logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

குண்டையூர் ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில் (Kundaiyur)

Om symbol

இறைவர் திருப்பெயர்: சுந்தரேஸ்வரர், ரிஷபபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: மீனாட்சி, மங்களாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் : ரிஷப தீர்த்தம், வெள்ளையாறு, சந்திர நதி

வழிபட்டோர்:குண்டையூர் கிழார்.

Loading map...

Sthala Puranam

  • இத்தலத்தில் ரிஷப தேவர் சிவபெருமானைப் பூசனை செய்ததால் இத்தலத்திற்கு ரிஷபபுரி என்றும் இறைவனுக்கு ரிஷபபுரீஸ்வரர் என்றும் பெயர் வந்தது.  
  • சுந்தரருடைய திருமாளிகைக்கு செந்நெல், அரிசி, பருப்பு முதலியவற்றை அனுப்பும் திருத்தொண்டைச் செய்து வந்த குண்டையூர் கிழார் வாழ்ந்த திருத்தலம்.
  • ஒரு சமயம் சுந்தரர் திருக்கோளிலிக்கு வந்து பெருமானிடம், குண்டையூர் கிழார் மூலமாகத் தாம் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்வேண்டப் பெருமான் பூதகணங்களை அனுப்பி அந்நெல்லை திருவாரூரில் சேர்ப்பித்தருளினார்.
  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்
  • வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - நீள நினைந்தடி யேனுமை (7-20-1). 

Specialities

  • சுந்தரேஸ்வரரை மக்கள் சொக்கநாத சுவாமி என்றழைக்கின்றனர். சொக்கநாத சுவாமி தேவஸ்தானம் என்பதே வழக்கில் உள்ளது; வெளியில் இருப்பது இச்சந்நிதி. உள்ளேஇருப்பது ரிஷபபுரீசுவரர், மங்களாம்பிகை சந்நிதியாகும்.
  • இக்கோயிலுக்கு முன்னால் மாறிமாறிக் காய்க்கும் இரு ஆத்தி மரங்கள் உள்ளன.  அம்பாள் அருகில் உள்ள காட்டாத்திமரம் பூத்துக் காய்க்கும்; சுவாமி அருகில் உள்ள மரம் பூக்கும் ஆனால் காய்க்காது.
  • சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் நடைபெறுகிறது.
  • கோயிலில் குண்டையூர் கிழாரின் மூல / உற்சவத் திருமேனிகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்குவளை என்று வழங்கும் திருக்கோளிலிக்குப் பக்கத்தில் 1 கி.மீ.ல் (திருக்குவளை - சாட்டியக்குடி சாலையில்) குண்டையூர் உள்ளது.
Loading map...

Related Content