logo

|

Home >

saiva-siddhanta >

aurnmurai-thirattu

அருண்முறைத் திரட்டு

உமாபதி சிவாசாரியார் இயற்றிய "திருவருட் பயன்" பத்து அதிகாரங்களுக்கேற்ப தொண்ணூற்றொன்பது 
தேவாரப் பாக்களை கொண்டுள்ளது.

aruNmuRaith thirattu

99 stanzas like "thiruvarut payan" compiled by umApathi shivAchAriyAr


அருண்முறைத்திரட்டு
aruNmuRaththirattu



 

1. பதி முதுநிலை
I. THE NATURE OF THE SUPREME LORD

1.	தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
	காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
	ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
	பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 		1.1.1	(சம்பந்தர்)

With ear-ring (in one ear), mounted on a bull, wearing the pure white moon (on His Head), smearing His body with the ash of the cremation ground. He is the Thief who has stolen my heart. When he of the flower petal (lotus) bowed in worship and praised Him, the Lord Who resides in majestic BrahmApuram granted him Grace. This is indeed He! (Indeed He is present here!).

2.	உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம்
	பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
	அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே
	மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே. 		4.63.3	(அப்பர்)

The world is said to consist of visible objects and (invisible) soul(s). In respect of them all, our Lord stands as the cause of the mighty deed of origination and release. Oh You residing in ANNAmalai from which flows a rich rivulet carrying gold, Oh Lord of the celestials, I have no wealth other than that of abiding at your Feet.

3.	அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர் 
	உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் 
	கண்டிங் காரறி வாரறி வாரெலாம் 
	வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே.  	5.97.2	(அப்பர்)

It would seem that there is a peerless bright Flame pervading and passing beyond the universe surrounded by intense darkness. Who has seen and known It here? All those who have known It declare that It is the Author of the Vedas, Who wears the white moon as a wreath on His Head.

4.	ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
	சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
	மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
	சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.		3.54.5	(சம்பந்தர்)

Do not engage youselves in excessive examination (of God’s existence) by arguments and scriptural statements. Our Lord is a flaming Effulgence. Those of you wishing to be rid of great sorrow, live with your mind concentrated on Him. Oh great holy ones! Come quickly unto Him.

[Nothing can be given by way of analogy or reason in respect of the Lord. He cannot be measured by these means of knowledge. He shines as the sun which gives external light. Where there is love, He shines forth as the Inner Light.]

5.	வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
	தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
	சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
	எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.			3.54.3	(சம்பந்தர்)

He (the Lord) smears (It could also refer to devotees, smearing sacred ashes and thinking of the Lord, as they get up at dawn) burnt ash as perfume. He has no father and no mother. He removes the karma of those who get up thinking of Him. He is our Father. What may be His nature!.

[Lights other than the Supreme Light which is the Lord are burnt out at the time of the Deluge. He wears as perfume the ashes thus purified. The Lord withdraws all thing at the time of the Great Deluge and manifests them again in a fresh creation. He Himself is beyond creation and destruction. Hence he is birthless and is without Father and Mother. He removes the intense darkness of the falsehood of the karma of those who think of Him alone as the True Light made manifest. With what words can we express this truth about the Lord Who is beyond all utterance?]

6.	ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
	கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
	கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
	தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். 		3.54.4	(சம்பந்தர்)

There is no limit to what may be heard (once we start listening) regarding the way He grants Grace to those Whom He takes under His rule and regarding His pristine majesty. Do not start inquiry (regarding these). So that planetary influences and karma may cease, worthy ones may listen to these, bowing their heads and worshipping the Feet of the Lord, our Father.

7.	பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்
		பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
	ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
		ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
	ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
		ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
	வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
		வெண்காடு மேவிய விகிர்த னாரே. 			6.35.2	(அப்பர்) 

He plants His Feet on this unique earth. His Feet penetrate in their reach the seven nether worlds. He stands on His feet so that there will be no misery. He is all the seven worlds-with a Single Foot, When the sound of sea-waves subsides and the sea spreads over land And when all the worlds are withdrawn alike The Lord residing in TiruveNkADu Listens to the vINA in tune with the sound of the vEdhA.

8.	பழுதில கடல்புடை தழுவிய 
		படிமுத லியவுல குகள்மலி
	குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் 
		குலம்மலி தருமுயி ரவையவை
	முழுவதும் அழிவகை நினைவொடு 
		*முதலுரு வியல்பர னுறைபதி
	செழுமணி யணிசிவ புரநகர் 
		தொழுமவர் புகழ்மிகு முலகிலே. 
	(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.  		1.21.3	(சம்பந்தர்) 

The Supreme Lord takes a form to withdraw completely unto Himself all souls which abound in groups such as the celestials, others and human beings in the earth surrounded by the faultless (never deficient or dry) sea and in other worlds. His abode is Sivapuranagar adorned by bright precious stones. The fame of those who praise this place will spread in the world.

9.	தாங்கருங் காலந் தவிரவந் திருவர் 
		தம்மொடுங் கூடினா ரங்கம் 
	பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் 
		பண்ணிய கண்ணுதற் பரமர்
	தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமா 
		செண்பகம் வண்பலா இலுப்பை
	வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி 
		மிழலையா னெனவினை கெடுமே.  			3.119.4	(சம்பந்தர்) 

The two (BrahmA and VisNu) came and united themselves with the Lord so as to bide an unbearably vast stretch of time. The Supreme Being, having an eye on His forehead wore their bodies (bones) in a comely fashion and recreated everything as before. He resides inTiruvIzhimizhalai which abounds in such a profusion of trees-kamugu (areca) having honey-laden flowers, tengu (cocoanut), tender creepers,champaka, luxuriant palA (jack fruit), illuppai, vengai, magil with flowers-that the rays of the sun cannot fall on its streets. If we call on Him (the Lord of TiruvIzhimizhalai), the effects of our dees (karma) will be destroyed.

10.	புவம்வளி கனல்புனல் புவி(*)கலை 
		யுரைமறை திரிகுணம் அமர்நெறி
	திவமலி தருசுரர் முதலியர் 
		திகழ்தரும் உயிரவை யவைதம
	பவமலி தொழிலது நினைவொடு 
		பதுமநன் மலரது மருவிய
	சிவனது சிவபுரம் நினைபவர் 
		செழுநில னினில்நிலை பெறுவரே. 01
	(*) கலைபுரை என்றும் பாடம்.  				1.21.1	(சம்பந்தர்)

Siva resides in the lotus and by His thought brings about the appearance of AkAsa, air, fire, water, earth the arts, the Vedas, the three gunas, the path (pursued by good person), the celestial world with its residents and all other living things including trees and plants. His abode isSivapura. Those who think of this place will lead a well-settled life in this fertile world.

11.	இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
		இயமான னாயெறியுங் காற்று மாகி
	அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
		ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
	பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
		பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
	நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
		நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.  		6.94.1	(அப்பர்) 

The Lord stands forth as the vast earth, fire, water, soul, the wind that blows, the moon of imperishable state, the sun, AkAsa-in this eightfold form, as the great good (of granting release), the defect (of causing bondage), as woman, as man (as male and female) as (in) the form of others, and as (in) His own form, as yesterday, to-day and tomorrow.

12.	மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு 
		வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
	தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
		தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
	மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
		வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
	பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
		போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 		6.54.5 	(அப்பர்) 

The Lord is of dazzling form. He is as one (sound) in AkAsa, as two (sound and touch) in air that blows abundantly, as three (sound, touch and colour) in ruddy fire, as four (sound, touch, colour and taste) in water that flows, as five (sound, touch, colour, taste and smell) in earth, as the ever-abiding form that is (our) unfailing refuge, as the tender shoot of the splendid coral creeper, as the pearl, as the light that (ever) grows, as the diamond, as the form of pure gold (gold that has no blemish). He abides in puLLirukkuvELUr. I have wasted countless days without adoring Him.

13.	மலைபல வளர்தரு புவியிடை 
		மறைதரு வழிமலி மனிதர்கள்
	நிலைமலி சுரர்முதல் உலகுகள் 
		நிலைபெறு வகைநினை வொடுமிகும்
	அலைகடல் நடுவறி துயிலமர் 
		அரியுரு வியல்பர னுறைபதி
	சிலைமலி மதிள்சிவ புரம்நினை 
		பவர்திரு மகளொடு திகழ்வரே.  		1.21.2	(சம்பந்தர்) 

The Supreme Lord, in the form of Hari Who is in super-conscious sleep in the midst of the sea with great waves, maintains by His thought the world where many mountains grow and where people in large numbers walk in the path indicated by the vEdAs, stable worlds like the celestial and other worlds. The Lord resides in Sivapuram which has rocky walls. Those who think of Sivapuram will shine with the prosperity of Grace.

14.	விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத 
		விதியல்லர் விண்ணு நிலனுந்
	திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் 
		தெளிநீரு மல்லர் தெரியில்
	அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக 
		அருள்கார ணத்தில் வருவார்
	எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் 
		இமைப்பாரு மல்லர் இவரே.  		4.8.2 	(அப்பர்) 

The Lord here is not the sun that spreads its rays, not the moon, not the injunction of the vEdAs, not the sky and the earth, not the wandering wind, not the destructive fire, not the limpid water. If we but know (through Grace), He comes with Her Whose eyes have red lines (indicative of Grace) as a part of Himself, in order to grant Grace. He has the fiery serpent as a garland on His chest. He is not one of the celestials (whose eyes do not wink), nor one of those with winking eyes, (viz human beings).

15.	மாய மாய மனங்கெடுப் பானை 
		மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
	காய மாயமும் ஆக்குவிப் பானைக் 
		காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
	ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை 
		ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
	வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர் 
		வேந்த னைப்பணி யாவிட லாமே.  		7.56.8	(சுந்தரர்) 

He destroys the delusive (or treacherous) mind (or the delusions of the mind). He abides in the mind as understanding (by illuminating it). He creates the body out of mAyA. In the form of air and fire, He removes it. He causes the affliction of disease in order to make it cease. He removes quickly (the effects of) strong deeds. He has, as a part of Himself (His Body) umA Whose shoulders are shapely like bamboo. He is the Lord of nIDUr. Can we fail to worship Him? 
 

2. உயிரவை நிலை
II. THE STATE OF SOULS

16.	கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை 
		கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
	உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால் 
		வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
	மருவாகி நின்னடியே மறவே னம்மான்
		மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
	திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
		செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே. 		6.25.6 	(அப்பர்) 

Life starts as embryo in a fluid (undifferentiated) state and, waxing, becomes a combination of blue vein and white bone. Commencing its career with a form, it is tended by a woman (mother). It may not live its full span. (Hence) Oh Lord! I shall not forget Your Feet abiding there (where my soul is in its subtle body), Should there be birth again, Oh You residing as Bridegroom in TiruvArUr, Oh, Your residing with a golden form in Ekambam, I am dazed - that I may forget. (dazed by fear that I may forget and by wish that I should not forget> I am haunted by the fear that there may be lapse in my remembrance, were I to be born again. During existence in the subtle body, there is no lack of remembrance). - Appar.

17.	கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
	தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல்
	ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி
	மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.  		4.33.4	(அப்பர்) 

Giving two legs, mounting two hands, filling with rafters, plastering with flesh, covering with skin, raising walls with blood, placing two suitable outlets, providing seven windows, causing bewitchment, the Lord of mAmaraikkADuhas placed life (in the body thus constructed).

18.	பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை
	தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த
	மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன்
	செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.  	4.67.5 	(அப்பர்) 

Lord of roseate hue, presiding over TirukkoNDIchuram! I feel exhausted by the excessive misery caused by the ninety six (tattvas) and the five senses which remain hidden in the impermanent, foul, worm-infested body.

19.	ஐவ கையர் ஐயரவ ராகி 
		ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
	அவ்வ கையவர் வேண்டுவ தானால்
		அவர வர்வழி ஒழுகிநான் வந்து
	செய்வ கையறி யேன்சிவ லோகா
		தீவ ணாசிவ னேயெரி யாடீ
	எவ்வ கையெனக் குய்வகை அருளாய்
		இடைம ருதுறை எந்தைபி ரானே.  			7.60.8 	(சுந்தரர். 

The five senses have become rulers and establishing their rule (over me), never once leave (me). This is what they want to do. (Yet), I am going their way, not knowing what to do. Oh! You of fiery hue! Siva! Oh, You sporting with fire! Oh, my Father, Oh Lord, residing iniDaimarudu! Grant me graciously whatever way is the way of my salvation.

20.	வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்
	புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்
	அரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய்
	திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.  		4.67.1	(அப்பர்) 

I am unable to bring the five senses under my control Confined to the hut (my body) which is impermanent and subject to countless births, I see no way of getting out of it. Oh, Lord having the glittering cobra around Your Waist, and residing in TirukkoNDichuram having as fenced, fields lapped by waves, say, ‘Have no fear’.

21.	கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம்
	ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வெனும் இமைதி றந்து
	விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
	அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவீ ரட்ட னாரே.  		4.26.7	(அப்பர்) 

Oh Lord of AdhikaivIrattam! I have not cleansed myself of the hot disease of lust. I have not got rid of the bondage of (narrow) love (sense of ‘I’ and ‘mine’). Seeing with my physical eyes, I have not seen by opening the (inner) eye of understanding. Displaying my ignorance, I have obtained deeds (karma) as possession. I have not destroyed it. I have forgotten (my real estate).

22.	மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணர மாட்டேன்
	மூட்டிநான் முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்
	பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை
	ஈட்டினேன் களைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.  	4.78.3 	(அப்பர்) 

I directed by mind worldwards. I have failed to be aware of life hereafter. I have failed to attach my mind to the Primal Being and worship Him. Like a stray dog, having accumulated sin, I do not get rid of it. Oh, to achieve what, was I born?

23.	பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்து
	வழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்
	அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக்
	கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னாரே.  	4.31.6 	(அப்பர்) 

Abiding in a body of ill-fame, watering only the waste land, I have not lived the (right) way nor have I got rid of delusion. Leading a perishable life, tossed by the five (senses), I am like unto a raft (drifting or tossed about) in back-waters.

24.	குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
		குற்றமே பெரிதுடையேன் கோல மாய
	நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
		நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
	விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்
		வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
	இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
		என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.		6.95.9 	(அப்பர்) 

Wicked the company I keep, wicked my character, wicked also my goal (ideal). I abound in faults. I am wicked in lacking a presentable form. I am wicked. I am not a sage (jnAni). I do not move with good people. I am not an animal, in between - I have not given up being other than animal. I am capable of speaking excessively what is hateful. I am wicked in being poverty-stricken. I only beg-never give. To achieve what, was I - poor one-born?

(animal in between-between humans endowed with the power of reason and animals totally lacking it, there are animals like the ruminants, monkey and the elephant, with some rudiments of reason).

25.	கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
	உருகிற்றென் னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
	திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
	ஒருபற் றிலாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.	4.100.6	(அப்பர்) 

From the day I was conceived, my mind melted (in desire) to see only your Feet. I also lay exhausted (in pain of mind). Oh, You ofTiruvoRRiyUr, of TiruvAlavAi, of TiruvArUr and of Kacchi Ekambam! Seeing that I have no attachment whatsoever (except to Your Feet), do have pity on me.

	பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப்
26.		படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
	சந்தித் ததிற லாற்பணி பூட்டித் 
		தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்
	சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்
		சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
	வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
		வலிவ லந்தனில் வந்துகண் டேனே.  	7.67.7	(சுந்தரர்) 

I came to Valivalam and saw the Lord, Who saves souls from the vast expanse of the sea of births so as to remove without trace strongkarma that binds (them), the Lord, Who by virtue of meeting (the soul) enlists (it) in service, the Lord Whose Feet are easy to meditate upon by those devotees Who have performed penance, the Lord who can open Sivaloka and make them (the devotees) ascend there, the Lord who resides in the minds of those Who worship Him.

27	கூச நீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி
	வாசம் மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
	ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பணிந் தேறேறும்
	ஈசர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.  	7.7.07	(சுந்தரர்) 

Removing (false) shame, removing fault(s), removing the mind given to deep-seated anger, removing the desire for delusive domestic life with those of fragrant tresses, cultivating love (for the Lord), let us go to EdirkoLpADi where there is the temple of the Lord Who wears bones and mounts a bull. 
 

3. இருண் மல நிலை
III. THE NATURE OF THE IMPURITY OF DARKNESS

28.	மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்
	பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
	தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
	செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே.  4.76.2	(அப்பர்) 

Cultivating truth, sowing the seed of desire (for spiritual life), removing the weed of falsehood, watering with forbearance (tolerance), observing and realizing themselves also, fixing the fence of propriety-if they stand rooted in plenitude-godliness will sprout.

29.	உடம்பெனு மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
	மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி
	இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
	கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.  4.75.4		(அப்பர்) 

In the body which is the house (of the soul), with the mind as the dish-lamp, pouring the melted butter (ghee) of right understanding which removes ignorance, with the (vital) breath as the wick, if we observe, lighting with the fire of wisdom which transcends space (and time), we can see the Feet of the Father of the Young One Who sits under Kadamba tree.

30.	வானமிது வெல்லா முடையான் றன்னை
		வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
	கானமதில் நடமாட வல்லான் றன்னைக்
		கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
	ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
		உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
	தேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
		சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.  6.19.4	(அப்பர்) 

Lord Siva owns all regions-celestial, this region (viz terrestrial) etc. He has a striped snake as His belt. He can dance (or roam about) in the forest with demons around Him. At the side long glance of the Lady-umA, He removed all my deficiencies (or defects). As right understanding, He is the honey and nectar in my mind. He is Siva in TiruvAlavAi in kUDal in the South. It has been given to me to think of the Feet of Siva alone.

31.	ஊனாகி உயிராகி யதனுள் நின்ற 
		உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
	நானேதும் அறியாமே யென்னுள் வந்து
		நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
	தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
		திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
	ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்
		அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.  6.62.2	(அப்பர்) 

You stand as body, soul and understanding therein, as everything else. Without my knowing anything (about it), You entered into me and You have been showing me what is good and what is bad. You, with the honey-filled Konrai (Flower), You of NinRiyUr, Siva residing inThiruvAnaikkA You Who are wisdom, if I attain Your golden Feet, what, have I to do with misery?

32.	விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே
	வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே
	உள்ளத்தே நிற்றி யேனும் உயிர்ப்புளே வருதி யேனுங்
	கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனங் காணு மாறே.  		4.76.7	(அப்பர்) 

I am not able to talk the least bit about it. Though You abide in my mind and though You are in my very breath, You remain hidden. So, inspite of the longing of my thirst (for You) I am unable to drink You with my mouth as I would drink honey from a cup. How am I to see You?

33.	வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
	கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
	உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
	கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.  		1.103.6	(சம்பந்தர்) 

The Lord can take all the water on His out-spread matted hair. He can take the outspread KonRai (flower) on His Head. He is capable of the gule of dancing in the minds of all those small devotees who think of His Feet The temple in (Tiru) KalukkunRam is where the Lord loves to dwell. 
 

4. அருளது நிலை
IV. THE NATURE OF GRACE

34.	நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
	அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
	குறிநீர்மையர் (*)குணமார்தரு மணமார்தரு குன்றில்
	எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே. 
	(*) குளமார்தரும் என்றும் பாடம். 				1.17.6	(சம்பந்தர்) 

This is iDumbAvanam on a hill, having fragrant trees of good quality and, being surrounded by fields lapped by waves. It is the abode of the Lord Who is the object of the thought of those who pursue the right path and who are celestials. The Lord graciously grants understanding to those who come to Him by the path of knowledge to reach Him as their goal.

35.	நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
		நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்
	பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
		பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
	துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
		துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
	புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
		புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.  		6.13.6	(அப்பர்) 

The Blue-Throated One, of coral hue wearing white ashes and a beautiful tiger-skin, tying a snake on it came with Her Whose tender Fingers are painted with nail-polish. He came with Her as part of Himself, announced Himself as One from ParAittuRai and sounded a small drum. As I am asleep (at the time), I woke up in fright. I am unable to narrate (the sequel). Wearing water also on His golden matted Hair, He departed saying, ‘Our place is Purampayam’.

36.	கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் 
		கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
	உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல 
		உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
	கள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற்
		கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
	வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
		வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.5	(அப்பர்) 

The Lord Who is in VeNkADu, Whose Mouth chants the vEdhAs, and Whose matted hair carries the flood waters (of the Ganges), roams about as though He would steal my heart. He is accompanied by pot-bellied goblins with bright ornaments in their ears, dancing koDukotti (a particular type of dance) and singing. Not knowing my state of mind, I returned. The Lord easts stealthy looks, as though He does not see. As though He could be seen, yet He hides Himself.

37.	முற்றொருவர் போல முழுநீ றாடி
		முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
	ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை 
		ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
	மற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு
		மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
	புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
		புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.  6.13.2	(அப்பர்) 

The Lord is the Absolute (or One of perfect austerity) with His body completely smeared with bright white ashes, wearing the crescent and also the sacred thread. As I am pretending to be asleep, He counts one by one by one my bright bangles. I have no person to help(me). As I lay dazed, like one gone mad, He Who wears a serpent as a waist-band and Who is surrounded by goblins, departed saying, ‘Our place isPurampayam’.

38.	வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்
	உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து
	கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு
	வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.  4.75.9	(அப்பர்) 

The Lord with flood-waters on His matted Hair came as though to enquire (some thing) of me and entered my heart. I, who was asleep-(getting up), went near Him, saying ‘Are You a thief to enter (thus)?’. He Who wears the bright crescent, giving me a penetrating look, said, laughing, ‘We are innocent’.

39.	சரண மாம்படி யார்பிற ரியாவரோ 
	கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின் 
	மரண மெய்திய பின்னவை நீக்குவான் 
	அரண மூவெயி லெய்தவ னல்லனே.  		5.97.17	(அப்பர்) 

Who else can be our refuge except He Who destroyed the three fortresses? When the internal organs cease (functioning), when life slips out and death ensues, He removes (our) defects.

40.	வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க 
		பகைதீர்க்கு மேய வுடலில்
	தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற 
		கரவைக் கரந்து திகழுஞ்
	சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத் 
		திருமாலும் நேட எரியாய்ச்
	சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் 
		திருநாரை யூர்கை தொழவே.  		2.86.9	(சம்பந்தர்) 

As the lord who resides in the flower sprouting from moist earth (BrahmA) and TirumAl started searching, Siva flared up as (a coloumn of) Fire. Siva resides in TirunAraiyUr. If hands are folded in worship (of this place), exalted life, different in nature (from a painful one) will shine forth. Sorrow, resulting from karma and highly inimical (to such exalted life) will be removed. In the body occupied by the soul that which hides clarified thought and truth will be overcome.

41.	இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி
		இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
	தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
		சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
	அருளானை ஆதிமா தவத்து ளானை
		ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
	பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
		போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.4		(அப்பர்) 

In order to redeem poor me, the Gracious One, the First Great Teacher of penance, the Reality beyond the reach of the six angas and the four vEdhAs, removing the darkness from the darkened soul, destroying misery and sin clarity which it lacks, gave me the mind to know like Himself the path to Sivaloka. He, the Lord, is in puLLirukkuvELUr. Without adoring Him, many are the days I have wasted. 
 

5. அருளுரு நிலை
V. THE FORM OF GRACE
(as manifested in the Guru)

42.	ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
		இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
	கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
		குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
	தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
		சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
	கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
		குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.  6.75.10	(அப்பர்) 

I am losing strength caught in the sea of misery. Our, Dancer of KuDandhaikkIzhkOttam surrounded by (or, containing the tank here gathering within itself) the leaping waters of the kAviri the good yamunA, the gangA, the Saraswati, the Golden Lotus tank, other lotus tanks, the KrishnA with its limpid waters and Kumari, enabling me to climb out (of the sea of misery) calls me over there, making me go beyond all the celestial worlds. Perhaps*, He has taken me under His rule and given me His six qualities!

(*Perhaps. To heighten the certainty, it may be a rhetorical device to underplay it. What is certain beyond all doubt is presented as wrapped in a haze of doubt.)

43.	வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை
		வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
	அறியா தடியே னகப்பட் டேனை
		அல்லற்கடல் நின்று மேற வாங்கி
	நெறிதா னிதுவென்று காட்டி னானை
		நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
	பொறியா டரவார்த்த புனிதன் தன்னைப்
		பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.  6.43.4	(அப்பர்) 

I saw in pUnturutti, the One Who is without falsehood, the Pure One Who wears a spotted snake, and the fragrant konRai (Flower), the One in veNkADu Whom the white elephant (the mount of Indra) comes and worships, the One Who drew me, enabling me to climb out of the sea of travail in which I was caught, because of my ignorance, Who showed me the path saying ‘This, indeed, is it’ and Who cures (me) of the ills that daily beset me.

44.	குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக்
		குலவரையன் மடப்பாவை இடப்பா லானை
	மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட 
		மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
	சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந் 
		தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
	நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
		நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  6.20.6	(அப்பர்) 

The Lord, abiding in NaLLARu is One Who can give (us) membership of the community (of saints), Who can remove (adverse) planetary influences, Who has, as the left side of His Body the tender-hearted Lady of the snowy mountain Who is the Author of the vEdhAs, Who removes impurity and cleanses (souls) in the great sacred water (of His Grace), on Whose red matted Hair the crescent crawls, Who removes falsehood, (and) Who grants blessings to all those who stoop in worship through the path shown by the philosophy of righteousness rooted in compassion. I, His devotee, found salvation, thinking of Him.

45.	நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
		நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
	கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
		காணா தனவெல்லாங் காட்டி னானைத்
	சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
		தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
	பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
		புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.  6.43.1	(அப்பர்) 

I, myself saw in pUnturutti the Lord Who arrested in His matted-Hair water whose nature is ceaseless flow, Who made my mind not given to thoughts, of Him, to think of Him, Who taught me everything that I had not learned, Who showed me everything that I had not seen, Who told me everything that I had not been told. Pursuing me, here, He took me as His servant. He is the Pure One, the Great Good, Who cured me of my wicked disease.

46.	ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
		அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
	ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
		உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
	பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
		பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
	காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
		காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.  6.95.3 	(அப்பர்) 

Is there anyone who will not dance if made to dance? Who will not be controlled, if controlled? Who will not run, if made to run? Who will not melt, if made to melt? Who will not sing, if made to sing? Who will not be submissive, if made to submit? Who will not see, if made to see? Oh! You with an Eye on the Forehead! Who can see, if not made to see?

47.	எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்து
	புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும்
	வில்லிஐங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார்
	அல்லியம் பழன வேலி அதிகைவீ ரட்ட னாரே.  4.25.8	(அப்பர்) 

I sleep all the time-night and day. One (Who is Peerless) came and entered the temple of my lowly mind. He is the Lord residing inadhikaivIrattam having lilly as fence for its fields. By His look, He burnt to ashes kAma the archer with five arrows.

48.	துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை 
	நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை 
	நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை 
	வஞ்ச னேனினி யான்மறக் கிற்பனே.  5.93.8	(அப்பர்) 

(How comes it that) I, given to deception, can (manage to) forget the Light That shines forth even in sleep, (the sense of), Justice abiding in (my) mind, making it to think (of good and evil), the Lord Who contained the poison in His Throat? 
 

6. அறியும் நெறி
VI. THE WAY OF KNOWLEDGE

49.	உயிரா வணமிருந் துற்று நோக்கி
		உள்ளக் கிழியி னுரு வெழுதி
	உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
		உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
	அயிரா வணமேறா தானே றேறி
		அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
	அயிரா வணமேயென் னம்மா னேநின் 
		அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.  6.25.1 	(அப்பர்) 

Controlling the breath, looking intently (within), painting (Your) Figure on the canvas of the mind, if the soul with a sale deed is given to Your Grace, You will dwell united with those Who (thus) know You (without the least trace of egoism). MY Lord! Without riding on ayirAvaNam, You ride on a bull. Without ruling over the celestial world, You rule over ArUr. (Such is Your gracious accessibility). Oh Indubitable Reality! Those who are not seen by Your gracious Eyes are verly non-entities.

50.	அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
		அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
	வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
		வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
	பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
		பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
	பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
		பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  6.1.5	(அப்பர்) 

The Lord abiding in perumpaRRappuliyUr is a precious Help. He is the rare medicine that cures the troubles of His devotees. He is the great Help to those who, born in this world, give up companions who come along, relatives and attachment, who restrain the strong senses within (preventing their outward reach), sublimate the pleasures of the bed with women and, instead of treating Him as common (one with other gods), can think of Him (alone). Days not spent in speaking of Him are verily days one may reckon oneself as unborn.

51.	புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்து
	இலங்களைப் போக நின்று இரண்டையும் நீக்கி யொன்றாய்
	மலங்களை மாற்ற வள்ளார் மனத்தினுட் போக மாகிச்
	சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே.  4.32.9	(அப்பர்) 

Perhaps, the Lord abiding in TiruppayaRRUr can enable (us) to withdraw the senses from enjoyment, to concentrate the intellect, to go beyond the six yogic centers, to remove the two (sense of ‘I’ and ‘mine’), to unite with Him and to transmute the impurities. Becoming the object of enjoyment of the mind, He roots out anger and its off - shoots.

‘Perhaps’ occurs again here as in verse 42 to heighten certainty by underplaying it).

52.	பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
	நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
	அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
	குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.  5.48.4 	(அப்பர்) 

The Lord is the Neetar known in the mind of those who check the outward flow of the senses organs, control their mind and think of Him. He resides in ekAmbam. Guided by His Grace, let us go there and worship Him together (with other devotees).

53.	செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய
	நஞ்சணி கண்டன்நல் லூருறை நம்பனை நானொருகாற்
	துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்
	நெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே.  4.98.4	(அப்பர்) 

The Lord wearing poison as ornament like a pearl in His Throat is an Effulgence of red Flame, and a heap of corals. He abides in NallUrOnce, as I was sleeping I saw Him in my dream and bowed in worship. Without departing, He has stood forth in my mind many a time.

54.	உன்மத் தகமலர் சூடி உலகந் தொழச்சுடலைப்
	பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும் பலிதிரிவான்
	என்மத் தகத்தே இரவும் பகலும் பிரிவரியான்
	தன்மத் தகத்தோர் இளம்பிறை சூடிய சங்கரனே.  4.114.6	(அப்பர்) 

In order that the world may worship Him, SankaraWho wears a crescent and unmattaka flower on His Head, wanders, begging from house to house, with skulls taken from the cremation ground. Day and night, He is never separated from my head.

55.	புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று
	துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார்
	முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
	உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே.  4.77.5	(அப்பர்) 

Five robbers and hunters enter the field (or one’s mind), throw their weight about, plunder and prevent the cultivation of the holy path. They are like thorns. Hiding behind he shade of the Feet of the Three-Eyed one, we can shoot them down with our understanding.

56.	பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப் 
		பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
	முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் 
		மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
	சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் 
		சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
	கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள் 
		காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.  1.126.7	(சம்பந்தர்) 

The Lord makes as Himself those who reach Him, as the Supreme Reality, by sowing the seed of devotion, protecting (the soul) from going the wide-spread way of the senses, thinking about they way of overcoming the six (internal) enemies, closing the way of the three guNaswhich are obstacles to release, directing the four euarrelsome internal organs into the single path of citta. The Lord resides inKazhumalavaLanagar inhabited by those who have read the six angas and who never cease to think of the Feet of the Auspicious Reality (em>Siva) which pervade and shine through everything.

57.	அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் 
		றைம்புலனும் அடக்கிஞானப்
	புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் 
		துள்ளிருக்கும் புராணர்கோயில்
	தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் 
		கந்திகழச் சலசத்தீயுள்
	மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட 
		மணஞ்செய்யும் மிழலையாமே.  1.132.6	(சம்பந்தர்) 

mizhalai is the temple of the Ancient One Who abides within the lotus of the heart of those who with deep love, having overcome the six enemies and (controlling) the five senses, have taken refuge in knowledge (of the Lord’s Feet). Conches in clear shining water perform wedding for increase of their species by throwing the puffed rice of the abundant pungai flowers in the fire fire of the lotus.

58.	சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் 
		சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
	இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் 
		என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
	பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப் 
		பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
	வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
		என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.7	(அப்பர்) 

My lord with curly matted Hair and pure water! My Lord Who removes the sorrow resulting from whirl-pool-like births! My Help! My Lord! The Lord of souls Who removes births which are difficult to overcome and which result from bondage! The Sun (of Effulgence) Which could not be seen even by Tirumal and ayan, who are beyond blame! Oh Sturdy Pillar in MalapADi, Jewel adorning the crest of the vEdhAs and Guide on our path!-thus and thus I cry out in pain and pind (for you).

59.	மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட் 
		டுடையாரும் விரவலாகா
	ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும் 
		உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
	ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை 
		முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
	மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து 
		தவம்புரியும் முதுகுன்றமே.  1.131.10 	(சம்பந்தர்) 

BouddhAs who have ascetic’s yellow robes on their bodies and those who have a spread-mat as their robe (Jainas) are not persons fit to associate with. Without giving heed to their words, realise what is within (yourselves) and win your salvation. MudukunRam is the place where the wise ones, rich in spirituality, who have thoroughly understood the four vEdhAs, and have overcome their senses perform penance in solitude and silence.

60.	கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
	தெள்ளியே னாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
	உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
	வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே.  4.75.3	(அப்பர்) 

The rogue that I was-I wasted time in pseudo-service. I attained clarity (by your Grace) - searching (for You), seeking (You), and seeing (You). Realising that Your know every thought of all persons by being with them, I felt ashamed. Thus feeling ahamed, I laughed till my sides split.

61.	நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
	தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
	சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும்
	மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.  7.21.9	(சுந்தரர்) 

Concentrating my mind, I thought only of Your Feet. As I so thought, my Lord, You bade me think of You. I got rid of deception. Mountain (of Joy) abiding in TirumERRaLi, surrounded by huge granite walls! I will worship in joy none other than You.

62.	துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
	நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
	வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
	டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.  1.45.1	(சம்பந்தர்) 

Our Lord came while I was sleeping, made me worship Him; slipping away (when conceit sprouted a little), entered my mind (when conceit subsided) and made me think of Him. He resides in pazhaiyanUr AlangADu whose residents were once filled with dread when they heard that a woman under pretence of friendship took the lif (of a person whose wife she was formerly). 
 

7. உயிர் விளக்கம்
VII. THE SOUL’S PURIFICATION

63.	முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் 
		மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
	பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
		பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
	அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
		அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
	தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
		தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.  6.25.7	(அப்பர்) 

At first, she heard His Name. Then she heard about His Form (and complexion). Later, she heard about His ArUr. Even against dissuasion, she became mad about Him. She left her father and mother that very day. She departed from (gave up) widely accepted codes of conduct. She forgot herself. She lost her name (separate identity). The maiden placed her head at the Feet of the Lord.

64.	வன்னாகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி
	தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை
	முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந்
	தென்னாகப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.  7.51.6	(சுந்தரர்) 

My Lord of ArUr burnt the three cities by drawing against His body the strong cobra as string, with mountain as bow, fire as tip (of the arrow) and Hari as the lower part of the arrow. Without thinking of Him first and fore-most, for what purpose am I-an obstinate person-bearing (the load of) this body and living in separation from Him?

65.	துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் 
		சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
	என்னாகத் திரிதந்தீங் கிருகையேற் 
		றிடவுண்ட ஏழை யேன்நான்
	பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து 
		பொருட்படுத்த ஆரூ ரரை
	என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க் 
		காதனாய் அகப்பட் டேனே.  4.5.5	(அப்பர்) 

Tenanting a darkness-infested body, listening to the words of wicked people, wandering at will, chewing areca-nuts, stretching out my hands to eat whatever is given as alms-I have been a poor person. The Lord of ArUr made (such a person as) me enter into a golden body, giving me (my existence) significance. (Yet), instead of cherishing Him in my heart, I have allowed my self to be caught as an ignorant person, in fight with the Principle of Darkness.

66.	என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
	புன்னை மலரும் புறவிற் றிகழுந்
	தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
	உன்னப் படுவான் ஒற்றி யூரே.  7.91.4	(சுந்தரர்)

He Who first gives Himself to make me think of Him and Who, later on, is thought of by me, resides on oRRiyUr with fields where punnaiflowers blossom--in order to steal my beauty and bashfulness.

67.	எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
	தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
	கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
	வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.  2.40.1	(சம்பந்தர்) 

He Who is my Lord, Who is neetar to me, Who is the Lord of those seeking Him as refuge, Who holds fire in His Hand, Who holds a skull (in His hand) as begging bowl, Who skinned a terror-inspiring big elephant and Whose throat bears a stain - He, resides in Bramapuramabounding in fragrant groves.

68.	ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன் 
	ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன் 
	ஈசன் றன்னையு மென்மனத் துக்கொண்டு 
	ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.  5.93.3	(அப்பர்) 

‘Lord!’ ‘Lord!’ - thus each and every day, I cry out retailing my distress. The Lord Himself never departs from my mind. Having taken the Lord Himself into my mind, can I possibly forget Him?

69.	ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகி
	வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்
	நானெனிற் றானே யென்னு ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
	தேனும்இன் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.  4.29.1	(அப்பர்) 

Though the Lord is a Deceiver Who cannot be known even by the celestials of the heavens, He is accessible to those who understand Him by tempering their soul (in the fire of knowledge of the Sacred Feet) in the body. He abides in TirucchemponpaLLi and He is the honey and sweet nectar in the minds of gnAnis and bhaktas who declare, ‘If we way, “we” it is really “He Him self”.

70.	யாதே செய்துமி யாமலோம்நீ யென்னில்
	ஆதே யேயும் அளவில் பெருமையான்
	மாதே வாகிய வாய்மூர் மருவினார்
	போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ. 	5.50.6	(அப்பர்) 

Whatever they (devotees) do, when they say, ‘Not we, but You,’ the Lord is of such immeasurable greatness as to identify Himself (with those actions). He is the Great God abiding in vAymUr. Is it a delusion that He said (in my dream) ‘Follow me’ and led the way (and disappeared)?

71.	நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவு மாகியோ ரைந்து
	புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
	நலனொடு தீங்குந் தானல தின்றி நன்கெழு சிந்தைய ராகி
	மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறை யாரே.  1.42.4	(சம்பந்தர்) 

The Lord abides in prosperous PerunduRai. This is where holy persons live. They are rid of all falsehood. They have overcome the five elements - earth, AkAsa, water, fire and air-and the five senses. Smearing themselves with white ash, they have no good or evil apart from Him. They have good lofty thoughts. They are free from impurities and defects.

72.	ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
		ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
	துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் 
		திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்
	தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை 
		ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்
	அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
		அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.  6.62.3	(அப்பர்) 

So as to conform to the ways of this world, I wandered forgetting your auspicious nature, being in the company of those whose penance is not of the right sort, and filling myself with alms given in begging. (Then) You came, rescuing me, making me see You wherever I turned and bringing me under Your rule. Oh, You abiding in beautiful AnaikkA, Father of the celestials. If (by Your Grace) I attain Your Feet, what is it that I can do with this trouble-laden body?

73.	கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
		கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப்
	பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
		பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
	ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
		உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
	ஆர்க்கின் றகட லைமலை தன்னை
		ஆரூ ரானை மறக்கலு மாமே.  7.59.3	(சுந்தரர்) 

Is it possible for me to forget the Lord of ArUr Who, like the rain on mountains, causes His Grace to flow, Who permeates all the arts by being their theme, Who has compassion for those souls which look up to Him, Who stands forth as day and night, Who is the ear that (sharply) perceives, the tongue that knows taste, the eye that sees-and Who is the roaring sea and mountain?

74.	ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான்
		சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்
	நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான்
		நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்
	நோக்கும் நிதியம் பலவெத் தனையுங்
		கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி
	ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை
		அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.07	(சுந்தரர்) 

You are (the cause of) creation and destruction, say I.

You are the words uttered and their meaning, say I.

You are the tongue, the ear and the eye, say I.

Oh (Supreme) God! (Thus) I have well understood You.

Oh, Father of anjaikkaLam (temple) in mahODai abounding in beautiful groves on the shore of the sea which roars as it lashes ships laden with all the wealth that the eyes (of merchants) behold! 
 

8. இன்புறு நிலை
VIII. THE STATE OF BLISS

75.	அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை
		ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்
	விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
		வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
	குளைவானை அல்லாதார்க் குளையா தானை
		உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
	கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
		கேடிலியை நாடுமவர் கேடி லாரே.  6.67.3	(அப்பர்) 

The Lord is the Beautiful One wearing a serpent of the anthill. He makes only love to spring forth in the devotees whom He supports. He is the object of true knowledge. He is the Efficient One. Whatever the measure of the love of (His) devotees, He responds to it. He does not respond to others. He is not subject to decay. Entering into my mind, He removes its dirt. He is the King ruling over kIzhvELUr. He is the Imperishable. Those who seek Him will never perish (i.e. never come to grief).

[Variant reading மனப்பசாசு instead of மனத்தின் மாசு which may be rendered as ‘throws out the mind which is an evil spirit’.]

76.	உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
		உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
	பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
		பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
	முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்
		முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
	திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்
		செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.  6.84.3	(அப்பர்) 

I myself saw in SengAttangkuDi, the Lord who has the Lady with plaited tresses as part of His Body, Who wells forth as honey in the minds of devotees who melt in love, Who is the crest jewel of the celestials, Who is the knowledge of those whose growing ideal is grounded in truth, Who is the meaning of the vEdhAs for those andhaNar (spiritually dedicated persons) who cherish His Feet, Who is the Absolute for ayanresiding in fragrant flower and for mAl, - and Who is the Help of those given to true penance.

77.	உறுகயி றூசல் போல ஒன்றுவிட் டொன்று பற்றி
	மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
	பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
	தறுகயி றூச லானேன் அதிகைவீ ரட்ட னாரே.  4.26.6		(அப்பர்) 

Like a swing attached to a rope the mind gives up one object to cling to another and, on the return (as on the forward) flight, repeatedly wanders (among objects, sensory etc). Thus, having been like a swing suspended by rope, I have attained, like a swing whose rope has snapped, Your Feet, Oh Lord of adhikaivIrattam, with crescent adorning (Your) matted Hair!

78.	மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை
		வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
	மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
		மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
	பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்
		பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக்
	காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
		கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.  7.84.7		(சுந்தரர்) 

The Lord, abiding in kAnappEr surrounded by fields of dark soil, skinned the hide of an elephant and wore it on His body. He does not go anywhere near the heart of deceitful persons. He is the Absolute Primal Cause of the Trinity (Three Figures as brahmA, vishNu and rudrA). He is the Rider of the Big Bull ever attached to Him. He is nectar for those who actually, not (merely) in imagination-cling to Him. He is the Supreme Being bathing in milk, fragrant ghee, curds, butter and butter-milk. When am I to attain Him as my Lord and Protector?

79.	அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
		தவம்புரிந் தவஞ்செய்வார்
	நெறிய லாதன கூறுவர் மற்றவை
		தேறன்மின் மாறாநீர்
	மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
		மருவிய பெருமானைப்
	பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
		அளவறுப் பொண்ணாதே.  2.106.10	(சம்பந்தர்) 

The ignorant and violent (contentious) JaiNAs and sAkkiyAs (BouddhAs) in doing (so-called) penance, (actually) do what is opposed to it. They declare what is not the good path. Do not choose to follow them. The Lord abides in valanchuzhi, lapped by the waters of the unfailingkAviri. There are no limits to what may be said in praise of those who are never separated from the Lord (of valanchuzhi) and who attain His Feet. 
 

9. அஞ்செழுத்தருணிலை
IX THE STATE OF GRACE OF THE FIVE LETTERS

80.	விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
	எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங்
	கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற்
	புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.  5.46.5	(அப்பர்) 

‘Where can the Feet of the King Who wears the moon of the sky be seen with our eyes?’ -- if this is asked by those uttering His names with (the sacred) Five Letters, -- (the answer is) pugalUr where the Holy one abides and my heart.

81.	கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
	உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற்
	திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
	தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.  4.95.6 	(அப்பர்) 

While in the womb (of my mother) my concern was to think of only Your Feet. After taking a form, I practiced utterance of) Your Name. Thanks to Your Grace, uttering to the glory of my mouth, ’SivAya nama’, I wore sacred ash. Hara of pAdhirippuliyUr! You grant me the sacred path. (Glory to the mouth because it utters the sacred Five Letters)

82.	வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
	சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
	மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
	அத்தன் அருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே.  4.95.5		(அப்பர்) 

Oh, my ignorant and naive mind! Without locking it up in the mind as our bequest, controlling the mind and uttering ’SivAyanama’, can we obtain the Grace of the Lord of pAdhirippuliyUr who is like the moon with its cluster of rays?

83	ஏது மொன்று மறிவில ராயினும் 
	ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் 
	பேத மின்றி அவரவர் உள்ளத்தே 
	மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.  5.60.1	(அப்பர்) 

Even if they are persons devoid of any understanding whatsoever, if they utter the Five Letters, understanding them (their significance), the Lord of mARpERu with the Lady will joyously abide in their respective minds without (making) any difference. 
 

10. அணைந்தோர் தன்மை
X THE STATE OF THOSE WHO HAVE ATTAINED THE LORD

84.	நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா 
		நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக்
	புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
		பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
	தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
		சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
	அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
		ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.  6.31.3 	(அப்பர்) 

If you think of stabilising yourself (spiritually), come, oh, my mind! Enter the temple daily before dawn, sweep it, smear (the floor) with cowdung, weave garlands, praising the Lord, bow your head in worship, also dance (in ecstasy), shouting ’SankarA’, Victory (unto You)! Hail! Hail! Oh Origin (of every thing), having red matted hair, with waters having waves! Oh, You abiding in ArUr!, and so on.

85.	அடையலார்புரஞ் சீறியந்தணர் ஏத்தமாமட மாதொடும்
	பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர மாபுரத்துறை கோயிலான்
	தொடையலார்நறுங் கொன்றையான்தொழி லேபரவிநின் றேத்தினால்
	இடையிலார்சிவ லோகமெய்துதற் கீதுகாரணங் காண்மினே.  3.37.4	(சம்பந்தர்) 

The Lord flared up against the city (cities) of those who would not draw unto Him. With the Lady of Eternal Youth, He abides in the temple inbrahmApuram, where andhaNar (the spiritually dedicated) praise Him. In brahmApuram the female birds sport (with their males) on the sea shore. If, in worship, the praises of the deeds of the Lord Who has fragrant konRai (flower) as garland, are sung-such singing, be it seen will be the cause of their attaining SivalOkA, without any impediment.

86.	நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
	நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
	குறைவில பதமணை தரஅருள் குணமுடை யிறையுறை வனபதி
	சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.  1.21.4	(சம்பந்தர்) 

The Lord abides in the beautiful town-Sivapuram which has water collected in dams. To the devotees who worship Him daily with fragrant sandal paste, buds, flowers in blossom, incense, bright light and abundant water, with their thought concentrated on Him, it is His Nature to grant graciously access to His Feet-a status without deficiency. Those who think of this place are the lords of the goddess of victory.

87.	சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
	மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும் உணர்பவர்
	தனதெழி லுருவது கொடுஅடை தகுபர னுறைவது நகர்மதில்
	கனமரு வியசிவ புரம்நினை பவர்கலை மகள்தர நிகழ்வரே. 1.21.5	(சம்பந்தர்) 

The Supreme Lord grants His beautiful form to those who daily realise that Rare Being (viz Siva Himself). Sub-during the six (internal) excessively angry enemies, and the (outward-going) senses, by controlling the breath and with the understanding of the mind (thus made steady), they realise Him in the flower (of their heart). He abides in Sivapuram, a town with thick walls. Those who think of this place will prosper with what the goddess of learning gives.

88.	சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
	உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
	அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
	திருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன் நிலனிடை நிகழுமே.  1.21.6	(சம்பந்தர்) 

The Lord takes thought to make those who practice severe austerity attain His feet. Their austerity consists in learning without flaw many good arts, beginning with the vEdhAs, in avoiding the way of the senses embedded in the bodies, and in going along the (good) path in such a way as to be praised by beings with many forms (namely, male, female and neuter). He abides in grace abounding Sivapuram. The community (tribe) of those who think of this place will flourish in this world (generation after generation).

89.	தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர் 
	உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி 
	கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல் 
	வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.  5.91.9	(அப்பர்) 

I am deceitful. I am hard-hearted. I am a (veritable) sea of (cares and) anxieties. The expanse of nectar-like effulgence which is a honey, tasting sweet in the mind that has (heard and) sifted, resolved and attained clarity-how did it arise for (such a person as) myself?

90.	உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் 
		துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
	மன்னுருவத் தியற்கைளால் வைப்பீர்க் கையோ 
		வையகமே போதாதே யானேல் வானோர்
	பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
		புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
	தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்
		தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.  6.27.4	(அப்பர்

Oh, you five (sense-organs) who are known by reflection to be organs for taste, light, touch, sound and smell! Alas! The whole world is not sufficient for you to place us (in a plight) according to your established nature! As for me, I shall place my head at the Feet of the Lord Who has a celestial golden form, Who is the Hill that abides in Southen ArUr, Who is Siva, the tender shoot of the Beauty of the world, Who, entering my mind, gave me His Form, Who is my Father. Do not be impudent, thinking that you can separate me from Him.

91.	நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
		நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
	ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
		இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
	தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
		சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
	கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
		கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. 6.98.1	(அப்பர்) 

We (devotees) are subjects of no one. We are not scared of Yama. We will not suffer in hell. We shall rejoice. We have no falsehoold (in us). We know no disease. We are not the ones to submit (to anyone). Joy for ever-misery never -- (all these, because) as eternal bond slaves, we have drawn close unto the Two Feet, roseate like fresh flower, of the Lord Who has in one ear, ornament made of conch, Who is Sankara, Whose Nature is to be subject to none whomsoever.

92.	வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
		வெய்ய வினைப்பகையும் பைய நையும்
	எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
		எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
	அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
		அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
	செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
		செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. 6.95.2		(அப்பர்) 

The Lord wears the river on His beautiful coral-like red matted Hair, bears fire (in one Hand) and revels in bathing in the five products of the cow (milk etc). He has a complexion like the colour of red coral, of a red hill, an of the roseate sky. He is in my thoughts: (hence) the God of Death cannot come near us to make us pine (in distress), the cruel enemy viz the result of our karma will gradually be worn out. We are cured of our defects. We have no travail. What does it matter to us (as to) where the sun rises? We are not lowly.

93.	எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
	உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
	கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
	விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.  5.12.5		(அப்பர்) 

The devotees of the Lord Who has the (sacred) bull on His triumphant Flag wear (only) loin-cloth, and eat food obtained (only) by begging. What they destroy is only the powerful deed (karma) that pulls one down. Where they go, giving up (external and internal attachment), is (only) to vIzhimizhalai.

94.	விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங்
	கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்
	புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
	உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே.  4.95.3	(அப்பர்) 

With love (form me) the Lord Who has the (sacred) Bull, abides in my mind. Hereafter misery cannot come near us. Karma, hard to get rid of, cannot approach us. We are not scared of Yama. Is there any thing difficult (to achieve or obtain) for us who are devotees of the devotees of the Lord of pAdhirippuliyUr inhabited by those like ayan (BrahmA) of the lotus?

95.	எவரேனுந் தாமாக விலாடத் திட்ட 
		திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
	உவராதே அவரவரைக் கண்ட போது 
		உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
	இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி 
		இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
	கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே 
		கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.3	(அப்பர்)

The Lord manifesting Himself in the peg (originally used to tether a calf) in KanRAppUr can be seen in the hearts of devotees-(of this type): They very moment they see any one (whosoever he may be and whatsoever his faults) who of his own accord has worn sacred ashes on his forehead and, other insignia (of the Saiva faith), they melt (in love), with out feeling revolted (by his faults), thinking only of the (fine) qulity of his devotion, rejoice to see him and instead of dividing allegiance (distinguishing between the Lord and His devotees) serve him exactly in the way they serve the Lord, with undivided mind.

96.	கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
	ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற
	திருவ னேதிரு வீழி மிழலையுள்
	குருவ னேயடி யேனைக் குறிக்கொளே. 5.13.5	(அப்பர்) 

Oh Primal Source (of every thing); Oh Peerless (Unique) One, to all those Who realize You as the Primal Source! Oh Spiritual Wealth abiding as breath and understanding! Oh (supreme) Preceptor in TiruvIzhimizhalai! Take me as an object (of Your mercy).

97.	இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே
	அங்ஙனம்வந் தெனையாண்ட அருமருந்தென் ஆரமுதை
	வெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானை
	எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.  7.51.4	(சுந்தரர்)

How can I be separated from my Lord of ArUr Whose complexion is like red-hot fire, Who has a deer in (one) Hand, Who is precious nectar? So that I may not (continue to) forget in the way I have forgotten Him in this troubled birth, He came in that way and brought me under His rule.

98.	மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே
	குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன்
	நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள்
	அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.  7.26.4	(சுந்தரர்) 

Oh, You with a young deer in (one) Hand! You covering Yourself with the hide of a big wild elephant! Oh, Goal of my life! Oh, Preceptor! I shall do Your (least) bidding. Oh, Wisdom in TirukkAlatti to Your devotees who stand on the (right) path and think of You!. I shall know and praise none other than You.

99.	கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
	அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
	மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
	உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.  1.3.8	(சம்பந்தர்) 

The Lord took the poison of the sea as nectar and danced as celestials (watching) worshipped and praised Him. He vanquished the might of the powerful king of LankA and granted him grace. The Lord abides in the temple in valitAyam where honey overflows in kamugu having barks and in palA (Jack fruit). If one worships the Lord as long as the soul abides in the body, misery of the mind will be gone.

- - - -

Related Content

Thevara Arulmurai Thirattu Vilakkavurai - Thodarchorpozhivu