logo

|

Home >

hindu-hub >

temples

இடும்பாவனம் கோயில் தல வரலாறு Sthala puranam of Idumbavanam Temple

இறைவர் திருப்பெயர்: சற்குணேஸ்வரர், சற்குணநாதர், மணக்கோல நாதர், கல்யாணேஸ்வரர், இடும்பாவனேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களவல்லி, மங்களநாயகி, கல்யாணேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : பிரமதீர்த்தம், அகத்தியதீர்த்தம், எமதீர்த்தம், சமூக புட்கரணி, ஏக தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் , இடும்பன், பிரமன், அகத்தியர், எமன், இராமர் ஆகியோர்.

Sthala Puranam

  • இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணந்து கொண்டதால் வியாசமுனிவர் பாண்டவர்களைப் பார்த்து "இடும்பைக்கு அருள் செய்த இப்பதி இன்று முதல் இடும்பாவனம் என்று வழங்குவதாகுக" என்றமையால் இப்பதி இடும்பாவனம் என்று பெயர் பெற்றது என்பது புராண வரலாறு.

 

view Sri Sarguneswarar temple with the holy pond

 

 

Sri Sarguneswarar temple

 

திருமுறைப் பாடல்கள்		: 

பதிகங்கள்  :  சம்பந்தர்   -  1. மனமார்தரு மடவாரொடு (1.17);   

பாடல்கள்   :  சேக்கிழார் -      கண் ஆர்ந்த (12.28.623) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

  • தல விநாயகர்			: வெள்ளை விநாயகர்.

 

  • இடும்பனின் ஊர் இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள குன்றளூர் என்பர்.

     

  • இறைவன் அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய தலம். (சுவாமிக்குப் பின்னால் மணவாளக்கோலம் உள்ளது.)

     

  • வில்வவனம், சற்குணேச்சபுரம், மங்கலநாயகிபுரம், மணக்கோலநகர் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

     

  • இத்தலம் பிதிர்முத்தித் தலங்களுள் ஒன்று; ஆகவே பிதிர் வழிபாடுகளைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.

     

  • மராட்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்; திருத்துறைப்பூண்டியிலிருந்து - தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இத்தலத்திற்கு வரலாம். முத்துப்பேட்டையிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04369 - 240349.

Related Content