logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருச்செந்துறை சந்திரசேகரஸ்வாமி திருக்கோயில்

Om symbol

இறைவர் திருப்பெயர்: சந்திரசேகரர், அம்ருத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: மானேந்தியவல்லி, ம்ருகதராம்பிகா

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:எமன், திருஞான சம்பந்தர், சேக்கிழார்

Loading map...

Sthala Puranam

  • எமன் தனது பதவியை மீண்டும் பெற இங்கு தவம் செய்தபோது, இறைவன் எமனுக்கு திருப்பைஞ்ஞீலியில் மீண்டும் பதவி கிடைக்கும் என்று அருள் புரிந்தார்.எமனால் வணங்கப்பட்டு அம்ருத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் என்று திருநாமம் கொண்டாரென்று பவிஷ்ய புராணம் குறிக்கிறது.
  • சோழமன்னன் ஒருவன் வேட்டையாட இப்பகுதிக்கு வந்தபோது மான் மீது விட்ட அம்பு ஒரு பெரிய பலா மரப்பொந்தில் குறி தவறிப்பட்டது. அப்பலாப் பொந்திலிருந்து செந்தண்ணீர் கசிய மன்னன் அதிர்ந்தான். அப்போது அசரீரி சிவபெருமான் சுயம்பு வடிவத்தில் பலாப் பொந்தின் கீழ் எழுந்தருளியிருப்பதாகவும் அவருக்கு அங்கு திருக்கோயில் அமைக்கவும் கட்டளையிட்டது. மன்னனும் செந்துறையில் சிவாலயம் அமைத்தான். இந்நிகழ்ச்சியை செப்புத்தகட்டில் மன்னன் பதிவு செய்தது தஞ்சை சரஸ்வதி மஹாலில் பாதுகாக்கப்படுகிறது.
  • பாடல்: சேக்கிழார் தொழுது புறம்பு அணைந்து

Specialities

  • இது காவிரியின் தென்கரையில் உள்ள திருத்தலமாகும்.
  • சுயம்பு திருமேனியாக சிவலிங்கத்தில் பலாப்பழத்தின் மேல் முள்போன்றும், வேர் முடிச்சுகளும் நிறைந்து காணப்படுகிறது. சிவலிங்கத் திருமேனியில் வடகிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் இயற்கையாகவே சூல அமைப்புகள் உள்ளன.
  • இத்திருக்கோயிலில் மூலவர் அம்பாளும் அம்மையின் கருவறையைச் சுற்றிக் கோஷ்டத்தில் அமைந்துள்ள சக்திகளும் மானேந்திக் கட்சி தருவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும். இந்த அம்மை மானேந்தியவல்லி என்று அழைக்கப்படுகிறார். (பொதுவாக சிவபெருமானே மானேந்திக் காட்சி தருவார்.)
  • உச்சிஷ்ட கணபதி இத்திருக்கோயிலில் உள்ளார்.
  • சுற்றுச்சுவரில் நிலமளந்தகோல் செதுக்கப்பட்டுள்ளது.
  • சிவபெருமான் கருவறை விமானம் பாதி கருங்கற்களாலும் பாதி சுதையாலும் அமைந்துள்ளது.
  • ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது.
  • 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.
  • பராந்தக சோழன், இராஜேந்திர சோழன், முதல் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜ சோழன், இரண்டாம் ராஜராஜசோழன், விஜயநகர கோனேரி தேவராயர், ஸ்ரீரங்கதேவ மஹாராயர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன.
  • பூதி ஆதிச்சம் பிடாரி என்ற பெரிய குந்தவை நாச்சியார் இத்திருக்கோயிலைக் கற்றளியாக எடுப்பித்தார்.
  • குந்தவை 617 தினங்களில் நிர்மாணப் பண்ணி முடித்துக் கும்பாபிஷேகம் செய்து 400 ஏக்கர் நிலத்தை இத்திருக்கோயிலுக்கு எழுதி வைத்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வைப்புத் தலமாகும்; திருச்சிராப்பள்ளி - கரூர் சாலையில், ஜீயபுரத்திற்கு முன் திருச்செந்துறை என்ற ஊர் வரும், (திருச்சிராப்பள்ளியிலிருந்து 10 கி.மீ. தொலைவு)
Loading map...

Related Content

திருவக்கரை சந்திரசேகரர் வக்கரை காளி திருக்கோயில் தல புராணம்

செம்பியன்மாதேவி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில்

திண்ணியம் கோஷ்டீஸ்வரர் சண்முகர் திருக்கோயில்

செந்துறை சிவதாண்டவேஸ்வரர் திருக்கோயில் வரலாறு