logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

குரக்குத்தளி - சர்க்கார் பெரியபாளையம் - பெரிய பாளையம் Kurakkuthali - Sarkkar Periyapalayam - Periyapalayam

Om symbol

இறைவர் திருப்பெயர்: சுக்ரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: ஆவுடைநாயகி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சுக்ரீவன்

Loading map...

Sthala Puranam

  • இது 'சர்க்கார் பெரியபாளையம்' / 'பெரியபாளையம்' என்று வழங்குகிறது.

     

  • இராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவனும், அநுமனும் இம்மண்ணில் லிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டனராம்.

     

  • இங்குள்ள விவசாயி ஒருவரின் குடும்பத்தில் ஒருவர் வாய் பேசாதவராகப் பிறப்பது வழி வழியாகத் தொடர்ந்து இருந்ததாம். இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, நந்தி தேவர், இங்குள்ள தோட்டப் பயிர்களை மேய்ந்த போது, விவசாயி அது கண்டு கோபமுற்று, நந்தியின் இரு காதுகளையும் அறுத்து விட்டாராம். இப்பாவம் அவ்விவசாயியை வழி வழியாக தொடர்வதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிராயசித்தமாக, அருகில் ஒரு நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மூலம் அக்குறை நீங்கியதாம்.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - கொங்கிற் குறும்பிற் (7-47-2).

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • சுமார் 2000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் என்று சொல்லப்படுகிறது. அழகிய கற்றளி.

     

  • முற்காலத்தில் இவ்வூர் முகுந்தாபுரி, முகுந்தைபுரி என்று வழங்கப்பட்டது.

     

  • தென்புறச் சுவரில் குரங்கு ஒன்று சிவலிங்கத்தை வழிபடும் உருவம் உள்ளது.

     

  • சுக்ரீவன் வழிபட்ட தலம்.

     

  • கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர்.

     

  • உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும் என்று மக்கள் சொல்கின்றனர்.

     

  • இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது)

     

  • சோழர், பாண்டியர், உடையார்கள் காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன.

     

  • திருவாதிரை விழா நாளில் மக்கள் இறைவனுக்கு மிளகு படைத்து வழிபடுகின்றனர்.

     

  • உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறதாம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருப்பூர் - ஊத்துக்குளி பாதையில் திருப்பூரிலிருந்து 8வது கி.மீ. தொலைவில் (சர்க்கார்) பெரிய பாளையம் உள்ளது. ஊத்துக்குளியிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது.
Loading map...

Related Content