தீர்த்தம் : ரிஷப தீர்த்தம், வெள்ளையாறு, சந்திர நதி
வழிபட்டோர்:குண்டையூர் கிழார்.
Loading map...
Sthala Puranam
இத்தலத்தில் ரிஷப தேவர் சிவபெருமானைப் பூசனை செய்ததால் இத்தலத்திற்கு ரிஷபபுரி என்றும் இறைவனுக்கு ரிஷபபுரீஸ்வரர் என்றும் பெயர் வந்தது.
சுந்தரருடைய திருமாளிகைக்கு செந்நெல், அரிசி, பருப்பு முதலியவற்றை அனுப்பும் திருத்தொண்டைச் செய்து வந்த குண்டையூர் கிழார் வாழ்ந்த திருத்தலம்.
ஒரு சமயம் சுந்தரர் திருக்கோளிலிக்கு வந்து பெருமானிடம், குண்டையூர் கிழார் மூலமாகத் தாம் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்வேண்டப் பெருமான் பூதகணங்களை அனுப்பி அந்நெல்லை திருவாரூரில் சேர்ப்பித்தருளினார்.
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்
சுந்தரேஸ்வரரை மக்கள் சொக்கநாத சுவாமி என்றழைக்கின்றனர். சொக்கநாத சுவாமி தேவஸ்தானம் என்பதே வழக்கில் உள்ளது; வெளியில் இருப்பது இச்சந்நிதி. உள்ளேஇருப்பது ரிஷபபுரீசுவரர், மங்களாம்பிகை சந்நிதியாகும்.
இக்கோயிலுக்கு முன்னால் மாறிமாறிக் காய்க்கும் இரு ஆத்தி மரங்கள் உள்ளன. அம்பாள் அருகில் உள்ள காட்டாத்திமரம் பூத்துக் காய்க்கும்; சுவாமி அருகில் உள்ள மரம் பூக்கும் ஆனால் காய்க்காது.
சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் நடைபெறுகிறது.
கோயிலில் குண்டையூர் கிழாரின் மூல / உற்சவத் திருமேனிகள் உள்ளன.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருக்குவளை என்று வழங்கும் திருக்கோளிலிக்குப் பக்கத்தில் 1 கி.மீ.ல் (திருக்குவளை - சாட்டியக்குடி சாலையில்) குண்டையூர் உள்ளது.