logo

|

Home >

hindu-hub >

temples

அரிசாப பயந்தீர்த்ததானம்

இறைவர் திருப்பெயர்: அரிசாபபயம் தீர்த்த ஈஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:தேவர்கள்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்களுக்கு துணையாக இருந்த திருமால் அசுரர்களை அழித்து வருவதைக் கண்ட அசுரர்கள் பயந்து ஓடி, பிருகு முனிவரின் மனைவியும் லட்சுமிதேவியின் தாயுமான கியாதியிடத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையறிந்த திருமால் கோபங்கொண்டு, தன் மாமியார் என்றும் பாராது கியாதியின் தலையைத் துண்டித்தார். இதைக்கண்ட பிருகு முனிவர் கோபமுற்று, பத்துப் பிறப்புகள் எடுத்து இவ்வுலகில் உழலுமாறு திருமாலை சபித்தார். மேலும், பிருகு முனிவர் சுக்கிரன் உதவி கொண்டு கியாதியை உயிர்பெறச் செய்தார். திருமால் மனம் வருந்தி, காஞ்சிக்கு வந்து இவ்விறைவனை வழிபட்டுப் பரிகாரம் வேண்டி நின்றார். இறைவனும் திருமாலுக்கு பிருகு முனிவர் சபித்த அப்பத்து பிறப்புக்களும் உலகத்திற்கு உபகாரமாக ஆகுமாறு அருள்செய்து, பிருகு முனிவரின் சாபத்தினால் ஹரி அடைந்த பயத்தைப் போக்கியருளினார். இதனாலேயே இம்மூர்த்தி "அரிசாப பயம் தீர்த்த பெருமான்" எனத் திருநாமம் கொண்டு விளங்குகிறார்.

  • மூலவர் சிவலிங்க மூர்த்தம் - எதிரில் நந்தி உள்ளார்.
  • harisAba payandhIrththathAnam

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - நெல்லுக்காரத் தெருவில் கோயில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)