logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

இளையான்குடி (திருநள்ளாறு) இளையான்குடிமாற நாயனாரின் அவதாரத் தலம் Birth place of iLaiyAnkudimARa nAyanAr

Om symbol

இறைவர் திருப்பெயர்: வனநந்தீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: ஏலவார்குழலி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:இளையான்குடிமாற நாயனார்

Loading map...

Sthala Puranam

  • மாலயற்கு அரிய நாதன் வடிவு 
     ஒரு சோதி ஆகச்
    சாலவே மயங்குவார்க்குச் 
     சங்கரன் தான் மகிழ்ந்தே
    ஏலவார் குழலாள் தன்னோடு 
     இடப வாகனனாய் தோன்றிச்
    சீலமார் பூசை செய்த திருத் 
     தொண்டர் தம்மை நோக்கி
    என்ற பெரியபுராண வரிகளுக்கு ஏற்ப இறைவியார் திருநாமம் ஏலவார்குழலி என்பதாகும்.
  • இளையான் இளையான் குடிமாறன்
           இரவில் தெறிந்த முளைவாரி
    முளையா அமுதின் அமுதளிப்ப
           முக்கண் பெருமான் பசிதீர்ந்தே
    கிளையா விடைமேல் தோன்றுதலும்
           கேடி லாத பதம்சேர்ந்தோன்
    வளையா மகிமை படைத்ததன்றோ
           வளம்சேர் சோழ மண்டலமே.
    என்ற சோழ மண்டல சதகச் செய்யுள் இளையான்குடி மாற நாயனாரைச் சோழமண்டலத்தவராகக் கூறுகிறது. (தொண்டை மண்டல சதகம்  தொண்டை மண்டலத்தவர் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.)

 

Specialities

  • இளையான்குடிமாற நாயனார் அவதாரத் தலம்  எனக் கருதப்படுவது. 
  • அவதாரத் தலம்  : இளையான்குடி வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : இளையான்குடி குருபூசை நாள் : ஆவணி - மகம்
  • திருத்தொண்டர்புராணம் இளையான்குடி மாற நாயனார் எந்த நாட்டினர் என்பதைக் குறிக்கவில்லை. கன்னடம், தெலுங்கிலுள்ள பெரிய புராண நூல்கள் இளையான்குடி மாற நாயனாரை சோழ நாட்டினர் எனக் குறிக்கின்றன.
  • நாயனார் பெருமழையில் தம் நிலத்தில் நெல்முளைகளை வாரிக்கொண்டு வந்த இடம் "முளைவாரிக் குட்டை", "முளைவாரி நாற்றங்கால்"  என்று அழைக்கப்படுகிறது. இது பிரஞ்சுக்காரர்கள் ஆவணத்திலும் பதிவு பெற்றுள்ளது.
  • இத்திருக்கோயிலில் அதியற்புதமாக மாற நாயனாரிடம் தபோதனராக இரவில் பசியுடன் வந்த இறைவர் திருமேனி அழகாக விமானத்துடன் பிரகாரத்தில் உள்ளது. அவர் தம் எதிரில் மாற நாயனார் துணைவியாரோடு வணங்கும் முகமாகக் காட்சியளிக்கிறார்.
  • பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் இளையான்குடி செய்யுட்கோவை என்ற நூல் முத்துசாமி நாயக்கர் என்பவரால் இத்தலத்தின்மேல் இயற்றப்பட்டது.
  • திருநள்ளாறு தர்பாரண்யயேஸ்வரர் திருக்கோயிலில் இராஜ மண்டப வடக்குச் சுவரில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1303 - 1319) கல்வெட்டொன்று பாண்டியர்கள் இளையான்குடி திருக்கோயிலைச் சுற்றி நந்தவனம் அமைக்க உதவி செய்ததைத் தெரிவிக்கிறது.
  • 15ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. நுழைவாயிலில் குதிரை மேல் நாயக்க மன்னனின் சிற்பம் காணப்படுகிறது.

Contact Address

அமைவிடம் Vana Nandheeswarar Temple, Thirunallaru Commune, Karaikkal Dt, Puducherry. தொடர்பு : +91 - 8220016223
Loading map...

Related Content

இளையான்குடி (பரமக்குடி) இளையான்குடிமாற நாயனாரின் அவதாரத் தல