இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
முற்காலத்தில் இவ்வூர் சிவலிங்கபுரம் என்று அழைக்கப்பட்டது. சிவபெருமான் திருமேனி வாகை மரத்தின் கீழ் அமைந்திருந்தது. வாகை மரத்தில் இருந்த தேன் கூட்டிலிருந்து தேன் அபிஷேகம் சிவபெருமானுக்கு நிகழ்ந்துகொண்டிருந்ததால் தேனூர் என்று அழைக்கப்படலாயிற்று என்பர்.
இத்தலத்திற்கு "மதுவாபுரி" என்ற பெயரும் உண்டு.
காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் ‘காமதேனூர்’ என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
இவ்வூரைச் சேர்ந்த வராகவி சொக்கலிங்கனார் தேனூர்ப் புராணம் இயற்றியுள்ளார். ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை.
சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்தில் - மேற்புறம் - 'சரபப்பறவை'யின் அற்புதமான சிற்பம் உள்ளது.
பாதாள லிங்கம் உள்ள ஆலயம். (பாதாள அறை பழையது. அதில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் புதியது.)
21 நாட்கள் கேதார கௌரி விரதம் இவ்வாலயத்தில் சிறப்பு.
ஆலயம் 16ம் நூற்றாண்டில் துறையூர் ஜமீன்தாரால் விரிவாகக் கட்டப்பட்டது. ஜமீன்தார் மற்றும் அவர் மனைவியின் உருவங்கள் மகாமண்டபத்தில் உள்ளன.
ஆலய கருவறை முன் மண்டப வெளிச்சுவரில் பழமையான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ஆலய கருவறையின் வலதுபுறச் சுவரில் கி.பி. 17-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. இதில் கோவிலுக்கு துறையூரைச் சார்ந்த அடியார் ஒருவர் அளித்த தானம் குறிக்கப்பட்டுள்ளது.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சியிலிருந்து, எதுமலை வழியாகத் துறையூர் செல்லும் சாலையில் தேனூர் உள்ளது.