logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

பொன்னூர் நாட்டுப் பொன்னூர் (பொன்னூர்) Ponnur Nattu Ponnur (Ponnur)

Om symbol

இறைவர் திருப்பெயர்: பராசரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சாந்தநாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பிரமன்.

Loading map...

Sthala Puranam

  • சுவாமி - "பராசரேஸ்வரர், காமேஸ்வரம் உடையார்" என்று வழங்கப்பெறுகிறார்.

 

  • இன்று மக்கள் வழக்கில் திருக்காமேஸ்வரர் என்ற பெயரே வழங்குகிறது.

வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - தென்னூர் கைம்மைத் (7-12-6). 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • பிரமன் வழிபட்டதால் இத்தலத்திற்கு பிரமபுரி, சுவர்ணபுரி என்னும் பெயர்களுண்டு.

 

  • சம்புவராயர்கள் காலத்தில் வருவாய் மையமாக - பெரிய ஊராக இஃது இருந்துள்ளது.

 

இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1300 ஆண்டுப் பழமையுடைய கற்கோயில். இது பெரிய ஊராக இருந்தமையால் சுந்தரர் இதனை 'பொன்னூர் நாட்டுப் பொன்னூர்' என்று பாடுகிறார்.

 

சுவாமிக்கு பரமீசுரம் உடைய நாயனார், பராசர ஈஸ்வரமுடைய நாயனார் என்ற பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

 

இக்கோயிலுக்குக் குலோத்துங்க சோழன், விஜயநகர மன்னர்கள், சுந்தரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். அல்லது வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சென்று; பொன்னூர் 4 கி. மீ. என்று பெயர்ப் பலகையுள்ள இடத்தில் திரும்பி பொன்னூர் சாலையில் செல்லவேண்டும்.
Loading map...

Related Content

திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)

திருப்புன்கூர்

திருக்குறுக்கை (கொருக்கை)

பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

திருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)