன்றும். அதுபோலவே அகம் என்பது ஆத்மவாசகமேயாம். சைதன்னிய சம்பந்தத்தால் அகங்காரமும் அகம் பதப்பொருளாகவே தோன்றும். இப்படியே தேகம்பிராணன்அந்தக்கரணம் இவையெல்லாம் ஆத்மாவுக்கு வேறாகப்படுத்துச்சர்வசாட்சியான சச்சிதானந்த ஆத்மாவை தியானிக்க வேண்டும். உருத்திரன்விஷ்ணுமுதலானவர்களும் சின்மாத்திரமே அகம் பதார்த்கமென்று தெளிந்து. யாமே பிரமமென்று சொல்வார்கள். வேதாந்தமும் இப்படியே சொல்லும். ஆகையால் பிரத்தியகாத்மாவே பரசிவமாம். குருவுபதேசாதிகளால் அனாத்மாவாகத் தோன்றுவன எல்லாவற்றையும் ஆத்மாவாகத்தெரிந்து கொண்டுஅந்த ஆத்மாவையும் சுத்தபிரமமாகக் கண்டுஅந்த நிச்சயத்தையும் சின்மாத்திரத்தில் ஒடுக்கிஅந்த லயத்தையும் சின் மாத்திரமாகத் தெரிந்து கொண்டுசுத்த கேவல சொரூபமாக இருப்பவன் பிரமஞானியாவான். இந்தப்பரம நிஷ்டை சற்குரு கடாட்சத்தாலே தான் உண்டாகும். 

 

அந்தக் குருகடாட்சமும்சிவானுக்கிரசுத்தாலேயே கிடைக்க வேண்டும். ஜீவன் முதல் எல்லாம் சிவமே யென்னும் ஞானமே சிவப்பிரசாதமாகும். அந்த ஞானமுடைய வனே சிவஞானியாவான். அவனுக்கு வைதிகம் தாந்திரிகம்விதிவிலக்குபோச்சியம் அபோச்சியம் என்பன வில்லை. பரமானந்த ரூபனாகவேயிருப்பான். வேதபக்திகுருபக்திஉமாதேவியார் பக்திசிவபக்தி இவைகளாலே எல்லாம் சிவ சொரூபம் என்கிற மெய்ஞ்ஞானம் உண்டாகும். அந்த ஞானத்தால் சம்சார நிவிர்த்தி உண்டாகும். அந்த நிவிர்த்தி உண்டாகிறதற்கு ஞானமே சாதகமாகும். அந்த ஞானத்தைப் பெறுவதற் குக் குருபக்தி அவசியம் வேண்டும். 

 

 

ஆறுவது அத்தியாயம்.

சர்வசாஸ்திர சங்கிரகம் உரைத்தது.

 

பரதத்துவ மென்று சொல்லப்படுவதுஉலகத்தில் எல்லார்க்கும் ஆத்ம சொரூபமாக இருந்த போதிலும்அதிசூட்சுமமாயிருப்பதினால் தேவர்களாலும் அறியப்படுவதல்ல. அந்த ஆத்ம சொரூபத்தை உருத்திரமூர்த்தியே எப்போதும் அறிந்து கொண்டிருப்பார். பிரமவிஷ்ணுக்கள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு காலத்தில் அறிவார்கள். சிவானுக்கிரகத்தால் திரிமூத்திகளும்தேவர்களுக்கும் உண்டாகும் பிரமஞானத்துக்குப் பிரமமே பிரகாசமாகும். மும்மூர்த்திகளும் பரமகாரண பரசிவத்தை மூர்த்தி சொரூபமாக எப்போதும் தியானிப்பார்கள். திரிமூர்த்திகளின் விபூதி சொரூபமான தேவர்களும் பரசிவத்தையே தியானிப்பார்கள். தியானிப்பவர்களுடைய பாவத்தைப் போக்க வல்ல மும்மூர்த்திகளும் சிவ சொரூபமேயென்று பெரியோர் சொல்வார்கள். மும்மூர்த்திகளும் அவர்களுடைய அவதார மூர்த்திகளும் சிவத்தியானம் செய்தாலும் பரமாத்மாவின் விபாகத்தில் சேர்ந்தவர்களே யல்லாமல் சீவர்களில் சேர்ந்தவர்களாக மாட்டார்கள். 

 

பரதத்துவமும் உபாதிபேதத்தாலே ஜீவாத்மா பரமாத்மா என்று இருவிதமாயிரு க்கும். ஜீவர்கள் இருவினைச் சம்பந்தத்தால் சம்சாரிகளாயிருப்பார்கள். மும்மூர்த்திகளு க்கும் அவர் அவதார மூர்த்திகளுக்கும் புண்ணிய பாவங்களில்லை. சிவாக்ஞையால் ஜீவர்களுடைய நன்மைக்காகவே ஆவிர்ப்பாவமும் (தோற்றமும்) திரோத பாவமும் (மறைவும்) உண்டாயிற்றே யல்லாமல் வேறில்லை. ஆகையால் அந்த மூர்த்திகளும்அவர் அவதார மூர்த்திகளும் போகத்துக்காகவும் கதிக்காகவும் ஜீவர்களாலே உபாசிக்கத்தக்கவர்களாம் உபாசனை சமமாயிருந்தாலும் பிரமவிஷ்ணுக்களை விட உருத்திரமூர்த்தி மேலானவர் என்று அறிஞர் கூறுவார்கள். உருத்திரமூர்த்தீயைப் பிரமவிஷ்ணுக்குச் சமமாகவாவதுஉயர்வு தாழ்வாகவாவது நினைக்கிறவன் கொடிய நரகத்தில் விழுவான். அவ்விருவரையும் விட உருத்திரன் சிறந்தவனென்று எண்ணுகிறவன் முத்தியை அடைவான். சிவனே சர்வகாரணனாகிற படியாலும்மங்களத்தைக் கொடுப்பது அவனிடத்திலேயே பூரணமாயிருக்கிற படியாலும்சாம்பமூர்த்தியான அந்தச் சிவனே இருதயத்தில் முக்கியமாய்த் தியானிக்கத்தக்கவன். காரிய சொரூபர்களான திருமாலாதியோர் முக்கியமாய்த் தியானிக்கத்தக்கவர்களாக மாட்டார்கள். ஆதலால் சிவனையே தியானிக்க வேண்டும். அதர்வசிகையின் முடிவும் இப்படியே யிருக்கின்றது. வேதங்களுக்கு எல்லாம் அதர்வணமே முடிவாம். பரை ரூபமான பிரணவமே மூலம்விந்துநாதம்சக்திஅகாராதி வன்னங்கள் கந்த சாகைகளாக விளங்குதல் போல அதர்வண வேதமென்னும் விருட்சம் பிரணவமே மூலமாகவும்வேத ஜாதியே சத்தியாகவும்மூன்று வேதங்களும் சந்த சாகைகளாக வும்ஸ்மிருதி புராணங்களே கிளைகளாகவும்வேதாங்கங்கள் சாகைகளுக்கு ஆவரணமாகவும்அந்த ஆவரணத்துக்குத் தருக்கம் காவலாகவும்சிவஞானமே மலராகவும்மோட்சமே பலமாகவும் கொண்டு விளங்கும். ஆகையால் முனிவர்களே புக்தி முக்திகளை அடைய விரும்புகிறவன் சிவனையே தியானிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

 

 

ஏழாவது அத்தியாயம்.

தேவர்கள் தேகத்திலிருக்கும் வகை கூறியது.

 

பஞ்சபூத சொரூபமான தேகத்தில் பிருதிவிஅப்புதேயுவாயுஆகாசம் என்கிற பஞ்சபூத பாகங்களில் முறையே பிரமன்விஷ்ணுஉருத்திரர்மஹேசுவரன்சதாசிவன் என்னும் தேவர் இருப்பார்கள். உடலின் புறத்தில் விராட்டும்உள்ளே சுராட்டும்மத்தியில் சம்ராட்டும்வசிப்பார்கள். சுரோத்திரம்தொக்குநேத்திரம்சிங்கவைகிராணம் இவற்றில் முறையே திக்குகாற்றுஅக்கினிவருணன்பிருதிவி இவைகள் இருக்கும். பாதம் பாணிவாக்குஉபத்தம்குதம்இவற்றில் முறையே திருவிக்கிரமன்இந்திரன்அக்கினிபிரஜாபதிமித்திரன் இவர்கள் வசிப்பார்கள். பிராணனில் சூத்திராத்மாவும்அந்தக்கரணத்தில் இரணிய கர்ப்பனும்மனதில் சந்திரனும்புத்தியில் பல தேவர்களும்குருவும்வசிப்பார்கள். அகங்காரத்தில் காலாக்கினி ருத்திரனும்சித்தத்தில் சிவனும்உரோமங்களில் பலதேவர்களும்எலும்புகளில் பூதபிரேதங்களும் வசிப்பார்கள். தசையில் பைசாசரும்இராட்சதரும் இருப்பார்கள். நரம்புதொக்கு இரத்தம் இவைகளில் கந்தர்வர் முதலிய தேவர்களும் வசிப்பார்கள். வலக்கண்ணில் பிரமாவின் கோரதனுவும்இடக்கண்ணில் சாந்ததனுவும் இருக்கும். வலக்கண் புறத்தில் சூரியனும்இடக்கண்புறத்தில் சந்திரனும் வசிப்பார்கள். கழுத்தின் புறத்தில் விஷ்ணுவின் கோரதனுவும்உள்ளே சாந்ததனுவுமிருக்கும். இருதயத்துள் உருத்திரனு டைய சாந்ததனுவும் புறத்தில் கோரதனுவும் இருக்கும். பிரமரந்திரத்தில் சச்சிதாநந்த பரப்பிரமம் வசிக்கும். சிவசிற்சத்தி மூலாதாரத்தில் வசிக்கும். மாயாசத்தி நுதலின் நுனியில் வசிக்கும். நாதரூபமான பராசத்தி நெற்றிநடுவிலிருக்கும். புருவமத்தியில் விந்து சத்தியும்விந்து சத்திமத்தியில் ஜீவாத்மாவின் சூட்சு மரூபமும் இருக்கும். இருதய நடுவில் ஸ்தூலரூபமும்இவ்விரண்டுக்குமத்தியில் மத்தியமரூபம். இருக்கும் நாக்கு நுனியில் சரஸ்வதி வசிப்பாள். அனாகதத்தில் இலட்சுமி வசிப்பாள். உருத்திரன் இருக்கிற இடத்தில் பார்வதி இருப்பாள். சர்வகாரணமான பரதத் துவசிவம் எங்கும் வியாபித்திருக்கும்

 

இந்தத் தெய்வங்களெல்லாம் ஞானியின் சரீரத்தில் பிரத்தியகாத்ம சொரூபமாக வும்தனித்த தெய்வரூபமாயும் விளங்கும். சுத்தராகியும்வேதமார்க்க விருப்ப முள்ளவராயும் உள்ள வருடைய உத்தம சரீரத்தில் தேவரூபமாகவே விளங்கும். மற்றவர் சரீரத்தில் என்றும் இருந்தாலும் பிரகாசியாமலிருக்கும். எல்லாருடைய தேகத்திலும் எல்லாத்தெய்வங்களும்மறைந்திருப்பதால் எந்தப் பிராணியையும் அவமதி க்கப்படாது. கொடுஞ்சொல் சொல்லவும் கூடாது. அஸ்திர சாஸ்திரங்களினாலும்நகத்தினாலும்புண்படுத்தவும் கூடாது. பிராணிகளுக்குத் துன்பம் உண்டாக்குகிறவன் நிச்சயவாகவே நரகக்குழியில் விழுவான். இதரர்களுடைய சரீரத்திலாவது தன் சரீரத்திலாவது சக்கராங்கிதம் முதலியன செய்கிறவன் நரத்தில் விழுவான். ஆகையால் போக மோட்சங்களை அடைய விரும்புகிறவர்கள் உடம்புகளெல்லாம் தெய்வமே யென்று உணர்ந்துஅவற்றுக்குத் தீமை செய்யாமல் நன்மையையே செய்ய வேண்டும்.

 

 

எட்டாவது அத்தியாயம்.

சர்வ வேதாந்த சங்கிரகம் உரைத்தது.

 

சச்சிதானந்த பரசிவனுடைய அர்த்தநாரி சொரூபம் ஆனந்த நடன மூர்த்தி என்று சொல்லப்படும். போக மோட்சமடைய விரும்பினால் இதையே தியானிக்க வேண்டும். சிவாதி நாமங்களே துதிக்கத்தக்கன. பிரமன்விஷ்ணுருத்திரர்கள் பரதத்துவவிபூதிகளா யிருந்தாலும்இவர்களுக்குள் உருத்திரமூர்த்தியே விசேஷமானவர் என்று கருதுங்கள். சம்சார காரணமான மாயை பிரதீதியினாலே சத்தாக இருந்தாலும்பரமார்த்தமாக சத்து விலட்சண்மானதேயாகும். அதுவும் பரசிவத்துக்கு வேறான தல்ல என்று பெரியோர் சொல்வார்கள். அந்தமாயை ஒழிந்த வேதாந்த தத்துவஞானம்சிவானுக்கிரகத்தால் குருகடாட்ச முண்டாய்ச் சத்தினிபாதம் உண்டான போது கிடைக்கும். தவம்யாகம்தானம் முதலியவை அந்தச்சிவஞான இச்சை உண்டாவதற்க்குக் காரணமாகும். வேதவேதாங்க அத்தியயனம் செய்தல்அத்தியயனம் செய்வித்தல்வேதார்த்தபக்திவேதத்துக்கு விரோதமான நூல்களை விலக்குதல்சாந்திதாந்தி முதலியவை ஞானாங்கமாகும் என்று சுற்றோர் சொல்வார்கள். ஞானங்கள் எல்லாவற்றுள்ளும் சிவலிங்கபூசை செய்தல்சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தல்சிவக்ஷேத்திரயாத்திரை செய்தல்சிவனடியாரைப் பூசித்தல்விபூதி ருத்திராட்சம் தரித்தல்ஞானாசிரியன் சேவடி தரிசனம் செய்தல்பஞ்சாட்சராதி மந்திரங்களை ஜபித்தல்இவைகள் சிரேஷ்ட மென்று பெரியோர் சொல்வார்கள். 

 

சிவத்தலங்கள் பல வற்றுள்ளும் காசிதிருக்காளத்திசிதம்பரம் விசேஷமாகும். அதீந்திரியமான தர்மங்களிலும்பரசிவனிடத்திலும்வேதமே உத்தம பிரமாணமாகும். ஆகையால் வைதிகாசாரமே எல்லா ஆசாரங்களிலும் சிறந்தது. வேதார்த்தத்தின்படி பரமசிவனே எல்லாமாவான் என்று அறிகிற ஞானமே உத்தமோத்தம ஞானமாம். இப்படிப்பட்ட வைதிகமார்க்கானுஷ்டான மில்லாதவர்களுக்குஆகமங்களில் ஆசாரம்தருமம்வர்ணமுதலியன சிவனால் சொல்லப்பட்டன. பிரமாவிஷ்ணுமற்று முள்ள தேவர்களும் சில ஆகமங்கள் சொல்லியிருக்கின்றார்கள். முனிவர்களே! வைதிகாசார முடையவன் இந்த ஆகம ஆசாரங்களை அனுஷ்டிக்கக்கூடாது. வைதிகர்களுக்கு வேத விதிப்பூசையே தவிர வேறு பூசை செய்யக்கூடாது. ஆகமப்படி பூசிப்பது கூடாது. சிவாகமதீட்சையுடையசிலர் இலிங்கதாரணம் செய்து கொள்வார்அதுவும் கூடாது. விஷ்ணு ஆகமதீட்சையுடையவர்கள் சங்குசக்கராங்கிதம் செய்து கொண்டு – மிருத்தி கையால் ஊர்த்துவ புண்ட்ரம் இட்டுக்கொள்வார்கள். அதுவும் கூடாது. புத்தாகமதீட்சை பெற்றவரும் அரசிலை போல் புண்டாம் தரிப்பார். அருகாகமதீட்சை பெற்றவர்கள் கந்தம்பஸ்மம்மண் இவைகளால் நெற்றியில் மூன்று ஊர்த்துவ புண்டரம் தரிப்பார்கள். சிவாகமம்வைதிகம் இந்நெறியுடையோர் விபூதியினால் திரிபுண்டாம் தரிப்பார்கள். இவர்கள் விபூதி தாரணத்தை விட்டு வேறு தரிப்பாரானால் நரகில்  விழுவார்கள். மார்க்கத்தார் சங்கு சக்கராங்கிதம் செய்து கொள்வார்கள்அது போல வைதிக நெறியோர் செய்து கொண்டால் நரகத்தில் விழுவார்கள். ஆகம நெறியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ சொரூபத்தை வைதிகன் வணங்கலாம். ஏனென்றால் தெய்வ சொரூபம் எப்போதும் சுத்தமுடையதேயாம். தாந்திரிகர்க்குத் தாந்திரிக பூசையே தகுதியுடையது. வைதிகர்க்கு வைதிக பூசையே செய்யத்தக்கது. இவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதும் கூடாது. அரசனாயிருப்பவன் வைதிகனையும்தாந்திரிகளையும் தனித்தனியாக இருக்கும்படி செய்யவேண்டும். சந்திரகலாதரனான மஹாதேவனுக்கு ஒப்பான தெய்வமும்சிவஞானத்துக்கு ஒப்பான ஞானமும்கங்கை க்கு ஒப்பான நதியும்பஞ்சாட்சரத்துக்கு ஒப்பான மந்திரமும்காசிக்கு ஒப்பான க்ஷேத்திரமும்அன்னத்திற்கு ஒப்பான உணவும் இல்லாதது போல வைதிகர்க்கு ஒப்பா னவர்களுமில்லை. 

 

வைதிகன் உலகத்துக்குச் சூரியனைப் போன்றிருப்பான். அவன் சிவனைப்போல எல்லாராலும் வணங்கத்தக்கவன். அவன் பெருமையை வேதங்களும்ஸ்மிருதிகளும்புராணங்களும் சொல்கின்றன. ஆகமவிதியை அனுசரிப்பவர்கள் வைதிகவிதியை அனுசரிப்பார்கள். வைதிக விதியையுடையவர்கள் ஆகமவிதியை எவ்விதத்திலும் அனுசரிக்க வேண்டியதில்லை. இவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிச் சூதமுனிவர் தமது குருவைச் சிந்தித்தார். அப்போது வியாசமுனிவர் தமது பெருங் கருணையால் அவ்விடத்தில் பிரசன்னரானார். 

 

சூதமுனிவர்அங்கே க எழுந்தருளிய வியாசமுனிவரை மற்ற முனிவர்களுடன் வணங்கிக்கந்த புஷ்பாதிகளால் அவர் திருவடியைப்பூசித்துத் துதித்து மகிழ்ந்தார். வியாசமுனிவர் அந்தச் சௌனகாதி ரிஷீசுவரர்களை நோக்கி முனிவர்களே! நான் மஹாதேவன் அனுக்கிரகத்தால் எல்லாப் புராணங்களுக்கும் கர்த்தா ஆனேன். வேதாந்த சூத்திரம் செய்யவும் சக்தியுடையவனானேன். என்னுடைய அனுக்கிரகத்தால் இந்தச் சூதமுனி சிவானுக்கிரகத்தை அடைந்துஇந்தப்புராண சங்கிதையைச் செய்து உங்களுக்கும் குருவாய் உபதேசித்தான். நீங்களும் சிவானுக்கிரகத்தாலே இவன் மூலமாக அநேக வேதார்த்தங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள். சிவஞானத்தில் மிக்க விருப்புடையவர்களாக இருந்து மகிழுங்கள் என்று சொன்னார். பிறகு சூதமுனிவ ருடைய தேகத்தைத் தமது கையால் தடவிஅவரை ஆலிங்கனம் செய்து கொண்டுஉடனே மறைந்தருளினார். சூதமுனிவர் சிவபெருமான் சேவடிகளையும்உமாதேவி யாரின் பாதார விந்தங்களையும்குருநாதன் பாதங்களையும் துதித்து மகிழ்ந்து வாழ்ந் தார். சௌனகாதி முனிவர்களும் சூதரை வணங்கிவேதங்களின் அர்த்தங்களை யெல் லாம் உரைத்தருளிய உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யத்தக்கது என்று கூறி அவரைப் புகழ்ந்து வாழ்ந்திருந்தார்கள். 

 

இந்தச் சூதசங்கிதையைப் படிப்போரும்பக்தியுடன் கேட்போரும்அர்த்த விசாரம் செய்வோர்கேட்பவர்க்கு அர்த்தம்  சொல்வோர்எழுதிவைப்போர்அதைப்பூசிப்போர்இதைத் துதிப்போர்தெரிந்தவர்களுக்குக் கொடுப்போர்இவர்கள் எல்லாரும் தீர்க்காயுசும்பூர்ண ஆரோக்கியமும்நிறைந்த செல்வமும் பெற்றுச்சிவானுக்கிரக முடையவர்களாய்மெய்ஞ்ஞானத்தை அடைந்துபரசிவத்தோ டிரண்டறக்கலந்து வாழ்வார்கள். இந்தச் சூதசங்கிதையைச் சிறந்த இடத்திலிருந்து கொண்டு பொருளாராய வேண்டும். மிகுந்த அறிவுள்ளவர்களாயிருந்தாலும் குருவின் அனுக்கிரகத்தைப் பெறுவ தற்குமுன் இதன் பொருளை ஆராயக்கூடாது. இந்தச் சூதசங்கிதை மற்ற நூல்களைப் போல் வதன்று. ஒப்பும் உயர்வும் இல்லாதது. ஆகையால் குருவின் அனுக்கிரகம் பெற்றுப் பக்தி சிரத்தையுடன் இதன் பொருளை ஆராய்ந்து அறியக்கடவர்கள். 

 

சூதசங்கிதா சாராமிர்த வசனம்

முற்றிற்று.

 

Related Content

The Sutasamhita On The Saiva Agamas By M. Narayaswami Aiyar