logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)

இறைவர் திருப்பெயர்: குற்றம் பொறுத்த நாதர்.

இறைவியார் திருப்பெயர்: கோல்வளை நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : இந்திர தீர்த்தம். செங்கழுநீர்த் தடாகம்

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன்.

Sthala Puranam

view the gOpuramview the templeview the vimAnA with Sthala tree (kokudi mullai)view the vimAnA

கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்).

 

இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -      சுற்றமொடு பற்றவை (2.31);                   சுந்தரர்    -      சிம்மாந்து சிம்புளித்துச் (7.30); பாடல்கள்    : சேக்கிழார்   -      அப்பதி பணிந்து (12.28.254) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                      கண் நுதலார் விரும்பு (12.29.118) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

தல மரம் : முல்லை

Specialities

 

இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது,

 

  • இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர்.

 

  • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இஃது வைத்தீசுவரன்கோயில் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 8-கி.மீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, வைதீஸ்வரன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து தலைஞாயிறு (இத்தலத்தின் இன்றைய பெயர்) செல்ல பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04364 -258 833.

Related Content