logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில் - மகா சம்பத் கௌரி (Thenur Maha Sampat Gauri Nandhikeshwarar Temple)

Om symbol

இறைவர் திருப்பெயர்: நந்திகேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மகாசம்பத் கௌரி (பெருந்திருப் பிராட்டி).

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:நந்திதேவர், காமதேனு

Loading map...

Sthala Puranam

thenur maha sampat gauri sametha Nandhishwarar Temple

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • முற்காலத்தில் இவ்வூர் சிவலிங்கபுரம் என்று அழைக்கப்பட்டது. சிவபெருமான் திருமேனி வாகை மரத்தின் கீழ் அமைந்திருந்தது. வாகை மரத்தில் இருந்த தேன் கூட்டிலிருந்து தேன் அபிஷேகம் சிவபெருமானுக்கு நிகழ்ந்துகொண்டிருந்ததால் தேனூர் என்று அழைக்கப்படலாயிற்று என்பர்.
  • இத்தலத்திற்கு "மதுவாபுரி" என்ற பெயரும் உண்டு.
  • காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் ‘காமதேனூர்’ என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
  • இவ்வூரைச் சேர்ந்த வராகவி சொக்கலிங்கனார் தேனூர்ப் புராணம் இயற்றியுள்ளார். ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை.
  • வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - ஆனூரா வுழிதருவான் (1-61-9)  அப்பர் - தந்தைதா யில்லாதாய் (6-41-9).

Specialities

  • சுவாமி - அழகான சிவலிங்கத் திருமேனி.
  • சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்தில் - மேற்புறம் - 'சரபப்பறவை'யின் அற்புதமான சிற்பம் உள்ளது.
  • பாதாள லிங்கம் உள்ள ஆலயம். (பாதாள அறை பழையது. அதில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் புதியது.)
  • 21 நாட்கள் கேதார கௌரி விரதம் இவ்வாலயத்தில் சிறப்பு.
  • ஆலயம் 16ம் நூற்றாண்டில் துறையூர் ஜமீன்தாரால் விரிவாகக் கட்டப்பட்டது. ஜமீன்தார் மற்றும் அவர் மனைவியின் உருவங்கள் மகாமண்டபத்தில் உள்ளன.
  • ஆலய கருவறை முன் மண்டப வெளிச்சுவரில் பழமையான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
  • ஆலய கருவறையின் வலதுபுறச் சுவரில் கி.பி. 17-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. இதில் கோவிலுக்கு துறையூரைச் சார்ந்த அடியார் ஒருவர் அளித்த தானம் குறிக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சியிலிருந்து, எதுமலை வழியாகத் துறையூர் செல்லும் சாலையில் தேனூர் உள்ளது.
Loading map...

Related Content

அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்) தல வரலாறு