இத்தல விநாயகரைப் பிரார்த்தனை செய்வோர் விநாயகரின் இரு காதுகளிலும் பூக்களைச் செருகிவைத்து வேண்டுகின்றனர்; பிரார்த்தனை நிறைவேறுமாயின் விநாயரின் செவித் தூவாரங்களில் செருகப் பெற்ற பூக்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் இத்தல விநாயகர் 'பூ விழுங்கி' விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள நடராஜர் 'அம்பலத்தாடுவார்' ஆவார்
கோயிலின் பக்கத்திலும், எதிரிலுமாக இரு தாமரைக் குளங்கள் நல்ல நிலையில் உள்ளன. மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள கல்வெட்டுக்கள் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் காலத்தியவை.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பட்டுக்கோட்டை - அறந்தாங்கிச் சாலையில் உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.; அறந்தாங்கியிலிருந்து 34 கி.மீ.ல் சாலையோரத்தில் கோயில் உள்ளது.