logo

|

Home >

hindu-hub >

temples

கோவந்த புத்தூர் - (கோவிந்தபுத்தூர்) Govandha Putthur - (Govindhaputthur)

இறைவர் திருப்பெயர்: கங்கா ஜடேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மங்கள நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:காமதேனு, இந்திரன், அருச்சுனன் ஆகியோர்

Sthala Puranam

  • இன்று கோவிந்த புத்தூர் என்று வழங்குகிறது.

     

  • காமதேனு, இந்திரன், அருச்சுனன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கொல்லி டக்கரைக் (5-71-3)

Specialities

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கோவிந்த புத்தூர் - கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள தலம்; தென்கரையில் விசயமங்கை என்னும் சிவாலயம் உள்ளது.

     

  • பழமையான சிவாலயம்; உள்வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் தரிசனம் - சுதையில் உள்ளது.

     

  • பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம், இந்திரன், காமதேனு, அருச்சுனன் ஆகியோர் வழிபடும் சுதை சிற்பங்கள் உள்ளன.

     

  • கோயில் விமானம் உத்தமச் சோழப் பல்லவனின் காலத்திய வேலைப்பாடமைந்தது.

     

  • சுவாமி திருமேனியில் அருச்சுனன் அம்புபட்ட தழும்பு உள்ளது.
  • குறிப்பு :-

  • ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் - கோயிலின் பெயர் விசயமங்கை. இது பாடல் பெற்ற தலம்; வைப்புத் தலமன்று என்பதொரு கருத்துள்ளது.

     

  • வழக்கில் கொள்ளிடத் தென்கரைத் தலமான விசயமங்கையே தொன்று தொட்டு பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது

  • See Also:
    1. விசயமங்கை

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (1) ஜயங்கொண்டத்திலிருந்து 'மதனத்தூர்' சாலையில் வந்து - தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீ புரந்தரன் (திருபுரந்தன்) வழியாகக் கோவிந்தபுத்தூரை அடையலாம். (2) கங்கைகொண்ட சோழபுரம் கூட்ரோடு - அங்கிருந்து ஜயங்கொண்டம் வந்து மேலே சொல்லியவாறு கோவிந்தபுத்தூரை அடையலாம்.

Related Content