logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

பிடவூர் (திருப்பட்டூர்) Pidavur (Tirupattur)

Om symbol

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: பிரம்ம நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பிரம்மன்.

Loading map...

Sthala Puranam

பிடவூர் - 'திரு' என்னும் அடைமொழி பெற்று திருப்பிடவூர் என்றாகி - இது காலப்போக்கில் மாறி, இன்று 'திருப்பட்டூர்' என்று வழங்குகிறது.

 

திருக்கயிலையில் இறைவன் முன்பு சேரமான் பெருமாள் நாயனார் விண்ணப்பஞ் செய்த ஞானவுலாவை அப்பொழுது கேட்ட மாசாத்தனார் (ஐயனார்) இந்தத் தலத்தில் - திருப்பிடவூரில் கொண்டு வந்து வெளிப்படுத்தினார் என்பது பெரிய புராணத்துள் வெள்ளானைச் சருக்கத்தில் வரும் வரலாறு.

Specialities

  • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

பெரிய புராணத்தில் வரும் வரலாற்றுக்குச் சான்றாக - இத்தலத்தில் உள்ள சாஸ்தா - ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார்.

 

நான்முகன் வழிபட்ட தலம் - கோயிலுள் பிரம்மாவின் மூலத் திருமேனி - பேருருவில் உள்ளது. இவ்வாறு காண்பது அரிது. விசேஷமான திருமேனி.

 

  • அம்பாள் சந்நிதிக்கு அருகில் தாயுமானவ லிங்கம் உள்ளது.

 

வெளியிடத்தில் தனித்தனி சந்நிதிகளாக வரிசையில் சிவலிங்கங்கள் பலவுள்ளன. அவை 1. சப்தரிஷீசுவரர், 2. காளத்திநாதர், 3. ஜம்புகேஸ்வரர், 4. அருணாசலேஸ்வரர், 5. ஏகாம்பரேஸ்வரர், 6. மாண்டுக்யநாதர்.

 

தேர்வடியில் அமைந்துள்ள கல்லாலான அடுக்கு விமானம் உள்ளது. கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அற்புதமான அமைப்பு.

 

  • பிரமன் சந்நிதி, இங்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

 

  • பங்குனி 14, 15, 16 நாட்களில் சூரிய பூசை நிகழ்கிறது.

 

  • இக்கோயிலில் சோழர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

ஐயனார் கோயில் :-

  • ஐயனார் கோயில் மிகப் பழமையானது. பூரண, புஷ்களா சமேதராகக் காட்சி தருகிறார்.

 

  • கோயிலுக்கு வெளியில் கல்யானை ஒன்றுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தையடுத்துள்ள சிறுகனூர் வந்து - அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பட்டூரையடையலாம்.
Loading map...

Related Content

திருப்பராய்த்துறை

திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) திருக்கோயில் தலவரலாறு

திருநெடுங்களம்

அன்பிலாலந்துறை (கீழ்அன்பில், அன்பில், அம்பில்)