இத்தலம் தற்போது மக்களால் 'அன்னவாசல்' என்று வழங்குகிறது. (இதன் பக்கத்தில் 'சித்தன்னவாசல்' என்று ஓர் உள்ளது; இது குகைஓவியங்கள், சிற்பங்கள் நிறைந்த புகழ்பெற்ற ஊராகும்.)
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
கோயிலுக்கு எதிரில் பெரிய குளம் உள்ளது. கோயில் முகப்பில் கல் தூண்கள் மட்டும் நிற்கின்றன.
பிராகாரத்தில் 2 சிவலிங்கங்கள் இருக்கின்றன; மிகப் பழமையானவை.
திருப்பணி செய்த செட்டியார் ஒருவரின் அறப்பணிகளைப் பற்றிய கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.
அருகில் உள்ள சித்தன்னவாசல் என்னும் ஊரின் மலையடியில் பழமையான சிவாலயம் ஒன்றுள்ளது; சுவாமி - மாத்ருபூதேசுவரர்; அம்பாள் - சுகந்த குந்தளாம்பிகை.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை வழியாக மணப்பாறை செல்லும் சாலையில், விராலி மலைக்கு முன்பாகவே அன்னவாசல் உள்ளது. விசாரித்து கோயிலை அடையலாம்.