logo

|

Home >

hindu-hub >

temples

திருச்சிறுகுடி

இறைவர் திருப்பெயர்: சூக்ஷிமபுரீஸ்வரர், மங்களநாதர், சிறுகுடியீசர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, மங்களாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.

வழிபட்டோர்: சம்பந்தர் , சேக்கிழார், கருடன், செவ்வாய், கந்தர்வர் ஆகியோர்.

Sthala Puranam

 

cirukudi temple

  • நன்னிலம் வட்டத்தில் சிறுகுடி என்னும் பெயரில் பல ஊர்களிருப்பதால் அவற்றினின்றும் வேறுபாடறிய இத்தலம் 'திருச்சிறுகுடி' என்றழைக்கப்படுகிறது.

     

  • அம்பிகை, கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். "சிறுபிடி" - என்பது மருவி 'சிறுகுடி' என்றாயிற்று என்பர்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. திடமலி மதிலணி சிறுகுடி (3.97); 

பாடல்கள்      :   சேக்கிழார்  -       தக்க அந்தணர் (12.28.537 & 538) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • இங்குள்ள தல விநாயகர் - மங்கள விநாயகராவார்.

     

  • சங்க இலக்கியத்தில் புகழப்படும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாம் 'பண்ணன்' என்னும் கொடை வள்ளல் வாழ்ந்த தலம்.

     

  • சம்பந்தரின் இத்தலத்துப் பதிகம் 'திருமக்கால்' யாப்பில் அமையப்பெற்றது.

     

  • மங்கள தீர்த்தத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செய்வாய்க் கிழமை காலை மாலை வந்து நீராடி வழிபட்டுச் செல்கின்றனர். இஸ்லாமியர் முதலிய வேற்று மதத்தவர்களும் வந்து நீராடி வழிபட்டுத் திருநீறு பெற்றுச் செல்கின்றர்.

     

  • செவ்வாய் தோஷமுள்ளவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது பிரசித்தம் - செவ்வாய் வழிபாடு விசேஷமானது.

     

  • நவக்கிரக சந்நிதி - சனீஸ்வரனுக்கு கீழே "சனைச்சரன்" என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர். இதற்கு 'மெதுவாக ஊர்ந்து செல்பவர் ' என்று பொருள்.

  • மூலவர் - சுயம்புத் திருமேனி. நெற்றியில் பள்ளமும், இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. (அம்பாளுக்கு மட்டும்தான்)

     

  • "தேனமலர் பொழிலணி சிறுகுடி" - என்னும் சம்பந்தரின் வாக்குக்கேற்ப - சுவாமிக்கு முன்னால், முன் மண்டபதில் வலப்புறத்தில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன்வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்து போகுமாறு செய்து, மண்டபத்தின் உட்புறத்தில் இரும்புவலை போட்டுப் பாதுகாத்துள்ளனர்.

     

  • இத்தலத்திற்குரிய சிறப்பு மூர்த்தமாகிய "சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி " மிகமிகச் சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பாளை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள்மீது கை போட்டுக்கொண்டு காட்சித் தரும் அழகு - கண்டு அநுவித்தாலே உணர முடியும்.

  •  

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பேரளத்தையடுத்துள்ள "பூந்தோட்டம்" வந்து, அரசலாற்றுப் பாலத்தைக் கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம், நாச்சியார்கோயில் சாலையில் சென்று, கடகம்பாடி என்னும் ஊரையடைந்து, அங்கிருந்து வலப்புறமாக பிரிந்து சிறுகுடிக்குச் செல்லும் சாலையில் 3 கி. மீ. உள்ளே சென்றால் ஊரையடையலாம். பேருந்து வசதியில்லை. தொடர்புக்கு :-04366-291 646.

Related Content