logo

|

Home >

hindu-hub >

temples

நாகப்பட்டிணம் - நடுதலநாதர் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: நடுதலநாதர், மத்யபுரீஸ்வரர், நடுஸ்தலஈசர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி

தல மரம்:

தீர்த்தம் : பிரம்ம / இயம தீர்த்தம்

வழிபட்டோர்:

Sthala Puranam

  • நாகைக்கு நடு நாயகமாகத் திகழ்வதால் இத்தலம் நடுவூர் எனப்பட்டது.

  • முன்னொரு காலத்தில், படைப்புத் தொழிலை அடையவேண்டித் திருமாலின் சொற்படி பிரமதேவன் நாகைக்கு வந்து, ஊரின் நடுவில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி, அதன் மேற்கே ஒரு தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டு வந்தார். ஈசனும் வெளிப்பட்டு, பிரமனுக்குப் படைக்கும் தொழிலை அளித்தருளினார். அதுமுதல் தீர்த்தமும் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது.

  • திருக்கடவூரில் ஈசனால் தண்டிக்கப்பட்ட இயமனும் இங்கு வந்து வழிபாட்டு, தனது பதவியை மீண்டும் பெற்றான். தீர்த்தத்திற்கு இயம தீர்த்தம் என்ற பெயரும் உண்டு

Specialities

  • வடமொழியில் இதனை மத்யபுரி என்பர்; சுவாமிக்கு மத்யபுரீஸ்வரர், நடுஸ்தலஈசர் என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன

Contact Address

அமைவிடம் அ/மி. நடுதலநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் - 611 001. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் இத்தலம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

Related Content

நாகப்பட்டிணம் - அழகியநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - நாகநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - அக்கரைகுளம் ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில் த

நாகப்பட்டிணம் - விசுவநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் ஸ்ரீஅமரரேந்திரேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு