logo

|

Home >

hindu-hub >

temples

அளப்பூர் (தரங்கம்பாடி)

இறைவர் திருப்பெயர்: மாசிலாமணீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி).

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

 

  • இன்று இவ்வூர் "தரங்கம்பாடி" என்று வழங்குகிறது.

     

  • அளம் என்பது உப்பளத்தைக் குறிக்கும். இக்கோயிலுக்குப் பல உப்பளங்கள் சொந்தமாக இருந்தன. அதனால் வந்த பெயர் அளப்பூர் ஆகும்.

வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. அண்ணா மலையமர்ந்தார் (6-51-3), 
					                       2. எச்சில் இளமர் ஏம (6-70-4), 
					                       3. பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4). 

				                  சுந்தரர் - 1. ஆரூர் அத்தா ஐயாற் (7-47-4).

Specialities

 

  • இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • வரலாற்றுச் சிறப்புடைய தலம்.

     

  • டேனிஷ்காரர் ஆட்சி புரிந்த இடம்; கடலோரத்தில் டேனிஷ் கோட்டையும் அருங்காட்சியகமும் உள்ளன.

     

  • ஒரு காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்ததை நினைவூட்டும் வகையில் ஓரிரு சுவர்கள் மட்டும் கடலில் நின்று காட்சி தருகின்றன.

     

  • குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி. 1306ல் இவ்வூரைத் தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான். வேதத்தின் ஆறு அங்கங்களுக்கும் மூலம் இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் - அங்கன் பாடி) "சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான். சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமஞ் சூட்டினான். கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும், தோற்றுவித்தவன் குலசேகரபாண்டியன் என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்று.

     

  • கி.பி. 1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தன.

     

  • இசுலாமியர்களால் தென்னிந்தியா தாக்கப்பட்ட பின்னர், விஜய நகர மன்னர்கள் தென்னிந்தியாவைக் காத்து ஆண்டனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்து கி.பி. 1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும், சுவாமி பெயர் மாசிலாமணீஸ்வரர் என்று மாறியுள்ளது.

     

  • ஆங்கிலேயர்களால் ஷடங்கன் பாடி - சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, தரங்கம்பாடி என்று பெயர் மாறி TRANQUEBAR என்றானது. (தரங்கம் - அலை. அலைகள் சூழ்ந்த நகரம் - தரங்கம்பாடி).

     

  • கோயிலின் முன் மண்டபத்திற்கு சுமார் 25 அடியில் கொடிமரம் இருந்திருக்க வேண்டும். கடலில் மீன் பிடிப்பவர்கள் கடலில் 150 அடிக்குள் சுவர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

இறையன்பர்களின் கவனத்திற்கு :-

 

  • கடல் அலைகள் மோதுவதனால் கோயிலின் முற்பகுதி முழுவதும் அழிந்து விட்டது. கற்களெல்லாம் கடல் நீரில் வீழ்ந்து கிடக்கின்றன. இக்கற்களின் மீது ஏறிச் சென்றே - கடல் நோக்கி வீற்றிருக்கும் பெருமானைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது.

     

  • மூலவரும், விநாயகரும் மட்டுமே கோயிலில் உள்ளனர். மூர்த்தங்கள் எல்லாம் - அகிலாண்டேஸ்வரி, பாலசுப்பிரமணியர், சண்டேசுவரர், துர்க்கை, மகாலட்சுமி, நவக் கிரகங்கள் - கோயிலுக்குப்பக்கத்தில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

     

  • கோயில் முற்பகுதி முழுவதும் கடல் அலைகள் மோதி அழிந்து போயிருக்க, பிற்பகுதி ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளது. 1954ல் அம்பாள் விமானத்தை இடம் மாற்றி, சுவாமிக்குப் பக்கத்தில் தனியே கட்டி, காப்பாற்றியுள்ளனர்.

     

  • இக்கோயிலுக்கு விரைவில் திருப்பணி செய்யவேண்டியது சைவர்களின் கடமையாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கடையூரிலிருந்து தென்கிழக்கே 8 கி. மீ. தொலைவு. நாகப்பட்டினத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தரங்கம்பாடியில் புகை வண்டி நிலையம் உள்ளது.

Related Content

திருத்துருத்தி Sthala puranam of Thiruthuruthi Temple

திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) Sthala puranam of Thiruval

சிக்கல்

கீழ்வேளுர் தலபுராணம்

திருத்தேவூர் திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Thiru