logo

|

Home >

information-to-know >

muzhavu-thirumurai-musical-instruments

முழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Muzhavu - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

Thirumurai isaikkaruvi - Muzhavu

 

Instrument Reference
முழவு கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் 
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர் 
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும் 
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6 

பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ 
மாட நெடுங்கொடி விண்தடவும் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
காடக மேயிட மாகஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.5 

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.2. 

துடிக ளோடு முழவம் விம்மவே 
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் 
படிகொள் பாணி பாடல் பயின்றாடும் 
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6 

அந்தமும் ஆதியு மாகிய வண்ணல் ஆரழ லங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் மயலே ததும்ப
வெந்தவெண் ணீறு மெய்பூசும் வேட்கள நன்னக ராரே. 1.39.1 

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து 
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி 
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற 
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5 

எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 1.46.4 

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.7 

மண்ணார் முழவதிரும் மாடவீதி வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியது வேயாகும் வினைமாயுமே. 1.59.11 

குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் 
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ் 
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் 
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6 

வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.7 

விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே. 1.70.11 

நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.5 

தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல 
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார் 
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார் 
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே. 1.73.8 

நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.9 

வண்டணை கொன்றை வன்னியு மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க 
கொண்டணி சடையர் விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப் 
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல் 
வெண்பிறை சூடி உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.4 

பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.2 

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே 1.98.3 

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே. 1.130.1 

உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே. 1.132.4 

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர் 
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார் 
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே 
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 2.6.1 

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி 
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர் 
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச் 
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 2.12.3 

அறையார் கழலன் னமலன் னியலிற் 
பறையாழ் முழவும் மறைபா டநடங் 
குறையா அழகன் குடவா யில்தனில் 
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.7 

கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில் 
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக் 
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர் 
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. 2.32.03 

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் 
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும் 
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங் 
குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 2.35.7 

மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 2.54.6 

நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக் 
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி 
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை 
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 2.69.4 

பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப் 
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி 
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக் 
குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே. 2.71.7 

நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே. 2.96.7 

தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. 2.99.10 

நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
முழவொடும் அருநட முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே. 3.3.4 

மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன் 
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக் 
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள் 
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே. 3.8.4 

பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன் 
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை 
மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன் 
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே 3.20.7 

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் 
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங் 
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர் 
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே 3.26.4 

விரவிலாதுமைக் கேட்கின்றேனடி விரும்பியாட்செய்வீர் விளம்புமின் 
கரவெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன் 
முரவமொந்தை முழாவொலிக்க முழங்குபேயொடுங் கூடிப்போய்ப் 
பரவுவானவர்க் காகவார்கடல் நஞ்சமுண்ட பரிசதே 3.38.5 

முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமின் நுந்துய ரானவை தீரவே. 3.48.3 

பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய் 
சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத் 
தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா 
ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே 3.57.2 

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் 
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான் 
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப் 
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3 

சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக் 
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து 
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர் 
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2 

கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப் 
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங் 
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி 
ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.7 

அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண் 
டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர் 
கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர் 
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.7 

அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு 
செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர் 
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர் 
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே. 3.88.3 

முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 3.99.3 

கட்டு கின்றகழல் நாகமே காய்ந்த தும்மதனன் ஆகமே 
இட்ட மாவதிசை பாடலே யிசைந்த நூலினமர் பாடலே 
கொட்டு வான்முழவம் வாணனே குலாய சீர்மிழலை வாணனே 
நட்ட மாடுவது சந்தியே நானுய் தற்கிரவு சந்தியே. 3.116.4 

ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆட லறாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையிற்
பலிகொள்வர் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.8 

பண்ணார்ந்த வீணை பயின்ற 
விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை 
பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிரப் பாடலோ 
டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் 
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 4.6.6 

கண்ணினாற் காம வேளைக் 
கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று 
மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப் 
பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும் 
ஆலங்காட் டடிக ளாரே. 4.68.3

வீட்டினார் சுடுவெண் ணீறு 
மெய்க்கணிந் திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங் 
கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவாப் 
பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை 
ஆலங்காட் டடிக ளாரே. 4.68.6

பழகவோ ரூர்தி யரன்பைங்கட் 
பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட 
மாடி உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும் 
ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன் 
றோவென்றன் ஆருயிரே. 4.84.11 

கொட்டு முழவர வத்தொடு கோலம் பலஅணிந்து 
நட்டம் பலபயின் றாடுவர் நாகம் அரைக் கசைத்துச் 
சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான் 
இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே. 4.89.4 

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க் 
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள் 
நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட் 
டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.9 

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 6.6.2 

ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே
ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே
உலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத் திடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.8 

வானவனை வானவர்க்கு மேலா னானை 
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க 
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச் 
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக் 
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக் 
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல 
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக் 
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 6.60.8 

பாட வடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.1 

எந்தம் அடிகள் இமையோர் பெருமான் 
எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன் 
அந்தண் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை 
மந்தம் முழவுங் குழலு மியம்பும் 
வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன 
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் 
டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே. 7.4.10 

பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய் 
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய் 
தண்ணா ரகிலுந் நலசா மரையும் 
அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் 
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப 
மடவார் நடமாடு மணியரங்கில் 
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல் 
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.4 

காடும் மலையுந் நாடு மிடறிக் 
கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ் 
சேட னுறையும் மிடந்தான் விரும்பி 
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற் 
பாடல் முழவுங் குழலு மியம்பப் 
பணைத்தோளியர் பாடலோ டாடலறா 
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் 
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.8 

விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங் 
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர் 
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் 
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.6 

நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த 
இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார் 
பறையார் முழவம் பாட்டோ டு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப் 
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.4 

எந்தை இருப்பதும் ஆரூர்அவர் 
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான் 
திருமரு வுந்திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும் 
வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் 
தாம்புகழ் எய்துவார் தாமே. 7.73.11 

மண்ணெலாம்முழ வம்மதிர்தர 
மாடமாளிகை கோபுரத்தின்மேற்
பண்ணி யாழ்முரலும் 
பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடைமேவிய
விண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார் 
அவரே அழகியரே. 7.87.8 

பேணா முனிவன் பெருவேள் வியெலாம் 
மாணா மைசெய்தான் மருவும் இடமாம் 
பாணார் குழலும் முழவும் விழவிற் 
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. 7.93.9 

செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்
முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்இருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று மோஇன்(று)எம் வள்ளலையே. 8.கோவை.157 

தெளிதரல் காரெனச் சீர்அனம் சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம்
துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்(கு) உன்குழல்போன்(று)
அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்(து) அலர்ந்தனவே. 8.கோவை.324 

வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே 10.634 

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று 
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன 
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள் 
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 10.2776 

எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் 
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப் 
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் 
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே. 11.13 

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க 
வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இருகையும் ஏந்தி 
நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடுயர் வழியினால் ஏறிப் 
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப் பொலிவதத் திருமலைப் புறம்பு 12.0019 

வேத ஓசையும் வீணையின் ஓசையும் 
சோதி வானவர் தோத்திர ஓசையும் 
மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும் 
கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே 12.0087 

மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும் 
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றிப் 
புனை சாயல் மயில் அனையார் நடம் புரியப் புகல் முழவம் 
கனை சாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கியதால் 12.0871 

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி 
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை 
மழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம் 
நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல் 12.1087 

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341 

தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர் 
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக் 
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் 
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப 12.1641 

மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் 
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி 
எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம் 
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார் 12.1780 

திரு மலி புகலி மன் சேரச் சேய் ஞலூர் 
அரு மறையவர் பதி அலங்கரித்து முன் 
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே 
வருமுறை எதிர் கொள வந்து முந்தினார் 12.2141 

அழகினுக்கு அணியாம் வெண்ணீறும் அஞ்சு எழுத்தும் ஓதிச்சாத்திப் 
பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்தி 
மழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து 
முழவொலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்டபோது 12.3115 

விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி 
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் 
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் 
உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள் 12.3157 

மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி 
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் 
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் 
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார் 12.3339 
 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்