logo

|

Home >

saiva-siddhanta >

tharukka-sopanam

தருக்க சோபானம் - மணவழகு

சித்தாந்த பரிபாஷை

என்னும்

தருக்க சோபானம்.

 

உபோற்காதம்.

தேவாரம்.

எண்ணாகியெழுத்துமாகி: -

ஆத்தி சூடி.

எண்ணெழுத்திகழேல்.

கொன்றை வேந்தன்.

எண்ணு மெழுத்துங் கண்ணெனத்தகும்.

 

திருக்குறள்.

      எண்ணென்பவேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் 

      கண்ணென்ப வாழுமுயிர்க்கு. 

 

பரமத திமிரபானு.

எண்ணு மெழுத்துங் கண்ணிவை யாய்த் திந் நூற்பயனைக் 

கண்ணுக காண் பார்காற் கதி. 

 

இத்திருவாக்குகளிற் காணப்படும் எண்ணென்பது தருக்கத்தினையும்எழுத்தென்பது இலக்கணத்தினையுங் குறிக்கும். இவ்விரண்டுஞ் சிறப்புடை மக்களுயிர்க்கு இருநேத்திரங்களை நிகர்ப்பன. இவ்விரு நூலுணர்ச்சியு முடையார்க் கன்றி ஏனையோர்க்குச் சாஸ்திரப் பொருளை ஆராய்ந்துணர்தலும் வாதசபையி லொன்றை யெடுத்து நிரூபித்தலு முடியா. முன்னையது அர்த்த நிச்சயஞ் செய்தற்கும்பின்னையது பதறிச்சயஞ் செய்தற்கு முபயோகமாம். இவ்விரண்டும் உறுதிப்பொரு ணுதலு முதனூலாராய்ச்சிக்குங் கருவியாதல்

 

ஆதி முதலொழிய வல்லா தனவெண்ணி 

       நீதி வழுவா நிலைபையவான் - மாதே 

       யறமார் பொருளின்பம் வீடென் றிவற்றின் 

       றிறமாமோ வெண்ணிறந்தார் செப்பு.'' 

 

எழுத்தறியத்தீரு மிழிதகைமை தீர்ந்தான் 

     மொழித்திறத்தின் முட்டறுப்பானாகு - மொழித்திறத்தின் 

      முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து 

      கட்டறுத்து வீடு பெறும்.” 

 

எனுமிவற்றானறிக. அர்த்த நூலுணர்ச்சியில்வழிசத்தநூலொரு சாத்திரமா முடிவுறாத லெத்துணையாயினு மமையா தாகவிற் சத்த நூலினும் அர்த்தநூலே மிகச்சிறந்ததென்க. இதனை

 

      “பண்ணினார்க்கில்லாத பாட்டின்பயன் போலுங் 

     கண்ணிலார்க்கில்லாக் கவின்போலு - மெண்ணிலா'

     வஞ்சொலளவை யறியா தவர்க்கில்லை 

     செஞ்சொலளவிற் சிறப்பு.'' 

     

என்றதனாற் காண்க. கணிதமென்பது பொருள்களை யளந்தறிதற் கருவியாய்த் தருக்கத்துடன் சிறிதே வேற்றுமையாய் உய்த்துணருங்கா லொன்றேயாய் முடிதலின் எண்ணென்பதற்குக் கணிதமெனவு மொருசாரார் கூறியது மீண்டைக் காவதோ ரிழுக்கில்லை. இங்கனமாயினு மேற் காட்டிய திருவாக்குகளில் எண்ணென்பதற்குக் கணிதமென்றே கோடல் பொருந்தாதுஅங்கனஞ் சாதிப்பார் சுற்றுப் பிரமாண மல்ல வென்பான். 

 

           காண்ட லனுமானங் கதையருத்தா பத்தியிவை 

      யீண்டுரைத்த வெண்ணௌவே யெண்.

 

என்றார் பரமத திமிர பானுவாசிரியர். தருக்க மெனினும்அளவை யெனினும் ஏரணமெனினும்நியாயமெனினு மொக்கும். தருக்கம் தருக்கித்துத் தெரிக்கப்பட்டன. அவை திரவிய முதலிய பதார்த்தங்கள். இலக்கணமுந் தருக்கமுங் கல்லாது ஞான் சர்த்திர முதலிய வற்றைக் கற்க முயலல் அந்தகன் கோலின்றி வழிநட்க்கப் பிரயத்தனப் படுவது போலும். ஆதாலா லிவ்விருநூல்களும் யாவரானு மவசியங் கற்கத்தகுவனவே. ஆகலினா லன்றோ தருக்க நூற்பயன் அடியில் வருமாறு செத்தாப் போதகர் செப்பி வைத்தனர். 

 

அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட் 

கன்றிய காதலவர். 

 

      களவென்னுங் காரறி வாண்மை யளவென்று 

      மாற்றல் புரிந்தார்க ணில். 

 

      அளவறிந்தார் நெஞ்சத் தறம் போல நிற்குக் 

      களவறிந்தார் நெஞ்சிற் கரவு. 

 

      அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 

      மற்றைய தேற்றா தவர். 

   

எந்நூலமைப்பிற்கு மேதுவாக நிற்குந் தருக்க நூல் தமிழ் மொழியிற் சிலவே யன்றிப் பலவில்லை யாகலானும்அன்னவு மெளிதிற் பயன் படுவன வல்ல வாகலானும்யாவருஞ் சுலபமாகத்தேறச் சித்தாந்த பரிபாஷை என்னுந் தருக்க சோபானம் ஆகிய இச்சிறிய நூல் செய்ய நேர்ந்தது. இதிலாங்காங்குக் காணப்படும் வடமொழிச் சங்கேத பதங்கட்குத் தமிழ் மொழியானும் ஆங்கிலேய மொழியானும் பிரதி பதங்களும் பலகாட்டப்பட்டுள்ளன. 

   

அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய முழுமுதற் கடவுளைப் பிரதி பாதிக்கும் சுத்தாத்துவித சித்தாந்த வைதிக நூல்கட்கு முரணாகா வண்ணம் வெளிவந்த பிரமாண நூல் சகலாகம பண்டிதர் திருவாய் மலர்ந்தருளிய திராவிடோப நிடதமாகிய சிவஞான சித்தியாரிலுள்ள அளவையும்ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் இயற்றிய சைவபரி பாஷையு மன்றி வேறு பிரசித்தமாகக் காண்பது அரிது. இவற்றையடுத்து மூன்றாவதாகப் பிரமாண பிரமேயத்துடன் எழுந்த நூலிது வென்னலாம். 

 

      “இராக மறியா ரிசைப்பயன் றானறியார் - 

      தராதர மறியார் சற்கா ரியமறியார் 

      ஓரா ரளவை யொருபயனுந் தாமறியார் - 

      ஆராய்ந் தளவை யறிந்துகொள் வீரே,'' 

                                 

தெய்வவணக்கம்.

பதின் சீர்வண்ண விருத்தம்.

 

வரநதி மதிக்குலஞ் சடைக்கணே வதிதர மழுத்தடங் கரத்திலே 

            மகிழ்வொடு பிடித்திடுஞ் சிவத்தைநே ராகவே 

பிரணவ வுருக்கொடங் குதித்துமே லுலகுறை கணத்தருந் துதிக்கவே 

பெறுகய முகத்தனின் பதத்தைநா னோதியே 

திரனுள வருட்பெரும் புலத்தினோர் தமதுயர் நலற்புதம் பலிக்கவே

திகழ்தரு புகழ்ச்சி நன் களித்துமீ தாகவே 

தரணியின் மதிப்பநின் றொலித்துவாழ் பலமொழி களுக்குளுஞ்சிறக்குமோர் 

தமிழினி லியற்றினன் றருக்கசோ பானமே. 

 

 

 

பிரமாணம்.

 

பிரமாணம் - அளவை.

Proof.

பிரமாண மென்பது சம்சயம்விபரியயம்ஸ்மிருதி இம் மூன்றினுக்கும் வேறாயுள்ள ஆன்மசிற்சத்தி. 

 

சம்சயம் - ஐயம் - Doubt – தோன்றினதொருபொருளைக் குற்றிக்கொல்லோ மகன் 

கொல்லோ வென்றிரட்டுறக் கருதுவது.

 

விபரியயம் - திரிவு - Mistakeதோன்றின பழுதையை மயக்கத்தால் பாம்பென் 

றச்சமுறுதல். 

 

ஸ்மிருதி - முன்னினைவு - Thoughtமுன்கண்டவாதனைபற்றித்

தோற்றுவதாகிய நினைவுணர்வு காமுகனுக்குக் காமினியுருவு 

வெளியாதி. 

 

ஆசங்கை.

பிரத்தியட்சம், அனுமானம்ஆகமமூன்றும் பிரமாணமா காதோ

 

சமாதானம்.

இம்மூன்றுஞ் சிற்சத்திக் கபிவியஞ்சகமாகையால் * உபகார லட்சணையாக அவைகள் பிரமாணமெனக் கூறப்பட்டன. 

அபிவியஞ்சகம் விளக்குவது. - பரமை – உண்மையனுபவஞானம்

 

நையாயிகர்மதம்.

பிரமையினாலே வியாபிக்கப்பட்ட பிரமையின் சாதனமாவது ஆசிரயமாவது பிரமாணம். 

† பிரமை – உண்மையனுபவஞானம்.

 

மறுப்பு.

சாதனங்களெல்லாம் பிரமேய மாதலின் பிரமாணமாகாது. பிரமாணமென்னில் தீபா திகளும் பிரமாணமாக வேண்டிவரும். கண் முதலான இந்திரியங்கள் தத்தம் விஷயங்களைவிட வேறு விஷயங்களைக் கிரகிக்க மாட்டா. ஆகலின் எவற்றையுங் கிரகிப் பது எதுவோ அதுவே பிரமாணம். 

‡ பிரமேயம் - பிரமாணத்தா லறியப்படுவது.

யார் ஆசங்கை.

அங்ஙனமாயின் எல்லாவற்றையு மறிகிறது புத்தியாகையாலதுவே பிரமாண மாகாதோ

 

சமாதானம்.

புத்தி பிரகிருதி சம்பந்தமாகையால் இந்திரியங்கட்கும் அதற்கும் பேதமில்லை. அன்றியும் சுகதுக்க வேதுவைக்கொண்டறியப்படும் பிரமேயமாம். 

 

யார் ஆசங்கை.

அந்தக்கரணங்களும், புறவிந்திரியங்களும்விஷயங்களும் பிரமாதாவும் ஆகியநாலுமுண்டானால் ஒன்றையறிதலும்இவைகளிலொன்றில்லாவிடில் ஒன்றையறியா திருத்தலுமாக விருத்தலின் இப்பிரமா சாமக்கிரியையே பிரமாணமாகாதோ

 

சமாதானம்.

அங்ஙனமாகில் பிரமாணம்பிரமேயம்பிரமாதா *  பிரமிதி   என்னும் விவகாரமில்லாமற்போம். யாதொன்று யாதொன்றைக்காட்டிலு மதிகம் அது அதற்குப் பின்னமென்கிற வியாப்தியுமில்லையாம். ஒன்றினாலே யொன்றறிகிறதென்பது மில்லையாம். 

பிரமாதா - அறிகிறவன். † பிரமிதி - மெய்யறிவு.

 

யார் ஆசங்கை.

உமது சித்தாந்தத்தில் ஆன்மா ஞானசொரூபனாகையால் ஒன்றே பிரமாதாவாகவும்பிரமேயமாகவு மாகாதோ.. 

 

சமாதானம்.

ஆன்ம சிற்சத்தியானது வித்தை ராக முதலானவையாலே கலந்து விஷயங்கட்கு எதிர்முகமானபோது பிரமாணமாம். கலவாது ஆன்மாவை முன்னிட்டசத்தி பிரமாதாவாம். 

 

பிரபாகரன்மதம்.

அனுபூதியே பிரமாணம். அவ்வனுபூதியானது ஸ்மிருதிக்கு வேறானது. ஸ்மிருதியாவது முன்னனுபவத்தாலுண்டான ஞானம். 

 

 

 

மறுப்பு.

ஸ்மிருதியை முன்னிட்டு வந்த வேதத்தின் வாக்கியார்த்த ஞானத்கைச்சுவயமாகப் பிரமாணமெனச்சாதித்துஇப்போது ஸ்மிருதி நீங்கலான அனுபூதியைப் பிரமாணமெனின் முன்பின் விரோதம். 

 

பாட்டர்மதம்.

அநதிகதார்த்தகந்தருவே பிரமாணமாம். அதாவது ஒரு சாலுமறியாத வஸ்துவை யறிவிக்கிறது. 

 

மறுப்பு,

ஒருகால் கண்ட கடத்தை இது கடம் இது கடமென்றோழுங்காக வருகிற ஞானங்களிலே பிரண்டாவது முதலாக விருக்கிற ஞானங்கட்குப் பிராமாணிய * மில்லையாம். அன்றியும் தைவாதீனமான அர்த்த சம்வாதத்தை உடைத்தாயிருக்கிற தோஷத்தையுடைய இந்திரியங்கட்கும்பித்தர் விகடர் வாக்கியங்கட்கும் பிராமாணியம் வந்துவிடும். 

* பிராமாணியம் உண்மையனுபவ ஞானத்தின்றன்மை.

 

பௌத்தர் மதம்.

அவிசம்வாத விஞ்ஞானம் பிரமாணம். அதாவது அருத்தமுஞ் செய்கையுங் கூடியிருப்பது. 

 

மறுப்பு.

யாதொரு பதார்த்த தரிசனத்தினாலே ஞானமானது பாதிக்கப்படாலிருக்குமோ அது அர்த்த கிரியாஸ் திதி. ஆற்றில் வெள்ள மழைபெய்துண்டானது என்றபோது வெள்ளமுண்டு அவ்விடத்து மழையின்மையான் அர்த்தமுண்டு கிரியையில்லை. இது அவ்வியாப்தி. பிரமாணமல்லவெனும ஸ்மிருதிஞானத்தும் சவிகற்ப ஞானத்தும் அர்த்தக்கிரியா காரியத்துவம் சித்திக்கையால் அதிவியாப்தி. ஆகலின் அது கூடாது. 

 

பிரமாணவகை.

பிரத்தியட்சம், அனுமானம்ஆகமம் என மூவகைத்து. 

 

பிரத்தியட்சம் - காண்டல்.

Perception. †

    பிரத்தியட்சமாவது இந்திரியவிடய சம்பந்தத்தானேதோன்றும் ஞானம். பாகிய பிரத்தியட்சத்தில் இந்திரிய மனசை யோகமும் ஆந்தரப் பிரத்தியட்சத்தில் ஆன்ம சையோகமும் வியாபாரங்கள். சட்சுதுவக்குமனமிவை திரவியங்களைக் கிரகிப்பன. கிராணம்இரசனம்சிரவணமிவைக் குணமுதலியவற்றைக் கிரகிப்பன. 

      இப்பிரத்தியட்சம் நிருவிகற்பம்சவிகற்பமென விரண்டுவகை. 

                             

        What is cognizable by any of our senses, 

 

நிருவிகற்பம் - Indefinite.

எழுவாய்க்காட்சி*

பெயர் முதலியவற்றாற் பகுத்தறிதலின்றி இஃதொன்று தோன்றா நின்றதெனப் பொருளுண்மை மாத்திரையே யறியும் ஞானசத்தி. 

காட்சி - தொழிற்பெயர்காண் (பகுதி) சி (விகுதி) ணகரம் டகரமாதல் வலித்தல். இஃதறியாதார் காட்சியைக் காக்ஷியென வடவெழுத்தானெழுதுப

 

விகற்பம் - Definite. 

வேற்றுமைக்காட்சி.

பெயர்சாதிகுணம்தொழில்நிறமுதலிய வைந்தும் பொருடோறு முண்மையின் அவ்வைந்தும் அப்பொருட்கணுள்ளவாறினிது விளங்கவுணரும் ஞானசத்தி. 

இப்பிரத்தியட்சம் இந்திரியக்காட்சிமான தக்காட்சிவேதனாக்காட்சியோகக்காட்சிசித்காட்சியென வைந்து

† ஆங்கிலேயர் கூறும் Perception, Conception Judgment மூன்று மிதனுளடங்கும்.

 

இந்திரியக்காட்சி - Sense perception.

வாயிற்காட்சி.

ஆன்மாவினின்றும் விடயங்களை நோக்கியோடு மறிவாகிய சிற்சத்தி கண்முதலிய பொறிகளையும்அவற்றிற்குத் துணையாய் வலிசெய்து உடனிற்குந் தேயுமுதலிய பூதங்களையும்அப்பூதங்கட்கு முதற்காரணமாய் அவற்றை நீங்குதலின்றி யுடனாய் உருவ முதலிய தன்மாத்திரைகளை யதிட்டித்துக்கொண்டு ஐயந்திரிபின்றியுருவமுதலிய வைம்புலன்களை யறியுமறிவேயாம். 

   

இவ்விந்திரிய விடயசம்பந்தம் விஷய பேதத்தினால் சையோகம்சையுத்தசமவாயம்சையுத்தசமவேதசமவாயம்சமவாயம்சமவேதசமவாயம்விசேடண விசேடியபாவம் எனவாறாம். *  

இவ்வாறும் சித்தாந்தத்திற்கு உடன்பாடன்றாயினும்பிறர்மதம்பற்றிப் பொதுவகையாற் கூறியதேயாம்.

 

சையோகம் - Conjunction.

கடதரிசனத்தில் கண்ணிற்குங்குடத்திற்கு முண்டான சம்பந்தம் 

† சம்பந்தமெனினும் சையோகமெனினுமொக்கும். சம் என்னுஞ்சொல் சையெனந் திரிந்தது

 

சையுத்தசமவாயம்.

Intimate union with that which is in conjunction. 

கண்ணிற்குங்குடவுருவத்தன்மைக்குமுண்டானசம்பந்தம். 

 

சையுத்த சமவேத சமவாயம்.

Intimate union with what is intimately united with that which is in conjunction. 

கண்ணிற்குங் குடவுருவத்தன்மைக்கு முண்டான சம்பந்தம். 

 

சமவாயம் - Intimate union.

செவிக்குஞ் சத்தத்திற்கு முண்டான சம்பந்தம். 

 

சமவேதசமவாயம்:

Intimate union with that which is intimately united. 

செவிக்குஞ் சத்தத்தன்மைக்கு முண்டான சம்பந்தம். 

 

விசேடண விசேடிய பாவம்.

The union which arises from the relation between the thing qualified & the thing that qualifies. 

கண்ணுடனே கூடின பூமியிற் கடத்தின்பாவத்தையறிகிற சம்பந்தம்

 

மானதக்காட்சி - Mental perception.

உள்ளக்காட்சி :

ஞானேந்திரிமானது சத்தாதி விடயங்களைப் பொருந்தி ஐயந்திரிபறச் சவிகற்பமாயறிந்த வனுபவத்தை மனதிலனுசந்தானஞ் செய்தல். 

 

தன் வேதனைக்காட்சி * நுகர்ச்சிக்காட்சி,

விடயங்களாகிய சுகதுக்கங்களை வித்தியா தத்துவமானது ஆன்ம ஞானத்தினிடத்திற் செலுத்த கான்சுகி நான் துக்கி யென்பது முதலாகிற 

ஞானம்

தன்வேதனைக்காட்சி யான தக்காட்சியி லடங்கு மென்பாருமுளர்.

 

 

யோகக்காட்சி - தவக்காட்சி. 

இயமம்நியமம்ஆசனம்பிராணாயாமம்பிரத்தியாகாரம்தாரணைதியானங்களுடன்கூடிய சமாதியிலிந்திரியங்கள் - சீவியாதபடியிருந்து தேசங்களையும்செல்கால வருகாலங்களின் மான்மைகளையும் அன்னிய தேயங்களிலுண்டான வியாபாரங்களையும் இருந்தவிடமிருந்தெல்லாவற்றையு மறியத்தக்க வறிவு.

† தவம் தவு என்னும் வினையடியாகப்பிறந்து உலகவின்டங்களை கெடுப்பது எனப் பொருள்படுதலால் இது தமிழ்ச்சொல்லேயாம். இவ்வுண்மையறியார் வடமொழி யென்பர். 

 

சித்காட்சி - உயிர்க்காட்சி.

மலபந்த மில்லாத சிற்சத்திபோ டான்மாவிற்கு நித்தியசம் பந்தமிருப்பதனா லதனாலுண்டாகிய ஆன்ம பிரத்தியட்சஞானம். 

பிரத்தியட்சப்போலி - Fallacy of the Perception.

கண்டுணராமை - சிலபொருளைக் கண்டவற்றின் பெயரறியா திருத்தல். 

 

உணர்ந்ததையுணர்தல் – முன்பு குளிர்வந்துற்றகாலத்து நெருப்பு மருந்தென் றறிந்தவன் பின்பதற்கிது மருந்தென்றுணர்தல். 

    நினைப்பு குழவிப்பருவத்தே தாய்தந்தையரை யிழந்தோன் காரணங்கருதாது நினக்கின்னார் தாய் தந்தையரெறு பிறர் சொல்ல வதனைக் கருதிக்கோடல். 

 

பிரத்தியட்ச முடிந்தது.

அனுமானம் - கருதல்.  Inference.

உரைத்தவற்றைப் பிரமாணமாகக்கொண்டு உரையாத (மறைந்த) பொருளை யறியும் ஞானம். இதன்வகை சுவார்த்தானுமானம்பரார்த்தானுடமானம்பூர்வானுமானம்அனுமானானுமானம்ஆகமானுமானம் எனஐந்தாம். 

 

சுவார்த்தானுமானம் - For ones ownself.

தன் பொருட்டுக்கருதல்.

மூன்றேதுக்களி னொன்றுடைய பொருளைப் பக்கமூன்றினும் வைத்து ஒருவனுணரு முணர்ச்சி.

ஏதுக்களாவன இயல்புகாரியம்அனுபலத்தி. *

*  இம்மூன்று முறையே தர்மாதர்மியனுமானம்காரியகாரணானுமானம்காரணாகாரிபானுமானம் எனவும் படும்.

      இயல்புCoexistence - மா முதலிய சொற்கள் மரமுதலிய பொருளையுணர்த்து தற்கண் வேறுகாரணமின்றி அச்சொற்களினியல் பானுளதாகிய வாற்றல்

காரியம்Succession புகைமுதலிய காரியங்கள் நெருப்பு முதலிய தத்தங் காரணங்களை யுணர்த்துதற்கண் அவை பொருந்துதல். 

      அனுபலத்திNon - existence - குளிரில்லாமை முதலிய காரிய பாவங்கள். பனியில்லாமை முதலிய காரணாபாவங்களை யுணர்த்துதல். பக்கமாவன - பக்கம்சபக்கம்விபக்கம் என மூன்றாம். 

சத்தத்தின்கண் இலக்கணையுள்ளது. சக்கிய சம்பந்தமிலக்கணை. சக்கிய மெனின் ஆற்றலா லுணர்த்தப்பட்ட பொருள். அவை யிரண்டுவகை. 

கொளணி - குண்சம்பந்திசிங்கமாணாக்கன். ஈண்டுச் சிங்கத்திற்கே சிங்கசா திரிசிய விசிட்டத்தின்கண் இலக்கணை. 

சுத்தை - இது மூவகைத்து அவையாவன: - 

      விட்டவிலக்கணை - மொழிக்கியன்ற பொருளைவிட்டுக் குறிக்கப்படும் பொருட் கிடனாய்ப் பிறிதொன்றை விளக்குவதுஉ - ம் கங்கைக்கண் இடைச்சேரி. 

      விடாவிலக்கணை - கருவியின் பெயரே கருத்தாவைக்காட்டி நிற்பது. உ - ம். குதிரையா லவ்வூர்க் கொள்ளையிடப்பட்டது. 

      விட்டுவிடாவிலக்கணை - சொற்பொருளின் ஏகதேசத்தை விட்டு ஏகதேசத்திற்குக் கொண்டு கூட்டுள்ளது. அதாவது முன் பார்த்த பொருளையே வேறிடத்திற்பார்த்து 'அதுதானிதுஎன்னுமிடத்துச் சென்ற காலத்திலும் வேறிடத்திலு முள்ள அது வென்னும் பொருளும்நிகழ்காலத்திலும் சமீபத்திலுமுள்ள பொருளும் இதுவென்னும் பதத்தின் பொருளுமாம். 

      ஆகாங்க்ஷை  - Mutual correspondence அவாய்நிலை. ஒரு பதந்தன்னை முடிப்பதோடு பதமில்லாதவழி முடிவுபெறாது நிற்மல். உ - ம். பசுகுதிரைபுருடன்யானை

    யோக்கியதைCompatablityதகுதி. ஒரு பதார்த்தத்தில் மற்றொரு பதார்த்தத்தின் சம்பந்தமின்மை. உ - ம். வன்னியால் நனைக்கின்றான். 

    சந்நிதி Juxtapositionஅண்மைஆவைக்கொணா என்றல் முதலியன ஒரு தொடராகக் கூறாது யாமத்திற் கொன்றொன்றாகக் கூறுவது. வாக்கியமாவது வைதிகம்இலௌகிகமென விருவகை. 

   வைதிகம் Divine இறைவனாற் சொல்லப்பட்டது. முழுதும் பிரமாணம். 

இது மூன்றுவகை, அவையாவன : 

    மந்திரகலை - உபாசனா காண்டம்பற்றி மனாதிகளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை. 

    தந்திரகலை - கருமகாண்டம்பற்றிப் பின்னொடு முன் மாறு கோளீன்றி யனுஷ்டித்தல். 

    உபதேசகலை - ஞான காண்டம்பற்றித் தனக்கு முதலு முடிவுமில்லாத இறைவன் தன்னின் வேறல்லாத எண்குணமுடையனாதல் முதலிய தன்மைகளைத் தானுணருமாறும் பிறர்க்குணர்த்துமாறுந்தெரிவது. 

    இலௌகிகம்Humanஆப்தவாக்கிய மாத்திரம் பிரமாணம். மற்றது பிரமாண மன்று. 

ஆகம முடிந்தது.

 

இப்பிரமாணங்கட்கு மேலும் நையாயிகர் உபமானம்அருத்தாபத்திஅனுபலத்தி யுண்டென்பர். அவையாவன: -

             

உபமானம் * ஒப்பு.

Analogy.

இருபொருளின் றன்மை யுணர்ந்தா னொருவன் அவற்றிலொன்றை யறிந்தானுக்கு மற்றதையு மவனறிந்த பொருட்டன்மையொடு சாத்திக் காட்டலாம். ஆமா என்னுஞ் சொற்குப் பொருளுணராதான் ஆவினை யொக்கும் ஆமா எனக்கேட்டுக் காட்டிற் சென்று ஒப்புமை நோக்கி ஆமா எனத்தீர்மானித்தல்

 

இது அனுமானத்தி லடங்கும் என்னைஅது இதற்குச்சரி இதனுடைய ஒப்புண்மையால்எது எதினுடைய ஒப்புள்ளதோ அது அதற்கொப்பாகும் என்றதனால் என்க. 

* அலங்கார நூலுட் கூறப்படும் உவமானம் அறிந்த பொருளிரண்டினுள்ஒன்றினை யொன்றொடு ஒப்பிட்டுச் சிறப்பிப்பதாம். இந் நூலுவமாகம் அறிந்த பொருளை அறியாப்பொருளை யதனோடொப்பிட்டு விளக்குவதாம்.

 

அருத்தாபத்தி - பொருட்பேறு.

Deduction.

ஒருவன் பகலை விளக்குவது சூரியனென்று மட்டும் ஒரு பயன் குறித்துச் சொல்லி யொழிந்தால்அதை யறிபவன் இரவை விளக்குவது சந்திரனென்றறிதல். இது விய திரேக அனுமானத்தி லடங்கும். 

 

அபாவம் * இன்மை.

Negation.

உண்மையென்பது இன்மையென வொன்றிருந்தால் மட்டும் அறியப்படு தலானும்பொய்யென்பதே யறியாத ஒருவனுக்கு மெய்யென்பது இன்னதெனப் புலப்படாதாதலானும் இன்மையும் உன்மையைச் சாதிக்கவே எழுந்ததாம். ஆகவே பொறிக் கிலக்காகா - வுள் பொருளி னிலை மைபேயாம். இது நான்குவகை. விவரம்: 

 

பிராகாபாவம் - முன்னின்மை - Anticedent negation. சங்கார முடிந்த காலத்து இலதாய உலகம் படைப்புக் காலத்து உளதாதல். 

  * அபாவம் என்றதற்குச் சூன்யம் அல்லது டாழ் எனப்பொருள் கொண்டு இடர்ப்படுவர் ஒரு டாலார். அபாவம் (டாவம் உள்ளது. அ - எதிர் மறைப் பொருளுணர்த்தும் இடைச்சொல்) உள்ள தல்ல எனட்பொருள் படுதலின் அவ்வாறு கோடல் பெரிதுங் குற்றமாம். பொறிக்கு இலக்காகா உள்பொருளின் நிலைமையே ஈண்டபாவம். ஆகலினன்றே இதனைத் தருக்க நூலார் நான்கு வகையாய்ப் பகுப்பாராயினர். அபாவம் டாழென்பார்க்குப் பிராகாபாவம் முதலியவற்றிற் பிழைக்காண்டலின் (முன்டாழாயிருந்த பொருள் பின்தோன்றுதல் கூடாமையும், பின்னிருந்த பொருள் பாழாதல் யாண் கிமின்மையும் நன்கறியக் கிடத்தலின்) அது பொருந்தாமை யறிக.

 

பிரதித்துவமிசாபாவம் - பின்னின்மை - Destructionபடைப்பு முடிந்த காலத்துளதாய உலகம் சங்கார காலத்திலதாதல்

அத்தியந் தாபாவம் * முழுதுமின்மை - Absolute negationகோடென வொரு பொருள் ஆடுமாடுமான் முதலியவற்றிற் காணப்படினும் முயலினிடத்து இறப்புநிகழ்வுஎதிர்வு என முக்காலத்தும் நிகழக் காணாமையாம். 

இம்மூன்று அபாவங்களையும் சம்சர்க்காபாவ மென்பர்

 

அந்நியோந்நியாபாவம்- ஒன்றினொன்றின்மை Reciprocal Negationஇறைவனை வினைதொடுதலில்லை. வினையையிறைவன்றொடு தலில்லை. இப்பாவம் காட்சியிலடங்கும்.

இப்பிரமாணங்கட்கு மேலும் பௌராணிகர் பாரிசேடம்சம்பவம்ஐதிகம்சுபாவ முண்டென்பர் விவரம்: -

 

பாரிசேடம் - ஒழிவு. 

Inference by exception.

ஐந்து பூதங்களினும் ஓசைக்குப் பற்றுக் கோடாவது எது என வாராயுங்கால் நாற்றத்திற்குப் பிருதிவியும்சுவைக்கு அப்புவும்ஒளிக்குத் தேயவும்ஊற்றிற்கு வாயுவும் பற்றுக்கோடாதலினிதறியப்படுதலின்இவையொழிந்த ஆகாயமே ஓசைக்குப் பற்றுக்கோடென வறிதல்இது உரையனுமானத்தி லடங்கும். 

 

சம்பவம் - உண்மை. 

Coexistence.

முழுப்பொருளைச் சொன்னவிடத்து அதனுள் அதனுறுப்பு மடங்கிக் கிடத்தல். ஆயிரமென்று சொல்லுழி அதனுள் நூறு அடங்கிக்கிடத்தல். இது கேவல அனுமானத்தி லடங்கும் 

 

ஐதீகம் - உலகவார்த்தை.

Tradition.

காட்சியில் அறிய வாராதாயினும். பெரியோர் வாய்ச்சொல்லானும்அவரெழுதிய நூல்களானு மறியப்படுவது. இந்த ஆலிற் பேயுண்டு. இது உரையனுமானத்தி லடங்கும். 

 

சுபாவம் - இயல்பு.

Natural Inference.

உலக வழக்கானும், செய்யுள் வழக்கானும் அவ்வவ்வமையத்திற்கியைந்தவாறு பலபொருட் பொதுச்சொல்ஒரு பொருளையே சிறப்புறத்தருவது. குதிரைமீதிருந்தவொருவன் கோல்தாவென்றால் தடி கொணர்ந்து கொடாது குதிரைச்சமட்டியைக் கொடுத்தல். இது காட்சி யனுமானத்தி லடங்கும். இது இரு வகைத்து விவரம். 

    தற்சுபாவம்: - சிறப்பியல்பு. ஒரு பொருட்கு வேறு சாதிப் பொருளினுஞ் செல்லாது தனக்கு மாத்திரையே யுரித்தாய் நிலைபெறுந்தன்மை. மா என்பது ஒரு மரம் அது தனக் கன்னியமான இருப்பையினுஞ் செல்லாமல் தனக்குத் தலைமை யுண்டாகிய தேமா என்று பெயர் பெறுதல். 

    சாமானிய சுபாவம்: - பொதுவியல்பு வேற்றுச் சாதிப் பொருண்மாத்திரையிற் செல்லாது தன்சாதிப் பொருட்கெல்லாம் 

ஒப்ப நிலை பெறுந்தண்மை. மா என்பது ஒரு மரம் அது தனக் கன்னியமான இருப்பையிலுஞ் செல்லாமல்தலைமையும் பெறாமல் தன்னுடைய மா என்னும் பெயரைப் பெற்று நிற்றல். 

 

பிரமாணமுடிந்தது.

 

   

ஈண்டு கிளந்தோதிய பத்துவகைப் பிரமாணங்களிலும் சிலவற்றையே பல சமயத்தார் ஒப்புக்கொள்வர். வருமாறு. உலகாயதர் காட்சியளவை ஒன்றையுமே கொள்வர்பௌத்தரும் வைசேடிகரும் காட்சிஅனுமானமிரண்டையம் கொள்வர்சாங்கியர் இவற்றோடு ஆகமத்தையும் கொள்வர்நையாயிகர் இவற்றோடு உவமானத்தையுங் கொள்வர்சமணரும்பிரபாகரரும் இவற்றோடு அருத்தாபத்தியுங் கொள்வர்வேதாந்திகள் அவற்றோடு அபாவதத்தையுங் கொள்வர்பௌராணிகர் அவற்றோடு சம்பவத்தையும் ஐதிகத்தையுங் கொள்வர். 

 

 

 

 

 

 

 

பிரமேயம்.

 

பிரமேயம் - விளக்கப்படுபொருள்.

Objects of knowledge.

பிரமாணத்தைக் கொண்டு அளவிடப் படுவதாகிய பதார்த்தம் பிரமேயம் எனப்படும். 

பதார்த்தம் - பெயர்ப்பொருள்.

Category.

பதார்த்த மென்பது பதத்திற்குப் பொருளென விரிதலின் பதத்தாற் பெயரிட்டு வழங்கற் பாலதாந் தன்மையது. பதம் - - ஆற்றலுடையது. ஆற்றலாவது இம்மொழி யானிப்பொரு ளுணர்த்துக வென்னும் இறைவன் சங்கேதம்,

பதார்த்தவகை. - பாவபநார்த்தம் - அபாவபதார்த்தம். 

 

பாவம் - உண்மை.

Affirmation

திரவியும்குணம்கருமம்சாமானியம்விசேடம்சடவா பயன ஆறு. 

 

அபாவம் - இன்மை.

Non - existence.

அபாவபென லொன் றேபாம். ஆகப்பதார்த்தம் ஏழு. 

 

திரவியம் - பொருள்.

Substance.

திரவியமாவது சிறப்பியல்பு என்று கூறப்படும். அது அவ்வியாத்தி * அதிவியாத்திஅசம்பவமென்னு முக்குற்றங்களு நீங்கிய தன்மை அது பிருதிவிஅப்புதேயுவாயுஆகாயம்காலம்திசைஆன்மாமனம்இருள்† எனப்பத்து வகையாம். 

அவ்வியாதி - இலக்கியத்தினேக தேசத்தில் இலக்கணமில்லாமைஆவிற்குக் கபிலநிரத்தன்மை. அதிவியாத்தி - இலக்கிய மல்லாத கண்ணு மிருப்பது - ஆவிற்குக் கோடுடைமை. அசம்பவம் - - இலக்கிய முழுதினு மின்மை - - ஆ விற்கு ஒற்றைக் குளம்புடைமை.

† தார்க்கீகர் இருள் வேறுபதார்த்தமன் றென்பர். இருள் வடிவுடைமையின் ஆகாய முதலிய ஐந்தினுள்ளும்உருவுடைமையானும் இடையாதியங்காமையானும் வாயுவினுள்ளும், ஒளிவடிவிற்றன்மையானும் வெம்மையின்மையானும் தேயுவினுள்ளும்குளிர்ச்சியின்மையானும் கருவடிவிற்றாகலினாலும் நீரினுள்ளும்நாற்ற முடைய தன்மையானும் பரிசமின்மையானும் நிலத்தினுள்ளும் அடங்குவதன்று வேறேயாம். இது கேவலம் வியதிரேக அனுமானத்தாலறியப்படும். ஆலோகத்தின் அபாவமே யெனின் சுகத்தின் அபாவமே துக்கமெனக்கொள்ள வரும். ஆண்டுஒளியில்லை இருள் உள்ளது என ஒளியின்மையின் வேறாய் இருளென்னும் உணர்வு நிகழ்தலானும்யாட்டின் கழுத்திற் றூங்கு முலையோ டொக்கும் அபாவத்தாற் செய்யக்கடவ தொன்று யான்டு மின்மைபானும்கண்ணொளியைத் தடை செய்து நிற்பதாகிய இருளை அபாவமென்றல் பொருந்தாது. இவ்விருளி எது உண்மை வெள்ளிடையின் அலரவிழித்து நோக்கியவழியும் மறைத்தற்றொழில் நிகழ்தல் பற்றிப்பாரிசேட அளவையான் அறியப்படும். ஆங்கிலேயத் தருக்க சாஸ்திரங்களின் கருத்துமிதே. 

 

பிருதிவி  - மண்.

Earth.

      இலக்கணம் - நாற்றமுடையது. 

குணம்: - ரூபம்ரசம்கந்தம்பரிசம்சங்கைபரிமாணம்பிரதக்துவம்சையோகம்விபாகம். பரத்துவம்அபரத்துவம்குருத்துவம்திரவத்துவம்சமஸ்காரம் ஆகப் பதினான்கு. 

வகை: - நித்தம்அநித்தம்சரீரம்இந்திரியம்விடயமேன்னும் வேறுபாட்டால் ஐந்துவகை. அவற்றுள் நித்தம் பரமாணு ரூபம், அநித்தம் காரிய ரூபம். 

      சரீரம்Organized body. பார்த்திபம்நம்மனோர்க்குரிய நாற்றமுடைய சரீரம். 

      இந்திரியம்Organ of sense. காரணம் நாற்றத்தைக் கவர்வது - நாசி நுனியிலிருப்பது. 

      விஷயம்Inorganic matter - மண் கல் முதலியன.

பரமாணு வென்றது தார்க்கிகர் கூறு மஃதன்று. அதனினும் சூக்குமமாயுள்ள அருவநிலைத்தாகுமஃதே. ஆகலின் பரமாணு என்று சொல்லப்படுவது அலநீளகணங்கள் இல்லாத அருவவஸ்து வேயாம்.

 

அப்பு - நீர்.

Water.

இலக்கணம் - குளிர்ந்த பரிசமுடையது 

      குணம்: - ரூபம்ரசம்பரிசம்சங்கைபரிமாணம்பிரதக்துவம்சையோகம்விபாகம்பரத்துவம்அபரத்துவம்குருத்தும்திரவத்துவம்சிநேகம்சமஸ்காரம் எனப்பதினான்கு. 

      வகை: - நித்தம்அநித்தம்சரீரம்இந்திரியம்விஷயம்என்னும் வேறு பாட்டால் ஐந்துவகை. அவற்றுள்ள நித்தம் பரமாணு ரூபம்[*3]  அநித்தம் காரிய ரூபம். 

      சரீரம் - சலையம் அதாவது சலசப் பந்தம்வருணலோ கத்திலுள்ளது. 

       இந்திரியம் - சிங்கவைசவையைக் கவர்வதுநாவினுனியிலிருப்பது. 

      விஷம் - ஆறுகடல்பனிஆவி முதலியன. 

 

 

தேயு - தீ.

Fire

இலக்கணம் - சுடும்பரிச முடையது 

      குணம்: - ரூபம்ரசம்சங்கைபரிமாணம்பிரதக்துவம்சையோகம்வியாபகம்பரத்துவம்அபாத்துவம்திரவத்துவம் சம்ஸ்காரம் என்னும் பதினொன்று. 

       வகை: - நித்தம்நித்தம்சரீரம்இந்திரியம்விஷயம என்னும் வேறு பாட்டால் ஐந்துவகை. அவற்றுள் நித்தம் பமாணுரூபம், அநித்தம் காரியரூபம். 

       சரீரம்: - தைவியம்ஆதித்தலோகத்திலுள்ளது. 

       இந்திரியம்: - சட்சுஉருவத்தைக்கவர்வதுகண்ணின் கண்ணுள்ள கருமணியினுனியிலிருப்பது. 

      விஷயம்: - பௌமம் விருதிவியின் காரியமாகிய இந்தனத்திலுள்ள நெருப்பு முதலியன. திவ்வியம் - விண்ணிலுள்ள சூரியன்மின்வடவனல் முதலியன. ஔதாரியம் - வயிற்றி லுண்டவுணவு பரிணமித்தற்கேதுவான சாடராக்கினி. ஆகாஜம் சுரங்கத்திலுள்ள பொன் முகலியன* 

* பொன் பிருதிவிசம்பந்தமான நெய்முதலியவற்றின் நெழ்கிச்சிபோலாது எரிதழல் கூடியவழியும் அழிவுபாடின்மையின் பிருதிவியின் கூறன்று. நீர்க்குரிய வியல்பாகிய நெகிழ்ச்சியின்றி நிமித்த நெகிழ்ச்சியுடைமையால் நீரின் கூறன்று. உருவமுடைமையால் வாயுமுதலியபொருள்களின் கூறுமன்று. ஆகவே எரிதழல் கூடிய வழியும் அழிவுபடாத நெகிழ்ச்சியுடைமையின் தேயுவின் கூறாம்.

 

வாயு - காற்று. 

Air.

இலக்கணம் - உருவமின்றிப் பரிசமுடையது. 

குணம்: - பரிசம்சங்கைபரிமாணம்பிரதத்துவம்சைபோகம்விபாகம்பரத்துவம்அபாத்துவம்சமஸ்காரம்என ஒன்பது. 

வகை: - நித்தம்அநித்தம்சரீரம்இந்திரியம்விஷயம் என்னும் வேறு பாட்டால் ஐந்து வகை. நித்தம் பரமாணு ரூபம்அநித்தம் காரியரூபம். 

சரீரம் - வாயவியம்வாயு லோகத்தின் கண்ணுள்ளது. 

இந்திரியம் - துவக்குபரிசத்தைக்கவர்வதுசரீரமெங்கு நிற்பது. - 

விஷயம் - மாமுதலியவசைதற்கேதுவா யுள்ளது. 

 

ஆகாசம் – விண்

Ether

இலக்கணம்: - சத்தகுணமுடையது. அது பிருதிவி முதலியன போல பலவாகாமே யொன்றாய்வடிவுடைப் பொருள்களெல்லாவற்றினும் சையோசித்து ஆன்மாவைப்போல நிலையுடைப் பொருளென்க. 

குணம்: - சங்கைபரிமாணம்பிரதக்துவம்சையோகம்விபாகம்சத்தமென ஆறு. 

இந்திரியம்: - சுரோத்திரம்சத்தத்தைக்கவர்வதுகாதிலிருப்பதுஇச்சத்தம் கூட்டத்தாற் பிறந்ததும்பிரிவாற்பிறந்ததும் ஓசையாற் பிறந்ததும் என மூவகை. 

வியாபகம் : - விபு.

 

காலம் * பொழுது

Time

இலக்கணம்: - பூதபௌஷ்ய வர்த்தமான விவகாரங்களுக்கேதுவாக விருப்பது. 

குணம்: - சங்கைபரிமாணம்விரதக்துவம்சையோகம்விபாகமெனவைந்துவியாபகம்: - விபு. 

தெய்வமிருக்கிறதுமலைநிற்கின்றது என்னும் வியவகாரம் பொதுவாக நிகழ்தலால்முக்கால மின்றிப்பொதுக்காலமும் பெறப்படுதலின் காலநால்வகைத் தென்பர் ஒருசாரார்.

 

திசை - பக்கம்.

Space.

இலக்கணம்: - கிழக்கு முதலிய வழக்கிற் கேது. 

குணம்: - சங்கைபரிமாணம்பிரதக்துவம்சையோகம்விபாகமெனவைந்து. வியாபகம்: - விபு. 

 

ஆன்மா - உயிர். 

Soul.

இலக்கணம்: - அறிவிற்கிடமாயுள்ளது. அது சீவான்மா பரமான்மாவென விருவகை. 

குணம்: - சங்கைபரிமாணம்பிரதக்துவம்சையோகம் 

விபாகம்புத்திசுகம்துக்கம்இச்சைவெறுப்புபிரயத்தனம்அதர்மம்பாபம் எனும் பதினைந்து. 

வியாபகம்: - அதுவதுவாய் வசிப்புண்ணும் விபுத்துவம்* 

சிவஞான சித்தியார் நாலாவது சூத்திரம் இருபதாவது செய்யுளைக் காண்க.

 

பரமான்மா - இறையோன். 

Supreme Being.

இலக்கணம்: - கட்டு வீடென்னும் பலங்களையுடைய பசுபாசபதார்த்தங்களது இயல்புடையனல்லனாகலானும்எழுவா யிறுவாயிலனாகலானும்அருவம் உருவம் அருவுருவம் என்னு முக்கூற்றுள் இன்ன னாவனென்று தான் அம்முக்கூறும் படும் விருத்தி பரிணாமம் விவர்த்தன மென்பன வற்றுள் ஒன்றிற் படுவன் படானென்று தான் கூறுதற் கோராசங்கையு மில்லான். 

குணம்: - அனந்தசத்தியாகிய அளவிலாற்றலுடமையும், அநாதிபோத அனாதிமுத்தத்தன்மை யென்னப்படும் இயல்பாகவே பாசங்களினீங்குதலும்சுதந்திரமெனப்படும் தன்வயத்தனாதலும்சர்வஞ்ஞத்துவ மெனப்படும் முற்றுமுணர்தலும்அலுத்தசத்தியெனப்படும் பொருளுடமையும்பூர்த்தியெனப்படும் வரம்பிலின்பமுடைமையுமாம். 

வியாபகம்: - உலகெலாமாகி வேறாயுடனாய் நிற்றல் *

சிவஞான சித்தியார் இரண்டாவது சூத்திரம் முதலாவது செய்யுளைக் காண்க.

 

மனம் - நெஞ்சு. 

Mind.

இலக்கணம்: - சங்கற்ப விகற்பம் செய்து கொண்டு சம்சயரூபமாகி நிற்கும். 

      குணம்: - சங்கைபரிமாணம்பிரதக்துவம்சையோகம்விபாகம்பரத்துவம்அபரத்துவம் என எட்டு. 

வியாபகம்: - விபு 

ஒவ்வொன்றாகப் பதார்த்தங்களைக் கிரமத்திலே பற்றியறிகையினாலே மனது அணுவே யென்பர் தார்க்கிகர். சூரியப்பிரகாசம் மகத்தாகிய பதார்த்தங்களையும் அற்ப பதார்த்தங்களையும் கிரகிக்கு மாறுபோலமனமானது பிரதிபுருஷ நியதமாயிருந்து கன்மத்திற்குத்தக்கபடி மகத்தினையும் ஏகதேசத்தினையும் கிரகித்தல் அனுபவமாகலின் விபுவேயாம்.

 

அந்தகாரம் - இருள். 

Darkness.

இலக்கணம்: - கண்ணொளியைத் தடை செய்து நிற்பது. 

குணம்: - நீலவடிவிற்றாய்த் தோன்றுதல். 

 

இது காறுங் கூறிய பத்துத்திரவியங்களுள் பிருதிவிஅப்புதேயுஅந்தகாரம் என்பன புறவிந்திரியங்களாற்றோன்றும் இலவு கீகப் பிரத்தியட்சங்கள்ஆன்மாமான தப்பிரத்தியட்சம்வாயுஆகாயம்காலம்திக்கு மனம் என்பன அப்பிரத்தியட்சம். 

 

திரவிய முடிந்தது.

 

 

 

 

 

குணம் - பண்பு. 

Quality.

 

இலக்கணம்: - திரவியம்கன்மமென்னும் இரண்டற்கும் வேறாய்ப் பொது இயல்புடையது. 

வகை: - ரூபம்ரசம்கந்தம்பரிசம் சங்கியைபரிமாணம் பிரதக்துவம்சையோகம்விபாகம்பரத்துவம்அபரத்துவம்

குருத்துவம்திரவத்துவம்சினேகம்சத்தம்புத்திசுகம்துக் கம்ராகம்துவேஷம்பிரயத்தனம்தருமம் அதர்மம்சமஸ்கா ரம்ஆக இருபத்துநான்கு * 

எண்மைமென்மை, வன்மை முதலியன விருப்பவும்இருபத்துநான்கென்ற தென்னையெனின் அவை திரவத்துவம்சையோகம் என்பவற்றுளடங்குமாகலினென்க.

 

ரூபம் - நிறம். 

Color.

இலக்கணம்: - கண்களால் மட்டும் கிரகிக்கப் படுவது. 

வகை: - வெண்மைகருமைபொன்மைசெம்மைபசுமை புகைமைசித்திரம் என்னும் வேறுபாட்டால் எழுவகைத்து. 

இருப்பு: - பிருதிவியில் ஏழுவகைகளுமிருப்பன. 

       அப்புவில் விளங்கா வெண்மை. 

      தேயுவில் விளக்கமான வெண்மை. 

 

ரசம் - சுவை. 

Taste.

இலக்கணம்: - நாவினால் கிரகிக்கப்படுவது. 

வகை: - தித்திப்புபுளிப்புகார்ப்புகாழ்ப்புகைப்புதுவர்ப்பு என்னும் வேறுபட்டால் அறுவகை. 

இருப்பு: - பிருதிவியிலாறும்அப்புவில் தித்திப்பொன்றுமாம். 

 

கந்தம் - மணம்.

Odor.

 

இலக்கணம்: - மூக்கினாற் கிரகிக்கப்படுவது. 

வகை: - நறுநாற்றம்தீநாற்றம் என்னும் வேறுபாட்டால் இருவகை. 

இருப்பு: - பிருதிவியில் மாத்திரம். 

 

 

 

பரிசம் - ஊறு.

Touch.

இலக்கணம்: - துவக்காற் கிரகிக்கப்படுவது. 

வகை: - குளிர்ச்சிகுளிர்ச்சியும் சூடுமில்லது. 

இருப்பு: - குளிர்ச்சி அப்புவிலிருப்பது. 

சூடு: - தேயுவிலிருப்பதுகுளிர்ச்சியும் சூடுமில்லது பிருதிவி வாயுக்களிலிருப்பது. 

இதுகாறுங் கூறிய ரூபமுதலிய நான்கும் உற்பூத * மாயுள்ளகாட்சிக்குப்புலனாம். 

* உற்பூதத்தன்மையாவது காட்சியைப் பயப்பதொரு தரும விசேடம் அதனின்மை அனுற்பூதத்தன்மை.

 

சங்கியை - எண்.

Number

இலக்கணம்: - ஒருமை (ஒன்று) முதலிய வழக்கிற்கேதுவாயிருப்பது. 

வகை: - நித்தியப் பொருளிலுள்ளது நித்தியம். அநித்தியப்பொருளிலுள்ளது அநித்தியம். இருமைமுதலிய யாண்டும் அநித்தியமே. 

இருப்பு: - பிருதிவி முதலிய பத்துத் திரவியங்களினுடாம். 

 

பரிமாணம் - அளவு.

Dimention

இலக்கணம்: - அளத்தல் வழக்கிற்கு இன்றியமையாதது. 

வகை: - நுண்மைபெருமைகுறுமைநெடுமை. 

இருப்பு: - பிருதிவி முதலிய பத்துப் பொருள்களினுமிருப்பதுநித்தியப்பொருள்களிலிருப்பது நித்தியம்அநித்தியப் பொருள்களிலிருப்பது அதித்தியம். 

 

பிரதக்துவம் - வேற்றுமை.

Severality.

இலக்கணம்: - வேறு என்னும் வழக்கிற்கு இன்றியமையாதது. 

வகை: - எல்லாவற்றினு மிருப்பது. 

 

சையோகம் - புணர்ச்சி.

Conjunction.

 

இலக்கணம்: - கூடியது என்னும் விவகாரத்திற்கேது. 

வகை: - 

(1) கர்மசம் - தொழிலாற் றோன்றியது. கைக்கும் புத்தகத்திற்கு முளதாய சம்பந்தம். 

      (a) அக்நிய தரகர்மசம் - இரண்டில் ஒன்றின்றொழிலாற்றோன்றுவது. பருந்திற்கு மலைக்கு முள்ள சையோகம் 

(b) உபயகர்மசம் - இரண்டின்றொழிலாற்றோன்றுவது. மல்லர்களிருவருக்கும் உண்டானசையோகம். 

(2) சையோகம் - கூட்டத்தாற்றோன்றியது. கரத்திற்கும் தருவிற்குமுள்ள சையோகத்தால் காயத்திற்குந்தருவிற்குமுள்ள சையோகம். 

இருப்பு: - பிருதிவி முதலியவற்றில். 

 

விபாகம் - பிரிவு. 

Disjunction.

இலக்கணம்: - சையோகத்தை நாசம் பண்ணுவது. 

வகை: - 

(1) கர்மசம் தொழிலாற்றோன்றியது. கைக்கும் புத்தகக்கத்திற்கும்  முள்ளதாய பிரிவு. 

(a) அந்நியதரகர்மசம் - இரண்டில் ஒன்றின் றொழிலாற்றோன்றுவது. பருந்திற்கும் மலைக்குமுள்ள பிரிவு. 

(b) உபயகர்மசம் - இரண்டின் றொழிலாற் றோன்றுவது. மல்லர்களிருவருக்கு 

 முண்டான பிரிவு. 

      (2) விபாகசம் - கூட்டத்தாற் றோன்றியது. கரத்திற்கும் தருவிற்குமுள்ள பிரிவால் காயத்திற்குந் தருவிற்கு முள்ள பிரிவு 

இருப்பு: - பிருதிவி முதலியவற்றில். 

 

பரத்துவம் - முன்மை. 

Priority

இலக்கணம்: - முன்னென்னும் விவகாரத்தனுக்கின்றியமையாதது 

இருப்பு: - பிருதிவிஅப்புதேயுவாயுமனங்களில். 

வகை: - சேய்மைக்கண்ணுள்ள திக்கினாற்பண்ணப்படுவது. மூத்தோன் கண்ணுள்ள காலத்தாற் பண்ணப்படுவது. 

 

அபரத்துவம் - பின்மை. 

Posteriority.

இலக்கணம்: - பின்னென்னும் விவகாரத்திற் கின்றியமையாதது. 

இருப்பு: - பிருதிவிஅப்புதேயுவாயுமனங்களில். 

வகை: - அண்மைக்கண்ணுள்ள திக்கினாற் பண்ணப்படுவது. இளையோன் கண்ணுள்ள காலத்தாற்பண்ணப்படுவது. 

 

 

 

குருத்துவம் - திண்மை. 

Gravity.

இலக்கணம்: - வீழ்ச்சிக்குக்காரணம்

இருப்பு: - பிருதிவியினும்நீரினும். 

 

திரவத்துவம் - நெகிழ்ச்சி. 

Fluidity.

காரணம்: - உருகிய அரக்குமெழுகுநெய்வெள்ளிபொன் முதலியவற்றுள் முதலில் ஒழுகுவதற்குக்காரணம். 

இருப்பு: - அக்கினிசம்பந்தம் அபேட்சியாமல் அப்புவிலியல்பாயுள்ளது அக்கினிசம்பந்தம் அபேட்சித்துப் பிருதிவியிலும்தேயுவிலுநிமித்தமாயுள்ளது.

 

சிநேகம் - நட்பு.  

Viscidity. *

இலக்கணம்: - தூள் முதலியவற்றைத் திரட்டுவதற்கு ஏது வாயது. 

இருப்பு: - நீரில் 

* இது Attraction of cohesion பாற்படுமென்பர் ஆங்கிலேயர்

 

சத்தம் - ஓசை. 

Sound.

இலக்கணம்: - செவியாற் கவரப்படுவது. 

வகை: - ஒலிவடிவு * எழுத்துவடிவென இரண்டு 

இருப்பு: - ஆகாயத்தில் 

வடிவு: - சையோகசம் - கூட்டத்திற் பிறந்தது பேரிகையிற் குனிலா லுண்டாகு மோசை 

விபாகசம்: - பிரிவாற்பிறந்தது பிளவுபடுமூங்கிலாலுண்டாகும் சடசடவோசை 

சப்தசம்: - அண்ணமுதலிய வியாபாரத்தாலுண்டாகு மெழுத்தோசை. 

* ஒலிவடிவு - Inarbulateஎழுத்துவடிவு - Arbulate.

சுகம் - இன்பம். 

Pleasure.

இலக்கணம்: - எல்லாருக்கு மனுகூலமாக வுணரப்படுவது. 

இருப்பு: - ஆன்மாவில் மாத்திரம். 

 

துக்கம் - துன்பம்.

Pain.

இலக்கணம்: - எல்லாருக்கும் பிரதிகூலமாகவுரணப்படுவது 

இருப்பு: - ஆன்மாவில் மாத்திரம். 

ராகம் - விருப்பு. 

Desire.

இலக்கணம்: - இஷ்டசாதன ஞானத்தாற் றோன்றுவது. 

இருப்பு: - ஆன்மாவின் மாத்திரம். 

வகை: - பயனாகிய விஷயம் சுகமுந்துக்கமு மினமையுமாகும் அதனிச்சையைக் குறித்துப் பயனுணர்ச்சிக்கு மாத்திரங் காரணம். சாதனவிடயம் பயனுக்கேதுவான தன்மையுணர்ச்சிக்குக் காரணம்இதுவன்றி நித்தம் அநித்தம் இருவகைத்தென்றலுமொன்று. இறைவனிச்சை நித்தம். ஆன்மவிச்சை அநித்தம். 

† விருப்புவெகுளி என்னு மிரண்டினையும் தோடமென்னு மொன்றனுளடக்குவர். நியாய நூலார்.

 

துவேஷம் - வெகுளி.

Aversion

இலக்கணம்: - அநிஷ்டசாதன் ஞானத்தாற் றோன்றுவது. 

இருப்பு: - ஆன்மாவின் மாத்திரம். 

துக்கவிஷயம்: - துக்கஞானமாத்திரம் காரணம். 

சாதனவிஷயம்: - துக்கசாதனத் தன்மையின் ஞானங்காரணம். 

 

பிரயத்தனம் - தொழில். 

Effort.

இலக்கணம்: - சீவனுடைய அதிஷ்டத்தாலாயினும்இச்சையாலாயினும்அநிச்சையாலாயினுந் தோற்றுவது. 

வகை: - பிரவிருத்தி செய்யும் விருப்பத்தாற்றோன்றியது. நிவர்த்தி துவேஷசாதனத்தன்மையின் ஞானத்தாற்றோன்றியது. சீவன யோனி சுவாச நிசுவாசங்கட்கேதுவானது. இவையன்றி நித்தம் அநித்தமென விருவகைத்தென்றலுமாம். இறைவனது நித்தம், சீவனது அநித்தம்.

 

தர்மம் – அறம்*  

Merit

இலக்கணம்: - விதிக்கப்படுங் கருமத்தாலுண்டாயது. 

அறத்தினையும்மறத்தினையும் விருத்தியிலடக்குவர் நியாய நூலார்  

 

அதர்மம் – மறம்

Demerit

இலக்கணம்: - விதிக்கப்படுங் கருமத்தாலுண்டாயது. 

 

 

சமஸ்காரம் - வாசனை. 

Faculty

வகை: - வேகம் - Velocityபிருதிவி முதலிய நான்கினு மனைத்தினுமிருக்கும். 

பாவனை: - Mental Impression – அனுபவத்தின் காரியமாய் நினைவிற்குக் காரணமாயுள்ளது. ஆன்மாவில் மாத்திரமிருக்கும். 

திதித்தாபகம்: - நிலைபெறுத்துகை - Elasticilty வேறுவிதமாகச் செய்யப்பட்டதை மறுபடி முன்னிருந்த தன்மை யுள்ளதாகச் செய்வது. பிருதிவியினிருப்பது. இம்மூவகையு நித்தியமே. 

 

புத்தி - அறிவு. 

Cognition.

இலக்கணம்: - சகல விவகாரங்கட்கும் காரணமாயிருப்பது 

இருப்பு: - ஆன்மாவின் மாத்திரம். 

வகை: - - நினைவு Memory முன்னுணர்ந்த வாசனையாலுண்டாகும் ஞானம். அந்த விசுவேசுரன்அந்த மணிகர்ணிகை. 

அனுபவம்: - Apprehensionநினைவிற்கு வேறாய ஞானம். இதன்வகை யதார்த்தம்அயதார்த்தம். 

யதார்த்தம்: - True apprehension - எதன்கண் எதன் சம்பந்தமுண்டு அதன்கண் அதன் சம்பந்தமுண்டு அதன்கண் அதன் சம்பந்தத்தினது அனுபவம். இது பிரமை (யதார்த்த அனுபவம்) என்னப்படும். 

இதன்வகை: - பிரத்தியட்சம்அனுமதிசாத்தம்

இவற்றின்கரணம்: - பிரத்தியட்சம்அனுமானம்சத்தம், கரணம் இன்றியமையாதகாரணம் - வெட்டுந்தொழிற்குக்கோடரி 

காரணம்: - காரியத்திற்கு நியதமாய் முன்னிற்பது. 

வகை: - சமவாயிஅசமவாயிநிமித்தம். 

சமவாயி:- முதற்காரணம் - Intimateஎதனோடு கூடியதாகக் காரியமுண்டாகிறதோவது. படத்திற்கு நூல்

அசமவாயி: - துணைக்காரணம் Nonintimate - காரியத்தின்றன்மையினாலாவது காரணத்தின் றன்மையனாலாவது ஒரு பொருளிற் கூடியிருக்கும் காரணம். ஆடைக்கு நாடா. 

நிமித்தம்: - Instrumental மேற்சொன்ன விரண்டின் வேறாயகாரணம். ஆடைக்குத்தந்துவாயன். 

     

இம்மூவகைக் காரணங்களும் பாவகாரியத்துக்கு மாத்திரமுள. இம்மூன்று காரணங்கட்குள் இன்றியமையாத காரணமெதுவோ அதுவே முன்சொன்ன கரணமெனப்படும். ஆதலால் பிரட்தியட்சஞானத்திற்கே கரணம் பிரத்தியட்சம். இது பிராமணத்திலடங்கும். 

அயதார்த்தானுபவம்: -  False apprehenston நான்குவகை 

சம்சயம்: - Doubtஐயம் - ஒருதன்மையில் விரோதமான பல தன்மையுளவாகக்கொளுமறிவு. மனிதனோகம்பமோ?

விபரியம்: - Mistake - திரிவு - மித்தையினாலா யவுணர்வு. இப்பியைவெள்ளியென்பது. 

சொப்பனம்: -  Dream – கனவு *   முன்னரனுபவித்த பூதார்த்த ஸ்மரணத்தானும்அதிஷ்டானத்தானும்தாதுதோஷத்தானும் உண்டாகிறது. 

     த்தியவசாயம்: -  Fault of requctio ad absurdom. தருக்கம் - வியாப்பியத்தை யாரோபித்தலினால் வியாபகத்தை யாரோபிப்பது. தீயில்லையாகில் புகையுமில்லாதல் வேண்டும். 

* அயதார்த்தானுபவம் ஐயம்திரிவுதருக்கம் என்னும் வேறு பாட்டால் மூவகைத்தெனப்பிரித்துகனவு மானதக்காட்சித்திரிபாகலின் மூவகையின் மாறுபாடின்மை யுணர்கவென்றனர் தருக்க சங்கிரகவுரையார்சொப்பனம்அநத்தியவசாயம் என்னு மிரண்டும் விபரியயத்தின் மத்தியிற் போதிக்ாதக்கது என்பர் கையாயிகர்,

குணமுடிந்தது

 

கருமம் - தொழில். 

Action.

இது அசைவின் வடிவு கொண்டது. இது ஐவகைத்து விவரம்

உட்சேபனம்: - எழும்பல் - Flowing Upwards - மேலிடத்திற் கூடுதற்கேது. 

அவக்ஷேபனம்: - வீழ்தல்Throwing downwardsகீழிடத்திற் கூடுதற்கேது. 

ஆகுஞ்சனம்: - வளையுதல் - Contraction உடலில் - மிகவும் கோணலை யுண்டாக்குவது. 

பிரசரணம்: - நிமிர்த்தல் – Delationஉடலிற் செவித்தாக்கலையுண்டாக்குவது. 

கமனம்: - நடத்தல் goingஏனையனைத்து நடத்தற்கேது 

† சுழற்சி முதலிய நடத்தலினடங்கும்.

 

சமர்நியம் - பொதுமை. 

Genus.

இலக்கணம்: - நித்தமாய் ஒன்றாய்ப். பலவற்றி னொருங்கு சேறலை யுடைய சாதி. இது இருவகைத்து. விவரம். 

பரம்: - மேல் - Extensionஅது சத்தை (உண்மைத்தன்மை) யென்பது திரவியாதி மூன்றி னிற்குந்தன்மையால் மற்றச் சாமானியத்தை யபேட்சித்து அதிகதேசத்தினிருப்பது. 

அபரம்: - கீழ் - None extension - அது திரவியத்தன்மை. குணத்தன்மைகன்மத்தன்மை முதலிய சத்தை யபேட்சித்து அற்பதேசத்தினிருப்பது. 

 

 

விசேஷம் - சிறப்பு. 

Particularity

இலக்கணம்: - நித்திய திரவியங்களாகிய பிருதிவி முதலிய நான்கின் பரமாணுக்களினும் ஆகாய முதலிய ஐந்தினுமிருப்பனவாய் வெவ்வேறாய் நித்தியமாய் அதீந்திரியங்களாயுன்ளன. 

 

சமவாயம் - ஒற்றுமை. 

Intimate relation.

இலக்கணம்: - சினையும் முதலும்குணமும் குணியும்வினை,யும் வினைமுதலும்சாதியும் வடிவும்விசேஷமு நித்தியமுமாக விரண்டனு ளொன்று மற்றொன்றினைப்பற்றி நீக்கமின்றி நிற்பது 

 

அபாவம் - இன்மை. 

Negation.

இலக்கணம்: - முன்னர் பிரமாணத்திற்காண்க. 

பிரமேய முடிந்தது.

 

சித்தாந்த பரிபாஷை என்னும் தருக்கசோபானம் 

முற்றியது.

 

மணவழகு

 

அனுபந்தம்.

 

பிரமாணம்பிரமேயம்ஐயம் பிரயோசனம்திருட்டாந்தம்சித்தாந்தம்அவயவம்தர்க்கம்நிண்ணயம்வாதம்செற்பம்விதண்டைஎதுப்போலிசாதிசலம்தோல்வித்தானம் எனப் பதினாறு. 

பிரமாணம்: - Proofபிரத்தியட்சம்அனுமானம்உபமானம்சப்தம் என நான்கு. 

பிரமேயம்: - Objects of knowledge - ஆன்மாசரீரம்இந்திரியம்அருத்தம்புத்திமனம்பிரவிருத்திதோடம்பிரேத்தியபாவம்பலம்துக்கம்அபவர்க்கம் எனப்பன்னிருவகைத்து. 

ஆன்மா: - சீவான்மாபரமான்மா என விரண்டு. இந்நூல் ௩௪ (34)-வது பக்கத்திற்காண்க. சரீரம் - சராயுசம்அண்ட சம்சுவேதசம்உத்பீசம் என நான்கு. இந்திரியம் - கிராணம்இரசனம்சட்சுதுவக்குசுரோத்திரம்மனம் என ஆறு. அர்த்தம் - உருவம்இரசம்கந்தம்.பரிசம்சப்தம்புத்திசுகம்துக்கம்இச்சைதுவேஷம்பிரயத்தினம் எனப் பதினொன்று. புத்தி இந்நூல் சஉ - வது பக்கத்திற்காண்கமனம் - இந்நூல் கூரு - வது பக்கத்திற்காண்க. பிரவிருத்தி - தன்மா தன்மங்கள்.. தோஷம் - விருப்புவெறுப்புமயக்கம் என மூன்று. பிரேத்தியபாவம் - சாக்காடுபலம் - போகம்துக்கம் - இந்நூல் சக - வது பக்கத்திற்காண்க. அபவர்க்கம் வீடுபேறு. 

பிரயோசனம்: - Purposeஎதை யுத்தேசித்து புருஷன் முயற்சி செய்கின்றானோ அது ககமும்துக்கக்கேடும். 

ஐயம்: - Doubtஅது இப்பியின்கண் இது வெள்ளி யென்று தோன்றும் ஞானம். 

திருட்டாந்தம்: - Instanceவாதி பிரதிவாதிகளின் நிச்சயித்தற்கு விஷயமாகும் (அடுக்களை அல்லது மடு என்னும்) பதார்த்தம். 

அவயவம்: - The member (of a Syllogism) பிரதிஞ்ஞைஏதுஉதாரணம்உபநயம்நிகமனம். 

சித்தாந்தம்: -  Established truth - முடிந்த முடிபு - சாஸ்திர முணர்ந்தவன் பிரமாண முடைபையால் அங்கீகரித்த அர்த்தம். 

தர்க்கம்: -  Reasoningதர்க்கித்துத் தெரிக்கப்பட்டன அதாவது பதார்த்தங்களை நன்றாய் நிரூபிப்பது. உபசாரவழக்கால் பிரமாணமும் தர்க்க மெனப்படும். 

நிண்ணயம்: -  Ascertainmentநிச்சயித்தல்அது பிரமாணத்திற்குப்பயன். 

வாதம்: -  Argumentationஉண்மை யுணர்தல் வேட்கையோன் கதை - கதையாவது கூறுவார் பலரையுடைத்தாய் சங்கையுத்தரங்களைப் பயக்கும் தொடர் மொழியின் கோவைப் பாடு.

செற்பம்: -  Sophistryசாதனமிரண்டுற்ற தன்கண் வெல்லும் வேட்கையுடையோன் கதை. 

விதண்டை: - Cavelligதன்கோட்பாட்டை நிலைபெறுத்தாக் கதை.

ஏதுப்போலி: -  Fallacyஇந்நூலின் ௨௰(20)-வது பக்கத்திற் காண்க. 

சலம்: - Quibblesஒரு கருத்துப் பற்றிக் கூறி மொழிக்கு வேறு பொருள் படைத்திட்டுக் கொண்டு பழித்தல். 

சாதி: -  False Analogy - போலியுத்தரம் - அது பொதுவியல்புவேற்றியல்புஉயர்ச்சிதாழ்ச்சிபுகழ்ந்துரைபழித்துரை விகற்பம்சாத்தியம்அடைவு அடையாமைபிரசங்கம்வேறு திருட்டாந்தம்உற்பத்தியின்மைஐயம்பிரகாணம்ஏது வின்மைஅருத்தாபத்திவிசேடமின்மைஉபலத்திஅனுபலத்திகாரணம்நித்தம்அநித்தம்காரியம் சமம் என இருபத்து நான்கு.

தோல்வித்தானம்: - Unfitness for arguing - வாதம் பேசுவார் தோல்வியுறுதற்கேது. அது மேற்கோளழிவுவேறுமேற்கோள்மேற்கோண்மாறுபாடுமேற்கோள் விடுதல்வேற்றேது வேற்றுப்பொருள்பொருளின்மைபொருளுணரப்படாமைபொருட்போலிகாலம் பெறாமைகுன்றக்கூறல்மிகைபடக்கூறல்கூறியது கூறல்பிறகூற்றின்மைஅறியாமைமறுக்கப்படாத மதத்தை யுடன்பட்டுக் கூறல்உடன்படற் பாலதனையவாவுதல்உடன்படற் பாலதல்லதனை யுடன்படுதல்சித்தாந்தம்போலிஏதுப்போலி என இருபத்திரண்டு. 

 

அனுபந்தம் முற்றிற்று. 

 

Related Content

சைவ சித்தாந்த பரிபாஷை