logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியதுOm symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


குருஞான சம்பந்தர் அருளியது muththi nichchayam in romanized script சிவ சிவ சீர்மேவும் ஆரூர்ச் சிதம்பர நாதனெனும் பேர்மேவு ஞானப் பிரகாசன் - தார்மேவு சேவடிகள் போற்றித் திகழ்முத்தி நிச்சயமொன் றாவ தென மொழிவேன் யான் - ௧ சந்தான நற்குரவர் தக்கோர் பிறர்சமயம் நந்தாது தோற்றுவித்த நற்குரவர் - முந்தவே எந்தமுத்தி சித்தாந்த மென்றார்கள் சைவத்தில் அந்தமுத்தி நிச்சயிப்போம் யாம் - ௨ அந்நிலையா னும்பிறவு மான்மாநந் தந்திறமாம் என்னிலையே சித்திக்கு மென்றியம்பில் - உன்னிலைதான் இல்லதென வேநீ யியம்பு மளவைமுதல் சொல்லுமது கேளாய் துணிந்து - ௩ ஈசன் றனதுசத்தி யின்பருந்து மீசனால் ஆசறத்தன் சத்தியிலின் பான்மாவு - நேச முடனருந்து மென்னின் முத்தி யொவ்வாது பாசம் விடசு துவாய் நிற்பதுவாமே - ௪ சிற்றின்பம் பேரின்பஞ் சீவகுண மென்றணை நீ உற்றின் பிரண்டு முணர்ந்திலையோ - சிற்றின்பம் நாடிற் கருமபல நாதனுருப் பேரின்பம் நீடிப்ப டிகம்போல் நீ - ௫ பெறுவானும் பேறுநான் பெம்மானுள் ளுண்டேல் அறிவாயோ வா நந்த மன்றி - யறிவேனான் ஆநந்தங் காட்டி யகத்திருப்ப னாகிலது மானந்தான் கண்டறியாய் மற்று - ௬ வேதாக மத்தின் விதித்த முத்தி தாளன்றி நீதானே யின்பமென்றல் நீதியோ - பேதாய் பெறுவானீ யா நந்தம் பேறென்றுரைத்த தறியா திருந்தனை நீயாம் - ௭ உன்னுருவங் கண்டிருப்ப தோகெட்டேன் முத்திசிவன் தன்னுருவங் கண்டிருக்கத் தக்கதே - முன்னறிஞர் ஓதுசிவன் தோற்ற மொன்றே காண்பரெனும் போத மறந்த னையிப் போது - ௮ ஈசனையே காண லெனத்தவமுன் செய்ததெலாம் மோசமாய் வந்து முடிந்ததே - பாச விளையகன்ற போதும் விமலனே நின்றாள் தனையறியா மூடர்க்குத் தான் - ௯ தானன்றி நிற்கவெழுஞ் சச்சிதா நந்தனை நீ யானென் குணமென் னிரும் பென்னோ - ஊனநீ ஞானகுணம் பெற்றின்னு நாளானென நவிலும் ஈனகுணம் போன நிலையே - ௧0 தோன்று பரமாநந்தச் சோதியன்றி நின்னறிவில் தோன்று சுக முண்டென்றாய் சுத்தப்பொய் - தோன்று இன்பம் ஈசனுயிர றிவ தீதன்றி வேறுண்டேல் பாசமலாதே துண்டு பார் - ௧௧ அண்ணலைப்போ லாநந்த மான்மாவிற் குண்டாகில் எண்ணில் பிறப் பிறப்பை யெய்துமோ - கண்ணிருளை ஓட்டாதோ ஆதவனுக் கொத்தவொளி யுண்டாகிற் கேட்டாயோ கேட்டிலையேற் கேள் - ௧௨ ஓரின்ப மில்லா துறுமலங்கள் போக்கியிடும் பேரின்ப நின்குணமென் பேதாய்கேள் - பேரின்பம் நின்குணம் போல தோன்றுமது நீயாகையான் இரும்பு தன்குணமோ தீயியல்பு தான் - ௧௩ ஆசகற்றி நின்னறிவி லாநந்த மாஞ்சிவனைக் கூசகற்றி யுன்றன் குணமென்று - பேசியிடும் பேயாவாதிக் கேது பேசிடில் நீ தானந்த மாயா வா திக்கே மகன் - ௧௪ என்றும் பிரியா விருளருளா னீங்கவின் பாய்த் துன்று சிவ போகமெனச் சொல்லாமல் - உன்றன் நலம் போக மென்றுரைத்தாய் நாமறிவோ நீயு மலம் போக முத்தியென்பவன் - ௧௫ தன் பிரம கீதை வேதாந்தஞ் சிவாகம நூல் இன்பமுயிர்க் குண்டென் றியம்பிய தேல் - இன்பஞ்சீ வான்மாவிற் குண்டென் றனறந்ததன்று நின்றபர மான் மாவிற் குண்டென்ற தாம் - ௧௬ சிவசத்தியைத் திளைப்பர் சீவன்முத்த ரென்னு மவசத்த மாபா தகமென் - சிவசத்தி தன் னைப் புணர்ந்ததன்று சாற்றுவமை யுந்தெரியா தன்னை முலைப் பாலென் றறி - ௧௭ சிவசத்தி யைத்திலைப்ப ராதிமுத்த ரென்னு மவசத்த மாபா தகமென் - சிவசத்தி தன்னைக் கண்டாங் கருளால் சச்சிதாநந்த மெனு மன்னைத் திளைத்துவாழ் வார் - ௧௮ அன்றியுயிர் சற்சித்தே யாநந்த மில்லையதற் கென்று பல வாற்றானு மெய்து விக்க - நின்ற முறையாலு மீசனொடு முற்றஞ் சமதை யறையாமை கூறியது மாம் - ௧௯ ஆநந்த மின்றி யரன்சமதை முத்தியெனிற் றானந்த வேதாகமஞ் சாற்றா - ஊனம் படுமே தசகாரியத்திற் பலவுங் கெடுமே யொன்றா மெனலுங் கேள் - ௨0 சிவசமமெ முத்தியெனிற் சித்தாந்த மன்றாம் சிவசமய பேதமெனச் செப்பும் - அவைகளிலே யொன்றென்பர் வேறெனினு மோரேக தேசமதம் அன்றெனிற் மற்றோற்கும் அது - ௨௧ உள்ள மலநீங்கி யோங்கு சிவாநந்த வெள்ளத் திளைத்ததுவாய் மேவுதலே - கள்ளவிழ்பூங் கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்திற் சித்தாந்த முத்தியெனத் தேறு - ௨௨ முத்தி நிச்சயம் முற்றிற்று

Related Content

குருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா