logo

|

Home >

hindu-hub >

temples

மாட்டூர் - (சேவூர்) Maattur - (Sevur)

இறைவர் திருப்பெயர்: வாலீசுவரர்

இறைவியார் திருப்பெயர்: தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பாதாளகங்கை, கருட, அமிர்த, வாலி தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:நந்தி தேவர்; வாலி.

Sthala Puranam

  • 'சேவூர்' என்று வழங்குகிறது.

     

  • காளையை (மாட்டை) 'சேங்கன்' என்றும் 'சே' என்றும் கூறுவர். காளையான ரிஷப தேவர் வழிபட்ட தலமாதலின் இஃது (மாடு + ஊர்) = மாட்டூர் என்றாயிற்று. அஃது இன்று (சே + ஊர்) = சேவூர் என்று வழங்குகிறது.

     

  • கொங்கு நாட்டில், இத்தலத்தை வாலி வழிபட்ட தலமாகச் சொல்வர். இதற்கேற்ப கல்லாலான கொடி மரத்தில் வாலி - குரங்கு வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது.

  • வைப்புத்தலப் பாடல்கள்	: சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் சிலாச்சி (2-39-7) 
    				  சுந்தரர் - காட்டூர்க் கடலே (7-47-1). 

Specialities

  • இத்தலம் சம்பந்தர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இக்கோயில் முழுவதும் கற்றளியால் ஆனது.

     

  • இத்தலம் "சேவூரான செம்பியன் கிழானடி நல்லூர்" என்று கல்வெட்டில் உள்ளது. "செம்பியன் கிழானடி" என்பது சோழனுடைய பட்டத்து அரசியைக் குறிப்பது. எனவே சோழ மன்னன் ஒருவனுடைய பட்டத்தரசியின் பெயரால் இவ்வூர் விளங்கியது தெரிகிறது.

     

  • கி. பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோயில்.

குறிப்பு :-

 

  • செஞ்சிக்கு அருகில் திருவிடையூர் என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது, இது தற்போது மேல்சேவூர் என்று வழங்குகிறது; இத்தலமும் வைப்புத் தலம் என்பர் ஆய்வர் சிலர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு அவிநாசியிலிருந்து 8 கி.மீ. தொலைவு. திருப்பூரிலிருந்து அவிநாசி வழியாக நகரப் பேருந்து சேவூருக்குச் செல்கிறது. அவிநாசி - அந்தியூர் / கோபிசெட்டிப்பாளையம் சாலையில் இத்தலம் உள்ளது.

Related Content

திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு

மாட்டூர் (மாத்தூர்) Mattur (Maththur)