logo

|

Home >

hindu-hub >

temples

கணமங்கலம் (கண்ணத்தங்குடி)

இறைவர் திருப்பெயர்:

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

 

  • பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் கணமங்கலம், தற்போது "கணமங்கலத்திடல்" என்றும் "கண்ணத்தங்குடி" என்றும் மக்களால் வழங்கப்படுகிறது.

     

  • கணமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தண்டலை நீள்நெறி இறைவருக்குத்தான் அரிவாட்டாய நாயனார் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்; இவ்விறைவரே நாயனாருக்கு முக்தி கொடுத்தருளியவர்.

     

  • அரிவாட்டாய நாயனார் பிறந்த ஊரான 'கணமங்கலம்' தண்டலை நீள்நெறிக்குப் பக்கத்தில் உள்ளது. கணமங்கலத்தில் திருக்கோயில் இல்லை. அரிவாட்டாயனார் தினந்தோறும் கணமங்கலத்திலிருந்து (கண்ணந்தங்குடி) தண்டலைநீள்நெறித் திருக்கோயிலுக்கு வயல் வெளியில் நடந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

     

  • தண்டலை நீள்நெறியில் அரிவாட்டாய நாயனார் குருபூசை அறுப்புத் திருவிழாவாகப் பெருவிழாவில் உரிய முறைப்படி நடத்தப்பெறுகிறது.

    	அரிவாட்டாய நாயனாரின்
    	அவதாரத் தலம்	: கணமங்கலம் (கண்ணத்தங்குடி - இது தண்டலை நீள்நெறிக்கு அருகில் உள்ள ஊராகும்.) 
    	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: கணமங்கலம் - அல்லது தண்டலைநீள்நெறி (கணமங்கலத்திற்கும் தண்டலைநீள்நெறிக்கும் 
    			  இடையில் உள்ள வயல் வெளியில் நீள்நெறி இறைவர் நாயனாருக்குக் காட்சிக் கொடுத்து அருளியுள்ளார்.)
    	குருபூசை நாள் 	: தை - திருவாதிரை.
    
  • தண்டலைநீள்நெறி (தண்டலைச்சேரி) - அரிவாட்டாய நாயனார் வழிபட்டுப் பேறு பெற்றத் திருத்தலமாகும்.

     

  • சிவனின் பூரண அனுக்ரகம் பெற்ற அன்பர்களின் பெரு முயற்சியால் கண்ணத்தங்குடியில் (2009) அரிவாட்டாய நாயனாருக்குத் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

  • Back to Vaippu Thalangal Page
  • Back to Padal Perra Thalangal Page

 

Specialities

Contact Address

அமைவிடம் தொலைபேசி : +91-97881 87739, +91-94861 55141, 04369 - 347727, +91-97861 56391, +91-99432 86352. மாநிலம் : தமிழ் நாடு கணமங்கலம் (கண்ணத்தங்குடி) என்னும் பதி திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் சுமார் 4-கி.மீ. தொலைவில், தண்டலநீள்நெறி (தண்ட்லைச்சேரி) என்னும் தலத்திற்கு எதிர் பாதையில் சுமார் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.

Related Content