logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கண்டியூர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்: மங்கள நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : கபால தீர்த்தம், நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம், குடமுருட்டி ஆறு முதலியன.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், சூரியன், பிரமன், சாதாதாப முனிவர் முதலியோர்.

Sthala Puranam

 

view of vimAnA

  • பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.

     

  • சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

 

தேவாரப் பாடல்கள்		:

பதிகங்கள்   :   சம்பந்தர்   -  1. வினவினேன்அறி யாமையில் (3.38);

                  அப்பர்     -	 1. வானவர் தானவர் (4.93); 

பாடல்கள்    :   அப்பர்     -      திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9), 
                                    தண்டி குண்டோ தரன் (6.93.7); 

                  சுந்தரர்    -      நாளும் நன்னிலம் (7.12.8); 

                 சேக்கிழார்  -      கருகாவூர் முதலாகக் (12.21.198,199 & 200) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                     அங்கு அப்பதி நின்று (12.28.351 & 352) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,              
                                     தேவர் பெருமான் (12.29.71) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், 
                                     பொன் பரப்பி (12.37.130) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.  

 

தல மரம் : வில்வம்

Specialities

  • அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

     

  • "சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.

     

  • பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.

     

  • சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.

     

  • சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.

     

  • நவக்கிரக சந்நிதியின் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.

     

  • மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.

     

  • பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.

     

    prakAra exit

     

     

  • இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.

     

  • பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

     

  • கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9-கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. தொடர்பு : 04362 - 261100, 262222

Related Content

Thirukkandiyur veerattaam