முகலிங்கம், பண்டை நாளில் முகத்தலைலிங்கம் என்றும் வழங்கப்பட்டு வந்தது. அம்முகத்தலைலிங்கம் அமைந்துள்ள தலம். இதுவே பிற்காலத்தில் முகத்தலை என்றாயிற்று என்பர்.
பன்னகாபரணேஸ்வரர் வீற்றிருக்கும் தலமாதலின் பன்னத்தெரு என்று ஊருக்குப் பெயராயிற்று என்று கூறுவர்.
இதற்கேற்ப கோயிலின் உட்பிராகாரத்தில் முகலிங்கம் ஒன்றுள்ளது.
கோயிலுக்கு வெளியில் உள்ள பகுதி 'முகத்தலைக் கோட்டகம்' எனப்படுகிறது.
தலமரமான புன்னை மரத்தின்கீழ் விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
மூலவர் - பன்னகாபரணேஸ்வரர், பெயருக்கேற்ப வெள்ளி நாகாபரணத்தில் பிரகாசிக்க ஒளிர்விட்டுக் காட்சியளிக்கிறார்.
அம்பாள் - சாந்தநாயகி; நின்ற திருக்கோலம் - அற்புத தரிசனம்; மனதிற்குச் சாந்தி தரும் காட்சி.
மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயில்; ஆதீனத்தின் மேலாளர் ஒருவர் அங்கிருந்து கொண்டு கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றார். நல்ல பராமரிப்பு.
நித்திய வழிபாடுகள் குறைவின்றி நடைபெறுகின்றன.
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ள இத்தலத்தில், கோயிலுக்கு விளக்கெரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட செய்திகள் தெரியவருகின்றன.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் / வேளாங்கண்ணி சாலையில் 4-கி.மீ. சென்று 'கொக்காலடி' என்னும் ஊரையடைந்து; அங்கிருந்து மானாச்சேரி (மாராச்சேரி) பாதையில் 3-கி.மீ. சென்றால் திருமுகத்தலை - பன்னத்தெரு கோயிலை அடையலாம்.