மாத்தியந்தின மகரிஷியின் புதல்வராகிய வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர் சிவபெருமானின் தாண்டவ தரிசனம் கிடைப்பதற்காக இங்குள்ள சிவபெருமானை தினம்தோறும் வழிபட்டு வந்தார். புலிக்கால் முனிவரால் வழிபடப் பெற்றதால் இத்தலம் திருப்புலீச்சரம் என்று பெயர் பெற்றது.
திருநீலகண்டக் குயவனார் நாயனார் பெருமையை விளக்க இறைவன் ஓடு கொடுத்து, மறைப்பித்து, இளமை திருப்பியருளி, முத்தி கொடுத்த தலமாதலால் இந்தத் திருக்கோயிலுக்கு இளமையாக்கினார் கோயில் என்று பெயர்.
கணம்புல்ல நாயனார் திருப்புலீச்சரத்துப் பெருமானுக்கு விளக்கு எரித்து பொருளின்மையால் அது இயலாத போது தன்னுடைய முடியையே விளக்காக எரித்த தலம்.
Specialities
தை மாதம் விசாக நக்ஷத்திரத்தில் திருநீலகண்டக் குயவ நாயனாருக்கு அருளும் வைபவம் நடைபெறும். இதில் சிவபெருமான் யோகி வடிவில் நாயனாருக்கு ஓடு தருதல், குளக்கரையில் சத்தியம் கேட்டல் சிறப்பாக நடைபெறும்.