logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கோடி (குழகர்கோயில் / கோடியக்கரை / கோடிக்கரை)

இறைவர் திருப்பெயர்: அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி (கடல்) தீர்த்தம், அமுத தீர்த்தம்.

வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள்.

Sthala Puranam

  • திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தலவரலாறு கூறுகிறது.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :    சுந்தரர்   - 1. கடிதாய்க் கடற்காற்று (7-32); 

பாடல்கள்     : சேக்கிழார்  -     தெண் திரை சூழ் கடல் (12.28.622) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                   எழுந்து பணிந்து (12.37.88 & 89) கழறிற்றறிவார் நாயனார் புராணம். 

 

 

Specialities

  • குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு, கடல் உள்ள இடம் கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது.

     

  • சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

     

  • தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

     

  • இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும்.

     

  • இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் "அமிர்த விநாயகராவார்".

     

  • கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது.

     

  • நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலத்திற்கு (கோடிக்கரை) வேதாரண்யத்திலிருந்து பேருந்துகள் நிறைய உள்ளன. தொடர்புக்கு :- 04369 - 272470.

Related Content