logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோயில்

Om symbol

இறைவர் திருப்பெயர்: சாமவேதீசுவரர்

இறைவியார் திருப்பெயர்: லோகநாயகி

தல மரம்:

தீர்த்தம் : பரசுராம தீர்த்தம்

வழிபட்டோர்:லட்சுமி, இந்திரன், குபேரன், ஜைமினி, பரசுராமர், உதங்க முனிவர், ரைக்வ ரிஷி, ஆனாய நாயனார்

Loading map...

Sthala Puranam

  • திருவாகிய லட்சுமி தேவி வழிபட்டதால் திருமங்கலம் எனப் பெயர்.
  • இத்தல இறைவனின் அருளால் ஜைமினி முனிவர் சாமவேதத்தை 1000 சாகைகளாகப் (கிளைகளாக) பிரித்தார். எனவே இவ்விறைவனுக்கு சாமவேதீஸ்வரர் என்று பெயர் வந்தது என்பர்.
  • பரசுராமர் வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் எனவும் இத்தலம் பரசுராமேஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • சண்டீஸ்வரர் வழிபட்ட தலம்.
  • ரைக்வ ரிஷி பித்ரு சாபம் நீங்க இங்கு வணங்க வந்தார். ஆனால் இங்கு நதி இல்லாததால் கயா செல்ல சங்கல்பித்தார். இறைவன் உடனே அங்கேயே கயாபல்குனி என்ற நதியை உருவாக்கினார். இங்கு பித்ரு வழிபாடு செய்ய கயாவில் செய்த புண்ணியம் கிட்டும்.
  • உதங்க முனிவர் வழிபட்டு அமிர்தம் பெற்ற தலம்.

Specialities

ஆனாய நாயனாரின் அவதாரத் தலம்

  • திருமங்கலம் - இவ்வூரை சேக்கிழார் "மேன்மழ நன்னாடாம் மங்கலமாகிய வாழ்மூதூர்" என்று பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.
  • இப்பதியில்தான் ஆனாய நாயனார் அவதரித்து வாழ்ந்து சிவத் தொண்டு ஆற்றியுள்ளார்.
  • ஆனாய நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் உள்ளது.

அவதாரத் தலம் : திருமங்கலம். வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருமங்கலம். குருபூசை நாள் : கார்த்திகை - அஸ்தம்.

  • தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரை இன்றி அபயகரத்துடன் விளங்குகிறார்.
  • முருகப்பெருமானும் தேவசேனையம்மையும் நின்றிருக்க வள்ளியம்மை மட்டும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
  • இவ்வாலயத்தில் துர்க்கை மகிஷன் மீது அன்றி, சிம்ஹ வாகனத்தின் மீது காட்சி தருகிறார்.
  • வெள்ளிக்கிழமைகளில் சுக்ர ஹோரையில் பாணலிங்கத்தையும், கஜலட்சுமியையும் வழிபடுவதால், செல்வம் கிட்டும். 

Contact Address

அமைவிடம் அ/மி. சாமவேதீசுவரர் திருக்கோயில், திருமங்கலம், லால்குடி (வழி), திருச்சிராப்பள்ளி மாவட்டம். தொலைபேசி : 0431 - 2541040. மாநிலம் : தமிழ் நாடு திருமங்கலம் லால்குடியிலிருந்து வடக்கே சுமார் 2-கி.மீ தொலைவில் உள்ளது. Thirumangalam Samavedeeswarar Temple, Lalgudi Taluk, Tiruchirappalli Dirstrict, Tamil Nadu.
Loading map...

Related Content