logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

அகத்தீச்சுரம் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் திருக்கோயில்- (அகத்தீஸ்வரம்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: அகத்தீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: அறம்வளர்த்த நாயகி, அமுதவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்.

வழிபட்டோர்:அப்பர், அகத்தியர், லோபாமுத்திரை (அகத்தியர் மனைவி).

Loading map...

Sthala Puranam

 

  • அகத்தியர் வழிபட்டத் தலமாதலின், இஃது 'அகத்தீச்சுரம்' எனப்பட்டது.

     

  • கோயில் உள்ள இடம் "வடுகன் பற்று" ஆகும்.

     

  • அகத்தியர், தம்முடைய மனைவி லோபாமுத்திரையுடன் வழிபட்ட தலம்.
  • கைலாயத்தில் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூலோகவாசிகள் கைலாயம் சென்றனர். அதனால் கைலாயம் சமமின்றி தாழ்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரிடம் தெற்கே செல்வாய், பொதிகை மலையில் அமர்வாய் என்றார். அகத்தியரும் அப்படியே செய்தார். சிவபெருமானுக்குத் திருமணம் முடிந்து கைலாயத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சென்றபின் அகத்தியர் தனியே ஓர் இடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்தார். அவர் அப்படி இருந்த இடம் அகஸ்தீஸ்வரம் ஆயிற்று. 

  • இக்கோயில் பாண்டிய மன்னன் ஜயச்சந்திர ஸ்ரீ வல்லபன் என்பவனால் கட்டப்பட்டது.
  • மதுரை பாண்டியன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான். தரிசனம் முடிந்தபின் பாண்டியன் கோயிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது அவனது குதிரை தறி கெட்டு ஓடியது. காவலர்கள் குதிரையைப் பிடிக்கச் சென்றனர். அரசன் வேறு ஒரு குதிரை மேல் ஏறி தவறிய குதிரையைக் காணச் சென்றான். ஒரு காட்டுப்பகுதியில் குதிரை நிற்பதைக் கண்டான். குதிரையின் வலது, இடது என இரு பக்கங்களிலும் நிழல் விழுவதைக் கண்டான். அக்காட்சி அதிசயமாக இருந்தது. ஜோதிடரிடம் அதற்கு காரணம் கேட்டார். அவர்கள் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடம் அது என்றார்கள். அரசனும் அந்த இடத்தின் பெருமை அறிந்து அங்கே ஒரு கோயில் கட்டினான். அந்த கோயில் வடுகன்பற்று கோயில் என்பது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8)

 

Specialities

 

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கோயில் கருங்கல் திருப்பணி.

     

  • அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவுள்ளது.

     

  • சோழர்கள் காலத்தில் இக்கோயில் சிறப்புற்று விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.
  • கி.பி.1127 ஆம் ஆண்டு கல்வெட்டு உடையவர்மன் ஸ்ரீ வல்லவதேவன் என்ற பாண்டிய மன்னன் இக்கோவிலைக் கட்டியது பற்றிக் கூறும்.

குறிப்பு :-

  • அகத்தீச்சுரம் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன.

     

  • திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் உள்ள சிவாலயம் அகத்தீஸ்வரம் என்ற பெயருடையதாகவுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், நாகர்கோயிலிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நாகர் கோயில் - கன்னியாகுரி சாலையில் 'கொட்டாரம்' வந்து - அங்கிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள "வடுகன்பற்று" அடைந்து அங்கிருந்து அருகாமையிலுள்ள கோயிலையடையலாம்.
Loading map...

Related Content

திருவிடையூர் - (மேல்சேவூர்) ரிஷபாபுரீசுவரர்