logo

|

Home >

saiva-siddhanta >

kodikkavi

Om symbol

கொடிக்கவி

Om symbol

உமாபதி சிவாச்சாரியார்

1.ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.
2.பொருளாம் பொருளேது போதேது கண்ணே திருளாம் வெளியே திரவே - தருளாளா நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி.
3.வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந் தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப் பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே குறிக்குமரு ணல்கக் கொடி.
4.அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும் பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப் பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங் கூசாமற் காட்டக் கொடி.
5.அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற் கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங் கூறாமல் கூறக் கொடி.

Related Content

அருண்முறைத் திரட்டு

உண்மை விளக்கம்

சங்கற்ப நிராகரணம்

சிவபோகசாரம்

சிவப்பிரகாசம்