logo

|

Home >

hindu-hub >

temples

திருச்சிற்றேமம் (சிற்றாய்மூர் - சித்தாய்மூர்) திருக்கோயில் தலவரலாறு Sthala puranam of Chitremam (Chitraimoor - Chithaimoor) Temple

இறைவர் திருப்பெயர்: சுவர்ணஸ்தாபனேஸ்வரர், பொன்வைத்தநாதர்.

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : வர்ண புஷ்கரணி. சொர்ண தீர்த்தம்

வழிபட்டோர்: சம்பந்தர் , அப்பர், சேக்கிழார், பிரமரிஷி, சித்தர்கள் முதலியோர்.

Sthala Puranam

 

Chitremam temple

  • வழக்கில் மக்கள் 'சித்தாய்மூர் ' என்று அழைக்கின்றனர்.

     

  • திருச்சிற்றேமத்திற்கு வடபாலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்த மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் அவ்விடத்தை வெட்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனியைக் கண்டான். அவ்விடத்துக் கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதன் அடையாளமாக சிவலிங்கத்தின் மீது வெட்டுக்காயம் உள்ளது.

     

  • இவ்வூரி வாழ்ந்த சங்கரன் செட்டியார், மனைவி கருவுற்ற மிக்க அண்மைக் காலத்தே பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார். சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசு வைத்து உதவ, அவள் அதை விற்று வாழவு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது; இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து உதவி, மகவினைப் பெற்றெடுத்தாள். செட்டியார் ஊர் திரும்பினார்; புல்லறிவினர் சிலர் அம்மாதின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச் சாட்டுக்களைச் செட்டியாரிடம் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட, இறைவன் - கோயிற் கதவைத் தானே திறக்கச் செய்தும், ஆத்திமரத்தை இடம் பெயர்ந்து முன்புறம் வரச்செய்தும், நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் போகச் செய்தும் - பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார் என்பர். (இவ்வூரின் மேற்கே 6 கி. மீ. தொலைவிலுள்ள இடம் - செட்டிப் பெண்ணிற்கு இறைவன் அன்றாடம் பொன் நிறுத்துத்தந்த இடமாகும்; தற்போது, [பொன் + நிறை] - 'பொன்னிறை' என்னும் பெயருடையது.

     

  • இக்கோயிலில் உள்ள தேன் கூடு வியப்பானது - நாடொறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்த பிரமரிஷி ஒருநாள் காலம் தாழ்ந்து வர, ஆலயக்கதவு காப்பிடப்பட்டுவிட்டது. அப்போது அவர் தேனி உருக்கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டு அங்கேயே வசிக்கத் தொடங்கினார் என்பர்.

 

Chitremam temple's Theertham

 

 

Sthala virutsham (Bauhinia recemosa) of Chitremam temple

 

The Honeycomb in Chitremam temple

 

தேவாரப் பாடல்கள்		: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. நிறைவெண்டிங்கள் வாண்முக (3.42); 

பாடல்கள்      :     அப்பர்      -       செல்வப் புனற்கெடில (6.7.1), 
                                          திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9); 

                     சேக்கிழார்   -       மற்றவ்வூர் தொழுது ஏத்தி (12.28.575) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • இத்தலத்தின் தென்பால் அரிச்சந்திர நதியும், அருகில் செண்பக நதியும் ஓடுகின்றன.
  • தல விநாயகர்			: ஆத்திமர விநாயகர்.
  • The court (Piraakaaram) of Chitremam temple

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி வந்து, அங்கிருந்து சித்தாய்மூர் செல்லும் பாதையில் 3-கி. மீ. செல்ல வேண்டும். தொடர்புக்கு :- 94427 67565.

Related Content