இறைவர் திருப்பெயர்: சந்திரமௌலீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: இராஜராஜேஸ்வரி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:சப்த மங்கையரில் ஒருவர், சந்திரன், சாயாதேவி, அகத்தியர், இராஜராஜன் சோழன்.
Sthala Puranam

Specialities

கண் சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாக வலது கண்ணில் நோய் என்றால் ஞாயிறன்றும், இடது கண்ணில் நோய் என்றால் திங்களன்றும் மௌனவிரதமிருந்து இத்தலத்தில் சந்தனம் அரைத்து சுவாமிக்கு சந்தனக் காப்பாக இட்டு, அம்பாளுக்கு தாழம்பூக்களைக் கூந்தல் பட்டையாக அலங்கரித்துச் சார்த்தி வழிபட்டு வர கண் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.
உயர் படிப்புகளில் சிறந்து விளங்க விரும்புவோர் இத்தலத்தில் வித்யாசக்தி நிறைந்த புதன்கிழமை தோறும் சந்தனம் அரைத்து புரசு இலையில் வைத்து சுவாமிக்கு காப்பிட்டு வழிபட்டு வரவேண்டும்.
திங்கள்கிழமை, சதயம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இவ்விறைவருக்குச் சந்தனக் காப்பு இட்டு வழிபட்டு வந்தால், முடி உதிர்வு, அழகின்மை, குள்ளமாயிருத்தல் போன்ற அங்க அம்சங்களாலும், வசதியின்மையாலும் திருமண வாய்ப்பு பாதிக்கப்பட்டு வேதனை அடைந்து இருப்போர் தக்க நிவர்த்திகளைப் பெறுவர்.
இச்சிவாலயம் 1300 ஆண்டு கால பழமையுடையதாகும்.
இஃது சப்த மங்கை தலங்களில் ஆறாவது தலமாகும்.
சுக்கிர கிரக தோஷம் உள்ளவர்கள் இவ்விறைவனை வழிபட்டால், தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிட்டும். மேலும் திருமணத்தடை, கண் பார்வை குறைபாடுகள் நீங்கும்.
இராஜராஜ சோழன் மாதந்தோறும் சதய நாளில் தன் குடும்பத்துடன் இத்தலத்திற்கு வந்து சந்தனம் அரைத்து சுவாமிக்கு சந்தன காப்புச் சார்த்தி பேரருள் பெற்றான் என்று கூறப்படுகின்றது.
இத்திருக்கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் வழிபடுவது சிறப்பாக போற்றப்படுகின்றது.
பல்லவப் பேரரசுகள் சோழநாட்டை ஆட்சி செய்த 7 - 9ஆம் நூற்றாண்டுகளில் கிழார் கூற்றத்து பவதாயமங்கலம் என வழங்கப்பெற்ற இவ்வூர், சோழப் பேரரசர்களின் 10 - 12ஆம் நூற்றாண்டுகளில் நித்த விநோத வளநாட்டு கிழார் கூற்றத்து பவதாயமங்களம் என வழங்கிவந்துள்ளது.
சுந்தர சோழர் காலத்தில் ஏற்பட்ட காவிரியின் பெருவெள்ளத்தால் கிழார் கூற்றத்தின் தலைமையிடமான கிழார் எனும் ஊரும், அக்கூற்றத்தில் திகழ்ந்த தாயமங்கலம் எனும் தாழமங்கையும் முற்றிலுமாக அழிந்து போயின. திருக்கோயில் மட்டும் அழிவின்றி அங்கேயே நிலைகொண்டுள்ளது.
Contact Address