logo

|

Home >

hindu-hub >

temples

திருப்புத்தூர்

இறைவர் திருப்பெயர்: ஸ்ரீ தளீஸ்வரர், ஸ்ரீ தளிநாதர், தருத்தளிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமி.

தல மரம்:

தீர்த்தம் : ஸ்ரீ தளி (திருத்தளி தீர்த்தம்) சிவகங்கை.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,சேக்கிழார், இந்திரன் மகன் சயந்தன்.

Sthala Puranam

Tirupputtur temple

  • பெருமான் ஆடிய கௌரி தாண்டவத்தை கண்டு இலக்குமி வழிபட்டு பேற்றைப் பெற்றாள்.

     

  • அர்த்தசாம வழிபாட்டிற்காகக் குருக்கள் மணியடித்து விட்டால் அதற்குப் பிறகு, (குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் தவிர) யாரும் பைரவர் சந்நிதிக்கு செல்லக்கூடாது என்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஐதீகம்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. வெங்கள் விம்மு வெறியார் (1.26);

                      அப்பர்       -	1. புரிந்தமரர் தொழுதேத்தும் (6.76); 

பாடல்கள்      :     அப்பர்       -       புத்தூ ருறையும் (4.15.10), 
                                           கொள்ளி டக்கரைக் (5.71.3), 
                                           மறைக்காட்டார் (6.51.7 & 11), 
                                           மண்ணிப் படிக்கரை (6.70.6 & 11), 
                                           பித்தன்காண் (6.87.4); 

                    சேக்கிழார்    -       தந்தையார் சடையனார் (12.05.7,23 & 77) தடுத்தாட்கொண்ட புராணம், 
                                           ஆண்ட அரசு (12.21.402) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                           ஆறு அணிந்தார் (12.28.885 & 886) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                           அங்கு வைகிப் (12.37.90) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.            

Specialities

 

  • கோயிலுக்குள் திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம் நடைபெறுகின்ற மண்டபம் உள்ளது.

     

  • மதிலையொட்டி நந்தவனப் பகுதிகள்; கொன்றை மரங்கள் உள்ளன.

     

  • உள்பிரகார வாயிலில் சம்பந்தர், அப்பர் பாடல்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

     

  • தனிக்கோயிலாக அழகிய விமானத்துடன் அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் யோகாசன நிலையில் அமர்ந்துள்ளார்.

     

  • பைரவருக்கு நாடொறும் அர்த்தசாமத்தில் புனுகு சார்த்தப்பட்டு வடைமாலை, சம்பாநைவேத்தியம் நிவேதிக்கப்படுகிறது.

     

  • நடராசசபையில் சிற்பவேலைபாடமைந்த ஐந்து கற்றூண்களும் இசைத்தூண்களாக அமைந்துள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரைக்கும் காரைக்குடிக்கும் மத்தியில் உள்ளது. மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. (வடாற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வேறு). தொடர்புக்கு :- 9442047593.

Related Content