logo

|

Home >

saiva-siddhanta >

sodasakalap-piratha-satkam

குருஞானசம்பந்தர் அருளிய - சோடசகலாப் பிராசாத சட்கம்

சிவமயம்

குருஞானசம்பந்தர் அருளிய

சோடசகலாப் பிராசாத சட்கம்


சோடசகலாப் பிராசாத சட்கம்

கலைகளின் வன்னமும் தானமும் கூறியது:

நற்றழலின் கொழுந்துபய கதிர்மின்னு விளக்கு
	நண்ணும் வா ளொளி புகைமா ணிக்கமிரு மின்னு
உற்றொளிரு மிரவி நூறாயிரகோடி யுதவ
	ஒளியன்ன தொகைவட்ட ஞானாகாயம்
அற்றமில் ஞானவ் வாழி ஞானக்கண் ணாடி
	அவிர்நூறா யிரகோடி மதியொளியத் தொகையே
பெற்ற தின கரவெயில் மேற் பேசவரு மிருளே
	பிறங்குந்தி முதல்முடி மேற் றுவாதசாந்தம் பெறுமே		- ௧

மேல் சோடசகலைக்கு நாபிமுதலாகத் துவாதசாந்தம் 
அளவாக அளவுந் தானமும் சொல்லியது:

அங்குலநா லகரத்திற் குந்தி மீதே
	அடுத்திடு மூன்றிற் கெட்டெட் டாயே னிற்குந்
துங்கமுள நாவினுக்கு மூன்று மூன்றாந்
	துலங்கியவோ ரிரண்டினுக்கு நான்கு நான்காந்
தங்கியமே லொன்றுக்கு மூன்றே யாகுந்
	தயங்கியமே லொன்றுக்கொன் றாகச் சாற்றும்
பங்கமிலா விவைகள்துவா தசாந்த மாகப்
	பாங்குபெறு கலைகலெனப் பகரு நூலே			- ௨

மேல் அகர முதலான சோடச கலைக்கு வடிவு சொல்லியது:

அகரமுக ரம் மகரம் விந்து நல்ல
	அர்த்த சந்திரனிவையவ் வடிவே யாகும்
புகலவரு முக்கோண மிருவிந்து நடுவே
	பொருந்து மலம் விந்துவலம் நடுவே விந்து
தகவுடைய திரிசூல மிரண்டு விந்து
	சாரும் வியோ மாதிநால் விந்து நான்காய்
நிகழவரு மிருகுச்சி யிரண்டு விந்து
	நீடுமொரு விந்துவென நிறுத்து நூலே			- ௩

மேல் பதினாறு கலைகளுக்குந் தேவதை கூறியது:

மலரயன் முன்னால்வர்களு மாகு முந்தி
	மருவகர மாதி யொரு நாலுக்கும் மேல்
இலகவரு நான்கினுக்குஞ் சதாசிவமே தெய்வம்
	எழிலுடைய மேலிரண்டிற் காகதமாஞ் சிவமே
நலமுடைய நான்கினுக்கு நற்பரம சிவமே
	நண்ணுமநா கதசிவமே நவிலரிய விரண்டிற்(கு)
உலகறிய வைந்துமூன் றிரண்டி ரண்டே
	யுள்ளாகு மிரண்டிரண்டிற் கொருநான்கு தானே		- ௪

மேல் ஆதார நிராதாரங்களுக்குங் கலைகளுக்கும் 
மலநிலை சொல்லியது:

மூலத்தி லோங்கார மசபைக் காக
	மொழிவர்கா மிகமலமேல் முகிழ்க்கு முந்தி
யேலத்தான் மேவகர முன்னி ரண்டிற்
	கிழுக்குமல மேலிரண்டிற் கிலகு மாயை
சீலத்தான் மேவிரண்டிற் றிகழ்மா யேயத்
	திறலுடைய மேலிரண்டிற் சேர்மா மாயை
சாலத்தான் மேலிரண்டிற்ற குதி ரோதந்
	தயங்கியமே லிரண்டிற் கா ணவமே சாற்றில்			- ௫

மேல் ஆதார நிராதாரங்களிலுள்ள மலங்களுடனே எண்பத்து 
நான்கு நூறாயிர யோனி பேதமும் சோதனைப் படும் என்கின்றது:

அரியமூலா தார மதனின் மேவி
	யவிரு மோங் காரமொழி லசபைக் காகத்
தெரிவரிய யோனிதா பரமே யாகுந்
	திகழ்வரு முந்தியின்மே லகரமாதிப்
பிரவரிய விவ்விரண்டா யதுகூ றாகிப்
	பெறும் யோனி யூர்வனவு நீரில் வாழ்தற்(கு)
உரியனவும் பறவைகளு நாற்கான்மா னிடரும்
	உயர்தெய்வ கதியுமென வுரைக்கு நூலே 			- ௬

மேல் எல்லாக் கலைகளுக்கும் மாத்திரையுஞ் 
சட்சூனியமும் கூறியது:

மூன்றுகர மிரண்டுகர மகர மொன்ரே
	முந்துவிந்து வரைபிறைகால் முக்கோண மரைக்கால்
ஆன்றமைந்த நாதமா காணி நாதாந்தம்
	அரைமாமே லரைக்காணி சத்தியைமுந் திரியை
யேன்றவியா பினியரைக் காணியின்கீ ழினரையே
	யிம்முறை வியோமாதி யரையரைமாத் திரையே
தோன்று மகரத்தின்மே னிரோதசத்தி யின்மேல்
	தோற்றும்வியா பினிசமனை யுன்மனை மேற்சுன்னே		- ௭

- சோடசகலாப் பிராசாத சட்கம் முற்றிற்று -


 

Related Content

நலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Na

சிவலோக வாழ்வு பெற

திருவாசக சிறப்புப் பெயர் அகராதி

திருவாசக உவமை அகராதி

திருவாசக தேவார ஒப்புமை அகராதி (மயிலை கிழார் இளமுருகனார்)