இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
இது திருப்புகழ் பெற்ற தலமும் ஆகும்.
வசிட்டர் முதலிய ஏழு (வசிட்டர், அத்ரி, பிருகு, புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி) ரிஷிகள் வழிபட்ட தலம். வழிபட்ட ரிஷிகளின் திருவுருவங்கள் கோயிலில் உள்ளன.
தாண்டகத்தில் இத்தலம் எழுவர் தவத்துறை என்று குறிக்கப்படுகிறது.
மகாலட்சுமி வழிபட்டதலம்.
கோயிலில் தலப்பதிகக் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளன.
நால்வர் பெருமக்களையொட்டி, நாயன்மார்களின் மூலத் திருமேனிகள் வரிசையாக உள்ளன.
கருவறையின் வெளிப்புறத்தில் மேலும் கீழும் நிரம்ப கல்வெட்டுக்கள் உள்ளன. இடையில் யானை - யாளி சிற்பங்கள் சுற்றிலும் வரிசையாக உள்ளன.
தியாகப் பிரம்மம் இங்கு வந்துத் தங்கிப் பாடியுள்ள ஐந்து கீர்த்தனைகளும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன.
தலத்துக்குரிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் அம்பாள் சந்நிதியில் உட்புறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஊருள் செல்லும் சாலையில் நேரே சென்று ரயில்வே லைனைக் கடந்து - சுமார் 2 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். திருச்சிக்கு அருகாமையில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.